கடந்த ஒருவார காலமாக எதிர்கட்சிகள் கூச்சல் போடும் ஒரு விசயம் இருக்கிறது, எத்தனை பேர் அதன் முக்கியத்துவம் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை, உடன்பிறப்புகள் அதை பற்றி பேசப்போவதுமில்லை, பேசவும் முடியாது என்பது தெரிந்த விசயம் ஆனால் பத்திரிக்கை துறையில் இருக்கும் நண்பர்கள் கூட அதை சுட்டி காட்டாதது அதிகாரமையத்தின் மேல் உள்ள பயமா! அல்லது அதன் மேல் உள்ள பற்றுதலா!? சரி விசயத்தை சொல்லாமல் போய்கொண்டே இருந்தால் நல்லாயிருக்காது, விசயம் என்னான்ன நமது மத்திய அமைச்சர் ஒருவர் உயர்நீதிமன்ற நீதிபதியை தனக்கு வேண்டியவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க மிரட்டிய செய்தி.
”இன்வெஸ்டிகேட் ஜெர்னலிசம்” என்பது கொஞ்சம் கடினமான வேலை தான். ஆனால் சில அடிப்படை உண்மைகளை ஸ்கூல் பையன் கூட சொல்லுவான், தன்னை முரட்டிய மத்திய அமைச்சர் யார் என்று அந்த நீதிபதி சொல்லாமல் இருந்திருகலாம், ஆனால் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் எந்த அமைச்சர் உறவாக இருந்தார், தொழில் முறையில் நட்பு வைதிருந்தார் என்று பார்த்தாலே தெரிந்துவிடும் அது யார் என்று.
எனது கேள்வியெல்லாம் என்னவென்றால் இவர்களது அதிகார துஷ்பிரயோகத்தின் அளவுகோல் தான் என்ன?. இவர்க்ளை மீறி எதுவுமே நடக்கக்கூடாது என்பது தானா? நமது நாட்டில் ஒரு சட்டம் இருக்கிறது, ரோட்டில் ஒருவன் உன்னை அடித்து விட்டால் நீ திருப்பி அடிக்ககூடாது, சட்டத்தில் புகார் தான் செய்ய வேண்டும். நீயும் அடித்தால் பொதுமக்களுக்கு இடையூறு செய்த வகையில் இருவருக்குமே தண்டனை, யார் முதலில் அடித்தார் என்பதெல்லாம் அடுத்த பிரச்சனை. ஆக நமக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் நாம் போய் நிற்கவேண்டிய இடம் நீதிமன்றம், அவை தரும் தீர்ப்பின் மேல் உள்ள நம்பிக்கையால், ஆனால் அந்த தீர்ப்பு ஒரு தனி மனிதனின் விருப்பு, வெறுப்புக்கு சம்பந்தப்பட்டதாக இருந்தால் அப்பாவி மனிதனின் கதி?..............
கழகத்தை பொறுத்தவரை இது புதிதல்ல, இந்த ஆட்சியிலேயே ஒருமுறை தனது உறவினருக்கு சிபாரிசு செய்ததற்காக ஒரு அமைச்சர் வீடீயோவோ ஆடியோவோ ”டேப்” ஆதாரங்களுக்கு பயந்து ராஜினாமா செய்தார், ஆறு மாதத்தில் இந்த வழக்கு என்னவாயிற்று என்று தெரியாத போதும் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி, சாமான்யனுக்கு தெரியாது ஆனால் இதை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டியது பத்திரிக்கை துறை அதுவும் செய்யவில்லையே. பின் யாரை தான் நம்புவது?
நீதிக்கு மகுடமாக தமிழகத்தில் ஒரு கதை உண்டு! கன்றை கொன்ற மகனை தன் தேர்காலால் ஏற்றி கொன்றான் மன்னன் என்று, அது புனைவோ புண்ணாக்கோ தெரியாது ஆனால் கண் முன்னால் நடந்த மூன்று கொலைகளுக்கு இன்று வரை யாருக்கும் தண்டனை தராமல் இருப்பது,
இது ஜனநாயகநாடா என்ற சந்தேகம் மட்டுமல்ல, ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியின் கீழ் இருக்கிறோமோ என்ற சந்தேகம் வருகிறது. மக்களுக்கு மூளை சலவை செய்து கொண்டிருக்கும் கழகமும் அதன் தொண்டர்களும் என்று தான் திருந்த போகிறார்களோ தெரியவில்லை!
