இது எனது முதல் பதிவான அறிமுகப்பதிவு! அதன் பின் ஒரு வருடங்கள் தொடர்ச்சியான மரணமொக்கைகள் தான், இப்ப தான் கொஞ்சம் நானே திரும்ப படிக்கிற மாதிரி இருக்கு! எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம், உங்களது உளியே என்னை செதுக்கியது!
நன்றி நன்றி நன்றி!
பதிவரும் நண்பரும் ஆகிய ரோமியோபாய் அவர்களுக்கு இன்று ஆண்குழந்தை பிறந்திருக்கிறது!, நண்பர் முதல் நாளே எங்களை சந்தித்து சென்று விட்டதால் ட்ரீட் வாங்க முடியவில்லை, சென்னைக்கு வந்ததும் என் பங்கு ட்ரீட்டையும் நண்பர்கள் கேட்டு வாங்கி கொள்ளவும்!
***
இந்த முறை பெய்த பருவமழை வரலாறு காணாத கன மழையெல்லாம் கிடையாது, ஆனால் ஊட்டியில் இருப்பவர்களுக்கு வரலாற்றிற்கும் மறக்க முடியாமல் செய்து விட்டது, கனத்த மணல் அரிப்பிற்கு காரணம் மலை பிரதேசங்களில் இருக்க வேண்டிய போதுமான மரங்கள் இல்லாததே, மரத்தின் வேர்கள் மண்ணை இறுகபற்றி மண்ணரிப்பு ஏற்ப்படாமல் செய்திருக்கும்!, நீங்கள் நாட்டுக்கு எதாவது செய்ய விரும்பினால், எல்லையில் சென்று போரிட்டோ, குடுவைகள் வரிசையாக வைத்து ஆராய்ச்சி செய்தோ தான் நன்மை செய்ய முடியும் என்று அவசியமில்லை, தயவுசெய்து ஒரு மரமாவது நடுங்கள்!
**
வரும் 27 ஆம் தேதி ஈரோடில் ஒரு பதிவர் சந்திப்பு நடத்தலாம் என ஒரு சின்ன நப்பாசை, நண்பரும் பதிவருமான லவ்டேல் மேடியின்(பின்”மண்டை”த்துவ வாதி) திருமணம் ஈரோட்டில் நடக்கிறது, நண்பர்களுக்கு அழைப்பும் விடுத்திருக்கிறார், ஈரோட்டில் ஆங்காங்கே ஒளிந்திருக்கும் பதிவர்கள் நண்பர்கள் முக்காட்டை விலக்கி கொஞ்சம் முகம் காட்டினால் தன்யனாவேன்!
**
"தோஸ்தானா" என்ற ஹிந்திப்படம்(ராஜ் தாக்குரே வந்து தாக்கிறப்போறார்) சமீபத்தில் பார்த்ததில் உலக மொழி படங்கள் அளவுக்கு அசர வைத்தது!, சாதாரண நடிகர்களே நடிக்கத் தயங்கும் வேடம் ஜான் ஆபிரகாமும், அபிஷேக் பச்சனும் ஏற்று நடித்திருக்கிறார்கள், ஹிந்தி தெரியாமலேயே சிரித்து கொண்டே பார்த்தேன் என்றால் பாருங்களேன், ஜானும், பச்சனும் தங்குவதற்கு வீடு கிடைக்காமல் வேறு வழியின்றி ஓரிடத்தில் தாங்கள் ஓரினசேர்க்கை பிரியர்கள் என பொய் சொல்லி வீட்டில் நுழையும் காட்சியிலிருந்து நமக்கு சிரிப்பு ஆரம்பிக்கிறது, பின் கடைசி காட்சி வரை சிரிப்பு தான்!
பிரியங்கா சோப்ரா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட அனைத்து தகுதிகளும் உடையவர், அப்படியொரு நடிப்பு, பிரியங்கா தனது முதலாளியான பாபி தியோலை காதலிக்க, பிரியங்காவை காதலிக்கும், ஜானும், பச்சனும் அதை கெடுக்க பாபி தியோலுக்கு கேனத்தனமான ஐடியா கொடுத்து பிரியங்கா முன் அசடு வழிய வைக்க, இறுதியில் ஜானும், பச்சனும், பாபி தியோலை காதலிக்கிறார்கள் என பிரியங்கா நினைக்க, நினைக்கும் போதே சிரிப்பு வருதுல்ல, படம் பாருங்க நான் ஸ்டாப் காமெடி கேரண்டி!
