வாழ்த்துக்களோடு ஆரம்பிப்பது தானே முறை, பதிவர் அன்பு அண்ணன் அப்துல்லா பாடிய பாடலை ஒரு சைட்டில் பாராட்டி எழுதியுள்ளார்கள், அவர்களின் காதுகளை பற்றிய ஆராய்ச்சியை பிறகு வைத்து கொள்ளலாம், முதலில் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
செய்தி:
Kadhal Oru Pallikkoodam---
Vocals: M.M. Abdullah & Chorus
Lyrics: Viveka
You need to relish this song for two things – the grin-worthy lyrics and the way the guitar and trumpet come together to bolster the native rhythms! Abdullah sounds easy on the ears. The song could find immediate resonance in the minds of the college-going kids, though the tune sounds maddeningly familiar!
***********************************
பதிவர் ச்சின்னபையன், அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருக்கிறார்,
நண்பர் விக்னேஷ்வரன் எடுத்த பேட்டியில் நான் சந்திக்க விரும்பும் நபராக அவரைக் குறிப்பிட்டதை அறிந்து எனக்கு தரிசனம் தர சம்மதித்துள்ளார், வரும் ஞாயிறு கோவையில்.
திருப்பூர் அன்பர்கள் சிரமம் பார்க்கலாம் விடுமுறையை கோவையில் கழிக்க வருமாறு கேட்டு கொள்கிறேன். அண்ணாச்சி இருக்காக, மாப்பிளை சஞ்சய் இருக்காக மற்றும் நம் உறவினர்கள்(மருதமலையில) எல்லாம் இருக்காக, வந்துடுங்க நண்பர்களே!
***********************************
சென்ற குவியலிலேயே குறிப்பிட்டிருந்தேன், குறுக்க பேசும் பழக்கம் எனக்குண்டு என்று, அது வேறு சிலருக்கும் இருப்பதை அறிந்து அது பற்றிய ஆராய்ச்சியில் இறங்கையில் பல உண்மைகள் வெளிவந்தது, இந்த பழக்கம் எனக்கு மட்டுமல்ல, சிறுவயதிலிருந்தே உங்களை சுற்றி நண்பர்கள் அமர்ந்து உங்கள் பேட்சை கேட்டு கொண்டிருப்பார்களா? அப்ப உங்களுக்கும் இருக்கு.
கிசுகிசு பாணியில் யார்யாருக்கு இருக்குன்னு சொல்லிடுறேன்.
எனக்கும், யானையை அடக்கும் வங்கிகாரருக்கும் முதல் பத்து நிமிசம் சைலண்ட் மியூசிக் தான், அதன் பிறகு டி.டீ.எஸ். டால்பி சவுண்ட் தான்,
கொட்டுகாரர் போனில் தான் பேசி கொண்டிருக்கிறார், ஆனால் அவருக்கும் அந்த பழக்கம் உண்டுன்னு தெரியுது,
சீனியர் நிருபரான இரவுநேர தொல்லைபேசி பதிவருக்கும் இந்த பழக்கம் உண்டு, ஆனால் சுதி ஏற ஏற சவுண்டு குறையும்.
மேலே இருக்குறவங்க பூரா துறை சார்ந்து பேசுறோம்னு மொக்கை போடுறவங்க, இனி பேசி கொண்டே இருந்தாலும் சுவாரஷ்யமாக பேசுபவர்கள் பற்றி
ஈரோடு போட்டோகாரர் இதில் முதலிடம், சிறப்பு: நமக்கு போரடிக்கிற மாதிரி தெரிந்தால் டாபிக்கை மாற்றுவது,
வேட்டைகாரர் தான் இதில் டாப்ரேங்க், சுருக்கமாக சொல்வதென்றால் வீட்டில் இருந்து வரும்போது காதோடு மட்டும் வா! வாய் வீட்டிலேயே இருக்கட்டும் என்பாராம்
*****************************************
உங்கள் உடன் இருப்பவர் காதலிக்கிறாரா என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
இதோ டிப்ஸ்:
காதல் பாடல்களாக அதிக சத்தத்தில் கேட்டு கொண்டிருப்பார்!
சிலசமயம் உணர்ச்சி வேகத்தில் கூடவே பாடுவார்!
இசையை மட்டும் நாம் கேட்டு வேலை செய்து கொண்டிருக்கும் போது, பாடல் வரிகளை மனப்பாடம் செய்ய ஒரே பாடலை திரும்ப போட்டு நமக்கு இனிமா கொடுப்பார்!
எதாவது புதிதாக செய்ய வேண்டும் என ஆர்வத்திலேயே இருப்பார்!
