கொலை கொலையாம் முந்திரிக்கா!..

விடியற்காலையில் ஆடறுக்கும் போது அதை நேரில் சென்ற பார்க்க ஆசைபட்டு நேரமாக எழுந்து இறைச்சிகடைக்கு செல்லும் நந்தாவுக்கு ஒரு கொலை செய்து பார்க்கணும் என்று தோன்றியதில் ஆச்சர்யம் எதுவுமில்லை, ஆனால் ஒரே பிரச்சனை அவனது கொலையில் ஒரு நியாயம் இருக்க வேண்டும், தன்னளவில் குற்ற உணர்வு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே அவனது திட்டம், வெளிஆட்களை தேடி அவர்களது நடவடிக்கைகளை அறிந்து கொள்வதை விட தன் மனைவி பூர்ணிமாவை கொல்வதே சிறப்பாக பட்டது அவனுக்கு!

அவனுக்கு இதைவிட சரியான தண்டனை இல்லை என்று மனதுக்குள் நினைத்து கொண்டாள் பூர்ணிமா!, என்ன இருந்தாலும் நான் ஆசையாக வளர்த்த புறாவை அப்படியா செய்வான், அவனுக்கு என்ன நான் அடிமையா!? இன்றோடு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும், பச்சமுத்து இன்னும் ஒரு மணிநேரத்தில் வந்துவிடுவான், கேட்டது மட்டும் கிடைத்து விட்டாள் நந்தா சாட்சியே இல்லாமல் பரலோகம் அனுப்பிவிடலாம், கைப்பையை ஒரு முறை அமுக்கி பார்த்து உள்ளே பணமிருப்பதை உறுதி செய்து கொண்டாள்

அவனிடத்தில் அதற்கு காரணமும் இருந்தது, தான் ஆசையாக வளர்த்த பூனையை தோசை சுடும் தவாவினால் தலையில் அடித்து கொன்றுவிட்டாள், அப்படி பெரிதாக ஒன்றும் தவறும் செய்யவில்லை அந்த பூனை, அவள் சாப்பிட்டு கொண்டிருந்த தட்டில் வாய் வைத்து விட்டதாம், அதற்காக தலையில் அடித்து கொல்லலாமா!?, அத்தோடு விட்டாளா, கொள்ளை புறம் எடுத்து போய் அதன் தோலை உரித்து கொடியில் காயப்போட்டிருக்கிறாள், தவறு செய்த என் பூனையின் கதியை பார்க்க வேண்டுமாம்!

கூண்டுக்குள் இருந்தது அந்த புறா, அவன் பூனை மாதிரி எல்லா இடத்திலும் அசிங்கம் செய்து கொண்டா இருந்தது, அதை போய் அப்படி கொன்றானே, அவனை விடக்கூடாது, அதே போல் அவனும் துடிதுடித்து சாக வேண்டும், என்ன கொடுரமாக கொன்றான் என் செல்லப்புறாவை, அவன் போன் பேசும் போது கத்தி கொண்டிருந்ததாம், அதற்காக பெரிய சட்டியில் சுடுதண்ணீர் வைத்து உயிரோடு அதற்குள் என் செல்லப்புறாவை போட்டு மூடியிருக்கிறான், அத்தோடு விட்டானா, அதன் தோலை உரித்து என்னிடமே காட்டுகிறான்!

அந்த புறாவை வறுத்து தின்றிருப்பேன், ஆனால் அவள் வளர்த்த புறா அவளை போலவே விசமாய் இருக்கும், அதான் தோலை மட்டும் உரித்து டைனிங் டேபிளில் வைத்துவிட்டேன்! அப்போது அதை பார்க்கணுமே! வெளீர் ரோஸ் நிறத்தில் அவ்வளவு அழகாக இருந்தது, அதை போய் இறகுகளோடு அசிங்கமாக வைத்திருந்தாள், அவளுக்கு நாளை தான் கடைசி நாள்! கேஸ் சிலிண்டரின் டியூப்பை வெட்டி விட்டாச்சு! வாசம் வராமல் இருக்க ரூம்ஸ்பிரே அடிச்சாச்சு, காலையில் அடுப்பு பற்ற வைத்தாள் போதும், கருகி கரிகட்டையாகி விடுவாள், கருகினாள் எப்படியிருப்பாள் என கற்பணையில் மூழ்கினான் நந்தா!