***********************************
இது கழகத்துக்கு எதிரான பதிவல்ல, அதிகாரமையத்திற்கு எதிரான பதிவு!
சென்ற முறை பெண் சர்வாதிகாரி செய்த நில ஆக்கிரமிப்பு(டான்சி), தருமபுரி கல்லூரி பெண்கள் படுகொலை ஆகியவை மன்னிக்க முடியாத குற்றம் அதனால் தான், மக்களின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருந்தது, தமக்கு மாற்று சக்தி ஒன்றும் இல்லை என்ற மமதையில் ஆடி கொண்டிருப்பது உங்கள் இருவருக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பதைக் காட்டுகிறது.
ஒரு பழமொழி உண்டு!
கழதை விட்டையில் முன்விட்டையென்ன பின்விட்டையென்ன?
உங்களுக்கும், அவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
64 வாங்கிகட்டி கொண்டது:
ஐய்யயோ ... இம்ப்புட்டு தகிரியமா? ஆட்டோ இல்ல ட்ரைன் தான் வரும்.. சாக்கரத்தை..
கழதை விட்டையில் முன்விட்டையென்ன பின்விட்டையென்ன?//ரொம்ப சூப்பர் ..
//ஒரு பழமொழி உண்டு!
கழதை விட்டையில் முன்விட்டையென்ன பின்விட்டையென்ன?//
உண்மைதானே
விவ`கார`மான மேட்டர்
வால் பையன் அடுத்து
வெறும் பையன் தான்?
//அதிகாரமையத்திற்கு எதிரான பதிவு!//
நல்ல சிந்தனைக்கு பாராட்டுக்கள்...
''வால் பையன்'' ''தில் பையன்''
//ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியின் கீழ் இருக்கிறோமோ என்ற சந்தேகம் வருகிறது//
கண்டிப்பா
கழதை விட்டையில் முன்விட்டையென்ன பின்விட்டையென்ன?
:))))))))
:))))))))
:))))))))
கழகமா?
அது வெறும்
கலகமாகி பல ஆண்டுகளாச்சே?
இந்த பதிவு நிச்சயம் சில "ஆலயங்கள்" வரை போய்ச்சேரும் என்பதில் சந்தேகமில்லை.
ஸ்டிங் ஆபரேஷன் டேப்புகளை "கரண்ட்" மினிஸ்டருக்கு எதிராக நீங்கள் வெளியிட்டால்
நீங்கள் சொல்லும் நீதிமன்ற வளாகத்திலேயே உங்களுக்கு முட்டை,தக்காளி அபிஷேகம் செய்யப்படும்
என்று உங்களுக்கு தெரியாதா "சாமி" ???
நண்பா..
மிக்க மகிழ்ச்சி.. ஆரோக்கியமான சிந்தனை..
ஆதங்கமாக இருக்கிறதுதான்..நம்பிக்கையுடன் இருப்போம். இன்றில்லாவிடில் நாளையாவது..
மிக்க அன்புடன்
ரங்ஸ்
என்ன சொன்னா அவங்க திருந்துவாங்க..?
எதை வெச்சு அடிச்சா அவங்க திருந்துவாங்க..?
ம்ஹும்.. எனக்கு நம்பிக்கையில்ல.. வாலு..
நம்ம தலைவிதி இதுதான். அனுபவிச்சுத்தான் ஆகணும்..!
சரியான நேரத்தில் இடப்பட்ட பதிவு.
திரு மு க ஸ்டாலின் கழகத்தின் ஆட்சியை சிறப்பாக முன்னெடுத்து செல்லும் நேரத்தில் இது போன்ற மூன்றாம் தர செயல்களில் ஈடுபடும் அயோகிய அமைச்சர்கள், கழகத்தின் பெருமையை காற்றில் பறக்க விடும் கயவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.
சென்ற வாரம் தலைவர் பொது தேர்தலுக்கு முன் கழகத்தில் களை எடுக்கப்படும் என்று கூறினார். அந்த அறிவிப்பு இது போன்ற தரம் கேட்ட அமைச்சர்களுக்கு பொருந்தாததா? இனி அ தி மு க - வுக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியாத பட்சத்தில் இருக்கும் அருமையான சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கழகத்தை மேலும் வலுபடுத்த பாடு படாமல் இது போன்ற சிக்கலில் மாட்டிக்கொண்டு கழகத்தை தரம் தாழ்ததிய அமைச்சர் பெரு மகனை தூக்கி எறிந்து களங்கம் துடைக்க முயல வேண்டும்.
