பிடித்தவர், ரொம்ப பிடித்தவர்!..

தோழர் மாதவராஜ் என்னை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார், பழைய தொடர்கள் மாதிரியே இதுவும் சுற்றி கொண்டு தான் இருக்கிறது, சில சங்கடங்கள் கருதி 32 கேள்விகள், அ,ஆ,இ போன்ற தொடர்களை நான் நிராகரித்து விட்டேன், முக்கிய காரணமே பதிவுக்காக பொய் சொல்வது என்னை நானே ஏமாற்றி கொள்வது போல், அதற்கு எழுதாமலே இருக்கலாம் இல்லையா!

சரி இப்ப மட்டும் ஏன் எழுதுறேன்னு கேக்குறிங்களா!, வேகமாக ஓடி கொண்டிருக்கும் நதியை சற்றே திசை திருப்பிவிடும் நோக்கம் தான், அதனால் தலைப்பை மாற்றி விட்டேன், அடிப்படையில் எனக்கு பிடிக்காதவர்கள் என யாருமே கிடையாது, உங்களுக்கே தெரியும், யாருடனும் நாம் 100% முரண்பட்டிருக்க முடியாது, ஒன்றிரண்டில் உடன்படுவோம், பின் ஏன் பிடிக்கலைன்னு சொல்லிகிட்டு, மேலும் நமக்குள்ளயே பிடிக்கலைன்னு சொல்லி புதிய அரசியலுக்கு வழி வகுக்க காரணமும் ஆகிவிடக்கூடாது!

அதனால் இன்னும் எழுதாதவர்கள் இனி இந்த தலைப்பிலேயே எழுதலாம், உங்களுக்கு பழைய தலைப்பிலேயே எழுத ஆசையிருந்தாலும் எழுதலாம், உங்கள் விருப்பமே முக்கியம்!, மேட்டருக்கு போவோம்!

*****

அரசியல் தலைவர்

பிடித்தவர்:ஸ்டாலின்
பெரிதாக அலட்டல் இல்லாதவர் என்பது காரணம்!

ரொம்ப பிடித்தவர்:நல்லகண்ணு
இவரது எளிமையே இவரை தமிழகம் விரும்பக்காரணம்

*

எழுத்தாளர்

பிடித்தவர்:பிரபஞ்சன்
இவரது கதைகளில் சூழ்நிலை தான் வில்லன், மற்றபடி அனைவரும் நல்லவர்களே!

ரொம்ப பிடித்தவர்:சுஜாதா
நானெல்லாம் 425 பாலோயர் வச்சிருக்கேன்னா அதுக்கு இவர் தான் காரணம், எனக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் பலருக்கு வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியவர் என்பதால்!

*

கவிஞர்

பிடித்தவர்:பா.விஜய்
இவரது தன்னம்பிக்கை தரும் பாடல்களுக்காக

ரொம்ப பிடித்தவர்:வாலி
வாலிபக்கவிஞர் என்பதால், எச்சூழலுக்கும் ஏற்றவாறு எழுதுவார்

*

இயக்குனர்

பிடித்தவர்:விசு
எனக்கே ஆச்சர்யமான விசயம் இது, இன்றும் விசு படம் பொருமையாக பார்க்கிறேன், இந்தனைக்கும் நான் ஒரு அன்செண்டிமெண்டல் ஆள்!

மிகவும் பிடித்தவர்:நகைச்சுவை இயக்குனர்கள்
குறிப்பாக பெயர் சொல்லமுடியவில்லை, எனக்கு நகைச்சுவை ரொம்ப பிடிக்கும், கிரேஸிமோகன் வசனத்துக்காகவே படம் பார்ப்பேன்!

*

நடிகர்

பிடித்தவர்:விக்ரம்
இவரது தன்னம்பிக்கைகாக

மிகவும் பிடித்தவர்:பிரகாஷ்ராஜ்
தன்னம்ப்பிகையுடன் தொழிலில் இருக்கும் ஈடுபாட்டிற்காக!

*

நடிகை

பிடித்தவர்:ஆண்டி ஆகாத நடிகைகள் அனைவரும்
இந்த விசயத்தில் கஞ்சத்தனம் கூடாது!