**
அகநாழிகையின் ஒரு கவிதைக்கு நான் இட்ட பின்னூட்டம், கொஞ்சம் மாற்றம் செய்து!
எடை நிறைந்த சொற்கள்
புரிதலை தரவில்லை!
ஒவ்வோரு வரிகளுகிடையிலும்
தொடர்பற்று போனவனாய்
இருக்கிறேன்
மழுங்கி போன மூளையோ,
ஏன் புரியனும் என்ற
மமதையோ காரணமாக
இருக்கலாம் ஆயினும்
எனக்கும் கவிதைக்குமான
உறவு இறுதியற்றது!
104 வாங்கிகட்டி கொண்டது:
முதல்ல உங்களுக்கு வாழ்த்துக்கள். பிறகு மிஸ்டா ரோமியோவுக்கு...
ஊட்டியில் ஏற்பட்ட மண் அரிப்புக்கு ஒரு மரமாவது நாமளும் நடனும்னு சொன்னது ஏத்துக்கவேண்டிய விசயம்.
27ம்தேதி பதிவர் சந்திப்பு நடத்தலாம். எனக்கும் ஆசை...
ஹிந்தி தெரியாதுன்னு சொல்லிட்டு அந்த படத்தப்பத்தி நிறைய சொல்லியிருக்கீங்க...சரி ரைட்டு....பாத்திடுவோம்.
கடைசியா நீங்க பின்னூட்டம் போட்ட கவிதை நல்லாருக்கு....
ரைட்டு வரட்டா....
நான் வர்ரேன் கல்யாணத்துக்கு!
கவியரங்க ஏற்பாட்டைப் பத்தி ஒண்ணுமே சொல்லலை?
நான் டிரை பண்றென்...வர்றதுக்கு..
//ஒரு வருடங்கள் தொடர்ச்சியான மரணமொக்கைகள் தான்//
நல்ல வேலை நான் அதையெல்லாம் படிக்கல
வாழ்த்துக்கள் வால்பையன்.. லவ் டேல் மேடி மற்றும் ரோமியோபாய்க்கும் திருமண வாழ்த்துக்கள்...
கவிதை மாதிரியான கவிதை பரவாயில்லை. :)
போன பின்னூட்டத்துல புது உறுப்பினர் வருகைக்கு வாழ்த்துக்கள் ரோமியோபாய்க்கும் மற்றும் லவ்டேல் மேடிக்கும் திருமண நல்வாழ்த்துக்கள் எழுத வந்து அவ-ரசத்துல மாறிடுச்சு.. :)
மேடிக்கும் அங்கு நடக்கப்போகும் பதிவர் சந்திப்புக்கும் வாழ்த்துக்கள்..
இரண்டு வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள் வால் பையன்.
thNdora sonnatathu ripeetu
நல்லாதானே போயிட்டு இருக்கு அப்படின்னு நெனைக்கும் போதே ஒரு கவுஜ, இதில உறவு இறுதியற்றதுன்னு ஒரு லைன் வேற- அப்போ எங்கள விடறதாயில்ல??
:):) (யப்பா ஸ்மைலி போட்டுட்டேன்)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
வாழ்த்துக்கள் வால்...
‘தோஸ்தானா’ பாத்திரவேண்டியதுதான். பரிந்துரைக்கு நன்றி...
பின்னூட்டக் கவிதை ஓகே...
லவ்டேல் மேடிக்கும், ரோமியோ பாய்க்கும் வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள் வால் :)
லவ் டேல் மேடிக்கு திருமண வாழ்த்துக்கள் மற்றும் ரோமியோபாய்க்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் வால். மேரேஜ்(லவ்)டேல் மேடிக்கும் வாழ்த்துக்கள்
அகநாழிகைக்கிட்ட பின்னூட்டம் சூப்பரா இருக்கு வால்
ரோமியோபாய்க்கும் வாழ்த்துக்கள்
அண்ணே மரம் மேட்டர் சூப்பர். மழைக்காலத்தில் ஞாபகத்துக்கு வந்த்தது, வெய்யக்காலம் வந்துட்டா இது மறந்துடுமே
ரெண்டே வயசான வாலே இவ்வளவுன்னா..........:-))
லவ்டேல் மாடிக்கு எனது இனிய வாழ்த்துக்கள்!
