***************
பழைய நோக்கியா 5130 தொலைஞ்சு புதுசா மைக்ரோமேக்ஸ் கியூ7 வாங்கியிருக்கேன், வழக்கம் போல் பாஸ் கிரிடிட் கார்டில்!, தமிழ் படிக்க கஷ்டமாக இருந்தது, சென்னை நண்பர் ரிஷி உதவியால் தற்பொழுது தமிழ் படிக்க முடிகிறது, மைக்ரோமேக்ஸ் பயன்படுத்தும் நண்பர்கள் இதனை பாலோ செய்யலாம்!
போனில் இருப்பது ஒபேராமினி 4.2 வெர்சன், அது பழசு, அதுக்கு பதிலா புது வெர்சன் போடனும், பாரில் டைப் பண்ன முடியாட்டியும் கூட m.opera.com என டைப் செய்து உள்ளே போங்க, லேட்டஸ்ட் வெர்ஷன் டவுன்லோடு பண்ணி பிறகு opera:config அழுத்தி உள்ளே போங்க, செட்டிங்ஸ் கடைசியில் font செலக்ஷன் இருக்கும் அதற்கு யெஸ் கொடுத்தால் போதும், தமிழ் தெரியும் தமிழ் டைப் பண்ணத்தான் முடியாது! நல்லாயிருக்கு மொபைல், தேங்க்ஸ் ரிஷி!
எல்லா போனுக்கும் இதே வழி உதவும்னு நினைக்கிறேன்!
****************
தற்பொழுது பஸ்ஸிலும் பயணம் செய்கிறேன், டுவிட்டர் மற்றும் ப்ளாக்கில் நேரம் சரியாக இருப்பதால் அங்கே கலாய்த்தல் மட்டும்! கலாய்க்கனும்னா தாராளமா கூப்பிடுங்க, இலக்கிய மொக்கைனா ஆளை விடுங்க!
******************
சென்ற வாரம் சாருநிவேதிதாவுக்கு valpaiyan@gmail.com என்ற முகவரியிலிருந்து அசிங்க அசிங்கமாக திட்டு ஒரு மெயில் போயிருக்கு! ஏற்கனவே நமக்கு அவருக்கும் வாய்க்கா தகராறு இருக்கு, ஆனாலும் நாம முதுகுல குத்துற ஆளில்லை அது அவருக்கு தெரியுமனுல்ல, நல்லவேளையாக அந்த மெயிலை அவர் லக்கிக்கு அனுப்பியுள்ளார், அது நானில்லைன்னு லக்கி சொன்னதால் அது சைபர்கிரைம் கேஸாகல! எந்த மதவெறி பிடிச்ச கம்முனாட்டியோ தான் அப்படி செஞ்சிருக்கனும்! நேருக்கு நேர் மோதனும், இப்படி குறுக்கு வழியில போறதுக்கு பதிலா வாய்க்கு பத்து வாங்கிட்டு பீச்சுல சுத்தலாம்! காசாவது தேறும்!
******************
predators
ரொம்ப நாள் கழிச்சு சினிமாவுக்கு போனேன்!, பிரிடேட்டர் முதல் மற்றும் இரண்டாம் பாகம் பரவாயில்லை, அதன் பின் வந்த ஏலியன் வெஸ்ஸஸ் பிரிடேட்டர் ரொம்ப பிடிச்சது, இது என்னமோ என்னை இம்ப்ரெஸ் பண்ணல!, அதிக எதிர்பார்ப்பு காரணமாக இருக்கலாம்! நீங்களும் பாருங்க
********************
சுஜாதாவின் கடவுள் படிச்சு முடிச்சிட்டேன், நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்! ஒரு நண்பர்கிட்ட அதை பற்றி விவாதிக்கும் போது தான் தெரியுது அவரவர் கோணங்களில் அதை எடுத்துகுவோம்னு, நான் அப்படியே தான் இருக்கேன்! நீங்களும் படிங்க கண்டிப்பா பிடிக்கும்! நிறைய விசயங்களை அலசியிருக்கார்!
********************
கவிதைக்காதலர், சிறுவனாக(என்னைச்சொன்னேன்) இருந்தாலும் அன்பாக என்னை குரு என்று அழைப்பவர், அன்பு அண்ணன் அனுஜன்யா சில நாட்களாக பதிவே எழுதுவதில்லை, நான் இது வரை எழுதிய எதிர்கவுஜயில் அவருக்கு எழுதியது தான் அதிகம்! திரும்பவும் எழுதுங்க தல ப்ளீஸ்!
********************
ரொம்ப நாளாச்சு எதிர்கவுஜ எழுதி, அன்னைக்கு நர்சிம் கவிதையை பார்த்ததும் எழுதனும்னு தோணுச்சு எழுதிட்டேன்!
ஒரிஜினல் இங்கே
காசில்லாத நேரமொன்றில்
பாரில் அமர்ந்திருக்கும்
என்னை நோக்கி வருகிறானொருவன்.
சீருடை இல்லையென்றாலும்
பார்மேனாய் இருப்பதற்கான
சாத்தியங்கள் நிறைய.