மிகவும் பிடித்தவர்:ஆண்டி ஆன நடிகைகள் அனைவரும்
சரோஜாதேவியெல்லாம் பாட்டி வகையறா, அவர்களை லிஸ்டில் சேர்க்காதீர்கள்

*

இசையமைப்பாளர்

பிடித்தவர்:இளையராஜா
இவரது மெலோடி பாடல்கள் ரொம்ப பிடிக்கும்

ரொம்ப பிடித்தவர்:யுவன் ஷங்கர்ராஜா
புலிக்கு பிறந்தது பூனையாகுமா!?

*

பதிவர்

பிடித்தவர்:t.v.ராதாகிருஷ்ணன்
சிரிக்கலாம் வாங்கன்னு கூப்பிட்டு சிரிக்க வைப்பதற்காக

ரொம்ப பிடித்தவர்:குசும்பன்
எந்த விசயயமாக இருந்தாலும் அதில் நகைச்சுவை தேனை தடவி தருவதற்காக!

****

இப்ப நான் எனது நண்பர்களை இதில் சிக்க வைக்க வேண்டும், தலைப்பை மாற்றி விட்டதால் சிரமம் இல்லாமல் எழுதுவார்கள் என நம்புகிறேன்! நான் அழைக்கும் ஐந்து பதிவர்களில் 40% பெண்களுக்கு ஒதுக்குகிறேன்!

1.ரம்யா

2.தமிழரசி

3.நட்புடன் ஜமால்


4.கிருஷ்ணமூர்த்தி ஐயா(அவரே தான்)

5.டோண்டு

மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்!

80 வாங்கிகட்டி கொண்டது:

எறும்பு said...

Me the firstu

எறும்பு said...

//ஐந்து பதிவர்களில் 40% பெண்களுக்கு ஒதுக்குகிறேன்!///

வால்... வாழ்க வாழ்க

நிஜாம் கான் said...

// இன்றும் விசு படம் பொருமையாக பார்க்கிறேன், இந்தனைக்கும் நான் ஒரு அன்செண்டிமெண்டல் ஆள்!//

வயசாயிடிச்சின்னு அர்த்தம். வாலண்ணே! எல்லாரும் பிடித்தவர்,பிடிக்காதவர் என எழுதும் போது நீங்க மட்டும் பிடித்தவர், ரொம்பப் பிடித்தவர் என எழுதியிருப்பது வித்யாசம்.

Anbu said...

ரொம்ப நல்லா இருக்கு வால் அண்ணே..

Beski said...

அடுத்த தொடர் பதிவா? இனி இந்த மாதிரி எழுத் ஆரம்பிச்சுடுவாங்க போல இருக்கே!

பீர் | Peer said...

வால், யூ ஆர் தி பெஸ்ட்.

நட்புடன் ஜமால் said...

ஆஹா! அருமை அருமை.

இந்த +வ் அப்ரோச் நல்லாயிருக்கு ...

லதானந்த் said...

உங்களது நற்பண்பு என்னைக் கவர்ந்தது

நட்புடன் ஜமால் said...

மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்!

அவசியம் நண்பரே!

மணிகண்டன் said...

ரொம்பப் பிடித்தவருக்கு அருகில் பிடித்தவர் "பிடிக்காதவர்" ஆகிவிடுகிறார்கள் என்று குறிப்பால் உணர்த்தியதற்கு நன்றி.

ஸ்டாலின், பிரபஞ்சன் பா விஜய், விசு போன்றவர்கள் உங்களின் பிடிக்காதவர் லிஸ்ட்டில் வந்ததற்கான காரணம் சரியாக புரியவில்லை :)-

ஊடகன் said...

தயவுசெய்து இந்த தொடர் பதிவுக்கு முற்றுபுள்ளி யாரவது வையுங்களேன்..............

மணிகண்டன் said...

ஊடகன் - அதுக்காக இவ்வளவு முற்றுப்புள்ளி வைக்க கூடாது ;

மணிகண்டன் said...

முந்தைய பின்னூட்டத்தில் தொடர் பதிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடாது என்பதை குறிப்பால் உணர்த்த முயன்றேன்.

அன்புடன் நான் said...
This comment has been removed by the author.
அன்புடன் நான் said...

வித்தியாசமாய் நல்லாயிருக்கு... யார் மனமும் புண்படாமல்!!!

hiuhiuw said...

//அடிப்படையில் எனக்கு பிடிக்காதவர்கள் என யாருமே கிடையாது, உங்களுக்கே தெரியும்//

சார் நீங்க எங்கயோ போய்ட்டீங்க !

//மேட்டருக்கு போவோம்!//
போவோம் போவோம் !

