சென்ற பதிவில் ”அவலாஞ்ச்” சென்றதோடு தொடரும் போட்டாச்சு!, அவலாஞ்சில் நாங்கள் செல்லும் பொழுது நல்ல மழை, அதனால் பெரிதாக போட்டோ எடுக்க முடியவில்லை!, மேலும் மிக முக்கிய உயர் அதிகாரி வந்திருந்ததால் லதானந்த் சார் எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு கிளம்பிவிட்டார், மீண்டும் இரவில் தான் வந்தார்!
“அவலாஞ்ச்” என்பது ஒரு காரணப்பெயர், ”அவலாஞ்ச்” என்றால் என்னவென்று முதலில் தெரிந்து கொள்வோம், ஆல்ப்ஸ் மலைத்தொடர், இமயமலைத் தொடரில் முழுவதுமாக பனி படர்ந்து ஐஸ் கட்டியால் மூடப்பட்டிருக்கும் அல்லவா, அது சிறு அதிர்வு ஏற்பட்டாலோ, வேறு எதாவது அசம்பாவத்தினாலோ அந்த ஐஸ் படர்வு அப்படியே கீழ்நோக்கி நகரும், ஒரு வெள்ளை போர்வை அப்படியே நகர்ந்து வருவது போல் இருக்கும்!, எதாவது ஆக்ஷன் ஆங்கில படத்தில் அதை பார்த்திருக்கலாம்!
அம்மாதிரியான ஒரு நிகழ்வு அந்த இடத்தில் வெள்ளைக்காரன் இருந்த காலத்தில் நடந்ததாம், அதனால் அந்த பெயர் வந்திருக்கலாம் என பேசப்படுகிறது! அது அங்கே சாத்தியமா என பார்த்தால் அங்கிருக்கும் ஏரி அது நடந்திருக்கலாம் என்கிறது! மிகுந்த குளிர் இருக்கும் நேரத்தில் அணையிலிருக்கும் நீர் மொத்தமும் உறைந்திருக்கலாம், மீண்டும் அது உருக ஆரம்பிக்கும் போது ஐஸ்கட்டிகள் தரை நோக்கி நகர்ந்திருக்கலாம், அல்லது அடர்த்தியான மேக கூட்டங்கள் நகர்ந்து செல்வது யாராவது ஒரு வெள்ளைகாரனுக்கு அவலாஞ்ச் போல் தெரிந்திருக்கலாம்!
“அவலாஞ்ச்” சுற்றுலாக்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதி, தகுந்த அனுமதியில்லாமல் செல்ல முடியாது, சாதாரண பாதையிலிருந்து விலகி ஒற்றையடி பாதை போலுள்ள வழியில் செல்ல வேண்டும், காட்டு விலங்குகளின் தொந்தரவுகள் வரலாம், யானை கூட்டங்கள் உங்களை வழிமறிக்கலாம், ஆகையால் காட்டிலாக்காவின் ஆலோசனையின் பேரில் தான் பயணம் செய்ய வேண்டும், அங்கே தங்குவதற்கு இடம் இருக்கிறது, அங்கேயே சமைப்பார்கள், முன் கூட்டியே சொல்லிவிட்டால் எல்லாம் கிடைக்கும், அருமையான சமையல்!
அங்கிருக்கும் சூழ்நிலை குடியை விட்டிருந்தாலும் கொஞ்சமாவது குடிக்கலாம் என தோன்றவைக்கும், சாரல் விழுண்டு கொண்டேயிருக்கிறது! அங்கு மழை பெய்யாத நாளே கிடையாது என்கிறார் எங்களை வழிநடத்தியவர், ஒருவேளை அது அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரின் சாரலாக இருக்கலாம்! தங்கியிருந்த இடத்தில் இருந்து அடுத்த பத்தாவது அடி கிடுகிடு பள்ளம் தான், இரவு நேரத்தில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!
அடுத்த பகுதி:மசினி என்ற யானை குட்டியுடன் வால்பையன்!
செல்ல விருப்பமுள்ளவர்கள் லாதனந்த அவர்களின் ப்ளாக்கில் தொடர்பு கொள்ளவும்!
43 வாங்கிகட்டி கொண்டது:
தல Super Place.. நல்லா என்ஜாய் பண்ணுறிங்க நடத்துங்க..
