ஏற்கனவே பலமுறை சொன்னது தான், பரிணாமம் பற்றிய என்னுடைய தொடர் முழுக்க முழுக்க என்னுடய புரிதல் மட்டுமே! புற உலகில் நான் பார்க்கும் விசயங்களில் பரிணாமத்திற்கான சுவடுகள் உணரப்பட்டு அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன், அவைகளில் உள்ள அதிகபட்ச சாத்தியகூறுகளை அறிவது நமது உரையாடலில் தான் இருக்கிறது!
*****************
தன்னை தானே பெருக்கி கொள்ளும் ஒரு செல் உயிரியிலுருந்து பரிணாமத்தின் உச்சாணி கொம்பில் அமர்ந்திருக்கும் மனித இனம் வரை அனைத்திற்க்கும் தலையாய கடமை இனப்பெருக்கம், ஒரு உயிர் பல்கி பெருக அவைகளில் ஜீன்களில் எழுதபட்டிருக்கும் ஒரே விசயம் நீ வாழ்ந்தே ஆக வேண்டும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்!. காட்டு விலங்கிலிருந்து சமூக விலங்கான பிறகு மனித இனம் மட்டும் தனக்கு தேவையானதை தானே உற்பத்தி செய்து கொள்ளும் தகுதியை வளர்த்து கொண்டது, மனிதனின் அபார வளர்ச்சி மற்ற உயிரின பெருக்கத்திற்கு பல வகையில் ஆபத்து என்றாலும் இயற்கை தன்னை சமன்படுத்தி கொள்ள சில நேரங்களில் கூட்டம் கூட்டமாக மனிதனையும் காவு வாங்குகிறது!
உயிரினத்தின் தொடக்கும், முதலில் தாவரங்களிலிருந்து விலங்கினமாக மாறியது என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இருந்தும் படைப்புவத கொள்கையுடவர்களால் அதை ஏற்றுகொள்ள முடியவில்லை, வழக்கம் போல ஏன் இன்னும் குரங்கு குட்டைபாவாடை போடல என்பதிலேயே அவர்கள் கேள்வி நிற்கிறது, விலங்கு செல்லுக்கும், தாவர செல்லுக்கும் அதிகபடியான ஒற்றுமைகள் அறிவியலால் நிறுபிக்கபட்டாலும் எந்த விளக்கமும் கேட்காமல் அதை மறுக்கும் ஒரு சில கூட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன, நாம் இங்கே பார்க்கப்போவது தவாரங்களிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று வளர்ந்திருந்தாலும் ஒரு சில உயிரினங்கள் அதன் நீட்சியை இன்னும் கடைபடித்து வருவதை தான்!
உயிரினங்களின் தொடர்ச்சி தன்னை தானே பெருக்கி கொள்ளும் ஒரு செல் உயிரியாக தான் வாழ்க்கையை ஆரம்பித்தது, இன்றும் பலதரபட்ட உயிரினங்களின் உள்ளிருந்து அதனை இயக்கி கொண்டிருப்பது செல்கள் தான், அவைகளில் பிரதி எடுக்கபட்டு பிரியும் ஒவ்வொரு செல்லும் அதே வடிவை மீண்டும் அடைகிறது, இவைகளின் சுழற்சியே ஒவ்வொரு உயிரனத்தையும் தனிதனி அடையாளத்துடன் வளர்க்கிறது, நரம்பு மணடலங்கள் பெறாத தாவரங்கள் தன்னை பெருக்கி கொள்ள ஆரம்பத்தில் காற்றையே நம்பியிருந்தது, முதல் உயிரினம் நீரும், ஒளி சார்ந்த இடத்தில் தோன்றியிருக்க தான் அதிகபட்ச சாத்தியகூறுகள் இருப்பதாக அறிவியல் கூறுகிறது, அது நாம் சாதாரணமாக பார்த்து பழகிய பாசி!
