நினைக்கப்படுவாரா பெரியார்தாசன்.

தத்துவயியல் படித்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவ பேராசிரியராக இருந்தவர், ஓஷோவும் தத்துவயியலில் மாஸ்டர் டிகிரி முடித்திருந்ததால் பெரியார்தாசன் மீது ஒரு மரியாதை இருந்தது. சினிமாவில் அந்த பெயரிலேயே வந்த அவர் பலராலும் கவனிக்கபட்டார், ஆனால் அதற்கெல்லாம் அவரே ஆப்பு வைத்து கொண்டார்.

2010 மார்ச் மாதம் தான் அவர் தம்மை ஒரு இஸ்லாமியன் என அறிவித்துக்கொண்டது, அதற்கு முன்னரே நான் பல தொலைகாட்சிகளில் அவரது நியுமரலாஜி பெயர் மாற்றும் ஜோதிடம், ராசிகல் விற்பது போன்ற கேனத்தனங்கள் செய்ததால் பெரியார்தாசனை கண்டுகொள்ளவில்லை. அவர் தம் பெயரை அப்துல்லா என மாற்றி கொண்டதாக அறிவித்ததும், இஸ்லாமியர்கள் மொத்த நாத்திகத்தையும் வென்றூ விட்டதாக போஸ்டர் அடித்து கொண்டாடினர். ஆனால் அவர் அதற்கு முன்னால் புத்த மதத்தில் சேர்ந்து தமது பெயரை சித்தார்த் என மாற்றி கொண்டதை மறைத்தனர்.


சேசாசலம் என்ற பெரியார்தாசன் என்ற சித்தார்த் என்ற அப்துல்லா என்று தமது பெயரை அறிவிக்கும் அளவிற்கு போய்கொண்டே இருந்தது அவரது பெயர். 10 வருடமாக குரான் ஆராய்ச்சி செய்தவர் ஏன் புத்த மதத்தில் சேர்ந்தார், ஏன் ராசிகல் விற்றார் போன்ற கேள்விகளுக்கு இஸ்லாமியர்களிடம் பதிலில்லை. ஆனாலும் தமது கூட்டங்களில் பெரியார்தாசன்(அப்துல்லா) பேசிகிறார் என இஸ்லாமிய பெயரை அடைப்புகிறியில் போடுமளவுக்கு இஸ்லாமியர்களின் நாத்திக எதிர்ப்பு இருந்தது.

பெரியார்தாசன் என்றாலே பெரியாருக்கு அடிமை என்று அர்த்தம்,  அந்த பெயர் ஓறிரை கொள்கை உள்ளவர்களுக்கு பொருந்தவே பொருந்ததாது, ஆனால் முன்னாள் நாத்திகன் என்பதை அடையாள படுத்த பெரியார்தாசன் தேவைப்பட்டது. புத்தர் சொன்னது போல் இவரால் ஆசைப்படாமல் இருக்க முடியவில்லை போல அதான் சித்தார்த்தாக இருந்த பெரியார்தாசன் அதை எங்கேயும் வெளிகாட்டிக்கவில்லை. இவர் இஸ்லாமியராக இருந்த சமயம் அவரிடம் அலைபேசியில் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்று காட்டியது அவருக்கு குரான் பற்றிய அறிவு போதவில்லை என்று. அவருக்கு பதிலாக வேறொருவரே பதில் கூறினார்.

இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா உடல்நலகுறைபாட்டில் சிகிச்சை எடுத்து கொண்டிருந்த அப்துல்லா இன்று மரணமடைந்தார், இனி இஸ்லாமியர்கள் கூட்டங்களுக்கு யார் பெயரை பயன்படுத்துவார்கள்? இனி எந்த இஸ்லாமியன் மீண்டும் அப்துல்லாவை நினைவு கூறுவான் என நினைத்தேன். பாவமாக இருந்தது.

