மதியம் திங்கள், நவம்பர் 30, 2009

உண்மையிலேயே மாபெரும் சந்திப்பு தான்!

நண்பர் லவ்டேல் மேடியின் திருமணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது!, பல பணிகளுக்கு மத்தியிலும் நண்பர்கள் வெகு தூரத்தில் இருந்து வந்து விழாவை சிறப்பித்தனர், முதல் நாள் இரவிலிருந்தே நண்பர்கள் வரத்துவங்க நானும், பாஸ் கார்த்திக்கும் அவர்களை வரவேற்று அறையில் தங்க வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம்.

முதலில் ஈரோடு வந்து சேர்ந்தது எழுத்தாளார் வாமு.கோமுவும், தோழர் பெரியசாமியும்(அவரே தான்), தோழர்கள் இருவரும் எங்களுக்காக பாரதி பதிப்பகத்தில் காத்து கொண்டிருந்தனர், லாதானந்த் சாரும் ரயிலில் வந்து கொண்டிருந்ததால் மொத்தமாக அழைத்து வர கார்த்திக், காரில் சென்று விட்டார், நான் நேராக அறைக்கு செல்ல அனைவரும் அங்கு வந்து விட்டனர்!, பின் ஒவ்வோருவராக வந்த வண்ணம் இரவு கழிந்தது!

சுவையான உரையாடலுடன் முதல் ஆட்டம் தொடங்கியது, திருப்பூர் நண்பர்கள் நேரடியாக மண்டபத்துக்கு வந்துவிட்டதாகவும், அங்கிருந்து அப்படியே செல்ல இருப்பதாகவும் போன் வந்தது, ஆட்டத்தை பாதியில் நிறுத்தி ஐந்து பேர் கொண்ட குழு முதலில் மண்டபம் கிளம்பியது, அந்த குழுவில் தான் லதானந்த் இருந்தார், சென்றவர்கள் வெகு நேரமாக திரும்பாததாலும், திருப்பூர் நண்பர்களிடமிருந்து போன் வந்து கொண்டேயிருந்ததாலும் இருந்த மூன்று இருசக்கர வாகனத்தில் மீதமிருந்த ஆறு பேர் கிளம்பினோன்!

நாங்கள் செல்லும் வழியிலேயே, ஐந்து பேர் கொண்ட குழு திரும்பி வந்து கொண்டிருப்பதாக போன் வந்துவிட்டது, வழியிலேயே சந்தித்தோம், சில,பல விசயங்கள் நடந்தது எங்களுக்கு அப்போது தெரியாது, லதானந்த் அவர்களின் பதிவை படித்தே நான் தெரிந்து கொண்டேன்!,

இவ்விடத்தில் இதை நான் சொல்லியே ஆகவேண்டும், பெரும்பாலான நண்பர்கள் ”பூஸ்ட்” குடிக்க உட்கார்ந்துட்டா வயசு வித்தியாசம் பார்க்காமல் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்னு நினைச்சிகிட்டு இருக்காங்க, அது தப்புன்னு நான் நினைக்கிறேன்!, நான் டோண்டு சார், தருமி சார் கூட அமர்ந்து கூட பூஸ்ட் சாப்பிட்டிருக்கேன், யாரும் இதுவரை முகம் சுழித்து சென்றதில்லை, நாம் ப்ளாக்கர் என்ற ஒரே விசயத்தில் மட்டும் ஒன்றுபடுகிறோமே தவிர ஒவ்வோருவருக்கும் ஒரு தொழில், வித்தியாசமான குணாதிசியங்கள் உண்டு! அதற்குறிய மரியாதையை தர வேண்டியது நம் கடமை, மீறும் பட்சத்தில் நீங்கள் நிகழ்ச்சிகளில் ஒதுக்கப்படலாம்.(சில பேர், என்னை ஒதுக்குவது போல)


