மதியம் புதன், அக்டோபர் 28, 2009

குற்றம் நடந்தது என்ன!? 1

மேலை நாடுகளில் மிக கடினப்பட்டு கண்டுபிடித்த குற்றங்களை தொகுக்கும் பொருட்டு இந்த பதிவு ஆரம்பமாகிறது, நான் ஏற்கனவே சொன்னது போல் எல்லோருக்குள்ளும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் தூங்கி கொண்டிருக்கிறான், அவனை உசுப்பிவிடும் ஒரு முயற்சியாகவும் இதை எடுத்து கொள்ளலாம்!

**

கலிபோர்னியாவின் வடக்கு மாகானத்தில் ஒரு பெண், அவளது அம்மா, அந்த பெண்ணின் மூன்று குழந்தைகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்கள், ஊருக்கு ஒதுக்கு புறமான வீடு என்பதால் அவர்களை துப்பாக்கியால் கொலைகாரன் சுடும்போது யாருக்கு தெரிந்திருக்கவில்லை, ஆனாலும் தடவியல் நிபுணர்கள் அவர்கள் இறந்தது ஒரு ஞாயிற்றுகிழமை மத்தியான நேரம் என கண்டுப்பிடித்தார்கள், ஆனாலும் கொலைக்கான காரணம் கண்டுபிடிக்க வெகு சிரமமாய் இருந்தது, காரணம் அங்கு எந்த விலையுயர்ந்த பொருளும் காணாமல் போகவில்லை.

இருந்தாலும் கொலைக்கான காரணங்களை கண்டுபிடித்தால் மட்டுமே கொலைகாரனை கண்டுபிடிக்க முடியும், விசாரணையில் அந்த பெண்(பெயர் ஜோன் என்று வைத்து கொள்வோம்) மணமாகி விவாகரத்தானவள், அதுவும் விவாகரத்தாகி ஒரு வருடம் கூட ஆகவில்லை என்பது தெரிந்தது. கணவன்(வின்செண்ட் என அழைப்போம்) ஒஹியோ மாகானத்தில் குழந்தைகளுக்கான பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக வேலைப்பார்ப்பவர், அவருக்கு ஒரு தம்பியும் உண்டு, மேலும் அவரது உறவினர்கள் அனைவருமே அந்த இடத்தை சேர்ந்தவர்கள் தான், அவரது தாய் மட்டும் அங்கிருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவில் வசிக்கிறார்!

கணவனின் நடத்தையை சோதித்ததில் எந்த சந்தேகமும் இல்லை, குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பில் இருப்பவர் நிச்சயமாக பண்புள்ளவராக இருப்பார் என நம்பினர், மற்ற அனைத்து கோணங்களில் விசாரித்து பார்த்தும் எல்லா பக்கமும் அடைத்தே இருந்தது, ஒரு வார காலம் கழித்து மீண்டும் வின்செண்டிடம் இருந்து பழைய படி விசாரணையை ஆரம்பித்தனர், கொலை நடந்த சமயம் வின்செண்ட் எங்கிருந்தார் என நிறுபிக்க வேண்டியது அவரது கடமை, அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் கொலைநடந்த முதல் நாளிலிருந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் வின்செண்ட் சொந்த ஊரில் இல்லை என்பது தெரிந்தது! ஆகையால் மற்ற கோண விசாரணைகளை தள்ளி வைத்து முழுமையாக வின்செண்டின் மேல் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள்!

விசாரணையில் தான் வெளியூருக்கு சென்றதாகவும், அங்கிருந்து தனது தாயை பார்க்க சென்றதாகவும் கூறினார்!, வெளியூருக்கு செல்ல அவரிடம் விமான பயணசீட்டும் இருந்தது, பின் அங்கிருந்து வாடகை கார் மூலம் தனது தாயாரை பார்க்க சென்றதாக கூறினார், மேலும் சாட்சிக்கு அவரிடம் அன்றைய தேதியில் வேறொரு இடத்தில் தனது கடனட்டை மூலம் பொருள்கள் வாங்கிருந்ததற்கு ரசீதுகள் வைத்திருந்தார், மற்ற காவல் துறையினர் நம்பிக்கை இழந்திருந்தாலும் முக்கியமான ஒரு புலனாய்வுதுறை அதிகாரிக்கு வின்செண்டின் மேல் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது!,



