குவியல்!..(18.03.10)

எனது மெயில் ஐடியை ஹேக் செய்யும் பணி வெகு தீவிரமாக நடந்து கொண்டிருப்பது தெரிகிறது! எல்லாம் வல்ல கடவுள் அவர்களுக்கு துணை நின்று எப்படிவாது ஹேக் செய்து அவர்களது வெற்றியை நிலை நாட்டுவாராக, அப்படி இல்லையென்றால் அந்த கடவுளையே அவர்கள் ஹேக் செய்யக்கூடும், இப்போ இருக்கும் மதவாதிகள் அவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள், என் பங்கிற்கு நானும் யார் முயற்சி செய்தது, எங்கிருந்து செய்தது என கூகுளுக்கு ஒரு கம்ப்ளையண்ட் அனுப்பலாம்! மனநோயாளிகள் காயப்படக்கூடாது என்பதற்காக பிழைத்து போகட்டும் என விடுகிறேன், ஆனால் அடுத்த முறையும் என்னிடம் இந்த கரிசனத்தை எதிர்பார்க்க முடியாது, சொல்லிபுட்டேன் அம்புட்டு தான்!


பிற்சேர்க்கை: ஏற்கனவே மார்சி மாதம் மூன்றாம் தேதி இரண்டு முறை முயன்றுள்ளார்கள், இன்றைக்கு மட்டும் மூன்று முறை, இதை அப்படியே கூகுளுக்கு அனுப்பி அந்த பன்னாடை யாரென்று கண்டுபிடிக்க ரொம்ப நேரம் ஆவாது, புள்ளகுட்டிங்களை படிக்க வைக்கிற வேலைய பாருங்க!, இன்னொரு விசயம் இரண்டாம் தேதி தான் நித்தி டவுசர் கிழிஞ்சு போச்சுன்னு ஒரு பதிவு போட்டேன், இது சாருவோட அல்லக்கைகளின் வேலையா கூட இருக்கலாம், எப்படி பார்த்தாலும் ரெண்டும் ஒன்னு தான், சாருவுக்கு அல்லக்கை, நித்தியாவுக்கு சொம்பு தூக்கி! ஆராய்ச்சிக்கு அவனோட பொண்டாட்டி! நல்லாவாருக்கு இப்படியெல்லாம் எழுதவைக்க!
****************

என் மகள் படிக்கும்பள்ளியில் சில நாட்களுக்கு முன் வரவேற்பு ப்ளாக்போர்டில் எழுதியிருந்த வாசகம் என்னை கவர்ந்திருந்தது, நானும் எழுதனும்னு ரொம்ப நாளா நினைச்சிகிட்டு இருந்தேன், ஆனா மறந்து மறந்து போயிடறது, இன்னைக்கு அதுக்காகவே குவியல்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கல்வி நலன் கருதி, வண்ண உடை அணிவித்தல், கோவிலுக்கு கூட்டி செல்லுதல், மாலை போடுதல் போன்ற நிகழ்வுகளை தவிர்க்கவும் என்றிருந்தது!

குழந்தைக்ள் கல்வியில் அக்கறை காட்டும் பள்ளியில் என் மகள் படித்து கொண்டிருக்கிராள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி மற்றும் பெருமையும் கூட!

*****************

படித்ததில் பிடித்தது

மலேசியாவை சேர்ந்த தோழர் பாலமுருகனின் இந்த சினிமா விமர்சனம் நன்றாக இருந்தது.

செல்வேந்திரனின் பரிசலின் “டைரிகுறிப்பும் காதல் மறுப்பும்” சிறுகதை தொகுப்பிற்கான விமர்சனமும், அதை தொடர்ந்து நடைபெற்ற பின்னூட்ட விவாதத்தின் பதிலும் நல்ல வாசிப்பனுபவமாக இருந்தது!

