சுற்றுலா என்றாலே ஒரு சிறுவனின் சுதூகலத்துடன் துள்ளி குதித்தி கொண்டாடும் வாலிபர்களில் நானும் ஒருவன், அதுவும் அகம் புகுதல் என்றால் சொல்லவே வேண்டாம்!
அகம் என்றால் வீடு என்று கூட ஒரு அர்த்தம் உண்டு!, என்னை பொறுத்தவரை அந்த சுற்றுலா என் வீட்டுக்கு போய் வந்த மாதிரி தான்!, மற்றவர்களுக்கு காடு என்பது வனம், வாலுக்கு வனம் தானே அகம்!, என் நெருங்கிய உறவினர்களையும், மற்றும் என் மூதாதயர்களையும் காணும் ஆவலில் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தயாராகி விட்டேன்!
அக்டோபர் இரண்டு, காந்தி ஜெயந்தி என்பதால் அரசாங்க விடுமுறை தொடர்ந்து சனி, ஞாயிறு வருவதால் மூன்று நாள் சுற்றுலா ஏற்பாடு செய்திருந்தார் லதானந்த், ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே போகும் வழி, எடுத்து செல்லும் பொருட்கள், மற்றும் யார் யார்க்கு என்ன பிடிக்கும் என அமர்களமாக பெரிய லிஸ்ட் தயாரித்திருந்தார்!, வருகிறேன் என்று சொன்னவர்களில் ஒரு சிலர் கடைசி நேரத்தில் சொந்த விசயங்களுக்காக வராமல் போனது அவருடன் சேர்ந்து எங்களுக்கும் ஏமாற்றமே!
ஜ்யோவ்ராம் சென்னையிலிருந்து அப்படியே கோவை வந்துவிடுவது, சீனா ஐயா(வலைச்சரம்) மதுரையிலிருந்து கோவை, நான் ஈரோட்டிலிருந்து, காசி சார்(தமிழ்மணம் உருவாக்கியவர்) கோவையில் எங்களை வரவேற்பது என்று நிகழ்ச்சி! ஒவ்வோருவரும் ஒவ்வோரு இடத்திலிருந்து வருவதால் சில நேர நெருடல்கள், சீனா ஐயா காலை நான்கு மணிக்கே கோவை வந்துவிட்டார்! நான் சரியாக ஏழு மணிக்கு கோவை சேர்ந்தேன்! காசி சார் எங்களை வரவேற்று காலை சிற்றுண்டியை முடிக்க செய்தார்! வெளிவந்து ஒரு சிகரட்டை நான் முடிக்கும் தறுவாயில் ஜ்யோவும் வந்தடைந்தார்!
முதலில் அனைவரும் மேட்டுபாளையம் சென்று அங்கிருந்து வனதுறைக்கு சொந்தமான ஜீப்பில் குன்னூர் செல்வதாக தான் திட்டம், காசி சார் அவரது வண்டியிலேயே குன்னூருக்கு சென்று விடலாம் என்றார், ஒருவேளை ஆட்கள் அதிகமாயிருந்தால் சிக்கலாயிருக்கும், நான்கே பேர் ஆதலால் அனைவரின் இசைவுடன் குன்னூர் கிளம்பினோம்!, மிதமான பனியுடன், காலை நேரமாதலால் எதிர் வரும் வண்டிகள் குறைவாக, மிக நேர்த்தியான காசி சாரின் ட்ரைவிங் அனுபவத்துடன் ஒவ்வோரு கொண்டை ஊசி வளைவுகளையும் ரசித்து ரசித்து கடந்தோம்!
குன்னூரில் எங்களுக்காக ஒரு பெரிய அறை, கவனிக்க இரண்டு பேர், மறுபடியும் சிற்றுண்டி, கூடவே உற்சாக பானம் அனைத்தும் காத்து கொண்டிருந்தது!, அங்கே சிறிது இளைப்பாறிவிட்டு அங்கிருந்து ”அவலாஞ்சி” என்ற இடம் செல்வதாக உத்தேசம், இவ்விடத்தை தொடும் முன் சில விசயங்கள், ”எழுத்தாளார் ஜெயமோகன்” இவ்விடத்தை பற்றி அவரது பதிவுகளில் சிலாகித்து எழுதியுள்ளார், யாராவது சுட்டி தருவீர்களேயானால் பதிவில் இணைத்து விடலாம்!, மீண்டும் எங்கள் அறைக்கு வருவோம்!, குன்னூர் குளிர் எனக்குள் சுணக்கத்தை ஏற்படுத்தியது, பெட்ரோல் போடாமல் வண்டி நகராது, சரக்கு போடாமல் வால் நகர மாட்டான் என்று சொல்லிவிட்டேன்! அனைவரின் சம்மத்ததுடன் முதல் ரவுண்டை அங்கே ஆரம்பித்து அவலாஞ்ச் கிளம்பினோம்!