கடனட்டை மூலம் அவர் பொருள் வாங்கியிருந்த பகுதிக்கு சென்று கண்காணிப்பு கேமராக்கள் எதாவது இருக்கிறதா என ஆராய்ந்தார், அதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு இடத்தில் இருந்தது, அதை சோதித்ததில் பொருள் வாங்கியது வின்செண்ட் அல்ல, அவரது தம்பி என தெரிந்தது, மீண்டும் அவரது தம்பியை விசாரித்ததில் மற்றவர் கடனட்டையை அனுமதியில்லாமல் உபயோகித்ததால் அதை மறைத்ததாக கூறினார், ஆயினும் வின்செண்ட் சொன்னது பொய்யென்று ஆனதால் அவர்களது விசாரணை மேலும் இறுகியது, தன் தாய் வீட்டிற்கு சென்றதாக கூறினார் என்பதால் அங்கேயும் சென்று விசாரித்தனர், வின்செண்ட் அவரது தாய் வீட்டிற்கு ஞாயிறு நள்ளிரவு தான் சென்றிருக்கிறார்!

வின்செண்ட் அப்போதும் தான் வாடகை காரில் ஊர் சுற்றி கொண்டிருந்ததாகவே கூறினார்! மேலை நாடுகளை பொறுத்தவரை வெறும் யூகத்தின் பேரில் ஒருவருக்கு தண்டனை அளிக்கமுடியாது! இந்தியாவில் இருப்பது போன்றே ”ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது” என்பது உலகளாவிய சட்டமாகவே இருக்கிறது!, புலனாய்வு அதிகாரி, வின்செண்ட் வாடகைக்கு கார் எடுத்த இடத்திற்கு சென்று விசாரித்தார், அது புது வகையான,விலையுயர்ந்த கார் என்பதால் மிகக்குறைவாகவே வாடகைக்கு செல்லும் எனும் விசயம் அவர்களுக்கு சாதகமாக இருந்தது, அந்த காரில் எதாவது தடயம் கிடைக்குமா என ஆராய, அந்த காரை காவல்துறை தனது பொறுப்பில் எடுத்தது!

சம்பவம் நடந்து ஒருவார காலம் ஆகியதால் காரில் இருந்து பெரிதாக எந்த தடயமும் கிடைக்க வாய்ப்பில்லை!, ஆனாலும் ஒரு தடவியல் நிபுணரின் ஆலோசனையின் பேரில் காரில் இருந்த ரேடியேட்டரும், ஏர்பில்டரும் சோதனைக்கு உட்படுத்தபட்டது, பூச்சிகள் ஆராய்ச்சி செய்யும் குழுவிடம் ஒப்படைத்து ரேடியேட்டரில் மாட்டி செத்து கிடக்கும் துண்டு, துண்டு பூச்சிகளின் பாகங்கள் சேகரிக்கப்பட்டன! முழு பூச்சிகளை மட்டுமே வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஆராய்ச்சிகுழுவிற்கு அது பெரும் சவாலாக இருந்தது, ஆராய்ச்சியின் முடிவில் அந்த கார் கலிபோர்னியாவின் வடக்கு மாகானத்தில் பயணம் செய்தது நிறுபணமானது, ”ரெட் போர்ன்” எனும் பெயருடய சிகப்பு கால்களையுடய வெட்டுகிளிகள் வடக்கு மாகாணத்தில் மட்டுமே காணப்படும் பூச்சியினம், அதே போன்று மொத்தம் மூன்று பூச்சி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது!

அந்த ஆதாரத்துடன் வின்செண்ட் கோர்டில் ஒப்படைக்கப்பட்டான், வின்செண்ட் சொல்வது அனைத்தும் பொய் என நிறுபிக்கப்பட்டாலும், நீதிபதிகள் வின்செண்ட் கொலைசெய்ய வலுவான காரணம் என்ன என கேட்டனர்!, விவாகரத்தான வின்செண்ட் தனது முன்னாள் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் ஜீவனாம்சமாக பெரும்தொகை கொடுக்க வேண்டியிருக்கும் என பயந்தான், அந்த பயமே அவனை கொலை செய்ய தூண்யிருக்கும் என ஒரு உளவியல் நிபுணர் விளக்கினார், ஆனாலும் கடைசி அஸ்திரமாக விஞ்செண்ட் ஒரு குண்டை தூக்கி போட்டான், கொலை நடந்த அன்று தான் ஒரு விபத்தில் சிக்கி தான் ஒரு போலிஸ் நிலையத்தில் ஆஜரானதாக கூறியது உண்மையிலேயே அனைவரையும் குழப்பியது.