இன்னொரு வருத்தம், அவர் குரானை படித்து எது ஈர்த்து இஸ்லாமில் சேர்ந்தார் என கேட்க வேண்டும் என நினைத்தேன், அதற்குள் போயிட்டார்.


16 வாங்கிகட்டி கொண்டது:

Ramani S said...

புகழ் போதையில் தேடலைத் தொடர்ந்தால்
இது போன்று நேர்ந்துவிடுமோ என்னவோ ?
இறந்தவரை விமர்சித்து பயனில்லை
அவர் நம்பாவிட்டாலும் அவர் ஆத்மா
சாந்தியடைய பிரார்த்திப்போமாக

Gnana Sekar said...

avargaluku thvai indhu madhathai ethirpadhuthan

Ethicalist E said...

" அவர் குரானை படித்து எது ஈர்த்து இஸ்லாமில் சேர்ந்தார் என கேட்க வேண்டும் என நினைத்தேன், அதற்குள் போயிட்டார்."

72

Ethicalist E said...

RIP

மாசிலா said...

பெரியார் பெயரைச் சொல்லி பிழைத்து வந்த இவர் திடீரென்று இப்படி ஒற்றைச் சிந்தனை கடவுள் மதத்தில் சேர்ந்து கடவுளுக்கு அடிமையானது பெரும் வெட்கக்கேடே. சாவின் மீது பயம் வந்திருக்கும். பகுத்தறிவாளர்களுக்கு தேவையான போதிய மன பக்குவம் அடையாதவராக இருந்த இவரின் இழப்பு பெரிய இழப்பல்ல.

Anonymous said...

சிலர் குழம்பிக் கொண்டே இருப்பவர்கள், அவர்களுக்கு புகழ் பாராட்டுத் தேவைப்படும், அன்னாரும் அவ்வாறே மரந்தாவிக் கொண்டிருந்திருக்கிறார், கொஞ்ச நாள் இருந்திருந்தால் ஜான்சனாகவும் கூட மாறியிருப்பார். என்னவோ காற்றோடும், மண்ணோடும் கலந்துவிட்டார்.

Bagawanjee KA said...

கடைசி வரை அவர் பெரியார் தாசனாகவே இருந்திருந்தால் நினைத்துப் பார்க்க நிறைய பேர் இன்றும் இருக்கிறார்கள் !

shiva said...

Very Poor guy.May had some ideas in his mind to get married to a minor girl like his prophet but allah had taken him back.

எருமை said...

செத்தவனெல்லாம் உத்தமன் இல்லை என்று சொல்லத்தான் தோன்றுகிறதுஃ

கலீல் பாகவீ said...

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

நாடறிந்த அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றிவரும், பிரபல மனோதத்துவ நிபுணருமான பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள் இன்று திங்கட்கிழமை (19.08.2013) அதிகாலை 1:30 மணியளவில் உடல் நலக் குறைவு காரணமாக தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள்.

தன்னுடைய நீண்டகால நாத்திக+புத்தமதப் பயணத்தின் இறுதியில் தன்னையும் இவ்வுலகையும் படைத்தவனைக் கண்டுகொண்ட பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள், "கருத்தம்மா" என்ற பெண்சிசுக் கொலையை மையப்படுத்தி எடுத்திருந்த திரைப்படத்தின் மூலமும் தமிழக மக்களிடையே பிரபலமானவராவார். உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற அவர், கடவுள் மறுப்புக்கொள்கையில் உறுதியாகயிருந்து தனது பெயரையே நாத்திகச் சிந்தனையாளரான பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத் தரும் தாசன் என்ற சொல்லை இணைத்துக் கொண்டு, 'பெரியார்தாசன்' ஆக வாழ்ந்தவர்.

சமூக சிந்தனைக் கருத்துகளைப் பரப்புவதில் முன்னணியில் நின்ற அவர், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இஸ்லாத்தைப் பற்றி, கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு செய்த பெரியார்தாசன், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 11ந் தேதி (வியாழக்கிழமை) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மையத்தில் இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு, தன்பெயரை "படைத்தவனுக்கு அடிமை" என்ற பொருள்படும் "அப்துல்லாஹ்" என்று மாற்றிக் கொண்டார்.