பலசெல் உடலைப்புடன் தனக்கு தேவையான உணவை தானே உருவாக்கி கொள்ளும் தகுதியுடன் வளர்ந்த தாவரம் நீரின் வேகத்தின் மூலம் இனபெருக்கம் செய்து கொண்டது, தாவரத்திலிருந்து விலங்காக மாறி கொண்டிருக்கையில் ஒரே ஒரு உயிரினம் இன்னும் முழுமையடையாமல் பாதியில் நின்று கொண்டிருக்கிறது, இம்மாதிரியான உயிரினங்கள் தான் பரிணாமம் நம்க்கு விட்டு சென்றுள்ள சுவடுகள், பவழப்பாறை என அழைக்கப்படுவது என்னவென்று பலர் அறிந்திருக்கலாம்! கடற்பரப்பு இவ்வளவு செழுமையாக இருக்கிறது என அறிய பவழப்பாறைகள் தான் சாட்சி, தாவரத்தை போன்று ஓரிடத்தில் தனது காலனியை வளர்த்து கொள்ளும் பவழப்பாறைகள் பெருமளவு தாவரத்தின் குணங்களை கொண்டது, ஆனால் அவைகள் தனிதனியே முட்டையையும், விந்தையும் பீச்சியடித்து இனப்பெருக்கம் செய்து கொள்கிறது!
இனபெருக்க உறுப்பை பெற்றிருந்தாலும் இன்னும் பாலூட்டி அல்லாத மீன்கள், விந்தையும், முட்டையையும், பீச்சியடித்து தான் இனபெருக்கம் செய்து கொள்கின்றன, தாவரங்களுக்கு இனபெருக்கத்திற்கு பருவகாலம் இருப்பது போல், மீன்கள் மட்டுமல்லாது பல உயிரினங்களும் தனக்கென ஒரு காலத்தை வைத்திருக்கின்றன, விதைகள் எவ்வாறு கடினமான ஓடுகளால் பாதுகாக்கபடுகின்றதோ அதே போல் பல உயிரினங்களின் முட்டைகள் கடினமான ஓடுகளால் பாதுகாக்கப்படுகின்றன! பாலூட்டிகள் அல்லாத அனைத்து விலங்களும் பிறந்த உடனே தனியாக வாழும் தகுதியை பெற்றிருக்கின்றன, ஆனால் அவ்வாறு தகுதி பெறாத விலங்குகள் தான் பாலூட்டிகளாக பரிணமித்தன என்பதே உண்மை!
உயிரினங்களில் இனபெருக்கத்திற்கு கூடுதல் தகுதி பெற்ற ஒரே விலங்கு மனிதன் மட்டுமே, பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பிறகே உச்சகட்டம்(orgasm) என்பது மனிதனுக்கு மட்டுமே வாய்த்த ஒரு அரிய நிகழ்வு என்பது புரிந்தது, மனிதனுக்கு நெருங்கிய உயிரினமான சிம்பன்சியை தவிர வேறு எந்த விலங்குகளும் சுயமைதுனம் செய்து கொள்ள விரும்பியதில்லை, மனிதனுக்கு மட்டுமே இனபெருக்கத்தின் தேவையையும் மீறி உடலுறவில் அதிகபட்சம் இன்பம் தேவைபட்டது, ஏன் என்ற கேள்விக்கு இன்னும் ஆராய்ச்சி நடந்து கொண்டுதானிருக்கிறது, நாடோடிகளாக வாழ்ந்த முதல் வளர்ச்சி பெற்ற மனித இனம் உணவுக்காக சண்டையிட்டு கொண்டதை விட இணைக்காக சண்டையிட்டதே அதிகம் என்கிறார்கள்!
நான்கு காலில் நடந்து கொண்டிருந்த மனிதன் நிமிர்ந்து நின்றது, உடலுக்கு குறைவான வேலையும், அறிவுக்கு(மூளைக்கு) அதிகப்பட்ச வேலை கொடுத்தது, உடைகள் மூலம் இனபெருக்க உறுப்பை மறைத்தது, மனிதனுக்கு உடலுறவில் மேல் நாட்டத்தை குறைத்தது என்பது விஞ்ஞானிகள் கருத்து, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இனபெருக்கம் கட்டாய கடமை என்றாலும் மனித இனத்தில் மட்டுமே ஆன்மீகம் குறுக்கே நின்றது, பிரம்மச்சார்யம், கடவுளுக்கு உகந்த நாட்களில் மட்டுமே கூட வேண்டும் என பூசாரிகளால் உடலுறவு மறுக்கப்படுதல், இடைவிடாத போர்களால் பல ஆண்கள் உயிரிழப்பு,(தலைவனுக்கு தான் பெண்கள், மீதி தான் மற்றவர்களுக்கு) ஆகியவை மனித இனத்தொகை வெகுவாக குறைத்தது, வாழும் தகுதியை உடலளவில் வளர்த்து கொள்ள மனிதன் பெற்ற பரிணாம மாற்றம் தான் உடலுறவில் உச்சகட்ட இன்பம்!