நாம அனுபவிக்கிற சம்சார அவஸ்தையை அவரும் கொஞ்சம் அனுபவிக்க வேணாமா?
வாழ்த்துக்கள் வால்பையன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இரண்டாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள் தல.. மேடியின் திருமணத்தில் சந்திப்போம்..:-))
உங்களுக்கு ஒரு உண்மைதெரியுமா? மலைப் பிரதேசத்தில் மரம் வளர்த்தால் மேற்கொண்டு மண் சரிவிற்கு வழி செய்யும். நமக்கு உதவாது. புற்கள், புதர்கள் இருப்பது மிக நல்லது என்று எதிலோ படித்த ஞாபகம்!
2 வருசமா படுத்துறியளா .. ரைட்டு..
தோஸ்தான ஜாலியோ ஜிம்கான , அதும் ஜானும் பச்சனும் அடிக்கும் உதடு முத்தம் ஹாஹாஹாஹாஹா...
வாழ்த்துக்கள் வால் 2 ஆண்டு நிறைவு செய்ததற்கு.
இரண்டு வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள்
//பிரியங்கா சோப்ரா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட அனைத்து தகுதிகளும் உடையவர்,//
சொல்லவே இல்ல.உடுங்க,ஆஸ்கார் கொடுக்கச் சொல்லீருவோம்.
இரண்டு வருட நிறைவுக்கு வாழ்த்துகள்.
இரண்டு வருட மொக்கைக்கு வாழ்த்துக்கள் தல...
எங்க ஊரில் சுத்தமாக மழை பெய்யவில்லை..
பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்..
தமிழே தகராறு தல..பின்ன எப்படி ஹிந்தி படம் பார்ப்பது..நான் ஹிந்தி படம் பார்ப்பதே நான் ஸ்டாப் காமெடிதான்...
வால்பையனுக்கு இரண்டாவது பிறந்தநாள் வாழ்த்துகள்
//தயவுசெய்து ஒரு மரமாவது நடுங்கள்!//
இந்த வரிக்காக மனதார வணங்குகிறேன்
வாழ்த்துகள் உங்களுக்கு. மேடிக்கும் என் வாழ்த்தைச் சொல்லுங்கள் ப்ளீஸ்
2 years wow... இணைய தமிழ் எழுத்தாளர்.
வாழ்த்துக்கள் வால்.
வாழ்த்துக்கள் வாலு!!
//அதன் பின் ஒரு வருடங்கள் தொடர்ச்சியான மரணமொக்கைகள் தான், இப்ப தான் கொஞ்சம் நானே திரும்ப படிக்கிற மாதிரி இருக்கு!//நல்லவேளை அதெல்லாம் நான் படிக்கல.
ரோமியோபாய்க்கு வாழ்த்துக்கள்!!
லவ்டேல்மேடிக்கு திருமண வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள் தல...
ஆமா எப்படி உங்களைப் போயி தல-ங்கிறது? நீங்கதான் வால் ஆச்சே? :-)
vaalththukkal!!
வாழ்த்துக்கள் திரு.வால் பையன்.. கவிதை சிறியதாக இருந்தாலும் ரொம்ப கனம் - அருமை.
வாழ்த்துகள் தல..
பின்னூட்டம் போட்ட கவிதை super
ஊட்டி செய்தியால் மனம் வேதனையடைந்தது.. மண்ணரிப்பு, வனத்தீ.. காடு காத்தல் பற்றி, விகடனில் லதானந்த் சார் 3 வருடங்களுக்கு முன்பாக ஒரு கட்டுரை (பேட்டி(?)) அளித்திருந்தார். நன்றாக இருந்தது.. மண்ணரிப்பைத்தடுக்கும் முறைகளை பற்றிய ஒரு கற்பிதம் எல்லோருக்கும் தேவைப்படுகின்ற நேரம் இது..
இரண்டாம் ஆண்டிற்கு வாழ்(ல்)த்துக்கள்..
மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்.
