இருந்தாக்கா அள்ளிக்கொடு!!


பல தடைகளையும்!! தாண்டி, பலத்த எதிர்பார்ப்புகளோடு, எதிரிகளின் மூஞ்சியில் கரியை பூசும் அளவுக்கு நமது தென்னக டாம் குரூஸ், ஒலகநாயகன் ரித்தீஷ் அவர்கள் நடித்த நாயகன் படம் ஈரோட்டில் வெளிவந்தது விட்டது, இனிவரும் அறுபது நாட்களுக்கு ரசிகர்கள் முன்கூட்டியே டிக்கெட் வாங்கி விட்டதால் அதுவரை படம் பார்க்க இயலாத நிலையில் இருக்கிறேன். மனதுக்கு கஷ்டமாக தான் இருக்கிறது, அந்த கஷ்டத்தை போக்கும் வகையில் நேற்று தொலைக்காட்சியில் தலைவர் படத்திலிருந்து ஒரு பாடல் ஒளிபரப்பப் பட்டது.

பல முன்னணி நடிகர்கள் கூட செய்திராத வகையில் ஒரு பாடலுக்கே, ஒரு முழு படத்திற்கு தேவையான கிராபிக்ஸ் செய்து அசத்தியிருக்கிறார்கள்.
அதைவிட முக்கியமான ஒன்று, அந்த ஒரு பாடலிலேயே தலைவர் பல கெட்டப்பில் வந்து தசாவதாரத்தின் சாதனையை முறியடித்தார்.

இந்த ஒரு பாடலுக்கு பதில் சொல்லுமா, வெளி வந்த, வெளிவர போகிற படங்கள் என்பது சந்தேகமே! நடிக்கும் இரண்டாவது படத்திலேயே நடனத்தில் பல புதுமைகளை புகுத்தி பார்பவர்களின் கால்கள் மட்டுமில்லாமல் "அது" "இது" என்று எல்லாவற்றையும் ஆட வைத்திருக்கிறார்.
வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நடிகர்களே, தம்மை பற்றி தாமே புகழ்ந்து பாடி கொண்டிருக்கும் இந்த அரசியல் உலகில், "நான் கக்கூஸ் போனா உனக்கென்ன"
"நீயும் நானும் மாமன் மச்சாண்டா" போன்ற தம்மை முன்னிறுத்தும் வார்த்தைகள் இல்லாமல், சமத்துவத்தையும், கல்வியின் தேவை மற்றும் அதை தீர்க்கும் வழியையும் இரண்டு வரிகளில் சொன்ன நமது தலைவர் இனி எல்லா நடிகர்களுக்கும் சிம்ம சொப்பனம் தான்.

அந்த வரிகள்
இருந்தாக்கா அள்ளிக்கொடு,
தெரிஞ்சாக்கா சொல்லிக்கொடு,

இருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்கு அள்ளிக்கொடு என்றும், கற்ற கல்வியை கல்லாதவர்களுக்கு சொல்லிக்கொடு என்றும் சமுதாயத்தின் தற்போதைய தேவையை தமது பாட்டின் மூலமாக கொண்டிருப்பது, தலைவரின் சேவை உணர்ச்சியை எடுத்து காட்டுகிறது.

எங்கள் தலைவர் படத்தை நாங்கள் ஓட்டிவிடுவோம்
(தியேட்டரை விட்டு அல்ல, தியேட்டருக்குள்)
ஆனால் மற்ற ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ, இந்த படத்தை நீங்கள் ஜெயிக்க வைத்தால் தான், தாம் தான் தமிழகத்தின் நம்பர் ஒன் ஆக்டர் என்னும் மமதையில் தெரியும் சிலர், இனியாவது நல்ல கதையை தேர்வு செய்வார்கள்.

46 வாங்கிகட்டி கொண்டது:

தமிழ் பிரியன் said...

///பிடித்திருக்கிறதோ இல்லையோ, இந்த படத்தை நீங்கள் ஜெயிக்க வைத்தால் தான், தாம் தான் தமிழகத்தின் நம்பர் ஒன் ஆக்டர் என்னும் மமதையில் தெரியும் சிலர், இனியாவது நல்ல கதையை தேர்வு செய்வார்கள்./*//
சூப்பரப்பு!... கலக்கல்!

