குவியல்!..(14.06.10)

முன்னுறே பதிவுகள், அதிலும் ஏகபட்ட மொக்கைகள் ஆனால் உங்களின் அன்பு உலகத்தை விட பெரியது, 703 பாலோயர்ஸ் என்பது நிச்சயம் எனக்கு நீங்கள் அளித்திருக்கும் மாபெரும் அங்கிகாரம்! 1072 ரீடர்கள், கூகுள் ரீடரில்! நான் அவ்ளோ வொர்த்தா என்று அடிக்கடி என்னையே கேட்டு கொண்டிருக்கிறேன்!, இதில் ஓரினசேர்க்கைக்கு எதிராக அதாவது அது அவர்களின் விருப்பம், விருப்பமில்லாதவர்களை தொந்தரவு செய்வது தவறு என்று எழுதியதற்கு 10 பாலோயர்ஸ் காணாமல் போய்விட்டார்கள், அவர்களது உரிமையில் தலையிட்டது பிடிக்கவில்லை போலும், எனது கடவுள் மறுப்பு கொள்கையால் பல பாலோயர்ஸ் காணாமல் போனது அனைவரும் அறிந்ததே, ஆயினும் நட்பு வேறு தனிநபர் கருத்து வேறு என்று இன்றும் நட்பு பாராட்டி கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!



எனக்கு பாலோயராக நீங்கள் இருந்தால் நிச்சயம் நானும் பாலோயராக இருப்பேன், அப்படி இல்லையென்றால் எனக்கு மெயில் அனுப்பவும் உங்கள் ப்ளாக் முகவரியுடன், நான் உங்களுக்கு பாலோயராக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் உங்கள் பதிவுகள் எதுவும் மிஸ்ஸாகாது, படிக்காமல் சென்று விடுவேனோ என்று சந்தேகித்து சாட்டில் கொடுப்பது கஷ்டமாக இருக்கிறது, உங்கள் பதிவுகள் அனைத்தையும் படிக்க வேண்டும் என்பதற்காகவே நான் தினம் ஒரு பதிவு எழுதுவது இல்லை!
****

திருப்பூரில் paazee என்ற நிறுவனம் கரன்சி ட்ரேடிங் செய்கிறோம் என்று சொல்லி பல கோடி ஏமாற்றி இருப்பதாக நண்பர் ஒருவர் தொலைபேசினார், 29 இளைஞர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து தற்சமயம் கோவை மருத்துவமனையில் இருக்கிறார்களாம்! உயிருக்கு ஆபத்தான நிலை என்பது வருத்தம் தரும் செய்தி, இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மந்திரிமார்கள் யாராவது பிண்ணனியில் இருப்பார்களோ என்ற சந்தேகம் கொள்ள வைக்கிறது, இது தமிழகம் முழுவதுமாக நடந்த மோசடி என்று நண்பர்கள் சொல்கிறார்கள் பாதிக்கபட்ட நண்பர்களுக்கு விரைவில் அவர்களது பணம் கிடைக்கும் என நம்புவோம்!, இம்மாதிரி முதலீடு செய்யும் போது நிபுணர்களின் ஆலோசனை பெறுவது நல்லது, தன்னிசையாக செயல்படுவது சிலசமயம் முதலுக்கே மோசமாகலாம்!


