மதியம் திங்கள், நவம்பர் 9, 2009

எப்படியெல்லாம் வைக்கிறாங்கய்யா டிஸ்கி!..

சாதாரணமாக பதிவுகளிலில் டிஸ்கி என்ற வார்த்தையை பார்த்திருப்போம், disclaimer என்ற வார்த்தையின் சுருக்கம் தான் டிஸ்கி, அதில் கூட என்னன்ன ஏடாகூடாங்கள் செய்யலாம் என யோசித்ததில் வந்தது, நண்பர்களுக்கு தெரிவதை பின்னூட்டத்தில் சொல்லலாம்!

***

டிஸ்கி:
மேற்கண்ட கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே, ஆனால் யாருடய கற்பனைன்னு தான் தெரியாது!


டிஸ்கி:
மேற்கண்ட கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை, ஆனா இன்னும் நடக்கவில்லை!


டிஸ்கி:
மேற்கண்ட விமர்சனத்தை சம்பந்தபட்டவர் படிக்க நேர்ந்தால் தயவுசெய்து இதை புனைவாக எடுத்துக்கொள்ளவும்


டிஸ்கி:
மேற்கண்ட கட்டுரை யாரையும் புண் படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல, அப்படி யாரும் புண்பட்டிருந்தால் கம்பெனி மருந்து வாங்கிதராது!


டிஸ்கி:
தயவுசெய்து யாரும் கதையில் வரும் நாயகன்(நாயகி) கதாபாத்திரத்தோடு உங்களை உருவகப்படுத்தாதீர்கள், கதையில் வரும் நாயகி(நாயகன்) தற்கொலை செய்து கொள்ளக்கூடும்!


டிஸ்கி:
மேற்கண்ட கவிதை, கவிதை இல்லை எனும் பட்சத்தில், அதை எழுதியது நானில்லை என கொள்க!


டிஸ்கி:
இந்த அரசியல் விமர்சனகட்டுரை எழுதிய பதிவர் வெளிநாடு சுற்றிலாவில் இருப்பதால், சம்பந்தபட்டவர்கள் ஆட்டோ அனுப்பி ஏமாற வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறார்கள்!


டிஸ்கி:
இது நகைச்சுவை பதிவு, படித்தும் சிரிப்பு வராத பட்சத்தில் சிரிப்பொலி சேனல் பார்த்துவிட்டு பின்னூட்டம் போடவும்!(விளைவுகளுக்கு கம்பெனி பொறுபல்ல)


டிஸ்கி:
இந்த ஆராய்ச்சி கட்டுரையை படிக்கும் போது யாரும் சோதனை குடுவைகள் அருகில் வைத்து கொள்ளவேண்டும் என்பது அவசியமல்ல!


டிஸ்கி:
இந்த கட்டுரை, படிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும், மற்றவர்கள் படிக்க வேண்டாம்!



டிஸ்கி:
இங்கிருக்கும் டிஸ்கியை யாரேனும் பயன்படுத்தினால், இது வால்பையன் பதிவுலுள்ள டிஸ்கியென்று டிஸ்கி போட வேண்டும்!


டிஸ்கி:
கும்மி ஸ்டார்ட்!


91 வாங்கிகட்டி கொண்டது:

Vidhoosh said...

ஏதோ ஒன்னு கிடைச்சுடரதுங்க உங்களுக்கும்..:))

வரதராஜலு .பூ said...

:))

Vidhoosh said...

ஹையா.. முதல் போணி நாந்தான.. விளங்கிரும் போங்கோ..

அகல்விளக்கு said...

என்னடா பதிவுல தலயோட பஞ்ச் காணோமேன்னு யோசிச்சேன்..

//இங்கிருக்கும் டிஸ்கியை யாரேனும் பயன்படுத்தினால், இது வால்பையன் பதிவுலுள்ள டிஸ்கியென்று டிஸ்கி போட வேண்டும்!//

:-)

இங்க நிக்கிறீங்க தல...

Thamira said...

வெளங்குச்சு.!

Anonymous said...