VIKNESHWARAN said...

//நீங்கள் ஜெயிக்க வைத்தால் //

வாச்சிடலாம்...

VIKNESHWARAN said...

//இருந்தாக்கா அள்ளிக்கொடு,
தெரிஞ்சாக்கா சொல்லிக்கொடு,//

பிடிக்கலனா துரத்திவிடு...

VIKNESHWARAN said...

//தசாவதாரத்தின் சாதனையை முறியடித்தார்//

சின்ன பட்ஜெட் படங்களை தலைவர் படத்தோடு ஒப்பிடுவதை கண்டிக்கிறேன்.

VIKNESHWARAN said...

//என்பது சந்தேகமே//

சந்தேகப்படாமல் அணித்தரமாக சொல்ல வேண்டும் முடியாது என்று.

VIKNESHWARAN said...

//தியேட்டரை விட்டு அல்ல, தியேட்டருக்குள்//

பூட்டு போட்டு வைக்கவா?

மங்களூர் சிவா said...

தலை ரித்தீஷின் நாயகன் பாடலை பார்க்க இந்த லிங்க க்ளிக் பண்ணுங்க

கயல்விழி said...

தென்னக டாம் க்ரூஸ் ஜி ஆச்சே? ரித்தீஷ் ஒரு தென்னக ரிக்கி மார்ட்டின்.

சென்ஷி said...

:)

ஆரம்பிச்சாச்சா...

ச்சின்னப் பையன் said...

வந்துட்டேன்....

ச்சின்னப் பையன் said...

//அந்த ஒரு பாடலிலேயே தலைவர் பல கெட்டப்பில் வந்து தசாவதாரத்தின் சாதனையை முறியடித்தார்.//

தலயா சும்மாவா!!!

ச்சின்னப் பையன் said...

//இந்த ஒரு பாடலுக்கு பதில் சொல்லுமா, வெளி வந்த, வெளிவர போகிற படங்கள் என்பது சந்தேகமே//

ஏன், அந்த பாடலில் என்ன கேள்வி கேட்டாங்க?

ச்சின்னப் பையன் said...

//பார்பவர்களின் கால்கள் மட்டுமில்லாமல் "அது" "இது" என்று எல்லாவற்றையும் ஆட வைத்திருக்கிறார்.
//

எது எதுன்னு மரியாதையா - படம் போட்டு பாகங்களை குறிச்சி சொல்லுங்க!!!

ச்சின்னப் பையன் said...

//இந்த படத்தை நீங்கள் ஜெயிக்க வைத்தால் தான், தாம் தான் தமிழகத்தின் நம்பர் ஒன் ஆக்டர் என்னும் மமதையில் தெரியும் சிலர், இனியாவது நல்ல கதையை தேர்வு செய்வார்கள்.
//

நக்கலா ஆரம்பிச்சாலும், கடைசி பாரா சூப்பரா முடிச்சிருக்கீங்க... சுயமாக சிந்தித்து எழுதறதுக்கும் யாருமில்லை, காப்பி அடிச்ச கதையையும் ஒழுங்கா எடுக்க முடியல - அந்த கேப்பில் இந்த மாதிரி படங்கள் வெற்றி அடைஞ்சாதான் நல்லாயிருக்கும்.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

எங்க தல ரித்தீஷ் மன்றத்தோட தலயா இருக்க தகுதியான ஓரே ஆளு தான்தாங்கிறத எனக்கு முன்னாடியே வந்து நிரூபிச்ச அண்னன் ச்சின்னப்பையன் வாழ்க!
அப்படியே அண்னன் ரித்தீஷும் வாழ்க!வாழ்க!

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

ரித்தீஷ் ஒரு தென்னக ரிக்கி மார்ட்டின்.
//

மன்னிக்கனும் கயல்விழி. உங்கள் கருத்தில சொற்பிழை இருக்கிறது.அவரு அமெரிக்க ரித்தீஷ்.

