ஜெயா டீவீயில் டோண்டு ராகவன்!

பிரபல பதிவர் டோண்டு ராகவனின் நேர்காணல் இன்று ஜெயா டீவியில் ஒளிப்பரப்பானது!
நாம் இயங்கி கொண்டிருக்கும் வலைப்பூ பற்றியும் அவரது மொழி பெயர்ப்பு தொழில் பற்றியும் தகவல்களை பறிமாறி கொண்டார்! பார்க்காதவர்களுக்கு சில முக்கிய தகவல்கள் மட்டும்!


ப்ளாக் என்பது இலவ்ச சேவை, ஆனாலும் தானாக அழிய வாய்ப்பில்லை என்றார்!(கொழுப்பெடுத்து யாரும் அழிக்காமல் இருந்தால் என்றார்) போன மாதம் பத்து பேருக்கும் மேல் ப்ளாக்கை தொலைத்து தேடியதை குறிப்படவில்லை!. நாம் பயன்படுத்தும் ஸ்கிரிப்டுகள் சில சமயம் எமனாக வாய்ப்புண்டு

2 வருடமாக் ப்ளாக்கில் இயங்குபவர்களுக்கு போலி டோண்டு விவகாரம் என்னவாயிற்று என்று பல குழப்பம் இருந்தது. அதில் ஒரு முடிச்சை அவிழ்த்தார். கம்ப்ளைண்ட் கொடுக்க செல்லும் போது உங்களுக்குள்ளேயே பேசி தீர்த்து கொள்ளுங்கள் என்றார்களாம், ஆள் பற்றாகுறை தான் காரணம் என்றார். எனகென்னவோ விட்டமின் “ப” விளையாடியிருக்கும் என்று தோன்றுகிறது!
ஜங்க் மெயில்கள் பற்றி சொன்னார் அது நமக்கு தெரியும் என்பதால் ”ஸ்கிப்பிங்” விளையாடுவோம்!

மொழி பெயர்ப்பில் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்தன. அதற்கு பயன்படும் மென்பொருள் பற்றிய கேள்வியில் சிரிக்காமல் பல ஜோக்குகள் அடித்து சென்றார். முதலில் அறிமுகப்படுத்தியது ”CAT” என்னும் மென்பொருள், அது ஏற்கனவே ஆங்கிலத்தில் பல இடங்களில் உபயோகப்படுத்தி நான் பார்த்திருக்கிறேன், அடுத்து சொன்னது ”மிஷின் ஓரியண்டடு” என்றார், பெயர் உச்சரிப்பு எனக்கு சரியாக தெரியவில்லை. அது அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கும்.

”lost in sight, lost in mind” என்ற வார்த்தையை மொழிபெயர்க்கும் போது அது இன்விசிபுல் இடியட் என்று மொழி பெயர்த்ததாக கூறினார், சரியான அர்த்தம் நீண்ட நாள் பார்க்காததால் மறந்துவிட்டேன். ஒருமுறை தேர்வு எழுதும் அறையில் கேள்வி தாள் கொடுத்த ஆசிரியர், தாளை பார்த்து ”unknown person prepare the question” என்று சொல்ல அனைவரும் ”கொல்” என சிரித்ததாக கூறினார். அவரு தந்தையிடம் அதை கூறியபோது, ஆசிரியரை கிண்டல் செய்யும் அளவுக்கு திமிரா என்று கண்டித்ததாகவும், அதற்கு சரியான வார்த்தை "unknowing person prepare the question" என்று சொல்ல வேண்டும் என்றும் சொல்லியுள்ளார். டோண்டு அவரது அப்பா தயாரிப்பு. விதை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும் என்ற பழமொழி ஞாபகம் வந்தது!

