குவியல்!..(16.04.10)

டிசம்பர் மாசம்னு நினைக்கிறேன் 500 பாலோயர் பூர்த்தியானதுக்காக நன்றி சொல்லியிருந்தேன் ஒரு குவியலில், இப்போ 600 முடிந்து 609 பாலோயர்ஸ், உங்களாலேயே இது சாத்தியமானது மிக்க நன்றி நண்பர்களே! 600 வந்த போதே பதிவு போடாததற்கு காரணம் ஆர்குட் நண்பர்களும் 600 எண்ணிக்கையை நெருங்கி கொண்டிருந்தார்கள், தற்பொது அதுவும் 600, என்னை ஆர்குட் நண்பனாக ஏற்று கொள்ள இங்கே கிளிக்கவும்!, நீங்கள் எனக்கு பாலோயராக இருந்து நான் உங்களுக்கு பாலோயராக இல்லையென்றால் தயவுசெய்து தெரியபடுத்தவும்!, அதே போல் எனக்கு பாலோயராக இருந்து என்னை பிடிக்காமல் வெளியேறிய நண்பர்கள் தளத்தில் இருந்தும் தேடி தேடி வெளி வந்து கொண்டிருக்கிறேன்! உருப்படியா முதலில் நமக்கு மரியாதை செலுத்துபவர்களுக்கு நாம் செலுத்துவோம் என்ற எண்ணமே காரணம்!

உங்கள் ப்ளாக்கை அனுப்ப வேண்டிய முகவரி arunero@gmail.com

***********************

எனது பிறந்தநாளை தனது ப்ளாக்கில் பகிர்ந்து கொண்ட அய்யனார், கிருஷ்ணமூர்த்திசார், மோனி அவர்களுக்கும், போனிலும், சாட்டிலும், மெயிலும் வாழ்த்து சொன்ன நண்பர்களுக்கு நன்றி!, உலகெங்கும் நண்பர்கள் இருப்பது கொஞ்சம் கர்வமாக தான் இருக்கிறது!

**********************

சென்ற வருடத்தை விட இந்த வருடம் வெயில் அதிகமோ என ஒவ்வொரு வருடமும் தோன்றுகிறது!, பூமி வெப்பமயமாதல் பற்றி விஞ்ஞானிகளும், சமூக ஆர்வலர்களும் காட்டுகத்து கத்தினாலும், இயற்கை நாம் அனுபவிக்க இறைவன் படைத்து இருக்கான் என வேத புத்தகத்தில் இருந்து எண்களுடன் வசனத்தை காட்டி இயற்கைவளத்தை கதற கதற கற்பழிக்கும் எடுப்பு கூட்டங்களுக்கு நண்டு நொரண்டு பதிவில் இருக்கும் இந்த கவிதையை பகிர்ந்து கோள்கிறேன்!

"கடைசி மரமும் வெட்டுண்டு,
கடைசி நதியும் வரண்டு ,
கடைசி மீனும் மாண்டுவிடும்
அப்போதுதான்
பணத்தைச் சாப்பிட முடியாது என்று நமக்கு உறைக்கும் "

-ஒரு செவ்விந்தியப்பாடல் .


பூமியில் முதல் உயிர் உருவாக்கத்தில் இருந்து இன்று வரை ஒருநாள் என கணக்கிட்டு கொண்டால் நாகரிக மனிதனின் பங்களிப்பு 10 நொடிகள் தான் இருக்கும், ஆனால் இன்னும் ஒரு நொடியில் அவன் மொத்த உயிரினங்களையும் அழித்து பூமிக்கு சமாதி கட்டிட்டு தான் மறு வேலை பார்ப்பான்! மொத்த மனித இனத்தையும் அழிக்க வேறு யாரும் வர வேண்டியதில்லை, மனிதனே போதும்! நீங்கள் சுவாசிக்க காற்று இயற்கை தருகிறது, உணவு இயற்கை தருகிறது, உங்கள் கடனை அடைக்க குறைந்த பட்சம் ஒரு மரமாவது நட்டு வளருங்களேன்!