இது ஒரு புறம் இருக்க நம்மை போல் அரசியல் பின்புலம் இல்லாத சாதாரண மக்களுக்கு நீதி மன்றம் ஒன்று மட்டுமே கடைசி நம்பிக்கை, அதிலும் கை வைக்க அரசியல்வாதிகள் முயல்வது சாமானிய மக்களின் நம்பிக்கை ல் வைக்க படும் வேட்டு.
கழகத்தின் உண்மை அனுதாபி.
அய்யா...எனக்கு ஒரு துனை கிடைச்சாசு..ரெண்டு பெட்டா போட சொல்லவா? அந்த அமைச்சர் யாரு தெரியுமா? முத எழுத்து ரா...கடைசி எழுத்து சா....
//மக்களுக்கு மூளை சலவை செய்து கொண்டிருக்கும் கழகமும் அதன் தொண்டர்களும் என்று தான் திருந்த போகிறார்களோ தெரியவில்லை!//
திருந்த வேண்டாம், கொள்ளை அடித்த எல்லா பணத்தையும் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டை விட்டு எங்காவது ஒழிஞ்சு போனா கூட போது,மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.
இன்னும் சில வருடங்கள். அப்புறம் திமுக முப்பதாக பிரியும், பின் அதிமுகாவுடன் புது திருடன் எவனாவது தான் போட்டியிடுவார்கள்.
//நீதிக்கு மகுடமாக தமிழகத்தில் ஒரு கதை உண்டு! கன்றை கொன்ற மகனை தன் தேர்காலால் ஏற்றி கொன்றான் //
அது திருவாரூர் தேர்தானே வாலு..
//
திரு மு க ஸ்டாலின் கழகத்தின் ஆட்சியை சிறப்பாக முன்னெடுத்து செல்லும் நேரத்தில் //
ஓ...இது காமெடி பதிவா, இது தெரியாம நான் வேற சிரியஸ பின்னுட்டம் போட்டுட்டேனே
//நீதிக்கு மகுடமாக தமிழகத்தில் ஒரு கதை உண்டு! கன்றை கொன்ற மகனை தன் தேர்காலால் ஏற்றி கொன்றான் மன்னன் என்று//
தல, இந்த கதை இப்போ தமிழ்நாட்டில் நடந்தால் எப்படி இருக்கும்னு உங்க கற்பனை குதிரையை கொஞ்சம் தட்டி விடுங்களேன். தமிழ்நாட்டில் மருந்துக்கு கூட ஒரு மாடும் இருக்காதுன்னு தானே முடிப்பீங்க??
//ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியின் கீழ் இருக்கிறோமோ என்ற சந்தேகம் வருகிறது.//
ஐந்நூறு ருபாய் கொடுத்து வோட்டி வாங்கிய அவங்களை தப்பு சொல்றதா இல்லை அதை வாங்கிட்டு ஒட்டு போட்ட மக்களை தப்பு சொல்றதா.
//அந்த அமைச்சர் யாரு தெரியுமா? முத எழுத்து ரா...கடைசி எழுத்து சா.//
நல்லவேளை முழு பேரை சொல்லலை நான் கூட நம்ம ஐடி மினிஸ்டரோன்னு பயந்துட்டேன்
ஏன் அந்த நீதிபதி பெயர் சொல்ல மறுக்கிறார்? பெயர் வெளியிடாமல் இருக்க என்ன டீலிங்கில் இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியுமா? இதற்கு முன்னர் எத்தனையோ நீதிபதிகளின் மீதே தவறுகள்/புகார்கள் கூறப்பட்டுள்ளன.
