வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!

முரளி

மச்சான் இந்த கிளைமேட்ல சிகரெட் அடிக்கிறது தாண்டா சொகமே! ஆயிரம் சொல்லு சிகரெட் மாதிரி ஒரு டென்ஷன் ரிலீவர் எதுவுமேயில்ல! அதுவுமில்லாம சிகரெட் பிடிச்சிட்டு புகையை ஊதும் போது அப்படியே எதையோ சாதிச்சிட்டா மாதிரி ஒரு ஃபீலிங், சிகரெட் பிடிக்கிற ஸ்டையிலில் இருக்குற ஒருத்தனோட ஆம்பளைதனம்!


விமலா

சீ, எத வேணும்னாலும் தாங்கிகிலாம், ஆனா இந்த சிகரெட் நாத்தம் மட்டும் தாங்க முடியல, கொடலபொரட்டிகிட்டு வாந்தி வருது, சனியனுங்க அந்த பக்கம் தள்ளி போகுதுங்களா, கூட்டமா இருக்குற இடத்துல புகைபிடிக்க கூடாதுன்னு அரசாங்கம் சட்டம் போட்டாலும் திருந்தாத ஜென்மங்க, இந்த உலகத்துல நான் யாரையாவது வெறுக்குறேன்னா அது சிகரெட் பிடிக்கிற ஆண்களை தான்!

முரளி

மச்சான் நேத்து போன படத்துல விஜயோட டான்ஸ் பாத்தியா, என்னா ஸ்டெப்ஸ்ரா, இனி ஒருபய இந்த மாதிரி ஆட முடியாது, டான்ஸ்ல விஜயை அடிச்சிக்க இனி ஆளே கிடையாதுடா, அதே மாதிரி ஃபைட்டும் எப்படி பண்ணினார் பார்த்தியா, நான் அடிச்சு சொல்றேன் அது எதுவுமே டூப் இல்ல, விஜய்னா ரிஸ்க்கு, ரிஸ்க்குனா விஜய்டா!, எந்த தருதலையும் எங்க ஆளு முன்னாடி நிக்கமுடியாது!


விமலா

ஹீரோன்னா அதுக்கு கொஞ்சமாவது தகுதி வேணாம், அந்த தகுதி அஜித்துக்கு மட்டும் தாண்டி இருக்கு, சிலபேர் தூக்கிஎழுந்த மூஞ்சியை வச்சிகிட்டு தளபதி பட்டம் போட்டுகிரானுங்க, காக்காவலிப்பு வந்த மாதிரி ஒரு டான்ஸ் வேற, ஸ்டைல்னா அது அஜித் தான், அப்படியே சிரிக்கும் போது கண்ணுல ஒரு காதல் தெரியும் பாரு, ம்ம்ம்மாஆஆஆ, ஹீ இஸ் த மேன்!


முரளி

மச்சான் காதல்ங்கிறது சுத்த பேத்தல்றா, நீ விழுந்து விழுந்து காதலிப்ப, அவ கடைசியில வீட்ல பார்த்த மாப்பிள்ளைய கட்டிகிட்டு உன்னைய தாடியோட அழைய விடுவா, நீ தண்ணிய போட்டுகிட்டு உலகே மாயம், வாழ்வே மாயம்னு திரிவ, அதுக்கு தான் நான் சொல்ற டெக்னிக், ஜாலியா சந்தோசமா இரு, எந்த கமீட்மெண்டுகுள்ளும் சிக்கிக்காத!


விமலா

காதல் பூ மாதிரியான உணர்வுடீ, அது மென்மையான மனசு இருக்குறவங்களுக்கு தான் புரியும், எப்ப பார்த்தாலும் சிடுசிடுன்னு இருந்தா ஒன்னும் புரியாது! காதல் ஒரு அழகு, ரசனை, கலை. ஆனா சில ஆண்களுக்கு அது டைம்பாஸ், எப்படி தான் இந்த மாதிரி ஆம்பளைகளை இந்த பெண்ணுங்க நம்புறாங்களோ, ஐ காண்ட் பிலிவ் தட்! என்னைய கேட்டா உண்மையா காதலிக்க தெரிஞ்ச ஆம்பளை தான் முழுமையான ஆம்பளைன்னு சொல்வேன்!