பவழப்பாறைகள் பற்றிய ஆங்கில விக்கிபீடியா செய்தி
நண்பர் தெகா எழுதிய பவழப்பாறைகள் பற்றிய விரிவான தமிழ்ப்பதிவு!
பூமியும் அதன் வளர்ச்சியும் - தமிழ் விக்கிபீடியா!
பரிணாமம் பற்றிய மொத்த இடுக்கைகளையும் படிக்க!
தொடரும்!..........
51 வாங்கிகட்டி கொண்டது:
குட் போஸ்ட் Mr வால்
பரிணாமத்தைப் பேசுகிறேனென்று வாலில் இருந்து ஆரம்பித்து, அதை வேறு எவருடைய மொட்டைத் தலையுடன் முடிச்சுபோடுகிற உங்கள் பரிணாமக் கட்டுரைகள் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகின்றன. கடைசி இரண்டு பாராக்களில் நீங்கள் சொல்ல வருகிற முடிவு தான் என்ன?
ஆன்மிகம், மதம் அல்லது அரசியல் இவை எல்லாம் ஒரு சிந்தனையின் ஆதிக்க உணர்வு அல்லது அதை எதிர்ப்பதில் இருந்து பிறப்பவை. ஆர்கசத்தில் இருந்து பிறந்தவை அல்ல.
@ கிருஷ்ணமூர்த்தி சார்!
கோர்வையா சொல்றதுக்கு நான் என்ன பாடமா சார் நடத்திகிட்டு இருக்கேன்!
ஆர்கசம் என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ள ஒரு செயல், அதன் காரணம் என்ன என்று சொல்லியிருக்கேன், அதில் ஆன்மீகம் ஒரே ஒரு வரி தான், ஆனா பாருங்க பதிவுலயே அது மட்டும் தான் உங்களை உறுத்துது, காரணம் நீங்க பரிணாமத்தின் சாத்தியகூறுகளை பற்றி பேச வரல, நான் எங்கேயாவது ஆன்மீகத்தையும், கடவுளையும் திட்டியிருக்கேனான்னு பார்க்கத்தான் வர்றிங்க, சரியா!?
நான் டார்வினிசம் படிக்கவில்லை, எனக்கு புரிஞ்சா மாதிரி தான் எழுதிகிட்டு போய்கிட்டு இருக்கேன், என்றாவது ஒரு நாள் வரிசைப்படுத்தி கொள்லலாம்!
:( உங்ககிட்ட நான் பேசமாட்டேன்.இதுவும் ஒரு பரிணாமம் ஹஹா
நான் டார்வினிசம் படிக்கவில்லை, எனக்கு புரிஞ்சா மாதிரி தான் எழுதிகிட்டு போய்கிட்டு இருக்கேன், என்றாவது ஒரு நாள் வரிசைப்படுத்தி கொள்லலாம்!
//
ரைட்..
லெப்டு
//வாழும் தகுதியை உடலளவில் வளர்த்து கொள்ள மனிதன் பெற்ற பரிணாம மாற்றம் தான் உடலுறவில் உச்சகட்ட இன்பம்!//
ஆமாம் பாஸ், பைத்தியம் முற்றி பாயைப் பிரண்டுவதுன்னு சொல்வது போல் மேலை நாடுகளில் வைபரேட்டர் அது இதுன்னு ரப்பர் குறிகளாக குவித்து வைத்து விற்பனை செய்கிறார்கள்.