*****************

தருமி அய்யா, என்னை பதின்மவயது குறிப்புகள் தொடர் எழுத அழைத்திருந்தார், பதின்ம வயதில் நான் வேலைக்கு போக ஆரம்பித்து விட்டேன்!, சில வித்தியாசங்கள் தவிர

ஒன்பது வயதில் முதன் முதல் தம்மடித்தேன்,

பதினொரு வயதில் பீர் அடித்தேன்,

பன்னிரெண்டு வயதில், வயதுக்கு வந்தேன்,

பதினாலு வயதில் அதை ஒரு ஆண்ட்டிக்கு நிரூபித்தேன்.

இதை தவிர நீங்கள் செய்த அதே சேட்டைகளை தான் நானும் செய்தேன்!

***********************

நண்பரின் பித்தனா, சித்தனா என்ற வலைப்பூவில் பார்த்த இந்த யூடியூப் வீடியோ கொள்ளை அழகு, உங்களுக்கும் பிடிக்கும் என்பதால் இங்கேயும் பகிர்வு!
************************

88 minutis

இரண்டு நாள் முன்பு ஸ்டார் மூவீஸில் இரவு 12 மணிக்கு இந்த படம் பார்த்தேன்!
the game என்ற படத்திற்கு பிறகு திரைக்கதையில் என்னை அசரடித்த படம்,
al pasino நடிப்பை பற்றி ஆங்கில பட பிரியர்களுக்கு நான் தனியாக சொல்ல வேண்டியதில்லை, ஆனால் ”செண்ட் ஆஃப் வுமன்” படத்துடன் ஒப்பிடுகையில் இந்த படத்தில் நடிப்புக்கு வேலை குறைவு தான், ஆனால் திரைக்கதை அனைத்தும் தூக்கி சாப்பிட்டு விடுகிறது! எதிர்பாராத திருப்பங்களும், கட்டில்! நுனியில் அமர வைக்கும் சஸ்பென்ஸும் கண்டிப்பாக அனைவரும் ரசிக்க வேண்டிய ஒன்று!********************

குட்டி கவிதை(மாதிரி)

இருளுக்குள்
மயக்கம் உண்டு
கருப்பே
நிறைந்த வர்ணம்
வெளியே
உள் அழைக்கும்
பின்புறமும்
உனக்கே சொந்தம்
முரண்பாடே வாழ்க்கை

72 வாங்கிகட்டி கொண்டது:

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அய்யா நான்தான் பர்ஸ்ட் !

மீண்டும் வருவான் பனித்துளி !

ராஜன் said...

//செல்வேந்திரனின் பரிசலின் “டைரிகுறிப்பும் காதல் மறுப்பும்” சிறுகதை தொகுப்பிற்கான விமர்சனமும், அதை தொடர்ந்து நடைபெற்ற பின்னூட்ட விவாதத்தின் பதிலும் நல்ல வாசிப்பனுபவமாக இருந்தது!//இருந்திருக்குமே !

ராஜன் said...

//பன்னிரெண்டு வயதில், வயதுக்கு வந்தேன்,//

சக்கர வள்ளிக் கேளங்கே நீதான் சமஞ்சது எப்பிடி !

ராஜன் said...

//பதினாலு வயதில் அதை ஒரு ஆண்ட்டிக்கு நிறுப்பித்தேன்.//

விலாசம் கெடைக்குமா ?

பிரேமா மகள் said...

கவிதை நன்று...

ராஜன் said...

கவித தான் புரியல தல ! எனக்கு அவ்வளவு சரக்கு மண்டைல இல்ல சாரி

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

////////// எனது மெயில் ஐடியை ஹேக் செய்யும் பணி வெகு தீவிரமாக நடந்து கொண்டிருப்பது தெரிகிறது! எல்லாம் வல்ல கடவுள் அவர்களுக்கு துணை நின்று எப்படிவாது ஹேக் செய்து அவர்களது வெற்றியை நிலை நாட்டுவாராக, அப்படி இல்லையென்றால் அந்த கடவுளையே அவர்கள் ஹேக் செய்யக்கூடும் /////////////


ஏலே என்னால இது !
இப்படித்தான் விளம்பரம் பண்ணனுமா ? தெரியாம போச்சே இத்தனை நாளா !