ஆனாலும் புலனாய்வு அதிகாரி மீண்டும் ஒஹோயோ மாகானம் சென்று காவல் நிலையத்தில் வின்செண்ட் பதிவு செய்த கைரேகையை சோதித்தார், அது ஒரு பழைய குற்றவாளியின் கைரேகையுடன் ஒத்திருந்தது, வின்செண்டின் தண்டனையை உறுதி செய்தது! ஐந்து பேரை கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக வின்செண்டிற்கு நீதுமன்றம் மரணதண்டனை விதித்தது, குற்றம் வாசிக்கப்படும் போது வின்செண்ட் கதறி கண்ணீர் விட்டு அழுதான்!

**

டிஸ்கி:இந்த வழக்கை பொறுத்தவரை வின்செண்ட் வடக்கு மாகானம் சென்றதற்கு ஒரே சாட்சி,வண்டியில் மாட்டி செத்த போன பூச்சியினங்கள் தான்!, ஒரு சிறு துரும்பையும் வைத்து புலனாய்ட்வுதுறையினரால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும்!

88 வாங்கிகட்டி கொண்டது:

hiuhiuw said...

இவ்வளவு தூரம் வந்துட்டு சொல்லாம போவமா!


" எல்லாம் அவன் செயல் " அப்பிடீன்னு தலைப்ப மாத்திருவோம் தல !

ஜெட்லி... said...

இப்படியெல்லாம் கூட கொலைக்காரனை கண்டு பிடிக்கலாமா??

Suresh Kumar said...

நல்ல கதை அருமையான பகிர்வு

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மிக அருமை

Anonymous said...

தள,

நல்ல பதிவு தள, றொம்ப அளகா மொலி பெய்ர்த்திரூக்கே


சொள் அலகன்

ஆ.ஞானசேகரன் said...

//நான் ஏற்கனவே சொன்னது போல் எல்லோருக்குள்ளும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் தூங்கி கொண்டிருக்கிறான், அவனை உசுப்பிவிடும் ஒரு முயற்சியாகவும் இதை எடுத்து கொள்ளலாம்!//


நல்ல முயற்சி வாழ்த்துகள் நண்பா

நிகழ்காலத்தில்... said...

தமிழகத்தை நினைத்தேன்.,

பாவம் அரசியல்வாதிகளுக்கு பயந்து காவல்துறையினரின் திறன் குன்றிக்கிடைக்கிறது.,

Rombe Avasiyam said...

யோவு ரம்பம்...அறுக்காதடா

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப இண்டெரெஸ்டிங்கா இருக்கு வால்.

க.பாலாசி said...

ஒரு ஹாலிவுட் படத்த எந்த செலவுமில்லாம எழுதிட்டீங்க. எதுக்கும் ரைட்ஸ் வாங்கி வைச்சிக்கிங்க....நம்மாளுங்க கதை கிடைக்காம ரொம்ப திண்டாடுறதா கேள்வி....

ஹேமா said...

அட...வாலு கதை சொல்றார்.

புலவன் புலிகேசி said...

//”ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது”//

இங்க ஆயிரம் இல்ல நெறய பேரு தப்பிச்சிக்கிட்டுத்தான் இருக்கான். நல்லா இருக்கு தல....

VISA said...

Jet vegam. puthiya thodar. Good. Keep writing more.

ஊடகன் said...

ராஜேஷ்குமார் சாயலில் கதை எழுத முயற்சித்துளீர்கள்.
வாழ்த்துக்கள்......

Menaga Sathia said...

ரொம்ப ஆர்வமான கதை.குழந்தையை கொல்ல எப்படி மனம் வந்ததோ?...

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

இது உண்மையா நடந்த கதையா என் தெரியாது. ஆனா அருமையான பகிர்வு தல...