:)
//பைத்தியம் முற்றி பாயைப் பிரண்டுவதுன்னு சொல்வது போல் மேலை நாடுகளில் வைபரேட்டர் அது இதுன்னு ரப்பர் குறிகளாக குவித்து வைத்து விற்பனை செய்கிறார்கள்.//
எதிர்பால் இனக்கவர்ச்சி அற்று போவதற்கும் மனரீதியான காரணங்கள் உண்டு! முக்கியமாக பெண் தன்னை விட தாழ்ந்தவள் என்ற நினைப்பு தான், மனிதனை தவிர வேறு எந்த விலங்கும் ஓரினசேர்க்கையை ஆதரிக்காத போது, ஏன் மனிதன் மட்டும் என்று நினைக்கிறீர்கள், அவனக்கு மதம் ஊட்டிய பால் வேற்றுமை தான், எந்த மதமாவது பெண்னை சமமா மதிச்சிருக்கா! அதான் வைப்புரேட்டர் அதிகமா விக்குது!
@மதுரைப் பொண்ணு!
பேசாமல் இருப்பது பரிணாமம் இல்லை! ஒருத்தருக்குப் பரிதாபம்! மற்றவருக்கு பரம சந்தோஷம்!
அப்புறம் வால்ஸ்!
/நான் எங்கேயாவது ஆன்மீகத்தையும், கடவுளையும் திட்டியிருக்கேனான்னு பார்க்கத்தான் வர்றிங்க, சரியா!?/
தப்பு! ரொம்பவே தப்பு!! கன்னத்தில் போட்டுக்குங்க!
நீங்க யாரைத் திட்டறீங்க அல்லது வாழ்த்தறீங்கன்னு நான் தனித் தனியாப் பாக்கறதில்லை! மொத்தப் பதிவையும், பின்னூட்டங்களில் பதிவின் உள்ளடக்கத்துக்கு சம்பந்தமுள்ளதா அல்லது விலகி என்ன சொல்றாங்கன்னு எல்லாத்தையும் தான் படிக்கறேன். பரிநாமத்தைப்பற்றி பதிவுகளில் பாடமாக நடத்த முடியாது என்பது வரை சரிதான்! அதற்காக, தலையும் இல்லாமல் வாலுமில்லாமல் எங்கேயோ ஆரம்பித்து, அப்புறம் சம்பந்தமே இல்லாமல் வேறெங்கேயோ தொட்டுப் பேசுவது என்னவகைப் பரிணாமம் என்று தான் கேட்கிறேன்!
//எங்கேயோ ஆரம்பித்து, அப்புறம் சம்பந்தமே இல்லாமல் வேறெங்கேயோ தொட்டுப் பேசுவது என்னவகைப் பரிணாமம் என்று தான் கேட்கிறேன்! //
நான் அறிவியல் பெயர்களுடன் எடுத்துகாட்டுகள் சொல்ல முடியாது சார், சமகாலத்தில் எனக்கு தெரிந்து எது அதிகபடியான சாத்தியகூறுகள் இருக்கோ அதை தான் பகிர்ந்துகிறேன், நிச்சயம் முரண்பாடுகளும் மாற்று கருத்துகளும் இருக்கலாம், எதுன்னு சொன்னிங்கன்னா உரையாட வசதியா இருக்கும்!
நிறைய விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன்...வால்
@krishnamorthy
நீங்க எதுவும் பத்த வைக்காதிங்க....... :(
/ஆமாம் பாஸ், பைத்தியம் முற்றி பாயைப் பிரண்டுவதுன்னு சொல்வது போல் மேலை நாடுகளில் வைபரேட்டர் அது இதுன்னு ரப்பர் குறிகளாக குவித்து வைத்து விற்பனை செய்கிறார்கள்.//
நமக்குன்னு எதாவது மிஷின் இருக்கா மார்க்கெட்ல!
//உயிரினங்களில் இனபெருக்கத்திற்கு கூடுதல் தகுதி பெற்ற ஒரே விலங்கு மனிதன் மட்டுமே,//
PG diplomo in Sex
//உச்சகட்டம்(orgasm) என்பது மனிதனுக்கு மட்டுமே வாய்த்த ஒரு அரிய நிகழ்வு என்பது புரிந்தது, //
கரடிகளைப் பற்றி ஊர்ப்புறங்களில் தப்பான அபிப்ராயம் உள்ளதே!