Dr.P.Kandaswamy said...

வால் பையன் அவர்களுக்கு,

மெயில் ஐ.டி.யை ஹேக் செய்து என்ன செய்வார்கள்?

நண்பர்களுக்கு பணம் அனுப்பச்சொல்லி கேட்பார்களா?

என் நண்பர்கள் எல்லாம் விளைந்த கட்டைகள். நானே நேரில் போய்க் கேட்டால் கூட நயாபைசா பெயராது.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////////என் மகள் படிக்கும்பள்ளியில் சில நாட்களுக்கு முன் வரவேற்பு ப்ளாக்போர்டில் எழுதியிருந்த வாசகம் என்னை கவர்ந்திருந்தது, நானும் எழுதனும்னு ரொம்ப நாளா நினைச்சிகிட்டு இருந்தேன், ஆனா மறந்து மறந்து போயிடறது, இன்னைக்கு அதுக்காகவே குவியல்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கல்வி நலன் கருதி, வண்ண உடை அணிவித்தல், கோவிலுக்கு கூட்டி செல்லுதல், மாலை போடுதல் போன்ற நிகழ்வுகளை தவிர்க்கவும் என்றிருந்தது!

குழந்தைக்ள் கல்வியில் அக்கறை காட்டும் பள்ளியில் என் மகள் படித்து கொண்டிருக்கிராள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி மற்றும் பெருமையும் கூட!//////////////

அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் .

க.பாலாசி said...

எல்லாஞ்சரி....

யோ வொய்ஸ் (யோகா) said...

மெயில் ஹேக் பண்ண விட்டு விட வேண்டாம் தல.

கவிதையை நன்றாக ரசித்தேன்

மதுவதனன் மௌ. / cowboymathu said...

வால்..
நிறுப்பித்தேன் அல்ல..நிரூபித்தேன்.

நிறுப்பித்தேன் என்பது ஏதோ.. ஆன்டிக்கு நிரூபிக்கப் போய் நிறுத்திப்போட்டு வந்தமாதிரி ஒரு கருத்தைக் கொடுக்கிறமாதிரி இருக்கு.. :)))
:))

கார்த்திகைப் பாண்டியன் said...

சினிமா பற்றிய அறிமுகங்களுக்கு நன்றி தல..

பட்டாபட்டி.. said...

@வால் பையன்
தருமி அய்யா, என்னை பதின்மவயது குறிப்புகள் தொடர் எழுத அழைத்திருந்தார், பதின்ம வயதில் நான் வேலைக்கு போக ஆரம்பித்து விட்டேன்!, சில வித்தியாசங்கள் தவிர

ஒன்பது வயதில் முதன் முதல் தம்மடித்தேன்,

பதினொரு வயதில் பீர் அடித்தேன்,

பன்னிரெண்டு வயதில், வயதுக்கு வந்தேன்,

பதினாலு வயதில் அதை ஒரு ஆண்ட்டிக்கு நிறுப்பித்தேன்.

இதை தவிர நீங்கள் செய்த அதே சேட்டைகளை தான் நானும் செய்தேன்!
//

இதைவிட சுருக்கமாக சொல்லமுடியாது..

நச் வரிகள்..

தாமோதர் சந்துரு said...

வாலூ அந்த் வீடியோவை நம்ம பழமை பதிவுல பாத்த மாதிரி ஞாபகம்.

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

கவிதை..!! ஒன்னும் புரியல தல..

Chitra said...

:-)

சைவகொத்துப்பரோட்டா said...

பதின்ம வயது நினைவுகள்............. :))

Subankan said...

