சுடும் நிலவு, சுடாத சூரியன்!

அமைதிப்புயல்
ஆர்பாட்டமில்லாத பூகம்பம்
அக்கினிச்சாரல்
பெருமழைக்காதல்
ஒரு துளி பெருங்கடல்
கைக்குட்டை வானம்
பனிமலைச் சூரியன்
நடமாடும் சிலை
நீலவண்ணக் கவிதை
சிறகில்லா தேவதை
நீ
என்னைக் கண்டெடுத்தவள்
நான்
உன்னில் தொலைந்தவன்!


0*0


வண்ணங்கள் குழைத்து
வடித்த சிலையொன்று
சமுத்திரத்திற்கு நிழலாய்
வானில் வலம் வருகிறது
நிலவொளியில் மின்னும்
சிறகுகள் வான்வெளி
முழுதும் மறைக்கிறது
தினம் ஒருமுறை வந்தாலும்
தினம் தினம் வானம் பார்த்த
சிறுவனாய் கெஞ்சுகிறேன்
போகும் முன்
என் தேவை கேட்டுப்போ


0*0


தீராத பசி
நெருப்பு துண்டாய் நீ
நெருங்கும் போதெல்லாம்
சாம்பலாகிறேன்
காதல் எழும் போதெல்லாம்
ஃபீனிக்ஸ் ஆகிறேன்.


0*0


ஒரு கவிதை சமைக்க ஆசைப்பட்டேன்
கொஞ்சம் நீரும்
வண்ணக்கலவையும்
உயிர் வழிந்த காதலையும் சேர்த்து
சமைத்த கவிதையை
பொதுவில் வைத்தால்
ஒருத்தன் சாம்பார் என்கிறான்,
ஒருத்தி ரசம் என்கிறாள்,
தோழி இது தான் கவிதையா என கேட்கிறாள்,
ஒருவன் ஒருபடி மேலேபோய்
கவிதையில் சுவையில்லை
வண்ணம் மட்டும் உண்டு என்கிறான்,
தயவுசெய்து யாராவது
என் கவிதையை சுவைத்து பார்த்து
எப்படியிருக்கு என சொல்லுங்களேன்!


0*0


இழப்பதற்கு எதுவுமில்லை
எனும் பொழுது தான்
முடிவு செய்தேன்,
இனி நான் முழுதும்
உன்னவன்.


0*0


போன் மாத்திருக்கேன், நம்பர் எல்லாம் மிஸ்ஸாயிருச்சு, உங்க நம்பரை எஸ்.எம்.எஸ்ஸோ, மெயிலோ பண்ணுங்களேன் ப்ளீஸ்! என்னது அதே பழைய நம்பர் தான் 9994500540 arunero@gmail.com

74 வாங்கிகட்டி கொண்டது:

Mythees said...

:)

Mythees said...

நான்தான் முதல் :)

Jey said...

///என் கவிதையை சுவைத்து பார்த்து
எப்படியிருக்கு என சொல்லுங்களேன்!//

வெங்காயம்...:)

Anonymous said...

//இழப்பதற்கு எதுவுமில்லை
எனும் பொழுது தான்
முடிவு செய்தேன்,
இனி நான் முழுதும்
உன்னவன்.//
மிக அருமை நண்பரே..
சமைத்த கவிதை சுவை கவிதையென்றே சொல்லியது. :)

ஜில்தண்ணி said...

அட அட அட
வர வர வாலுக்கு லவ் மூடு அதிகமாயிருச்சி பா :)

கொல்லான் said...

போன் மாத்துனதப் பத்தி ஒரு பதிவு போடலாமே ?

என்னது லவ் மூடு அதிகமாயிட்டே வருது?

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

/////போன் மாத்திருக்கேன், நம்பர் எல்லாம் மிஸ்ஸாயிருச்சு, உங்க நம்பரை எஸ்.எம்.எஸ்ஸோ, மெயிலோ பண்ணுங்களேன் ப்ளீஸ்!//////

அது எப்படி போன் மாத்தின நம்பர் மிஸ் ஆகும் ......

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

போன் தொலைச்சிட்டேன் சொல்லுங்க ...நாங்களெல்லாம் எத்தன போன் தொலைசிருபொன் போதைல :))))

க.பாலாசி said...

