திருப்பமுடியாதவை! (irreversible)


எனக்கு நேர்த்தியாக சினிமா விமர்சனம் சொல்ல வராது!

ஏற்கனவே இந்த படத்தை பற்றி சித்தார்த் அவர்கள் நேர்த்தியாக விமர்சித்ரிப்பதால் அதனுடைய லிங்கையும் இங்கே தருகிறேன். அதில் விடுபட்டவைகளை எங்கே என் பங்கிற்கு சொல்லி விடுகிறேன், சிலவற்றை அங்கிருந்து எடுத்திருப்பதால் அவருக்கு நன்றியையும் இங்கே தெரிவித்து கொள்கிறேன்.

மோனிகாவை உங்களுக்கு தெரியுமா? மேட்ரிக்ஸ் இரண்டாம் பாகத்தில் நடித்திருப்பார்.
ஹாலிவுட் நடிகைகளில் என்னை கவர்தவர்களுள் இவரும் ஒருவர். இவருக்காக தான் இந்த படத்தை பார்க்கவே அமர்ந்தேன், ஆனால் வித்தியாசமான திரைக்கதையில் இயக்குனர் மனதை ஆக்கிரமித்து விட்டார்.


பின்நவீனம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு மரபுகளை கட்டுடைத்தல் என்ற பொதுவான பதில் வரும், புரியாமல் விழிப்பவர்களுக்கு இந்த படத்தை உதாரணமாக சொல்லலாம்.

சரி! மரபு எது? அதை எவ்வாறு அடையாளம் காணுவது?
சுலபமான பதில் இயல்பே மரபு!
எது மரபை கட்டுடைத்தல்?
இயல்பை மீறுவதே மரபை கட்டுடைத்தல்.


இதுவரைக்கும் படத்தை பற்றி எதுவுமே சொல்லலையோ!
இந்த படத்தில் அப்படி என்ன இருக்கிறது?

படத்தின் ஆரம்ப காட்சியே கதையின் இறுதி காட்சி!
லாஜிக்குடன் ஒன்றி படத்துடன் கலந்து மூளைசலவையாகி வெளிவரும் வேலையெல்லாம் இங்கே கிடையாது, கலைத்து போட்ட சீட்டுகட்டிலிருந்து ஒவொன்றாக எடுத்து உங்கள் கண்முன் காட்டி பத்து சீட்டு காட்டிய பின் முதலில் என்ன காட்டினேன். என்று கேட்கும் விளையாட்டு போல் ஆரம்பம் முதல் இறுதி வரை எல்லா காட்சிகளையும் உங்கள் மூளையில் சேமித்து வைக்கவேண்டிய கட்டாயம் இங்கே இருக்கிறது,

மறந்து விட்டீர்களேயானால்! எந்த லூசு பையன்டா படம் எடுத்தது என்பீர்கள்?




என் வேலையை குறைக்க சித்தார்த் வலையிலிருந்து சில, வண்ணம் மாறியிருப்பது அவரிடம் விடுபட்டு என்னால் எழுதப்பட்டவை.

காட்சி 1: மார்க்கஸும் பியேரியும் போலீஸால் ஒரு இரவு விடுதியிலிருந்து கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றனர்.

காட்சி 2: மார்க்கஸும் பியேரியும் இரவு விடுதியில் டெனியா என்ற ஒருவனை கொடூரமாக கொல்கின்றனர்.

மேலே சொன்ன காட்சிக்கு முன் ஒரு டாக்சியில் அவர்கள் அந்த இரவு விடுதியை தெருத்தெருவாக தேடுவார்கள். டாக்சியில் மார்க்கஸும் பியேரியும் மட்டுமே இருப்பார்கள், ட்ரைவர்கள் வேறு யாரும் இருக்கமாட்டார்கள்.

மார்க்கஸும் பியேரியும் ஒரு இரவு விடுதியின் பெயரை சொல்லி அங்கே போகும் படி ட்ரைவரை விரட்டுகிறார்கள், ட்ரைவர் இடம் தெரியாது என்று சொல்ல, கோபத்தில் ட்ரைவரை அடித்து போட்டு அந்த டாக்சியை எடுத்து சொல்வார்கள்.