//டிஸ்கி:இந்த வழக்கை பொறுத்தவரை வின்செண்ட் வடக்கு மாகானம் சென்றதற்கு ஒரே சாட்சி,வண்டியில் மாட்டி செத்த போன பூச்சியினங்கள் தான்!, ஒரு சிறு துரும்பையும் வைத்து புலனாய்ட்வுதுறையினரால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும்!//

எப்புடியெல்லாம் யோசிக்கிறாய்ங்க... :))

ஈ ரா said...

சுவாரசியமாக இருந்தது புலனாய்வு

கார்த்திகைப் பாண்டியன் said...

சுவாரசியமான தொடராக கொண்டு வாங்க தல..

நிஜாம் கான் said...

உங்களுக்குள் தூங்கிக் கெடந்த ஜேம்ஸ தண்ணி தெளுச்சி எழுப்பிட்டீங்க தல. போட்டு வாங்குங்க. அரும.

வினோத் கெளதம் said...

வால்ஸ் மிக சுவராஸ்யமாக செல்கிறது தொடருங்கள்..

PRABHU RAJADURAI said...

interesting!

ஆனால் வண்டியில் செத்துக் கிடந்த பூச்சிகள் சாட்சியாக முடியாது!

அவை கொலையாளி யார் என்ற அடையாளத்தை காவலர்களுக்கு காட்ட உதவும் அவ்வளவுதான். கொலையாளி இவர்தான் என்று ஓரளவிற்கு புரிந்த பின்னர், சாட்சிகளை திரட்டுவது காவலர்களுக்கு சிரமமல்ல!

குற்றவியல் நடைமுறையின் அடிப்படை விதிகள் உலகம் முழுவதும் ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

அகநாழிகை said...

interesting.

மாதேவி said...

புலனாய்வு நல்ல பகிர்வு.

மணிஜி said...

அப்படியே தமிழ் நேட்டிவிட்டில சிறுகதை எழுதிடலாமா?

வால்பையன் said...

//Prabhu Rajadurai said...

interesting!

ஆனால் வண்டியில் செத்துக் கிடந்த பூச்சிகள் சாட்சியாக முடியாது!

அவை கொலையாளி யார் என்ற அடையாளத்தை காவலர்களுக்கு காட்ட உதவும் அவ்வளவுதான். கொலையாளி இவர்தான் என்று ஓரளவிற்கு புரிந்த பின்னர், சாட்சிகளை திரட்டுவது காவலர்களுக்கு சிரமமல்ல!

குற்றவியல் நடைமுறையின் அடிப்படை விதிகள் உலகம் முழுவதும் ஒன்றாகத்தான் இருக்க முடியும்.//

உண்மை தான்!
சாட்சியென்று குறிப்பிடக்காரணம், அந்த வாகனம் வடக்கு கலிபோர்னியா மாகானத்திற்கு சென்றதற்கு ஒரே அத்தாட்சி, அது மட்டுமில்லையென்றால் வின்செண்டால் வேறு கதைகளை கூறியோ, அல்லது வேறு எஙேயாவது நடந்த திருட்டு குற்றத்தை தான் தான் செய்ததாகவோ சொல்லி தண்டனையை குறைத்து கொண்டிருக்க முடியும்!

செத்த பூச்சிகளின் சாட்சி வின்செண்ட் கலிபோர்னியா சென்றதை உறுதிப்படுத்தியது! உளவியல் நிபுணரின் சாட்சி விட்செண்ட் கொலை செய்வதற்கான சாத்தியகூறுகளை விளக்கியது!

முதல் வருகைக்கு நன்றி சார்!

Anonymous said...

//உங்களுக்குள் தூங்கிக் கெடந்த ஜேம்ஸ தண்ணி தெளுச்சி எழுப்பிட்டீங்க தல. போட்டு வாங்குங்க. அரும.//

ஒரு அளவுக்கு புகழுங்க !!! அவரே இது வெளிநாடுகளில் துப்பு துப்புன்னு துப்பினதைத் எழுதறேன்னு சொல்றாரு , நீங்க என்னமோ அண்ணா தமிழ் சினிமா CID மாதிரி (ஒரே ஒரு பருவை கன்னத்தில் ஒட்டி விட்டால் போதும் யாருக்கும் அடையாளமா தெரியாது ) கண்டுபிச்சு சொல்றா மாதிரி எழுதுறிங்க.