வேற்று மொழிகள் கற்று கொள்வது அவர்களது கலாச்சாரத்தையும், பேசுபவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள உதவும் என்றார்! அண்ணன் அப்துல்லா கடைசி பதிவில் மெக்காவில் தனது தாயாரை வீல் சேரில் அமர்த்தி தள்ளி சென்ற போது எதிரில் வந்த ஈரானிய பெண்மணி தம் அம்மாவிடம் எதோ சொன்னதாகவும், பின் தன்னை பார்த்து அழுது கொண்டே சென்றதாகவும் கூறினார், அப்துல்லா அண்ணன் ஆயிரம் கற்பனை செய்து கொண்டாலும் அந்த அம்மாவின் உணர்வுகள் அந்த மொழியில் தானே ஒளிந்திருக்கிறது!

குறையென்று பார்க்கப்போனால் டோண்டு அவர்களின் வேகமான பேச்சு! சில வாக்கியங்களை புரியாமல் விழுங்கி சென்றது! மேலும் கொஞ்சம் சுருக்கமாக பதிலலித்து கேள்வி கேட்பவருக்கு மேலும் சில கேள்விகள் கேட்க வாய்ப்பளித்திருக்கலாம்! கேள்வி கேட்பவரின் ”பல் கூச்சத்திற்கும், கடன் வாங்க கூச்சப்படுவதற்கும் உள்ள வித்தியாசம்” என்ற உதாரணம் அருமை, மொழியை இலக்கண சுத்தமாக புரிந்து கொள்ளுதல் பற்றி இந்த உதாரணத்தை கூறினார்!

கூட இருந்த அம்மணியை பற்றி நேரில் பார்த்த டோண்டு சாரே சொல்லுவார்!


(ப்ளாக்கினால் என்ன நன்மை என்ற கேள்விக்கு தென்திருப்போரைக்கு ஒருத்தர் வழி சொன்னார்!
என்று மொக்கை போட்டதையும், சீரியல் கதையை எழுதுவதால் பலருக்கு நன்மை!? என்று தனக்கு தானே கீரிடம் வைத்து கொண்டதும் வேண்டுமென்றே விடுபட்டது)

58 வாங்கிகட்டி கொண்டது:

Anonymous said...

நம்ப முடியல... ரொம்ப டெக்னிகலா எழுதியது நீங்களா ?? வாழ்த்துகள்.
( வரவர வாலு ரொம்ப சீரியஸ் மேட்டர் மட்டும் எழுதுவதை 56 வது வட்டம் ரசிகர்கள் சார்பா கண்டிக்கிறேன்.. சீக்கிரம் ஒரு எசப்பாட்டு பாடவும்)

நாஞ்சில் நாதம் said...

நல்லதொரு பகிர்வு

dondu(#11168674346665545885) said...

அது out of sight out fo mind, அதாவது பல நாட்களுக்கு ஒருவரை பார்க்காதிருந்தால் அவர்கள் நினைவு நம்மை விட்டகன்று விடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நட்புடன் ஜமால் said...

டோண்டு பெரியவருக்கு வாழ்த்துகள்.


நல்லா சொல்லியிருக்கீங்க வால்ஸ்

வால்பையன் said...

//மயில் said...
நம்ப முடியல... ரொம்ப டெக்னிகலா எழுதியது நீங்களா ?? வாழ்த்துகள்.
( வரவர வாலு ரொம்ப சீரியஸ் மேட்டர் மட்டும் எழுதுவதை 56 வது வட்டம் ரசிகர்கள் சார்பா கண்டிக்கிறேன்.. சீக்கிரம் ஒரு எசப்பாட்டு பாடவும்)//

இதுக்கு பேர் தான் டெக்கினிக்கலா!?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

டோண்டுவ கலாய்க்கலாம்னு பார்த்தா என்னைய கலாய்கிறிங்களே!

வால்பையன் said...

//நாஞ்சில் நாதம் said...
நல்லதொரு பகிர்வு//

நன்றி தல!