பைக், மற்றும் உடையில் சில சில மாற்றங்கள் அடிக்கடி நடக்கும்!
சம்பந்தா சம்பந்தமில்லாமல் கேள்விகள் கேட்பார்!
உண்மையில் காதலிப்பதை விட அவுங்க கூட இருக்குறது பேஜார் தான் இல்லையா!?
கொஞ்சநாளா எனக்கு அப்படி தான் இருக்குது!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
**************************
கவுஜ போடனும்ல!
இந்த வாரமும் அனுஜன்யா தான்
இரவு நேரத்தில்
மென்பொருள் ஆண்கள்
சரக்கில் குறைந்த தண்ணீர்
வேலை இழக்கும் அச்சமோ!
அவர்களுக்குப் பின்
நிதமும் திவால் ஆகும்
அமெரிக்க வங்கிகள்
டாடாவிலும் டோயோட்டாவிலும்
நிதமும் சுற்றிய
அதிர்ஷ்டசாலி நண்பன்.
அடுத்தது நீதான் என்று
ஆள்காட்டி விரல் நீட்டும்
வேலைபோகாத நண்பன்
சிகரெட்டுகளை விட பீடிகளே தேவலாம்
ரூபாய்க்கு இரண்டுக்கு மேல் கிடைக்கிறதே
இந்தப் பக்கம் ஒரு வாரமாக
குடை விற்றுகொண்டிருக்கும் ஆணின்
காட்டில் மழை இன்னும் நிற்கவில்லை
மேம்பால இறக்கத்தில்
கண்ணாடியை மேலேற்றித்
தூங்கத் துவங்கினேன்
குடிசைப் புழுதி
என் நாசிக்கு எதிரி
57 வாங்கிகட்டி கொண்டது:
//பதிவர் அன்பு அண்ணன் அப்துல்லா பாடிய பாடலை ஒரு சைட்டில் பாராட்டி எழுதியுள்ளார்கள்//
எவ்வளவு செலவாச்சுன்னு கேட்கனும் தல, கட்டுபடி ஆச்சுன்னா நம்ம தளத்தை பத்தியும் நாலு வார்த்தை நல்லதா எழுத சொல்லலாம்
//திருப்பூர் அன்பர்கள் சிரமம் பார்க்கலாம் விடுமுறையை கோவையில் கழிக்க வருமாறு கேட்டு கொள்கிறேன்//
ஈரோட்டுல இருந்து வரும் போதே எல்லாரையும் ஓட்டிட்டு வந்துடுங்க
//இரவு நேரத்தில்
மென்பொருள் ஆண்கள்
சரக்கில் குறைந்த தண்ணீர்
வேலை இழக்கும் அச்சமோ!
//
:)
இரவு நேரத்தில்
மென்பொருள் ஆண்கள்
சரக்கில் குறைந்த தண்ணீர்
வேலை இழக்கும் அச்சமோ!
அவர்களுக்குப் பின்
நிதமும் திவால் ஆகும்
அமெரிக்க வங்கிகள்
நிசர்சனம்
என்னே ஒரு வரிகள்
அடுத்தது நீதான் என்று
ஆள்காட்டி விரல் நீட்டும்
வேலைபோகாத நண்பன்
சிகரெட்டுகளை விட பீடிகளே தேவலாம்
ரூபாய்க்கு இரண்டுக்கு மேல் கிடைக்கிறதே
ஹஹஹ
நன்று
//உண்மையில் காதலிப்பதை விட அவுங்க கூட இருக்குறது பேஜார் தான் இல்லையா!?
//
மச்சான், அவ இன்னைக்கு என்னை பாத்து சிரிச்சாடா, ரூம்ல் நல்லா தூங்கிட்டு இருக்கும் போது எழுப்பி சொல்லுவான் பாருங்க, அப்படியே நாலு அப்பு அப்பலாம்ன்னு இருக்கும்
//இரவு நேரத்தில்
மென்பொருள் ஆண்கள்
சரக்கில் குறைந்த தண்ணீர்
வேலை இழக்கும் அச்சமோ!//
ஆஹா ஆஹா அசத்திட்டிங்க தலைவா
அப்துல்லாபாடிய பாட்டு அவரோட ரிங்டோனே அந்த பாட்டுதான், கேக்கனும் நு நினைக்கிறவங்க அவரோட செல்லுக்கு கூப்பிடவும்
காதலிப்பவன் கூட இருந்தால் நமக்காக எல்லாவேலையும் செய்வான், அடிக்கடி சிரிப்பான்...
