அது ஒரு மழைக் கால இரவு, ஆஷ் என்னும் வெள்ளை துரையின் குதிரை பூட்டிய வண்டி, சேரியைக் கடந்து பறக்கிறது. ஆஷ் ஒரு மனித நேயம் மிகுந்த மனிதன் என்பதால், இருள் விலகி கொஞ்சம் அவனுக்கு வழி விடுகிறது.
மனிதர்களில் இருந்து விலக்கப்பட்டு மிருகங்களின் நிலையில் இருந்த ” தலித்” மக்களின் பகுதியை கடந்து ஆஷ் செல்லுகின்ற போது, அங்கே ஒரு அழுகுரல் இருளின் அமைதியை ...விலக்கி வருகிறது..
ஆஷ் தன் சாரதியிடம் சொல்கிறான், வண்டியை அந்த அழுகுரல் வரும் திசை நோக்கி செலுத்து என்று.
சாரதி சொல்கிறான், அது தாழ்த்தப் பட்ட மனிதர்கள் வாழும் இடம், அங்கு நாம் செல்லக் கூடாது என்று,
ஆஷ், கேட்கிறார்,
மனிதர்களில் தாழ்ந்தவர்களா,
அவர்கள், திருடும் இனமா? என்றான்?
இல்லை அய்யா பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்றான்.
வியப்பின் எல்லைக்கு சென்ற ஆஷ், கட்டளை இடுகிறான், அந்த அழுகுரல் வரும் திசை நோக்கிச் செல்” –
அதிகாரத் தோணி கேட்டு அடங்கிய சாரதி, மறுக்காமல் விரைகிறான்.
அவர்கள் சென்ற இடம், அந்த மனிதர்களைப் போலவே இற்றுப் போன ஒரு குடிசை.
அங்கே, ஒரு பிரசவ வலி வேதனையில் ஒரு பெண் கதறுகிறாள். சுற்றிலும் நான்கைந்து பெண்களும், தூரத்தில் சில ஆண்களும்.
ஆஷ் அருகில் சென்று கேட்கிறான், என்ன ஆனது என்று..
பிரசவ வேதனையில் இருக்கும் இந்தத் பெண்ணுக்கு, ஒரு சிக்கல், அவளை மருத்துவமனை கொண்டு சென்றால், இரண்டு உயிர்களை காப்பாற்றலாம் என்று…….அவர்கள் சொன்னவுடன்,
ஆஷ் கேட்கிறான்,
பிறகென்ன கொண்டு செல்ல வேண்டியது தானே என்று.
அதற்கு, அவர்களில் ஒருவன் சொன்னான்,
அய்யா,
அக்ரகாரம் கடந்து இந்த இருளில் செல்வது என்பது, எம்மை நாங்களே அழித்துக் கொள்வது போலாகும்.
வண்டி கட்டிச் செல்ல வேண்டும் என்றால், அக்ரகாரம் கடக்க வேண்டும்.
ஆனால், அது இயலாத் காரியம், அந்தப் பகுதிகளுக்கு நாங்கள் செல்லத் தடை செய்யப்பட்டு இருக்கிறோம்.
ஆஷ், அங்கிருந்தவர்களைப் பார்த்துச் சொல்கிறார்,
” இந்த ஜில்லா அதிகாரி சொல்கிறேன்,
உடன், என்னுடைய வண்டியில் அந்தப் பெண்ணை ஏற்றுங்கள்.
நான் அவளை மருத்துவமனை அழைத்துச் செல்கிறேன், என்று சொல்லி சொன்னது போல் செய்தான்,
அக்ரகாரத்தை ஒரு தலித் பெண் கடந்து விட்டாள் என்கிற செய்தி,பரவியது.
வாஞ்சிநாதன் ஒரு உயர் சாதித் தீவிர வாதி.
எப்பாடு பட்டாவது வர்ணங்களையும்,
குல தர்மங்களையும் காப்பாற்ற முயலும்
ஒரு சாதியக் குலக் கொழுந்து.
அக்ரகாரத்தின், புனிதம் கெடுத்த ஆஷ் துரையின் ஆயுளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணி மனியாச்சியின் புகை வண்டி நிலையத்தில் வைத்து,
வாஞ்சினாதன் என்கிற பிராமணன் ஆஷ் துரையைத் தன் துப்பாக்கித் தோட்டாவுக்கு இரையாக்கிய போது அவனுக்கே தெரியாது,
நமக்கு இப்படி ஒரு நாட்டுப் பற்று விருது கிடைக்கும் என்று.
மனிதம் காப்பாற்றிய ஆஷ் துரை வரலாற்றினை எப்படி மறைத்திருக்கிறது இந்த வரலாற்று உண்மை.,
********
நன்றி..செல்வா கவிஞர்,
உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி
மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்..