ஞாநியும், கருணாநிதியும் இன்ன பிற நண்பர்களும்

கருத்து சுதந்திரத்தை யாரேனும் கண்டுபிடித்து கொடுத்தால் அவருக்கு இந்த வார பூச்செண்டு நான் கொடுப்பேன்.
ஞாநியை திட்டினால் திராவிடன்
கருணாநிதியை திட்டினால் ஆரியன்.


இது இரண்டும் இல்லையென்றால் தமிழனுக்கு பைத்தியம் பிடித்து விடுமோ என்ற பயம் வந்துவிட்டது எனக்கு. இதை ஏன் இனத்தாக்குதலாக பார்க்க வேண்டும், அதிகார மையத்திற்கு எதிரான கருத்துகள் என்று ஏன் யாரும் சொல்லவில்லை.
ஓருவேளை அவர்கள் பிடித்து தொங்க அந்த அதிகார கொம்பு தேவைப்படலாம்.

என்னைபோல் சாமானியனுக்கு அரசியலை தெரிய வைத்தது, ஞாநி மற்றும் பாமரனின் எழுத்துகள் தான். அணு மின்சாரம் மற்றும் சேது சமுத்திர திட்டம் பற்றிய ஞாநியின் கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில்கள் யாரும் சொல்லவில்லை. பதில்கள் இல்லையென்றால் யாரை நம்புவது, ஞாநியையா அல்லது நமது நேர்மையான அரசியல்வாதிகளையா!

ஞாநி குறிப்பிட்டு தமிழக முதல்வரை பற்றி மட்டும் எழுதுகிறார் என்று சில நண்பர்கள் எழுதுவது, நகைப்புகுள்ளாவதாக இருக்கிறது. ஓருவேளை அவர்கள் அதற்கு முன்னாள் ஞாநியின் எழுத்துகளையே படித்ததில்லையோ என்ற எண்ண தோன்றுகிறது. இந்தியாவின் நிரந்தர இளைஞராக மக்கள் கொண்டாடும் அப்துல் காலாமை கூட ஞாநி விட்டுவைக்கவில்லை.

நந்திகிராம் பிரச்னையை எழுதவில்லையா, ஆங்கிலத்தில் பாடத்திட்டம் இருந்ததால் படிக்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்ட மாணவன் பற்றி எழுதவில்லையா, திருநங்கைகளுக்கு சம அங்கிகாரம் வேண்டும் என்று எழுதவில்லையா, விஜயகாந்த், சரத்குமாரின் கோமாளித் தனத்தை எழுதவில்லையா,

ஜெயலலிதா ஆட்சியின் போது தேர்தலில் நடந்த அராஜகமும், தற்போது உள்ளாச்சி தேர்தலில் நடந்த அராஜகமும் ஞாநியின் ஒரே வாயால் தானே கண்டிக்கப்பட்டது.

ஜெயலலிதா, சசிகலாவுக்கு மாலை போட்டதை அவர்களது தனிப்பட்ட விஷயம் என்று சொன்னதால், ஆரிய ஆதரவாளன் பட்டம் வாங்கிய ஞாநி. எந்த இடத்திலேயும் நாலு கல்யாணம் செய்வது திராவிடனுக்கு அழகா என்று கேட்கவில்லை.
நமது சக பதிவர் தான் அதையும் கேட்டார்(கார்க்கி என்று நினைக்கிறேன்)


படம்:நன்றி இட்லிவடை

ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வை ஞாநி நோன்டியதில்லை.
வயதான காலத்தில் தன்னையறியாமல் மூத்திரம் போகும் வயதில் கூட பொது வாழ்வில் ஈடுபட வேண்டுமா என்ற கேள்வி இருந்ததே தவிர, கருணாநிதி ஒய்வு எடுக்க போவதால் ஞானிக்கு யாரும் கட்சியின் தலைவர் பதவி தந்துவிடப் போவதில்லை.

கடைசியாக ஒரே ஒரு கேள்வி, உடன்பிறப்புகள் எதைப் பார்த்து கழகத்துடன் இணைந்துள்ளார்கள், கழகத் தலைவரின் பகுத்தறிவுக்கா?
ஆரியனாய் பிறந்தாலும் சாதி,மதத்தை எதிர்த்து ஜோதிடம், கடவுள் மூட நம்பிக்கைகளை சாடி வரும் ஞாநி பகுத்தறிவு வாதியா. இல்லை மஞ்சள் துண்டை போட்டுகொண்டு, சாதி ஓட்டை பெற சாதிக்காரரை தொகுதியில் நிறுத்தும் கழகத் தலைவர் பகுத்தறிவு வாதியா

ஒரு ரூபாய் அரிசியும், இலவச தொலைக்காட்சியும் நமத்து போனாலும், இன்றும் அதை சாதனையாக தலையில் தூக்கி கொண்டு ஆடும் உடன்பிறப்புகள், என்று கடிவாளத்தை துறந்து சுதந்திர மனிதர்கள் ஆவார்கள்.
காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

அவர்களுது குடும்ப அரசியலை பற்றி கோட்ட எழுதலாம்!
நான் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை என்பதாலும்.
அதை பற்றி கேட்க வேண்டியது அந்த கட்சி தொண்டர்கள் தான் என்பதாலும்,
அதாவது அவர்களுடைய குடும்ப விசயத்தில் நான் தலையிட விரும்பவில்லை.
அவ்ளோதாம்பா

இந்த பதிவு
வருங்கால பெருந்தலைவர் சின்னகுத்தூசிக்கு சமர்ப்பணம்

160 வாங்கிகட்டி கொண்டது:

கூடுதுறை said...

இந்த அரசியல் பதிவெல்லாம் தேவையா?

எதோ 4 குத்துபதிவு போட்டோமா... டேஷ் டேஷ் பக்கம் ஒதுங்கனமோ என்று இல்லாமல்....

ஞானிக்கெல்லாம் சப்போர்ட் செய்துகொண்டு இருக்கிறீர்களே..

இந்த விவரம் அவருக்கு தெரிந்தால் உங்களையும் குறை சொல்லித்தான் பெயர் வாங்குவார்...

வால்பையன் said...

நீங்கள் கூடவா ஞானிக்கு ஆதரவா என்று கேட்கிறீர்கள்?

நான் என்று ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு ஆதரவாளன் ஆனேன்.