தள,
ஜாளியாய் படிக்கனும்னா அதுக்கு உன் பதிவு தான் தள !! சிரந்தது.

சொள் அலகன்

டிஸ்கி : நானும் "தள"யும் நட்பாள் ஒன்னு ஆனா நிசத்திள் வேர ! நான் அவறள்ள

Unknown said...

//டிஸ்கி:
தயவுசெய்து யாரும் கதையில் வரும் நாயகன்(நாயகி) கதாபாத்திரத்தோடு உங்களை உருவகப்படுத்தாதீர்கள், கதையில் வரும் நாயகி(நாயகன்) தற்கொலை செய்து கொள்ளக்கூடும்! //

ஹி ஹி....
அருமை....

அருமையான நகைச்சுவை.....

வால்பையன் said...

//டிஸ்கி : நானும் "தள"யும் நட்பாள் ஒன்னு ஆனா நிசத்திள் வேர ! நான் அவறள்ள //

இது, எங்கப்பன் குதுருகுள்ள இல்லங்கிற கதையாவுல இருக்கு!

அன்புடன் நான் said...

கப்பல்ல‌ கடல விட்டது நல்லாயிருக்கு....
அதாங்க பதிவுல டிஸ்கி போடுரவங்க மத்தியில டிஸ்கியிலேயே பதிவு போடுரிங்களே...அதச் சொன்னேன்.

Anbu said...

:-))

கபிலன் said...

"டிஸ்கி:

இங்கிருக்கும் டிஸ்கியை யாரேனும் பயன்படுத்தினால், இது வால்பையன் பதிவுலுள்ள டிஸ்கியென்று டிஸ்கி போட வேண்டும்! "

என்னா இது சின்னப்புள்ளத் தனமா இருக்கு : )

மின்னுது மின்னல் said...

எல்லா டிஸ்கியும் நல்லா இருக்கு.. :)

யோ வொய்ஸ் (யோகா) said...

//டிஸ்கி:
மேற்கண்ட கவிதை, கவிதை இல்லை எனும் பட்சத்தில், அதை எழுதியது நானில்லை என கொள்க!//


இந்த டிஸ்கியை நான் பயன்படுத்த அனுமதி தரமுடியுமா தல.?

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

எப்படி உங்களால மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க முடுயுது... பட்டைய கெளப்பறீங்க.... :)

ஈரோடு கதிர் said...

//இங்கிருக்கும் டிஸ்கியை யாரேனும் பயன்படுத்தினால், இது வால்பையன் பதிவுலுள்ள டிஸ்கியென்று டிஸ்கி போட வேண்டும்!//

இது நல்லாயிருக்கு

தமிழ் அமுதன் said...

;;)))

மேவி... said...

mudiyala vaals

கலையரசன் said...

எப்டியெல்லாம் யோசிக்கறீங்களே தல...!

S.A. நவாஸுதீன் said...

டிஸ்கி: கவிதை புரியாதவர்களுக்கு - நீங்களும் என்னமாதிரிதானா. அவ்வ்வ்

kishore said...

இன்னைக்கு சரக்கு கொஞ்சம் ஓவரா ஆ ?

kishore said...

இன்னைக்கு சரக்கு கொஞ்சம் ஓவரா ஆ ?

Ashok D said...

இங்கிருக்கும் விஸ்கியை யாரேனும் பயன்படுத்தினால், இது வால்பையன் பதிவுலுள்ள விஸ்கியென்று விஸ்கி போட வேண்டும்

NO said...

அன்பான நண்பர் திரு டிஸ்க்கி பையன், மன்னிக்கவும், வால் பையன் அவர்களுக்கு,

பலவகையான டிஸ்க்கியைப்பற்றி நீங்கள் சொன்னீர்கள், இப்பொழுது, பல வகையானர்வகள் போடவேண்டிய டிஸ்க்கியைப்பற்றி நான் சொல்லுகின்றேன்!

திரு கோவி -
சொல்வதெல்லாம் பீலா, சீரீயஸ் ஆக எடுத்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல!