Anonymous said...

ஆமா, தங்கத் தலைவன் படம் ரிலீசாகியிருக்கு. தலைவி எங்க காணோம்?

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

சின்ன பட்ஜெட் படங்களை தலைவர் படத்தோடு ஒப்பிடுவதை கண்டிக்கிறேன்
//

அடடே! விக்னேஷ்வரன் நீங்களும் நம்ப மன்றத்துக்கு சரியான ஆளா இருப்பீங்க போல இருக்கே :)

Senthil said...

இந்த படத்தின் விமர்சனம் கலைஞர் தொலைக்காட்சியில் வந்துள்ளது. ஒன்னும் சொல்லுறதுக்கில்ல... புரட்சி தளபதிக்கு எதிரான உங்கள் விமர்சனம் மென்மையாக கண்டிக்கத்தக்கது :-)

வெள்ளந்தி said...

தலைவர் படம்னா சும்மாவா ?

சென்னைல , உதயம் தேட்டரயே மறச்சுள்ள தலைவருக்கு கட் - அவுட் வச்சுருக்கோம் !

பரிசல்காரன் said...

வாழ்க ஜே.கே.ஆர்!

வளர்க அவரது புகழ்!!

பரிசல்காரன் said...

'இருந்தாக்கா அள்ளிக்கொடு' என்று தனது கொடையுள்ளத்தை நாயகியின் தொடையுள்ளத்தோடு ஒப்பிட்டு சிலேடையாக தலைவர் பாடியிருப்பது என்னே பொருத்தம்!!!

ஜி said...

//'இருந்தாக்கா அள்ளிக்கொடு' என்று தனது கொடையுள்ளத்தை நாயகியின் தொடையுள்ளத்தோடு ஒப்பிட்டு சிலேடையாக தலைவர் பாடியிருப்பது என்னே பொருத்தம்!!!//

ரிப்பீட்டே!!!

//தென்னக டாம் க்ரூஸ் ஜி ஆச்சே?//

அவ்வ்வ்... எங்க போனாலும் தொரத்தி தொரத்தி அடிக்கறீங்களே.... :((

விஜய் ஆனந்த் said...

:-))))

விஜய் ஆனந்த் said...

// ச்சின்னப் பையன் said...

அந்த கேப்பில் இந்த மாதிரி படங்கள் வெற்றி அடைஞ்சாதான் நல்லாயிருக்கும் //

மன்றத்தலைவரே...சீரியஸா கருத்து சொல்ற மாதிரி சொல்லி, நைஸா கேப்புல உங்க ஆசையையும் தெரிவிச்சிட்டீங்க!!! வாழ்க உங்கள் J.K.R பற்று!!!வளர்க உங்கள் J.K.R மன்ற திருப்பணிகள்!!

ஜோசப் பால்ராஜ் said...

அமெரிக்காவுல ரிக்கி மார்ட்டின், டாம் க்ரூஸ் இவங்களோட இன்னும் சில ஹாலிவுட் கதாநாயகர்கள் எல்லாம் ஒரே சண்டையாம், என்னடான்னு கேட்ட அமெரிக்காவின் ரித்திஷ் அப்டின்னு யாரு அடைமொழி வைச்சுக்கிறதுன்னு செம போட்டியாம்ல. ஜாக்கி சான் கூட அவரோட அடுத்தப்பட தொடக்க விழாவுக்கு ஜேகே ரித்தீஷ் வந்தாதான் நான் நடிக்கவே வருவேன்னு ஹாங்காங்ல ரூம் போட்டு அழுவுறாராம்.

விஜய் ஆனந்த் said...

// VIKNESHWARAN said...
//நீங்கள் ஜெயிக்க வைத்தால் //

வச்சிடலாம்...//

எங்க???எப்போ???எப்படி???

விஜய் ஆனந்த் said...