கதவுக்கு பின்னால் இருந்து பார்த்து கொண்டிருந்தால் பூர்ணிமா!, எழுந்து விட்டான், பல்விழக்கியதும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் அவனுக்கு அதன் பின் தான் காபி கூட, எப்படியும் ஃப்ரிட்ஜை திறப்பான் என கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள், அதே முகம் துடைத்து கொண்டு வருகிறான், திறந்துவிட்டான், கையை உள்நுழைக்கிறான்,

சட்டென்று கையை உதறி வெளியே எடுத்தான் நந்தா, சுருகென்று முள் தைத்தது போன்று இருந்த இடத்தை பார்த்தான், அது பல் படிந்த இடம், கடித்தது பாம்பு, சற்றே விலகி ஃப்ரிட்ஜை திறந்து பார்த்தான், உள்ளே ஒரு விரியன் பாம்பு இன்னமும் சீற்றம் குறையாமல் இருந்தது, படாரென்று மூடியவன், பூர்ணிமா என்று கத்தினான், பதட்டத்தில் போன் ரீசிவரை தலைகீழாக எடுத்து காதில் வைத்தான், அது எப்படி வைத்தாலும் செத்து போய் ரொம்ப நேரம் ஆச்சு என்றே சொல்லியது, தற்செயலாக பூர்ணிமா கதவின் இடக்கில் நின்று கொண்டிருப்பதை பார்த்தான்!

பூர்ணிமாவுக்கு புரிந்து விட்டது பார்த்து விட்டான் என்று, மெளனபுன்னகையுடன் வெளியே வந்தாள், தன்னை தாக்க வந்த நந்தாவின் நெஞ்சில் அநாயசமாக ஒரு உதை விட்டாள், தூரபோய் விழந்தவனுக்கு எழ முடியவில்லை, பாம்பு கடித்த இடத்தில் இப்பொழுது வீங்கியிருந்தது, தோள்பட்டை வரை ஊசிகுத்தியது போல் பரவியது, நெஞ்சில் எதோ அடைப்பது போல் இருந்தது, கண்கள் சொருகி கொண்டு வந்தது, மெல்ல மெல்ல பூர்ணிமா அவனது பார்வையிலிருந்து மறைந்தாள்!

அவளுக்கு பாம்பு கொடுத்த பச்சமுத்துவுக்கு பூர்ணிமா எப்படி செத்தாள் என்று இன்றுவரை தெரியாது, யாரும் சொல்லிவிடாதீர்கள்!

61 வாங்கிகட்டி கொண்டது:

அகில் பூங்குன்றன் said...

அதற்கப்புறம் அடுப்பை பூர்னிமா பற்ற வைத்தாங்களா...???

அமர பாரதி said...

அருன்,

வன்முறை மிக அதிகமாக இருக்கிறது. முழுமையாகக் கூடப் படிக்க முடியவில்லை.

கடைக்குட்டி said...

//அந்த புறாவை வறுத்து தின்றிருப்பேன், ஆனால் அவள் வளர்த்த புறா அவளை போலவே விசமாய் இருக்கும், அதான் தோலை மட்டும் உரித்து டைனிங் டேபிளில் வைத்துவிட்டேன்! //

இதுக்கப்புறம் படிக்கனுமான்னு நெனச்சு திருப்பியும் படிச்சேன்..