***********************

//dondu(#11168674346665545885) said...
அது out of sight out fo mind, அதாவது பல நாட்களுக்கு ஒருவரை பார்க்காதிருந்தால் அவர்கள் நினைவு நம்மை விட்டகன்று விடும்.//

நீங்கள் மிகவும் வேகமாக பேசினீர்கள், மேலும் நான் அப்போது தான் தூங்கி எழுந்தேன்! அதனால் குறிப்பெடுக்க சமயம் அமையவில்லை!

//out fo mind,//

r விட்டு போச்சா இல்லை அங்க அது வராதா?

வால்பையன் said...

//நட்புடன் ஜமால் said...
டோண்டு பெரியவருக்கு வாழ்த்துகள்.
நல்லா சொல்லியிருக்கீங்க வால்ஸ்//

நன்றிங்க ஜமால்!

Bleachingpowder said...

அனுஜன்யா கவிதையை மொழிபெயர்க்க எதாச்சும் மென்பொருள் இருக்கான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க ப்ளிஸ்

வால்பையன் said...

//Bleachingpowder said...
அனுஜன்யா கவிதையை மொழிபெயர்க்க எதாச்சும் மென்பொருள் இருக்கான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க ப்ளிஸ்
//


போன வாரம் நடந்த கூட்டத்தில் இதை பற்றி தான் பேச்சு! எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை உடனடி மென்பொருள் செய்யச் சொல்லி உத்தரவு! விரைவில் வந்து சேரும்!

நையாண்டி நைனா said...

sooparappu....

நையாண்டி நைனா said...

/*Bleachingpowder said...
அனுஜன்யா கவிதையை மொழிபெயர்க்க எதாச்சும் மென்பொருள் இருக்கான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க ப்ளிஸ்*/

very simple.

Take 56 Rs.


Open www.tasmac.co.in/oldmonk/cap.html

drink fully along with www.water.org

then read.

That is all.

கலையரசன் said...

//கொழுப்பெடுத்து யாரும் அழிக்காமல் இருந்தால்//

யாரும் அழிக்க மாட்டாங்க பாஸூ..
நாம சும்மா இல்லாம,
இந்த திரட்டி, அந்த திரட்டின்னு..
க்ரீடம், குஷ்டமுன்னு ஏதாவது
கோடிங்கை நம்ம ப்ளாகில்
ஏற்றாமல் இருந்தாலே போதும்!

டோண்டு அண்ணாச்சிக்கு வாழ்த்துகள்...

அதை தெரியபடுத்திய வாலுக்கு,
நான் ஊருக்கு வரும்போது
"பிளாக் டாக்" ஃபுல்-லு!!

மணிஜி said...

///கொழுப்பெடுத்து யாரும் அழிக்காமல் இருந்தால்//

யாரும் அழிக்க மாட்டாங்க பாஸூ..
நாம சும்மா இல்லாம,
இந்த திரட்டி, அந்த திரட்டின்னு..
க்ரீடம், குஷ்டமுன்னு ஏதாவது
கோடிங்கை நம்ம ப்ளாகில்
ஏற்றாமல் இருந்தாலே போதும்!

டோண்டு அண்ணாச்சிக்கு வாழ்த்துகள்...

அதை தெரியபடுத்திய வாலுக்கு,
நான் ஊருக்கு வரும்போது
"பிளாக் டாக்" ஃபுல்-லு!!//

நானும் ஆட்டத்துக்கு வருவேன்..அப்புறம் வாலு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் நானும் பார்த்தேன்..அம்மணி புடவையும் சூப்பர்..

Anonymous said...

//வரவர வாலு ரொம்ப சீரியஸ் மேட்டர் மட்டும் எழுதுவதை 56 வது வட்டம் ரசிகர்கள் சார்பா கண்டிக்கிறேன்..//

இந்தப் பதிவாவது பரவாயிள்ள, தள இப்போள்ளாம் ரொம்ப சீரியஸ் தான் எழுதுராரு !!

எள்ளா வட்டத்தின் சார்பாவும் கண்டணங்கல் !!

சொள் அலகன்

பட்டாம்பூச்சி said...

நல்ல பகிர்வு :)

அ.மு.செய்யது said...