****

போபால் விஷவாயு கசிவு சம்பவத்துக்கான தீர்ப்பு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியளிக்க செய்தது அனைவரும் அறிந்ததே, அதை ஒரு விபத்து என்ற நோக்கில் மட்டும் பார்த்து இந்த தீர்ப்பு அளித்திருப்பதாக அரசு தரப்பு பதில், அதற்கான நியாயம் கேட்கும் பணி ஒருபக்கம் இருக்கையில் வரும்முன் காக்க வேண்டிய மற்றொன்றையும் மறக்கக்கூடாது, அமெரிக்காவுடனான அணு மின்சார திட்டம் எந்த வகையில் பயனளிக்கும் என்று பார்ப்பதை விட என்னவெல்லாம் தீங்கு நேரிபடும் என்பதை கவனிக்க வேண்டியது மிக முக்கியம், பன்னாட்டு முதலாளிகளுக்கு விளிம்புநிலை மனிதர்களின் உயிர் பற்றி சிறிதும் கவலையில்லை, ஆர்கானிக் கழிவுகளை ஏழை நாடுகளில் கொட்டுவது, தன் தேவைக்காக ஒரு நாட்டையே அழிப்பது போன்ற செயல்களை செய்து வரும் ஏகாதிபத்திய அரசு ஏற்கனவே சொல்லிவிட்டது இத்திட்டத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பில்லை என்று, அதிலேயே பாதுகாப்புக்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை என்று தெரிந்து விட்டது, மின்சாரம் இல்லாமல் கூட இருந்து விடலாம், உயிர் இல்லாமல் இருக்க முடியுமா!? ஒட்டுமொத்த குரலில் இத்திட்டத்தை எதிர்ப்பதே சரியான வழி!


****


பார்த்தே ஆக வேண்டிய படங்கள் என என் லிஸ்டில் இருப்பதில் முக்கியமானது இந்த படம், அல்பசினோவின் அசத்தலான நடிப்பு மொழி புரியாததை மறக்க செய்யும்! வசனம், இசை இப்படத்தின் முதுகெலும்புகள், அல்பசினோவின் நடிப்பு இப்படத்தின் உயிர், கண் தெரியாதவராக வாழ்ந்திருப்பார் மனுசன்! கையை பிடிக்கும் போது கண் உனக்கு தெரியாதா, எனக்கு தெரியாதா வேண்டுமென்றால் நானே பிடித்து கொள்கிறேன் எனும் போது பாத்திரதிற்குள் இருக்கும் தன்னம்பிக்கை தெரியும்!, அல்பசினோவின் ஒவ்வொரு வசனமும் மிகுந்த சிரத்தையுடன் நேர்தியாக செதுக்கப்பட்டிருக்கும், அனைத்தும் கூர்முனை தீட்டப்பட்ட வாள் போல, இதுவரை பார்த்திருராதவர்கள் தயவுசெய்து மிஸ் பண்ணிடாதிங்க,



படம் குறித்து பிரபல பதிவர் சுரேஷ்கண்ணன் எழுதிய விமர்சனம்!


*****

நீண்ட நாள் கழித்து அண்ணன் அனுஜன்யா எழுதிய ஒரு கவிதைக்கு எதிர்கவுஜ எழுதியிருந்தேன், அது உங்கள் பார்வைக்கு!


சுவற்றிற்கு முதுகு காட்டி
சரக்கு அடிக்கும் நண்பர்கள்
மற்றும்
சைடிஷ் திண்ணும் வம்பர்கள்
வழிந்தோடும் நுரையை
உள்வாங்கும் பீர்கிளாஸ்
விரலின் உத்வேகத்தில்
எகிறி பறக்கும் மூடி
புளித்த பீர்
முழுதாய் குடித்தபின்
மூக்கு விடைத்து
வாய் திறந்து
நாற்றமாய் வரும்
கு”பீர்” ஏப்பம்
புதிய பீரின் வாசத்துக்கும்
வம்பர்களின் தொல்லைக்கும்
சில பீர் காலியாகும்
எப்போதும் சைடிஷ் இல்லாமல்
அனைத்தையும் கண்காணிக்கும்
மௌனக் கண்ணாடியாக
வியாபித்திருக்கும் பீர்பாட்டில்

69 வாங்கிகட்டி கொண்டது:

தமிழ் பொண்ணு said...

good arun.congrats.

Subankan said...

வாழ்த்துகள் வால் :)

தமிழ் பொண்ணு said...

அருண் நீ குவியல் போட்டு எனக்கு என்ன அவியல் போட்ட வேணா சாப்பிட வரலாம்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@arun
என்னாச்சு வால்..
ரைட்டு....

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் வால் !!

சங்ககிரி ரமேஷ் said...

வாழ்த்துகள் !!!

அன்புடன் நான் said...

300க்கும் 703க்கும் 1072கும் வழ்த்துக்கள்.
கதம்பத் தகவல்கள் பகிர்வுகள் உணர்வோடு இருக்கு.
கவிதை.....