இரவு விடிய விடிய நானும் மாநக்கல் சிபியும் ரம்மி விளையாடிக்கொண்டிருந்தோம், விடியற்காலை சித்தர் சுரேஷிடம் நடந்த வாழ்க்கையும், சீட்டு விளையாட்டு என்ற கட்டுரையும். ஆவியும், ஆசைகளும் என்ற கட்டுரையும் தனியே!, இரவு அறையில் தங்கியிருந்தவர்கள் அப்படியே மண்டபத்துக்கு செல்ல, பகலில் வரத்துவங்கியிருந்த நண்பர்கள் ஒவ்வொருவராக மண்டபம் வரத்தொடங்கியிருந்தனர், வர முடியாத நண்பர்கள் அலைபேசியில் அழைத்து மேடிக்கு வாழ்த்து சொல்லி கொண்டிருந்தனர், குசும்பன் மட்டும் என் போனுக்கு அழைத்து வாழ்த்து சொன்னார்!

இரண்டு மணி நேர அரட்டைக்கு பின் ஒவ்வொருவராக கிளம்பினோம்! மிக இனிதாக அமைந்த அந்த நிகழ்ச்சியை மீண்டும் நடத்த அடுத்த நண்பரின் திருமணத்திற்காக வெயிட்டிங்! கார்த்திகை பாண்டியன், ஸ்ரீதர் பெயர் அடிபடுகிறது, சிவகாசி அன்பு கூட வெகு தீவிரமாக கண்ணில் படும் பெண்களை லவ்வி கொண்டிருக்கிறாராம், குஜராத்தில் இருக்கும் டக்ளஸ் நமிதாவின் உறவுமுறை பெண் எதாவது கிடைக்குமா என்று தேடி கொண்டிருக்கிறார், எப்படியும் நமக்கு விரைவில் திருமண சாப்பாடு உண்டு!

வந்திருந்தவர்கள்!

லதானந்த்
வாமு.கோமு. - தோழர் பெரியசாமி
நாமக்கல் சிபி
கும்க்கி
தியாகு
இளையகவி
வழக்கறிஞர் ராஜசேகரன்
கதிர்-ஈரோடு
பாலாஜி
கோவை சுரேஷ்
சிவாஜி
பெர்ணாண்டஸ் - அவரது சகோதரர்
கார்த்திகைப்பாண்டியன்
ஸ்ரீதர்
அகல்விளக்கு ஜெய்சிங்
ரம்யா - கலை அக்கா - சித்தர் சுரேஷ் - மணி
எ(ஏ)ழுத்தோசை தமிழரசி
ரங்கா
செல்வேந்திரன்
ராஜன் ராதாமணாளன்
கனவுகளின் முகவரி ரீனா
ஊர்சுற்றி ஜோன்சன்
பட்டிகாட்டான் அவரது நண்பர் வசந்த்
திருப்பூர் நண்பர்கள்:
பரிசல்காரன்
வெயிலான்
ஈரவெங்காயம்

யார் பெயராவது விட்டு போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்!

******

ஊர்சுற்றி அவர்கள் தொடுத்துள்ள புகைப்பட ஆல்பம்!

******

வேறு யாராவது இச்சந்திப்பை பற்றி பதிவெழுதியிருந்தால் பின்னூட்டத்தில் லிங்க் கொடுக்கவும்!

54 வாங்கிகட்டி கொண்டது:

தருமி said...

தருமியா .. யாரது?

பூஸ்டா ...அதெல்லாம் என்னங்க ...?

அகல்விளக்கு said...

ஹைய்ய்ய்ய்யாயா...
வந்துட்டன்ல

படிச்சிட்டு வர்றேன்...

அகல்விளக்கு said...

தலைவரே...

க.பாலாசி
கதிர்-ஈரோடு

இரண்டு பேர காணலியே...

cheena (சீனா) said...

அன்பின் வாலு

நான் வரவேண்டியது - இயலவில்லை

ஆமா பூஸ்ட் தருமி கூடவா - எப்ப்பூடி - ம்ம்ம்ம்ம்

நல்ல நேரடி ஒளிபரப்பு

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Raju said...