திரு ஸ்டார் ஜான் -
அடிப்பதெல்லாம் ஜால்ரா மட்டுமே. வேறு சத்தம் வந்தால் நான் பொறுப்பல்ல!

திரு மாதவராஜ்-
எழுதுவதெல்லாம் புரட்ச்சி. காமெடி போல இருந்தது என்றால் நான் பொறுப்பல்ல!

திரு அதிஷா -
எழுதுவதெல்லாம் ஒரிஜினல். சுடப்பட்டதென்றால், நானே கண்டுபிடித்து சொல்வேன், இன்னாரிடமிருந்து என்று!

திரு டோண்டு -
இது பழனியில் தயாரித்ததல்ல. நங்கநல்லூர் சரக்கு!

திரு வினவு -
திட்டுவதெல்லாம் எங்களுடையதே! காரம் கம்மியாக இருந்தால் நாங்கள் சிறிது நல்ல மூடில் இருக்கிறோமே ஒழிய, வேறேதுமில்லை!

திரு வால்பையன் -
சப்ஜக்ட் எதுவேண்டுமானாலும் இருக்கலாம். அனால் கடவுள் மட்டும் இல்லை!

நன்றி

SUFFIX said...

ஒரே குழப்பமா இருக்கே, அதுக்கு நீங்க தான் பொறுப்பு!!

Beski said...

உண்மையாக நான் எழுதியதுதான் இது.

Vidhoosh said...

எங்கே கி.மூ??? எங்கே கி.மூ...?

-வித்யா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வால், கலக்கல்!

வால்பையன் said...

//திரு வால்பையன் -
சப்ஜக்ட் எதுவேண்டுமானாலும் இருக்கலாம். அனால் கடவுள் மட்டும் இல்லை!/


கூடவே சாதி, மதமும் இல்லை!

NO said...

There is No God but Allah and Muhammed is His Prophet - ISLAM

There is No God. வால் பையன் is its Prophet - NO

(Paul Dirrac கைப்பற்றி Neils Bhor's சொல்லியதை திரு வாலுக்காக கொஞ்சம் மாற்றினேன்)

ஊடகன் said...

//இங்கிருக்கும் டிஸ்கியை யாரேனும் பயன்படுத்தினால், இது வால்பையன் பதிவுலுள்ள டிஸ்கியென்று டிஸ்கி போட வேண்டும்!
//

இது வால் பன்ச்.............

மணிஜி said...

விஸ்கி ஓவரோ?

vasu balaji said...

:)). இது டிஸ்கினு நினைச்சா வால் பையன் பொறுப்பல்ல.

புலவன் புலிகேசி said...

//இந்த அரசியல் விமர்சனகட்டுரை எழுதிய பதிவர் வெளிநாடு சுற்றிலாவில் இருப்பதால், சம்பந்தபட்டவர்கள் ஆட்டோ அனுப்பி ஏமாற வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறார்கள்!
//

நல்ல டிஸ்கி....

Iyappan Krishnan said...

நல்ல பதிவு

டிஸ்கி : மேலே போட்டுள்ளது என்னுடைய பின்னூட்டம். இந்த பின்னூட்டமும் டிஸ்கியும் நீங்கள் இங்கேயோ அல்லது வேறிடத்திலே உபயோகிக்கும் போது உபயம் "ஜீவ்ஸ்" என்று குறிப்பிடவும். நன்றி

Beski said...

லேபிலில் போட்டிருப்பதை பார்த்து எதையும் எதிர்பார்த்துப் படிக்க வேண்டாம். லேபிலுக்கும் பதிவிற்கும் சம்பந்தம் இல்லாமலும் இருக்கலாம்.

கௌதமன் said...

டிஸ்கி - டிஸ்கி என்று இவ்வளவு நாளும் பல பதிவுகளில் பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன விளக்கம் என்பதை இன்று, வாலிடம் கற்றேன்.
வாலு பேச்சு - ஞானம் வந்தது டும் டும் டும் !!

R.Gopi said...