இரண்டு நண்பர்களின் உதவியுடன் தெருத்தெருவாக இருக்கும் விபச்சாரிகளிடம் எல்லாம் ஒரு பெயரை சொல்லி கேட்டு, அவனை தெரியுமா என்று கேட்பார்கள், கடைசியாக ஒரு பெண் அவனை டெனியா என்று கேட்டால் தான் தெரியும், என்றும் அவனை ஒரு குறிப்பிட்ட இரவு விடுதியில் பார்க்கலாம் என்பாள்.

காவலர்களின் விசாரணை முடிந்து பியேர்ஸ் வெளியே வருவான். ஏற்கனே விசாரணை முடிந்த மார்க்கஸ் சோகத்துடன் வெளியே நின்று கொண்டிருப்பான். இரண்டு பேர் அவனிடம் வந்து, அவனை எங்களுக்கு தெரியும் அவனை என் நண்பன் பார்த்திருக்கிறான் என்பான்..

காட்சி 3: அலெக்ஸ் என்ற பெண் டெனியாவால் ஒரு சுரங்கப்பாதையில் வைத்து கற்பழிக்கப்படுகிறாள்.
(அப்போது பின்னாலிருந்து ஒருவன் பார்த்து விட்டு ஓடுவான்)

காட்சி 4: மார்க்கஸும், அவனது காதலியான அலெக்ஸும் இவளது நண்பனான பியரியும் ஒரு பார்ட்டிக்கு செல்கின்றனர். அங்கிருந்து அலெக்ஸ் மட்டும் தனியாக சுரங்கப்பாதை வழியாக செல்கிறாள்.

காட்சி 5: காலை. விடிந்ததும் மாலை பார்ட்டிக்கு தேவையான எதையோ வாங்கி வர மார்க்கஸை வெளியே அனுப்புகிறாள் அலெக்ஸ். அவன் சென்றவுடன் சோதனை செய்து பார்க்கிறாள்.தான் கர்பமாக இருப்பது தெரியவர, பகல் கனவில் மிதக்கிறாள். பச்சைப்புல்வெளி. ஆங்காங்கே தண்ணீர்ரை பீச்சி அடிக்கும் குழாய். விளையாடும் குழந்தைகள் என ரம்மியமான ஓர் பூங்காவில் நிறைமாத கர்பிணியான அலெக்ஸ் கண்களை மூடியபடி ஏகாந்தமாய் படுத்திருக்கிறாள்.


மீண்டும் நான்.
படத்தில் நேர்த்தியான எடிடிங் முக்கிய பங்கு, ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் கட் எல்லாத ஷாட் பயன்படுத்த படுகிறது, அப்படி காட்சி கட் ஆனால் அதன் முந்தய காட்சிக்கு போகிறோம் என்று அர்த்தம். இது ஒரு வித்தியாசமான திரைக்கதை வடிவம்,
ஏற்கனவே ஒழுங்காக எடுத்த படத்தை பத்து துண்டுகளாக ஒட்டி மேலிருந்து கீழாக ஒட்டியிருப்பார்களோ என்று எண்ண தோன்றும், எது எப்படியோ இது ஒரு வித்தியாசமான முயற்சி

இந்த பாணியில் புனைவுகள் எழுதினால் ரசிக்கதக்கவாறு இருக்கும்.
இந்த பாணியில் புனைவுகள் உருவாக்க அய்யனார் மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களை அன்போடு கேட்டுகொள்கிறேன்,
இல்லையென்றால் நானே எழுதி எல்லோரையும் கொடுமைப் படுத்த வேண்டியிருக்கும்

45 வாங்கிகட்டி கொண்டது:

Thamiz Priyan said...

உலக தரத்துக்கு படம் பார்த்து உலக தரத்துக்கு விமர்சனம் எல்லாம் செஞ்சு இருக்கீங்க... :) வாழ்த்துக்கள்!

வால்பையன் said...