குவியல் கலவையின் டாப் கவுஜ சூப்பர் வால்
நானும் சகோதரர் அப்துல்லாலவை வாழ்த்திக்கிறேன் வால்ஸ்!!
//
திருப்பூர் அன்பர்கள் சிரமம் பார்க்கலாம் விடுமுறையை கோவையில் கழிக்க வருமாறு கேட்டு கொள்கிறேன். அண்ணாச்சி இருக்காக, மாப்பிளை சஞ்சய் இருக்காக மற்றும் நம் உறவினர்கள்(மருதமலையில) எல்லாம் இருக்காக, வந்துடுங்க நண்பர்களே!
//
பார்த்து மருதலமலை உறவினர்கள் எல்லாரையும் பிடிச்சி கடிச்சி வச்சிட போறாங்க :))
//
இரவு நேரத்தில்
மென்பொருள் ஆண்கள்
சரக்கில் குறைந்த தண்ணீர்
வேலை இழக்கும் அச்சமோ!
//
ஹையோ ஹையோ நல்ல சந்தேகம் போங்க :))
//
அவர்களுக்குப் பின்
நிதமும் திவால் ஆகும்
அமெரிக்க வங்கிகள்
//
ஆமாம் பாவம் :((
//
அடுத்தது நீதான் என்று
ஆள்காட்டி விரல் நீட்டும்
வேலைபோகாத நண்பன்
//
:((
//
சிகரெட்டுகளை விட பீடிகளே தேவலாம்
ரூபாய்க்கு இரண்டுக்கு மேல் கிடைக்கிறதே
//
ஆனா உண்டம்புக்கு கேடு விளைவிக்குமே?
அது பரவா இல்லையா???
//அடுத்தது நீதான் என்று
ஆள்காட்டி விரல் நீட்டும்
வேலைபோகாத நண்பன்
//
எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல........
//இரவு நேரத்தில்
மென்பொருள் ஆண்கள்
சரக்கில் குறைந்த தண்ணீர்
வேலை இழக்கும் அச்சமோ!//
only ஆண்கள்?
கோயம்முத்துருக்கா ! !!!!!!!! நல்ல வேளை சொன்னீங்க!! எதுக்கும் சாக்கரதைய இருப்பமில்ல அதான்..
//இந்த பழக்கம் எனக்கு மட்டுமல்ல, சிறுவயதிலிருந்தே உங்களை சுற்றி நண்பர்கள் அமர்ந்து உங்கள் பேட்சை கேட்டு கொண்டிருப்பார்களா? அப்ப உங்களுக்கும் இருக்கு.//
எனக்குத் தெரிஞ்சு எனக்கு இருக்கு, இன்னும் சில பேருக்கு இருக்குறதும் தெரியுது. போன தடவையே இதப் பத்தி சொல்லனும்னு நெனச்சேன். சில சமயம் பாருங்க, நம்மை விடப் பேசுபவர் பெரிய குறுக்கப்பேசியாக இருந்தால் என்ன செய்வதென்றே தெரிவதில்லை... உளர ஆரம்பித்து விடுவேன், சொல்ல வந்த விசயங்கள் மறந்து போகின்றன... தங்களுடைய அனுபவம் எப்படி?
//சிகரெட்டுகளை விட பீடிகளே தேவலாம்
ரூபாய்க்கு இரண்டுக்கு மேல் கிடைக்கிறதே//
இதுதான் மனசுல அப்படியே நிக்கிது. சிகரட் விலை ஏறப்போகுதாமே?!
காதல் பாடல்களாக அதிக சத்தத்தில் கேட்டு கொண்டிருப்பார்!
சிலசமயம் உணர்ச்சி வேகத்தில் கூடவே /
கார்த்தியா இப்படி நம்பவே முடியலயே :)
இந்த இடுகையிலையே அழகாயிருந்தது உங்க...
கையெழுத்துதான் என்றால், அடிக்க வருவீங்களா?
(அடிக்கன்னா..சரக்கடிக்கதான் மாப்பி!!)
//இந்தப் பக்கம் ஒரு வாரமாக
குடை விற்றுகொண்டிருக்கும் ஆணின்
காட்டில் மழை இன்னும் நிற்கவில்லை//
நீங்க ஏன் இந்த உயிரோசை..கீற்று..நவீன விருட்சம் மின்னிதழ்களுக்கெல்லாம் எழுதக்கூடாது ??
அசத்திட்டிங்க வால்
குவியல் படா சோக்காகீது வாலு..
//
கொஞ்சநாளா எனக்கு அப்படி தான் இருக்குது!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
வாழ்த்துக்கள்..
