இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொன்றும் ஆச்சர்யத்தின் கட்டமைப்பில் சூழப்பட்டது தான், சிலவிசயங்கள் நமக்கு புலப்பட்டலாம், இன்னும் நம்மால் அறிய முடியாத மர்மங்கள் நம் கண் முன்னே ஏராளம் ஏராளம்!, தற்பொழுது அறியமுடியவில்லையே என்பதற்காக அது என்றுமே அறியமுடியாத விசயமாக கருத முடியாது, இன்று நம்மால் வெகு எளிமையாக விளக்கமுடியும் பல விசயங்கள் ஒரு காலத்தில் சாத்தியமேயில்லை என்று பலரால் கைவிடப்பட்டது தான், அதில் இன்றும் விவாத பொருளாக இருப்பது பெர்முடா முக்கோணம்!
வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு, அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு சூட்டியுள்ள பெயர் தான் பெர்முடா முக்கோணம். அவை இன்று தான் இப்படியா அல்லது பலநூறு ஆண்டுகளாக இப்படி தானா என ஆராய்ந்தால், அதன் செயல் பல நூறு ஆண்டுகளாக மர்மமாக தான் இருக்கின்றது என தெரிகிறது, விமானம் கண்டுபிடிப்பதற்கு முன் கடல் வழி போக்குவரத்து தான் தொலைதூர பயணத்திற்கு உதவியது!, இயற்கை சீற்றங்கள் மற்றும் கடற்கொள்ளையர்களால் அவை அழிக்கப்பட்டிருப்பின் அச்செய்தி அக்காலத்தில் யாருக்கே தெரியாமல் அந்த கப்பலுடனே புதைந்தது!, ஆனால் பெர்முடாவின் மர்மங்கள் தெரிய வந்த போது...............
கப்பல்கள் சரியாக பெர்முடா முக்கோண பகுதியில் வரும் போது மர்மமான முறையில் மூழ்குவது பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது, பல வருட ஆராய்ச்சிக்கு பின் கடலுக்கடியில் இருக்கும் எரிமலையின் வெடிப்பின் காரணமாக ஏற்படும் பூகம்பமே அதற்கு காரணம் என அறியப்பட்டது, பூமி அதிர்வால் கடலில் ஏற்படும் அலைகள் சுனாமியை போன்று ராட்சசதனமாக இருக்கும், கவனிக்க இது கரை தொடவேண்டும் என்ற அவசியமில்லை, நடுகடலிலேயே அமைதியாகி விடலாம், அதனை
“ரோக் வேவ்ஸ்” என்று அழைக்கிறார்கள், ஒரு சிறிய அலைக்கு பின் வரும் பெரிய அலை அதனுடன் சேர்ந்து ராட்சசஅலையாக உருவாகி பெரிய கப்பலை கூட கவிழ்ந்துவிடும்!,... கப்பலிலிருந்து தளத்திற்கு எந்த செய்தியும் வராதது அவர்களுக்கு இன்னொரு ஆச்சர்யம்!
சரி, கடல் மார்க்கமாக செல்லும் கப்பல்கள் காணாமல் போக, எரிமலை, பூகம்பம், ராட்சச அலை, கடல் நீரோட்டம் என பல காரணங்கள் இருக்கின்றன, ஆனால் வான் மார்க்கமாக செல்லும் விமானங்கள் எப்படி காணாமல் போகின்றன என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் இறங்கினர் விஞ்ஞானிகள்.
1945 ஆம் வருடம் அமெரிக்காவை சேர்ந்த F19 வகை போர் விமானங்கள் ஐந்து பெர்முடா முக்கோணத்தின் மீது பறந்தன, ரோந்து பணிக்காக கிழக்கு நோக்கி 1700 கிலோமீட்டர் வரை செல்லவது அவர்களது இலக்காக இருந்தது, கிளம்பிய 2 மணி நேர அளவில், ஐந்து விமானங்களும் தள கட்டுபாட்டில் இருந்து மறைந்தது, மொத்தமாக ஐந்து விமானங்களும் காணாமல் போயின!, நேரடியாக தளத்திற்கு தொடர்பு இல்லையென்றாலும் விமானிகள் தொடர்பு கொள்ள முயற்சித்திருப்பது தெரியவந்தது, அருகில் சென்று கொண்டிருந்த பெரிய கப்பல்கள் அவர்களை சிக்னலை ரிசீவ் செய்திருக்கிறார்கள், அவர்கள் செல்ல வேண்டிய திசையில் இருந்து மாறி ஐந்து விமானங்களும் வேறு திசையில் பறந்திருப்பது தெரியவந்தது!, அவர்கள் பெர்முடா முக்கோணத்தில் விழவில்லை, அருகில் இருக்கும் தீவுகளில் எதாவது ஒரு சதுப்புநிலகாடுகளில் விழந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் சொன்னாலும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை என்பது இன்னும் ஆச்சர்யம்!