குப்புக் குட்டி

வால்பையன் said...

மிக முக்கிய, நுண்ணிய விசயங்களை கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட குற்றங்களை பகிர்ந்து கொள்வதே நோக்கம், அண்ணன் குப்புகுட்டி சொல்வது போல நான் பெருமை அடித்து கொள்ள ஒன்றுமில்லை!,

நான் கண்டுபிடித்ததெல்லாம் கிணற்றுவாளியும் ,கக்கூஸ் சொம்பும் தான்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான பகிர்வு

vasu balaji said...

very good one. thanks

பிரபாகர் said...

ரொம்ப நல்லாருக்கு அருண். ஓட்டுக்களையும் போட்டுட்டேன். நிறைய இது மாதிரி எழுதுங்கள்...

பிரபாகர்.

Unknown said...

தல இது உண்மையில நடந்ததா இல்ல C.S.I, Law and Order மாதிரி தொடர்ல பாத்ததா?

Anonymous said...

அண்ணன் வால் வாழ்க !!

எத்தனை அடிச்சாலும் தங்குறீங்களே !! விமர்சனங்களை எப்படி எதிர் கொள்ளனும்னு உங்ககிட்ட தான் படிக்கணும்.


குப்புக் குட்டி

தேவன் மாயம் said...

இவ்வளவு துல்லியமாக நம்ம ஊரில் தடயவியல் செயல்பட்டால் நல்லது!

Ashok D said...

வேகமாக படிச்சு முடிச்சேன்

அமர பாரதி said...

நல்ல தொடர் வால். எழுத்து நடை அருமையாக இருக்கிறது.

velji said...

i observe your sharp and peculiar comments in many pages.

this story is not a thriller but gives interesting details of investigation.

nice work.

Kumky said...

சுவாரஸ்யமான துப்புதுலக்குதல் வால்...
ஆனாலும் அங்குள்ள காவல்துறையினருக்குள்ள சுதந்திரம் இங்கே இல்லை என்பதும் கவனத்தில் வந்து போகின்றது.
குற்றங்கள் நடக்கும் நாடுகளின் கலாச்சாரம் பண்பாடு வழக்கங்கள் எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு அலச வேண்டியதாகிறது...இல்லையா..

Sabarinathan Arthanari said...

வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள் வால்

அ.மு.செய்யது said...

பயங்கர சுவாரஸியமா போச்சு வால் !!!

அதிரடி தொடரின் அசத்தல் ஆரம்பம்.

உங்களின் இந்த தொடர் நிச்சயம் பேசப்படும்.எனவே தலைப்பை மாற்றி வையுங்கள்.( உங்க ஐடியவுல )

Anonymous said...

naan dicovery channel la paarthen

selventhiran said...

சுவாரஸ்யம்!

Unknown said...

waaaw vaal super but namma pulanaivu thurai en us alavukku munnera villai 50 varusama aanalum case kandu pidikka mutiyaama iruku

அறிவிலி said...

நல்ல துவக்கம்

Unknown said...

பட் வின்சென்ட் கொலை கேஸ் ல அமெரிக்க புலனாய்வு துறை இவளவு குறைவான களத்தில் கண்டு பிடித்து தண்டனையும் அளித்து விரைவாக கேஸ் கலை க்ளோஸ் பண்றாங்க இந்திய ல மட்டும் ஒவ்வரு கேஸ் உம குறைஞ்ச பட்சம் அஞ்சு வருஷம் விசாரிகிரான்களே ஏன் ?

அன்புடன் அருணா said...

சுவாரஸ்யமாக இருந்தது...

பின்னோக்கி said...

விறுவிறுப்பாக இருந்தது. தொடர்ந்து வித்தியாசமான வழக்குகளைப் பற்றி எழுதுங்கள்.

Anonymous said...

look at this link for more details...


http://westernfarmpress.com/news/insect-identification-0403/

Romeoboy said...

என்ன தல டிஸ்கவரி சேனல் வேலை செய்யுதோ ?

அப்துல்மாலிக் said...

விறுவிறுப்பான புலனாய்வு
தொடருங்க வால்

ப்ரியமுடன் வசந்த் said...

புதிய முயற்சி

வாழ்த்துக்கள் தல இன்னும் நிறைய கதைகள் எதிர் பார்க்கிறேன்...