பகுத்தறிவு என்ற பெயரில் அரசியல் நடத்தும் கழகத் தலைவரின் தொண்டர்கள் கொஞ்சம் உண்மையான பகுத்தறிவு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
அப்படி ஒருவேளை அவர்களுக்கு தெரியும் என்றால் எனக்கும் சொல்லி கொடுக்கட்டும்

கூடுதுறை said...

//பகுத்தறிவு என்ற பெயரில் அரசியல் நடத்தும் கழகத் தலைவரின் தொண்டர்கள் கொஞ்சம் உண்மையான பகுத்தறிவு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.//

very good.....SUPER...

Tech Shankar said...

எத்தனை பேருக்கு ஞாநி ஓ போட்டிருப்பார். நான் இப்போ வால்பையன் (அருண்) க்கு ஓ போடுகிறேன்.

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ

Anonymous said...

வழக்கமான கும்மி பதிவுகளால் , தமிழ்மணம் சாக்கடையாக நாறுகிறது. அதிலிருந்து விலக்காக உருப்படியான பதிவு போட்டதற்கு மிகவும் நன்றி வால்பய்யன்.

Sanjai Gandhi said...

//இந்த பதிவு
வருங்கால பெருந்தலைவர் சின்னகுத்தூசிக்கு சமர்ப்பணம்//

சோலையை விட்டு விட்ட உங்கள் நுண்ணரசியலை வன்மையாக கண்டிக்கிறேன் வாலு :))

வெண்பூ said...

மன்னிக்கணும் வால். கண்டிப்பாக நான் உங்கள் கருத்தில் வேறுபடுகிறேன். நான் கண்டிப்பாக கலைஞர் ஆதரவாளன் கிடையாது. அதே நேரம் இன்று லக்கி எழுதியிருந்தது சரியென்றே சொல்வேன்.

ஞாநி எழுதியவை எல்லாமே குப்பை என்றோ அல்லது இப்போது எழுதுவது 100% குப்பை என்றோ யாரும் சொல்லவில்லை (அல்லது சொல்பவர்களுடன் நான் உடன்படவில்லை). எனக்கு இருக்கும் கோபம் கடந்த சில மாதங்களாக அவர் எதை எழுதினாலும் அதில் ஒரு வரியாவது கலைஞரை திட்டாமல் இருந்ததில்லை. சிறந்த உதாரணம், சில வாரங்களுக்கு முன் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய பெண் குழந்தை பெறுவதை பற்றி எழுதும்போது கூட "மனிதர்களுக்கு ரத்த சம்பந்தமான வாரிசு ரொம்ப முக்கியம்" என்று ஆரம்பித்து கலைஞரை சாடியிருப்பார்.

கலைஞர் செய்வது சரி என்று நான் சொல்லவில்லை. எழுதுவதற்கு (மொக்கை பதிவரான எனக்கே) ஆயிரம் விஷயம் இருக்கும்போது அவர் ஒவ்வொருமுறையும் கலைஞரை தாக்குவது கண்டிப்பாக லைம்லைட்டில் இருக்கவேண்டும் என்பதைத் தவிர வேறொரு காரணம் இருப்பதாக எனக்கு நினைவில்லை.

சீனு said...

//ஞாநியை திட்டினால் திராவிடன் கருணாநிதியை திட்டினால் ஆரியன்.//

இதுவும் ஒரு வித மனநோய் தான். புஷ் சொன்னது போல "ஒன்று நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள்; அல்லது, அவர்களுடன் இருக்கிறீர்கள்". எந்த பிரச்சினை வந்தாலும் இவர்கள் பார்ப்பது இந்த திராவிட-ஆரிய கண்ணாடி மூலம் தான். இதுவும் ஒரு வித பாசிசம் தான்.

//அணு மின்சாரம் மற்றும் சேது சமுத்திர திட்டம் பற்றிய ஞாநியின் கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில்கள் யாரும் சொல்லவில்லை. பதில்கள் இல்லையென்றால் யாரை நம்புவது, ஞாநியையா அல்லது நமது நேர்மையான அரசியல்வாதிகளையா!//

ரிப்பீட்டே...ஞாநி கேள்வி கேட்டார் என்பதற்காக பதில் கேள்வி தான் வருகிறதே தவிற, ஞாநி கேட்ட கேள்விக்களுக்கு பதில் இல்லை. கலைஞர் ஸ்டைலில் 'கேள்வி-பதில்' அறிக்கையாவது வெளியிட்டிருக்கலாம்.

//கருத்து சுதந்திரத்தை யாரேனும் கண்டுபிடித்து கொடுத்தால் அவருக்கு இந்த வார பூச்செண்டு நான் கொடுப்பேன்.//

லக்கிக்கு இதன் பொருட்டு நான் போட்ட பின்னூட்டமே இன்னும் வரவில்லை. கருத்து சுததிரமாவது வெங்காயமாவது. அதெல்லாம் தமிழ்நாட்டில் காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கு. (ஒரு வேளை எனக்கும் லக்கிக்குமான நெட்வொர்க் கொஞ்சம் ஸ்லோவா?)

//இந்த விவரம் அவருக்கு தெரிந்தால் உங்களையும் குறை சொல்லித்தான் பெயர் வாங்குவார்...//

வாங்கட்டுமே. அதற்காக நாம் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டுமா என்ன? தேளின் சுபாவம் கொட்டுவது என்றால், விடுங்கள். அது அதன் சுபாவம். நீங்கள் திருப்பி கொட்டுவீற்களா?

வால்பையன் said...

நன்றி அனானி

வால்பையன் said...

// SanJai said...
சோலையை விட்டு விட்ட உங்கள் நுண்ணரசியலை வன்மையாக கண்டிக்கிறேன் வாலு //

யாருங்க அது சோலை
எனக்கு உண்மையிலேயே தெரியாதுங்க

வால்பையன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெண்பூ

//நான் கண்டிப்பாக கலைஞர் ஆதரவாளன் கிடையாது.//

ஒரு சாதாரண குடிமகனுக்கு ஞாநியையும் ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் நாம் கேட்க நினைக்கும் கேள்விகளை ஊடகத்தின் வழியாக மற்றொரு நபர் கேட்கும் போது, நம் பங்குக்கு ஒ போடுவதில் தவறில்லை.