தலைவா இன்னா பேசுற நீ?? இது மன்னர் ஆட்சிபா, நேத்து நம்ம பட்டத்து இளவரசர் (அதான்பா துண முதல் அமீச்சரு ஸ்டாலின்) நம்ம ஏரியா பக்கம் வந்தாரு, சும்மா ஒரு ஆறு கிலோ மீடர் தூரம் கொடி என்ன, Vinyl Banner என்ன......... அப்புறம் அவரு வரதுக்கு ஒரு இரண்டு மணி நேரம் முன்னாலேயே ஒரே போலீஸ் கெடுபிடி, இந்த Hyundai கம்பெனி காரன் கார் குடுத்தாலும் குடுத்தான் யப்பா முடியல, அதுல ஒரு போலீஸ் ரொம்ப ஓவரு (டேய் கோத்தா பஸ் ஓரமா போடான்னு மைக்ல கூவுறாரு). பெறவு ஒரு 35 இரு சக்கர வண்டிங்க அல்லாதுளையும் கொடிய புடிச்சிகினு கூவிகினு ரெண்டு ரெண்டு உடன் பிரப்புங்க (இது குதிரை படை மாதிரி), அடுத்ததா ஒரு பத்து ஆட்டோ (இது தேர் படை) பெறவு ஒரு ஐந்து போலீஸ் வண்டி (இது சும்மா செறப்பு அதிரடி பட) அப்புறம் ஒரு பத்து கார் அதுல 3 இறக்குமதி செய்த கார், அதுல இளவரசர் எதுல இருந்தாருன்னு தெரியல. அப்புறம் கடைசியா அதே மாதிரி முப்படை தொடர்ந்து வந்தது. இவரு போனது ஒரு கல்யாண வீட்டுக்கு இதுக்கே இந்த அலம்பல், யப்பா இவனுங்க ஆட்டம் தாங்க முடியலடா.
அந்த அமைச்சர் பெயரை செய்தித்தாளிலேயே வெளியிட்டுவிட்டார்கள். அப்பறம் என்னதுக்கு சார் மறைமுகமாக பேசனும். தப்பு செய்கிறவன் நீதிபதியானாலும்கூட தண்டிக்கப்பட வேண்டும். அப்படியிருக்க சாதாரண அமைச்சன்தானே. கயவாளிகள் அமைச்சனானால் களவு வேலைகளை தான் நடக்கும். நீதிபதிகள் மிரட்டப்படுவது இதற்குமுன் பலமுறை நடந்துள்ள போதிலும், நீதிபதிகள் யாரும் அதை வெளியில் சொல்லவில்லை. இவ்வளவு தைரியமாக அதை வெளியில் சொன்னவர் அமைச்சர் பெயரையும் சொல்லியிருந்தால் பலன் விரைவில் கிடைத்திருக்கும்.
ஏன்பா... அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்ப்பா..
வேற என்னத்த சொல்ல......
//நீதிக்கு மகுடமாக தமிழகத்தில் ஒரு கதை உண்டு! கன்றை கொன்ற மகனை தன் தேர்காலால் ஏற்றி கொன்றான் மன்னன் என்று//
"தல, இந்த கதை இப்போ தமிழ்நாட்டில் நடந்தால் எப்படி இருக்கும்னு உங்க கற்பனை குதிரையை கொஞ்சம் தட்டி விடுங்களேன். தமிழ்நாட்டில் மருந்துக்கு கூட ஒரு மாடும் இருக்காதுன்னு தானே முடிப்பீங்க??"
எந்தக் காலத்துல இருக்கீங்க பாஸ்?
நீங்க சொல்றதெல்லாம் மனுநீதி கண்ட சோழன் காலத்து சமாசாரம். இப்பல்லாம், அடிபட்டவனையே கூட்டணியில் சேத்துகிட்டு, அப்பப்ப எங்களுக்கும் ஆட்சியில பங்கு வேணும்னு டார்ச்சர் டயலாகை சகிக்கமுடியாமல் இருக்கிறகாலம்!
நம் விதியை நொந்து கொள்வதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கு இல்லை..:-((((
அரசியல்ல இதெல்லாம் சாத’ரணம’ப்பா ...
ஹான்.. ச்சலோ... ச்சலோ.....
ஆமாங்க.. இதுபோன்ற செய்திகளைக் கேட்கும்போது அதிகாரத்தில் இருப்பவர்களின்மீது எரிச்சலும் கோபமும் வரத்தான் செய்கிறது.. ஆனாலும் அவர்கள்தானே தேர்தலில் வெற்றியும் பெறுகிறார்கள்.