சில வருங்கள் கழித்து புரூஸ் ஹெனன் என்ற விமானி சொன்ன தகவல்கள் பெர்முடா பற்றிய ஆச்சர்யத்தை மேலும் அதிகமாக்கியது,.... புரூஸ் மியாமியிலுருந்து பஹாமா வழியாக பூர்டோ ரிகா சென்று கொண்டு இருந்தார், அப்போது தீடிரென்று அவரை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தது, ஒரு பெரும்புயலுக்கான அறிகுறிபோல் அது தோன்றியது, திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றி கொண்டே இருந்தது, நிச்சயமாக அவரால் சரியான திசையை கண்டறிய முடியாது, இருப்பினும் அவரது 15 வருட விமானம் ஓட்டும் அனுபவம் அவரை விடாமல் தப்பிக்க முயற்சிக்க வைத்தது, தொலைவில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியை கண்டார், அதில் தெரிந்த ஒளி தப்பிக்க ஒரு நம்பிக்கையை அவருக்கு அளித்தது.
வேகமாக அந்த குகைக்குள் நுழைந்த மறுநொடி அவரது விமானத்துக்கு பின் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டது, அவருக்கு முன் கரிய நிற கோடுகள் வளையமாக நிறைய தோன்றின! கிட்டதட்ட 16 கிலோமீட்டர் தூரம் அந்த குகையை கடக்க அவர் பயணித்தாக கூறிகிறார், ஆனால் அதற்கு அவர் எடுத்து கொண்ட நேரம் வெறும் 20 நொடிகள் தான், அவரது விமானம் அதை கடக்க பொதுவாக எடுத்துக்கொள்ளும் நேரம் குறைந்தது மூன்று நிமிடங்கள், அது மட்டுமல்ல அங்கிருந்து வெளியேறிய பின்னரும் அவருக்கு ஆச்சர்யங்கள் காத்திருந்தது, மேகங்கள் சாதாரணமாக இல்லாமல் மஞ்சள் மற்றும் சாம்பல் வண்ணத்தில் காணப்பட்டது, பஹாமா அடைய அவர் கடந்த தூரம் 160 கிலோமீட்டர் ஆனால் அதற்கான நேரம் வெறும் மூன்று நிமிடங்கள், ஏறத்தாழ மணிக்கு 3200 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்திருக்கிறார் ஆனால் அவரது விமானத்தின் அதிகபட்ச வேகமே 300 கீலோமீட்டர்கள் தான் மணிக்கு!
எவ்வாறு இது சாத்தியமானது?
கப்பல்கள் காணாமல் போக ராட்சச அலைகள் மற்றும் பனாமா கால்வாயின் நீரோட்டம் காரணமாக இருக்கலாம் என கண்டறிந்த போதும், விமானம் காணாமல் போக என்ன காரணம் என்று வெகுநாட்கள் விஞ்ஞானிகள் குழப்பத்தில் இருந்தார்கள், திசைகாட்டி குழம்பியதின் காரணமாக அது சூரியனின் மின்காந்த அலைகளாக இருக்கலாம் என கருதினாலும் விமானம் காலத்தை குறுக்காக வென்றது எப்படி? அதில் தோன்றியது தான் வார்ம்ஹோல் எனும் சூத்திரம், காலத்தை வெல்ல அதில் எந்தளவு சாத்தியம் உண்டு என தெரியாவிட்டாலும், வார்ம்ஹோலின் உதவியால் தூரத்தில் இருக்கும் கிரகங்களுக்கு செல்வது சாத்தியம் என சமகால விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்கிறார்!
வார்ம்ஹோல் என்றால் என்ன என்று எளிமையாக சொல்ல பூமியில் இருக்கும் ஒரு உதாரணத்துடன் ஆரம்பிக்கிறேன்!, புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து பறவைகள் வானில் பறக்க இறக்கைகளை பயன்படுத்துகின்றன, ஆனால் சிலநேரம் அவை இறக்கைகளை அசைக்காமல் வெகு நேரம் பறந்து கொண்டிருக்கும் அது காற்றின் விசையை பயன்படுத்துகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள், அதே பாணியை பயன்படுத்தி தான் கிளைடர்கள் பறக்கின்றன, அதாவது இயற்கையில் இருக்கும் சக்தியை பயன்படுத்தி பெரிதாக திறன் செலவழிக்காமல் பலனடைவது, அதே போல் வார்ம்ஹோலையும் பயன்ப்படுத்தமுடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து! எளிமையாக கீழிருக்கும் படம் சொல்லும்!