ஆபிஸ்ல இருந்ததுனால பாக்க முடியல..உங்க பதிவ பார்த்தே தெரியுது பேட்டி எவ்ளோ சுவராஸியமா இருந்திருக்கும்னு ??

ஐ திங்க்..ஃஈவ்னிங் மீள்பதிவு சாரி மீளொளிபரப்பு செய்யப்படும் என்று நினைக்கிறேன்.

டைமிங் கேட்டு சொல்லுங்க பாஸூ

ரெட்மகி said...

//
ப்ளாக் என்பது இலவ்ச சேவை, ஆனாலும் தானாக அழிய வாய்ப்பில்லை என்றார்!(கொழுப்பெடுத்து யாரும் அழிக்காமல் இருந்தால் என்றார்) போன மாதம் பத்து பேருக்கும் மேல் ப்ளாக்கை தொலைத்து தேடியதை குறிப்படவில்லை!. நாம் பயன்படுத்தும் ஸ்கிரிப்டுகள் சில சமயம் எமனாக வாய்ப்புண்டு
//

கொஞ்சம் விளக்கமாக சொல்லவும் ...

(நான் blog தொடங்கி 20 நாள் தான் ஆகுது )

Bleachingpowder said...

//நையாண்டி நைனா said...
/*Bleachingpowder said...
அனுஜன்யா கவிதையை மொழிபெயர்க்க எதாச்சும் மென்பொருள் இருக்கான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க ப்ளிஸ்*/

very simple.
Take 56 Rs.
ஒpen www.tasmac.co.in/oldmonk/cap.html
drink fully along with www.water.org
hen read.//

அட நீங்க வேற, நாங்கெல்லாம் அடிச்சது இறங்கனும்னாதான் அவரோட கவிதைகளை படிப்போம்

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு நண்பா. ஆனா உங்க வால்தனம் கொஞ்சம் கம்மியாகிகிட்டே இருக்கே என்ன விஷயம் தல.

Admin said...

எங்களாலதான் பேட்டிய பார்க்க முடியல. பகிர்ந்தமைக்கு நன்றி பாலு...

dondu(#11168674346665545885) said...

அது out of sight out of mind, தவறுதலாக of என தட்டச்சுவதற்கு fo என டைப்பிவிட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Mahesh said...

அருமை அருண்....

தவிர சொள் அலகன் மறுபடி வர வெச்சுட்டீங்களே !!

Anonymous said...

தெரிஞ்சு போச்சா? எம்புட்டு அறிவு!!!!

Anonymous said...

பார்க்காதவர்களுக்கும் தகவல் பரிமாறிவிட்டீர்கள்..தொழில் நுட்பமா சொன்னது எல்லாம் நமக்கு புரியலைங்கோ..எப்ப கவிதையிலிருந்து வெளிய வருவனோ அப்பத் தான் ஒரு வேளை உருப்படுவேனோ என்னவோ....மொத்ததில் நேற்றைய நிகழ்வை தொகுத்தாயிற்று...

ஈரோடு கதிர் said...

அருண்...
முதலில் ஜெயா டிவி நிகழ்ச்சி
பற்றி sms மூலம் அனுப்பியதற்கு நன்றி..

//கூட இருந்த அம்மணியை பற்றி நேரில்
பார்த்த டோண்டு சாரே சொல்லுவார்!//


இது தான் வால்பைய‌ன் ட‌ச்

கார்த்திகைப் பாண்டியன் said...

கரண்ட் இல்லாததால் பார்க்க முடியாமல் போனது... பகிர்வுக்கு நன்றி தல..

தினேஷ் said...

sms அனுப்புனதுக்கு நன்றி தல ஆனா பார்க்க முடியல ...

/வரவர வாலு ரொம்ப சீரியஸ் மேட்டர் மட்டும் எழுதுவதை 56 வது வட்டம் ரசிகர்கள் சார்பா கண்டிக்கிறேன்.. சீக்கிரம் ஒரு எசப்பாட்டு பாடவும்//

மேலே உள்ளதில் ’மட்டும்’ என்பதை எடுத்துவிட்டு படிக்கவும்..