ஆமா பூர்னிமா எப்டி செத்தாங்க.. ??? (என்னடா இப்பிடி மாங்கா மாதிரி கேக்குறியேன்னு கேட்டா என்கிட்ட பதில் இல்ல.. :-)

நம்ம அறிவு அவ்ளோதண்ணே...

Prabhu said...

இதுதான் நம்ம கதை. பலமா வயலன்ஸ் இருந்தாதான் நம்ம கதை. சூப்பர் தல!

அப்துல்மாலிக் said...

பூனைக்கும் புறாவுக்கும் "வால்" இருக்காமே, எங்கேயோ லாஜிக் இடிக்குதே

கதை முன்னரே படித்தது, பார்த்தது என்றாலும் அதற்காக சொல்லப்பட்ட காரணம் மற்றும் சொல்லப்பட்ட விதம்... குட்

தாரணி பிரியா said...

ரொம்ப வயலண்டா இருக்குங்க வால்.

பா.ராஜாராம் said...

வன்முறைதான்...நடை மிக அருமை அருண்!முடிவை நீங்கள் சொல்கிற விதம் ரொம்ப
பிடிச்சு இருக்கு.

ராஜவம்சம் said...

இதயம் பலகீனமானவர்கள் படிக்வேண்டாம் என்று தலைப்பில் எச்சரிக்கை இடவும் என்னைப்போல் இளகியமனம் உள்ளவர்கள் நிறையபேர் இருகிறார்கள்

RAMYA said...

ஐயோ! வாலு இதைப் படிச்சிட்டு ரொம்ப பயந்து போனேன் போங்க
யாரு யாரை எப்போ கொலை பண்ணுவாங்கன்னே தெரியலையே!

ஆனா ரொம்ப பயந்து வந்திச்சு, சும்மா சொல்லக் கூடாது திகில் நல்லா வந்திருக்கு.

எனக்கு கூட எப்படி ஒரு திகில் கதை எழுதனும்னு ஆசை பாதி எழுதி இருக்கேன் பார்க்கலாம் எப்போ முடிக்கிறேன்னு:(

RAMYA said...

பூர்ணிமா செத்தது எப்படின்னு எனக்கு புரியல வாலு :((

RAMYA said...
This comment has been removed by the author.
ஹேமா said...

ஏன் வாலு கொலை கொலைன்னு பயமுறுதுறீங்க !

ஆ.ஞானசேகரன் said...

//அவளுக்கு பாம்பு கொடுத்த பச்சமுத்துவுக்கு பூர்ணிமா எப்படி செத்தாள் என்று இன்றுவரை தெரியாது, யாரும் சொல்லிவிடாதீர்கள்//

நான் சொல்லவில்லை... நீங்கள் ராத்திரி அடித்த சரக்கு மயக்கத்தில் சொல்லிவிடாதீர்கள் நண்பா,....

ஆ.ஞானசேகரன் said...

கொலைனா... இப்படியா... ஒரே கொலையாவே இருக்கே

ப்ரியமுடன் வசந்த் said...

டெர்ரர் தல..

vasu balaji said...

முந்திரிக்காய காணோம். விடிய 3 மணிக்கு இதப் படிச்சிட்டு தூங்கினா மாதிரிதான் அவ்வ்வ். ஒரு கண்ணுல பூனை தொங்குது. இன்னொண்ணில புறா.

கோபிநாத் said...

கொன்னுட்டிங்க தல ;)

cheena (சீனா) said...

யப்பா வாலு

ஏன் இந்த கொலவெறி

பூர்ணிமா காபி போட அடுப்பப் பத்த வச்சாளா - இல்ல பாம்பு கடிச்சிச்சா

நல்லாருப்பா

பிரபாகர் said...

சாவடிச்சிட்டீங்க அருண்... நாலு உயிர சொன்னேன்....
நல்லாருக்குங்க...

பிரபாகர்...

VISA said...