இந்த பிரபஞ்சம் வளைந்துள்ளது என பல விஞ்ஞானிகளின் கருத்து, ஒரு வட்டத்தின் விளிம்பில் சுற்றி வருவது சாதாரணமாக நாம் நேராக பயணம் செய்வது, அதன் குறுக்கு வெட்டில் பயணம் செய்வது காலத்தையும், தூரத்தையும் வெல்லும் தந்திரம்!, பிரபஞ்சத்தில் இருக்கும் டார்க்மேட்டர், டார்க் எனர்ஜியை பொருளின் மீது செலுத்தும் போது பொருள் பயங்கர வேகத்துடன் உந்தப்படுகிறது, ஐன்ஸ்டீன் தியரிப்படி ஒளியைவிட வேகமாக செல்ல எதுவாலும் முடியாது, ஆனால் டார்க் எனர்ஜி அது சாத்தியம் என்கிறது, காரணம் பின்னிருந்து தள்ளும் அதே நேரத்தில் முன்பக்கமாக வேகமாக உறிஞ்சும் வேலையையும் அது செய்கிறது, ஒரே நேரத்தில் இருவிசையின் பயன்பாட்டுடன், பொருள் ஒளியின் வேகத்தை மிஞ்சமுடியும் என்கிறது விஞ்ஞானம்! ஆனால் ப்ளாக்ஹோலும், வார்ம்ஹோலும் ஒன்று தானா இல்லை தனிதனியா என்று இன்னும் முடிவுக்கு வரமுடியவில்லை, ஒருவேளை ஒன்றாக இருந்தால் உள்ளே செல்லும் நாம் வெளியேற முடியாது, சிறு சிறு துகள்களாகிவிடுவோம்!
விஞ்ஞானம் இறுதி வரை ஒரு செயலின் சாத்தியகூறூகளை ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறது, நமக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ தெரிந்து கொள்வதும், அதை கேள்விகுள்ளாக்குவதும் அடுத்த கட்ட விஞ்ஞான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்!
இன்னும் செல்வோம்!
பெர்முடா முக்கோணம்
ரோக் அலைகள்
வார்ம்ஹோல்
ஏர் கரண்ட்
ப்ளாக் ஹோல்
74 வாங்கிகட்டி கொண்டது:
தெரிந்து கொள்ள வேண்டியது தகவல்கள் வால் ..keep rock
/// அவர்கள் பெர்முடா முக்கோணத்தில் விழவில்லை, அருகில் இருக்கும் தீவுகளில் எதாவது ஒரு சதுப்புநிலகாடுகளில் விழந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் சொன்னாலும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை என்பது இன்னும் ஆச்சர்யம்!///
நம்பவே முடியலை ..
ஆஹா ..ரொம்ப அருமையா இருக்குங்க ..
தொடர்ந்து எழுதுங்க .. காத்திருக்கிறேன் ..
//ஆனால் ப்ளாக்ஹோலும், வார்ம்ஹோலும் ஒன்று தானா இல்லை தனிதனியா என்று இன்னும் முடிவுக்கு வரமுடியவில்லை, ஒருவேளை ஒன்றாக இருந்தால் உள்ளே செல்லும் நாம் வெளியேற முடியாது, சிறு சிறு துகள்களாகிவிடுவோம்!//
ப்ளாக்ஹோல் - சூரியன் போன்ற ஒரு நட்சத்திரம் ப்யூஸ் ஆவதால் உருவாகும் வெற்றிடம். அந்த வெற்றிடத்திலிருந்து(!) எந்த விஷயமும் வெளியேறாது. அவ்வளவு ஈர்ப்பு சக்தி. Mass இல்லாத ஒளியே கூட வெளியேற முடியாது. பார்க்க: http://jeeno.blogspot.com/2005/02/blog-post_21.html
வார்ம்ஹோல் (Worm Hole) - வளைந்திருக்கும் இந்த பிரபஞ்சத்தை ஒரு படுக்கையை மடிப்பதை போல ஒரு பக்கத்தையும் படிப்பதை போல வைத்து, short cut-ல் இன்னொரு காலத்திற்கு செல்லும் ஒரு (கற்பனையான) கருத்து.
//ஆனால் ப்ளாக்ஹோலும், வார்ம்ஹோலும் ஒன்று தானா இல்லை தனிதனியா என்று இன்னும் முடிவுக்கு வரமுடியவில்லை, ஒருவேளை ஒன்றாக இருந்தால் உள்ளே செல்லும் நாம் வெளியேற முடியாது, சிறு சிறு துகள்களாகிவிடுவோம்!//
ப்ளாக்ஹோல் - சூரியன் போன்ற ஒரு நட்சத்திரம் ப்யூஸ் ஆவதால் உருவாகும் வெற்றிடம். அந்த வெற்றிடத்திலிருந்து(!) எந்த விஷயமும் வெளியேறாது. அவ்வளவு ஈர்ப்பு சக்தி. Mass இல்லாத ஒளியே கூட வெளியேற முடியாது. பார்க்க: http://jeeno.blogspot.com/2005/02/blog-post_21.html
வார்ம்ஹோல் (Worm Hole) - வளைந்திருக்கும் இந்த பிரபஞ்சத்தை ஒரு படுக்கையை மடிப்பதை போல இரு பக்கத்தையும் மடித்து வைத்து, short cut-ல் இன்னொரு காலத்திற்கு செல்லும் ஒரு (கற்பனையான) விஷயம்.