//ஈரோடில் ஒரு பதிவர் சந்திப்பு நடத்தலாம்//
நல்லா இருங்கடே
வாழ்த்துக்கள் ஸார் ! தொடரட்டும் உங்கள் பதிவுகள்..
-Toto
www.pixmonk.com
39 வாங்கிகட்டி கொண்டது வாழ்த்துகளை என்னுதும் சேர்ந்து
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் அருண் ...வெகுநாட்களாக உங்களை படித்தாலும் இதுதான் எனது முதல் பின்னூட்டம்...தொடர்ந்து நன்கு எழுத வாழ்த்துக்கள்...
ஈரோடு முத்து...
வாலு இனிய வாழ்த்துக்கள் முதலில் உங்களுக்கு.கவிதை அருமையாயிருக்கு.
மேடிக்கு என் வாழ்த்துக்களைக் கண்டிப்பாய் சொல்லிவிடுங்கள்.
வாழ்த்துகள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்
இரண்டு வருட வாழ்த்துக்கள். வால் பையனாக ஆரம்பித்து இப்போது எழுத்திக்களில் பெறுப்பான பையனாக மாறியிருக்கின்றிர்கள். தெண்டுல்கர் மாதிரி இருவது வருடம் நிலைத்து ஆட எனது வாழ்த்துக்கள்.
மரம் நடும் தகவல் அருமை. இருக்கும் மரங்களையாவது வெட்டாமல் இருந்தால் சரி. நன்றி.
பதிவர் கூட்டத்திற்கு வந்தால் வடை கிடைக்குமா என தெரியப் படுத்தவும். கூட்டத்திற்கு எனது வாழ்த்துக்கள்.
கவிதை அருமை. நன்றி நண்பரே.
அன்பின் வால்
குவியல் கலக்கல்
முதலில் வாலிற்கு இனிய நல்வாழ்த்துகள் - ஈராண்டு முடிந்து இருநூறு ஆண்டுகளாக வளர்வதற்கு.
ரோமியோ பாய்க்கும் நல்வாழ்த்துகள்
லவ்டேல்மேடிக்கும் இனிய திருமண நல்வாழ்த்துகள்
இயற்கையைக் காக்கும் சிந்தனைக்குப் பாராட்டுகள் - மரம் நடுவோம் - நல்ல செயல்
இரண்டு வருடங்களாக உங்கள் உயிர் வேட்டை தொடர்கிறதா? வாழ்த்துக்கள்
வழக்கம் போல குவியல் நலம்..
வாழ்த்துகள் வால்ஸ் :)
இரண்டுக்கு வாழ்த்துக்கள் 'தல'வால்!!
வாழ்த்துக்கள் அண்ணா
//வாழ்த்துக்கள் 'தல'வால்!!//
repeattu
வாழ்த்துக்கள் வால்ஸ். கீப் இட் அப்
//ஒரு வருடங்கள் தொடர்ச்சியான மரணமொக்கைகள் தான்//
நல்ல வேல நா ஸ்டார்ட் பண்ணி ௨ வாரம் தான் ஆகுது.........
vaazhththukkal
vaazhththukkal
அருண்,
இரண்டு வருடமாக தொடர்ச்சியாக எழுதி வருவதற்கு வாழ்த்துக்கள்.இரண்டு வருட உழைப்பில் நேரத்தை தின்று உருவானவை உங்கள் எழுத்துக்கள். பெரிய விஷயம்தான் இது.
000
மேடி அழைத்திருக்கிறார். ஈரோடு வரலாம் என்றிருக்கிறேன். நண்பர்கள் சிலரும் வர இருக்கிறார்கள். தகவல் தெரிவிக்கிறேன். சந்திக்கலாம்.
000
கவிதைக்கு பின்னூட்டமாக எழுதியதும் கவிதையாகவே இருக்கிறது. வாழ்த்துக்கள்.
000
- பொன்.வாசுதேவன்
அருண்,
இரண்டு வருடமாக தொடர்ச்சியாக எழுதி வருவதற்கு வாழ்த்துக்கள்.இரண்டு வருட உழைப்பில் நேரத்தை தின்று உருவானவை உங்கள் எழுத்துக்கள். பெரிய விஷயம்தான் இது.