//"மனிதர்களுக்கு ரத்த சம்பந்தமான வாரிசு ரொம்ப முக்கியம்" என்று ஆரம்பித்து கலைஞரை சாடியிருப்பார்.//

யார்தர்த்தமாக சொல்லியிருக்கலாம் இல்லையா,
சரி அப்படியே இருந்தாலும், அவர்களுக்கு புத்தி வந்து குடும்ப அரசியலை தவிர்த்து விட்டார்களா என்ன?

//ஒவ்வொருமுறையும் கலைஞரை தாக்குவது கண்டிப்பாக லைம்லைட்டில் இருக்கவேண்டும் என்பதைத் தவிர வேறொரு காரணம் இருப்பதாக எனக்கு நினைவில்லை.//

இன்று தமிழகத்தில் தவிர்க்க முடியாத அதிகார மையமாக இருப்பது தி.மு.கா தான் என்பது அனைவருக்கும் தெரியும்.
தினகரனில் வேலை செய்தவர்கள் என்ன செய்தார்கள், அவர்கள் சாவுக்கு இவர்கள் என்ன பதில் சொன்னார்கள்.

கேள்வி கேக்க உரிமை இருந்தால் தான் அது ஜனநாயகம்
இல்லை என்றால் அது சர்வாதிகாரம்.

ஜெயலலிதாவின் சர்வாதிகார ஆட்சியில் நொந்து இரண்டு முறை தி.மு.காவிற்கு ஊட்டு போட்ட முறையில் கேள்வி கேக்க எனக்கு உரிமை இருக்கிறது என நம்புகிறேன்

Sanjai Gandhi said...

வெற்றிகொண்டான் - திமுக பேச்சாளர்
சோலை - திமுக எழுத்தாளர் :))

சி தயாளன் said...

நியாயமான கேள்விகள்... பதில் தர முடியாத கேள்விகள்

வால்பையன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்று சீனு

//லக்கிக்கு இதன் பொருட்டு நான் போட்ட பின்னூட்டமே இன்னும் வரவில்லை. //

ஏதாவது பிரச்சனை இருக்கலாம், நான் போட்ட பின்னூட்டம் கூட வரவில்லை.
வருமா, வராதா என்று கேட்டு போட்ட பின்னூட்டமும் வரவில்லை.
ஆனால் பாருங்கள் மொக்கையாய் போட்ட ஒரு பின்னூட்டம் வந்துவிட்டது.

அவர் நல்லவர் அந்த மாதிரியெல்லாம் செய்யமாட்டார்
கண்டுபுடிச்சு வெளியிட்டுடுவார் பாருங்க

வால்பையன் said...

//SanJai said...
வெற்றிகொண்டான் - திமுக பேச்சாளர்
சோலை - திமுக எழுத்தாளர் :))//

சத்தியமா எனக்கு அவ்ளோ அரசியல் அறிவு இல்லைங்கண்ணா
அது யாருன்னே எனக்கு தெரியாது.

எனக்கு தெரிஞ்சு தி.மு.காவுல ஒருத்தர் எங்க ஊரு முன்னாள் அமைச்சர்
ரொம்ப நல்லவரு
யாருக்கும் எந்த கெடுதலும் செஞ்சதில்லை
அடுத்தவங்க சொத்துக்கு ஆசப் படமாட்டாரு,
அடிச்சா கூட வாங்கிட்டு போயிடுவாரு.

அரசியல் வாழ்கை முடிஞ்சு போச்சுன்னா
பாவம் எப்படி வாழ்கையை ஓட்டுவார்னு தெரியல

அவரு பேரு N.K.K.P.ராஜா

சீனு said...

//ஏதாவது பிரச்சனை இருக்கலாம், நான் போட்ட பின்னூட்டம் கூட வரவில்லை.
வருமா, வராதா என்று கேட்டு போட்ட பின்னூட்டமும் வரவில்லை.
ஆனால் பாருங்கள் மொக்கையாய் போட்ட ஒரு பின்னூட்டம் வந்துவிட்டது.

அவர் நல்லவர் அந்த மாதிரியெல்லாம் செய்யமாட்டார்
கண்டுபுடிச்சு வெளியிட்டுடுவார் பாருங்க//

வருமா, வரான்னு புரிஞ்சிடுச்சு...

'என்னத்த' கண்ணையா மாதிரி "வரும்...ஆனா, வர்ர்ர்ராது".

Anonymous said...

//என்னைபோல் சாமானியனுக்கு அரசியலை தெரிய வைத்தது, ஞாநி மற்றும் பாமரனின் எழுத்துகள் தான். அணு மின்சாரம் மற்றும் சேது சமுத்திர திட்டம் பற்றிய ஞாநியின் கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில்கள் யாரும் சொல்லவில்லை. பதில்கள் இல்லையென்றால் யாரை நம்புவது, ஞாநியையா அல்லது நமது நேர்மையான அரசியல்வாதிகளையா!//
super .....

விஜய் ஆனந்த் said...

ஓ பக்கங்கள்ல கலைஞர் தாக்குதல் ஓவர் டோஸ்தான்னாலும், ஞாநியோட பெரும்பாமையான கலைஞர் பத்தின கருத்துக்கள் சரிங்கறதுதான் என் எண்ணம். எல்லா வாரமும், எல்லா விஷயமும் கலைஞரைப்பத்தி மட்டுமே எழுதியிருந்தா அது தப்பு. ஓ பக்கங்கள் கலைஞரைப்பத்தி மட்டுமே பேசலயே...ஆனா, ஞாநி சில விஷயங்கள்ல கலைஞரை வலுக்கட்டாயமா நுழைச்சிருக்காருங்கறதும் தெளிவான உண்மை. அதுக்காக ஞாநி அவரைப்பத்தி சொன்ன எல்லா விஷயமும் தப்பாயிடும்மா என்ன??? யாரும், யாரோட எல்லாவித கருத்துக்களோடயும் 100 சதம் ஒத்துப்போக முடியாது...இருந்தாலும், ஞாநி கலைஞரை பத்தி நெறைய பேசிட்டாருங்கறதுக்காக, அவர் மொத்தமும் தப்புன்னு முரண்டு புடிக்கலாமா???

வெண்பூ said...