//
மேம்பால இறக்கத்தில்
கண்ணாடியை மேலேற்றித்
தூங்கத் துவங்கினேன்
குடிசைப் புழுதி
என் நாசிக்கு எதிரி
//
செம்ம.. செம்ம.. செம்ம.. சூப்பரப்பு..
சின்னப்பையன் கோவை வர்றாரா பெரிய மனுசங்களை பாக்க :)
அப்துல்லா அண்ணன் வாழ்க. நான் இப்பவே அண்ணன் பேருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்போகிறேன்
// நசரேயன் said...
அப்துல்லா அண்ணன் வாழ்க. நான் இப்பவே அண்ணன் பேருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்போகிறேன்
//
பூனே கிளையை நிர்வகிக்கும் பொறுப்பை எனக்கு தராவிட்டால், ரணகளமாகும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.
அடுத்தது நீதான் என்று
ஆள்காட்டி விரல் நீட்டும்
வேலைபோகாத நண்பன்\\
ஹா ஹா ஹா
(பயத்தில் வரும் சிரிப்பு)
//உண்மையில் காதலிப்பதை விட அவுங்க கூட இருக்குறது பேஜார் தான் இல்லையா!?
கொஞ்சநாளா எனக்கு அப்படி தான் இருக்குது!//
ஆவ்வ்வ்வ்வ்வ்
பதிவர் அன்பு அண்ணன் அப்துல்லா பாடிய பாடலை ஒரு சைட்டில் பாராட்டி எழுதியுள்ளார்கள்//
எவ்வளவு செலவாச்சுன்னு கேட்கனும் தல, கட்டுபடி ஆச்சுன்னா நம்ம தளத்தை பத்தியும் நாலு வார்த்தை நல்லதா எழுத சொல்லலாம்
//
ROTFL :)))
எவ்வளவு செலவுன்னு எனக்கும் தெரியலண்ணே. சொல்லாமகொல்லாம போட்டாய்ங்க. சிரமமா இருக்க நேரத்துல வந்து கேட்டுருவாய்ங்களோன்னு பயமாருக்கு
:))
@ நசரேயன்
மன்றம் ரெஜிஸ்ட்ரேஷன் சார்ஜ் ஒரு ஆயிரம் டாலர் அனுப்பிருங்க தல
:))
குவியல் பேரம் பேசாமல் வாங்கலாம்...எல்லாம் நல்லாயிருக்கு...
அட எனக்கும் குறுக்கே பேசும் பழக்கமுண்டுப்பா...
ஹெல்லோ உடன் இருப்பவரா இல்லை நீங்களா? காதலில் ஹிஹிஹி சும்மாத்தான்.. இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்க பாம்பின் கால் பாம்பறியுமா?காதலுக்கான எல்லா சிம்டம்ஸ்சும் சொல்லவே கேட்டேன்....
கவிதை சுகம் கருத்துடன் பரிமாறப்பட்டுள்ளது..
அடிக்கடி சரக்கு,சரக்குன்னு வருதே..அப்படின்னா இன்னா?அப்புறம் நானும் கோவை வந்தாலும் வருவேன்..
கவுஜ .........கவுஜ .............கவுஜ ....சூப்பர்
அனுஜன்யா புண்ணியத்தில் நீங்களும் ஒரு சிறந்த கவிஞராகி வருகிறீர்கள் அருண்.
அடுத்தது நீதான் //அமெரிக்க வங்கிகள்///
மேம்பால இறக்கத்தில்///
தேரிக்கொண்டே வருகிறீர்கள். :)
--வித்யா
வருங்கால முதல்வர் அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள்
வாரா வாராம் குவியல் நடத்தும் தினக்குடியல்காரர் கொற்றம் வாழ்க.
நான் இப்போது குடித்துக்கொண்டிருக்கும் கரோனா பீர் வாழ்வாங்கு வாழ்க
வாலுக்கு காதல் வந்துச்சோ ஒரு காதல் காதல் வந்துச்சோ... :)
//சரக்கில் குறைந்த தண்ணீர்
வேலை இழக்கும் அச்சமோ!//
என்னா ஒரு வில்லத்தனம்
ஆனாலும்
கவுஜ சூப்ப்ப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர்
என்ன பாஸ் ஆபிஸ்ல யாராவது லப் பண்றாங்களா
இன்னைக்கு குவியல்ல எல்லாமே இருக்கு தல
மாப்பிளை சஞ்சய் இருக்காக மற்றும் நம் உறவினர்கள்(மருதமலையில) எல்லாம் இருக்காக, வந்துடுங்க நண்பர்களே
எல்லாரும் ஒண்ணா மலை ஏறப் போறீகளாக்கும்?