உங்கள் வாழ்த்துக்கள் ஏற்றுக்கொள்ள படுகிறது!
கூடவே நீங்கள் பார்த்த படங்களின் தகவல்களும் தந்தால் சனி, ஞாயிறு பொழுதை கழிக்க வசதியாக இருக்கும்

வால்பையன் said...

குறிப்பு:
இது பிரான்ஸ் மொழி படம், அங்கே சென்சார் இல்லை,
ஆகவே இந்த படம் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்தகுதியை இழக்கிறது.
குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக பார்க்கும் படி கேட்டுக்கொள்ள படுகிறார்கள்

Anonymous said...

வால் நமக்குத் தமிழே தடுமாற்றம். இதுல ஆங்கிலப் படம்னு வேற சொல்றீங்க. நீங்க கூட இருந்து கதை சொன்னா நான் பார்க்கத் தயார்.

வால்பையன் said...

ஆங்கில படமில்லைங்கன்னா!
அது பிரான்ஸ் மொழி படம்!

தூள்ள சொல்ற மாதிரி
வசனமா முக்கியம்
படத்த பாருங்க

Anonymous said...

வாலூ சரக்கை போட்டூட்டு பாத்தேங்களா.. இல்லை போடாமலே...

Anonymous said...

இருங்கோ.. சரக்க போடாம நாலைக்கு பதில் சொல்ரேன்

Anonymous said...

பரிசல் பேச்ச கேட்டு இப்படி ஆய்ட்ட்டிங்களே....

கூடுதுறை said...

தமிழில் லக்கிலுக் மற்றும் உண்மைத்தமிழன் ஆகியோரின் விமர்சனத்திற்கு இணையாக விமர்சனம் எழுதியுள்ளீர்கள்...

மிக நன்றாக உள்ளது....

இதைப்போலவே தினம் ஒரு ஆங்கில பிரெஞ்சு மொழிப்படங்களை பார்த்து கண்டிப்பாக படத்துடன் விமர்சனம் எழுத வேண்டுகிறேன்...

கூடுதுறை said...

படம் பார்க்க போனால் சமத்துவபுரம் போகமாட்டீர்கள் அல்லவா?

அதற்குத்தான்...இந்த பில்ட் அப் எல்லாம்

வால்பையன் said...

//kumkyb said...
வாலூ சரக்கை போட்டூட்டு பாத்தேங்களா.. இல்லை போடாமலே...//

நண்பர்களின் அன்பு வேண்டுகோளுகிணங்க சரக்கை நிறுத்தி வைத்திருக்கிறேன்.
என் மனதின் கட்டுபாட்டை நான் அறியும் நேரமிது.
பார்ப்போம் எவ்வளவு நாட்கள் தாங்குகிறேன் என்று

PRABHU RAJADURAI said...

அலெக்ஸ் என்ற பெண் டெனியாவால் ஒரு சுரங்கப்பாதையில் வைத்து "கற்பழிக்கப்படுகிறாள்"

படத்திற்கும், இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைக்கும் எவ்வளது தூரம் இடைவெளி!

விஜய் ஆனந்த் said...

:-)))..

Tech Shankar said...


டூ யூ நோ ஃப்ரான்சு பாசா குட்

Do you know France Language good

பரிசல்காரன் said...

//நண்பர்களின் அன்பு வேண்டுகோளுகிணங்க சரக்கை நிறுத்தி வைத்திருக்கிறேன்.
என் மனதின் கட்டுபாட்டை நான் அறியும் நேரமிது.
பார்ப்போம் எவ்வளவு நாட்கள் தாங்குகிறேன் என்று//

உன்னால் முடியும் தம்பி.

பரிசல்காரன் said...

அருமையான விமர்சனம்!

(படிச்சுட்டு அப்புறமா விளக்கமா பின்னி ஊட்டறேன்!)

குட்டிபிசாசு said...

இப்படத்தில் மோனிகாபெல்லுசி நடித்திருக்கும் (பருத்திவீரன் படத்தில் வருவதை விட) பாலியல்பலாத்காரக் காட்சி கிட்டதட்ட 10 நிமிடத்திற்கு மேல்வரும். இக்காட்சியை எல்லாராலும் பார்க்க இயலுமா என்று தெரியாது. இந்தப் படத்திற்குண்டான எச்சரிக்கையையும் தாங்கள் தெளிவாக கொடுக்க வேண்டுகிறேன்.

g said...