விஜய், நேத்து கண்ணு முழிச்சி விசு படம் பாக்காதீங்கன்னு சொன்னேனே! கேட்டீங்களா????

கோவி.கண்ணன் said...

//ஞாநியை திட்டினால் திராவிடன்
கருணாநிதியை திட்டினால் ஆரியன்.//
:))))

ஒருவரின் கருத்தை நேர்மையாக எதிர்நோக்க முடியாமல் அவரின் சாதியை / கொள்கையை ஆராய்ந்து தூற்றுவது வருத்தம் அளிக்கக் கூடியது தான். சாதிகளைத் துறந்தவர்களுக்கும் இதைச் செய்வது பகுத்தறிவான செயலே அல்ல.

முன்பே ஞானியின் மீது விழுந்த பூணூல் பற்றி பதிவு எழுதி இருக்கிறேன்.

சாலிசம்பர் said...

இப்பின்னூட்டம் ஞாநியைப் பற்றிய இந்தப்பதிவுக்காக அல்ல.வெட்கக்கேடு என்று ஒரு போட்டோ போட்டு இருக்கிறீர்களே அதற்குத்தான் இப்பின்னூட்டம்.

கோயிலுக்குள்ளேயே வரக்கூடாதுன்னு ஒரு பத்து பேர் சேர்ந்து 90பேரை விலக்கினார்களே அதுக்கு வெட்கப்பட்டீங்களா?
கோயில் கருவறைக்கு வரக்கூடாதுன்னு இன்னமும் தடுக்குறாங்களே அதுக்குத்தான் வெட்கப்பட்டீங்களா?
வெட்கப்பட்டிருந்தீங்கன்னா கலைஞர் தான் தலைவர் என்று நீங்களும் சொல்லியிருப்பீங்க.

ஞாநி ஒரு காகிதப்புலி என்றால் கலைஞர் நிஜமாவே புலி.அவருடைய உறுமலுக்கு இட்லிவடை குரூப்புக்கு பேதி புடுங்குதுன்னா உங்களுக்கும் ஏன் இப்படி?

சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்துகிறாரே இது தான் பகுத்தறிவா என்று கேட்கிறீர்கள்.பள்ளியில் இன்னும் சாதி கேட்பதால் தான் சாதி இருக்கிறது என்று பிதற்றும் விஜயகாந்த் கேட்பதைப்போலத்தான் இதுவும் இருக்கிறது.

அடுத்து சுதந்திர மனிதர்களாக எப்போது மாறுவார்கள் என்று கவலைப்பட்டுள்ளீர்கள்.தமிழகத்தின் 4கோடி வாக்காளர்களும் சுயமா சிந்திச்சு தனக்குத்தானே தலைவன் என்று சொல்லி தேர்தல்ல நிக்கமுடியுமா?

வாலு,நடக்குறது யுத்தம். யுத்தமா?அது எங்கே நடக்குதுன்னு கேட்டுறாதீங்க , சிரிச்சுருவாய்ங்க.'பரம்பரை யுத்தம்' அப்படின்னு ஜெயாம்மா சுருக்கமா சொல்லியிருக்காங்க.keetru.com அப்படின்னு ஒரு வெப்சைட் இருக்குது,அப்பப்ப போய் கொஞ்சம் படிங்க.

பரிசல்காரன் said...

குடியை நிறுத்து.. வேணாம்ன்னு சொன்னா கேட்டாத்தானே..

ஒனக்கு டாஸ்மாக் தொறந்திருக்கற தலைவனை ஒருத்தர் திட்டுவாரு, அதுக்கு நீ சப்போர்ட்டு வேற..

போங்கப்பா.. என்னமோ பண்ணித் தொலைங்க...

பரிசல்காரன் said...

@ வெண்பூ

அதெப்படி சீரியஸா ஒரு பின்னூட்டம் போட்டுட்டு, கொஞ்ச நேரத்துலயேலே ஒரு காமெடி பின்னூட்டம் போட்டு ’நான் எஸ்கேப்பூடா’ ன்னு போறீங்க?

Anonymous said...

நீங்க யாருக்காக (எதிர்கால என்னவோ ஊசி) பதிவு போட்டீங்களோ அதுவே ஒரு அதிகார மையம். இப்பவே சிஸ்ய கோடிகள் அவர ஏதும் சொல்ல விடாது. அவருக்கே அகங்காரம் ஜாஸ்தி. ஜோசப் பால்ராஜ் பதிவுல கூட 'நகைச்சுவை' னு நக்கல் பண்றாரு. நேரா குடுக்க பதில் இல்ல. எப்பவுமே கலீஞர் தொண்டரு. இப்போ விகடன் தாத்தா பேரன் வேற ஆகிட்டாரு. (பின்ன கடிகாரம் கட்டி வுட்டாங்க இல்லியா). அதுனால குமுதமும் வேணாம். தலீவர கலாய்கிற ஞானியும் வாணாம். வால்க கலகம் ! வலர்க கலீஞரின் தொண்டர் படை ! வால்க பகுத்தறிவு!

ரவி said...

இன்றைக்கு லக்கி எழுதியிருந்ததில் நியாயம் இருந்தது.

இந்துத்துவா பற்றி எழுதினால் தேடிப்போய் ஆங்கிலத்தில் பின்னூட்டம் எல்லாம் போடும் ஞானி ( பார்க்க : ம்யூஸ் பதிவு) இன்றைக்கு லக்கி பதிவில் வந்து மறுத்து பின்னூட்டம் போடவேண்டியது தானே ??

Anonymous said...

I hate luckyluke and KK.

கார்க்கிபவா said...

// எந்த இடத்திலேயும் நாலு கல்யாணம் செய்வது திராவிடனுக்கு அழகா என்று கேட்கவில்லை.
நமது சக பதிவர் தான் அதையும் கேட்டார்(கார்க்கி என்று நினைக்கிறேன்)//

சகா, அது பத்தி எனக்கு நிஜமா ஒன்னும் தெரியாது.. தெரிஞ்சிக்க வேன்டும் என்ற ஆர்வத்தில் கேட்டது.. அதுவும் தமிழினத்திற்கே தலைவன் என்ற‌ ஒருவரின் தனிபட்ட வாழ்க்கையும் வரலாறுதான் என்று நினைக்கிறேன்.. முதலமைச்சர் கலைஞரின் தனிபட்ட வாழ்க்கை பற்றி நான் கேட்கவிலை.. அவரை நான் சார்ந்த தமிழினத்திற்கே தலைவர் என்ற போது இதை கேட்டது தவறென்று தோண்றவில்லை..