கொல்லான் said...

//எனக்கு பாலோயராக நீங்கள் இருந்தால் நிச்சயம் நானும் பாலோயராக இருப்பேன்,//

நான் உங்களுக்கு பாலோயர். ஆனா நீங்க இல்லையே? (சிக்கீடிங்களா)
// ஆபாத்தான நிலை என்பது வருத்தம் தரும் செய்தி,//
பணம் போடும் போது புத்தி வேண்டாம்?

ஆண்டாள்மகன் said...

என்ன வாலு, சரி சரி நடத்துங்க ,

வெண்ணிற இரவுகள்....! said...

உண்மை பன்னாட்டு முதலாளிகள் முன்னால் சாமானியன் உயிர் மயிர்

Unknown said...

//எனக்கு பாலோயராக நீங்கள் இருந்தால் நிச்சயம் நானும் பாலோயராக இருப்பேன்,//

நான் உங்களுக்கு பாலோயர். ஆனா நீங்க இல்லையே?

வாழ்த்துகள் வால்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வாழ்த்துகள் வால்.

THE UFO said...

//நான் அவ்ளோ வொர்த்தா என்று அடிக்கடி என்னையே கேட்டு கொண்டிருக்கிறேன்!//---பதிவில் எனக்கு மிகவும் பிடித்த வரி...

ஏய்... 703..! எங்கேப்பா போனீங்க..?

Unknown said...

கவிதை சூப்பர் ,..
யாராச்சும் இப்படி ஒரு கவிதை எழுத முடியுங்களா?

Jey said...

//நட்பு வேறு தனிநபர் கருத்து வேறு என்று இன்றும் நட்பு பாராட்டி கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!//

100% கருத்துக்கள் ஒருவரோடு ஒருவருக்கு ஒத்துப்பொவது இல்லை தல. புரிந்து கொண்டதற்கு நன்றி. உங்கள் ப்திவுகள் பெரும்பாலும் ஒத்துபொவதால் நன் உங்களை தொடர்கிறேன், சில விஷயங்களின் வீரியத்தை கூட்டுவதற்கு அதிக கோபமும், எதிர்ப்பும் தேவைபடுகிறது என்பது உண்மையே. உங்களின் வெளிப்படையான கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்ய வேண்டுகிறேன்.

VISA said...

ரொம்ப நாளாச்சு வாலோடு எதிர் கவுஜ படிச்சு

Jey said...

// எனது கடவுள் மறுப்பு கொள்கையால் பல பாலோயர்ஸ் காணாமல் போனது அனைவரும் அறிந்ததே//

எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டென்றாலும், கடவுளின் பெயரால் நடக்கும், கோமளித்தனங்களுக்கும், மூடத்தனத்திற்கும் எதிராக உங்கள் கருத்துக்கள் இருப்பதால் எனக்கு சங்கடம் ஒன்றும் இல்லை. உங்கள் வழியை நீங்கள் தொடரவும்.

Jey said...

//இம்மாதிரி முதலீடு செய்யும் போது நிபுணர்களின் ஆலோசனை பெறுவது நல்லது, தன்னிசையாக செயல்படுவது சிலசமயம் முதலுக்கே மோசமாகலாம்!//

இங்கே நிபுணர்கள் யார் என்பதில் கேள்வி எழுகிறது வால். so-called னிபுணர்கள் மோசடி செய்பவர்களுக்கு சொம்பு துக்குவது நம் சாபக்கேடக இருக்கிறது. பணத்தை சுலபமாகவோ, குறிகிய காலத்திலோ அதிகம் பெரலாம் என்று யார் சொன்னாலும் மக்கள் அதை புறம் தள்ளினால், பெரும்பண்மையான எம்மற்ரங்களை நம்ம் தவிர்க்கலம் என்பது என் கறுத்து.

Jey said...

//பன்னாட்டு முதலாளிகளுக்கு விளிம்புநிலை மனிதர்களின் உயிர் பற்றி சிறிதும் கவலையில்லை,//

இது நச் தல. பன்னாட்டு முதலாளிகளோடு, நம் நாட்டு முதலாளிகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள் வால்.