கவிதைத் தொகுப்பு ஏதும் வெளியிடப்போறீங்களா?

தர்ஷன் said...

நீர் ,வண்ணக்கலவை எல்லாம் போட்டிங்க உப்பு போட்டீங்களா? அதுதான் சுவை இல்லான்னு சொல்லியிருக்கான்

//அமைதிபுயல்
ஆர்பாட்டமில்லாத பூகம்பம்
அக்கினிச்சாரல்
பெருமழைக்காதல்
ஒரு துளி பெருங்கடல்
கைக்குட்டை வானம்
பனிமலைச் சூரியன்
நடமாடும் சிலை
நீலவண்ணக் கவிதை
சிறகில்லா தேவதை
நீ
என்னைக் கண்டெடுத்தவள்
நான்
உன்னில் தொலைந்தவன்!//

ஒவ்வொன்றும் ரொம்பவே அழகாயிருக்கிறது
வாழ்த்துக்கள் வால்

கொல்லான் said...

தொலஞ்சு போன போன்என்கிட்டே தான் இருக்கு. வேணுமா?

(அதுக்குள்ளே ஏகப்பட்ட ரகசியங்கள் இருக்கு)

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

/////நீ
என்னைக் கண்டெடுத்தவள்
நான்
உன்னில் தொலைந்தவன்!//////

இந்த வரி தூள் வால் !!!!!!!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

/////தீராத பசி
நெருப்பு துண்டாய் நீ
நெருங்கும் போதெல்லாம்
சாம்பலாகிறேன்
காதல் எழும் போதெல்லாம்
ஃபீனிக்ஸ் ஆகிறேன்./////

ஆமாம்பா !!!!!ஆமா ( வடிவேலு பாணியில் படிக்கவும் )

தனி காட்டு ராஜா said...

//கைக்குட்டை வானம்
பனிமலைச் சூரியன்//

கவிதை வானில்
நாத்திக சூரியன்???

பின்னோக்கி said...

கவிதை நல்லாயிருக்கு. ஃபீனிக்ஸ் ரொம்ப புடிச்சுருந்தது.

கண்ணகி said...

அட ஒரு கவிஞன் இததனை நாளாய் எங்கிருந்தார்...

Anonymous said...

கவிதை சமையல் சுவையாய் இருந்தது..
அழகிய கவிதை நடை..
வாழ்த்துக்கள்..

sathishsangkavi.blogspot.com said...

கவிதைகள் எல்லாம் கலக்குது.... அருணின் காதலுக்கு வாழ்த்துக்கள்...

செல்வா said...

//தீராத பசி
நெருப்பு துண்டாய் நீ
நெருங்கும் போதெல்லாம்
சாம்பலாகிறேன்
காதல் எழும் போதெல்லாம்
ஃபீனிக்ஸ் ஆகிறேன்.///

கலக்கிட்டீங்க ..!!

அகல்விளக்கு said...

நீங்க எப்பவும் யூத்துதான் தல.....

செம லவ்மூடு..... :)

Anonymous said...

இந்த வயசான காலத்திலேயும் இப்படி ஒரு சின்ன சிறுமி மேல உங்களுக்கு காதல் வந்துருக்கே, நீர் என்ன பெரியாரா?

ரவி said...

என் நம்பர் 78294 77007

சேவ் பண்ணிக்கப்பா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

0*0

//

அப்படீனா என்னா பாஸ்..?

VELU.G said...

ரொம்ப நல்லாயிருக்குங்க

Rajan said...

//போன் மாத்திருக்கேன்,//

டாஸ்மாக்குல எவனோ லவட்டிட்டான்! மப்புல அது கூட தெரியாம மட்டயாகிக் கெடந்தேன்னு உண்மைய சொல்லுமய்யா!

Rajan said...

//என்னது அதே பழைய நம்பர் தான் 9994500540 //


தவ் ஹீத் ஜமாத் கவனத்துக்கு!

Rajan said...

//ஒரு கவிதை சமைக்க ஆசைபட்டேன்/


ஏன் தல சைட் டிஷ் ஏதுவுமில்லயா!

Rajan said...

//கொஞ்சம் நீரும்
வண்ணக்கலவையும்
உயிர் வழிந்த காதலையும் சேர்த்து//


கொமட்டிண்டு வர்றது!