கார்க்கிபவா said...

நான் எப்போதும் ஞானியை அவர் சார்ந்த இனத்தை வைத்து விமர்சித்ததில்லை.. தமிழன் என்ற அடையாளத்தை கூட விரும்பாதவன் நான்.. நான் நான்தான்.. சாதி,மதம்,இனம்,மொழி,னாடு என்று எந்த வகையில் பிரித்து பார்ப்பதையும் விரும்பாதவன்.. ஆனால் ஞானி அபினவ் பிந்த்ரா பற்றி எழுதியது போல் எழுதிய பல எழுத்துக்களை எதிர்ப்பவன்...

வால்பையன் said...

//இந்துத்துவா பற்றி எழுதினால் தேடிப்போய் ஆங்கிலத்தில் பின்னூட்டம் எல்லாம் போடும் ஞானி ( பார்க்க : ம்யூஸ் பதிவு) இன்றைக்கு லக்கி பதிவில் வந்து மறுத்து பின்னூட்டம் போடவேண்டியது தானே ?//

தமிழ்ல போட்ட பின்னூட்டமே வரலைன்னு பேசிக்கிறாங்களே தலைவா

வால்பையன் said...

//பரிசல்காரன் said...
ஒனக்கு டாஸ்மாக் தொறந்திருக்கற தலைவனை ஒருத்தர் திட்டுவாரு, அதுக்கு நீ சப்போர்ட்டு வேற..//

டாஸ்மாக் தொறந்து,
தலைவி, இவரு தொரந்தத தொறந்த படியே பாத்துகிட்டாறு அவ்வளவு தான்.
இந்த விசயத்தில் நான் ராமதாசை ஆதரிக்கிறேன்.
கடை இல்லையென்றால் நான் எப்படி குடிப்பேன்.
(இதை பற்றி கூட ஞாநி எழுதியுள்ளார்)

வால்பையன் said...

வாங்க விஜயானந்த்

அதே தான் என் கருத்தும்.
சில தவறுகளுக்காக தண்டனை தருவது ஒரு புறம் இருந்தாலும்,
அவர் சுட்டி காட்டிய பல தவறுகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் உடன்பிறப்புகள்

வால்பையன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி.கண்ணன்

திராவிடனாகவும், ஆரியனாகவும் இருக்க நினைக்கும் மக்கள் மனிதனாய் இருக்க ஏன் இவ்வளவு வெக்கப் படுகிறார்கள் என்று தான் தெரியவில்லை

Unknown said...

நல்ல போடுறாங்கப்ப ஓ...

ஓ பக்கத்துக்கே ஓவா?

பரிசல்காரன் said...

//I hate luckyluke and KK.//


இது என்னை அல்லவே?

நான் அப்பாவிங்க..

(வாலு.. எப்படியோ பேசி வெச்சு சூடான இடுகைல வந்துட்ட! சுபாஷ்... ச்சே...சபாஷ்!)

வால்பையன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜாலிஜம்பர்!

நீண்ட நாட்களாக ஆளையையே காணோமே!
வேலை அதிகமா?

விவாதத்திற்கு வருவோம்.

"கோயிலில் அனுமதி மறுக்கப்பட்டது."

அதற்கு உங்கள் தலைவரின் எதிர்வினை எவ்வாறு இருந்தது.
ஏற்கனவே உத்தப்புரத்தில் பல்டி அடித்தது தெரிந்ததே!

இன்று மீண்டும் சேலத்தில் இருநூறு பேர் மீண்டும் போர்கொடி!
(இதுதான் நீங்கள் சொன்ன யுத்தமா)
ஏற்கனவே நடந்த பிரச்சனையில் இரும்பு கரம் கொண்டு அடக்கியிருந்தால் மீண்டும் சாதி பிரச்சனை வெளிவருமா?

இது வரை என் மகளுக்கு நான் சாதி சான்றிதல் பள்ளியில் தரவில்லை.
கண்டிப்பாக தரவேண்டும் என்றால் வழக்கு தொடருவேன் என்று சொல்லி வைத்திருக்கிறேன்.

ஒரு குழுமத்தை (கவனிக்க குடும்பம் அல்ல) வழி நடத்தி சொல்வதில் ஜெயலலிதாவை விட கலைஞர் பல மடங்கு உயர்ந்தவர் என்பதில் எந்த ஐயமிமில்லை. ஆனால் சமீபகாலமாக அறிவிக்கப் படும் செயல் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடைய முடியாதவை என்று உங்களுக்கே தெரியும்.

தேர்தலை மனதில் வைத்து வெளியிடும் திட்டங்கள், அடிப்படை பட்ஜெட்டிலேயே துண்டு விழும் போதும் கொடுக்கும் சலுகைகள் எதை எதிர்பார்த்து என்று மக்கள் உணர தொடங்கி விட்டார்கள், உடன்பிறப்புகளுக்கு தான் அது புரியவில்லை

Anonymous said...

வால்பய்யன் டோண்டூவோட சிஷ்யன் என்று லக்கி எப்பவோ சொன்னதுக்க்காகவா இந்த கோபம்

சின்னப் பையன் said...

சூப்பர் பதிவு... கை கொடுங்க...

சின்னப் பையன் said...

அரசியல்லே யார்கிட்டேந்தும், எப்போவும் பதிலே கிடைக்காது. கேட்ட கேள்விக்கு எதிர்க்கேள்வி, நீ அப்போ செய்யலியா, அவங்கல்லாம் செய்யாததா அப்படின்னு திசை திருப்பி விட்டுடுவாங்க...

வால்பையன் said...

தோழர் கார்க்கி!

உங்களை சிக்க வைக்கும் நோக்கம் ஏதும் இல்லை!
இந்த கேள்வி கேக்க கூட உரிமை இல்லையென்றால்
என்ன பெரிய ஜனநாயக நாடு.

உங்ககளை போலவே
சாதி,மதம்,கடவுள்,கருமாதி
எல்லாத்தையும் நானும் வெறுக்கிறேன்.