மங்களூர் சிவா said...

சூப்பர்!

அது சரி(18185106603874041862) said...

வால்,

இதை வேறு விதமாகவும் விசாரிக்க ஆரம்பிக்கலாம்....எல்லாக் கொலைகளும் ஒன்று உணர்ச்சி வசப்பட்டோ இல்லை திட்டமிட்டோ நடந்திருக்க வேண்டும்...

1. உணர்ச்சி வசப்பட்டிருந்தால் ஒரு பெண்ணையும் குழந்தைகளையும் கொல்வதற்கான வாய்ப்பு குறைவு...

2. எந்த பொருளும் காணாமல் போகவில்லை...ஆக, இது திருட்டு இல்லை...

3. அடுத்த கோணம்...இந்த மரணத்தினால் யாருக்கு ஆதாயம்...

4. ஆதாயத்தில் பலவகை உண்டு....அலுவலக ப்ரோமோஷன், கள்ள உறவை மறைக்கும் முயற்சி, மரணத்தினால் ஏற்படும் பொருள் ஆதாயம்...

5. அந்த பெண்ணுக்கு யாருடனாவது உறவு இருந்ததா...குறிப்பாக ஏற்கனவே திருமணம் ஆன நபருடன்...

6. அது இல்லை என்றால், அலுவலகம் சம்பந்தமான பிரச்சினைகள்....அலுவலகத்தில் நடந்த ஊழலை மூடி மறைக்கும் முயற்சி...இன்னும் பல கோணங்கள்....

7. கடைசியாக இன்சூரன்ஸ்...காம்பன்சேஷன் போன்றவற்றில் இருந்து ஆதாயம் அடைபவர்கள்...

ஆக, கணவன் கண்டிப்பாக ஒரு சஸ்பெக்டே...சம்பவம் நடந்த அன்று அங்கு அவன் இல்லை என்பது அவன் மீது சந்தேகத்தை வலுவாக்குகிறது....அவன் ஃப்ளைட்டில் சென்றிருந்தால், கண்டிப்பாக ஏர்போர்ட்டில் ஏதேனு கேமராவில் இருக்க வேண்டும்...இல்லாத பட்சத்தில் அவன் கொடுக்கும் ஆதாரங்களே அவனை மேலும் சந்தேகத்துக்குரியவனாக்குகின்றன...

(அதை ப்ரூவ் பண்றது தான் கஷ்டம்...)

அது சரி(18185106603874041862) said...

//
எல்லோருக்குள்ளும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் தூங்கி கொண்டிருக்கிறான், அவனை உசுப்பிவிடும் ஒரு முயற்சியாகவும் இதை எடுத்து கொள்ளலாம்!
//

ஒரு மனுசனை நிம்மதியா தூங்க விடமாட்டாங்கப்பா....:0)))

Killivalavan said...

வித்தியாசமான பதிவு:-)

பீர் | Peer said...

அருமையான தொடர் வால். அசத்த வாழ்த்துக்கள்.

மேவி... said...

நேரடி சாட்சியங்கள் இல்லாதவரைக்கும் குற்றத்தில் இருந்து ஒருவன் தப்பிக்க முடியும்....... அதற்க்கு கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால் போதும். BIOLOGICAL factors எல்லா நேரத்திலும் உதவாது......

POLAND நாடு என்று நினைக்கிறேன்..... கொலையாளி யார் என்று தெரிந்தாலும் நிருபிக்க முடியாத நிலை இருந்தாக படித்துள்ளேன்......


அமெரிக்காவில் கூட வருடங்கள் பல ஆகியும் நிருபிக்க படாத குற்றங்கள் பல இருக்கு


பிறகு அருமையான பதிவு ..... செமையா ரசிச்சேன்

மேவி... said...

பெரிய பெரிய விஷயமாக எழுதிரிங்க .... நடத்துங்க ..


என்னை மாதிரியான முட்டாள்களும் உங்க பிளாக் படிக்குரங்க ன்னு ஞாபகம் இருக்கட்டும்

Anonymous said...

Dear Vaal,

This is a very good effort. what i meant to say was, starting 2 different relays at the same time..
you coukld have experienced the same in old novels of your all time favourite "Rajeshkumar".. two different stories in adjacent episodes, and in the 14th or 15th chapter He will bind both the episodes into a single story.