யோவ்..உங்களுக்கு கல்யாண சாப்பாடு போடுறதுக்கு நான் குஜராத்துல வாழ்க்கபப்படணுமா..?
பிச்சுப்புடுவேன்..பிச்சு.

புலவன் புலிகேசி said...

இதுவரை எந்த பதிவர் சந்திப்பிலும் கலந்து கொள்ள வில்லை. அடுத்து சென்னையில் நடக்கும் போது நிச்சயம் கலந்துக்கனும்னு தோனுது..

வால்பையன் said...

//தருமி said...
தருமியா .. யாரது?
பூஸ்டா ...அதெல்லாம் என்னங்க ...?//

அதெல்லாம் புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா போதும் சார்!

எல்லாமே கோட் வேர்டு தான்!

வால்பையன் said...

//♠ ராஜு ♠ said...
யோவ்..உங்களுக்கு கல்யாண சாப்பாடு போடுறதுக்கு நான் குஜராத்துல வாழ்க்கபப்படணுமா..?
பிச்சுப்புடுவேன்..பிச்சு.//


அங்க வேணாம் தல!
இங்க கூட்டியாந்துருங்க!

க.பாலாசி said...

தலைப்பையே மீண்டும் குறிப்பிடுகிறேன்.

அன்றைய நாள் இனிமையாக அமைந்தது.

ப்ரியமுடன் வசந்த் said...

ஏழுத்தோசை சூப்பர் அடிக்கவர்றாங்க மீ த எஸ்கேப்பு...

மண்குதிரை said...

nice.......

செ.சரவணக்குமார் said...

அருமையான பகிர்வு தலைவரே.

ஈரோடு கதிர் said...

கும்க்கியுடனான சந்திப்பு பல கதவுகளைத் திறந்துவிட்டது..

பெரியசாமி மிக சுவாரசியம்...

சில "பூஸ்ட்" கொசுக்களின் கடி பலசமயம் தாங்க முடியல...

Menaga Sathia said...

நல்ல பகிர்வு வால்!!

Kumky said...

உங்கள் நினைவுக்கு ஒரு மிகப்பெரும் சல்யூட்.

ஏழுதோசை...?...ஸ்பெசல் கவுஜ ஒன்னு பார்சேல்....

Kumky said...

கதிர்-உடன் பேசியதுதான் மிகப்பெரும் ஆச்சரியம்.
நீண்ட நாள் தயக்கம் ஒரு முடிவுக்கு வர முடிந்தது...என்னவென்று எல்லோர்க்கும் தெரியும்தானே....

Kumky said...

பூஸ்ட் ஈஸ் த சீக்ரெட் ஆப்....ஊஸ் எனர்ஜி? அதையும் சொல்லிட வேண்டியதுதானே..?

Sanjai Gandhi said...

நான் ஒசூரில் சிக்கிக் கொண்டதால் வர இயலவில்லை. மேடிக்கு வாழ்த்து சொல்ல கும்கியை அழைத்தேன். அவர் சாப்பாட்டுல பிசியா இருந்தார். என் வாழ்த்தை சொல்லி இருப்பார் என நம்புகிறேன். காலைல பூஸ்ட் இல்லையே? :)

vasu balaji said...

பகிர்வுக்கு நன்றி சார்.

Anbu said...

\\\சிவகாசி அன்பு கூட வெகு தீவிரமாக கண்ணில் படும் பெண்களை லவ்வி கொண்டிருக்கிறாராம், \\\\

கல்யாணம் முடிந்தா வயதானவர்கள் பட்டியலில் சேர்த்து விடுவார்கள்...

ஆகவே., நாம ரெண்டு பேரும் என்றுமே இளமையா இருப்போம்...

குசும்பன் said...