ரொம்ப ரொம்ப நன்றாக இருந்தது. விமர்சனத்தைச் சொல்லல புகைப்படத்தைச் சொன்னேன்.

g said...

/// கூடுதுறை said...
தமிழில் லக்கிலுக் மற்றும் உண்மைத்தமிழன் ஆகியோரின் விமர்சனத்திற்கு இணையாக விமர்சனம் எழுதியுள்ளீர்கள்...

மிக நன்றாக உள்ளது....

இதைப்போலவே தினம் ஒரு ஆங்கில பிரெஞ்சு மொழிப்படங்களை பார்த்து கண்டிப்பாக படத்துடன் விமர்சனம் எழுத வேண்டுகிறேன்...///


பொய் சொல்றதுக்கு உங்களுக்கு ஒரு அளவே இல்லபோங்க...

anujanya said...

செம்ம கலக்கலான விமர்சனம். எனக்கும் லக்கி ஞாபகம் வந்தது. இந்த வகையில் அ-கவிதைகள் சுந்தர் எழுதியிருக்கிறார். நல்லா எழுதுறீங்க.

அனுஜன்யா

வால்பையன் said...

//பிரபு ராஜதுரை said...
அலெக்ஸ் என்ற பெண் டெனியாவால் ஒரு சுரங்கப்பாதையில் வைத்து "கற்பழிக்கப்படுகிறாள்"
படத்திற்கும், இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைக்கும் எவ்வளது தூரம் இடைவெளி!//

அலெக்ஸ் அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே அவள் கற்பழிக்க படுகிறாள்,
ஆனால் கதைபடி அது தான் அவள் தோன்றும் கடைசிக்காட்சி,
சினிமா காட்சிப்படி, அந்த வார்த்தைகளே போதுமானதாக இருக்கிறது

வால்பையன் said...

நன்றி விஜய் ஆனந்த்

தமிழ் நெஞ்சம் எனக்கு மூன்று மொழிகள் தெரியும்
அது
தமிழ் பேச
தமிழ் எழுத
தமிழ் படிக்க

வால்பையன் said...

//பரிசல்காரன் said...
அருமையான விமர்சனம்!
(படிச்சுட்டு அப்புறமா விளக்கமா பின்னி ஊட்டறேன்!)//

படிக்காமையே அருமையான விமர்சனமா!

வால்பையன் said...

//குட்டிபிசாசு said...
இப்படத்தில் மோனிகாபெல்லுசி நடித்திருக்கும் (பருத்திவீரன் படத்தில் வருவதை விட) பாலியல்பலாத்காரக் காட்சி கிட்டதட்ட 10 நிமிடத்திற்கு மேல்வரும். இக்காட்சியை எல்லாராலும் பார்க்க இயலுமா என்று தெரியாது. இந்தப் படத்திற்குண்டான எச்சரிக்கையையும் தாங்கள் தெளிவாக கொடுக்க வேண்டுகிறேன்.//

கண்டிப்பாக அது இதயத்தை பிசையும் கடினமான காட்சி தான்.
அதை பார்வேர்டு செய்து பார்ப்பதை தவிர வேறு வழியில்லை.
பிரான்சில் சென்சார் இல்லாததால், அது தவிர்க்க முடியாததாகிறது

வால்பையன் said...

//ஜிம்ஷா said...
ரொம்ப ரொம்ப நன்றாக இருந்தது. விமர்சனத்தைச் சொல்லல புகைப்படத்தைச் சொன்னேன்.//

இன்னும் சில படங்கள் இருக்கிறது,
அதை தனிமடலில் அனுப்புகிறேன்

வால்பையன் said...

//அனுஜன்யா said...
செம்ம கலக்கலான விமர்சனம். எனக்கும் லக்கி ஞாபகம் வந்தது. இந்த வகையில் அ-கவிதைகள் சுந்தர் எழுதியிருக்கிறார். நல்லா எழுதுறீங்க.