நீ என்சாய் பண்ணு தல.
சரக்கெல்லாம் எப்படி??? அங்கே கிடைக்குமா இல்ல
வாங்கிட்டு போயிட்டிங்களா??
இன்னும் கொஞ்சம் விலாவாரியா எழுதறது? ஆரம்பிக்கிறதுக்குள்ள முடிஞ்சா மாதிரி இருக்கே
நல்ல அனுபவம்தான்.
// ILA(@)இளா said...
இன்னும் கொஞ்சம் விலாவாரியா எழுதறது? ஆரம்பிக்கிறதுக்குள்ள முடிஞ்சா மாதிரி இருக்கே//
அதானே?
//சூழ்நிலை குடியை விட்டிருந்தாலும் கொஞ்சமாவது குடிக்கலாம் என தோன்றவைக்கும்//
சரக்கு போட்டியா இல்லையாப்பா
அத சொல்லப்பா முதல்ல.
விமர்சனம் நல்லாத்தேன் இருக்குது... கடைசியா எதுக்கு உங்க போட்டோவ போட்டுருக்கீங்க....?
//இன்னும் கொஞ்சம் விலாவாரியா எழுதறது?//
அதுதானே
\\லதானந்த் சார் எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு கிளம்பிவிட்டார், மீண்டும் இரவில் தான் வந்தார்!\\
நண்பர்களுக்காக சிரமம் பாராது அவர் செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது
அவலாஞ்சியில் பொழுது போக்கியது மகிழ்ச்சி தான் வாலு
இடுகைக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகள்
அவலாஞ்ச் பெயர் காரணம் பற்றி சொன்னது ரசிக்கும் படியாக இருக்கு தல
இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம் ..அண்ணா உங்க பேரு எல்லாம் என் போஸ்டிங் ல உபயோகிக்கிறேன் ..வந்து பாக்குறது .அப்படியே கார்க்கி மற்றும் தாமிரா எனும் ஆதிமூலகிருஷ்ணன் அவர்களுக்கும் தகவல் சொல்லவும் ..
நன்றி.
thala....indha thadava modala comment...apuram than padika poraen......... picla iruka monkey yaaru? thala...unga photothanu ninakiraen..padichitu comment poduraen marubadiyum...
வால் பிளாக் வர வர டிஸ்கவரி சேனல் ரேஞ்சுக்கு மாறிகிட்டு வருது !!!
உங்கள் புகைப்படம் அருமை !!!
தல போன தடவ உங்க..group photo போட்டு இருந்திங்க...இந்த தடவ solova போஸ் குடுகரிங்க....
//குட்டியுடன் வால்பையன்///
புட்டியுடன் வால்பையன் - இதுதான் எங்களுக்கு இதுவரை தெரியும், இதுபத்தியும் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
அவலாஞ்ச் - Avalanche -க்கு எளிமையா தமிழில் "பனிச்சரிவு"-ன்னு சொல்லலாமா?
நல்ல ஒரு இடத்தை அறிமுகப்படுத்தியிருக்கீங்க! நன்றி வால்பையன்!
நல்லா என்சாய் பண்ணுங்க நண்பா,...
என்னடா இன்னும் தலையோட ட்ரேட் மார்க் வரலியேன்னு பார்த்தேன்..
//அங்கிருக்கும் சூழ்நிலை குடியை விட்டிருந்தாலும் கொஞ்சமாவது குடிக்கலாம் என தோன்றவைக்கும், //
அதான்செரி
நல்ல பயண அனுபவம் தல..எப்படா தொடர்ச்சிய எழுதுவீங்கன்னு பாத்துக்கிட்டிருந்தேன்.. அவலாஞ்ச் விளக்கம் நல்லா இருக்கு. "மசினி என்ற யானை குட்டியுடன் வால்பையன்!" சீக்கிரம் எழுதுங்க....
Enjoy..
“அவலாஞ்ச்” - புது தகவல். நல்ல அனுபவிங்க....உங்கள பாத்ததுக்கப்புறம் காட்டு விலங்குகள் வெளியவா வரும்???
http://thisaikaati.blogspot.com
அருமையாக இருந்தது உங்கள் எழுத்துகளை பார்க்கும் பொது வாழ் நாளில் ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என எண்ணம் வருகிறது
தள,
அடுத்த தபா போகும் போது என்னையும் அலைக்கவும். என் தமிழுக்காக பயபப்ட் வேணாம், தமிழ் பேசும் போது எனக்கு எலுத்துப் பிளை வறாது , இது உருதி !! இதுகாக் இந்தியாவுக்கு ஒறு முரை வற நான் றெடி ! நீ றெடியா ?