சி. கருணாகரசு said...
கப்பல்ல‌ கடல விட்டது நல்லாயிருக்கு....
அதாங்க பதிவுல டிஸ்கி போடுரவங்க மத்தியில டிஸ்கியிலேயே பதிவு போடுரிங்களே...அதச் சொன்னேன்.

********

கருணா, இது டாப்பு....

RAMYA said...

இல்லே!

வாலு ஏதோ ரெண்டு நாட்கள் லீவுலே இருந்தோமா, ரெஸ்ட் எடுத்தோமா, சாப்பிட்டோமா, தூங்கினோமான்னு இல்லாமல் இதுமாதிரி எல்லாம் யோசிக்கறதா :-)

அட கொடுமையே! என்னவோ எழுதி இருக்காரு வாலுன்னு படிக்க வந்தா அதுசரி :)

RAMYA said...

//
Vidhoosh said...
ஹையா.. முதல் போணி நாந்தான.. விளங்கிரும் போங்கோ..
//

இப்போ வெளங்கிச்சா வெளங்கலையா :))

RAMYA said...

//இங்கிருக்கும் டிஸ்கியை யாரேனும் பயன்படுத்தினால், இது வால்பையன் பதிவுலுள்ள டிஸ்கியென்று டிஸ்கி போட வேண்டும்!//


அப்படியா! போடா விட்டால் கம்பெனி செலவுலே ஆளு வச்சி அடிப்பீங்களா:)

Sanjai Gandhi said...

///டிஸ்கி : நானும் "தள"யும் நட்பாள் ஒன்னு ஆனா நிசத்திள் வேர ! நான் அவறள்ள //

இது, எங்கப்பன் குதுருகுள்ள இல்லங்கிற கதையாவுல இருக்கு!//

அட ங்கொன்னியான்.. மேட்டர் இப்டி போகுதா? இவ்ளோ நாள் தள கால் புரியாம இல்ல இருந்தேன்.. ஹிஹி..ரைட்டு.. :))

RAMYA said...

வாலு சும்மா சொல்லக் கூடாது ரொம்ப வித்தியாசமான கோணத்துலே சிந்திச்சிருக்கீங்க!

பதிவு நல்லா வந்திருக்கு!!

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

டிச் கீன்னா இன்னான்னு மெய்யாலுமே இன்னிக்கு தேன் பிரிஞ்சிது மாமே

Menaga Sathia said...

எப்படி வாலு இப்படிலாம் கலக்குறீங்க....

க.பாலாசி said...

//disclaimer என்ற வார்த்தையின் சுருக்கம் தான் டிஸ்கி//

இன்னைக்குத்தான் உங்க மூலமா தெரிஞ்சிகிட்டேன் தலைவரே....நன்றி...

பின்னோக்கி said...

டிஸ்கி
மேலே உள்ளது உங்களுக்கு புரிந்திருந்தால் உடனடியாக எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

டிஸ்கி
மேலே உள்ள பதிவு ..... இங்கிருந்து திருடப்பட்டது.

டிஸ்கி
இது வால்பையன் எழுதிய பதிவு இல்லை.

ஆ! இதழ்கள் said...

பதிவுல டிஸ்கி போய், டிஸ்கியே ஒரு பதிவா.. சர்தான்..

நிஜாம் கான் said...

அண்ணே! டிஸ்கியெல்லாம் அருமை. குத்திக்குமுறுங்க..,

நாகா said...

டிஸ்கியெல்லாம டரியலா இருக்கு வாலண்ணே..!

ஷண்முகப்ரியன் said...

சூப்பர்! மனதாரச் சிரித்தேன்.

தேவன் மாயம் said...

டிஸ்கியெல்லாம் கலக்கல்!!!

cheena (சீனா) said...

எல்லா டிஸ்கியும் சூப்பர் - வாலு
பின்னிட்டே போ -

டிஸ்கி : மேலே போடப்பட்டிருகும் மறுமொழி என்னுடைய வழக்கமான மறு மொழி அல்ல

லதானந்த் said...