கதை முழுக்க ஒரு திகில் கிளப்பியிருந்தீர்கள். வாழ்த்துக்கள்.
கதையோட்டமும் முடிவும் அருமை தான். ஆனால் இருவரும் கொலை செய்வதற்காக எடுத்துக்கொண்ட காரணங்கள் வலுவானதாக இருந்திருந்தால் சூப்பர் திரில்லராக இருந்திருக்கும்.

பித்தனின் வாக்கு said...

இன்னா கதை இது ஒரே மெர்சலா கீதே. யப்பா!!! பூனை, புறாக்கெல்லாம்மா கொலை பண்ணுவாங்க?. சரி கதைதான, பரவாயில்லை.
இந்த போஜராருக்குத்தான் நான் ஒன்னும் வளர்ப்பது இல்லை. நல்ல நடை, நல்ல கதை வால்ஸ். நன்றி.

பித்தனின் வாக்கு said...

// எனக்கு கூட எப்படி ஒரு திகில் கதை எழுதனும்னு ஆசை பாதி எழுதி இருக்கேன் பார்க்கலாம் எப்போ முடிக்கிறேன்னு:( //
அய்யே ரம்யா உனக்கு ஏன் இந்த விபரித ஆசை. நாங்க நல்லா இருக்கிறது புடிக்கலையா? சரி சரி எழுதுங்க நாங்க கண்ணை மூடிக்கொண்டு படிக்கத் தயார்.

Jawahar said...

The story gives a divine moral. No wife tollerates her husband liking a pussy infront of her. No husband wants to be pigeoned by his wife.

http://kgjawarlal.wordpress.com

Raju said...

"சைக்கோ விகடன்" படித்த பாதிப்பா வால்...?

Raju said...

\\ஆனால் இருவரும் கொலை செய்வதற்காக எடுத்துக்கொண்ட காரணங்கள் வலுவானதாக இருந்திருந்தால் சூப்பர் திரில்லராக இருந்திருக்கும்.\\

சைக்கோக்களுக்கு காரணமே தேவையில்லை..! ஒரு சப்பை விஷயத்திற்காக கூட கொலை செய்வார்கள்.
நூறாவது நாள் ஜெய்பிரகாஷ் தெரியுமா உங்களுக்கு..?!

இறைவனை தேடி said...

தல கலக்கல்....

பூர்ணிமாவுக்கு என்ன ஆச்சு..

ஸ்ரீனிவாசன் said...

என் இந்த கொலை வெறி ?????

இளவட்டம் said...

மேரட்டலா இருக்கு தல.செம ஸ்டோரி.

Unknown said...

தல..

ஒன்னும் சொல்ல முடியல தல..
ரொம்ப டெரர்ரா இருக்கு..

hiuhiuw said...

நீங்க ஆனந்த விகடன் வாங்கறத மொதல்ல நிறுத்துங்க தல.... இலவச இணைப்பு போட்டாலும் போட்டான் உங்க அளப்பற தாங்க முடியல !

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

nice story brother.

அ.மு.செய்யது said...

// நீங்க ஆனந்த விகடன் வாங்கறத மொதல்ல நிறுத்துங்க தல.... இலவச இணைப்பு போட்டாலும் போட்டான் உங்க அளப்பற தாங்க முடியல !//

ஏங்க ராஜன்..

அப்ப கிசுகிசு எழுதுறது...சிறுகதை எழுதுறது...பதிவர் 25 எழுதுறது...எல்லாத்தையும்
நிறுத்திரலாமா ??

அதான் ஆனந்த விகடன் பண்றாங்களே ராஜன்..!!

( Nice thriller vaal !!! aana violence !! )

புலவன் புலிகேசி said...

தல இப்பதான் சைக்கோ விகடன் படித்து முடித்தேன். பின்னாடியே நீங்களும் இப்படி எழுதிட்டீங்களே....

அகல்விளக்கு said...

அய்யய்யோ.......