//பெரிதாக அலட்டல் இல்லாதவர் என்பது காரணம்!//

முடியல ! இப்பிடி வேற கெளப்ப ஆரமிச்சுட்டீங்களா?

//இவரது தன்னம்பிக்கை தரும் பாடல்களுக்காக//

ஞாபகங்கள் பாத்தாச்சா ?

//சரோஜாதேவியெல்லாம் பாட்டி வகையறா,//

வசதிக்கு இல்லைனாலும் அசதிக்கு உதவும் தல ...

முக்கியமான மேட்டர்

//பொய் சொல்வது என்னை நானே ஏமாற்றி கொள்வது போல்,//

என்னத்த சொல்ல !
நல்லா இருந்தா நல்லா இருங்க தல !

அன்புடன் நான் said...
This comment has been removed by the author.
அன்புடன் நான் said...

வித்தியாசமாய் நல்லாயிருக்கு... யார் மனமும் புண்படாமல்!!!

hiuhiuw said...

//யார் மனமும் புண்படாமல்!!!//

ஆமா தல ! நெசம் தான்

ரிப்பீட்டு !

Sanjai Gandhi said...

நீங்களாவது சினிமாவுகு அதிக முக்கியத்துவம் தராமல் பிற துறையகளையும் சேர்த்திருக்கலாம். இப்டி ஏமாத்திட்டிங்களே எழுத்தாளரே.

மண்குதிரை said...

kusumpam enakkum pitikkum tvradha krishnan vaasiththathillai.

vaasippoom.

nallakannu aiya enakkumthaan

romba pitiththa natikaikal :-))

வேந்தன் said...

//யாருடனும் நாம் 100% முரண்பட்டிருக்க முடியாது//
இதுவும் 100% உண்மை
உங்கள் பதில் அருமை...

Menaga Sathia said...

வால் பதில்கள் நல்லாயிருக்கு..

நிகழ்காலத்தில்... said...

பிடிக்காதவர் என்ற வார்த்தையை தூக்கியதற்கு மிகவும் நன்றி.,

இந்த வேலையை யார் செய்வார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன்

வாழ்த்துக்கள்

Ashok D said...

டக்குன்னு பாக்க சொல்லோ என் பதில்கள் மாதிரி இருந்தது.

மொத பதிலே டாப்பு.

வால் நீங்க வால்யில்லன்னு இந்த பதிவு சொல்லுது.

vasu balaji said...

வித்தியாசத்தில இது வித்தியாசமாயிருக்கு. :)

ஈ ரா said...

//
ரொம்ப பிடித்தவர்:வாலி
வாலிபக்கவிஞர் என்பதால், எச்சூழலுக்கும் ஏற்றவாறு எழுதுவார்
//

யாராவது மிகவும் கடினமாக எழுதி இலக்கணத்தைப் புரட்டிப் போடுபவர்களை நீங்கள் சொல்வீர்கள் என்று நினைத்தேன்...

வெகுஜன வீச்சில் வெற்றி கண்டு, எதுகை மோனையில் எங்கும் நிறைந்து என்போன்ற பலருக்கு ஆதர்ச கவிநாயகரையே தாங்களும் பிடித்தமானவராய்க் கொண்டது மகிழ்ச்சியே...

அகல்விளக்கு said...

//பிடித்தவர்:ஆண்டி ஆகாத நடிகைகள் அனைவரும்
இந்த விசயத்தில் கஞ்சத்தனம் கூடாது!

மிகவும் பிடித்தவர்:ஆண்டி ஆன நடிகைகள் அனைவரும்
சரோஜாதேவியெல்லாம் பாட்டி வகையறா, அவர்களை லிஸ்டில் சேர்க்காதீர்கள்//

டாப்பு.....

இங்க நிக்கிறீங்க தல நீங்க....

அப்துல்மாலிக் said...

இதுக்கு ஒரு முடிவே இல்லியா

இருந்தாலும் நான் நினைச்சமாதிரி ஏன் பிடிக்குதுனு காரணத்தோடு சொன்ன கரெக்ட்

Subankan said...

தலைப்பை மாத்தினது நல்லாயிருக்கு

மேவி... said...

arumaiya irukku ....

sujatha oda kolaiyuthir kalam enakku romba insp.... athai parthu thaan naan english la siru kadhai elutha start panninen

யோ வொய்ஸ் (யோகா) said...

எனக்கு உங்கள பிடிச்சிருக்கு வாலு

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

நாடோடி இலக்கியன் said...

உங்க அப்ரோச் பிடிச்சிருக்கு.