*********************


the hurt locker

நல்ல பிரிண்ட் கிடைத்தது, ஆறு ஆஸ்கார் விருதுகளில் முதல் பெண் இயக்குனருக்கான விருது அதில் முக்கியமானது, போர் என்பது போதை என படம் ஆரம்பித்தாலும் அடிப்படையில் வன்முறை என்பதே போதை தான் என்பது என் கருத்து!, பயம் என்னும் அடுத்தவர் தரும் அங்கிகாரமே நாட்டில் பல ரவுடிகளை உருவாக்கியுள்ளது!, சில நேரங்களில் அதீத பயம் உங்களையே ரவுடியாக்கக்கூடும்! அதெல்லாம் அனுபவத்தில் தெரிந்து கொள்ள வேண்டியது!, இந்த படம் மற்ற போர் படங்களை போன்றே சராசரியாக தான் இருந்தது! மொத்தகமாக போர் கதைகளமாக கொள்ளாமல் குண்டுகளை செயலிலக்க வைப்பது மட்டும் கதையின் கருவாக கொண்டிருப்பது வித்தியாசம்!


இந்த படத்தில் நான் ரசித்தவை!

கதாநாயகனின் நடிப்பு,ஒலிப்பதிவு,ஒளிப்பதிவு,எடிட்டிங்


***********************

குட்டி கவிதை(மாதிரி)

அகம்பாவம்

மழை பொழிந்தது,
நான் இருப்பதால் என்பது
தலைக்கனம்
நானும் இருப்பதால் என்பது
பெருந்தன்மை

92 வாங்கிகட்டி கொண்டது:

ஜெய்லானி said...

//உங்கள் கடனை அடைக்க குறைந்த பட்சம் ஒரு மரமாவது நட்டு வளருங்களேன்!//

நிச்சயமாக முயறச்சிப்போம் .

க.பாலாசி said...

குவியல்...

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

நான் 610

தமிழ் பொண்ணு said...

ponga ungata na doo

ny said...

நான் இப்போ 600ல் ஒருவன்!!
சீக்கிரமே ஆயிரத்தில் ஒருவனாகப் போறேன்னு சொல்லுங்க!!


//மழை பொழிந்தது,
நான் இருப்பதால் என்பது
தலைக்கனம்
நானும் இருப்பதால் என்பது
பெருந்தன்மை
நான் இருந்தும்
என்பதே நிஜம்!//

எப்பூடி?!

தமிழ் பொண்ணு said...

ponga vaal payan na ungata pesamaten.. amaaaa..

தமிழ் பொண்ணு said...

:(

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்துகள் வால்ஸ் :)

சைவகொத்துப்பரோட்டா said...

610 - க்கு வாழ்த்துக்கள்.

VELU.G said...

//உங்கள் கடனை அடைக்க குறைந்த பட்சம் ஒரு மரமாவது நட்டு வளருங்களேன்!//

கண்டிப்பாக முயற்சிப்பேன்

RaGhaV said...

உங்களின் குட்டிக் கவிதைக்கு, உங்களின் அனுமதியோடு இன்னொரு வரி சேர்க்கலாமா..?

மழை பொழிந்தது,
.
.
.
அவள் இருப்பதால்
என்பது காதல்..

குவியல் அருமை வால்.. :-))

தமிழ் பொண்ணு said...

ARUN, ENNODA BEST WISHES,CONGRATS ELLAMMM..

Sanjai Gandhi said...

பொறந்த நாள் வாழ்த்துகள் வால்..

//நீங்கள் எனக்கு பாலோயராக இருந்து நான் உங்களுக்கு பாலோயராக இல்லையென்றால் தயவுசெய்து தெரியபடுத்தவும்!, //

இதை சைட்பார்ல ஒரு அறிவிப்பா போட்ருங்க. அடிக்கடி பதிவுல எழுதற நேரம் மிச்சமாகும்

( கவனிக்க : தொடர்ந்து உங்க ப்ளாக் படிக்கிறேன் )

கையேடு said...

தாமதமான வாழ்த்துகள் நண்பரே.. :)

அகல்விளக்கு said...

குறிப்பிடத்தக்க குவியல்...

அருமை...

sriram said...

வாழ்த்துக்கள் வாலு..

நல்ல வேளை, புவி வெப்பமாதலுக்கு ஐயருங்க யாகம் வளர்ப்பதுதான் காரணம்னு சொல்லாம விட்டீங்களே... :) :)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அமர பாரதி said...

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் வால். //உங்கள் கடனை அடைக்க குறைந்த பட்சம் ஒரு மரமாவது நட்டு வளருங்களேன்.// என்னோட கடனுக்கு 250 மரங்களை வளர்க்கிறேன்.

வால்பையன் said...