ஞாநியை பொறுத்தவரை யாரையும் கொண்டாடாதீர்கள் என்பது கருத்தாக இருக்கிறது.
அதே நேரம் அவரின் குட்டும், பூச்செண்டும் எனக்கு பிடிக்கவில்லை, இவர் யார் அதைகொடுக்க

வால்பையன் said...

// Mãstän said...
நல்ல போடுறாங்கப்ப ஓ...
ஓ பக்கத்துக்கே ஓவா?//

புதுசா இருக்குரிங்க
வாங்க!
அவ்ளோ தானா உங்க கருத்து
கருத்து இல்லைனா
கும்மி குத்திட்டு போங்க
அதுக்கு தான் தொறந்தே வச்சுருக்கேன்

வால்பையன் said...

//பரிசல்காரன் said...
(வாலு.. எப்படியோ பேசி வெச்சு சூடான இடுகைல வந்துட்ட! சுபாஷ்... ச்சே...சபாஷ்!)//


சூடான இடுக்கைக்கு வர நான் எதையும் செய்யல!
வச்ச தலைப்பே பெட்ரோல் மாதிரி பத்திகிச்சு

g said...

///வால்பையன் said...
//பரிசல்காரன் said...
ஒனக்கு டாஸ்மாக் தொறந்திருக்கற தலைவனை ஒருத்தர் திட்டுவாரு, அதுக்கு நீ சப்போர்ட்டு வேற..//

டாஸ்மாக் தொறந்து,
தலைவி, இவரு தொரந்தத தொறந்த படியே பாத்துகிட்டாறு அவ்வளவு தான்.
இந்த விசயத்தில் நான் ராமதாசை ஆதரிக்கிறேன்.
கடை இல்லையென்றால் நான் எப்படி குடிப்பேன்.
(இதை பற்றி கூட ஞாநி எழுதியுள்ளார்)///


உன்னை திட்டுவதற்கு எனக்கு எந்த வார்த்தையை பயன்படுத்துறதுனே தெரியல. கடை திறந்து இல்லனாக்கா, நாம்ம திண்டாட வேண்டிவரும். குடிகாரன் எந்த காலத்திலேயும் திருந்தமாட்டான். ஒருமுறை ஏதோ காந்தி ஜெயந்தியாம்! சரக்க தேடி தேடி அலைஞ்சது எனக்குதானே தெரியும் அதோட அருமையைப் பற்றி. இனிமேலாவது ராமதாசுக்கு ஆதரவா பேசாதீங்க இன்னா புரியுதா!

வால்பையன் said...

//Anonymous said...
வால்பய்யன் டோண்டூவோட சிஷ்யன் என்று லக்கி எப்பவோ சொன்னதுக்க்காகவா இந்த கோபம்//


இதுல டோண்டு எங்கிருந்து வந்தார்!
லக்கி தமிழ் வலையுலகின் அசைக்க முடியாத சக்தி!
நகைசுவை எழுத்துகளை பொறுத்தவரை அவர் தான் என்னுடைய குரு.
இதை அவரிடமே நான் சொல்லியிருக்கிறேன்

வால்பையன் said...

வாங்க ச்சின்னப்பையன்!

சீரியஸ் பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு!
வருதான்னு கொஞ்சம் முயற்சி பண்ணி பார்த்தேன்.
அதுக்கு போய் கையை கேக்குரிங்க்களே!
உங்ககிட்ட கொடுத்திட்டு நான் என்ன பண்றதாம்

Anonymous said...

//கடை திறந்து இல்லனாக்கா, நாம்ம திண்டாட வேண்டிவரும். குடிகாரன் எந்த காலத்திலேயும் திருந்தமாட்டான். ஒருமுறை ஏதோ காந்தி ஜெயந்தியாம்! சரக்க தேடி தேடி அலைஞ்சது எனக்குதானே தெரியும் அதோட அருமையைப் பற்றி. இனிமேலாவது ராமதாசுக்கு ஆதரவா பேசாதீங்க இன்னா புரியுதா!//

கொஞ்ச நாள் கஷ்டமாத்தான் இருக்கும் பாஸ்... அப்புறம் அந்த பழக்கத்துல இருந்து தப்பிச்சிடலாம். எல்லா குடிகாரர்களும் திருந்த மாட்டர்கள். பெரும்பான்மையான குடிகாரர்கள் திருந்தி குடும்பத்தை ஒழுங்காக கவனிப்பார்கள்.

வால்பையன் said...

வாங்க ஜிம்ஷா!

நீங்க அளவா குடிக்குரவங்க!
சனி ஞாயிறு மட்டும் மதுக்கடை லீவு விட்டா எனக்கு மாதம் மிச்சமாகும்.

போகக்கூடாதுன்னு நினைப்பேன்,
அப்புறம் ஒரே ஒரு கட்டிங்னு போவேன்
கடைசியில தாவு தீர்ந்து, டவுசர் கிழிஞ்சுரும்

வால்பையன் said...

உங்கள் கருத்தோடு ஒத்துபோகிறேன்
அனானி
நான் உண்மையிலேயே திருந்த ஆசைப்படுகிறேன்.
மாற்று வழிகளை தேடிக்கொண்டிருக்கிறேன்

Anonymous said...

//சீரியஸ் பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு!
வருதான்னு கொஞ்சம் முயற்சி பண்ணி பார்த்தேன்.//

இனிமேல் மொக்கை எல்லாம் எழுதாதீங்க பாஸ். கும்மி எல்லாம் அடிக்காதீங்க. உங்க கும்மி kooட்டத்துக்கு வேணும்னா குசியா இருக்கலாம்.

ஆனா அனானியா இருந்து படிக்க வர்ற என்ன மாதிரி ஆட்களுக்கு வர்ற எரிச்சல் இருக்கே. அய்யோ ... அம்மா

வால்பையன் said...

அனானி
எனக்குன்னு நான் எந்த முத்திரையையும் குத்திக்க விரும்பல!
வலையுலகம் நமக்கு நிம்மதிய தராட்டியும் கஷ்டத்த கொடுக்காம இருந்தா சரி!
ஆரம்ப கால சீரியஸ் பதிவுகள்ல நான் நிறைய அனுபவ பட்ருக்கேன்.