துஷ்பிரயோகம் என்றான பின்பு அளவுகோல் எதற்கு? அது அதிகார மையத்தின் மீதானதாக இருந்தாலும் சரியே.
ரொம்ப தெகிரியமான ஆளுப்பா நீ. இந்தப் போடு போடற. பாத்து மக்கா , வம்ப வேல குடுத்து வாங்காத .
//இது கழகத்துக்கு எதிரான பதிவல்ல, அதிகாரமையத்திற்கு எதிரான பதிவு!//
லேசா பம்முற மாதிரி இருக்கு.
இந்த அளவிற்காவது இருந்த அந்த நீதிபதிக்கு சலாம் ...
நல்ல கருத்துக்கள்!!
துணிவுக்கு சலாம்!!
//அதிகாரத்தில் இருப்பவர்களின்மீது எரிச்சலும் கோபமும் வரத்தான் செய்கிறது.. ஆனாலும் அவர்கள்தானே தேர்தலில் வெற்றியும் பெறுகிறார்கள்.//
வெற்றி ’பெற்று’ விடுகிறார்கள் என்று சொல்வது சாலச்சிறந்தது.
//மக்களுக்கு மூளை சலவை செய்து கொண்டிருக்கும் கழகமும் அதன் தொண்டர்களும் என்று தான் திருந்த போகிறார்களோ தெரியவில்லை!//
திருந்திட்டாலும் ...
Alagiri maaritarunnu oodagangal koopadu podukinrana..Dinamani "Delhi avara maatrum" chellam konji thalaiangam vera veliyittangha...3 oyir ponadha yellarume marandhutom...Unmaiyave alagiri maaritarunna 3 per palikku nyayam kidaikka yedhavadhu seyyanum...Ungal dhairiyamana padhivukku valthukkal...
//நீதிக்கு மகுடமாக தமிழகத்தில் ஒரு கதை உண்டு! கன்றை கொன்ற மகனை தன் தேர்காலால் ஏற்றி கொன்றான் //
அது திருவாரூர் தேர்தானே வாலு..
Sema "Timing" thandora..Kalakkal..
-UM.Krish
இந்தக் காலத்திலும் இது போன்ற மந்திரிகளிடம் உடன்பட மறுக்கும் மிரட்டப்பட்ட நீதிபதிக்கு நன்றி !!!!
உமது கட்டுரையில் குற்றம் உள்ளது.
வாலு: என்ன குற்றம் கண்டுவிட்டீர்?
சொற் குற்றமா பொருட்குற்றமா?
நான் - சொற் குற்றம்.
வாலு- என்ன அது?
நான் -கழுதை என்பதற்கு பதில் 'கழதை' என்று எழுதிவிட்டீர்கள்
வாலு- ?! (;-(
அதிகாரமையத்திற்கு எதிரான பதிவு!////
என்ன இது விஜய் பட டயலாக்கா? இல்ல, தெலுகு பட டயலாக்கு மாதிரி மூக்கில பஞ்ச் பன்ணுதே! ரெண்டும் ஒண்ணுதானோ?
துணிச்சல் வீரன்யா நீ...
என்னதான் நான் தீவிர திமுக உறுப்பினரா இருந்தாலும் சில சமயம் இவர்கள் செய்யும் கூத்த பார்க்கும் போது கோபமாக தான் இருக்கிறது . என்ன செய்ய .. நாளிதழ்கள் மக்களிடம் இந்த மாதிரி செய்திகளை கொண்டு செல்வதை விட , இந்த நடிகர் இவரோடு படுத்தார் , அவரோடு சுத்துனார் , இந்தா நாந் வள்ர்கிறானு தான் எழுதுறாய்ங்க எவன குத்தம் சொல்ல ..
தப்பு செய்தவன சொல்றதா இல்ல தப்பு செஞ்சவனுக்கு துணையா நிக்கிறவன சொல்றதா இல்ல தப்பு செஞ்சத மக்களுக்கு எடுத்த சொல்லாமல் இருக்கிறவங்கள சொல்றதா ?
என்னா பாஸூ திடீர்னு சீரியஸ் ஆயிட்ட?
//
இது ஜனநாயக நாடா என்ற சந்தேகம் மட்டுமல்ல, ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியின் கீழ் இருக்கிறோமோ என்ற சந்தேகம் வருகிறது.