//வர முடியாத நண்பர்கள் அலைபேசியில் அழைத்து மேடிக்கு வாழ்த்து சொல்லி கொண்டிருந்தனர், குசும்பன் மட்டும் என் போனுக்கு அழைத்து வாழ்த்து சொன்னார்!
//

உள்குத்து மாதிரி இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்

நேசமித்ரன் said...

தலைவரே...

நான் வரவேண்டியது - இயலவில்லை

Sorry

வினோத் கெளதம் said...

:)

ஆ.ஞானசேகரன் said...

பதிவர்கள் கூட்டம் என்றே நினைக்கின்றேன்... வாலுக்கு மிகுந்த மகிழ்ச்சி என்பதை உணர்கின்றேன்.. பாராட்டுகள் நண்பா,...

வால்பையன் said...

//ஆ.ஞானசேகரன் said...

பதிவர்கள் கூட்டம் என்றே நினைக்கின்றேன்... வாலுக்கு மிகுந்த மகிழ்ச்சி என்பதை உணர்கின்றேன்.. பாராட்டுகள் நண்பா,...//


பதிவை படிக்கும் பழக்கமே இல்லையா என கண்டு வியக்கிறேன்!

Anonymous said...

தள,

மாபில்லையோட நீ நிக்கிர மாதிறி போட்டோவே எடுக்கலியா ?

சொள் அலகன்

Anonymous said...

என்ன இது பதிவற் சந்திப்புன்னாளே ஒரி "நாக்க மூக்கா" தானா , சுட்டி வலியை போனா, என் மீது திடீற் தாக்குதள் - ன்னு இருந்தது , அப்பிடியே ஓடியாந்துட்டேன் , நான் றொம்ப பயந்தவங்க

ஜெட்லி... said...

பூஸ்ட் இஸ் அவர் எனர்ஜி....

ஜெட்லி... said...

பூஸ்ட் இஸ் அவர் எனர்ஜி....

ராஜவம்சம் said...

எனக்கு கூடி குடிப்பது சாரி கும்மி அடிப்பது என்றாளே அலர்ஜி நல்லா என்ஜாய் பன்னியிருகிறீர்கள்.
link ல போய் பார்ப்போம்

Maximum India said...

லவ்டேல் மேடிக்கு எனது வாழ்த்துக்கள்!

அடுத்த பதிவர் சந்திப்பை "பாஸ் கார்த்திக்" கல்யாணத்தில் கூடிய சீக்கிரமே நடத்த ஏற்பாடு செய்யுங்கள் தலைவா!

:)

Unknown said...

நன்றி தல..
என் நண்பன் பெயரைக்கூட நினைவு வைத்து குறிப்பிட்டதற்கு..

அடுத்த திருமணத்தில் அனைவரையும் சந்திக்கிறேன்.. :-)

சங்கர் said...

பொண்ணு மாப்பிள்ளை நாற்காலிகளுக்கு நடுவுல அவ்வளவு GAP விட்டது யாரோ?

Thamira said...

கல்யாணம் மட்டுமில்லாம ஒரு கிரேட் பதிவர் சந்திப்பையும் பூஸ்ட்டோட மிஸ் பண்ணிட்டேன்... :-((

RAMYA said...

ம்ம்ம்!! அதுக்குள்ளே இடுகை போட்டுடீங்களா ரொம்ப ஸ்பீடு........

உங்கள் அனைவரையும் பார்த்ததிதிலே எனக்கு மிக்க மகிழ்ச்சி!!

நட்புடன் ஜமால் said...

மேடிக்கு வாழ்த்துகள்!

இப்படி ஒரு சந்தர்ப்பத்தை இழந்தவிட்ட வருத்தமும் ...

Romeoboy said...

மேடிக்கு வாழ்த்துக்கள் + வாலின் அல்டிமேட் உபசரிப்பு ..

Anonymous said...

அங்கு வந்திருந்த நண்பர்களை அனைவரையும் அன்புடன் உபசரித்து தங்க அனைத்து ஏற்பாடு செய்து அதிக வேலையும் மாறாத சிரிப்போடு செயல்பட்ட அருண் நட்பின் இலக்கணமே...