Rajan said...

//சமைத்த கவிதையை
பொதுவில் வைத்தால்
ஒருத்தன் சாம்பார் என்கிறான்,//


எவண்டா என் பங்காளி கவிதய சாம்பார்ன்னவன்! நி உடு பங்கு! தக்காளி அவன தொவச்சு தொங்க உட்டுடறேன்

Rajan said...

//ஒருத்தி ரசம் என்கிறாள்,//


மொளகு ரசமா,தக்காளி ரசமான்னு பாப்பாட்ட கெட்டு சொல்லுங்களேன்!

Rajan said...

//தயவுசெய்து யாராவது
என் கவிதையை சுவைத்து பார்த்து
எப்படியிருக்கு என சொல்லுங்களேன்!//

சரக்கடிச்சுட்டு 7 மணிக்கு மேல சொல்லலாமா!

Rajan said...

//இனி நான் முழுதும்
உன்னவன்.//


ஊட்டம்மா எங்க ஊர்ல இல்லயா!

சத்ரியன் said...

வால் அண்ணே,

நம்ம பட்டாபட்டி ஒரு டவுட்டு கேட்டிருக்காரு. வெளக்கம் குடுத்துருங்க.

Rajan said...

//இந்த வயசான காலத்திலேயும் இப்படி ஒரு சின்ன சிறுமி மேல உங்களுக்கு காதல் வந்துருக்கே, நீர் என்ன பெரியாரா?//


ஹா ஹா ஹா ! நான்லாம் இந்தாள்ட்ட ஒண்ணுமே சொல்லல தல! இதுக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் கெடயாது!

சத்ரியன் said...

ஐம்பதிலும் ஆசை வரும் சரி. எழவு காதலுமா வரும்?

வந்துருச்சி.இருந்துட்டு போட்டும்.

வால்த்துக்கள் அண்ணே.

சத்ரியன் said...

//தினம் தினம் வானம் பார்த்த
சிறுவனாய் கெஞ்சுகிறேன்
போகும் முன்
என் தேவை கேட்டுப்போ//


நல்லாயிருக்குங்க அருண்.

Rajan said...

//ஐம்பதிலும் ஆசை வரும் சரி. எழவு காதலுமா வரும்?
//

இதுக்கு என்னத்த சொல்ல! ஆனாலும் இவ்வளவு ஏத்தகூடாது வயச!

வாலுக்கு 32தான் ஆச்சு! ஓஹோ நீங்க பொண்ணு வயச பத்தி சொல்றிங்களா! அது சரி கரெக்டுதான்!

Rajan said...

//0*0

//

அப்படீனா என்னா பாஸ்..?//


ரெண்டு புறா ஜொய்ங்ங்ங்ங்ங்ன்னு பறக்குதுன்னு அர்த்தமாம்!

Rajan said...

//போகும் முன்
என் தேவை கேட்டுப்போ
//

வேற என்ன? கடசி வரைக்கும் அன்பு! இப்போதைக்கி கைமாத்தா ஒரு முன்னூறு ரூவா!

Rajan said...

//நீ
என்னைக் கண்டெடுத்தவள்//

பெருமாள் கோயில் வாசலிலா?

Rajan said...

//தினம் தினம் வானம் பார்த்த
சிறுவனாய் கெஞ்சுகிறேன்//

பாத்து தல! காக்கா எதுனா லத்தி போட்டுட போவுது!

Rajan said...

//அமைதிபுயல்
ஆர்பாட்டமில்லாத பூகம்பம்
அக்கினிச்சாரல்//

திமுகல ஃப்லெக்ஸுக்கு ஐடியா சொல்ல ஆள் வேணுமாம் போறீங்களா!

Rajan said...

//நடமாடும் சிலை//


நம்ம வீட்டு பக்கம் கொஞ்சம் வர சொல்லுங்க தல!

அஷீதா said...

என் கவிதையை சுவைத்து பார்த்து
எப்படியிருக்கு என சொல்லுங்களேன்!//

ஆச்சி மசாலா போட்டீங்களா?

Rajan said...

//தீராத பசி
நெருப்பு துண்டாய் நீ//


பீடித் துண்ட தான் டீஸண்ட்டா அண்ணாத்த சொல்றாப்ப்ல!