சொன்னாக் கோவிச்சுக்காதீங்க!
மொதல் தடவையா எனக்குப் புடிச்ச மாதிரி எழுதியிருக்கீங்க.
வாழ்த்துக்கள்.

என் பங்குக்கு நானும் ஒரு டிஸ்கி!
”நான் மூக்கை மட்டும் உடைக்க மாட்டேன்.”

Tech Shankar said...

சூப்பர்ப் போஸ்ட். ஐ லைக் இட்

Superb Post. I like it

மணிப்பக்கம் said...

I LOVE U Vaalu ...!

ஸ்ரீனிவாசன் said...

எங்கியோ இத படிச்சிருக்கேன் தல, ஒரு மன்னர் கவிதை எழுதி அவரு அமைச்சர் கிட்ட குடுத்து கருது கேட்டாராம் , அதுக்கு அமைச்சர்

"மன்னர் எழுதி இருபதால் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது, இது சாதாரண ஆள் எழுதி இருந்தால் விமர்சனத்துக்கு லாயக்கில்லாதது !!!!"

:)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

fine Mr.Vaal

அ.மு.செய்யது said...

ரொம்ப நாள் கழிச்சி !!!!!!!!!

வால் பையன் ஆட் தி பெஸ்ட்........

வெகுவாக ரசித்தேன் வால் !!!!!!

சிம்பா said...

நீண்ட நாட்கள் கழித்து மிகவும் ரசனையான ஒரு பதிவு. வால்'s இத இத இததான் நான் எதிர்பார்த்தேன்.

வினோத் கெளதம் said...

ரொம்ப தான் யோசிகிறன்களோ..:)

Unknown said...

தல நீங்க எங்கயோ போய்ட்டிங்க..

Admin said...

எப்படி ஐயா இப்படி எல்லாம்...

இரசித்தேன் ..

ச.பிரேம்குமார் said...

வி.வி.சி...... அருமை!

Unknown said...

டிஸ்கினா இன்னானு சொன்னதுக்கு தாக்ஸ் பா..

பட்டாம்பூச்சி said...

:)

Romeoboy said...

முடியல ராசா முடியல .. இந்த மாதிரி எல்லாம் டிஸ்கி போட்டாலும் போடுவாங்க ..

ஹேமா said...

இவ்ளோ....லேட்டா நான் !வாலு ஒவ்வொரு பதிவிலயும் நீங்கதான் டிஸ்கின்னு என்னமோ ஒண்ணு போடறீங்க.ஆரம்பத்தில என்னன்னு புரியறதே இல்ல எனக்கு.உங்க பதிவைப் பார்த்துப் பார்த்து புரிஞ்சிகிட்டேன்.இப்போ நிறைய விளக்கமா பதிவே போட்டிட்டீங்க.நன்றி வாலு.

சுரேகா.. said...

உங்களுக்கு உடம்பெல்லாம் வால்தாங்க!

டிஸ்கி:
இந்தப்பின்னூட்டம் வால்பையனுக்கு போட்டதல்ல.

ஆ.ஞானசேகரன் said...

கொஞ்சம் சிரிப்பு... கொஞம் சிந்தனை.... நல்லாயிருக்கு

தாரணி பிரியா said...

எல்லா டிஸ்கியும் சூப்பர்.

தாரணி பிரியா said...

//டிஸ்கி:
இது நகைச்சுவை பதிவு, படித்தும் சிரிப்பு வராத பட்சத்தில் சிரிப்பொலி சேனல் பார்த்துவிட்டு பின்னூட்டம் போடவும்!(விளைவுகளுக்கு கம்பெனி பொறுபல்ல)//

நான் ஆதித்யா தான் பார்ப்பேன் பரவாயில்லையா

மங்களூர் சிவா said...

:)©
:))©
:)))©
:))))©
:)))))©
:))))))©
:)))))))©
:))))))))©
:)))))))))©
:))))))))))©

இனிமேத்து யாரும் சிரிப்பான் என் அனுமதியில்லாம போடக்கூடாது சொல்லிபுட்டேன்

Anonymous said...