*******
விக்ருதி வருடம் ஆனி பத்தாம் நாள் இந்த வாளமீனுக்கும், அந்த விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!



டிஸ்கி:இது புனைவு!

50 வாங்கிகட்டி கொண்டது:

இராகவன் நைஜிரியா said...

// விக்ருதி வருடம் ஆனி பத்தாம் நாள் இந்த வாளமீனுக்கும், அந்த விலாங்கு மீனுக்கும் கல்யாணம்! //

ம்... வாழ்த்துகள்.

ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட் ஈச் அதர் என்பது சரிதான் போலிருக்கு..

இராகவன் நைஜிரியா said...

அப்படி போரு அருவாள... நான் தான் போணி பண்ணியிருக்கேன்..

சைவகொத்துப்பரோட்டா said...

விலாங்கு மீனா.........வாள மீனா.........
எது அவஸ்த பட போகுதோ.............
அவ்வ்.........

hiuhiuw said...

இவிங்க ரெண்டு பேரும் ஆரு தல ? நம்மளுக்கு சொந்தமா !

hiuhiuw said...

//அதுவுமில்லாம சிகரெட் பிடிச்சிட்டு புகையை ஊதும் போது அப்படியே எதையோ சாதிச்சிட்டா மாதிரி ஒரு ஃபீலிங்//


அதுவும் சிகரெட் குடிக்கற பழக்கம் இல்லாதவன் மூஞ்சில ஊதுனா தனி கிக்கு தல

hiuhiuw said...

//சீ, எத வேணும்னாலும் தாங்கிகிலாம், ஆனா இந்த சிகரெட் நாத்தம் மட்டும் தாங்க முடியல, கொடலபொரட்டிகிட்டு வாந்தி வருது,//


ஒரு பாஸ் பாஸ் வாங்கி வாய்ல போட்டுட்டு கிஸ் அடிங்க தல ! இதெல்லாம் கூடவா சொல்லித் தரனும்

hiuhiuw said...

//விஜய்னா ரிஸ்க்கு, ரிஸ்க்குனா விஜய்டா!,//


அப்பிடித்தான் அவங்கப்பாவும் சம்சாரமும் கூட சொல்லிகிட்டாங்க

hiuhiuw said...

//எந்த தருதலையும் எங்க ஆளு முன்னாடி நிக்கமுடியாது!//

நூத்துல ஒரு வார்த்தை ! அவர் முன்னாடி நின்னா என்னாகும்னு சொல்லவே வேண்டாம்

hiuhiuw said...

//ஹீரோன்னா அதுக்கு கொஞ்சமாவது தகுதி வேணாம், அந்த தகுதி அஜித்துக்கு மட்டும் தாண்டி இருக்கு//

இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்கற வரைக்கும் ................ அவ்வ்வ்வவ்

hiuhiuw said...

//விக்ருதி வருடம் ஆனி பத்தாம் நாள் இந்த வாளமீனுக்கும், அந்த விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!//

பொண்ணு ஆத்துலையா புள்ளயாண்டான் ஆத்துலையா

சங்கர் said...

\\சிலபேர் தூக்கிஎழுந்த மூஞ்சியை வச்சிகிட்டு தளபதி பட்டம் போட்டுகிரானுங்க\\

சூப்பரா சொன்னீங்க தல...

பிரேமா மகள் said...

சரி.. கல்யாணத்துக்கு சொந்தகாரங்க மொய் எழுதுவாங்கல்ல.. அந்த பணத்தை பாதுக்காக்கிற பொறுப்பு என்னது.. ஓ.கே வா

hiuhiuw said...