மேடிக்கும் அவர் சார்பாய் வந்திருந்த அவர் இவர் நட்புக்களை கவனித்ததில் பெரும் பங்கு வால் பையனுக்கே.....

மறக்காத முடியாத நாள் இந்த மண நாள் என்பதை மறுக்க முடியாது...

நட்பை விட சிறந்த உறவு இருக்கமுடியாது என்பதற்கு சான்றாகவும் இருந்தது....

Jawahar said...

//இவ்விடத்தில் இதை நான் சொல்லியே ஆகவேண்டும், பெரும்பாலான நண்பர்கள் ”பூஸ்ட்” குடிக்க உட்கார்ந்துட்டா வயசு வித்தியாசம் பார்க்காமல் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்னு நினைச்சிகிட்டு இருக்காங்க,//

அருண், இதுல ரெண்டு டைப் இருக்கு. பெருசுங்க யூத்ன்னு நினைச்சிகிட்டு இசகு பிசகா பேசறது ஒரு டைப். அரை டிக்கெட்டுங்க காலத்தை வென்ற கடலைப் பருப்பாகப் பாவித்துப் பேசுவது இன்னொரு டைப். நீங்க எதைச் சொல்றீங்க? (நீங்களும் பூஸ்ட் சாப்பிட்டிருந்தா இதெல்லாம் பெரிய விஷயமா தோணாதே?)

http://kgjawarlal.wordpress.com

Anonymous said...

கும்க்கி ,
என் வாழ்த்தை மனமக்கலுக்கு சொன்னீங்க தானே !!
உங்கல் நட்பை வெகுவாக புகழ்ந்திறுக்கிரரே ஒரு பதிவர்.
தள எப்படி அவர் நன்பர்கல் அப்படி.

சொள் அலகன்

அ.மு.செய்யது said...

//அங்கு வந்திருந்த நண்பர்களை அனைவரையும் அன்புடன் உபசரித்து தங்க அனைத்து ஏற்பாடு செய்து அதிக வேலையும் மாறாத சிரிப்போடு செயல்பட்ட அருண் நட்பின் இலக்கணமே...//

ரிப்பீட்டுகிறேன்....!!!!

வட போச்சே !!!

Saminathan said...

டெல்லி மீட்டிங் போயிந்திருந்தீங்கன்னு கேள்விப்பட்டேன்...

S.A. நவாஸுதீன் said...

நல்ல படியா கல்யாணத்தை முடிச்சு ஒரு வழி பண்ணீட்டீங்க போல

(ஒரு வழியா கல்யாணத்தை நல்லபடியா முடிச்சிட்டீங்க போலன்னுதான் எழுத நினைச்சேன்.)

S.A. நவாஸுதீன் said...
This comment has been removed by the author.
காந்தி காங்கிரஸ் said...

அதிகம் சொல்லவந்து
அளவுடன் நிறுத்திக்கொண்ட
வால் ,
தங்களின் பொருந்தன்மை மதிக்கக்கூடியதே .
இருந்தாலும்
இது முழுமையல்ல
என்பது அனைவருக்கும் தெரியும்.
தங்களின் உபசரிப்புக்கு முன்
எதுவும் நிகரில்லாமல் போனதை
நான் நேரில் அனுபவித்தேன்
மிக்க மகிழ்ச்சி .
வால்
வால்
தான்

மேவி... said...

வால்ஸ் நான் உங்களுக்கு இரவு கால் பண்ண முயற்சித்தேன்..... நீங்க எடுக்கவில்லை. சரி சுருதி ல இருப்பிங்கன்னு கார்த்திக்கு போன் பண்ணி வாழ்த்துக்களை சொல்லிருற சொன்னேன்

இளைய கவி said...

எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பதறிவு.

பித்தனின் வாக்கு said...