முடியல

Kumky said...

மங்களூர் சிவா said...

:)©
:))©
:)))©
:))))©
:)))))©
:))))))©
:)))))))©
:))))))))©
:)))))))))©
:))))))))))©


ஹி....ஹி....ரிப்பீட்டு...

Kumky said...

வால்....ஒரு பதிவு போட 3
மாசமாகுது எனக்கு...

நீங்க டிச்சிக்கியையே பதிவா போடறவங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

மர தமிழன் said...

டி டி சோ போ (டிஸ்கியை டிஸ்கியாகவே சொன்னீர்கள் போங்கள்)

सुREஷ் कुMAர் said...

டிஸ்கி:
இடுகையில் கொடுக்கப்பட்ட டிஸ்கிகள் அனைத்தும் படிக்கப்பட்டு விட்டது..

கலக்கலுங்கோவ்..

suvaiyaana suvai said...

kalakkal!!!!!!!!!

வீணாபோனவன் said...

இது எல்லாம் எப்படி?. டிஸ்கி போட ஒரு பதிவா? முடியல சாமி (சாமி என்றதும் டென்ஷன் ஆகிடாதிங்க அப்பு :-))

-வீணாபோனவன்.

Nara said...

வால்,
ரொம்ப நாளைக்கு அப்புறம் படித்த நல்லதொரு நகைச்சுவை

லதானந்த் சொன்னா மாதிரி முதன் முதலாக பிடித்தது என்று சொல்லாம்.

பின்னூட்டங்களில் கலக்குகிறீர்.

Nathanjagk said...

டிஸ்கிக்கு ஒரு டிக்சனரி!
நீங்க நிசம்மாவே நரிதான் பாஸு!

Anonymous said...

நகைச்சுவையான ஏடாகூடம்....

Ashok D said...

//இது எல்லாம் எப்படி?. டிஸ்கி போட ஒரு பதிவா? முடியல சாமி (சாமி என்றதும் டென்ஷன் ஆகிடாதிங்க அப்பு :-))

-வீணாபோனவன்.//

நானும் பாத்துட்டே இருக்கேன். வாலுக்கு மட்டும்பின்னோட்டம் போடறீங்க. உங்களையும் மயக்கிட்டாற இந்த வால்.

நானும் அரும்பாடுபட்டு கவிதயெல்லாம் எழுதறேன் எனக்கு எதையும் போடாதிங்க முகுந்த்.
நல்லாயிருங்க.

கண்ணகி said...

இந்த டிஸ்கி படிக்கத்தெரிந்தவர்களுக்கு மட்டும்தான். மற்றவர்கள் படிக்க வேண்டாம். ஸ்டார்ட் கும்மி. ஓகோ......

Anonymous said...

வாய் விட்டு சிரித்தேன்... I cant believe that i have missed ur blog all these days... gonna read all now itself. ur writing is just awesome..

பெசொவி said...

டிஸ்கியில் என்ன எழுதுவது எனத் தெரியாதவர்கள் வால்பையனை அணுகவும். (இது என்னோட டிஸ்கி - எப்ப்..........புடீ!)

வால்பையன் said...

//Vidhoosh said...

ஏதோ ஒன்னு கிடைச்சுடரதுங்க உங்களுக்கும்..:))//

எப்படியும் கடையை நடத்தி தானே ஆவனும்!

வால்பையன் said...

@ நோ!

எல்லாமே கலக்கல் டிஸ்கிஸ்,
நல்ல கற்பனை வளம் உங்களுக்கு!

வால்பையன் said...

//@ லதானந்த்

என் பங்குக்கு நானும் ஒரு டிஸ்கி!
”நான் மூக்கை மட்டும் உடைக்க மாட்டேன்.”//

அப்ப மத்ததெல்லாம்!

வால்பையன் said...

@ ஸ்ரீனிவாசன்

அப்ப இது லாயக்கில்லாததுன்னு சொல்றிங்களா தல!

வால்பையன் said...

பின்னுட்டமிட்ட ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

!

Blog Widget by LinkWithin