மற்றவர்கள் பதிவில் குறிப்பாய் எனது பதிவில் பிடிக்கவில்லை என்ற லிஸ்டில் சொல்லியிருப்பது அவர்கள் சார்ந்த துறையில் அவர்களின் செயல்பாடுகளைத் தாண்டி தனிப்பட்ட முறையில் அல்ல என்பதை அறிவீர்கள்தானே நண்பா.

பின்னோக்கி said...

தப்பு
பெரிய தப்பு
ரொம்ப பெரிய தப்பு

வால் பையன். நீங்க இப்படி தப்பு பண்ணுவீங்கன்னு நான் கனவுல கூட நினைக்கலை.

//நானெல்லாம் 425 பாலோயர் வச்சிருக்கேன்னா

429 பாலோயர்ஸ் தான் கரெக்ட் :)

Jawahar said...

அருண், தலைப்பை மாற்றியது ஒரு நல்ல காரியம்.

ஆண்ட்டி, பாட்டி எங்கே கட் ஆப்?

குஷ்பூ வரைக்கும் ஓக்கேவா இல்லை ஸ்ரீப்ரியா வரை போகலாமா?

http://kgjawarlal.wordpress.com

பா.ராஜாராம் said...

தலைப்பிற்கு ஜெ!

மணிப்பக்கம் said...

\\ அடிப்படையில் எனக்கு பிடிக்காதவர்கள் என யாருமே கிடையாது, உங்களுக்கே தெரியும், யாருடனும் நாம் 100% முரண்பட்டிருக்க முடியாது, ஒன்றிரண்டில் உடன்படுவோம், பின் ஏன் பிடிக்கலைன்னு சொல்லிகிட்டு, \\

ஆஹா, வால் இல்லாத 'வால் பையன்' ;)

NO said...

அன்பான நண்பர் திரு வால் அவர்களுக்கு,

நோ சொல்லும் - பிடித்த பிடிக்காத ஜிங் சக்

பதிவர்களில்:

பிடித்த பதிவர் : பலர்
மிகவும் பிடித்த பதிவர் : கோவி கண்ணன்
பிடிக்காத பதிவர்: வால் பையன் மற்றும் சிலர்
பிடிக்கவே பிடிக்காத பதிவர் : தேடுகின்றேன்

உடனே அர்த்தம் புரிந்தவர்கள் கெட்டிக்காரர்கள் மற்றும் அனேகமாக பிடிக்காதவர்களாக இருப்பார்கள்!

நன்றி

மணிப்பக்கம் said...

// ரொம்ப பிடித்தவர்:சுஜாதா
நானெல்லாம் 425 பாலோயர் வச்சிருக்கேன்னா அதுக்கு இவர் தான் காரணம், எனக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் பலருக்கு வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியவர் என்பதால்! //

430 (வது-நான்!) ஆயிடுச்சு தல!

கடைக்குட்டி said...

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.. :-)

Kumky said...

பென்களுக்கு 40 சதவீதம் ஒதுக்கிய வால் பையனுக்கு எனது பாராட்டுக்கள்....
(என்ன ஒரு தாராளம்...)

எங்கே சொள் அலகனை காணோம்..?

RAMYA said...

உங்கள் பதில்கள் அனைத்தும் நேர்மறையானது வாலு!

சில பதிகள் நான் எழுதி வைத்திருப்பதிற்கு ஒத்துப் போகுது!

RAMYA said...

//
அடிப்படையில் எனக்கு பிடிக்காதவர்கள் என யாருமே கிடையாது, உங்களுக்கே தெரியும், யாருடனும் நாம் 100% முரண்பட்டிருக்க முடியாது, ஒன்றிரண்டில் உடன்படுவோம், பின் ஏன் பிடிக்கலைன்னு சொல்லிகிட்டு, மேலும் நமக்குள்ளயே பிடிக்கலைன்னு சொல்லி புதிய அரசியலுக்கு வழி வகுக்க காரணமும் ஆகிவிடக்கூடாது!
//

ஐயோ வாலு என்னோட கருத்தும் இதுவே!

RAMYA said...
This comment has been removed by the author.
RAMYA said...

//
நான் அழைக்கும் ஐந்து பதிவர்களில் 40% பெண்களுக்கு ஒதுக்குகிறேன்!
//

நன்றிங்க ரொம்ப நன்றி:)

உங்க நல்ல மனசு மற்றும் தாரள மனசுக்கு என்ன பரிசு கொடுக்கலாம் யோசிப்போம் :)

RAMYA said...