அனுஜன்யா//


நன்றி
பொதுவாக சினிமா விமர்சினத்தின் போது
கதையினை அவன் வந்தான்,போனான், சாப்பிட்டான் ,தூங்கினான் என்று எழுவது சரியாக படவில்லை எனக்கு.
கதையில் இயக்குனர் பயன்படுத்தியிருக்கும் நுண்ணரசியலை நான் எவ்வாறு உணர்ந்தேன் என்பதை சொல்லுவதே என் பங்கு விமர்சனமாக கருதுகிறேன் .

இந்த படத்தை பொறுத்தவரை கதையின் வித்தியாசமான போக்கு, காட்சியமைப்புகளை சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு அழைத்து சென்றுவிட்டது

VIKNESHWARAN ADAKKALAM said...

சூப்பரான விமர்சனம்....

ISR Selvakumar said...

டிவிடிக்கு சொல்லி அனுப்பியிருக்கிறேன்.

என்னுடைய இயக்குனர் நண்பர் கதை தேடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு இந்தப் பதிவை படிக்க அனுப்பவுள்ளேன்.

சின்னப் பையன் said...

சூப்பரான விமர்சனம் வால்...

உலக திரைப்பட வரலாற்றுக்கு ரெடியாயிட்டிருக்கீங்க போலிருக்கே..... வெரி குட்....

புகழன் said...

\\இல்லையென்றால் நானே எழுதி எல்லோரையும் கொடுமைப் படுத்த வேண்டியிருக்கும்
\\

ம் சீக்கிரம் கொடுமை ஆரம்பிக்கவும்

வால்பையன் said...

//VIKNESHWARAN said...
சூப்பரான விமர்சனம்....//

மெய்யாலுமே தான் சொல்றிங்களா!
இல்ல என்ன வச்சு காமெடி கீமெடி பண்றிங்களா

வால்பையன் said...

// r.selvakkumar said...
டிவிடிக்கு சொல்லி அனுப்பியிருக்கிறேன்.
என்னுடைய இயக்குனர் நண்பர் கதை தேடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு இந்தப் பதிவை படிக்க அனுப்பவுள்ளேன்.//

இதத்தான் செய்கிறோம் என்று பகிரங்கமாக ஒத்து கொண்டதற்கு ஒரு சபாஷ்!
இந்த கதையின் மையக்கரு கற்பழிக்கப் பட்டதால் பழிவாங்குதல்.

முடிந்தவரை அதை தவிர்த்து கதையை வேறு கோணத்தில் நகர்த்தினால் இயக்குனருக்கு கண்டிப்பாக வெற்றி தான்

வால்பையன் said...

// ச்சின்னப் பையன் said...
சூப்பரான விமர்சனம் வால்...
உலக திரைப்பட வரலாற்றுக்கு ரெடியாயிட்டிருக்கீங்க போலிருக்கே..... வெரி குட்....//

நிறைய படங்கள் பார்த்தாலும் எனக்கான வேலை எது தருகிறதோ antha படத்தை பற்றி மட்டும் எழுதுவேன்

வால்பையன் said...

// புகழன் said...
\\இல்லையென்றால் நானே எழுதி எல்லோரையும் கொடுமைப் படுத்த வேண்டியிருக்கும்
\\
ம் சீக்கிரம் கொடுமை ஆரம்பிக்கவும்//

கதைக்கான கருவை பிடித்து விட்டேன்,
திரைகதை அமைத்து கொண்டிருக்கிறேன்.
இந்தவாரம் வெளியிடலாம்.
கூட்ட நெரிசலை தவிர்க்க ரீடரில் முன்பதிவு செய்து கொள்ளவும்

குசும்பன் said...

இல்லையென்றால் நானே எழுதி எல்லோரையும் கொடுமைப் படுத்த வேண்டியிருக்கும் //

இதுவேறயா?:((

ம் கடமைன்னு ஒன்னு இருக்கே.

தயவு செய்து படத்தின்பெயரை ஒழுங்காக பிரிண்ட் செய்ய சொல்லவும்.

Sanjai Gandhi said...