Jey said...

கவுஜை(!!!), என் அறிவுக்கு( அப்படி ஒன்னு இருக்கானு கேட்றாதிங்க தல.) அப்பற்பட்ட விஷயமாதலால்( ந்க்கொய்யாலே உன்கிட்ட நான் கருத்து கேட்டேனானு கேட்கிறது தெரியுது) தலைவர் பட்டாபட்டி அவர்கள் இதை பற்றி கருத்து கூருவார்கள்(!!!!)

Jey said...

உங்க கவுஜைல, பீர், பீர் கிலாஸ், நுரைனு, சில வார்த்தைகள் எனக்கு புரிந்தமாதிரி எழுதுயதற்கு என் நன்றிகள் பல.

Maximum India said...

//பன்னாட்டு முதலாளிகளுக்கு விளிம்புநிலை மனிதர்களின் உயிர் பற்றி சிறிதும் கவலையில்லை,//

இங்கே விளிம்பு நிலை மனிதர்களுக்கு மட்டும் மற்ற விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி கவலை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

இந்தியா கேப்பிடலிச நாடாக மாற ஆரம்பித்துள்ள இந்த கால கட்டத்தில் உயிரை விட பணத்தின் மீது பலருக்கும் (விளிம்பு நிலை மனிதர்கள் உட்பட) ஆசை ஏற்படுவது உலக சரித்திரத்தில் சகஜமான ஒன்றுதான். நமக்கு இந்த (பண) போதை தெளிய இன்னும் கொஞ்ச காலமாகும். என்ன? போதை தெளிவதற்குள் ஊறுகாயாய், நிறைய உயிர்களை நாம் பலி கொடுக்க வேண்டியிருக்கலாம்.

நன்றி!

Jey said...

//எனக்கு பாலோயராக நீங்கள் இருந்தால் நிச்சயம் நானும் பாலோயராக இருப்பேன்//.

இத நீங்க சொல்லனுமா வாலு, நான் உங்களை follow பன்றேனு, நான் இன்னும் பதிவு போடுரதுக்கு முன்னடியே என்னை follow பன்றேஙளே தல, இந்த பண்படு, நம்ம பன்னிகுட்டி ராமசாமிக்கும், மங்குனி(மூதேவி) அமைச்சைருக்கும்(பட்டாபட்டி பேரை சேர்த்தால் என் டவுசரை கிழிக்க வருவார் என்பதால் சொல்லவில்லை) இருக்கிறதா என்பதை இத்தருனத்தில் கேட்டுக்கொள்கிரேன்.

Jey said...

//1072 ரீடர்கள், கூகுள் ரீடரில்! நான் அவ்ளோ வொர்த்தா என்று அடிக்கடி என்னையே கேட்டு கொண்டிருக்கிறேன்!//

என்ன தல இதயெல்லாம் பப்ளிக்க சொல்லலாமா. எனக்கெ 5 followers இருக்கும்போது. உங்களுக்கு இதெல்லம் ஒரு விஷயமா, இது ரொம்ப கம்மி தல.

Jey said...

அடித்த சரக்கின் மப்பு, குறைந்த விட்ட காரணத்தினால், என் பின்னூட்டத்தை இத்துடன் நிறுத்திக்கொள்கிரேன்.

யோ வொய்ஸ் (யோகா) said...

701 பொலோயர்ஸ்க்கு வாழ்த்துக்கள், மிச்ச 2க்கும் இல்லை காரணம், அது நான்தான்.

எனது முந்திய பதிவிலும், இப்போதைய பதிவிலும் உங்களை தொடர்கிறேன்.எனது முன்னைய பதிவின் முதல் பொலோயர் நீங்கள் தான் என்பது எனக்கு மகிழ்ச்சியான விடயம்

பனித்துளி சங்கர் said...

வாழ்த்துக்கள் நண்பரே .

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

வாழ்த்துகள் அண்ணா,,,,,,

ரோகிணிசிவா said...

congrats vaals

ஜோதிஜி said...

கவிதைக்கு தலைப்பு சொல்லாம விட்டுட்டீங்க?

Anonymous said...