அட! வர வர உருப்படியா எழுத ஆரம்பிச்சுட்டப்பா!
நல்லா இருங்க குரு. உங்க எதிர் கவுஜய ஒரு தனிப் புத்தகமாவே போடலாம் போல இருக்கு.
அட, அய்ஸ் இங்க எல்லாம் வருவாரா :)
அனுஜன்யா
அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!
உங்கள் கிசு கிசுவில் இருப்பவர்கள் எனக்குப் புரியல வால்.
காதலிக்குறவர் கூட இருக்குற கொடுமைகள் நல்லாருக்கு. நானும் அனுபவிச்சிருக்கேன். அதைப் பத்தி நான் விலாவரியா எழுதனும்.
//எதாவது புதிதாக செய்ய வேண்டும் என ஆர்வத்திலேயே இருப்பார்!//
ஆமாண்ணே பயபுள்ளைக பண்ணுற கூத்துக்கு அளவே இல்லை ..
தினம் கூத்துதான் நீங்க ஒரு இம்சைய தாங்கிட்டு இருக்கீங்க . நான் மூன்று முனைகளில் இந்த தாக்குதலில்..
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள்..
நேத்துதான் கோவையிலிருந்து வந்தேன்.
//திருப்பூர் அன்பர்கள் சிரமம் பார்க்கலாம் விடுமுறையை கோவையில் கழிக்க வருமாறு கேட்டு கொள்கிறேன். அண்ணாச்சி இருக்காக, மாப்பிளை சஞ்சய் இருக்காக மற்றும் நம் உறவினர்கள்(மருதமலையில) எல்லாம் இருக்காக, வந்துடுங்க நண்பர்களே!//
என்ஜாய் மாடி
அப்துல்லா அண்ணே என்னமோ போங்கண்ணே! :-)
வால் காதல் வந்துடுச்சா..
ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்
கவுஜ சூப்பர் வால்
அன்பின் அனுஜன்யா சொல்வது போல தனித் தொகுப்பே போடலாம் போல
செல்வேந்திரனின் முடியலத்துவம் போல ...
:)
வாலிடம் வாழ் வாங்கி வருவதால்
வாழிடம் வாளெனக் கூர்.
..........TanQ !
படிச்சுட்டேன் படிச்சுட்டேன்
//உண்மையில் காதலிப்பதை விட அவுங்க கூட இருக்குறது பேஜார் தான் இல்லையா!?//
கொஞ்சம் கஷ்டம் தான் ..
என் நண்பனும் இதையே தான் சொன்னான் ...
// அய்யனார் said...
கார்த்தியா இப்படி நம்பவே முடியலயே :)//
ஒரு பாட்டு பாடுனா குத்தமா ?
அப்போ அப்துல்லா அண்ணாச்சியுமா ?
குவியலை ரொம்ப தாமதமா வந்து சந்திக்கிறேன். நல்லா இருந்தது. :)
நன்றி ப்ளீச்சிங்பவுடர்
நன்றி ஜெட்லி
நன்றி சக்தி
நன்றி சந்ரு
நன்றி அபுஅஃப்ஸர்
நன்றி ரம்யா
நன்றி இரவுப்பறவை
நன்றி பீர்
நன்றி மயில்
நன்றி எவனோ ஒருவன்
நன்றி அய்யனார்
நன்றி கலையரசன்
நன்றி அ.மு.செய்யது
நன்றி T.V.Radhakrishnan
நன்றி சுரேஷ்குமார்
நன்றி சின்ன அம்மணி
நன்றி நசரேயன்
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி அப்பாவி முரு
நன்றி எம்.எம்.அப்துல்லா
நன்றி தமிழரசி
நன்றி தண்டோரா
நன்றி சுரேஷ்
நன்றி விதூஷ்
நன்றி குடுகுடுப்பை
நன்றி விக்னேஷ்வரன்
நன்றி கதிர்
நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி ஸ்ரீதர்
நன்றி நாஞ்சில் நாதம்
நன்றி அனுஜன்யா
நன்றி ஆப்பு
நன்றி விக்னேஷ்வரி
நன்றி சூரியன்
நன்றி கேபிள் சங்கர்
நன்றி கிரி
நன்றி வியா
நன்றி நேசமித்ரன்
நன்றி kartin
நன்றி தாரணிபிரியா
நன்றி மந்திரன்
நன்றி கார்த்திக்
நன்றி ஊர்சுற்றி
Post a Comment