Do not end the relay's as like your so called mentor, that the Hero of "Avalanche" [Vaal].. and the Hit-man in the other series are on and same.

Shravan.

http://Spadigam.blogspot.com
http://towserpaandi.blogspot.com

Anonymous said...

The one good reason behind writing stories of 2 different platforms @ the same time is.. you can avoid readers getting bored and you yourself getting in to the boredom.

Shravan

Admin said...

நல்ல பகிர்வு. பகிர்வுக்கு நன்றிகள்.

cheena (சீனா) said...

ohhhhh - Great - Hats off to the intelegant buerau

Congrats - Keep posting such posts

அன்புடன் நான் said...

ஒரு தடவியல் நிபுணரின் ஆலோசனையின் பேரில் காரில் இருந்த ரேடியேட்டரும், ஏர்பில்டரும் சோதனைக்கு உட்படுத்தபட்டது//

இதைதான் நான் வியக்கிறேன்.

ராஜவம்சம் said...

இதே மாதிரி தொடர்ந்து ஒரு முப்பது கதை நான் படித்தால் நானும் ஒரு டிடக்டியு அலுவலகம் தொடங்கிவிடுவேன் அதுல நீங்கதான் என் உதவியாளன் சம்பளம் ம் ம் ம் ம் 75ஆயிரம் போதுமா

மாதத்திற்கா வருடத்திர்க்கா என்று கேட்ககூடாது

Anbu said...

தல...எங்கேயோ போயிட்டீங்க..

RAMYA said...

//நான் ஏற்கனவே சொன்னது போல் எல்லோருக்குள்ளும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் தூங்கி கொண்டிருக்கிறான், அவனை உசுப்பிவிடும் ஒரு முயற்சியாகவும் இதை எடுத்து கொள்ளலாம்!//


ரசித்த வரிகள்....

அப்புறம் கதை ரொம்ப அருமை!

அதை விவரித்த விதமும் அருமை!

கொலைகாரனை எப்படி எல்லாம் கண்டு பிடிக்கிறாங்கப்பா!

நசரேயன் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Beski said...

இந்தத் தொடரில் வரும் அனைத்தும் சுவாரஸ்யமாக இருக்குமென நினைக்கிறேன்.

நடத்துங்கள்.

தமிழ் அஞ்சல் said...

:-)

Anonymous said...

இந்த கதய டிஸ்கவரி சேனல் தமிழில் டப் பண்ணி ஒலிபரப்பிய பொது பார்த்ததாக நாபகம்

இரவு கவி said...
This comment has been removed by the author.
இரவு கவி said...

ohhh ennakkum oru follower irunthu irrukkuraru. athakku mariyatha kudukkama irunthu irruken. sorry vaalpayan. konjam athika velaiya pochu. mathavanka blog padikkarathoda sari. etho mokka kavaithaiyavathu eluthi kittu irrunthen athuvum mudiyama pochu. eluthuna udane ungallukku solli anupuren.

ungaloda nermai ennakku romba pidichurukku :-)

thanks a lot for u

இரவு கவி said...

munnadi comment spelling mistake iruntha thala atha delete pannitu mathi poten :-)

கிரி said...

//ஒரு சிறு துரும்பையும் வைத்து புலனாய்ட்வுதுறையினரால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும்!//

சிறு பூச்சியும் திருடனை பிடிக்க உதவும் போல இருக்கு :-)

ஆனா வெளிநாடுகளில் விவாகரத்து பெற்றால் பாதி சொத்தையே கொடுக்க வேண்டும்....அதனாலே பெரும்பாலும் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்கிறார்கள்.

வெண்பூ said...

நல்ல தொடர்.. அருமையான தொடக்கம்.. அடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் வால்.

வீணாபோனவன் said...

//மணமாகி விவாகரத்தானவள், அதுவும் விவாகரத்தாகி ஒரு வருடம் கூட ஆகவில்லை என்பது தெரிந்தது.//
அப்போ எப்படி அந்த பெண்ணின் மூன்று குழந்தைகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்கள்? கவனிக்கவும்:மூன்று குழந்தைகள்.