நம்ம மண்டைக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது...
இன்னும் பயிற்சி வேண்டுமோ.... :(
சுவராசியமான தகவல்கள்!!
ரொம்பவே இன்ட்ரஸ்டிங். தொடராக எதிர்பார்க்கிறேன்.
தலைப்ப பார்த்து வேற என்னவோன்னு நினச்சு ஆர்வமா படிச்சேன்.. :-)
ஒரு விஞ்ஞான யுகத்துக்குள் போய் வந்த மாதிரி இருக்கு,,வீடியோ காட்சி மிரட்டலாய் இருக்கு அருண்...
நல்ல ஆரம்பம். தமிழ் சொடுக்கி http://ta.wikipedia.org/wiki/பெர்முடா_முக்கோணம்
ஆரம்பம் சூப்பர். இன்னும் டீப்பா எழுதுங்க தல. அப்ப தான எங்களுக்கு புரியும்.
அண்ணா ரொம்ப அருமையான தகவல்கள்...
சூப்பர் தகவல்கள்.
கலக்கிட்டீங்க
அன்புள்ள வால்பையன்,
நீங்கள் ஏன் ஆனந்தவிகடன் குமுதம் ஆகிய popular பத்திரிக்கைகளுக்கு எழுதக்கூடாது? சுஜாதா அவர்கள் எல்லோரும் இப்படித்தான் எழுதினார்கள்--அவருக்கே உரிய முறையில். ஆங்கிலத்தில் இருந்ததை தமிழில் கொடுத்தார்கள். அதேமாதிரி நீங்களும் எழுதுங்கள். உங்களது எழுத்துக்களை படிப்பதற்கு காரணம் நீங்கள் எழுதும் முறை.
அதேமாதிரி எங்கு இருந்தது தகவல பெறப்பட்டது எங்கு இருந்தது புகைப் படங்கள் எடுத்தது என்று ஆதாரம் "source" கொடுங்கள். Copy right சட்டப் படி "fair use" என்று ஒரு clause இந்தியாவில் இருக்கும். ஆனாலும் நீங்கள் "உன்னோருவர் உழைப்பை "fair use" படி உபயோகப் படுத்தினாலும் அதற்கு "credit" நீங்கள் கொடுக்கவேண்டும். அதுவும் உங்களுக்கு Google AdSense மாதிரி எதாவது ஒன்றில் வருமானம் வந்தால்.
பிரபல் எழுத்தாளர்கள் தங்களை அறிவு ஜீவி என்று காட்டிக்கொள்ள ஆதாரத்தை போட மாட்டார்கள். ஏனென்றால் நாம் அவர்ககளை அறிவி ஜீவி என்று நம்பினால் தான் அவர்கள் நன்றாக கல்லா கட்டமுடியும். கட்டினார்கள். கட்டுகிறார்கள்.
நீங்கள் ஆதாரத்தை காட்டி எழுதுவது தான் முறை. எப்படி இருந்தாலும் அதில் உன்னோருவர் உழைப்பு இருக்கிறது.
இது காப்பி அடிக்கும் ஜோக்குகும் பொருந்தும்.
அண்ணே நீங்க எங்கியோ போய்டீங்கண்ணே...
ணா..எனக்கு ரொம்பவே பிடிச்சுருந்தது. அப்பப்ப இந்த மாதிரி sci விஷயங்களையும் தட்டி விடுங்க
தல சூப்பர் மேட்டர். இந்த டாகுமெண்ட்ரியை மாறி மாறி போட்டுகிட்டே இருக்காங்க.
ஆனா இப்பல்லாம் ஹிஸ்ட்ரி, டிஸ்கவரி மாதிரி சேனல்கள் கூட, கல்லா கட்ட இதையெல்லாம் அறிவியலா பார்க்காம, ‘மர்மக் கதை’ சொல்லுற ரேஞ்சுக்கு ஆரம்பிச்சிட்டாங்க. பார்க்கவே செம கடுப்பா வருது.
ஒரு 2-3 மாசம் முன்னாடி, பைபிள்ல வரும், செங்கடல் பிரிந்த ‘கதை’யை, சைண்ட்ஃபிக்கா ப்ரூஃப் பண்ணுறேன்னு இவங்க அடிச்ச ஒரு மணிநேர கூத்து இருக்கே........
அருமையான விசயங்களை சொல்லியிருக்கீங்க.. படிக்க படிக்க ஆர்வம் கூடிட்டே போனது.. நன்றி..