Rajan said...

//ஒருவன் ஒருபடி மேலேபோய்//

மொட்ட மாடில இருந்து குதிச்சுட்டானா!

Rajan said...

//கவிதையில் சுவையில்லை
வண்ணம் மட்டும் உண்டு என்கிறான்,.//

அவன எங்கிட்ட அனுப்புங்க!

Rajan said...

//ஆச்சி மசாலா போட்டீங்களா?//


ஆச்சியயும் இந்தாளு விட்டு வெக்கமாட்ட்ருங்கற மேட்டர் உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா!

Rajan said...

//அட ஒரு கவிஞன் இததனை நாளாய் எங்கிருந்தார்....//


மூலப்பட்ற முட்டுசந்துல நின்னு யோசிச்சிட்டு இருந்தார்!

Rajan said...

ஒருநாளும் இல்லாத திருநாளா இன்னைக்கி என்ன பொண்ணுக வாசம் தூக்கலா இருக்கு!


கொஞ்சம் லேட்டான ஒடனே இன்னைக்கு வர மாட்டேன்னு நெனச்சிடுச்சுங்க போல!

கிருஷ்ண மூர்த்தி S said...

ஏதோ பாவம், ஊட்டுக்காரம்மா கண்டுக்கிட மாட்டாங்கன்ற தைரியத்துல சுடும் நிலவு, வேகாத பூரின்னு கவிதை எழுதி மனசைத் தேத்திக்கக் கூட வுட மாட்டீங்களா ராஜன்!

இப்படிப் போட்டுத் தாளிச்சிருக்கீங்களே!

Rajan said...

//ஏதோ பாவம், ஊட்டுக்காரம்மா கண்டுக்கிட மாட்டாங்கன்ற தைரியத்துல சுடும் நிலவு, வேகாத பூரின்னு கவிதை எழுதி மனசைத் தேத்திக்கக் கூட வுட மாட்டீங்களா ராஜன்!

இப்படிப் போட்டுத் தாளிச்சிருக்கீங்களே! //


என்ன்ங்க நீங்களும் பூரி,தாளிப்புன்னு சாப்பாட்டு மேட்டராவே பேசறீங்க!

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரொம்ப நல்லாயிருக்கு

தமிழ் பொண்ணு said...

அருமை கவிதை
அடாவடி கமன்ட்..

கார்த்திகைப் பாண்டியன் said...

மொதல்ல இருக்குறது நல்லாயிருக்கு தல..:-)))

நேசமித்ரன் said...

வால் ...!

கடைசி வரி நல்லாருக்கு !

@ ராஜன் நேர்ல பேசுவோம் :))

நாடோடி said...

காத‌ல் க‌விதைக‌ள் ந‌ல்லா இருக்கு...

cheena (சீனா) said...

வாலு

கவிதை நல்லா இருக்கு - காதல் கவிதை - 35 வய்சிலே - ம்ம்ம் - தங்க்ஸ் ஒண்ணும் சொல்லலியா - கொடுத்து வச்சவன்யா நீ

வாழக் வாழ்க நல்வாழ்த்துகள் வாலு
நட்புடன் சீனா

Ashok D said...

தேவுடா... தேவுடா... ஏழுமலை தேவுடா
சூடுடா... சூடுடா... வாலுக்கவித சூடுடா..
ஓடுடா...ஓடுடா... அந்த பக்கம் ஓடுடா...

:)))

மங்குனி அமைச்சர் said...

தீராத பசி
நெருப்பு துண்டாய் நீ
நெருங்கும் போதெல்லாம்
சாம்பலாகிறேன்
காதல் எழும் போதெல்லாம்
ஃபீனிக்ஸ் ஆகிறேன்.
///

இங்க என்னதாம்பா நடக்குது ????

மங்குனி அமைச்சர் said...

யோவ் , இங்க எவனோ செய்வினை செய்துட்டாங்க , வாலு பேசாம கேரளாவுல போயி மந்திரிசிட்டு வா

Uma said...

பசிக்குது. சாப்பிட்டு வரேன் :)

நசரேயன் said...