//
ஜனநாயக நாடா?!? உங்க நகைச்சுவை உணர்வு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
வெள்ளைக்காரர்கள் போயிட்டு, இப்போ நாமே தேர்ந்தெடுக்கும் கொள்ளைக்காரர்களின் ஆட்சி நடக்கிறது, அவ்வளவு தான்.
// " முரட்டிய " மத்திய அமைச்சர் யார் என்று //
அடா..... அடா.... அடா....!! தலைவர் .... உங்க பின்நவீனத்துவமே தனி சிறப்புதான்....!!!
// நமது நாட்டில் ஒரு சட்டம் இருக்கிறது //
அதுல பல ஓட்டைகளும் இருக்குது...........
// ரோட்டில் ஒருவன் உன்னை அடித்து விட்டால் நீ திருப்பி அடிக்ககூடாது, //
ஆமாங்கோவ்....!! அதுக்கு பதிலா பின்நவீனத்துவத்துல பேசி ... அவன மண்டைய பிச்சுகிட்டு ஓட வெக்கலாமுங்கோவ்........!!!!!!
// பின் யாரை தான் நம்புவது? //
கோட்டார் மானிட்டரையும் , கோழி பிரியாணியையும் .............
// நீதிக்கு மகுடமாக தமிழகத்தில் ஒரு கதை உண்டு! கன்றை கொன்ற மகனை தன் தேர்காலால் ஏற்றி கொன்றான் மன்னன் என்று ///
ஹாஆவ்வ்....!! தூக்கமா வருதுங் பாஸ் ..... வேற கத சொல்லுங்க............!!!!
/// உங்களுக்கும், அவர்களுக்கும் என்ன வித்தியாசம்? //
ஒன்னு .... ஒன் மேன் ஆர்மி ....!!! இன்னொன்னு பேமிலி மேன் ஆர்மி....!!!
தானே பதிவிட்ட தானே தலைவர் !!!
வாழ்க ... வாழ்க...!!
எங்கள் அஞ்சா நெஞ்சன்...... மதுரை சிங்கம்...... பின்நவீனத்துவ மன்னன் வால்பையன்....!!!
வாழ்க ... வாழ்க....!!
விரைவில் மூத்ர சந்துக்குள் பெரும் படையை எதிர்கொள்ள இருக்கும் வீரர்...!!!
வாழ்க ... வாழ்க........!!!!
ஓட்டு மட்டுமே போட்டு தங்கள் ஆதங்கத்தை தீர்த்துக்கொள்ள முடிகிற கோடானு கோடி மக்களில் நானும் ஒருவன். எனவே ஓட்டு போட்டுவிட்டேன் உங்கள் பதிவுக்கு. பட் நோ கமென்ட்ஸ்.
sema thil
அருமை.கருத்துகள் அழகு.
இல்லை வால்சார்!தலைவர் கலைஞரின் சில செயல்பாடுகள் பலருக்கு எதிராகத் தெரியும். ஆனால் ஜெயாவின் அட்டகாசங்களுக்கு முன்னே தலைவர் எவ்வளவோ பெட்டர்.
சரியான அடி....
இவர்க்ளை மீறி எதுவுமே நடக்கக்கூடாது என்பது தானா? //
இது அப்படியே உண்மை..
//இது கழகத்துக்கு எதிரான பதிவல்ல, அதிகாரமையத்திற்கு எதிரான பதிவு!//
Nambittom.........
ah ha..... summaa irundhavan, ippo SUPERAA oru bit pottaanya, bit pottaanyaa......
Auto, Van, TATA Sumo ennenna vandi ellaam vara povudho???
Vaal Paiyanukku Edhaiyum thaangum Idhayamum, STEEL BODY thara andha BODYGUARD MUNIya venduvom....
தில்லான பதிவு நண்பா. இது தமிழ்நாட்டின் சாபக்கேடு. யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த அதிகார துஷ்பிரயோகம் என்பது என்றும் தலைவிரித்தாடுகிறது. நாமளும் நமக்கேன் வம்பு என்று தான் போய்க்கொண்டிருக்கிறோம்.
//தண்டோரா said...
அய்யா...எனக்கு ஒரு துனை கிடைச்சாசு..ரெண்டு பெட்டா போட சொல்லவா? அந்த அமைச்சர் யாரு தெரியுமா? முத எழுத்து ரா...கடைசி எழுத்து சா....//
**********
Naduvula oru ezhuththu kooda illa.