// எல்லாம் வல்ல கடவுள் அவர்களுக்கு துணை நின்று எப்படிவாது ஹேக் செய்து அவர்களது வெற்றியை நிலை நாட்டுவாராக//

:)))

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நல்ல அவியல்..:))

புலவன் புலிகேசி said...

சர்தேன்.....

வால்பையன் said...

ப்ளாக்குலயே தெளிவா எழுதியும் இன்னும் கூகுள் பாஸ்வேர்டை ஹேக் பண்ன இப்ப கூட ட்ரை பண்றானுங்க, ஒருவேளை நித்தியானந்தரை கூப்பிட்டு எதாவது ஸ்பெஷல் பூஜை போட்டிருப்பானுங்களோ!

அடேய் மாங்கா மடையனுங்களா, நீங்க செட்டிங்க்ஸ்குள்ள போனாலே எனக்கு மெயில் வந்துருமடா, படிச்சும் புத்தியில்லாம இருக்கிங்களே, உங்களையெல்லாம் எத கொண்டு அடிக்கிறதுன்னே தெரியலயே!

D.R.Ashok said...

பதின்ம வயசுல எல்லா வால் பசங்களும் அப்படிதானோ...?

குவியல் நல்லதொர் திருப்பதியான குளியல்

தர்ஷன் said...

//பதினாலு வயதில் அதை ஒரு ஆண்ட்டிக்கு நிறுப்பித்தேன்.//

சரியாகத்தான் பேர் வைத்திருக்கிறீர்கள் வால்

SanjaiGandhi™ said...

//எதிர்பாராத திருப்பங்களும், கட்டில்! நுனியில் அமர வைக்கும் சஸ்பென்ஸும் //

என் ஊட்ல கோரப்பாய் தான் இருக்கு.. அப்போ நான் எங்க நகரனும்?

ஸ்ரீ.கிருஷ்ணா said...

hack பண்ணி வால் பையன் 2 ன்னு ப்ளாக் போட பண்றாங்க ...

குடுகுடுப்பை said...

அதுக்குதான் எல்லாருக்கும் ரவுடியா இருக்ககூடாது, ரவுடி சொல்லிக்கனும் ஆனா ஓரவஞ்சனை ரவுடியா இருக்கனும்.

chinnappenn2000 said...

ஒன்பது வயதில் முதன் முதல் தம்மடித்தேன்,

//பதினொரு வயதில் பீர் அடித்தேன்,

பன்னிரெண்டு வயதில், வயதுக்கு வந்தேன்,

பதினாலு வயதில் அதை ஒரு ஆண்ட்டிக்கு நிரூபித்தேன்.

இதை தவிர நீங்கள் செய்த அதே சேட்டைகளை தான் நானும் செய்தேன்!//

எல்லாம் சரி தான்.என்னிக்கு வால் முளைத்தது?என்னிக்கு பயித்தியம் பிடித்தது.அதை சொல்லாம மறச்சுட்டீங்களே.

Uma said...

:)

முகிலன் said...

குவியல் நல்லாருக்குண்ணே..

வால்பையன் said...

எனது மெயில் ஐடியை ஹேக் செய்ய முயன்றதற்கான ஆதாரம் போட்டோ வடிவில் பதிவில் சேர்க்கப்பட்டுள்ளது!

நீச்சல்காரன் said...

For your information

http://www.labnol.org/internet/email/google-account-hacked-gmail-password-change

செல்வேந்திரன் said...

'நள்ளிரவு நயாகரா’ பற்றிய குறிப்புகளை எதிர்பார்த்து ஏமாந்தேன் :)

வால்பையன் said...

// செல்வேந்திரன் said...

'நள்ளிரவு நயாகரா’ பற்றிய குறிப்புகளை எதிர்பார்த்து ஏமாந்தேன் :)//


தல, கமெண்டு எதாவது மாத்தி போட்டுடிங்களா?