பேப்பர்களை கைகளில் மடித்திருந்தான்
தோள்கள் உயர்ந்திருக்கும் உடல்
மிக அருகில் வந்துவிட்டான்.
கைககள் பார்த்தேன்
பில்புக் இருந்தன.
வியந்தும் பயந்தும் எழுந்தேன்.
கையமர்த்தி அமரச்செய்தவனின்
கைகளில் காப்புகாய்த்த விரல்கள்.
30பாகையில் தலைசாய்த்துப் பார்த்தவனின்
உதடுகள் பிரிந்தன வார்த்தைகள் உதிர்ந்தன
“பில்லை கொடு,இல்லாட்டி நீ காலி”
சொல்லிச்சிரித்தவன் பில்பேப்பர்
ஒன்றை உருவிக்கொடுத்துவிட்டு
அருகில் இருக்கும் சாய்ந்து
நின்று கொண்டாள்
இன்னொருவனைப்போலவே.
இது கனவொன்றும் இல்லை,
கையிலிருக்கிறது பில்.
காலிபாட்டில்களும்,
காலி பிளேட்டுகளும்,
அடிகளும்
உதைகளும்.
47 வாங்கிகட்டி கொண்டது:
நான் சொன்ன மாதிரி குவியல்தான்!
//கலாய்க்கனும்னா தாராளமா கூப்பிடுங்க, இலக்கிய மொக்கைனா ஆளை விடுங்க!///
என்னோட மொக்கைகள் ஓகே வா ...??
//இந்த வாரம் இன்னொரு விஷேசம் இருக்கு//
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
குவியல் கும்மல்!!
//இந்த வாரம் இன்னொரு விஷேசம் இருக்கு//
:-)
வாழ்த்துக்கள் தல.......
//கண் சிமிட்டுன மாதிரி தான் இருக்கு, காலம் ரொம்ப வேகமா ஓடிருது, 700 பாலோயர்ஸ்க்கு நேத்து தான் நன்றி சொன்னா மாதிரி இருக்கு, இப்போ 800//
அனுமார் வால் மாதிரி நீண்டுகிட்டே போகுதுன்னு சொல்லுங்க:)
kavithai superu...
வாழ்த்துகள் :)
1000 தொட வாழ்த்துக்கள்.
மொபைல் ஃபோன் பேட்டரி டாக் டைம், இமேஜ் குவாலிட்டி எப்படி இருக்கு ?. வயர்லெஸ்சை செக் பண்ணுனீங்களா ?
உங்க பேர்ல மொட்டைக் கடுதாசி அனுப்புற அளவுக்கு பிரபலம் ஆகிட்டீங்க, வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
குவியல் தொடரட்டும்.வாழ்த்துகள்.
//தயாரா இருங்க ஈரோடு ஃப்ரெண்ட்ஸ்
//
எனக்கும் இடம் உண்டா தலை??
உங்க போஸ்ட்டு எப்போதும் ஒரு வித்தியாசம்தான் தல !!!!
நல்ல இருக்கு :)
WOW ...SUPER PADIVU THALA
அவியல்.ச்சே..குவியல் நல்லாருக்கு வால்.:)
பிரிடேட்டர்ஸ் படு மொக்கைஸ்..
//கண் சிமிட்டுன மாதிரி தான் இருக்கு, காலம் ரொம்ப வேகமா ஓடிருது, 700 பாலோயர்ஸ்க்கு நேத்து தான் நன்றி சொன்னா மாதிரி இருக்கு, இப்போ 809,//
இல்லையே தல.நேத்து நான் பத்து மணிக்கு பாத்த அப்பா கூட 809 பாலோவேர் தானே இருந்தாங்க.நீங்க 700 நீங்க தப்பா சொல்றீங்களே ??
//இதுக்கு ஒவ்வொரு நொடியும் நன்றி சொன்னாலும் தப்பில்லை, //
தல பதிவு போட்டு அஞ்சு மணி நேரம் ஆச்சு.அப்டி பாத்த நீங்க நன்றி 60000... சொல்லனுமே யோவ் எங்க யா நீ நன்றி சொல்லி இருக்க??
//இந்த வாரம் இன்னொரு விஷேசம் இருக்கு அதுக்கும் சேர்த்து பிரியாணி போட்டுக்கலாம், தயாரா இருங்க ஈரோடு ஃப்ரெண்ட்ஸ்//
அது என்ன ஈரோட பிரண்ட்ஸ்க்கு மட்டும்? எங்கள பார்த்த எப்புடி தெரியுதாம் ?
800க்கு வாழ்த்துக்கள் வால்...
//பதிலா வாய்க்கு பத்து வாங்கிட்டு பீச்சுல சுத்தலாம்! காசாவது தேறும்!
//
:)
வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்..thala
@@@பின்னோக்கி--//1000 தொட வாழ்த்துக்கள்.//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்
//இன்னொரு விஷேசம்//--என்னன்னுன்னு சொல்லாமயே போயிட்டீங்களே ?