வாழ்த்துக்கள் தல.
//எனக்கு பாலோயராக நீங்கள் இருந்தால் நிச்சயம் நானும் பாலோயராக இருப்பேன்//அருமையான கொள்கை நானும் ஃபாலோ பன்றேன்

நாடோடி said...

வாழ்த்துக்க‌ள் வால் சார்..

Marimuthu Murugan said...

//எனக்கு பாலோயராக நீங்கள் இருந்தால் நிச்சயம் நானும் பாலோயராக இருப்பேன்//

இந்த டீலிங் பிடிச்சிருக்கு...

Mythees said...

1072 ரீடர்கள் வாழ்த்துக்க‌ள் :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் Arun

ஜாபர் ஈரோடு said...

தம்பி பிரியானி இன்னும் வரல...

Chitra said...

Congratulations!

"Scent of a woman" is one of Al Pacino's best. :-)

ஷர்புதீன் said...

தலைக்கு வாலின் வாழ்த்துக்கள்

Jackiesekar said...

வாழ்த்துக்கள் வால்... இன்னும் நிறைய பாலோயர் மற்றும் பதிவுகள் எழுதி உங்கள் சேவையை தொடருங்கள்...

செல்வா said...

//எனது கடவுள் மறுப்பு கொள்கையால் பல பாலோயர்ஸ் காணாமல் போனது அனைவரும் அறிந்ததே, ஆயினும் நட்பு வேறு தனிநபர் கருத்து வேறு என்று இன்றும் நட்பு பாராட்டி கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!//

எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்குங்க.. ஆனாலும் உங்கள் கடவுள் மறுப்புக் கருத்துக்களில் சில நல்ல கருத்துக்களும் பதிந்துள்ளது.

செல்வா said...

//நான் உங்களுக்கு பாலோயராக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் உங்கள் பதிவுகள் எதுவும் மிஸ்ஸாகாது, படிக்காமல் சென்று விடுவேனோ என்று சந்தேகித்து சாட்டில் கொடுப்பது கஷ்டமாக இருக்கிறது//

நானும் தங்களுக்கு இது போல தொல்லைகள் கொடுத்துள்ளேன். என்னை மன்னிக்கவும். பதிவுலகில் புதியவன் என்பதால் எனக்கும் நிறைய பாலோயர்கள் வேண்டும் என்பதாலும், எனது பதிவுகள் பிறரால் படிக்கப் பட வேண்டும் என்றும்
அவ்வாறு செய்து விட்டேன். ஆர்வக்கோளாறும் ஒரு காரணம். மேலும் அது போன்ற தவறுகள் நடவாமல் பார்த்துக்கொள்கிறேன். அன்புடன் செல்வக்குமார்.

Rajan said...

யோவ் எனக்கு ஏன்யா ஸ்பெசல் தேன்க்ஸ் போடல!

Rajan said...

//திருப்பூரில் paazee என்ற நிறுவனம் கரன்சி ட்ரேடிங் செய்கிறோம் என்று சொல்லி பல கோடி ஏமாற்றி இருப்பதாக நண்பர் ஒருவர் தொலைபேசினார், //

கொஞ்ச நாள்ல ஈரோட்டுல ஒருத்தர் மாட்டுவார்னு நெனைக்கறேன்

Rajan said...

//இதுவரை பார்த்திருராதவர்கள் தயவுசெய்து மிஸ் பண்ணிடாதிங்க,
//

மூணாவது ரீல்ல பிட்டு கீதாமே!

Rajan said...

எதிருக்கு எதிரான கவுஜ:

சுவற்றிற்கு முதுகு காட்டி....... அடிக்கும் ஜோடிகள் ,மற்றும்எட்டிப் பார்க்கும் வம்பர்கள் வழிந்தோடும் நுரையை உள்வாங்கும் வைன் க்ளாஸ்(!) விரலின் உத்வேகத்தில்எகிறி பறக்கும் மூடி(!) புளித்த மோர் (!) முழுதாய் குடித்தபின்மூக்கு விடைத்துவாய் திறந்துநாற்றமாய் வரும்கு”மோர்” ஏப்பம்புதிய மோரின் வாசத்துக்கும் வம்பர்களின் தொல்லைக்கும் சிலச்மோர் காலியாகும் எப்போதும் ரூம் இல்லாமல் அனைத்தையும் கண்காணிக்கும் மௌனக் கண்ணாடியாகவியாபித்திருக்கும் ஜன்னல்!