எனக்கு தெரிஞ்சதெல்லாம் வயாகரா(நித்தி உபயம்) தான், நயாகரா எங்கிருக்குனு கூட எனக்கு தெரியாதே!

ஜெட்லி said...

ரைட்...அண்ணே...
உங்க பதின்ம வயசு பத்தி இன்னும்
விலாவரியா சொன்ன நல்லா இருக்கும்...

Mrs.Menagasathia said...

கவிதை அருமை வால்!!

Nataraj said...

வாலு..நீங்களாவது நாடறிஞ்ச பதிவர்..என் id யா திணற திணற ஹாக் செய்ய முயற்சிக்கிறார்கள்..எதாவது nigeria scam க்ரூப்பின் வேலையா இருக்குமோ (எல்லா கிரெடிட் கார்டு ஸ்டேட்மண்டும் மெயிலுக்கு தானே வருது) என்று நினைக்கிறேன்.

நெக்ஸ்டு, செல்வேந்திரனின் கமெண்ட் + பின்வாதங்கள் அருமுகபடுதியதற்கு நன்றி. சாம்ப்ராஸ், அகாசி ace சர்வீஸ் + ரிடர்ன் போல் அவை நன்று..

ஆன்ட்டியின் 'விலாசம்' கேட்ட நண்பரின் நகைச்சுவை வாழ்க..(எத்தனை பேருக்கு அதன் source வைதேகி காத்திருந்தாள் context புரிந்திருக்கும் என்று தெரியவில்லை). ஆமா, ஆன்ட்டி மேட்டர் உண்மையா இல்லை நெக்ஸ்டு சாரு ஆகா ட்ரை பண்றீங்களா?

ரோஸ்விக் said...

குவியல் நல்லா இருக்கு வால்...

~~Romeo~~ said...

நீங்க எழுதி இருந்த பதின்ம தொடரை பார்த்து இனி யாரும் உங்களை தொடர் எழுத சொல்லி கூப்பிடமாட்டாங்க தல.

நல்ல எழுதுறாருயா தொடர் பதிவ .... நர நர நர ...

அது சரி said...

//
இப்போ இருக்கும் மதவாதிகள் அவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள்
//

மதவியாதிகளுக்கும் மனநோயாளிகளுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை...ரெண்டும் ஒண்ணு தான்!

smart said...

உங்க பிளாக்க ஹக் பண்ண பாஸ்வோர்ட் எல்லாம் போட்டுப்பார்க்க வேண்டியதில்லையே அதுக்கு வேற வழியிருக்கே! அதுகூட தெரியாமல் ஒருத்தர் பண்ணியிருந்தா சும்மா ட்ரைப் பண்ணியிருப்பார்.
அதுக்குமேல உங்க பிளாக்ல பெரிய பெரிய பகுத்தறிவு சமாச்சாரம் எல்லாம் இருக்குனு நினைக்கிறேங்களா?

அது சரி said...

//
ஒன்பது வயதில் முதன் முதல் தம்மடித்தேன்,

பதினொரு வயதில் பீர் அடித்தேன்,

பன்னிரெண்டு வயதில், வயதுக்கு வந்தேன்,

பதினாலு வயதில் அதை ஒரு ஆண்ட்டிக்கு நிரூபித்தேன்.
//

இரண்டுக்கும் நடுவில் இடைவெளி வேண்டும்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க போலருக்கே...ஏன் ஒவ்வொரு மேட்டருக்கும் நடுவுல இவ்ளோ கேப்பு??

அது சரி said...

//
ராஜன் said...
கவித தான் புரியல தல ! எனக்கு அவ்வளவு சரக்கு மண்டைல இல்ல சாரி

//

ஓஹோ...இது தான் கவிதையா...கரீக்டா கண்டு புடிக்கிறீங்களே :0))))

அது சரி said...

//
ஜெட்லி said...
ரைட்...அண்ணே...
உங்க பதின்ம வயசு பத்தி இன்னும்
விலாவரியா சொன்ன நல்லா இருக்கும்...