இஸ்லாத்தை ஏற்ற பிறகு தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் இஸ்லாமியர்கள் தங்கள் அமைப்பின் சார்பாக சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்ததை ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டார்.

இந்நிலையில் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவர்கள் உடல் நலிவுற்று சென்னை சோளிங்கநல்லூர் குளோபல் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்தார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

30.12.2011 வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு K-Tic பள்ளிவாசலில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேராசிரியர் அவர்கள் கலந்து கொண்டு "முஸ்லிம்களிடம் இவ்வுலகம் எதிர்பார்ப்பது என்ன?" என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் அற்புதமான பேருரைரையாற்றிய நிகழ்வுகள் இன்றும் நினைவுகளில் நிழலாடுகின்றன.

எல்லாம் வல்ல அல்லாஹ் பேராசிரியர் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்!

உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி! வஸ்ஸலாம்.

அன்புடன்....

பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா
அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ.,
பொதுச் செயலாளர்
மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
மின்னஞ்சல்கள்: q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com / ktic.kuwait@yahoo.com
இணையதளம்: www.k-tic.com
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
கூகுள் குழுமம்: https://groups.google.com/q8tic

சார்வாகன் said...


வணக்கம் நண்பரே,
இறந்த சேஷாசலம்,சித்தார்த்தன்,பெரியார்தாசன்,அப்துல்லா என்ற பெரியவருக்கு அஞ்சலி.
பிடித்த மதத்திற்கு மாற ஒருவருக்கு உரிமை உண்டு என்றாலும், ஆய்வு செய்து மாறினேன் என்றால் அந்த ஆய்வினை வெளியிட்டு ,அதனை விவாதப் பொருள் ஆக்கும் கட்டாயம் இருந்தாலும் திரு அப்துல்லா அதனை செய்யவில்லை.
மறுமை ஒருவேளை இருந்தால் என்னும் பாஸ்கல் வேஜர் என்னும் கருத்தாக்கம் மட்டும் ஏற்புடையது அல்ல!!!

எரிப்பதா,புதைப்பதா என்னும் சிக்கலை தவிர்க்க அவரின் உடல்,கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=1982013

முழு உடலும் ஆய்வுக்காக வழங்குதல் இஸ்லாமின் படி ஹராம்[அனுமதி அற்றது] என அண்ணன் பீ.சே கூறிவிட்டார்.
***
உடல் தானம் செய்யலாமா உடலையும் உடலின் கண் கிட்னி போன்ற உறுப்புக்களையும் தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா ??? ரிஸ்வான்
கண், கிட்னி, இரத்தம் போன்றவற்றை தானமாக கொடுத்து பிறரை வாழவைப்பதை தடை செய்யும் விதமாக குர்ஆன் ஹதீஸில் எந்த சான்றும் இடம் பெறவில்லை. மாறாக மனித உயிரை வாழச் செய்வது என்ற அடிப்படையில் இது ஒரு நல்லறமாகும்.
....
அதே நேரத்தில் உடல் முழுவதையும் தானம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. ஏனெனில் உடல் தானம் என்பது கண் தானத்தைப் போன்றதல்ல. உடல் தானம் செய்யும் மனிதனின் உடலிலுள்ள பாகங்களை எடுத்து பிற மனிதர்களுக்குப் பொருத்துவதில்லை. மாறாக உடலின் ஒவ்வொரு பாகத்தையும் எடுத்து மருத்துவக் கல்வியின் பாடத்திற்காகவும் ஆய்வுக்காகவுமே பயன்படுத்தப் படுகின்றன. கண் தானத்தின் போது கண்ணோ மற்ற உறுப்புகளோ சிதைக்கப்படுவதில்லை. இறந்தவரின் கண்ணை எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றது. ஆனால் உடல் தானம் செய்தவரின் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக சிதைக்கப்படுகின்றன. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/udal_dhanam_seyyalama/
Copyright © www.onlinepj.com
****
ஆகவே அய்யாவுக்கு ஏக இறைவன் வாக்களித்த்த கிளுகிளு சுவன வெகுமதிகள் கிட்டுமா என்பது சந்தேகமே!!!