நல்லா இருக்குது தல ! சூப்பர் கவிதை பின்னீட்டீங்க ! பிலாகுல எதுனா பிகர் ரெடி பண்ணிட்டீங்களா ?

Ahamed irshad said...

///அது அஜித் தான், அப்படியே சிரிக்கும் போது கண்ணுல ஒரு காதல் தெரியும் பாரு///


தல போல வருமா.........

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆமா தல.. நீங்க மாப்பிள்ளை வீடா.. இல்ல பொண்ணு வீட்டு சைடா..

அத சொல்லலே..

ப்ரியமுடன் வசந்த் said...

:)

எகனைக்கு மொகனை.. சரியா இருக்கும் தல ரெண்டு பேரும் சண்ட போட்டுகிட்டே திரும்ப கொஞ்சிகிட்டு...ம்ம்ம்

Anonymous said...

ரொம்ப சந்தோசம்.. ! அவ்வ்வ்வவ்வ்வ்


முரளி

அப்பாவி முரு said...

எப்பிடியோ.,

ரெண்டு நடிகரையும் வாரியாச்சு...

Prasanna said...

அதனால காதலிச்சு கல்யாணம் பண்ணனும்னு சொல்றீங்களா தல :)

//அதுவும் சிகரெட் குடிக்கற பழக்கம் இல்லாதவன் மூஞ்சில ஊதுனா தனி கிக்கு//
ஹா ஹா ஹா :)

Mythees said...

//விக்ருதி வருடம் ஆனி பத்தாம் நாள் இந்த வாளமீனுக்கும், அந்த விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!//

ராம்போ செரமம் !!!

Mythees said...
This comment has been removed by the author.
பித்தனின் வாக்கு said...

அட கல்யாணம் கிடக்கட்டும் சாப்பாடு போடுவாங்க இல்லை. சொல்லியனுப்பு தல. மொதப் பந்தியில முத ஆளா இடம் பிடிச்சற மாட்டேன். கதை நல்லா இருக்கு. ஆமா விசய் மேல என்ன கோபம்.

Mythees said...

//அதனால காதலிச்சு கல்யாணம் பண்ணனும்னு சொல்றீங்களா தல :)//


ரெண்டு பேரும் காதலிச்சா அந்தமான்ல பூகம்பம் வந்து சென்னைல சுனமிவரும் பரவா இல்லையா தல

:)))

க.பாலாசி said...

ஆமா ஆரந்த ‘வாலு’ம், விலாங்கும்....

Aba said...

பின்னிட்டப்பா...

அந்த போட்டோ பிரமாதம்!

Aba said...

என்னா இன்னிக்கி அனானிப் பாலக் காணோம்?

நாடோடி said...

சாப்பாடு உண்டு இல்ல‌!..மொய் வைக்க‌ வேண்டாம் இல்லையா?

karthi said...

பாஸ் போட்டோ நல்ல இருக்கு.
he he he

சசிகுமார் said...

நண்பா என்னை தலைமை(திமிங்கலம்) தாங்க சொல்லி கட்டாய படுத்தாதீங்க நான் ரொம்ப பிஸி, உங்களுக்காக வேணும்னா யோசிக்கிறேன் என்ன சொல்றீங்க

மங்குனி அமைச்சர் said...

கொக்கா மக்கா எப்படியலாம் யோசிகிரானுக, அசத்தல் தல

ராஜ நடராஜன் said...

//சிலபேர் தூக்கிஎழுந்த மூஞ்சியை வச்சிகிட்டு//

சங்கர் வேறு சூப்பர் தல சொல்றாரு!அது தூக்கி எழுந்த மூஞ்சியேதானா?

ராஜ நடராஜன் said...

//அதுவும் சிகரெட் குடிக்கற பழக்கம் இல்லாதவன் மூஞ்சில ஊதுனா தனி கிக்கு தல//

மூஞ்சி மஞ்சளா ஏன் இருக்குதுன்னு இப்பத்தானே புரியுது:)

உமர் | Umar said...