நான் இன்னும் சீனியர் பதிவரும் ஆகவில்லை, வந்து ஒரு வருடம் தான் ஆகிறது,
சீரியஸாக எழுத வேண்டுமானால் யாரையாவது பகைத்து கொள்ள வேண்டியிருக்கிறது.
நம்மை போலவே அவர்களும் இதை விவாதத்திற்கு மட்டும் எடுத்து கொண்டால் பரவாயில்லை.

கட்டம் கட்டி விட்டார்களேயானால்................

அதனால் சில கும்மிகளுக்கு மத்தியில் சீரியஸ் பதிவுகளும் எழுதுகிறேன்.

உங்கள் கருத்துக்கு நன்றி

Anonymous said...

//நான் உண்மையிலேயே திருந்த ஆசைப்படுகிறேன்.
மாற்று வழிகளை தேடிக்கொண்டிருக்கிறேன்//

எட்டு வருடமாக தினசரி குடித்து, செய்து வந்த தொழிலை மூடி, கடன் பட்டு ஆறு மாதங்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் கடந்த இரண்டு வருடமாக குடியை விட்டு வெளியே வந்திருக்கிறேன். நல்ல வாழ்க்கையும் அமைத்து கொண்டேன்.

குடித்து இழந்ததை விட, குடித்ததால் வரும் குற்ற உணர்ச்சி இருக்கிறதே, அது மிக கொடுமை.

வால்பையன் said...

வேற வழியில்லாம நானே 50-த போட்டுக்கிறேன்

ஹீ ஹீ ஹீ

வால்பையன் said...

//குடித்து இழந்ததை விட, குடித்ததால் வரும் குற்ற உணர்ச்சி இருக்கிறதே, அது மிக கொடுமை. //

குற்றஉணர்ச்சியே பெரிய கொடுமை தான்.
மாதக் கடைசியில் பொருளாதார பிரச்சனை வரும் போது தான் நம் மீதே நமக்கு கோபம் பயங்கரமாக வரும்.

நீங்கள் மனதிடம் மிக்கவர். போராடி வெற்றி பெற்று விட்டீர்கள். வாழ்த்துக்கள்.
நானும் வெளியே வந்து விடுவேன்.

Anonymous said...

ஐயா "ஞானி"தாசா......

இன்று கலைஞரையும், ரஜினியையும் இந்த தாக்கு தாக்கும் ஞானி "விஜயகாந்தை" பற்றி மட்டும் ஓரிருவரிகளில் தமது கடமையை முடிக்கின்றரே.....ஏன் அவர் விஜயகாந்தின் அரசியல் ஆலோசகர் என்பதலா.....இல்லை இந்த பைய்யன் கொஞ்சம் வளர்ந்தபின் பார்த்துகொள்ளலாம் என்ற மமதையாலா?
எது எப்படியோ இன்று அவரது முழுநேர பணி தன்னை ஒரு நேர்மையாளனாக காட்டிகொள்வது மட்டுமே...

இதே விஜயகாந்த் தனக்கு சொந்தம் இல்லாத புறம்போக்கு நிலத்தை சுருட்டியது இந்த ஞானியருக்கு தெரியவில்லையா இல்லை உங்களுக்கு தெரியவில்லையா....அதை பற்றி அவர் வாய்மொழி எதுவும் கூறவில்லையே...

மூன்றாம்தர பேச்சாளனக்கும் மூன்றாம்தர எழுத்தாளனுக்கும் "ஜால்ரா" அடிப்பதையே குலத்தொழிலாக கொண்டவர்களுக்கு என்ன சொல்வது.....

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஞாநியின்மேல் பல விமர்சனங்கள் இருந்தாலும் இங்கு பெரும்பாலும் பலர் சொல்வது நகைப்புக்குரியதே :(

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இங்கு என்பதை இணையத்திலே என வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ரமி said...

வால் பையன்,

உங்கள் அனைத்து கருத்தும் சரியே.

//அணு மின்சாரம் மற்றும் சேது சமுத்திர திட்டம் பற்றிய ஞாநியின் கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில்கள் யாரும் சொல்லவில்லை. பதில்கள் இல்லையென்றால் யாரை நம்புவது, ஞாநியையா அல்லது நமது நேர்மையான அரசியல்வாதிகளையா
//

சீனு said...

//இன்று கலைஞரையும், ரஜினியையும் இந்த தாக்கு தாக்கும் ஞானி "விஜயகாந்தை" பற்றி மட்டும் ஓரிருவரிகளில் தமது கடமையை முடிக்கின்றரே.....ஏன் அவர் விஜயகாந்தின் அரசியல் ஆலோசகர் என்பதலா.....இல்லை இந்த பைய்யன் கொஞ்சம் வளர்ந்தபின் பார்த்துகொள்ளலாம் என்ற மமதையாலா?//

அதான. அப்ப கூட கேள்விக்கு பதில் வராதே...'பதில் கேள்வி'(?) தான் வரும்...

Anonymous said...

//அரசியல்லே யார்கிட்டேந்தும், எப்போவும் பதிலே கிடைக்காது. கேட்ட கேள்விக்கு எதிர்க்கேள்வி, நீ அப்போ செய்யலியா, அவங்கல்லாம் செய்யாததா அப்படின்னு திசை திருப்பி விட்டுடுவாங்க...//

அதனாலெல்லாம் கவனத்தை சிதறவிடாது கேட்ட கேள்வியில் விடாப்பிடியாக இருக்க வேண்டும், கார் கீயைப் போல, ஊப்ஸ்...., கார்க்கியைப் போல!

சீனு said...

//இதே விஜயகாந்த் தனக்கு சொந்தம் இல்லாத புறம்போக்கு நிலத்தை சுருட்டியது இந்த ஞானியருக்கு தெரியவில்லையா இல்லை உங்களுக்கு தெரியவில்லையா....அதை பற்றி அவர் வாய்மொழி எதுவும் கூறவில்லையே...//

உங்களை திட்டினா பதில் சொல்லுய்யான்னா, 'ஏன் அவன திட்டல?'ன்னு கேக்குறது சின்னபுள்ளதனமா இல்ல?

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

வால்பையன்,
சரியான ஒரு நோக்கில் எழுதப்பட்ட ஒரு பதிவு.

நமது அரசியலில் அது திமுக வானாலும் சரி,அதிமுக வானாலும் தனி மனிதத் துதிதான் விஞ்சுகிறது.