இது எல்லாம் இங்க சகஜம் தல... தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பிழை விடுவோரும் உண்டு தான் என்ன செய்கிறோம் என்று தெரிந்தும் பிழை விடுவோரும் உண்டு. நேற்று டோறான்ட்டோ மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சி நல்ல உதாரணம். அது சரி, ஜேம்ஸ்பாண்ட் என்று சொல்லி இட்மேன் படத போட்டுடிங்க?.

-வீணாபோனவன்.

Ungalranga said...

அட..!!

இப்படியுமா யோசிப்பாங்க..எப்படியோ கண்டுபிடிச்சா சரி..

ரொம்ப ஸ்வாரஸ்யமா இருந்தது..!!

ஒரு பூச்சி,எவ்வளவு பெரிய காரியம் பண்ணி இருக்கு.!!

சாட்சி சொல்பவருக்கு யாருமில்லை என்று எந்த குற்றவாளியும் நினைத்துவிட முடியாது என்று இந்த கேஸ் நிரூபித்திருக்கிறது!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல பதிவு வால்!

லிங்காபுரம் சிவா said...

உங்கல அந்த வின்சன்ட் கதாபாத்திரதுல வைச்சி பாத்தா சூப்பரா இருக்கு வாலு!

நாமக்கல் சிபி said...

மாட்டிக்காம கொலை செய்ய ஈசியான வழி இருக்கு! அந்த மரமண்டைக்கு தெரியலை போல! பாவம்!

"குருவி" சிடி/டிவிடி வாங்கி அனுப்பி இருந்தா பார்த்துட்டு எவிடென்ஸே இல்லாம செத்திருப்பாங்கல்ல!

Nathanjagk said...

கலக்கலான நடையில் தூள் கிளப்பியிருக்கீங்க! சமத்து!

கோவி.கண்ணன் said...

சுவையார்வமாக இருக்கிறது. நல்ல தகவல்கள்

Anonymous said...

//அடுத்த பகுதி:மசினி என்ற யானை, குட்டியுடன் வால்பையன்!

தள எப்ப அடுத்த பகுதி வறும் !! ஆவளுடன் எத்திற்பார்கிரேன்.

சொள் அலகன்

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

எங்கிட்ட இருந்த ஜேம்ஸோட பாண்ட நீங்க வாங்கிட்டு போகும்போதே நினைத்தேன் இப்படியெல்லாம் போடுவீர்கள் என்று

வால்பையன் said...

//பட் வின்சென்ட் கொலை கேஸ் ல அமெரிக்க புலனாய்வு துறை இவளவு குறைவான களத்தில் கண்டு பிடித்து தண்டனையும் அளித்து விரைவாக கேஸ் கலை க்ளோஸ் பண்றாங்க இந்திய ல மட்டும் ஒவ்வரு கேஸ் உம குறைஞ்ச பட்சம் அஞ்சு வருஷம் விசாரிகிரான்களே ஏன் ?//

அங்கெல்லாம் கடமையை மீறுவதற்கு தான் லஞ்சம் கொடுக்கனும், இங்கே கடமையை செய்வதற்கே லஞ்சம் கொடுக்கனும்!

வால்பையன் said...

@அதுசரி!

பல கோணத்தில் யோசிக்கிறிங்க!

வால்பையன் said...

//நேரடி சாட்சியங்கள் இல்லாதவரைக்கும் குற்றத்தில் இருந்து ஒருவன் தப்பிக்க முடியும்....... அதற்க்கு கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால் போதும். BIOLOGICAL factors எல்லா நேரத்திலும் உதவாது......//

இந்தியாவில் பல கொலையாளிகள் சாட்சி இல்லை என்ற ஒரே காரணத்திற்காக விடுதலை செய்யப்பட்டு வெளியே சுற்றி கொண்டிருக்கிறார்கள்!

அதி முக்கியமாக அரசியல் கொலைகள்!

வால்பையன் said...

//நேற்று டோறான்ட்டோ மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சி நல்ல உதாரணம். அது சரி, ஜேம்ஸ்பாண்ட் என்று சொல்லி இட்மேன் படத போட்டுடிங்க?. //

டோறண்டோவில் என்ன நடந்ததுன்னு ஒரு பதிவு போடுங்க தல!

கில்லர்ன்னு தேடினேன் இது தான் கிடைத்தது தல!

வால்பையன் said...

பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

!

Blog Widget by LinkWithin