// sriram said...
வாழ்த்துக்கள் வாலு..
நல்ல வேளை, புவி வெப்பமாதலுக்கு ஐயருங்க யாகம் வளர்ப்பதுதான் காரணம்னு சொல்லாம விட்டீங்களே... :) :)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//


வாலண்ட்ரியா வந்து ஜீப்புல ஏறுனா நான் என்ன செய்யுறது!?
யாகம் வளர்த்தா சூடாகாம குளுகுளுன்னு இருக்குமாக்கும்!

மன்னார்குடி said...

வாழ்த்துக்கள்.

smart said...

வாழ்த்துக்கள்
நல்ல பதிவு.

இப்படி ஒன்றிரண்டு நல்ல பதிவுகள் போடுவதால் ஒருவரை பலோ செய்யலாமா?
அல்ல விருப்பமில்லாத மீதி பதிவு போடுவதால் கழண்டு கொள்ளலாமா?

தமிழ் பொண்ணு said...

//உங்கள் கடனை அடைக்க குறைந்த பட்சம் ஒரு மரமாவது நட்டு வளருங்களேன்!//வால் மொதோ உங்க வீட்ல எத்தன மரம் இருக்குனு சொல்லுங்க.அப்பறமா ந மரம் வைக்கிறேன்.

வால்பையன் said...

//வால் மொதோ உங்க வீட்ல எத்தன மரம் இருக்குனு சொல்லுங்க.அப்பறமா ந மரம் வைக்கிறேன்.//

என் வீட்டுக்கு முன் நாலு மரம் வச்சிருக்கேன்! புதுசா ரெண்டு வேப்பங்கன்னு நட்டு வச்சிருக்கேன்!

வால்பையன் said...

//இப்படி ஒன்றிரண்டு நல்ல பதிவுகள் போடுவதால் ஒருவரை பலோ செய்யலாமா?
அல்ல விருப்பமில்லாத மீதி பதிவு போடுவதால் கழண்டு கொள்ளலாமா?//

நீங்க பாலோ பண்ணாலும், பண்ணாட்டியும் என் பதிவை முதலில் வந்து படிப்பிங்களே ஸ்மார்ட், அது எனக்கு தெரியாதா!

தமிழ் பொண்ணு said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

//அதுக்கு தண்ணி ஊதுறது உங்க யாரு?//

நான் தான் தினம் காலையில ஊத்துறேன்! காலையில் பல்விளக்கும் போது அங்கே கை கால் கழவினாலே போதும், இதுக்காக சம்பளத்துக்கா ஆள் வைப்பாங்க!

நாமக்கல் சிபி said...

///உங்கள் கடனை அடைக்க குறைந்த பட்சம் ஒரு மரமாவது நட்டு வளருங்களேன்!//

எந்த வங்கியா இருந்தாலும் மரம் நட்டால் போதுமா?

தமிழ் பொண்ணு said...

//மொத்த மனித இனத்தையும் அழிக்க வேறு யாரும் வர வேண்டியதில்லை, மனிதனே போதும்! //அதுக்கு தான் நீங்க "irukengala".

வால்பையன் said...

//எந்த வங்கியா இருந்தாலும் மரம் நட்டால் போதுமா? //


வங்கியிடம் சொல்லிபாருங்க! உங்களை குழிக்குள் நட்டு வச்சிருவாங்க!

வால்பையன் said...

//மொத்த மனித இனத்தையும் அழிக்க வேறு யாரும் வர வேண்டியதில்லை, மனிதனே போதும்! //அதுக்கு தான் நீங்க "irukengala".//

ஆமா, நான் தான் சாத்தான்!
உங்களையெல்லாம் எண்ணைய் சட்டிக்குள் போட்டு வறுக்கப்போறேன்!

smart said...

//நீங்க பாலோ பண்ணாலும், பண்ணாட்டியும் என் பதிவை முதலில் வந்து படிப்பிங்களே ஸ்மார்ட், அது எனக்கு தெரியாதா!//நான் பொது கேட்டேன்.

இப்ப உங்க பதிவின் படி பதிவுக்கு இருக்கும் மரியாதையைவிட பதிவருக்கு இருக்கும் மரியாதைதான் பெரிதாகக் கருதப்படுகிறது.

வால்பையன் said...