000
மேடி அழைத்திருக்கிறார். ஈரோடு வரலாம் என்றிருக்கிறேன். நண்பர்கள் சிலரும் வர இருக்கிறார்கள். தகவல் தெரிவிக்கிறேன். சந்திக்கலாம்.
000
கவிதைக்கு பின்னூட்டமாக எழுதியதும் கவிதையாகவே இருக்கிறது. வாழ்த்துக்கள்.
000
- பொன்.வாசுதேவன்
நல்ல குவியல் . மண்ணரிப்பை தடுக்க மரம் நடுவது இன்றியமையாதது அதை பற்றிய தகவல் சிந்திக்க வேண்டியாயதும் செயல் படுத்த கடமை பட்டவர்களாக இருக்கிறோம்
எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம், உங்களது உளியே என்னை செதுக்கியது!
நன்றி நன்றி நன்றி! //
இது தான் வால்.
ரோமியோ பாய் அவ்ளோ பெரியவரா... அப்புறம் என்ன 'பாய்'ன்னு பேரு. 'மேன்'ன்னு மாத்த சொல்லுங்க. ;)
எனிவே, வாழ்த்துக்கள் ரோமியோ பாய். உங்களோட ரோமியோ பாய் வந்தாச்சா...
ஆமா, நானும் செய்தியில் படித்தேன். ஊட்டியில் பலத்த சேதம்.
நீங்கள் நாட்டுக்கு எதாவது செய்ய விரும்பினால், எல்லையில் சென்று போரிட்டோ, குடுவைகள் வரிசையாக வைத்து ஆராய்ச்சி செய்தோ தான் நன்மை செய்ய முடியும் என்று அவசியமில்லை, தயவுசெய்து ஒரு மரமாவது நடுங்கள்! //
நல்ல சேதி.
நானும் படம் பார்த்து ரொம்ப சிரித்தேன். அதில் அபிஷேக்கின் நடிப்பு ரொம்ப அழகு. ஜானைப் பார்த்ததும் ரெண்டு கையையும் அசைத்துக் கொண்டே ஓடி வருவார் ஒரு சீனில். அப்பப்பா...
இதே மாதிரி நிறைய கவிதைகள் உள்ளன வால். எனக்கும் புரிவதில்லை. ஒருவேளை, இன்னும் நாம வளரலையோ...
அன்பு நண்பர் வால்பையனுக்கு ௨ வது வருட மொக்கை பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். ஆனாலும் அவ்வபோது வரும் நல்ல கமல் படம் வருவது போல சில நல்ல பதிவுகளும் வந்தது உண்டு.
ஈரோடு பதிவர் மீட்டிங் ஆஹா..
ஏற்கனவே நாம் சொதப்பல் செய்தது எல்லாம் போதாது ?
ஏற்கனவே கற்பனை மீட்டிங் பதிவை எடுத்து விடுங்கள்
(ஏன் என்றால் அந்த தேதியில் நான் ஊரில் இல்லை)
//
நாளையோட நான் பதிவெழுத வந்து இரண்டு வருடம் ஆகிறது!
//
வாழ்த்துக்கள் சீனியர்..
//
நீங்கள் நாட்டுக்கு எதாவது செய்ய விரும்பினால், ............
தயவுசெய்து ஒரு மரமாவது நடுங்கள்!
//
பட்.. உங்க நியாயம் எனக்கு பிடிச்சிருக்கு..
இயன்ற அளவு செய்துகொண்டுள்ளேன் வாலு..
//
ஈரோட்டில் ஆங்காங்கே ஒளிந்திருக்கும் பதிவர்கள் நண்பர்கள் முக்காட்டை விலக்கி கொஞ்சம் முகம் காட்டினால் தன்யனாவேன்!
//
பக்கத்து ஊர்ல இருந்து வந்தா ஒத்துக்க மாட்டீங்களா சார்..
ரோமியோபாய்க்கு வாழ்த்துக்கள்..
மற்றும்
(இதுவரை அறிமுகமில்லாத) நண்பர் லவ்டேல் மேடிக்கும் திருமணநல்வாழ்த்துக்கள்..