//தயாரா இருங்க//- ஆயிரம், ரெண்டாயிரம், நாலாயிரம், பிம்பிளிக்கி பியாபி !! :)
//இன்னொரு விஷேசம்//--என்னன்னுன்னு சொல்லாமயே போயிட்டீங்களே ?
//தயாரா இருங்க//- ஆயிரம், ரெண்டாயிரம், நாலாயிரம், பிம்பிளிக்கி பியாபி !! :)
ஈரோட் நண்பர்கள் தயாராய் இருங்கன்னா, நாங்க எல்லாம் வேண்டாதப் பட்டவங்களா?
=> Followers (814) - வாழ்த்துக்கள் வால்..
=> எல்லா போனுக்கும் இதே வழி - ஆமா வேலை செய்யுது..
=>சென்ற வாரம் சாரு மெயில் - ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை (அட டிவில கூட இப்போ அதே சாங்குதான்..)
=> அனுஜன்யா - வால் நீங்க கூப்பிடும் போது, கொஞ்சம் லிங்க் கொடுத்தா.. நாங்களும் போய் விசரிப்போம்ல..??
//இந்த வாரம் இன்னொரு விஷேசம் இருக்கு //
ம்...
1000 தொட வாழ்த்துக்கள்
பிரிடேட்டர் முதல் மற்றும் இரண்டாம் பாகம் பரவாயில்லை
//
பரவாயில்லையே.. இப்பவாவது பார்த்தீங்களே..ஹி..ஹி
அருமையான குவியல்..
தொடர்பவர்கள் குவியட்டும்.
உங்களுக்கு மொபைல் தொலைகுறதே வேலையா போச்சா ?? வாங்கி ஒரு வருஷம் கூட ஆகி இருக்காது போல.. இதுக்குதான் சொன்னேன் மாப்புள சரக்கு அடிக்கும் போது தண்ணிய கொஞ்சம் அதிகமா சேத்துக்கோ தண்ணிய கொஞ்சம் அதிகமா சேத்துக்கோன்னு..
வாழ்த்துக்கள் வால்!
அன்பின் வாலு
ஈரோட்டுப் பிரியாணிக்கு எனக்கும் போன் பண்ணனும் - நானும் வருவேன் - எனக்குத் தெரியும்
நல்வாழ்த்துகள் அருண்
நட்புடன் சீனா
அன்பின் வாலு
பஸ்ஸிலும் பயணமா - சரி சரி
வாய்க்குப் பத்து வாங்கிட்டு பீச்சுல சுத்தறதா - அய்யய்யோ - பாவம் அவன்
சுஜாதாவின் கடவுள் - கவிதைக் காதலன் - எதிடு கவுஜ - சூப்பார்பா
நல்வாழ்த்துகள் வாலு
நட்புடன் சீனா
சீக்கிரமே ஆயிரத்தைத் தொட்டு ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியாக வாழ்த்துக்கள்!
இந்த வாரம் இன்னொரு விஷேசம் இருக்கு அதுக்கும் சேர்த்து பிரியாணி போட்டுக்கலாம், தயாரா இருங்க ஈரோடு ஃப்ரெண்ட்ஸ்
///
தல இது என்ன ஓர வஞ்சன , ஈரோடு பிரண்ட்சுக்கு மட்டும் பிரியாணியா ???
................பண்ணி பிறகு opera:config அழுத்தி உள்ளே போங்க, செட்டிங்ஸ் கடைசியில் font செலக்ஷன் இருக்கும் அதற்கு யெஸ் கொடுத்தால் போதும், ////
இவ்ளோ வேலை கஷ்டப்பட்டு பண்றதுக்கு , பேசாம உங்க முபைல சுட்டுட்டா???
இலக்கிய மொக்கைனா ஆளை விடுங்க!
///
இது மனுஷனுக்கு அழகு
700 பாலோயர்ஸ்க்கு நேத்து தான் நன்றி சொன்னா மாதிரி இருக்கு, இப்போ 809, இதுக்கு ஒவ்வொரு நொடியும் நன்றி சொன்னாலும் தப்பில்//
வாழ்த்துக்கள் மாஸ்டர்
குவியல் தொடரட்டும்.வாழ்த்துகள்.
அருமை வால் பதிவும் சரி உங்கள் கருத்துகளும் சரி எல்லாமே நச் ரகம்
வாழ்த்துக்கள்
புது மொபைல்
800 பாலோயர்ஸ்
கவிதை பக்கா
என அனைத்திற்கும்
800க்கு வாழ்த்துக்கள்
உங்களுக்கு என் பதிவுல ஒரு கேள்வி வச்சுருக்கேன். வந்து சொல்லிட்டு போங்க பாஸு
மொபைல் ஃபோன் பேட்டரி டாக் டைம், இமேஜ் குவாலிட்டி எப்படி இருக்கு ?. வயர்லெஸ்சை செக் பண்ணுனீங்களா ?
//700 பாலோயர்ஸ்க்கு நேத்து தான் நன்றி சொன்னா மாதிரி இருக்கு, இப்போ 809,//
அருண் இந்த பாலோயர்ஸ் எண்ணிக்கைக்கு அடிமை ஆகிட்டீங்களா! :-(
Post a Comment