//இப்ப உங்க பதிவின் படி பதிவுக்கு இருக்கும் மரியாதையைவிட பதிவருக்கு இருக்கும் மரியாதைதான் பெரிதாகக் கருதப்படுகிறது. //


என் பதிவை பற்றிய உங்கள் கருத்து தான் எனக்கு பெரிதாக படுகிறது! என்னை பற்றி நீங்கள் சொல்வதெல்லாம் ”அங்க” தொடச்சு போடுற டிஸ்யூ பேப்பர் மாதிரி திரும்பி கூட பார்க்க மாட்டேன்!

தமிழ் பொண்ணு said...

போட்டோ ல இருக்குறது உங்க மண்டையா?

smart said...

//இப்ப உங்க பதிவின் படி பதிவுக்கு இருக்கும் மரியாதையைவிட பதிவருக்கு இருக்கும் மரியாதைதான் பெரிதாகக் கருதப்படுகிறது? //
pathil puriyapadala
Repeat?

வால்பையன் said...

//போட்டோ ல இருக்குறது உங்க மண்டையா? //

எப்படி இவ்வளவு சரியா கண்டுபிடிச்சிங்க!
நீங்க எல்லாரும் செத்த பிறகு கடைசியா நான் செத்ததால என் மண்டையோடு மட்டும் இருக்கு!

Santhappanசாந்தப்பன் said...

பிறந்த நாளுக்கும், 600-அடிச்சதுக்கும் வாழ்த்துக்கள்.

செவ்விந்திய கவிதை சூப்பர்...

தமிழ் பொண்ணு said...

mm smart boy mathiri alum erukanga.so entha comment thappu.
//இப்ப உங்க பதிவின் படி பதிவுக்கு இருக்கும் மரியாதையைவிட பதிவருக்கு இருக்கும் மரியாதைதான் பெரிதாகக் கருதப்படுகிறது? //

வால்பையன் said...

//இப்ப உங்க பதிவின் படி பதிவுக்கு இருக்கும் மரியாதையைவிட பதிவருக்கு இருக்கும் மரியாதைதான் பெரிதாகக் கருதப்படுகிறது? //
pathil puriyapadala
Repeat?//


பதிவை தப்பா புரிஞ்சிகிட்டிங்கன்னு சொல்றாங்க!

smart said...

நான் என்ன சொல்ல வரேன்னா உங்க பலோயர்ஸ் எல்லாம் நீங்க அவுங்கள பலோ பண்ணுறதால ஒரு பரஸ்பர மரியாதைக்காக பலோ செய்கிறார்கள் என்கிறேன்.
நீங்க புதுசா ஒரு ப்ளாக் அரம்பிச்சென்கன அதுல எல்லாரும் கழண்டுவிடுவாங்கன்னு சொல்றேன்

sriram said...

//வாலண்ட்ரியா வந்து ஜீப்புல ஏறுனா நான் என்ன செய்யுறது!?
யாகம் வளர்த்தா சூடாகாம குளுகுளுன்னு இருக்குமாக்கும்!//

அது உங்களை கலாய்க்கப் போட்ட பின்னூட்டம் அருண், சிரிப்பான் போட்டிருந்தேனே பாக்கலியா? நீங்க சூடாதீங்க...

on a serious note, yes the smoke from the Yaagams will make the environment cooler.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வால்பையன் said...

//நான் என்ன சொல்ல வரேன்னா உங்க பலோயர்ஸ் எல்லாம் நீங்க அவுங்கள பலோ பண்ணுறதால ஒரு பரஸ்பர மரியாதைக்காக பலோ செய்கிறார்கள் என்கிறேன்.
நீங்க புதுசா ஒரு ப்ளாக் அரம்பிச்சென்கன அதுல எல்லாரும் கழண்டுவிடுவாங்கன்னு சொல்றேன் //


நான் என்ன கலைக்டரா? மந்திரியா தனி மனுசனுக்கு மரியாதை கொடுக்குறதுக்கு, அனைவரையும் எனக்கு என் ப்ளாக்காலே அறிமுகமானவர்கள் தான்!, நான் புதுசா ப்ளாக் ஆரம்பிச்சு யாரையும் வாங்கன்னு கூப்பிடல, இந்த ப்ளாக்குக்கும் வாங்கன்னு கூப்பிடல, வந்த நண்பர்களுக்கு நன்றி சொல்வதும், அவுங்க ப்ளாக்குக்கு நான் பாலோயர் ஆவதும் என் பழக்கம்!

தமிழ் பொண்ணு said...