கொல வெறியோட இருப்பீங்க போல......

S.A. நவாஸுதீன் said...

கதை செம டெர்ரரா இருந்தாலும் கொலைக்கான காரணங்கள் வலுவானதா சொல்லி இருந்திருந்தா இன்னும் ஸ்ட்ராங்கா இருந்திருக்கும் வால்.

கதை சொன்னவிதம் நல்லா இருக்கு

பட்டாம்பூச்சி said...

:(

விக்னேஷ்வரி said...

வித்தியாசமா இருக்கு. கொலைக்கான காரணங்கள் சரியா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் வால்.

கலையரசன் said...

என்ன அழகா கொலையை..
கலையா எழுதியிருக்கீங்க தல!

செத்துசெத்து விளையாடலாமா?

Bhuvanesh said...

அண்ணே.. கதைல பச்சமுத்துவ மட்டும் ஏன் உயிரோட விட்டீங்க ? அங்க தான் ட்விஸ்ட் வெச்சிருக்கீங்களா ?

கார்ல்ஸ்பெர்க் said...

//வாசம் வராமல் இருக்க ரூம்ஸ்பிரே அடிச்சாச்சு//

- ரூம்ஸ்பிரே அடிச்சா Gas வாசன வராதா தல??

Ashok D said...

சும்மா பூந்து விளையாடிட்டப்பா வாலு, சுவாரஸ்யம்.

//அப்போது அதை பார்க்கணுமே! வெளீர் ரோஸ் நிறத்தில் அவ்வளவு அழகாக இருந்தது, அதை போய் இறகுகளோடு அசிங்கமாக வைத்திருந்தாள்//

:)

பின்னோக்கி said...

டிஸ்கவரி சேனல்ல வர்ற ஒன்னக்கூட விட்டு வைக்காம எல்லாத்தையும் சாவடிச்சுட்டீங்களே ?.

Menaga Sathia said...

வாலு அதுக்கப்புறம் பூர்ணிமா அடுப்பை பத்த வச்சாங்களா?

Kumky said...

அதாகப்பட்டது, தோலை உரிக்காமலும், கடைசி பாராவில் உதை விடாமலும் இருந்திருந்தால் மிக நன்றாக வந்திருக்கும் வால்....வேகத்துல வந்து விழுந்த வார்த்தைகளோ.....

Beski said...

நல்லாதான் இருக்கு தல, ஆனா இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்கலாம்.

सुREஷ் कुMAர் said...

ஐயய்யோ.. கொல்றாங்களே.. கொல்றாங்களே..

सुREஷ் कुMAர் said...

கொன்னுட்டீங்க தல..

Prasanna said...

சா (SAW), Final Destination மாதிரி 'கொடூர கொலைகள் 4' நு படம் எடுக்கலாம் போல.. படிக்கும் போது ஒரு அமானுஷ்ய அனுபவம்.. A Clockwork Orange மாதிரி படங்களை பார்ப்பது போல்..

vanila said...

வால் ஜீ..

போன பின்னோட்டத்துல, உங்க தல ராஜேஷ் குமார் மாதிரி கடேசி பகுதிய முடிச்சிடாதீங்கன்னுட்டு சொன்னம்ல.. இந்த தடவ நீங்க உங்க தல தலைப்பையே, வச்சுப்புட்டீங்க போல ஜீ.. அடுத்து வேற என்ன தலைப்பு.. கொலையுதிர் காலம்'னா.. கன்டினீ பண்ணுங்க ஜீ.. P.வாசு படம்லாம் பாத்தாக்கா.. பத்து பதினஞ்சு shot' ஆவது, மலையாள படத்துல இருந்து அப்படியே சுட்டு வச்சிருப்பாரு.. நெறைய உதாரணம் இருக்கு.. ஒன்னு ரெண்டுன்னா சொல்லலாம்.. ஆனா ரொம்ப நல்லா இருக்கும்..