ஆனால் இது 56 வது வட்டமல்ல பெங்களூர் தலைமை மன்றம் சார்பா... ஹி ஹி ஹி

வால்பையன் said...

நையாண்டி நைனா said...

/*Bleachingpowder said...
அனுஜன்யா கவிதையை மொழிபெயர்க்க எதாச்சும் மென்பொருள் இருக்கான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க ப்ளிஸ்*/

very simple.

Take 56 Rs.


Open www.tasmac.co.in/oldmonk/cap.html

drink fully along with www.water.org

then read.

That is all//

அருமையான விளக்கம் நையாண்டிநைனா!

நன்றி வருகைக்கு!

வால்பையன் said...

கலையரசன் said...

//கொழுப்பெடுத்து யாரும் அழிக்காமல் இருந்தால்//

யாரும் அழிக்க மாட்டாங்க பாஸூ..
நாம சும்மா இல்லாம,
இந்த திரட்டி, அந்த திரட்டின்னு..
க்ரீடம், குஷ்டமுன்னு ஏதாவது
கோடிங்கை நம்ம ப்ளாகில்
ஏற்றாமல் இருந்தாலே போதும்!

டோண்டு அண்ணாச்சிக்கு வாழ்த்துகள்...

அதை தெரியபடுத்திய வாலுக்கு,
நான் ஊருக்கு வரும்போது
"பிளாக் டாக்" ஃபுல்-லு!!//

நன்றி கலையரசன்!
”ப்ளாக் டாக்” கடிக்காதுல்ல!

வால்பையன் said...

தண்டோரா
நீங்க இல்லாமலா!

சொள் அலகன்
வேளை பளு அதிகமா இருக்கு! என்ன எழுதலாம் நீங்களே சொல்லுங்களேன்!

நன்றி பட்டாம்பூச்சி

அ.மு.செய்யது
காலை வணக்கம் நிகழ்ச்சி மீள் ஒளிபரப்புக்கு வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன்!

ரெட்மகி
ப்ளாக்கர் தரும் வசதிகல்லாது புதிதாக ப்ளாக்கில் எதாவது இணைத்தால் நண்பர்களிடன் ஒரு வார்த்தை கேளுங்கள்(ப்ளாக் நண்பர்களிடன்)

ஆமா ப்ளீச்சிங்
அதை படிச்சா அடிச்சதும் இறங்கிரும்

S.A. நவாஸுதீன்
வாலை ஷார்ப் பண்ணிகிட்டு இருக்கேன்!

நன்றி சந்ரு

புதிய வார்த்தை தெரிந்து கொண்டேன் டோண்டு சார்!

நன்றி மகேஷ்
சொள் அலகன் உங்க மல்டிபிளா?

நன்றி மயில்

தமிழரசி
கவிதைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், நீங்க வழக்கம் போல கவிதையாய் வாழுங்கள்

நன்றி கதிர்

நன்றி கார்த்திகைப்பாண்டியன்

சூரியன்
பெங்களூரில் மொத்தம் எத்த்னை வட்டம் இருக்கு!

குப்பன்.யாஹூ said...

Thanks for sharing this news and congrats to Dondu.

Anonymous said...

தள,

பொசுக்குன்னு கோபம் வந்திருச்சோ !! இசி தள இசி

இருந்தாளும் தொண்டனை மதித்து கேட்டதாள , எனக்கு என்ன எலுதினா புடிக்காது -ன்னு சொல்ரேன்.