தல எனக்கு ரொம்ப ரொம்ப புடுச்ச சப்ஜக்ட் இது , எவ்வளவு படிச்சாலும் சலிக்காது , இன்னும் தெரிசுக்க ஆசை இருக்கும் , ஹாலிவுட் பாலா சொன்ன மாதிரி இப்ப டிஸ்கவரி சேனல்ல போடுராணுக
இந்தச் சுட்டியில் ப்ரூஸ் கெனன் மேற்கொண்ட பயணம் பற்றிய தகவல்கள் உள்ளன.
Warm Hole பற்றிய கொள்கை 1921 லேயே முன்வைக்கப்பட்டது. ஆனால், அந்த விமானப் பயணம், 1970 ல் நடைபெற்றது. Warm Hole பற்றிய கொள்கை ஏற்பட்டதற்கு அந்தப் பயணம் காரணமல்ல.
இன்னும் விரிவாக, பிறகு பின்னூட்டமிடுகின்றேன்.
//Warm Hole//
Warm Hole அல்ல. Worm Hole.
பெர்முடா முக்கோணத்தை சிலர் பொய் என்று கூறினாலும் அதை பற்றிய தகவல்களை கேட்கும் போது வியப்பாகவே உள்ளது, அதில் சிக்கிய கப்பல்கள் மற்றும் விமானங்கள் பற்றி எந்த தகவல்களும் இல்லை, அதனாலயே அது டெவில் ட்ரை அன்கிள் என்றும் அழைக்க படுகிறது.
//இந்த பிரபஞ்சம் வளைந்துள்ளது என பல விஞ்ஞானிகளின் கருத்து, ஒரு வட்டத்தின் விளிம்பில் சுற்றி வருவது சாதாரணமாக நாம் நேராக பயணம் செய்வது, அதன் குறுக்கு வெட்டில் பயணம் செய்வது காலத்தையும், தூரத்தையும் வெல்லும் தந்திரம்!,//
தூரம் என்பது விளிம்பின் சுற்று பாதையை வைத்து கணக்கிட படுகிறது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை, சரியாக சொல்ல போனால் அதை பற்றி தெளிவு இல்லை.
//டார்க் எனர்ஜியை பொருளின் மீது செலுத்தும் போது பொருள் பயங்கர வேகத்துடன் உந்தப்படுகிறது//
அது என்ன எனர்ஜி? எதன் மூலம் உருவாக்க படுகிறது.
@ சீனு
தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. Just Typos. :-)
-----------
The Light of Other Days நாவலில் மையக்கருவே, Worm Hole தான். Arthur Clarke Worm Hole ஐப் பற்றி சிறப்பாக விவரித்திருப்பார்.
இது தான்யா பதிவு! தொடரட்டும் உமது கலைப்பணி! வாழ்த்துக்கள்!
டைம் மெஷின் சாத்தியமே என்று இந்தப் பதிவு உணர்த்துகிறது. எப்படி என்றுதான் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவேண்டும்
//டைம் மெஷின் சாத்தியமே என்று இந்தப் பதிவு உணர்த்துகிறது. எப்படி என்றுதான் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவேண்டும்//
The Brief History of Time-ல் படித்தது. ஒரு நாளையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் (2 இலக்க எண், நினைவில்லை) பூமியை சுற்றி வந்தால், 1 second பின்னோக்கி போகிறோமாம். இப்ப சொல்லுங்க, டைம் மெஷின் சாத்தியமா என்று. இப்படி முடியாது என்பதால் வந்த (ஒரு short cut) concept தான் Worm Hole.
அற்புதமான விஷயங்கள்.
டிஸ்கவரி எல்லாம் பாப்பீங்க போல இருக்கு.
இந்த மாதிரி பதிவுகளைத்தான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
அருமை.
நைஸ் தல...
பெர்முடா பத்தி தெரிஞ்சுக்க ரொம்ப வருஷமா ரொம்ப ஆவலா இருந்தேன்.. நல்ல விளக்கப் பதிவு.. தொடர்ச்சிக்காக ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். நன்றிங்க வால்.
நல்ல தகவல், குறிப்புகளையும் (References) கொடுத்தால் நலம்.
/ பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு /
கியூபாக்கு அருகில் என்று சொல்லுங்கள்.
மன்னிக்க... பெர்முடா முக்கோணத்துக்கு அருகே கியுபா உள்ளது. பனாமா கால்வாய் தூரமுங்கோ.
பெர்முடா தீவுக்கு அருகே நாடோ தீவோ எதுவும் இல்லை.
அட்டகாசமான ஆர்ட்டிகல் தல.. தொடருங்க.. சில தகவல்களை மட்டும் இன்னும் கொஞ்சம் உறுதி பண்ணிக்கிட்டு எழுதுங்க..