//
மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்!
//

கண்டிப்பா மறுக்க மாட்டோம்லே :)

Unknown said...

வித்தியாசமா நல்லாருக்கு தல..

அன்புடன் அருணா said...

வித்தியாசமான எண்ணத்துக்காகப் + பதிவுக்காக பூங்கொத்து!

Sanjai Gandhi said...

//மற்றவர்கள் பதிவில் குறிப்பாய் எனது பதிவில் பிடிக்கவில்லை என்ற லிஸ்டில் சொல்லியிருப்பது அவர்கள் சார்ந்த துறையில் அவர்களின் செயல்பாடுகளைத் தாண்டி தனிப்பட்ட முறையில் அல்ல என்பதை அறிவீர்கள்தானே நண்பா. //

இதை நான் என் பதிவிலேயே சொல்லி இருக்கிறேன். காப்பி கேட்.. :))

அமர பாரதி said...

வால்,

அழகு. நதியின் ஓட்டத்தை மாற்றியமைத்த விதம் சூப்பர். எதிர்மறை எண்ணங்களுக்கு ஆட்பட்டு விடாமல் இருப்பதே பெரிய விஷயம். அதை அங்கீகாரத்துடன் செய்வது கொடுமை.

அத்திரி said...

நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க

வினோத் கெளதம் said...

வால்ஸ் கலக்கல் பதில்கள்..

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

this is also fine. thanks

கோபிநாத் said...

\\பிடித்தவர்:பிரபஞ்சன்

இவரது கதைகளில் சூழ்நிலை தான் வில்லன், மற்றபடி அனைவரும் நல்லவர்களே!\\\

ஆகா...நம்ம ஆளு ;)))

ஹேமா said...

வால்பையனின் அலட்டல் இல்லாத முகம் தெரிகிறது.

மேவி... said...

"ஹேமா said...
வால்பையனின் அலட்டல் இல்லாத முகம் தெரிகிறது."


ஆமாங்க, ஹேமா வால்பையன் ரொம்ப அமைதியான டைப்

ஆ.ஞானசேகரன் said...

தலைப்பும்,... பதில்களும் அருமை. உங்களைப்பற்றி மேலும் அறிந்ததில் மகிழ்ச்சி

Unknown said...

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

vanila said...

வால் ஜி.

இந்த ஸ்டைல் தான் உங்கள்ட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது..
பிடிச்சிதுன்ன - தொடர்ந்து வா.. பிடிகலேன்னா - கழண்டுக்கோ.. ஆனா.. நான் எல்லாருக்கும் நல்லவனாத்தான் இருப்பேன்..
வால் நீளட்டும்..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

எவ்வளவு பாசிடிவான பதிவு வால்!

இவ்வளவு கூலான, மென்மையான பதிவரா நீங்க.

ஆனந்தக் கண்ணீர் வருது வால்!

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

நீங்களும் ஆன்டி ஹீரோவா?!

தாரணி பிரியா said...

ஆஹா இந்த அப்ரோச் நல்லா இருக்கே

கிருஷ்ண மூர்த்தி S said...

/அத்திவெட்டி ஜோதிபாரதி said...

எவ்வளவு பாசிடிவான பதிவு வால்!

இவ்வளவு கூலான, மென்மையான பதிவரா நீங்க.

ஆனந்தக் கண்ணீர் வருது வால்!/

எனக்கும் தான்! தேர்தலுக்குத் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த அரசு எதுவும் செய்ய முடியாத பெண்களுக்கு இட ஒதுக்கீடுப் பிரச்சினையை, தனி ஒருவராகச் சாதித்துக் காட்டிய வால்பையனுக்கு வாழ்த்துக்கள்!

ஒரே பெண்ணைப் பெற்றவர் என்பதால் இட ஒதுக்கீடு செய்வது ஈசியாக இருந்திருக்கும் போல!

கலையரசன் said...

நாங்கூட புது தொடர்பதிவோன்னு பயந்துட்டேன்!!

Thamira said...

பா.விஜய் தவிர மற்றெல்லாம் நமக்கும் பிடிச்சவங்கதான் அண்ணே.!

Anonymous said...

எழுத்தாளர்

(ரொம்ப)10 பிடித்தவர்: சுஜாதா
(பவர்10என்ரு படிக்கவும் )

(ரொம்ப)20 பிடித்தவர்:
(பவர்20 என்ரு படிக்கவும் )
அறுமை அன்னான் வால்பையன் அவர்கல், நகைசுவை இலவள் !! விறுவிருப்பு சக்கரவர்த்தி தான்.