//நான் என்ன சொல்ல வரேன்னா உங்க பலோயர்ஸ் எல்லாம் நீங்க அவுங்கள பலோ பண்ணுறதால ஒரு பரஸ்பர மரியாதைக்காக பலோ செய்கிறார்கள் என்கிறேன்//
unga idea yarukum solli kudukathenga please pa...

வால்பையன் said...

ஸ்மார்ட் பதிவில் கேட்ட கேள்வி

/// அதே போல் எங்களுக்கு கீழேயும் யாருமில்லை என்று நினைக்கிறோம் ///

Can u explain these, Mr.Vaal ?//


மேல யாருமில்லைன்னு நினைக்கிறார் வால்ன்னு என்ன அர்த்தத்துல சொன்னாங்களோ, அதே அர்த்தம் தான் எனக்கு கீழே யாருமில்லை என்பதற்க்கும்!
உங்களுக்கு விளக்கம் சொல்லியே எனக்கு வயசாயிரும் போலயே!

VISA said...

மழை பொழிந்தது...
நான் குடை கொண்டு வராத போது....

இது அவநம்பிக்கை.

குடை கொண்டு வரவில்லை.
நல்ல வேளை மழை பெயதது

இது தன்னம்பிக்கை.

அய்யயோ ரொம்ப உளறிட்டனோ....

ஈரோடு கதிர் said...

மரம் வளர்ப்பது குறித்து நல்லதொரு சிந்தனை

வால்பையன் said...

//on a serious note, yes the smoke from the Yaagams will make the environment cooler.//


நாங்க கூட இரவு நேரத்தில் கொசு விரட்ட யாகம் நடத்துவோம், அது போல இருக்கலாம்!

smart said...

//மேல யாருமில்லைன்னு நினைக்கிறார் வால்ன்னு என்ன அர்த்தத்துல சொன்னாங்களோ, அதே அர்த்தம் தான் எனக்கு கீழே யாருமில்லை என்பதற்க்கும்!
உங்களுக்கு விளக்கம் சொல்லியே எனக்கு வயசாயிரும் போலயே//
boss enakku munadiyae kelvikku oru fast response.

வால்பையன் said...

குடை கொண்டு வரவில்லை.
நல்ல வேளை மழை பெயதது

இது தன்னம்பிக்கை.//


”குடை கொண்டுவந்தேன்”

என இருந்தால் சரியான பொருள் தரும்னு நினைக்கிறேன் தல!

வால்பையன் said...

//
boss enakku munadiyae kelvikku oru fast response.//


என்ன கேள்வி?

smart said...

//
boss enakku munadiyae kelvikku oru fast response.//


என்ன கேள்வி?

கேள்வி அல்ல ஒரு ஆச்சர்யம்

வால்பையன் said...

//கேள்வி அல்ல ஒரு ஆச்சர்யம்//

உரையாடல் பல விசயங்களை கற்றுகொடுக்கவும், குழப்பங்களை தெளிய வைக்கவும் செய்கிறது!, அதனால் அதை விரும்பி செய்கிறேன்!
மொக்கை போட்டால் தான் பதில் சொல்ல கொஞ்சம் டயர்டாய் இருக்கு!

தமிழ் பொண்ணு said...

vaal paya na vena en vaal chellathuku boost,horlicks,complan vangi tharava?

வால்பையன் said...

//vaal paya na vena en vaal chellathuku boost,horlicks,complan vangi tharava? //

ஏன் இந்த கொலைவெறி!

தமிழ் பொண்ணு said...

//மொக்கை போட்டால் தான் பதில் சொல்ல கொஞ்சம் டயர்டாய் இருக்கு//vaal paya na vena en vaal chellathuku boost,horlicks,complan vangi tharava?

smart said...

//மொக்கை போட்டால் தான் பதில் சொல்ல கொஞ்சம் டயர்டாய் இருக்கு//
இதைப்போலத் தானே ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை விவாதிக்கையில் உங்க அபிமானிகள் வந்து மொக்கை போடுவாங்க மற்றும் அட்டடன்ஸும் போடுவாங்க
அப்ப எங்களுக்கு எப்படி டயாடு இருந்துருக்கும்?

வால்பையன் said...