பெர்முடா முக்கோணத்தில் நடைபெறும் மர்ம நிகழ்வுகளுக்கு அடிப்படை காரணமாக, அறிவியலாளர்கள் நம்புவது மின்காந்தப் புலத்தில் (ElectroMagnetic Field) ஏற்படும் மாற்றம். Casimir Effect கூட காரணமாக இருக்கலாம் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன. அந்தப் பகுதியின் ஊடாக மின்காந்த அலைகளை செலுத்தி, அவற்றில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்தால், ஆராய்ச்சியின் திசை தீர்மானிக்கப்படக்கூடும். இதுவரை அப்படி ஏதேனும் ஆய்வுகள் நடைபெற்றனவா என்று தெரியவில்லை. அதுபோன்ற ஆய்வுகள் ஏதும் நடைபெற்றிருந்தால், அறிந்தவர்கள் தெரிவிக்கவும்.
----
அவ்வப்போது, வரும் கருத்துக்களில், சற்று அமானுஷ்யம் நிறைந்த கருத்து ஹச்சிசன் அவர்கள் அளித்தது. ஹட்சிசன் விளைவு குறித்து அறிய சுட்டி 1 .
சுட்டி 2 .
சுட்டி 3 .
.
நல்ல பரிமாண வளர்ச்சி அடைஞ்சிருக்கீங்க தல. ஃபாலோவிட்டேன் :)
நிஜமாவே அற்புதமான பதிவு.... நம்மாளுக இதை எல்லாம் அவன் செயல்னு சொல்லி அம்மண ஆட்டத்த நடத்துவாங்க..
நான் Brief History of Time புத்தகத்தை வாங்கி ரெண்டு வருஷமா படிக்க முடியாம முழிச்சிட்டு இருக்கேன் தல!
//சிறு சிறு துகள்களாகிவிடுவோம்!//
நல்லா பாருங்க தல...பிளாக் ஹோல்ஸ் எல்லைக்குள்ள போனா அது ஈர்த்து கம்ப்ரஸ் பண்ணி குறுக்கிரும். பஞ்சு மிட்டாய் நசுக்கினா அடர்த்தி அதிகமாகி, சின்னதா மாறுரா மாதிரி... ஆனா மாஸ் மாறாது...
தமிழ்ல இது சம்பந்தமா அதிகமான கட்டுரைகளோ, புத்தகங்களோ இல்லை, அதனால உங்க பதிவு நல்ல விசயம் தொடருங்கள்.
இது மாதிரி பதிவுகளுக்கு சோர்ஸ் சொல்வது நல்லது..., சில சமயம் சோர்ஸ்ல உள்ள மொழி, வேறாக இருப்பதால் அர்த்தம் இங்கு மாறிவிட வாய்ப்பிருக்கிறது...
உங்கள் ஒவ்வொரு பதிவும் ஒவ்வொருமாதிரி !
நல்லா எழுதியிருக்கீங்க !
அருமையான தகவல்கள் தல..
இது போன்ற இன்னும் பல பதிவுகளை உங்களிம் எதிர்பார்க்கின்றேன்..
இன்ட்ரஸ்டிங் சுவராசியமான தகவல்கள்!!
சுவாரஸ்யமான மேட்டர செம சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க...கலக்கல்..
Bookmark செய்துவிட்டேன் நேரமிருக்கும் போதுபடித்து கொள்கிறேன் வாழ்த்துக்கள் நண்பா
jeouf said...
spam mail லாம் போயி, இப்ப spam comment வர ஆரம்பிச்சிருச்சா? இது எங்க போயி முடியுமோ?
@வால்
அது ஏன் தல உங்கள பாத்து இந்த கமெண்ட் போட்டிருக்கான்?
//@வால்
அது ஏன் தல உங்கள பாத்து இந்த கமெண்ட் போட்டிருக்கான்? //
நாங்கள்ளாம் மாத்திரை போட்டு சமாளிக்கிறோம், நீ எப்படியா எதையும் சாப்பிடமா சமாளிக்கிறேன்னு கேக்குறான் தல! வரச்சொல்லி கிளாஸ் எடுக்கனும்!
அப்பாடா பூமியல இப்படியல்லாமா இருக்கு :) பயங்கரம்
வால் வாங்க நாம் ஒருக்கா போய் அந்த ப்ளாக் ஹோல பாத்துட்டு வந்துடுவோம் :)
சகா அருமை:)) வியப்பு..
ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?
//ஐன்ஸ்டீன் தியரிப்படி ஒளியைவிட வேகமாக செல்ல எதுவாலும் முடியாது, ஆனால் டார்க் எனர்ஜி அது சாத்தியம் என்கிறது, காரணம் பின்னிருந்து தள்ளும் அதே நேரத்தில் முன்பக்கமாக வேகமாக உறிஞ்சும் வேலையையும் அது செய்கிறது,//
ஒளியை விட வேகமாக செல்ல சாத்தியமில்லை, வாம் ஹோல் பற்றி விக்கி யில் உள்ளது போல அது வேகமாக செல்வது என்று பொருள் ஆகாது குறுக்கு வழியில் செல்வது என்பதே.