தல ரெண்டு வாரமா போற போக்கு சரியில்ல! ஒரு பதிவு கூட 200 கமென்ட்சு தாண்டலே. இதெல்லாம் நல்லதுக்கில்ல. ஒரு கெடாவெட்ட போடுங்க. 400 கமென்ட்சாவதுத் தேறும்.

மேவி... said...

Mysskin eluthina script madiri irukku.....:)

Unknown said...

யோவ் அடங்கமாட்டீயா நீ என்னத்தச் சொல்றது. கடைசியிலே புனைவுன்னு போட்டா நாங்க நம்பீட்டமுல்ல. நடத்து நயினா...

அன்புடன்
ச்ந்துரு

Maximum India said...

அசத்தலாக இருந்தது தல!

(தல போல வருமா?)

:)

cheena (சீனா) said...

கல்யாணம் ஆச்சுன்னு வச்சீக்க - அப்புறம் ரெண்டும் ஒண்ணூதான் - ஓருடல் ஈருயிர்தான் - ஆமா

நல்வாழ்த்துகள் - நல்ல புனைவு - நல்ல கற்பனை

smart said...

//சிலபேர் தூக்கிஎழுந்த மூஞ்சியை வச்சிகிட்டு தளபதி பட்டம் போட்டுகிரானுங்க//

நீங்க மதத்தில மட்டும்தான் முட்டுவீங்கனு நெனச்சேன், அரசியல்லையும் மூக்க நுழைபேங்கள. என்னதான் இருந்தாலும் ஒரு அமைச்சரைப் பத்தி சொல்ல ஒரு தயிரியம் வேண்டும்.

வால்பையன் said...

@ ஸ்மார்ட்

நல்லா சிண்டு முடியுறேள்!

smart said...

//தல ரெண்டு வாரமா போற போக்கு சரியில்ல! ஒரு பதிவு கூட 200 கமென்ட்சு தாண்டலே. இதெல்லாம் நல்லதுக்கில்ல. ஒரு கெடாவெட்ட போடுங்க. 400 கமென்ட்சாவதுத் தேறும்.//

ஒரு வேளை எல்லாரும் ஸ்மார்ட்ட யோசிக்குறாங்களோ

Ashok D said...

இரண்டுவாட்டி படிச்சும் புரியமாட்டேங்குதே... கொஞ்சம் சுலுவா எழுதறது...

smart said...

//நல்லா சிண்டு முடியுறேள்!//
உங்க ஜாதி பாஷையில பேசுறேங்கள. ஜாதியை விட்டு வெளிய வாங்க ப்ளீஸ்

smart said...

நண்பா உங்களுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுத்துள்ளேன். அனுபவித்து போங்க

அகல்விளக்கு said...

600க்கு வாழ்த்துக்கள் தல............

:-)

உமர் | Umar said...

600 க்கு வாழ்த்துகள் தல!

நேசமித்ரன். said...

:)

யாரோ யார் யாரொ எவர் நெஞ்சினில்தான் யாரோ

யாயும் யாயும் யாராகியரோ

priyamudanprabu said...

விக்ருதி வருடம் ஆனி பத்தாம் நாள் இந்த வாளமீனுக்கும், அந்த விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!
////

நாசமா பொச்சு

hiuhiuw said...

//நாசமா பொச்சு //
போச்சுன்னு போடணும் இப்பிடி போட்டா சென்சார்ல போயிடும்

மங்குனி அமைச்சர் said...

//// ராஜன் said...

//நாசமா பொச்சு //
போச்சுன்னு போடணும் இப்பிடி போட்டா சென்சார்ல போயிடும்////

குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்

hiuhiuw said...

"வடகலை,தென்கலை புதிதாக எச்சக்கலை !" இங்க வாங்கப்பா புது மேட்டர்

!

Blog Widget by LinkWithin