//நமக்குன்னு எதாவது மிஷின் இருக்கா மார்க்கெட்ல! //
பத்து விரலும் மூலதனம்!
சில விசயங்களை தெரிந்து கொண்டேன் .... பகிர்விற்கு நன்றி
வால் இப்ப நான் மூடு அவுட். கொலை வெறியில இருக்கேன். பின்னால கமெண்ட் போடுரேன்.
//நமக்குன்னு எதாவது மிஷின் இருக்கா மார்க்கெட்ல!//
கொட்டை பாக்கு வெட்டி.......நம்ம ஆளுங்க நூற்றாண்டுகளாக பயன்படுத்துறாங்க!
:)
தல ... நலம் தானே ...
பரிணாம கட்டுரை வரிசையை முதற் பகுதியிலிருந்து படிக்க ஆரம்பிக்க வேண்டும் நான் ...
உங்கள் வலை பூவின் எழுத்துரு தான் எனக்கு பிரச்சனை ...
படிக்கவே முடியவில்லை ...
நெருப்பு நரி மட்டுமே எனது கணினியில் நான் பயன் படுத்த முடியும்(BSNL Nova System) ...
// மனிதனுக்கு நெருங்கிய உயிரினமான சிம்பன்சியை தவிர வேறு எந்த விலங்குகளும் சுயமைதுனம் செய்து கொள்ள விரும்பியதில்லை //
தல ... தெருவில் போகும் போது நமது நாயார்களையும் கவனிக்க கூடாதா ...? நாய்கள் (ஆண் மற்றும் பெண் ) தத்தமது பாலுறுப்பை தாமே நாவால் நக்கி இன்பம் துய்ப்பதை பல முறை நான் கண்டிருக்கிறேன் .
பாலுறவு இன்பத்திற்கு ஆன்மிகம் குறுக்கே நிற்பது போல தோன்றினாலும் , மதங்கள் தாம் மனிதன் பாலுறவு எண்ணங்களிலிருந்து வெளி வந்து விடாதபடி தடுத்துக் கொண்டும் சிறை பிடித்துக் கொண்டும் இருக்கின்றது என்கிறது என் சிற்றறிவு ...
intresting.
//மனிதனை தவிர வேறு எந்த விலங்கும் ஓரினசேர்க்கையை ஆதரிக்காத போது//
அப்படீன்னு எந்த அறிவியல் புத்தகம் சொல்லி இருக்கு. ஓரினசேர்க்கை மிருகங்களிடமும் உண்டு. சிலவகை மான்கள், ஏன் தாவரங்களில் கூட உண்டு. தேடிப்பிடித்து படித்து பாருங்கள்.
//அப்படீன்னு எந்த அறிவியல் புத்தகம் சொல்லி இருக்கு. ஓரினசேர்க்கை மிருகங்களிடமும் உண்டு. சிலவகை மான்கள், ஏன் தாவரங்களில் கூட உண்டு. தேடிப்பிடித்து படித்து பாருங்கள்.//
தேவையென்றால் பால் மாறி கொள்ளும், ஆண் பெண் இரு இனப்பெருக்க உறுப்புகளும் ஒரே உடலில் வைத்திருக்கும் உயிரினங்கள் ஓரினசேர்க்கையில் சேராது தோழரே! அவைகளின் நோக்கமும் இனப்பெருக்கமாக தான் இருக்கிறது, ஓரினசேர்க்கையில் இனப்பெருக்கத்திற்கு வேலையில்லை! நன்றாக தேடிட்டு தான் பதிவை போஸ்ட் பண்ணியிருக்கேன் தோழரே! வேறு எதுவும் ஆதாரம் இருந்தால் சுட்டி கொடுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்!