உலக விமர்சன நாயகன் வால்பையன் வாழ்க! ;)

கூடுதுறை said...

உங்களை A for Apple தொடர்பதிவுக்கு கோர்த்துவிட்டுள்ளேன்...

http://scssundar.blogspot.com/2008/09/for-apple.html

வால்பையன் said...

// குசும்பன் said...
ம் கடமைன்னு ஒன்னு இருக்கே.
தயவு செய்து படத்தின்பெயரை ஒழுங்காக பிரிண்ட் செய்ய சொல்லவும்.//

எதுக்கும் கொஞ்சம் மப்பு தெளிஞ்ச பிறகு படிச்சு பாருங்க!
(எனக்கும் அப்படி தான் தெரியுது)

வால்பையன் said...

//SanJai said...
உலக விமர்சன நாயகன் வால்பையன் வாழ்க! ;)//


பின்னூட்ட நாயகம் கையில் பட்டம்!
(எப்படி ஒரே நேரத்துல அத்தனை கேர்ள் பிரண்டுகளை சமாளிக்கிரிங்க)

வால்பையன் said...

//கூடுதுறை said...
உங்களை A for Apple தொடர்பதிவுக்கு கோர்த்துவிட்டுள்ளேன்...
http://scssundar.blogspot.com/2008/09/for-apple.html//

இணையத்தை பயன்படுத்துவதில் நான் ரொம்ப சின்னவன்,
எனக்கு அனுபவம் பத்தாது, அதுவும் செந்தழல் ரவி, மற்றும் லக்கிலுக்குக்கு இணையாக என்னை தலை என்று வேறு அழைத்து விட்டீர்கள்,
சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து ஆட்டோ புறப்பட்டு விட்டதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.
(தமிழ்நெஞ்சம், வெண்பூ, அப்துல்லா இவெங்கெல்லாம் எதுக்கு இருக்காங்க. எனக்கு உதவி பண்ணத்தான்)

ஹேமா said...

வணக்கம் வால்பையன்.பெயரைச் சொல்லவே ஒரு வால்த்தனமா இருக்கு.உங்கள் தளம் உலவினேன்.
பையன் நிறையவே எழுதியிருக்கான்.
அடிக்கடி வந்து பாக்கோணும்.படத்தின் விமர்சனம் நேர்த்தியாக சுருக்கமாக இருக்கு.படத்தைப் பார்க்கிற ஆவலைத் தருகிறது.
இன்னும் வருவேன்.

வால்பையன் said...

வருகைக்கு நன்றி ஹேமா!,

Pasupathy.S.A said...

நண்பா,

சினிமா விமர்சனத்தைவிட ( கருத்தைவிட) அந்த திரைப்படத்தின் மொத்த கதையையும் சொல்வதில்தான் உங்கள் கவனம் செல்கிறது. கதை கேட்டுவிட்டால் அதை பார்க்கும் எண்ணம் வருவதில்லை. கூடுமானவரை கதை கூறுவதை தவிர்த்தால் நன்றாக இருக்கும். மற்றபடி உங்களுக்கு அப்படத்தில் பிடித்தது என்ன எதற்கு பிடித்தது . அதை படமாக்கிய முறை பற்றி சொன்னால் வாசகனை படம் பார்க்க துண்டும். இது உங்களின் முதல் வரியை படித்தால் எழுதினேன்

வால்பையன் said...

வருகைக்கு நன்றி பசுபதி!

நீங்கள் சொல்வது போல் தான்!
கதையையோ காட்சியமைப்பையோ விவரிப்பது எனக்கு பிடிக்காது தான்.
ஆனால் வித்தியாசமான திரைக்கதை சொல்லவேண்டிய கட்டாயத்தை எனக்கு தந்து விட்டது,

இனிவரும் விமர்சனங்களில் சரி செய்து கொள்கிறேன்

Sakthi said...

வால்பய்யனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மிக நன்றாக எழுதுகின்றீர்கள், keep it up.
லக்கி லூக் அற்புதம்.

http://wanderingthoughts-sakthi.blogspot.com/

!

Blog Widget by LinkWithin