Rajan said...

//தம்பி பிரியானி இன்னும் வரல...//


மொத எழுத்தே வரல! ரியாணிக்கு போயிட்டாரு!

வேந்தன் said...

வாழ்த்துக்கள் வால் பையன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தல உங்கள பாலோ பண்ணலைன்னாலும் ரெகுலராக உங்க பதிவுகளைப் படிக்கிறேன், உங்களுடைய கடவுள் மறுப்புக் கொள்கையும் அதற்கு நீங்கள் நிறுத்தும் வாதங்களும் என்னை மிகவும் ஈர்ப்பவை. இந்தப்பதிவை பார்த்தவுடனே பாலோயர் ஆகிவிட்டேன். தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் வெளிப்படையான போக்கை மாற்றவேண்டாம்! நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Jey said...
//எனக்கு பாலோயராக நீங்கள் இருந்தால் நிச்சயம் நானும் பாலோயராக இருப்பேன்//.

இத நீங்க சொல்லனுமா வாலு, நான் உங்களை follow பன்றேனு, நான் இன்னும் பதிவு போடுரதுக்கு முன்னடியே என்னை follow பன்றேஙளே தல, இந்த பண்படு, நம்ம பன்னிகுட்டி ராமசாமிக்கும், மங்குனி(மூதேவி) அமைச்சைருக்கும்(பட்டாபட்டி பேரை சேர்த்தால் என் டவுசரை கிழிக்க வருவார் என்பதால் சொல்லவில்லை) இருக்கிறதா என்பதை இத்தருனத்தில் கேட்டுக்கொள்கிரேன்.///

என்ன மாப்பு இப்பிடி கேட்டுபுட்ட? நீ பதிவு போட்டதா சொல்லவே இல்லையே (ங்கொக்கா மக்கா ஒரு போஸ்டிங்கும் போடலை, அதுக்குள்ள 5 பாலோயர்ஸ், ம்ம்ம்....வெளங்கிரும்!, சரி சரி, கண்ணக் கசக்காத, பாலோ பண்ணித் தொலைக்கிறேன்!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
அடித்த சரக்கின் மப்பு, குறைந்த விட்ட காரணத்தினால், என் பின்னூட்டத்தை இத்துடன் நிறுத்திக்கொள்கிரேன்.//

யோவ் என்ன பிரான்டுய்யா அடிச்ச? அதுக்குள்ள இறங்கிடுச்சுங்கர? தண்ணி மிக்ஸ் பண்ணி அடி! சரி சரி, நம்ம கடைக்கு வா, இதுக்கு இங்க மொக்க போட்டா நம்ம வாலு அண்ணே கோச்சுக்குவாரு!

anujanya said...

என்னக் கொடுமை இது! பிரமாதமான கவிதை எழுதும் எனக்கு 200 பின்தொடர்பவர்கள். எதிர் கவுஜ (அதுவும் எப்பவும் குடி பற்றி) எழுதியே எழுநூறு பேரு ஃபாலோ பண்றாங்க.

ச்சும்மா வால்ஸ். வாழ்த்துகள். இன்னும் தொடர்ந்து கலக்குங்க குரு.

அனுஜன்யா

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள்

பருப்பு (a) Phantom Mohan said...

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

எனக்கு முதல் கம்மென்ட் போட்ட மகராசன் நீங்கதான், உங்களுக்கு தெரியுமோ, தெரியாதோ? வேணும்னா வந்து பாருங்க.

வால்பையன் said...

//madurai ponnu said...

அருண் நீ குவியல் போட்டு எனக்கு என்ன அவியல் போட்ட வேணா சாப்பிட வரலாம்.//


என்னேரமும் சாப்பாட்டு ஞாபகமாகவே இருந்தால் வரப்போறவன் இப்பவே பட்ஜெட் போட ஆரம்பிச்சிடுவான்!