//நாளையோட நான் பதிவெழுத வந்து இரண்டு வருடம் ஆகிறது!//
முதலில் வாழ்த்துகள்
//பதிவரும் நண்பரும் ஆகிய ரோமியோபாய் அவர்களுக்கு இன்று ஆண்குழந்தை பிறந்திருக்கிறது!,//
நண்பருக்கு வாழ்த்துகள்
//தயவுசெய்து ஒரு மரமாவது நடுங்கள்!//
மிக்க மகிழ்ச்சி...... கண்டிப்பாக
//வரும் 27 ஆம் தேதி ஈரோடில் ஒரு பதிவர் சந்திப்பு நடத்தலாம் என ஒரு சின்ன நப்பாசை//
வாழ்த்துகளை சொல்லிவிடுங்கள்
கவிதையும் நல்லாயிருக்கு... அடுத்த இடுகையில் பார்க்கலாம்
2 வருடமாக எழுதுவதற்கு வாழ்த்துக்கள் வால்
வாழ்த்துக்கள் வால்.
மரம் நட சொன்னது அருமை.
ஹிந்திபட அறிமுகம் அருமை.
2 வருஷமாச்சா தல...???ம்ம்ம்ம் கலக்குங்க.. :-)
இரண்டு வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள் வாலு...
ஊட்டி விஷயம் ரொம்ப வருத்தமான விஷயம்தான். இயற்க்கை அழிந்தால் இதுதான் நடக்கும் என்பதில் ஐயமில்லை......
குவியலில் பல சுவாரசியமான விஷயங்களை தொகுத்து வழங்கி இருக்கிறார் வால்பையன் அவர்கள்.
ரோமியோவுக்கு வாழ்த்துக்கள்!
மேடிக்கு வாழ்த்துக்கள்!!
அப்புறம் அந்த கவிதையும் நல்லா இருக்கு :)
உங்கள் முதல் பதிவு சின்னதுன்னாலும் நறுக்குன்னு இருக்கு. தொடர்ந்து உங்க வலை பதிவை வாசிச்சிட்டு வரேன். படிக்க சுவரச்யமோ சுவாரஸ்யம். இரண்டு வருடங்களை கடந்த உங்களுக்கு வாழ்த்துக்கள். நீங்க கடசில எழுதிருக்கும் கவிதையும் நச்
வாழ்த்துக்கள் அருண்.... கடைசி பின்னூட்டக் கவிதை அருமை...
இரண்டு வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள் வால் பையன்
ரோமியோவுக்கு வாழ்த்துக்கள்!
மேடிக்கு வாழ்த்துக்கள்
இன்னும் இருபது ஆண்டுகளுக்கு உங்களை அசைக்கமுடியாது வால்ஜி!
:)
vazthukkal annna
தோஸ்தானா சரியான லூசு படம் :)-
வாழ்த்துக்கள்
நானும் புதுசா இங்கு வந்துருக்கேன்
உங்களுக்கு மெயில் பண்ணிஇருகேன் பார்த்துட்டு reply பண்ணுக
நீங்க erode ல எங்க????
இரண்டு வருட சேவை!! வாழ்த்துக்கள் வால். நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
வாலு... உங்க வாலை அப்படியே நம்ம பக்கமும் கொஞ்சம் நீட்டுங்க. நாங்களும் இப்போதான் கும்மியடிக்க ஆரம்பிச்சிருக்கோம்
வாழ்த்துக்கள் வால்.
நானும் பின்னூட்டம் போடறேன்.நல்லா பாத்துக்க ,
நானும் பதிவர் . நான்னும் பதிவர்.
இரண்டு வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள்
Congrats...
Btw, Dostana is an old movie. If am not mistaken ultimatetamilmovies.com has dostana with english subs. I have watched it so many times. But, every time I feel like watching a new movie and laugh like a lunatic. I like the part abhishek talking abt how they met. Also the part where Bobby Deol act stupid for listening to those guys.. I cant stop laughing..
//தயவுசெய்து ஒரு மரமாவது நடுங்கள்!//
இந்த வரிக்காக மனதார வணங்குகிறேன்
Me too :D
http://pappu-prabhu.blogspot.com/2009/11/blog-post.html
http://pappu-prabhu.blogspot.com/2009/11/blog-post.html
இரண்டு ஆண்டு வாலுக்கு
முதல் மாதக் குழந்தையின் வாழ்த்துகள்.
(நான் பதிவுலகத்துக்கு வந்து ஒரு மாதம் ஆச்சுங்கோ!)