//

ஏங்க இப்படி??

இதுக்கு மேல வெலாவாரியா சொன்னா சென்ஸார்ல கட் ஆகிடும்...:0))))

பிரியமுடன் பிரபு said...

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கல்வி நலன் கருதி, வண்ண உடை அணிவித்தல், கோவிலுக்கு கூட்டி செல்லுதல், மாலை போடுதல் போன்ற நிகழ்வுகளை தவிர்க்கவும் என்றிருந்தது!

குழந்தைக்ள் கல்வியில் அக்கறை காட்டும் பள்ளியில் என் மகள் படித்து கொண்டிருக்கிராள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி மற்றும் பெருமையும் கூட!///

எந்த பள்ளிக்கூடம் வால்??
?
?

பிரியமுடன் பிரபு said...

Blogger வால்பையன் said...

ப்ளாக்குலயே தெளிவா எழுதியும் இன்னும் கூகுள் பாஸ்வேர்டை ஹேக் பண்ன இப்ப கூட ட்ரை பண்றானுங்க, ஒருவேளை நித்தியானந்தரை கூப்பிட்டு எதாவது ஸ்பெஷல் பூஜை போட்டிருப்பானுங்களோ!

அடேய் மாங்கா மடையனுங்களா, நீங்க செட்டிங்க்ஸ்குள்ள போனாலே எனக்கு மெயில் வந்துருமடா, படிச்சும் புத்தியில்லாம இருக்கிங்களே, உங்களையெல்லாம் எத கொண்டு அடிக்கிறதுன்னே தெரியலயே!
///

ஹ ஹா

நேசமித்ரன் said...

:)

தமிழரசி said...

பள்ளிக்கூடத்தில் தகவல் அனைவரும் பயில வேண்டிய ஒன்று..

பதின்ம வயது பளிச்

கவிதை!!!!! நீங்களுமா?

பித்தனின் வாக்கு said...

குவியல் நல்லா இருக்கு வால்ஸ். நான் ஒரு நகைச்சுவை பதிவு போட்டுள்ளேன் படிக்கவும். நன்றி.

இராஜ ப்ரியன் said...

//எனது மெயில் ஐடியை ஹேக் செய்யும் பணி வெகு தீவிரமாக நடந்து கொண்டிருப்பது தெரிகிறது//
புல்லுருவிகள் இப்படித்தான் தாக்க எண்ணுவார்கள் நாமெல்லாம் அதற்கு அஞ்சுகின்ற ஆளா?

கோவி.கண்ணன் said...

//ராஜன் said...

//பதினாலு வயதில் அதை ஒரு ஆண்ட்டிக்கு நிறுப்பித்தேன்.//

விலாசம் கெடைக்குமா ?//

வாலு பொய் சொல்கிறாரான்னு தெரிஞ்சிக்கத் தானே !
:)

கே.பாலமுருகன் said...

எனது சினிமா விமர்சனத்திற்குப் பரவலான வாசிப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.

கூகளின் மூலம் பாதுகாப்பை வலுப்படுத்தவும். பொறாமைக்காரர்களின் கைகள் அரூபமானது. எப்படியும் தீண்டும்.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கூகளின் மூலம் பாதுகாப்பை வலுப்படுத்தவும். பொறாமைக்காரர்களின் கைகள் அரூபமானது. எப்படியும் தீண்டும்.//
கரெக்டு....கரிசனம் வேண்டாம்..தூக்கி போட்டு மிதிங்க....

ராஜன் said...

//வாலு பொய் சொல்கிறாரான்னு தெரிஞ்சிக்கத் தானே !//
இல்ல ! எனக்கு இருபத்தி மூணு ஆகியும் கன்னி கழியாமலே இருக்கனே ! அதுக்கு தான்

காலப் பறவை said...

Nalla irukku vaal :0)))

மாயவரத்தான்.... said...

Excuse me. Your blogger password please!