இன்னும் அவலாஞ்ச் போனது, மறுநாள் முதுமலை போனதென்று நிறையா இருக்கு!
70 வாங்கிகட்டி கொண்டது:
மீ த பர்ஸ்டா???
நல்லா போயிட்டு இருந்தது, ஏம்பா சட்டுன்னு முடிச்சிட்ட?
சீக்கிரம் அடுத்த பாகம் வரட்டும்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
வாலுக்கு வனம் தானே அகம்!
:)))))))
கொடுத்து வச்சவங்க நீங்க! அருமையான அனுபவமா இருந்துச்சுங்களா?
சீக்கிரம் அடுத்தபதிவு போடுங்க வால்..
ஆரம்பமேஎ ரவுண்டா? இனி முதுமலை போறதுக்குள்ள என்ன என்ன எல்லாம் நடந்துச்சோ?
//சுற்றுலா என்றாலே ஒரு சிறுவனின் சுதூகலத்துடன் துள்ளி குதித்தி கொண்டாடும் வாலிபர்களில் நானும் ஒருவன், //
இதுல ரெண்டு தப்பு இருக்கு.
1. சுதூகலம் தப்பு. குதூகலம் சரி
2. வாலிபர் தப்பு. வயோதிகர் சரி
சரியா?. திருத்திகுங்க வால்
சொன்னா நாங்களும் வந்துருப்போம்ல :(
இதெல்லாம் எப்ப நடந்துச்சி !!! என் ஜாய் பண்ணியிருக்கீங்க போல..
நடத்துங்க ..ரைட்டு !!
கொடுத்து வச்சவங்க நீங்க!
Here u go ..
http://jeyamohan.in/?p=411
and one more ..
http://jeyamohan.in/?p=1113
வெரி குட்... ஆரம்பம் மிக அருமை. இப்படி டக்குன்னு தொடரும் போட்டுட்டீங்களே...
அடுத்த இடுகையை எதிர்ப் பார்க்கின்றேன்.
அடுத்த பதிவு எப்போ..??
இன்னும் இருக்கா ?
சூப்பர் வால், தொடருக்கு காத்திருக்கிறேன்.
//பெட்ரோல் போடாமல் வண்டி நகராது, சரக்கு போடாமல் வால் நகர மாட்டான் என்று சொல்லிவிட்டேன்! அனைவரின் சம்மத்ததுடன் முதல் ரவுண்டை அங்கே ஆரம்பித்து அவலாஞ்ச் கிளம்பினோம்!//
அனுபவி ராஜா, அனுபவி..... இனிய பயணமாக இருக்கு நண்பா! கொஞ்சம் பொராமைதான் நானும் இருந்தால் நன்றாக இருக்கும்...
அடுத்த இடுகையை எதிர்ப் பார்க்கின்றேன்
வாழ்கை வாழ்வதற்கே.. சரியா புரிஞ்சி வச்சி இருக்கீங்க ..
உற்சாக பான(பயண) கட்டுரை கலக்கல் ஜி.
very nice!
ஆமா....நீங்க எதுக்கு முன்னாடியோ பின்னாடியோ எப்பவும் கைய கட்டிகிட்டு நிக்கி
றிய.....
//பெட்ரோல் போடாமல் வண்டி நகராது, சரக்கு போடாமல் வால் நகர மாட்டான் என்று சொல்லிவிட்டேன்! //
//வாலுக்கு வனம் தானே அகம்!//
:))
என்ஜாய்
முதுமலைல இருந்து திரும்பி வந்தாச்சா? இல்ல அங்கேயே செட்டில் ஆயிட்டிங்களா!