நன்றி!!

viyasan said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

காமக்கிழத்தன் said...

.....பட மாட்டார் சேசாசல பெரியார்தாச சித்தார்த் அப்துல்லா.

வால்பையன் said...

உறுப்புதானம் செய்தால் மறுமையில் அந்த உறுப்பு இருக்காது என சில வருடங்களுக்கு முன் ஒருவர் சொன்னார், அதனால் தான் அவர்கள் உறுப்புதானம் செய்வதில்லையாம்.

viyasan said...

//உறுப்புதானம் செய்தால் மறுமையில் அந்த உறுப்பு இருக்காது என சில வருடங்களுக்கு முன் ஒருவர் சொன்னார், அதனால் தான் அவர்கள் உறுப்புதானம் செய்வதில்லையாம்.//

அப்படியானால் இந்த பிறப்பில் கை கால் இல்லாத ஊனமுற்ற முஸ்லீம்கள் மறுமையிலும் ஊனமுற்று தான் இருப்பார்கள் போலும், அது வெறும் அநியாயம். :)))

syedabthayar721 said...

பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களின் மரணத்தை ஒட்டி அவர் உடல் மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைப்பது என்ற அவரின் குடும்பத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், இஸ்லாமியர்களும் இஸ்லாமிய அமைப்புகளும் அதன் தலைவர்களும் நடந்து கொண்ட விதம், மிகுந்த மரியாதைக்குரியது.

‘எங்கள் தந்தை மருத்துவக் கல்லூரிக்கு தன் உடலை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார்’ என்று அவரின் மகன்கள் வளவனும் சுரதாவும் கேட்டுக் கொண்டதை சந்தேகிக்கமால் முழுமையாக நம்பி,

‘குடும்பத்தின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்’ என்று இஸ்லாமியர்கள் நடந்து கொண்ட விதமும் ‘எங்களுக்கு தொழுகை நடத்துவதற்கு மட்டுமாவது அனுமதி கொடுங்கள்’ என்று கேட்டுக் கொண்ட முறையும் ‘இஸ்லாமியர்களிடம் ஜனநாயகம் என்பதே துளியும் இல்லை’ என்று அவதூறு பேசுகிற இஸ்லாமிய எதிர்ப்பு அறிவாளிகளை அம்பலப்படுத்தியது.

25 ஆண்டுகளாக பேராசிரியர் அப்துல்லாஹ் குடும்பத்து நண்பன், இதை நேரிலிருந்து பார்த்தவன், இந்த பிரச்சினைக்கு இடையில் பயணித்தவன் என்கிற முறையில் இதை நான் பதிவு செய்கிறேன்.

அண்ணாசாலையில் அமைந்த மெக்கா மசூதியில் ஆயிரக்கணக்காணவர்கள் கூடி நடத்திய சிறப்பு தொழுகை மற்றும் இரங்கல் கூட்டத்தில், பேராசிரியர் அப்துல்லாஹ் குறித்து பேசியதும், அவருக்காகவும் அவரின் குடும்பத்தின் மன அமைதிக்காவும் அவர்கள், அல்லாவிடம் வேண்டிக் கொண்ட விதமும் எல்லையற்ற அன்பால் நிறைந்து வழிந்தது.

பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களுக்காக நடந்த அந்த தொழுகை அனுமதிக்கப்படாமல் இருந்திருந்தால், அங்கிருந்த இஸ்லாமியர்களின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்வதாக இருந்தது, அன்பால் நிறைந்த அந்த தொழுகை.

Thanks To Mathimaaran.

M.Syed
Dubai

!

Blog Widget by LinkWithin