சரக்கு -ஐ பத்தி எலுதுநா , கொஞ்சம் இடவெலி விட்டு எலுது, ஒரேடியா சரக்குகிட்ட சரண்டர் ஆவாது

நிஜ அரசியள் விமர்சனம் வேணாம் -நீ ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு எவனாவது எங்கிட்ட ஒத்தைக்கு ஒத்தை வரமுடியுமாங்க்கிற அழவுக்கு போயற்ற

டச்சிங்க்க் சென்டிமென்ட் எள்ளாம் உங்கக்கு சரியாவாது , ஒத்துக்க தள

கடைசியா

எம் பேர வச்சு காமெடி எதுவும் பன்னளியே நீ !! அதென்ன கேள்வி மகேஷ்கிட்ட ? எனக்கு வெளங்கலை

வால்பையன் said...

குப்பன்_யாஹூ said...

Thanks for sharing this news and congrats to Dondu.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராம்ஜி!

Anonymous said...

கடைசி பின்னூட்டம் நம்மது தான்

சொள் அலகன்

வால்பையன் said...

//சரக்கு -ஐ பத்தி எலுதுநா , கொஞ்சம் இடவெலி விட்டு எலுது, ஒரேடியா சரக்குகிட்ட சரண்டர் ஆவாது //

அப்படி தான் எழுதி கொண்டிருக்கிறேன் என்று நம்புகிறேன்!

//நிஜ அரசியள் விமர்சனம் வேணாம் -நீ ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு எவனாவது எங்கிட்ட ஒத்தைக்கு ஒத்தை வரமுடியுமாங்க்கிற அழவுக்கு போயற்ற //

முன்பை போல ஆரோக்கியமான உரையாடல்கள் இப்போது எதுவும் நடப்பதில்லை! மேலும் என்னுடன் ஒத்தைக்கு ஒத்தை மோதும் அளவுக்கு இங்கு யாருக்கும் தகுதி இல்லை!


//டச்சிங்க்க் சென்டிமென்ட் எள்ளாம் உங்கக்கு சரியாவாது , ஒத்துக்க தள//

டச்சிங் சரி வரும், செண்டிமெண்ட் சரிவராது, ஒத்துகிறேன்!

//எம் பேர வச்சு காமெடி எதுவும் பன்னளியே நீ !! அதென்ன கேள்வி மகேஷ்கிட்ட ? எனக்கு வெளங்கலை//

இது ஒரு விளையாட்டு!
கூடுவிட்டு கூடு பாயுற மாதிரி!
நான் அடிக்கடி ப்ளீசிங் பவுடரா ஆகிருறேன் இல்லையா, அது மாதிரி!

வால்பையன் said...

//Anonymous said...
கடைசி பின்னூட்டம் நம்மது தான்
சொள் அலகன்//


அது சொள் அலகனுடதுன்னு தெரியும்!
பயங்கர பிழைகளோடு வந்திருக்கும் இந்த பின்னூட்டம் யாருது!?

geethappriyan said...

good info dude
btw what is that "poli dondu"
everyone talking about that matter in their blogs.
unmai tamilan,senthamizh ravi are upset with that it seams,please explain it to new comers like me

வால்பையன் said...

//கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...
good info dude
btw what is that "poli dondu"
everyone talking about that matter in their blogs.
unmai tamilan,senthamizh ravi are upset with that it seams,please explain it to new comers like me
//

நண்பரே டோண்டுவின் வலைபூவில் “போலி டோண்டு” என லேபிள் வைத்திருப்பார், அதில் உங்களுக்கு முழு விபரம் கிடைக்கும்!

நான் கூட சைக்கோ என்னும் லேபிளில் ஒரு இடுக்கை எழுதியுள்ளேன்!

தினேஷ் said...

//பெங்களூரில் மொத்தம் எத்த்னை வட்டம் இருக்கு!//

கணக்கில்லா வட்டம் , சதுரம் , முக்கோணம் .. அப்புறம் rectangle ,octogonal(எனக்கு தமிழ்ல தெரியாது) இன்னும் பிற ...

அன்புடன் அருணா said...

அடடா...இதென்ன கலாட்டா!?

Ranjitha said...

டோண்டு ராகவன்-Journalist?!!..

selventhiran said...

பார்க்காத குறையை தீர்த்தீர்!

RAMYA said...