//As an analogy, running around to the opposite side of a mountain at maximum speed may take longer than walking through a tunnel crossing it//
மலையின் அடுத்த பக்கத்தை அடைய மலையை சுற்றி ஒடுபவரை விட, சுரங்க வழியாக நடந்து செல்பவர் விரைவாக சென்று விடுவார் என்பதே.
தல அந்த பெருமுடா முக்கோனதுல வரப்ப எல்லாம் அது ஏன் மூழ்கி போகுதுன்ற ரகசியத்த சொல்லுவீங்கன்னு நினைச்சேன்.நான் உங்கள ரொம்ப அறிவுனுல நினைச்சேன்.இருக்குற விஞ்ஞானிக்கு உதவி பண்ண போறேன் வர போற விஞ்ஞானிக்கு உதவி பண்ண போறேன்னு சொல்லிக்கிட்டு.சட்டு புட்டுனு நீங்களே ஆராய்சியில இறங்குங்க தல.
யாருடா அது!நம்ம வால்ஸ் க்கு இங்கிலிபிஸ் தெரியலன்னு சொன்னது.கூகிள் கூட இம்புட்டு அழகா ட்ரான்சிலைட் பண்ணாது.
சாரி தல.ரொம்ப ஆணி.கமன்ட் போட நேரம் இல்ல.பதிவ பெருசா வேற இருந்துச்சா.. இப்போ தான் நேரம் கிடைச்சுச்சு.தல உங்களளுக்கு கிட்னி சூப்பர்ரா வேல செய்யுது போல.அப்பறம் தல பிளாட்பாரம் ஓரமா "நடமாடும் விக்கி" ன்னு ஒரு போர்டு வச்சுருங்க.கூகிள் ஆட்ஸ் காசு பத்தாது தல.
அன்புள்ள அருண்
சிறிது காலமாகவே உங்கள் எழுத்துகளை படித்து வருகிறேன் .நன்றாக உள்ளது .தொடர்ந்து இம்மாரி எங்களை போல் மக்களுக்கு புரியும் வண்ணம் அறிவியல் விஷயங்களை எழுதுங்கள் . இந்த முக்கோணம் மற்றும் இதே மாறி நம்மால் இப்போதைக்கு புரிந்து கொள்ள முடியாத மர்மங்கள் பற்றி worldmysteries.com போன்ற தளங்களில் வாசித்து உண்டு , ufo , extra terrestrials என்று இதற்கு பல யூகங்கள் உண்டு , படிக்கச் நல்ல சுவாரசியமாக இருக்கும் .இங்கு தான் வாசக மனமும் விஞ்ஞான மனமும் வேறுபாடும் போலும் .நான் அதை படித்தபோது வியப்பு உணர்வே மேலோங்கி இருந்தது
//சாரி தல.ரொம்ப ஆணி.கமன்ட் போட நேரம் இல்ல.பதிவ பெருசா வேற இருந்துச்சா.. இப்போ தான் நேரம் கிடைச்சுச்சு.தல உங்களளுக்கு கிட்னி சூப்பரா வேல செய்யுது போல.அப்பறம் தல பிளாட்பாரம் ஓரமா "நடமாடும் விக்கி" ன்னு ஒரு போர்டு வச்சுருங்க.கூகிள் ஆட்ஸ் காசு பத்தாது தல.//
மதுரைப் பொண்ணுங்க இப்படிக் கூட யோசிப்பாங்களோ!!
வால்ஸ்!
இது வரை எழுதிய பதிவுகளிலேயே, இது ஒன்று தான், சொதப்பாமல், சம்பந்தமில்லாத விஷயங்களைத் தொட்டு வேறுபக்கம் பயணிக்காமல் எழுதப்பட்டது என்று தோன்றுகிறது!
வருணா பிறந்த நேரம், வாலைக் கூட நிமிர்த்த முடிந்திருக்கிறது! வாழ்த்துக்கள்!
வால்ஸ் சூப்பர் அடிச்சி ஆடுங்க..ஏற்கனவே பலர் சொன்னது மாதிரி இந்த மாதிரி ஏரியாக்களை தமிழில் தொடுபவர்கள் ரொம்ப கம்மி..
தொடருங்கள் இது போல அதிக புதிரான விஷயங்களை,.,.
நான் ஆங்கிலத்தில் படித்துள்ளேன் இது பற்றி தமிழில் சுவையாய் தந்துள்ளீர்கள்..
அடுத்து இல்லுமினாட்டி பற்றியும் முடிந்தால் எழுதுங்கள்..என் மகனுக்கு மிக இஷ்டம் ..
புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் வால்
நீங்கள் கூறுவது போல் இது எப்பொழுதாவதுதான் இது நிகழும்
தினமும் நடப்பதில்லை.