//இதைப்போலத் தானே ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை விவாதிக்கையில் உங்க அபிமானிகள் வந்து மொக்கை போடுவாங்க மற்றும் அட்டடன்ஸும் போடுவாங்க
அப்ப எங்களுக்கு எப்படி டயாடு இருந்துருக்கும்? //

விவாதத்தில் மட்டும் நான் கவனம் செலுத்துவேன்! அது இல்லாத போது தான் மொக்கை! எனது கமெண்டுகளை சரியாக கவனிக்கவும்!

தமிழ் பொண்ணு said...

நீங்க மேலும் இது போல் வளர வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

//நீங்க மேலும் இது போல் வளர வாழ்த்துக்கள். //

எங்க வால் மட்டும் தான் வளர்ந்துகிட்டே போகுது!

smart said...

//madurai ponnu said...//
ஐயையோ அக்கா, நீங்க போட்டோவ போட்டு மாட்டிக்கிட்டேங்களே

தமிழ் பொண்ணு said...

smart boy na daily oru photo vaipen..

மன்னார்குடி said...

பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் வால்

:)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

600 fஃலோவர்ஸ் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்....

Suhasini said...
This comment has been removed by the author.
தேசாந்திரி-பழமை விரும்பி said...
This comment has been removed by the author.
தேசாந்திரி-பழமை விரும்பி said...

வருத்தமான விஷயம் தான். விளைநிலங்களும் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன.
முன்னதில் எழுத்துப் பிழை :(
அதான் அழித்து விட்டேன்.

thamizhparavai said...

’வால்’த்துக்கள்...

இராகவன் நைஜிரியா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பா. (லேட்டா சொல்வதற்கு மன்னிக்கவும்.)

// "கடைசி மரமும் வெட்டுண்டு,கடைசி நதியும் வரண்டு ,கடைசி மீனும் மாண்டுவிடும்அப்போதுதான்பணத்தைச் சாப்பிட முடியாது என்று நமக்கு உறைக்கும் " //

இயற்கையை காப்பாற்ற வேண்டும் என மிக அழகாகச் சொல்லிவிட்டார்.

Chitra said...

600 + wow! congrats!

BALA said...

மெயிலில் வாழ்த்து சொன்ன என்னை கருணை இல்லாமல் கலாய்த்ததற்கு பகிரங்கமாய் மன்னிப்பு கேட்குமாறு மக்கள் மன்றத்தின் முன் மன்றாடுகிறேன்! ;)

www.balavin.wordpress.com

Romeoboy said...

கஜினி ரீமேக் கவிதை ...

700+ பலோயர்ஸ் பெற்று பெருவாழ்வு வாழ்க ..

க ரா said...

குவியல் நல்லா இருக்கு வால்.

Sangamithra said...

Hi
I 'm not your follower or in orkut. But I like your writings and policies . Can you include me ?(not in life).
Thanks
Sangamithra

cheena (சீனா) said...

வாலு,

இங்கேயும் நான் இருக்கேன் - ஆர்குட்லேயும் அறுநூறு தாண்டிய உன்னொட நானும் இருக்கேன்

அப்புறம் குவியல் நல்லா இருக்கு

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

நமக்கெல்லாம் உறைக்கவே உறைக்காது

நானும் இருப்பதால் மழை பெய்கிறது - சரி

நல்வாழ்த்துகள் வாலு
நட்புடன் சீனா

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அருண்...

sathishsangkavi.blogspot.com said...

அருமை வால்......

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் Arun

மேவி... said...

congrats dude. keep rocking

அஷீதா said...

Hi....

vaazhthukkal!

meendum vaazhthhukkal and all the best for aayiram followers:))

ungal payanam vetriyadaya vaazhthukkal matrum ennudaiya prarthanaigal.

pichaikaaran said...

நான் இருப்பதால் மழை பெய்கிறது என்பது தலைகனம் அல்ல,,, அதுதான் எதார்த்தம்...

" நான் " இல்லாவிட்டால், மழை பெய்யாது... சற்று யோசித்து பாருங்கள் : -)

சுதாகர் said...

வாழ்த்துக்கள் நண்பரே......

பனித்துளி சங்கர் said...

//////"கடைசி மரமும் வெட்டுண்டு,
கடைசி நதியும் வரண்டு ,
கடைசி மீனும் மாண்டுவிடும்
அப்போதுதான்
பணத்தைச் சாப்பிட முடியாது என்று நமக்கு உறைக்கும் "/////////


சிந்திக்கவேண்டிய வரிகள் நண்பரே . பகிர்வுக்கு நன்றி

சாமக்கோடங்கி said...