வால்பையன் said...

//பட்டாபட்டி.. said...

@arun
என்னாச்சு வால்..
ரைட்டு....//


ஒண்ணுமில்லங்க, பழக்கமான சிலர் நேரடியா பெயர் சொல்லி அழைப்பாங்க!

வால்பையன் said...

//UFO said...

//நான் அவ்ளோ வொர்த்தா என்று அடிக்கடி என்னையே கேட்டு கொண்டிருக்கிறேன்!//---பதிவில் எனக்கு மிகவும் பிடித்த வரி...//


முழுமையான கருத்து வேறுபாடு உள்ளவருக்கும் பிடித்த வரிகள் எழுதியிருப்பது குறித்து மகிழ்ச்சி!, எச்சூழ்நிலையிலும் தலைகனம் வந்து விடக்கூடாது என்பது என் எண்ணம், வெகு உயரம் சென்று விழ நேர்ந்தால் பயங்கரமாக அடிபடும் அல்லவா! தரையில் கால் ஊன்றி நிற்பதே சிறப்பு!

Mythili said...

குவியல் நன்றாக இருகிறது , அந்த கவுஜதான்....ஒன்னும் புரியல ...
வாழ்த்துகள்.

அ.முத்து பிரகாஷ் said...

" மின்சாரம் இல்லாமல் கூட இருந்து விடலாம், உயிர் இல்லாமல் இருக்க முடியுமா!? ஒட்டுமொத்த குரலில் இத்திட்டத்தை எதிர்ப்பதே சரியான வழி! "
ஆமாம் தோழர் ... மாற்று முறைகளை நோக்கி செல்ல வேண்டிய தருணம் இது !

தல ... தப்பா நினைச்சுக்காதீங்க ...
உரிமையோடு தான் கேட்கிறேன் ....
தண்ணி அடிக்கிறது பகுத்தறிவின் படி சரியா தவறா ?
ஒரு வேளை ...
நான் தண்ணி அடிச்சா உங்கள மாதிரி முழு பகுத்தறிவாளனா மாறிட வாய்ப்பிருக்கிறதா ?
தண்ணி மட்டும் அடிச்சா போதுமா இன்னும் ஏதாவது ...

'' ஓரினசேர்க்கைக்கு எதிராக அதாவது அது அவர்களின் விருப்பம், விருப்பமில்லாதவர்களை தொந்தரவு செய்வது தவறு என்று எழுதியதற்கு 10 பாலோயர்ஸ் காணாமல் போய்விட்டார்கள் ''
சாய் பாபா பத்தி அதுக்காக சொன்ன மாதிரி எழுதாம போயிடாதீங்க ! மறந்திடல்ல ?

வால்பையன் said...

//இங்கே நிபுணர்கள் யார் என்பதில் கேள்வி எழுகிறது வால். so-called னிபுணர்கள் மோசடி செய்பவர்களுக்கு சொம்பு துக்குவது நம் சாபக்கேடக இருக்கிறது.//


ரெலிகேர், அப்போல்லோ போன்ற செபி அனுமதி பெற்ற நிறுவங்கள் இலவச ஆலோசனைகள் தருகின்றன, அவர்களிடம் கேட்டு முதலீடு செய்யலாம், எவ்வளவு ரிஸ்க் என்பதை கூட சொல்லி விடுவார்கள்!

வால்பையன் said...

//யோவ் எனக்கு ஏன்யா ஸ்பெசல் தேன்க்ஸ் போடல!//


டிரிட்டுக்கு வர சொன்னா வர்றதில்ல, தேங்க்ஸ் மட்டும் போதுமா!?

வால்பையன் said...

//தல ... தப்பா நினைச்சுக்காதீங்க ...
உரிமையோடு தான் கேட்கிறேன் ....
தண்ணி அடிக்கிறது பகுத்தறிவின் படி சரியா தவறா?//


சரக்கை பற்றி கவுஜ இருப்பதால் மொட குடிகாரன் என்ற முன் முடிவுக்கு வர வேண்டாம் தோழரே!