தேடுவதில் "கி வோர்ட்" ரொம்ப முக்கியம். என்னால் ஒரு நொடியில் கொடுக்க முடியும். நீங்களே தேடி பாருங்கள். இது உங்களிடம் விளையாட இல்ல. தேடுங்கள்... "கி வோர்ட்" ரொம்ப முக்கியம் மீண்டும் கூறுகிறேன். புத்தகங்களும் நிறைய கிடைகின்றன.
இல்லை நண்பரே!
எனக்கு கிடைக்கவில்லை, தெரியாததை தெரியாது என சொல்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை, உங்கள் உதவியும் எனக்கு தேவை!
யோவ் வாலு இங்க போய் பாரும் ...
http://en.wikipedia.org/wiki/List_of_animals_displaying_homosexual_behavior
http://en.wikipedia.org/wiki/Homosexual_behavior_in_animals
தகவலுக்கு நன்றி நண்பரே!
அது பற்றியும் குறிப்பு எடுத்து கொள்கிறேன்!
பரிணாமம் மனிதனுடன் நின்று விட்டது ஆச்சர்யம் ...
ஆகா!
அருமை! அறிவியலில் ஜொலிக்கும் வால் நட்சத்திரம்!
//உயிரினத்தின் தொடக்கும், முதலில் தாவரங்களிலிருந்து விலங்கினமாக மாறியது என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இருந்தும் படைப்புவத கொள்கையுடவர்களால் அதை ஏற்றுகொள்ள முடியவில்லை//
எல்லா உயிரினங்களும்,தாவரங்கள் அல்லது அவற்றை உண்டு வளரும் விலங்குகளையோதான்
உணவாக கொள்கின்றன இதை வைத்து தாவரங்கள்தான் விலங்குகளுக்கு முன்னோடி என கொள்ளலாமா?
மனிதனின் சுய இன்பம் அவனின் வக்கிரமான எண்ணங்களுக்கு வடிகால்..அது பாலியல் குற்றங்களை
குறைக்கும்..என்ற மருத்துவர்களின் கருத்து பற்றி என்ன நினைக்கீறீங்க வால்ஸ்..
இனி பரிணாமம் நடைபெறப்போவது இயற்கையாலா?
அல்லது மனிதனாலா? என்ற விவாதம் விரைவில்
வரக்கூடும்..!
உள்ளேன் அய்யா
keep going............
It will give you more details,
http://www.news-medical.net/news/2006/10/23/20718.aspx
http://news.nationalgeographic.com/news/2004/07/0722_040722_gayanimal.html
http://www.amazon.com/Biological-Exuberance-Homosexuality-Natural-Diversity/dp/0312192398
http://www.amazon.com/Natural-History-Homosexuality-Francis-Mondimore/dp/0801854407/ref=pd_sim_b_5
http://www.amazon.com/Sexual-Selections-Learn-About-Animals/dp/0520240758/ref=pd_sim_b_3
http://www.youtube.com/watch?v=RGmb5Rjwlr0
ம்ம் அப்புறம் ........
/////இனப்பெருக்கம் குறைந்ததால் .......வாழும் தகுதியை உடலளவில் வளர்த்து கொள்ள மனிதன் பெற்ற பரிணாம மாற்றம் தான் உடலுறவில் உச்சகட்ட இன்பம்!/////
இவ்வளவு மக்கள் தொகை பெருகிய பின்னும் ஏன் அந்த உடலின்பம் உடலை விட்டு நகராமல் உடும்புப்பிடியாய் பிடித்துக்கொண்டிருக்கிறது ???
நித்யா வுக்கு கூட போகவில்லையே ஏன் ???
விவேகானந்தர் கூட சூடு வைத்துக்கொண்டாராம், தணிப்பதற்கு.
நல்ல பதிவுன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.
பரிணாமம் பரிணாமம்ன்னு சொல்லிட்டே இருக்கீங்க வாலு.உங்களை நினைச்சாத்தான் பயமாயிருக்கு !