அகம் புகும் ஆவழுடன்
சொள் அலகன்
அகம் புகுதல்-2 சட்டென்று முடிந்ததுபோல் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும் வால். படிக்க ரொம்ப சுவாரசியா இருக்கு. அதனால் சொல்கிறேன்
குடியை விட்டிருந்தாலும் கொஞ்சமாவது குடிக்கலாம் என தோன்றவைக்கும்,//
ஹிஹி.. யாருகிட்ட போற போக்குல டுபாக்கூர் விட்டா.. தெரியாதா?
Nice posting
//அங்கிருக்கும் சூழ்நிலை குடியை விட்டிருந்தாலும் கொஞ்சமாவது குடிக்கலாம் என தோன்றவைக்கும்//
அதானே எங்கடா நம்ம மேட்டர காணமேன்னு பார்த்தேன்.
பயணப்பகிர்வும் உங்களின் அனுபவமும் நல்லாருக்கு தலைவரே....
இன்னும் கொஞ்சம் விரிவா எழுதி இருக்கலாமே தல..
இன்னும் விரிவா எதிர் பார்த்தோம் வால்
இது மாதிரி இடங்களையெல்லாம் மிஸ்பண்ணுறோம்னு ஒரு பெரிய வருத்தம் நிச்சயம் இருக்கு
இடுக்கையை வாசிப்பதால் கொஞ்சம் தெளிவு கிடைக்குது
தொடருங்க தல
போனமாதம் நானும் சென்றேன்,அங்க இல்லை, [the jungle hut ].மசினகுடி அருகில் இதைப்போல தனியார் தங்கும் கானக விடுதிகள்.[ jungle resorts.] நிறைய உள்ளன. அடுத்த தடவை சேந்து போவோம் வால்ஸ்
அங்க போகணும் போல இருக்கு..
ஆமா...அடுத்த தடவ சொள் அலகனையும் கூட்டி போயிருங்க..உங்களை விட விரிவான பயணகட்டுரை அவர் பாணியில எழுதுனா நல்லாவே இருக்கும்..
போக வேண்டுமென்று தூண்டுகிறது இந்தப் பதிவு...
என்னது குடியை.... ஏதோ தப்பா தெரியுதோ? இல்ல தப்பா டைப் பண்ணிட்டீங்களா?
நன்ரி கும்க்கி அன்னா !
உங்க பர்த்டே -வூக்கு நம்ம தள உங்க போட்டோ போட்டு இருந்தாறே ! அதிள நீங்க Tom Cruise மாதிறியே இறுந்திங்க.
அடுத்த முரை கன்டிப்பா என்னைக் கூப்பிடு தள !
சொள் அலகன்
அவலாஞ்ச் பத்தி கேள்விப் பட்டுள்ளேன். செல்ல விருப்பம் ஆனால் நேரமும் காலமும் இல்லை. நீங்க படத்துடன் எழுதுங்கள் பார்த்துக் கொள்கின்றேன். நன்றி.
செல்ல ஆசையாக தான் உள்ளது.. வாய்ப்பு அமைவது தான் சிரமமாக உள்ளது
புதிய தகவல், நன்றி வால்.
//ஜெட்லி said...
சரக்கெல்லாம் எப்படி??? அங்கே கிடைக்குமா இல்ல
வாங்கிட்டு போயிட்டிங்களா??//
அங்கேயும் கிடைக்கும் தல!
//ஜெகநாதன் said...
அவலாஞ்ச் - Avalanche -க்கு எளிமையா தமிழில் "பனிச்சரிவு"-ன்னு சொல்லலாமா?//
அதே தான்!
ஆனால் ஊட்டியில் அதற்கு வாய்புண்டா என்பது தான் என் சந்தேகமே!
பகுதிவாரியாக எழுத நினைத்ததால் சீக்கிரம் முடிந்தது போல் உள்ளது!
அடுத்த பாகத்தில் முடித்து விடலாம்!
பின்னுட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்!
Post a Comment