//இழப்பதற்கு எதுவுமில்லை
எனும் பொழுது தான்
முடிவு செய்தேன்,
இனி நான் முழுதும்
உன்னவன்.//

போக இடமில்லைன்னு சொல்லுங்க


//தீராத பசி
நெருப்பு துண்டாய் நீ
நெருங்கும் போதெல்லாம்
சாம்பலாகிறேன்
காதல் எழும் போதெல்லாம்
ஃபீனிக்ஸ் ஆகிறேன்.//

படிச்ச எனக்கு பீலிங்க்ஸா இருக்கு

//
போகும் முன்
என் தேவை கேட்டுப்போ
//

ரெண்டு இட்லி ஒரு வடை

//
நீ
என்னைக் கண்டெடுத்தவள்
நான்
உன்னில் தொலைந்தவன்!//

செத்து செத்து விளையாடுற விளையாட்டு மாதிரியா வால்

Unknown said...

நல்லாருக்கு....

Unknown said...

கம்யூனிஸ்டுகளுக்கு
தமிழில்
பிடிக்காத வார்த்தை
காதல்!
காரணம்
அது
தனியுடமை!

நிலாமதி said...

நீ என்னை கண்டெடுத்தவள்.. நான் உன்னில் தொலைந்தவன். ..அழகாய் இருக்கு வரிகள்.என்றும் அவளுடன் அன்பாய் இருங்கள்.வாழ்த்துக்கள்.

Kannan.S said...

//தீராத பசி
நெருப்பு துண்டாய் நீ
நெருங்கும் போதெல்லாம்
சாம்பலாகிறேன்
காதல் எழும் போதெல்லாம்
ஃபீனிக்ஸ் ஆகிறேன்.//

தீராத பசி
மானிடராய் நீ
நெருங்கும் போதெல்லாம்
போதை ஆகிறேன்
ஊறுகாய் வரும் போதெல்லாம்
ஃபீனிக்ஸ் ஆகிறேன் (அடுத்த ரவுண்டுக்கு).

பனித்துளி சங்கர் said...

////////வண்ணங்கள் குழைத்து
வடித்த சிலையொன்று
சமுத்திரத்திற்கு நிழலாய்
வானில் வலம் வருகிறது
நிலவொளியில் மின்னும்
சிறகுகள் வான்வெளி
முழுதும் மறைக்கிறது
தினம் ஒருமுறை வந்தாலும்
தினம் தினம் வானம் பார்த்த
சிறுவனாய் கெஞ்சுகிறேன்
போகும் முன்
என் தேவை கேட்டுப்போ
////////////



நண்பரே தங்களின் இரண்டாவது கவிதை என்னை மிகவும் கவர்ந்தது . பகிர்வுக்கு நன்றி

முனியாண்டி பெ. said...

//தீராத பசி
நெருப்பு துண்டாய் நீ
நெருங்கும் போதெல்லாம்
சாம்பலாகிறேன் //

too good.

மா.குருபரன் said...

//என் கவிதையை சுவைத்து பார்த்து
எப்படியிருக்கு என சொல்லுங்களேன்!//

தூக்கலா இருக்கு நண்பா..

vinthaimanithan said...

மனசாட்சி: டேய்... டேய்...டேய்... வேணாம்... அண்ணன் செக்ஸு...ச்சீ ரொமான்ஸு மூடுல இருக்காரு... ஏதாவது சொல்லப் போயி சொரண்டி போட்டுறப்போறாரு.. ஓடிரு..

சரி தல நா போயிட்டு இன்னொரு நாள் வாரேன்

R. Gopi said...

பீனிக்ஸ் கவிதை நல்லா இருக்கு

வால்பையன் said...

போன் தொலைஞ்சு தான் போச்சு!
இப்போ micromax q7 வாங்கியிருக்கேன், முதல் வைத்திருந்ததை விட அட்வான்ஸ் மாடல்! என்ன, எனக்கு தான் உபயோகிக்க தெரியல, யாருக்காவது தெரிஞ்சா சொல்லி கொடுங்க!

கவிதை(மாதிரி)யை வாழ்த்திய, கலாய்ந்த நண்பர்களுக்கு மிக்க நன்றி!

திரும்பவும் லவ்மூடு வரும் போது அடுத்த கவிதையை பதிவிடுகிறேன்!

Anonymous said...

முழ்கி போனேன் உயிர்த்தெழ மனமில்லை

!

Blog Widget by LinkWithin