புளிக்க வைக்கபட்ட பால் தயிராகிறது, புளிக்க வைக்கபட்ட திராட்சை ரசம் ஒயினாகிறது, அளவோடு இருந்தால் எதுவும் பிரச்சனையில்லை, அளவுக்கு மீறினால் எதுவுமே நல்லதல்ல!


//சாய் பாபா பத்தி அதுக்காக சொன்ன மாதிரி எழுதாம போயிடாதீங்க ! மறந்திடல்ல ? //

நிச்சயம் பதிவு உண்டு தோழரே!
அவன் முடியை பிச்சிகிட்டு தெருவில் ஓடும் வரை விடுவதில்லை!

வால்பையன் said...

//அனுஜன்யா said...

என்னக் கொடுமை இது! பிரமாதமான கவிதை எழுதும் எனக்கு 200 பின்தொடர்பவர்கள். எதிர் கவுஜ (அதுவும் எப்பவும் குடி பற்றி) எழுதியே எழுநூறு பேரு ஃபாலோ பண்றாங்க.//


இது சரக்கு வாங்கி கொடுத்து சேர்த்த கூட்டம் இல்ல தல, அன்பால சேர்ந்த கூட்டம்

வால்பையன் said...

வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சத்துக்களுக்கும் நன்றி நன்றி நன்றி!

VELU.G said...

//நட்பு வேறு தனிநபர் கருத்து வேறு என்று இன்றும் நட்பு பாராட்டி கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!//


வாழ்த்துக்கள் நன்பரே. உங்கள் பணி மேன்மேலும் சிறக்கட்டும்

தனி காட்டு ராஜா said...

//இதில் ஓரினசேர்க்கைக்கு எதிராக அதாவது அது அவர்களின் விருப்பம், விருப்பமில்லாதவர்களை தொந்தரவு செய்வது தவறு என்று எழுதியதற்கு 10 பாலோயர்ஸ் காணாமல் போய்விட்டார்கள், அவர்களது உரிமையில் தலையிட்டது பிடிக்கவில்லை போலும், எனது கடவுள் மறுப்பு கொள்கையால் பல பாலோயர்ஸ் காணாமல் போனது அனைவரும் அறிந்ததே,.....//

எதா இருந்தாலும் இப்படி பிராங்கா பேசருதாலதான் காணாமல் போனவர்களை விட கண்டதும் சேர்பவர்கள் அதிகம் போல...

//அதிலும் ஏகபட்ட மொக்கைகள் ஆனால் உங்களின் அன்பு உலகத்தை விட பெரியது,//
அட அன்பு எல்லாம் ஒன்னும் இல்லைங்க ....யாரு ஒரே நேரத்துல்ல டெரராகவும்,காமடியாகவும் பதிவு போடறாங்கன்னு பார்த்தா.... பாலோயராக விட வேண்டியதுதான்.......

Ashok D said...

அப்ப நாந்தான் லேட்டா...

வாழ்த்துக்கள் வால்... :)

puduvaisiva said...

வாழ்த்துகள் வாலு

அபி அப்பா said...

வாலு! உன் பாலோயர் எண்ணிக்கையை பார்த்தா சில சமயம் பொறாமையா இருக்கும். பல சமயம் ஆர்வமாகவும் இருக்கும். சீக்கிரம் 1000 கடக்கனும் என்கிற ஆர்வம்.

நல்லா எழுதுற! இன்னும் மேல மேல வருவப்பா! என் வாழ்த்துக்கள்!

smart said...

//ஆயினும் நட்பு வேறு தனிநபர் கருத்து வேறு என்று இன்றும் நட்பு பாராட்டி கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!//
உங்களுக்கு மட்டும் அது தனிநபர் கருத்து மத்தவுங்க சொன்னா அது சாதிப் புத்தி குடுமி புத்தின்னு சொல்வீங்க அப்படிதானே.

நட்பா பாரட்டிஎல்லாம் யாரும் பலோ பண்ணல ரோட்டில ஒரு விசித்திர பிறவி நடந்தா ஆச்சரியமா பார்ப்போம்ல அது மாதிரி மனநிலைதான் என்பது அடியேனின் கருத்து.

!

Blog Widget by LinkWithin