டோண்டு ராகவன் சாருக்கு வாழ்த்துக்கள்!!

மேவி... said...

val....

unga msg yai prog. mudintha pin thaan parthen.....

irunthalum avarukku valthukkal

வால்பையன் said...

//சூரியன் said...
//பெங்களூரில் மொத்தம் எத்த்னை வட்டம் இருக்கு!//
கணக்கில்லா வட்டம் , சதுரம் , முக்கோணம் .. அப்புறம் rectangle ,octogonal(எனக்கு தமிழ்ல தெரியாது) இன்னும் பிற .//


அத்தனைக்கும் மன்றங்கள் இருக்கா!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

**********************

//அன்புடன் அருணா said...
அடடா...இதென்ன கலாட்டா!?//

பார்க்கலையா நீங்க!

*********************

//Ranjitha said...
டோண்டு ராகவன்-Journalist?!!..//

தமிழ்,ஆங்கிலம், இந்தி, உருது, ஜெர்மன், ப்ரெஞ்ச்,ரஷ்யன், இட்டாலி தெரிந்த மொழி பெயர்ப்பாளர்!

***********************

வால்பையன் said...

//செல்வேந்திரன் said...
பார்க்காத குறையை தீர்த்தீர்!//

கடவுளே! :) :) :)

**********************

//RAMYA said...
டோண்டு ராகவன் சாருக்கு வாழ்த்துக்கள்!!//

சென்னைவாசிகளுக்கு ஸ்பெஷல் ட்ரீட் இருக்கு! மிஸ் பண்ணாதிங்க! நம்பர் வேணுமா!

*************************

//MayVee said...
val....
unga msg yai prog. mudintha pin thaan parthen.....
irunthalum avarukku valthukkal//

நீங்க எந்திரிக்கிறதே பத்து மணிக்கு தான்னு தெரியும் தல!

Anonymous said...

//எம் பேர வச்சு காமெடி எதுவும் பன்னளியே நீ !! அதென்ன கேள்வி மகேஷ்கிட்ட ? எனக்கு வெளங்கலை//

இது ஒரு விளையாட்டு!
கூடுவிட்டு கூடு பாயுற மாதிரி!
நான் அடிக்கடி ப்ளீசிங் பவுடரா ஆகிருறேன் இல்லையா, அது மாதிரி!///

என்ன தள, இரண்டும் மூன்ரும் ஐந்துன்னு தெரியாமால கேள்வி கேட்டா , அதுக்கு (a+b)2 = a2+b2+2ab -ன்னு பதிள் சொள்ரயே
எனக்கு வெளங்கலை
எனக்கு வெளங்கலை

சொள் அலகன்

Joe said...

டோண்டுவிற்கு வாழ்த்துக்கள்.

தினேஷ் said...

///சூரியன் said...
//பெங்களூரில் மொத்தம் எத்த்னை வட்டம் இருக்கு!//
கணக்கில்லா வட்டம் , சதுரம் , முக்கோணம் .. அப்புறம் rectangle ,octogonal(எனக்கு தமிழ்ல தெரியாது) இன்னும் பிற .//


அத்தனைக்கும் மன்றங்கள் இருக்கா!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

அத்தனைக்கும் மன்றங்கள் இல்ல உங்களுக்கு அத்தனை மன்றங்கள் . கொஞ்சம் மன்ற செலவுக்கு விட்டமின்
ப அனுப்புனால் இன்னும் சிறப்பா செய்ல்படும் . ஒரு ரெண்டு சி விட்டமின் ப அனுப்பவும் ..

செயலாளர்
வால்ஜி தலம மன்றம்
பெங்களூர்..

Anonymous said...