// ஜோசப் பால்ராஜ் said...
அமெரிக்காவுல ரிக்கி மார்ட்டின், டாம் க்ரூஸ் இவங்களோட இன்னும் சில ஹாலிவுட் கதாநாயகர்கள் எல்லாம் ஒரே சண்டையாம், என்னடான்னு கேட்ட அமெரிக்காவின் ரித்திஷ் அப்டின்னு யாரு அடைமொழி வைச்சுக்கிறதுன்னு செம போட்டியாம்ல. ஜாக்கி சான் கூட அவரோட அடுத்தப்பட தொடக்க விழாவுக்கு ஜேகே ரித்தீஷ் வந்தாதான் நான் நடிக்கவே வருவேன்னு ஹாங்காங்ல ரூம் போட்டு அழுவுறாராம். //

ஹய்யோ!!!ஹய்யோ!!!

சதீசு குமார் said...

நீங்களாம் கொடுத்த பில்டப்ப வெச்சி, என் கூட்டாளி இந்த படத்த போயி பாத்துருக்கான்.. வடை போச்சேங்கற மாதிரி என் பத்து வெள்ளி வேஸ்ட்டா போச்சேன்னு இப்ப நொந்து போயிருக்கான்..

மனதளவில் பாதிக்கப்பட்டவங்களுக்கு உங்கள் ரசிகர் மன்றம் மூலமா ஏதாவது உதவித் தொகை, நிவாரணம் இப்படி ஏதாவது இருந்ததுனா சொலி அனுப்புங்க... பாவம் நம் தமிழ் ரசிகர்கள்... :)

ஜிம்ஷா said...

நல்ல விளக்கம். (குழம்பிவிட்டேன்). ஒருபாடலை வைத்தே எழுதி நீங்கள். படம் பார்த்தால் எப்படி எழுதுவீர்கள். கொஞ்சம் கற்பனை.

தமிழ்நெஞ்சம் said...
சூப்பரப்பு!... கலக்கல்!

புகழன் said...

வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நடிகர்களே, தம்மை பற்றி தாமே புகழ்ந்து பாடி கொண்டிருக்கும் இந்த அரசியல் உலகில், "நான் கக்கூஸ் போனா உனக்கென்ன"
"நீயும் நானும் மாமன் மச்சாண்டா" போன்ற தம்மை முன்னிறுத்தும் வார்த்தைகள் இல்லாமல், சமத்துவத்தையும், கல்வியின் தேவை மற்றும் அதை தீர்க்கும் வழியையும் இரண்டு வரிகளில் சொன்ன நமது தலைவர் இனி எல்லா நடிகர்களுக்கும் சிம்ம சொப்பனம் தான்.
--

அழகிய விமர்சனம்

Anonymous said...

//தமிழ் பிரியன் said...

///பிடித்திருக்கிறதோ இல்லையோ, இந்த படத்தை நீங்கள் ஜெயிக்க வைத்தால் தான், தாம் தான் தமிழகத்தின் நம்பர் ஒன் ஆக்டர் என்னும் மமதையில் தெரியும் சிலர், இனியாவது நல்ல கதையை தேர்வு செய்வார்கள்./*//
சூப்பரப்பு!... கலக்கல்!//

ரிப்பிட்டேய்

Xavier said...

//இருந்தாக்கா அள்ளிக்கொடு,//

காசு இருந்தா இந்தப் படத்துக்கு டிக்கெட் வாங்கு... பிளீஸ்... பிளீஸ்...

// தெரிஞ்சாக்கா சொல்லிக்கொடு //

படத்தோட கதை என்னான்னு தெரிஞ்சா எனக்குச் சொல்லிக் கொடு... ;)

Xavier said...

//இருந்தாக்கா அள்ளிக்கொடு,//

காசு இருந்தா இந்தப் படத்துக்கு டிக்கெட் வாங்கு... பிளீஸ்... பிளீஸ்...

// தெரிஞ்சாக்கா சொல்லிக்கொடு //

படத்தோட கதை என்னான்னு தெரிஞ்சா எனக்குச் சொல்லிக் கொடு... ;)

வால்பையன் said...

// Anonymous said...
ஆமா, தங்கத் தலைவன் படம் ரிலீசாகியிருக்கு. தலைவி எங்க காணோம்?//

யாருங்க அது தலைவி

வால்பையன் said...