மாயவரத்தான்.... said...

//எனக்கு இருபத்தி மூணு ஆகியும் கன்னி கழியாமலே இருக்கனே ! அதுக்கு தான்//

Change the spelling please!

வால்பையன் said...

//Excuse me. Your blogger password please! //


************

அடிச்சா இப்படி தான் வருது!

மாயவரத்தான்.... said...

//Nalla irukku vaal :0)))//
வால் தானே? அதுக்கு எதுக்கு இப்படி ஒரு சிரிப்பு? எதோ ஸ்பெல்லிங் mistakeகோட சொன்ன மாதிரி?!

மாயவரத்தான்.... said...

//************

அடிச்சா இப்படி தான் வருது!//

Adangkokkamakka. Ennoda password umakku eppadi therinjichi?!

ராஜன் said...

//அடிச்சா இப்படி தான் வருது!//

சூப்பர் ! அவருக்கு வேற மாதிரி வந்துருக்கும் !

ராஜன் said...

////எனக்கு இருபத்தி மூணு ஆகியும் கன்னி கழியாமலே இருக்கனே ! அதுக்கு தான்//

Change the spelling please!

//

கரெக்டு தான் நீங்க சொல்றது ! நெறையப் பேரு கூச்சப் படராங்கலாம் ! நம்ம இன்டீசன்ட் கமென்ட பாத்து ! அவ்வ்வ்வவ்வ்வ்

மங்குனி அமைச்சர் said...

அந்த ஸ்கூல் மேட்டர் நல்லது சார்

shankar said...

தோழர் வால்பையன் ,

எப்படித்தான் இந்த மாதிரி சரளமா எழுதீரிங்கலோ ,ஒன்னுமே விளங்கலை போங்க ,வாழ்த்துக்கள்

செந்தழல் ரவி said...

எழுத்துபிழை சந்திப்பிழை எல்லாம் பார்க்காமலே சூப்பர் என்று சொல்ல வைத்துவிட்டீர்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பதினாலு வயதில் அதை ஒரு ஆண்ட்டிக்கு நிரூபித்தேன்.]]]

அப்ப வாலு கூடவே பொறந்ததுன்னு சொல்லுங்கண்ணே..

அளவற்ற பொறாமையுடன்
உண்மைத்தமிழன்

வால்பையன் said...

//அப்ப வாலு கூடவே பொறந்ததுன்னு சொல்லுங்கண்ணே..

அளவற்ற பொறாமையுடன்
உண்மைத்தமிழன்//


நான் ஒரு ஹைபிரிட்!
எல்லாமே கொஞ்சம் அட்வான்ஸா தான் போகும்!

மாயவரத்தான்.... said...

//எல்லாமே கொஞ்சம் அட்வான்ஸா தான் போகும்!//

Haiyaiyo!

hayyram said...

///பன்னிரெண்டு வயதில், வயதுக்கு வந்தேன்,

பதினாலு வயதில் அதை ஒரு ஆண்ட்டிக்கு நிரூபித்தேன்.///

என் அன்பு நண்பரே! இதை பெருமையாகச் சொல்கிறீரா! உங்கள் மனைவிக்கு இது தெரியுமா?

வால்பையன் said...

//என் அன்பு நண்பரே! இதை பெருமையாகச் சொல்கிறீரா! உங்கள் மனைவிக்கு இது தெரியுமா?//


தெரியும்!

கிரி said...

அருண் ஹேக் பற்றி கூறி இருந்தீர்கள்.. மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நான் ஹேக் பற்றி ஏற்கனவே பதிவு எழுத நினைத்து இருந்தேன் நேரமில்லாததால் முடியவில்லை.. விரைவில் எழுதுகிறேன்..உங்களுக்கு பயனளிக்கலாம்.

கிரி said...

என்னது மாடரேசன் எல்லாம் போட்டுட்டீங்க! :-))

!

Blog Widget by LinkWithin