நடத்துங்க அண்ணே..
//சுற்றுலா என்றாலே ஒரு சிறுவனின் சுதூகலத்துடன் துள்ளி குதித்தி கொண்டாடும் வாலிபர்களில் நானும் ஒருவன்,//
ஏன்னா இது வாலிப வயசு....
நிறைய மேட்டர் இருக்கும்னு வந்தா ஒரு க்வாட்டரோட இன்றைய கதைய முடிச்சிட்டீங்க...மறுக்கா ஒரு வாரம் காத்திருக்கணுமா?
ஒரே ரௌண்டிளியே முடிசிடீங்கலே.........
அடுத்த ரௌண்டு எப்போஓஓஓஒ ...........?
பெரிய ஆளுங்க எல்லாம் சேர்ந்து கும்மி அடிச்சதா இது...???
என்ன தல .. தலை எல்லாம் நரைத்த மாதுரி இருக்கு ?? பரவால பாஸ் இங்க நிறைய பேரு நரைத்த முடிக்கு டை அடிச்சிட்டு யூத்ன்னு சொல்லிடு இருக்காங்க அவங்களுக்கு நீங்கள் எவ்வளவோ பரவாயில்லை.
நல்ல பதிவு. விரைவில் அடுத்து அடுத்து எழுதுங்கள். படிக்க ஆவலாய் உள்ளேன். பழமொழி அருமை. சரக்கு ஸ் த சீக்ரெட் ஆப் மை எனர்ஜினு சொல்லியிருக்கீங்க.
தல சூப்பர்.
அடுத்த பதிவு எப்போ?
ரைட்டு..
வால் செம ஆட்டமோ...
" பெட்ரோல் போடாமல் வண்டி நகராது, சரக்கு போடாமல் வால் நகர மாட்டான் என்று சொல்லிவிட்டேன் "
இந்த அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு : )
நல்லா என்சாய் பண்ணினிங்கப் போல, சீனா ஐயா எல்லாத்தையும் சொல்லிட்டார்
:)
படத்தைப் பார்த்ததுமே பலர் சுந்தரோட மூக்கைத்தான் பார்ப்பாங்க
:)
வாலுக்கு வனம்தானே அகம் - அட, சரிதான்ல!
நல்லா எழுதியிருக்கீங்க வால். தொடர்ந்து முழுக்க எழுதிடுங்க.
இட்லி வடையிலும்(http://idlyvadai.blogspot.com/2009/10/101.html),
பரிசல்காரன் வலைப் பதிவிலும்(http://www.parisalkaaran.com/2009/10/blog-post.html) ரொம்ப விம்மி வெதும்பி எழுதி இருக்கிறார்களே.. அவர்களை விம்மி வெதும்ப வைத்தது நீங்க தானா?
சுற்றுலா என்றாலே ஒரு சிறுவனின் சுதூகலத்துடன் துள்ளி குதித்தி கொண்டாடும் வாலிபர்களில்(????) நானும் ஒருவன்,
மற்றவர்களுக்கு காடு என்பது வனம், வாலுக்கு வனம் தானே அகம்!, என் நெருங்கிய உறவினர்களையும், மற்றும் என் மூதாதயர்களையும் காணும் ஆவலில் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தயாராகி விட்டேன்!
********************************
ஆகா தொடர் செமயா, காட்டுத்தனமா இருக்கும்போல. எழுதுங்க தல சீக்கிரம்.
நல்ல சுற்றுலா அடுத்த பாகம் எப்போ ?
சூப்பர்! அடுத்த பார்ட்டுக்காக வெயிட்டிங் :)
வால் அண்ணா,
Headphones எல்லாம் மாட்டி 'Youth'ன்னு காமிக்க ரெம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்களே :))
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
அடுத்தப் பகுதிக்காக காத்திருக்கிறேன்....
//பெட்ரோல் போடாமல் வண்டி நகராது, சரக்கு போடாமல் வால் நகர மாட்டான்//
Same blood
ரசிக்கிறேன்
தொடருங்கள்
சட்டுன்னு நிறுத்திட்டேளே
அடுத்தது போடுங்க ...
ரொம்ப சிறுசா இருக்கு... பதிவுதான்!
ஆமா? அதுல யாருங்க நீங்க?