:))
நண்பரே உங்களுடைய கமெண்டின் எண்ணிக்கை வராமல் இருக்க "yourname" என்று இருக்கும் இடத்தில் "வால்பையன்" என்று டைப் செய்து save பண்ணி விடுங்கள்
//மனித இனம் உணவுக்காக சண்டையிட்டு கொண்டதை விட இணைக்காக சண்டையிட்டதே அதிகம் என்கிறார்கள்//
:-)
நிறைய விசயங்களை பகிர்துள்ளீர் வால்ஸ் , இதில் மனித இனத்தை தவிர , மற்ற அனைத்து உயிரினங்களும் இனப் பெருக்கம் , உணவு , தமது கூட்டத்தை காத்தல் போன்றவற்றை தவிர வேறு எந்த தேடலும் இல்லை, அவைகளுக்கு இனபெருக்கம் ஒரு கடமையாக மட்டுமே உள்ளது , அவை தன்னிடம் உள்ள பெண்களுக்கு மட்டுமே சடையிட்டுக் கொள்ளும் , நம்ம ஆளுக தான் கண்டம் விட்டு கண்டம் தாண்டி உள்ள பெண்களுக்காகவும் போய் சண்டை புடிகிராணுக
அருண் வர வர ப்ளாக் கலக்குது போங்க.
அன்பின் வால்
பரிணாமம் - இனப் பெருக்கம் - நன்கு ஆய்ந்து - மனதில் வெளிப்பட்டவற்றால் எழுதப்பட்ட இடுகை. நன்று நன்று. நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
தலையா கொக்கா....
எனக்கு இதை படிக்கும் போது ஆன்மிக புத்தகம் படிக்கும் நியாபகம் தான் வருகிறது .அறிவியலையும் இரண்டாக பிரிக்கலாம் .ஒன்று நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் (கருவிகள் ).இன்னொன்று அனுமானம் என்று சொல்வார்களே அந்த வகை .நீங்கள் சொல்லும் பரிணாமமும் இரண்டாம் வகையோ என்று தோன்றுகிறது .இதற்க்காக என்னை படைப்பு வாதி என்று சொல்லவேண்டாம் .ஒருவகையில் யோசித்தால் இதுவும் ஒரு அனுமானம் தானே .ஐம்புலன் களுக்கு அப்பாற்பட்டது பொய் என்பதே அறிவியல் என்று எங்கோ படித்த நியாபகம் .அப்படி என்றால் இதுவும் ஒரு அனுமானம் தானே .உங்கள் பரிணாம கொள்ளைகளின் பதிவுகளை படித்துதான் பரிணாமம் பற்றி தெரிந்து கொள்கிறேன் .எழுதுங்கள் உபயோகம் ஆக இருக்குங்க .
வால், ஒரு பிரபல தொலை காட்சியில் இரவு ஒரு மணி ஸ்லாட் உங்களுக்கு தயாராகி கொண்டு இருக்கிறது என பட்சி சொல்லுகிறது!!௦௦
தல தப்ப எடுத்துகலைன்ன ஒரு விஷயம் கேட்கிறேன் , இந்த பதிவுல இருக்க எல்லா விசயமும் நானும் படிச்சு தெரிசுரிக்கேன் , இதுல உன்னுதைய கருத்து , அல்லது நீ என்ன சொல்ல வர்ற ????? இதுதான் எனக்கு புரியலே ,,, பரிணாம வளர்ச்சிகள் பத்தி எனது பாடத்தில் நிறைய உள்ளது . எல்லாம் சைன்ஸ் . வாட் யு வான்ட் , வாட் யு வான்ட் டு டூ ..........................
என்னா தல புதுசா அப்ப்ரூவல் கேக்குது ????????
//பரிணாம வளர்ச்சிகள் பத்தி எனது பாடத்தில் நிறைய உள்ளது . எல்லாம் சைன்ஸ் . //
அறிவியல் கொஞ்சம் புரியாத மொழி தல!
அடுத்த பதிவு இதன் தொடர்சி, எளிமையாக்க பார்க்கிறேன் இதை!
தங்களுக்குத் தெரிந்த விசயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி. நன்றாக இருந்தது.
டேய் குப்புசாமி, கருப்புசாமி, மயில்சாமி, மயிருசாமி...எல்லாரும் ஓடி வாங்கடா...இது எதையோ தின்னுகிட்டு எதையோ பேசுது. வால்பையனுக்கு ஒரு கோயில் கட்டலாம் வாங்கடா...
Post a Comment