இந்த ரெண்டு வருடத்தில் சொல் அழகன் எப்ப இருந்து தலை காட்ட ஆரம்பிச்சார் ?
வாழ்த்துக்கள் அருண்
வாழ்த்துகள் தல... வால்....!!!
நம்ம ஊட்டுப்பக்கம் வாரதையே நிறுத்திப்புட்டீங்க.... என்ன கோவமோ??
இரண்டு வருட சாதனை பயணத்திற்கு வாழ்த்துகள் வால் !!!!நிறைய எழுதுங்க..!!!இன்னும் நிறைய சர்ச்சைக்குரிய பதிவுகளை நீங்க தரணும்.
தாமத வருகைக்கு மன்னிக்கவும்.5 நாள் சென்னைப்பயணம் அதான்.மற்றபடி, உங்கள் கவிதை
அசால்ட்டு...அசத்திட்டேள் !!!
நன்றி தல .
இரண்டு வருட சாதனைக்கு (எங்களுக்கு எல்லாம் வேதனை..ச்சும்மா) வாழ்த்துகள் குரு. Keep rocking.
மேடி மற்றும் ரோமியோ பாய்க்கும் வாழ்த்துகள்.
அனுஜன்யா
//வரும் 27 ஆம் தேதி ஈரோடில் //மேடிக்குத் திருமணமா?!!!
முடிந்தால் வந்துவிடுகிறேன்.
டேல் மேடிக்கு திருமண வாழ்த்துக்கள்...
/இப்ப தான் கொஞ்சம் நானே திரும்ப படிக்கிற மாதிரி இருக்கு!/
அட இது வேறயா???:)
//sriram said...
நல்லாதானே போயிட்டு இருக்கு அப்படின்னு நெனைக்கும் போதே ஒரு கவுஜ, இதில உறவு இறுதியற்றதுன்னு ஒரு லைன் வேற- அப்போ எங்கள விடறதாயில்ல??//
அதை விட பெரிய அதிர்ச்சி!
அந்த கவிதை அச்சேறுகிறது!
//pappu said...
உங்களுக்கு ஒரு உண்மைதெரியுமா? மலைப் பிரதேசத்தில் மரம் வளர்த்தால் மேற்கொண்டு மண் சரிவிற்கு வழி செய்யும். நமக்கு உதவாது. புற்கள், புதர்கள் இருப்பது மிக நல்லது என்று எதிலோ படித்த ஞாபகம்!//
படர்ந்த வேர்கள் கொண்ட மரத்தினால் பயனில்லை, அதே நேரம் அதிக எடையுள்ள கட்டிடங்கள் பெரும் சேதத்தை விளைவிக்க கூடியவை!
புல், புதரெல்லாம் சமவெளிக்கு தான் லாயக்கு!
//Dr.Rudhran said...
வாழ்த்துகள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்//
உங்கள் ஊக்கமே எனக்கு பூஸ்ட் சார்!
//Muthukumar said...
வாழ்த்துக்கள் அருண் ...வெகுநாட்களாக உங்களை படித்தாலும் இதுதான் எனது முதல் பின்னூட்டம்...தொடர்ந்து நன்கு எழுத வாழ்த்துக்கள்...
ஈரோடு முத்து...//
வரும் 20 ஆம் தேதி மறந்துடாதிங்க தல!
//தமிழரசி said...
இரண்டு வருடங்களாக உங்கள் உயிர் வேட்டை தொடர்கிறதா? வாழ்த்துக்கள்//
அதிக உயிர்கள் வாங்கியதில் உங்களுக்கு தான் முதல் பெயராமே!
//மணிகண்டன் said...
தோஸ்தானா சரியான லூசு படம் :)-//
என்னை மாதிரி லூசுகளுக்கு அப்படி இருந்தா தானே தல பிடிக்குது!
//nvnkmr said...
வாழ்த்துக்கள்
நானும் புதுசா இங்கு வந்துருக்கேன்
உங்களுக்கு மெயில் பண்ணிஇருகேன் பார்த்துட்டு reply பண்ணுக
நீங்க erode ல எங்க????//
மெயில் வரலையே தல!
ஈரோட்ல கருங்கல்பாளையம்!
பின்னூட்டமிட்டு வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!
Post a Comment