//பெட்ரோல் போடாமல் வண்டி நகராது, சரக்கு போடாமல் வால் நகர மாட்டான் //
அது வால் பஞ்ச்
வாலு,
‘அத’ மட்டுஞ் சொல்லிராதீங்க. ஆர் எப்படிக் கேட்டாலுஞ்செரி :-)
ullen ayyaa :)
எனக்கு வாய்ப்பு போச்சே!
என்னைய கூட்டிகிட்டு போறேன்னு சொல்லிட்டு விட்டுட்டு போயிட்டாருயா அவரு
அண்ணே! படம் போடுறதுல என்ன கஞ்சத்தனம்? வெறும் 2 படம் தான் இருக்கா? மற்றபடி படங்களும் குளுமை.போட்டுத்தாக்குங்க.
//பெட்ரோல் போடாமல் வண்டி நகராது, சரக்கு போடாமல் வால் நகர மாட்டான் என்று சொல்லிவிட்டேன்! //
//வாலுக்கு வனம் தானே அகம்!//
Enjoy
ம்ம்ம் ...அனுபவிங்க ..!அனுபவிங்க..!
ஆரம்பமே அருமை.கலக்குங்க .
அவிலாஞ்சி போனது இல்லை..அடுத்த பதிவினை எதிர்பார்க்கிறேன்..
போறதைப் பத்தி முதலிலேயே சொல்லி இருக்கலாமே தல.. நாங்களும் வந்திருப்போம்ல..
தள,
அடுத்த தபா காட்டுக்குப் போரப்ப தர்காப்புக்கு அன்னன் அனுஜன்யா கவிதைகலை கையோடு கொண்டு போங்க காட்டு மிறுகங்க உங்கலை சுல்ந்துகிட்டா அத வச்சு பயமுருத்தளாம்.
சொள் அலகன்
படத்துல ரொம்ப அடக்கம் அதிகமா தெரியுதே தல!
தொடர்ந்து நடத்துங்க.
நான் இத எப்பவோ படிச்சுட்டேனே - மறுமொழி என்னாசு - நான் தான் எழுதலியா - இல்ல பப்ளிஷ் ஆகலியா - எப்பூடி
Enjoy the world with full of happiness
Great Dude
கோயம்புத்தூர் வந்துட்டு நம்பள பாகாம போறீங்க இருக்கட்டும்
அவலாஞ்ச் பற்றிய சுட்டிகளுக்கு நன்றி சம்பத், அடுத்த பதிவில் இணைத்து விடுகிறேன்!
//VISA said...
ஆமா....நீங்க எதுக்கு முன்னாடியோ பின்னாடியோ எப்பவும் கைய கட்டிகிட்டு நிக்கி
றிய.....//
ரொம்ப நல்லபையன்னு காட்டத்தான்!
//கார்ல்ஸ்பெர்க் said...
வால் அண்ணா,
Headphones எல்லாம் மாட்டி 'Youth'ன்னு காமிக்க ரெம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்களே :))//
அண்ணே!
எதுக்குன்னே காட்ட முயற்சிக்கனும், நான் ஊண்மையிலேயே யூத்தாக இருக்கும் போது!
//காசி - Kasi Arumugam said...
வாலு,
‘அத’ மட்டுஞ் சொல்லிராதீங்க. ஆர் எப்படிக் கேட்டாலுஞ்செரி :-)//
சொல்லவே மாட்டம்ல!
//Anonymous said...
தள,
அடுத்த தபா காட்டுக்குப் போரப்ப தர்காப்புக்கு அன்னன் அனுஜன்யா கவிதைகலை கையோடு கொண்டு போங்க காட்டு மிறுகங்க உங்கலை சுல்ந்துகிட்டா அத வச்சு பயமுருத்தளாம்.
சொள் அலகன்//
அடர்கானக புலி அய்யனார் மலைக்கு வந்திருந்ததால் கொடிய மிருகங்கள் ஓடி விட்டதாக தகவல் தல!
//supersubra said...
கோயம்புத்தூர் வந்துட்டு நம்பள பாகாம போறீங்க இருக்கட்டும்//
அடுத்தமுறை வரும் போது நிச்சயமாக சந்திப்போம் தல!
பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!
Post a Comment