பிறந்த நாளுக்கும் அறுநூறுக்கும் வாழ்த்துக்கள்.. சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. ப்ளாகில் நான் உள்ளே வரக் காரணமே உங்கள் பதிவைப் படித்ததுதான்.. என் முதல் பின்னூட்டம் உங்களுக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை.. என் அண்ணன் தான் முதன் முதலில் உங்கள் பதிவைக் காட்டி நீயும் உன் கருத்தை தைரியமாக எழுதலாம் என ஊக்கப் படுத்தினார்..

வெயில் முடிந்தவுடன் நண்பர்களுடன் மற்றும் பக்கத்து கிராம சிறுவர்களுடன் சேர்ந்து நிறைய மரங்கள் நட ஆயத்தமாக உள்ளோம்..
எங்கள் அலுவலகத்தில் வேலை பார்ப்போருக்கும் வீட்டுக்கு இரண்டு மரக் கன்றுகள் கொடுத்து அதன் தனித்தன்மைகளை விளக்க தேவையான நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டேன்..

என்னுடைய பதிவுகளிலும் தொடர்ந்து அதையே வலியுறுத்துகிறேன்..

பாத்திமா ஜொஹ்ரா said...

வாழ்த்துகள்

பாத்திமா ஜொஹ்ரா said...

http://vanjoor-vanjoor.blogspot.com/2010/04/audio.html

தனி காட்டு ராஜா said...

//என் வீட்டுக்கு முன் நாலு மரம் வச்சிருக்கேன்! புதுசா ரெண்டு வேப்பங்கன்னு நட்டு வச்சிருக்கேன்! //

நானும் கூடதான் என் வீட்டுக்கு முன் நாலு மரம் வச்சிருக்கேன்! புதுசா ரெண்டு வேப்பங்கன்னு நட்டு வச்சிருக்கேன்!
ஆனா பைக் வைச்சுருக்கேன் ,கார் வைச்சுருக்கேன் , கார் பைக் கைவிட நான் அதிகமா புகை விடுவேன் .........
பத்து மரத்த வெட்டி வீடு கட்டிருக்கேன் ........
எல்லா வசதி வாய்ப்பையும் நான் அனுபவிகனும் ........எப்படியோ நான் தான் நாலு மரம் வச்சிருக்கேனே....தைரியமா வெப்பமயமாதல் பத்தி பேசலாம்.......
எல்லாத்துக்கும் மனுசக தான் காரணம் .......நான் இல்ல .........

-இப்படிக்கு எல்லாத்துக்கும் நான் காரணமல்ல ....மனிதர்கள் தான் காரணம் என நெனைக்கும் என் புத்தி .........

Sabarinathan Arthanari said...

@வால்

கும்ம ஒரு சரியான விசயம். [பிரச்சிணை கோடிகணக்கில்]

http://vimarisanam.wordpress.com/2010/04/05/20000-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/

http://vimarisanam.wordpress.com/2010/04/07/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81/

http://vimarisanam.wordpress.com/2010/04/09/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

http://vimarisanam.wordpress.com/2010/04/11/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-3-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9/

சுதாகர் said...

@Sabarinathan Arthanari
//http://vimarisanam.wordpress.com//
இடுக்கைகளுக்கான சுட்டிகளை அளித்தமைக்கு நன்றி.......

மங்குனி அமைச்சர் said...

//நீங்கள் எனக்கு பாலோயராக இருந்து நான் உங்களுக்கு பாலோயராக இல்லையென்றால் தயவுசெய்து தெரியபடுத்தவும்!,///

உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு


//ஒரு நொடியில் அவன் மொத்த உயிரினங்களையும் அழித்து பூமிக்கு சமாதி கட்டிட்டு தான் மறு வேலை பார்ப்பான்! //

அப்புறம் மனுசனா பொறந்தது என்னா புண்ணியம்

நசரேயன் said...

தாமத பிறந்த நாள் வாழ்த்துக்கள்

priyamudanprabu said...

//உங்கள் கடனை அடைக்க குறைந்த பட்சம் ஒரு மரமாவது நட்டு வளருங்களேன்!//
\

நல்லது

mohamedali jinnah said...

தேவையானதை மட்டும் பகிர்ந்து கொண்டாலும் என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி!-வால்பையன்

அன்பிற்கு அளவு இல்லை,தேவை அளவுக்கு உட்பட்டது . நன்றி .

!

Blog Widget by LinkWithin