தமிழ் பிரியன்
விக்னேஷ்வரன்
மங்களூர் சிவா
கயல்விழி
சென்ஷி
ச்சின்னப் பையன்
புதுகை.எம்.எம்.அப்துல்லா
செந்தில்
வெள்ளந்தி
பரிசல்காரன்
ஜி
விஜய் ஆனந்த்
ஜோசப் பால்ராஜ்
சதீசு குமார்
ஜிம்ஷா
தமிழ்நெஞ்சம்
புகழன்
வடகரை வேலன்
சேவியர்


எப்படி சொல்றதுன்னே தெரியலைங்க!
உங்க அன்ப நினச்சி பாக்கும் பொது
அழுக அழுகையா வருது!
நான் அழுது என் சோகம் தாக்கிருமொன்னு நினைக்கும் பொது
வர்ற அழுக கூட நின்னுருது!

நன்றி நன்றி நன்றி

குரங்கு said...

உலகநாயகன்,
தமிழகத்தின் விடிவெள்ளி,
அஞ்சா நெஞ்சன்,
எங்கள் தளபதி,
தனமான் சிங்கம்,
கனவு கண்ணன்,
ஏழைகளின் விடிவெள்ளி,
வருங்கால பிரதமர்,
அண்ணன்
ரித்தீஷின் வாழ்க வாழ்க.

லேகா said...

வால் பையன்..நல்ல விமர்சனம்(??!!!)..சிரிச்சுடே கைல இருந்த காபியை கொடிட்டேன் !!! உங்க அண்ணா ரித்திஷ் பத்தி நெனைச்சாலே பயமா இருக்கு..:-)))

வால்பையன் said...

வாங்க குரங்கு!
உங்கள இப்படி கூப்பிடரதுக்கே கஷ்டமா இருக்கு!
ஏதோ திட்டுற மாதிரியே பீலிங்

வாங்க லேகா!
உங்களுக்கு இதையெல்லாம் ரசிக்க நேரம் இருக்கா!
புத்தகத்துல முழுகிராம கொஞ்சம் இந்த பக்கமும் சுத்துங்க

இவன் said...

சூப்பர் வசனங்க தலைவர் தலைவர்தான்.... தலைவர் டான்ஸ பார்த்தீங்களா சும்ம பின்னி பெடல் எடுத்திருக்காரில்ல... நிச்சயமா ஜெயிக்க வைக்கலாம் ஆனா அவர் படம் ஆஸ்திரேலியால ரிலீஸ் ஆகலயே அதனால் இந்தியா வந்து தலைவர் படத்த பார்க்கலாம் என்னு இருக்கேன்

SanJai said...

எங்க தலிவரு கருப்பு கண்ணாடி மாட்டிகிட்டு அந்த பொண்னோட மூஞ்சிய தான் பாக்கறாரு. யாரும் தப்பா யோசிக்கதிங்க.. :)

rapp said...

சேதி தெரியுமா, நம்ம தலயோட படம்தான் இப்போ வசூலில் சாதனை புரிஞ்சுக்கிட்டு இருக்கு, தமிழ்மணத்தில் பலரோட பொழப்பையும் ஒட்டிக்கிட்டு இருக்கு.


தலைவி
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்

panaiyeri said...

கலக்கலோ கலக்கல்

Baski said...

கந்து வட்டி வசூல் பண்ணி !!!
தனது அரசியல் கனவை நிறைவேர்த்தும் பன்னி !!
(அட கவிதை)

இவன் படத்தை வேணுமுனா ஓட்டிகொங்க, ஐநுறு நாள் நாளும் ஓடுங்க.

தயவுசெஞ்சு தேர்தல உங்க விசுவாசத்தை காட்டாதீங்க.
(அவன் கண்டிப்பா திருமங்கலத்தை விட நல்லாவே செய்வான்)

வால்பையன் said...

பாஸ்கி அண்ணே நீங்க ரொம்ப சீரியஸான ஆள் போல!

!

Blog Widget by LinkWithin