வால்பையன் said...
//Anonymous said...
கடைசி பின்னூட்டம் நம்மது தான்
சொள் அலகன்//


அது சொள் அலகனுடதுன்னு தெரியும்!
பயங்கர பிழைகளோடு வந்திருக்கும் இந்த பின்னூட்டம் யாருது!?
//

தள உன்னுடைய பதிவு தவிறு வேர எங்கயும் நான் பின்னூட்டம் இடரதிள்ள ஏன்னா,

என் தமிழ் குரு அருமைநாயகம் யேசுராஜா , "வாலும் கொஞ்சம் அங்கே இங்கே தப்பா எலுதுவாறு அதனால அவர பதிவில் மட்டும் நீ கருத்து சொல்லு, அவரு உன்னைய திட்ட மாட்டறுன்னு சொன்னார் .

ஆனா தள you too.....

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

உருப்படியான பதிவெல்லாம் போடற,என்னப்பா ஆச்சு உனக்கு?

வால்பையன் said...

//seidhivalaiyam.in said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
//

நன்றி செய்தி வளையம்!
நானும் இணைத்து விட்டேன்!

வால்பையன் said...

//Anonymous said...

//எம் பேர வச்சு காமெடி எதுவும் பன்னளியே நீ !! அதென்ன கேள்வி மகேஷ்கிட்ட ? எனக்கு வெளங்கலை//
இது ஒரு விளையாட்டு!
கூடுவிட்டு கூடு பாயுற மாதிரி!
நான் அடிக்கடி ப்ளீசிங் பவுடரா ஆகிருறேன் இல்லையா, அது மாதிரி!///
என்ன தள, இரண்டும் மூன்ரும் ஐந்துன்னு தெரியாமால கேள்வி கேட்டா , அதுக்கு (a+b)2 = a2+b2+2ab -ன்னு பதிள் சொள்ரயே
எனக்கு வெளங்கலை
எனக்கு வெளங்கலை

சொள் அலகன்//

பரவாயில்லை விடுங்க சொள் அலகன்!
நீங்க சொன்ன உதாரண கணக்கு கூட தான் எனக்கு புரியல நான் கேட்கிறேனா! அது மாதிரி லூஸ்ல விடுங்க!

அடுத்த பதிவுக்கு வாங்க!

**********************

தள உன்னுடைய பதிவு தவிறு வேர எங்கயும் நான் பின்னூட்டம் இடரதிள்ள ஏன்னா,

என் தமிழ் குரு அருமைநாயகம் யேசுராஜா , "வாலும் கொஞ்சம் அங்கே இங்கே தப்பா எலுதுவாறு அதனால அவர பதிவில் மட்டும் நீ கருத்து சொல்லு, அவரு உன்னைய திட்ட மாட்டறுன்னு சொன்னார் .

ஆனா தள you too.....//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

என்னை திருத்த பார்ப்பிங்களா! இப்படி ஓட்டுறிங்களே!
எனக்கும் அறிமுகம் பண்ண மாட்டிங்களா அந்த எருமைநாயகம் யேசுராஜாவை!

வால்பையன் said...

Joe said...

டோண்டுவிற்கு வாழ்த்துக்கள்.//

நன்றி ஜோ!

**********************

சூரியன் மன்றத்துக்கு ஒரு ஃபுல்லுன்னு கணக்கு போட்டாக்கூட ஆயுலுக்கும் போதுமே!

***********************

//ஸ்ரீதர் said...
உருப்படியான பதிவெல்லாம் போடற,என்னப்பா ஆச்சு உனக்கு?//

அடுத்த பதிவுக்கு வாங்க மாப்ளே!

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

கிரி said...

//மயில் said...
நம்ப முடியல... ரொம்ப டெக்னிகலா எழுதியது நீங்களா ?? வாழ்த்துகள்//

ஹி ஹி ஹி

டோண்டு சார் க்கு வாழ்த்துக்கள்

கே.பாலமுருகன் said...

வணக்கம் வால் பையன். படுவேகமாக வலைப்பதிவுலகில் அசத்திக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
பல மொக்கைகள் கலக்குகின்றன.

கே.பாலமுருகன்

வால்பையன் said...

நன்றி செய்திவளையம்
நன்றி கிரி
நன்றி கே.பாலமுருகன்

!

Blog Widget by LinkWithin