பெர்முடா காமடி
http://www.youtube.com/watch?v=kE6KBZVjbKk&NR=1
அருமையான தகவல்..!
பதிவுலகத்துக்கு புதியவன்..!
தங்கள் போன்றவர்களின் பின்னூட்டங்கள் என்னை மேலும் ஊக்கிவிக்கும்..!
எனது பக்கம் உங்கள் பார்வைக்கு
http://vetripages.blogspot.com
நல்லா இருக்கு....
ஏதோ கொஞ்சம் புரிந்தும், புரியாமலும் இருக்கிறது.....
விஞ்ஞானம் என்றாலே அப்படிதான் இருக்குமோ.
அரிய தகவல்கள். மேலும் அறிய ஆவல். காத்திருப்போம் இது போன்ற இன்னொரு பதிவுக்காக.
இது பரிமான சிக்கலாக இருக்கலாம் . நாம் முப்பரிமான உலகில் இருக்கிறோம் நாலாவது பரிமானம் காலம் .இன்னும் பிரபஞ்சத்தில் நிறைய பரிமாணங்கள் இருக்கு . ஒரு பரிமாணத்தில் இருந்து இன்னொரு பரிமானம் வழியாக பயனித்தல் எதாவது ஒன்று கழிக்கப்படும்
காலம் அல்லது தூரம் . இந்த பிரபஞ்சத்தில் பதினாறுக்கும் மேற்பட்ட பரிமானகள் இருக்கலாம்.
இது பரிமான சிக்கலாக இருக்கலாம் . நாம் முப்பரிமான உலகில் இருக்கிறோம் நாலாவது பரிமானம் காலம் .இன்னும் பிரபஞ்சத்தில் நிறைய பரிமாணங்கள் இருக்கு . ஒரு பரிமாணத்தில் இருந்து இன்னொரு பரிமானம் வழியாக பயனித்தல் எதாவது ஒன்று கழிக்கப்படும்
காலம் அல்லது தூரம் . இந்த பிரபஞ்சத்தில் பதினாறுக்கும் மேற்பட்ட பரிமானகள் இருக்கலாம்.
\\பெர்முடா முக்கோணத்தில் நடைபெறும் மர்ம நிகழ்வுகளுக்கு அடிப்படை காரணமாக, அறிவியலாளர்கள் நம்புவது மின்காந்தப் புலத்தில் (ElectroMagnetic Field) ஏற்படும் மாற்றம். Casimir Effect கூட காரணமாக இருக்கலாம் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன\\
இந்த யுகம் தவறு என்று நம்பபடுகிறது . காரணம் மின்காந்த புலம் . பூமியில் வட தென் துருவத்தில் அமைந்துள்ளது . பெர்முடா அந்த இடத்தில இல்லை .சூரியனில் இருந்து வரும் மின்காந்த புயலின் பாதிப்பாக இருக்கலாம் இது செயற்கைகோள் பாதிப்பதை போல் சில இடங்களில் திசை காடும் கருவியை பாதித்து திசைகளை மாற்றி விடலாம் இது எப்போதாவது நடக்க சாத்தியம் உள்ளதாக நம்பபடுகிறது.
சுப்பர் தகவல் நண்பா. இந்த இணைப்பை எனது பேஸ்புக்கில் இணைத்துள்ளேன். தொடர வாழ்த்துகள்.
நல்ல தகவல் நண்பா!
ஒரு மர்மமான நிகழ்வுக்குப்பின்னால் ஒரு சரியான காரணமிருக்கும். ஆனால் அது கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் நம்மக்களில் பலர் இது மந்திரம், கடவுள் என்று கதைகட்டி விடுவார்கள். இதை தடுக்க விஞ்ஞானம் எவ்வளவோ போராடிவருகிறது. இதை உலகுக்கு உரைக்கும் வாயாக நாமிருப்போம்.
வாழ்த்துக்கள்.
அட்டகாசமான பதிவு! பெர்முடாவுக்குள்ல முக்கோணம் இருக்கறாமாதிரி நாம போடற பர்மடாஸ்லயும் முக்கோணம் இருக்குதா! அதன் மர்மங்கள் பற்றி விளக்குங்க தல!
ராஜன் சொல்வதுபோல் பெர்முடாசுக்குள் முக்கோணம் பற்றிய தகவல்களை சேகரித்து விரைவில் பதிவெழுதவும். ஹி ஹி :))))
நிறைய தெளிவான விளக்கங்கள்.நன்றி.
நன்கு மெனக்கெட்டு தகவல்கள் சேகரிப்பு செய்து இருப்பீர்கள் போல் உள்ளது .காலத்தை திருப்பும் விஷயம் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது .வாழ்த்துக்கள்
அருமையான தகவல்
அருமை
அருமை
ஐ
Post a Comment