/அதிகாரத்தில் இருப்பவர்களின்மீது எரிச்சலும் கோபமும் வரத்தான் செய்கிறது.. ஆனாலும் அவர்கள்தானே தேர்தலில் வெற்றியும் பெறுகிறார்கள்.//
//
உண்மை தான். மானுடர்களின் செயல்களை நானும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்.
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம்
தமிழகம் என்ன செய்ய வேண்டும்?
இவ்வளவு நடந்து இருக்கா என்னத்த சொல்லுறது..
இன்னும் இங்க ஜனநாயகம் இருக்குன்னு நம்புறீங்க.........
போங்க வால் உங்களோட ஒரே காமெடி யா இருக்கு
நன்றாக இடித்திருக்கிறீர்கள்....
வால்பையனின் இந்த இடுகைக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
வேற என்னத்தை சொல்ல! இவிய்ங்க அழிச்சாட்டியம் இப்படித்தான் போய்க்கிட்டிருக்கு!
நீங்க வேற வாலு
ஸ்பெக்ட்ரம் மேட்டரே தூக்கி கடாசியாச்சு இது என்ன ரொம்ப சிம்பிளு
வாலு, உங்க போஸ்டிங் யூத் புல் விகடனில், வாழ்த்துக்கள்..
நீங்கள் படிக்கவில்லையா அருண் ஜேட்லி சொன்னதை?
”Does he (the minister) think that "rajas" are not accountable?
யோவ் வால் தள,
சீரியஸ் பதிவா போட்டு எனக்கு பின்னூட்டம் போடற ஆவளை குறைத்து விட்டாய் ! இதுக்கு பேசாம நீ பதிவு பாளிடிக்ஸையே எலுதித் தொளையா
சொள் அலகன்
மற்றும் ஒரு சேகுவோரா பிறந்திருக்கிறான் நண்பர்களே, அவன் எல்லோருக்கும் அன்பாய் இருப்பன், தீயவர்களை தேடி சென்று தீக்கரையகுவான்.
அவன்தான் உன் அந்நியன் (சிந்திக்க).
வலைச்சரத்தின் மூலம் வந்து வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன்.
"கழதை விட்டையில் முன்விட்டையென்ன பின்விட்டையென்ன?" இது வாலுக்கேத்த வால்மொழித்தான்
இனி அடிக்கடி வருவேன்.
நன்றி மயில்
நன்றி ஆ.ஞானசேகரன்
நன்றி பிரியமுடன்.........வசந்த்
நன்றி கதிர்
நன்றி ஜீவன்
நன்றி சுப்பு
நன்றி அப்பாவி முரு
நன்றி அ.மு.செய்யது
நன்றி ரங்க்ஸ்
நன்றி உண்மைத்தமிழன்
நன்றி ஜானிவாக்கர்
நன்றி தண்டோரா
நன்றி ப்ளீச்சிங் பவுடர்
நன்றி ராஜா
நன்றி சித்து
நன்றி பாலாஜி
நன்றி ஜெட்லி
நன்றி கிருஷ்ணமூர்த்தி
நன்றி கார்த்திகைப் பாண்டியன்
நன்றி நையாண்டி நைனா
நன்றி உழவன்
நன்றி பீர்
நன்றி ஸ்ரீதர்
நன்றி தருமி
நன்றி தேவன்மயம்
நன்றி பாலாஜி
நன்றி அஹோரி
நன்றி யூ.எம்
நன்றி பதி
நன்றி பப்பு
நன்றி சூரியன்
நன்றி கலையரசன்
நன்றி ஜோ
நன்றி லவ்டேல் மேடி
நன்றி விசா
நன்றி மேவி
நன்றி ராம்
நன்றி எதிரொலி நிஜாம்
நன்றி ஆ!இதழ்கள்
நன்றி கோபி
நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி கடவுள்
நன்றி தமிழ்முல்லை
நன்றி வினோத் கெளதம்
நன்றி இரவுப்பறவை
நன்றி ஊர்சுற்றி
நன்றி அருண்குமார்
நன்றி மயில்
நன்றி அனானி
நன்றி சொள் அலகன்
நன்றி அனானி(புரியல)
நன்றி ஷஃபிக்ஸ்
Post a Comment