(((K

சிவாஜி said...

நல்லதொரு சந்திப்பு. நிறைய நண்பர்களை பார்க்க முடிந்தது. சிலருடன் உரையாட முடிந்தது. மண்டபத்தில் இரவுச் சாப்பாடு மிகத் திருப்தி. அன்பான உபசரிப்பு. லதானந்த் சாருக்கு சங்கடம் ஏற்பட்டிருக்காவிடில் உண்மையிலேயே மாபெரும் வெற்றி! வாமுகோமு அவர்களிடம் அவரது கதையைப் பற்றிய கருத்தை பகிர்ந்து கொள்ள முடிந்தது. டைமிங் ரைமிங்கோடு அருமையான கதைகளை கேட்டேன். லதானந்த் சாரின் பேச்சு மிகவும் இனிமையாக இருந்தது. முதல் முறை பெரும்பாலானவர்களை சந்திப்பதாலும், நான் அவர்களின் பிளாக்குகளை ஏற்கனவே அறிந்திராமையாலும், இயல்பாகவே என் தயக்கத்தாலும் பெரும்பாலும் பேச முடியவில்லை. ஏற்பாடு செய்திருந்த வால்பையன் & கோ.. க்கு நன்றிகள்.

thiyaa said...

அன்புடன் நான் வழங்கிய இவ் விருதினைப் பெற்றுக்கொள்ளுங்கள்
http://theyaa.blogspot.com/2009/12/blog-post_02.html

மர தமிழன் said...

//நாம் ப்ளாக்கர் என்ற ஒரே விசயத்தில் மட்டும் ஒன்றுபடுகிறோமே தவிர ஒவ்வோருவருக்கும் ஒரு தொழில், வித்தியாசமான குணாதிசியங்கள் உண்டு! அதற்குறிய மரியாதையை தர வேண்டியது நம் கடமை, மீறும் பட்சத்தில் நீங்கள் நிகழ்ச்சிகளில் ஒதுக்கப்படலாம்//

ஆறறிவே தாங்கல இதுல சிலருக்கு பூஸ்ட் சாப்பிட்டா ஏழாவது அறிவு வேற முளைக்கும்.. பாவம் லதானந்த் சார் பொதுவாவே நம்மகூட செட் ஆவரவங்களோட இத செய்யறது நல்லது. அதுலயும் கல்யாணம் மாதிரி சமயத்துல இத தவிர்த்துட்டா நிறைய தர்ம சங்கடங்கள் தவிர்க்கலாம். வால் கவனிப்பாராக.

மர தமிழன் said...

//நாம் ப்ளாக்கர் என்ற ஒரே விசயத்தில் மட்டும் ஒன்றுபடுகிறோமே தவிர ஒவ்வோருவருக்கும் ஒரு தொழில், வித்தியாசமான குணாதிசியங்கள் உண்டு! அதற்குறிய மரியாதையை தர வேண்டியது நம் கடமை, மீறும் பட்சத்தில் நீங்கள் நிகழ்ச்சிகளில் ஒதுக்கப்படலாம்//

ஆறறிவே தாங்கல இதுல சிலருக்கு பூஸ்ட் சாப்பிட்டா ஏழாவது அறிவு வேற முளைக்கும்.. பாவம் லதானந்த் சார் பொதுவாவே நம்மகூட செட் ஆவரவங்களோட இத செய்யறது நல்லது. அதுலயும் கல்யாணம் மாதிரி சமயத்துல இத தவிர்த்துட்டா நிறைய தர்ம சங்கடங்கள் தவிர்க்கலாம். வால் கவனிப்பாராக.

ஊர்சுற்றி said...

என்னோடது இங்கே.
http://oorsutri.blogspot.com/2009/11/blog-post_30.html

வரவேற்பாளர், உபசரிப்பாளர் வால்பையன் அண்ணனுக்கு நன்றி.

வால்பையன் said...

பின்னுட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

!

Blog Widget by LinkWithin