ஏதோ உங்க இந்த கதையோட மொத பாராவ படிக்கிறப்ப மட்டும் எங்கயோ படிச்ச மாதிரி ஞாவகம் வந்துச்சு.. (Blog' ல தானோ)..

Any way .. Good work.. Keep Going, வால்(ழ்)க வளமுடன்.. வால் நீளட்டும்..

vanila said...

//சைக்கோக்களுக்கு காரணமே தேவையில்லை..! ஒரு சப்பை விஷயத்திற்காக கூட கொலை செய்வார்கள்.
நூறாவது நாள் ஜெய்பிரகாஷ் தெரியுமா உங்களுக்கு..?!//

உங்களுக்கு அவரத்தெரியுமா ராஜு.. பயமுறுத்துறீங்களே ஜீ..
ஒருத்தர் என்னனா .. கொலயப்பாத்தெந்கராரு, அதனால அவர (அரசியல்வாதிய) பிடிக்காதுங்கராரு.. எல்லாரும் பகுமானமா இருந்துக்கங்கப்பா.. அம்புட்டுத்தேன்..

ஊடகன் said...

தொடக்கமேல்லாம் நல்லா தான் இருக்கு , ஆனால் நடுவில் கொலப்புதே............

மின்னுது மின்னல் said...

ஃப்ரிட்ஜீகுள்ள பாம்பு வைச்சதையும் நம்ப முடியலை.!

கணவன் செத்தவுடன் காபி போட அடுப்பை பத்தவைச்சாங்க என்பதையும் நம்புற மாதிரி இல்லை !!

Suresh Kumar said...

அப்போ கொலை கொலை முந்திரிக்கானா இது தானா ?

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

ம்ம்ம்.. நல்லா கொல்றீங்க

பெசொவி said...

கடைசி பாராவுக்கு முன்னால் இப்படி ஒரு லைன் சேர்த்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

"இந்த சந்தோஷத்தை கொண்டாட நிச்சயம் பால் பாயசம்தான் செய்யணும்."மகிழ்ச்சியுடன் அடுக்களையில் நுழைந்த பூர்ணிமா, அடுப்பைப் பற்ற வைக்.....

நசரேயன் said...

//இன்றுவரை தெரியாது, யாரும் சொல்லிவிடாதீர்கள்//

கண்டிப்பா

Anonymous said...

தெலுகு படம் பார்த்த மாதிரி இருந்தது. :)

வால்பையன் said...

பூர்ணிமா அதன் பின் என்ன செய்தால் என்பது கற்பனையில் விடப்பட்டது, அல்லது இரண்டாம் பாகமாக தொடர வாய்ப்பளிக்கப்பட்டது!, நாம் விருப்பப்பட்டால் தொடரலாம் இல்லையென்றால் பூர்ணிமா சமாதிக்கு பால் ஊத்திட்டு சரக்கு அடிக்க போகலாம்!

வால்பையன் said...

@ரம்யா

எனக்கு கூட எப்படி ஒரு திகில் கதை எழுதனும்னு ஆசை பாதி எழுதி இருக்கேன் பார்க்கலாம் எப்போ முடிக்கிறேன்னு:(//

கதவுக்கு பின்னாடி நின்னுக்கிட்டு ”ப்ப்ப்பேன்னு” பயம் காட்டுறது திகில் கதை ஆகிறாது! பார்த்து எழுதுங்க!

வால்பையன் said...

//கார்ல்ஸ்பெர்க் said...
//வாசம் வராமல் இருக்க ரூம்ஸ்பிரே அடிச்சாச்சு//
- ரூம்ஸ்பிரே அடிச்சா Gas வாசன வராதா தல??//

கேள்வியே ரொம்ப வில்லங்கமா இருக்கே!

வால்பையன் said...

பின்னூட்டமிட்டு வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி!

!

Blog Widget by LinkWithin