சொள் அலகன்

Anonymous said...

கும்க்கி ,

அடுத்த பிரந்த நாலுக்காவது பெறிசா ட்றீட் கொடுப்பீகலா

சொள் அலகன்

பின் குரிப்பு : எனக்கு சறக்கு அடிக்கத் தெறியாது

Admin said...

நல்லாருக்கு வால்

வால்பையன் said...

//மணிகண்டன் said...

ரொம்பப் பிடித்தவருக்கு அருகில் பிடித்தவர் "பிடிக்காதவர்" ஆகிவிடுகிறார்கள் என்று குறிப்பால் உணர்த்தியதற்கு நன்றி.//

ஏங்க இப்படியெல்லாம் குண்டை தூக்கி போடுறிங்க!
முதல் ரேங்க், இரண்டாவது ரேங்க் வரிசையில் வச்சிகோங்களேன்!

வால்பையன் said...

@ ராதாமணாளன்


//சரோஜாதேவியெல்லாம் பாட்டி வகையறா,//

வசதிக்கு இல்லைனாலும் அசதிக்கு உதவும் தல ... //

உங்க குசும்புக்கு அளவேயில்லையா!?

வால்பையன் said...

SanjaiGandhi™ said...

நீங்களாவது சினிமாவுகு அதிக முக்கியத்துவம் தராமல் பிற துறையகளையும் சேர்த்திருக்கலாம். இப்டி ஏமாத்திட்டிங்களே எழுத்தாளரே.//

ரொம்ப சீர்யஸா எழுத விருப்பமில்லாததே காரணம்!

வால்பையன் said...

//நாடோடி இலக்கியன் said...

உங்க அப்ரோச் பிடிச்சிருக்கு.

மற்றவர்கள் பதிவில் குறிப்பாய் எனது பதிவில் பிடிக்கவில்லை என்ற லிஸ்டில் சொல்லியிருப்பது அவர்கள் சார்ந்த துறையில் அவர்களின் செயல்பாடுகளைத் தாண்டி தனிப்பட்ட முறையில் அல்ல என்பதை அறிவீர்கள்தானே நண்பா.//

நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே!
ஆனாலும் ஒருசிலரை தவிர மற்றவர்கள் வெகு முனைப்போடு தான் செயல்படுகிறார்கள், அவர்களது தோல்வி நம்மிடம் இருந்து அவர்களை பிரிக்கிறது!

உதாரணம் டி.ஆர்!

வால்பையன் said...

//Jawahar said...
அருண், தலைப்பை மாற்றியது ஒரு நல்ல காரியம்.
ஆண்ட்டி, பாட்டி எங்கே கட் ஆப்?
குஷ்பூ வரைக்கும் ஓக்கேவா இல்லை ஸ்ரீப்ரியா வரை போகலாமா?//

அவுங்க ரெண்டு பேருமே எனக்கு ஆண்டிகள் தான்!
நம்ம பார்வையில் தான் இருக்கு தல! மற்றபடி ராதாமணாளன் சொன்ன மாதிரி தான் :)

வால்பையன் said...

@ நோ

பிடித்த பதிவர் : பலர்
மிகவும் பிடித்த பதிவர் : கோவி கண்ணன்
பிடிக்காத பதிவர்: வால் பையன் மற்றும் சிலர்
பிடிக்கவே பிடிக்காத பதிவர் : தேடுகின்றேன் //

டச்சு பண்ணிட்டிங்களே தல!

வால்பையன் said...

@ அமரபாரதி!

முதல்நாள் நாம பேசிகிட்டது தான தல!
எப்போ ஊருக்கு வர்றிங்க, ஒரு உதவி தேவைப்படுது!

வால்பையன் said...

@ அத்திவெட்டி பாரதி

இவ்வளவு கூலான, மென்மையான பதிவரா நீங்க.//

ரொம்போ நல்லவன்னு சொல்றா மாதிரியே இருக்கே!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

கிறுக்கல் கிறுக்கன் said...

நீங்களும் ஆன்டி ஹீரோவா?!//

ஸாரி, நான் ஆண்டி டெரரிஸ்ட்!

வால்பையன் said...

பின்னுட்டமிட்டு உற்சாகப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

mohamedali jinnah said...

வால்பையன் இதில் ஏன் உங்கள் வால் இல்லை

!

Blog Widget by LinkWithin