கருணாநிதியோ,ஜெயலலிதாவோ ஒரு ஆட்சியின் தலைவர்கள்,அவர்கள் சறுக்கும் போது சுட்டவும்,குட்டவும் பத்திரிக்கையாளர் இருப்பார்,இருக்க வேண்டும்-அதுதான் ஜனநாயகம்.

ஏன் கருணாநிதியையே பற்றி எழுதுகிறார் என்றால்,அது தவிர்க்க இயலாதது-அவர்தான் ஆட்சியின் தலைவர்.

இதே ஞாநி ஜெ.ஆட்சியிலும் அவரை விமர்சித்து எழுதி இருக்கிறார்.

நீங்கள் சுட்டியபடி ஞானியின் கேள்விகளுக்கு மறுப்புகள் தான் வந்தனவே யொழிய பதில்கள் இல்லை.

இதே கதை தேசிய அளவிலும் அருண்ஷௌரியின் கேள்விகளுக்கும் ஏற்படுகிறது;நமது நிதி அமைச்சரிலிருந்து,பிரதமர் வரை யாரும் அவர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை.

இவற்றை சுட்டினால் பார்ப்பனீயம்,பூணூல் நெளியும் என்று பிதற்றவே பெரும்பாண்மைக் கூட்டம் தயாராக இருக்கிறது.

60 களில் இருந்து தமிழக அரசியலின் சாபம்தான் இது !

Anonymous said...

I do not agree with what you have to say, but I'll defend to the death your right to say it.

-Voltaire

சங்கரனுக்கும் மூலைல ஒரு சின்ன எடம் கொடுங்கடே!

வால்பையன் said...

//ஐயா "ஞானி"தாசா......//

நீங்கள் கலைஞர் தாசனாக இருக்கலாம்.
அதற்காக என்னை ஞாநி தாசனாக நினைத்து விடாதீர்கள்.
எனக்கு யாருக்கும் தாசனாக இருக்க பிடிக்காது.

//இன்று கலைஞரையும், ரஜினியையும் இந்த தாக்கு தாக்கும் ஞானி "விஜயகாந்தை" பற்றி மட்டும் ஓரிருவரிகளில் தமது கடமையை முடிக்கின்றரே..//

ஆகமொத்தம் நீங்கள் பதிவைப் பற்றி பேச வரவில்லை.
தலைப்பு ஞாநியும்,கருணாநிதியும் தான். விஜயகாந்தை நான் கூப்பிடவே இல்லை.
இருந்தும் விஜயகாந்த்,சரத்குமாரின் கோமாளித் தனங்களை சாட்டியுள்ளார் என்று எழுதியுள்ளேன், கோமாளிகளை பற்றி எவ்வளவு தான் எழுத வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

//விஜயகாந்த் தனக்கு சொந்தம் இல்லாத புறம்போக்கு நிலத்தை சுருட்டியது இந்த ஞானியருக்கு தெரியவில்லையா//

சட்டரீதியான தவறு,
மாற்றான் பொருள்களை அபகரிக்க நினைப்பவனுக்கு சட்டம் சரியான தண்டனை கொடுக்க வேண்டும். அதை கண்டிக்கிறேன் என்று எழுதி விஜயகாந்தை பெரிய ஆளாக்க விருப்பமில்லாமல் இருந்திருக்கலாம் ஞாநிக்கு

//மூன்றாம்தர பேச்சாளனக்கும் மூன்றாம்தர எழுத்தாளனுக்கும் "ஜால்ரா" அடிப்பதையே குலத்தொழிலாக கொண்டவர்களுக்கு என்ன சொல்வது.....//

ஐயா, இதில் யார் எத்தனையாவது வரிசையில் இருக்கிறார்கள்,
ஞாநிக்கு முன்னால இரண்டாவதாக யார் இருக்கிறார்கள்,
பின்னால் நான்காவதாக யார் இருக்கிறார்கள் போன்ற தகவல்கள் எனக்கு தெரியாது.

ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது,
உங்களிடம் ஒரு கேள்வி கேட்டால் பதில் சொல்ல தெரியாது.
ஆனால் திரும்ப பல கேள்விகள் கேக்க தெரியும்.

Anonymous said...

//இதே விஜயகாந்த் தனக்கு சொந்தம் இல்லாத புறம்போக்கு நிலத்தை சுருட்டியது இந்த ஞானியருக்கு தெரியவில்லையா இல்லை உங்களுக்கு தெரியவில்லையா....அதை பற்றி அவர் வாய்மொழி எதுவும் கூறவில்லையே...//

உங்களை திட்டினா பதில் சொல்லுய்யான்னா, 'ஏன் அவன திட்டல?'ன்னு கேக்குறது சின்னபுள்ளதனமா இல்ல?"

சீனு நீங்க நல்லவரா கெட்டவரா......

நல்லதந்தி said...

ஞானி எழுத்துக்கள் சந்தர்ப்பத்திற்க்கு தகுந்த மாதிரி மாறுகிறதே?.தேவைப் பட்டால் தூக்குவது இல்லையென்றால் தாக்குவது.அதை கவனித்திருக்கிறீர்களா?.அப்புறம்.... ரொம்ப சீரியஸ் பதிவா போட்டாப்புல ஆயுடுச்சே?

வால்பையன் said...

வருகைக்கு நன்றி சுந்தர்!

பொதுவாக இணையத்தில் என்று குறிப்பிட்டு இருப்பதால், என்னையும் சேர்த்து குட்டியிருக்கிறீர்கள் சரி தானே

Anonymous said...

"நீங்கள் கலைஞர் தாசனாக இருக்கலாம்.
அதற்காக என்னை ஞாநி தாசனாக நினைத்து விடாதீர்கள்.
எனக்கு யாருக்கும் தாசனாக இருக்க பிடிக்காது"

நெசமாதான் சொல்றீங்களா.....


"ஆகமொத்தம் நீங்கள் பதிவைப் பற்றி பேச வரவில்லை.
தலைப்பு ஞாநியும்,கருணாநிதியும் தான். விஜயகாந்தை நான் கூப்பிடவே இல்லை.
இருந்தும் விஜயகாந்த்,சரத்குமாரின் கோமாளித் தனங்களை சாட்டியுள்ளார் என்று எழுதியுள்ளேன், கோமாளிகளை பற்றி எவ்வளவு தான் எழுத வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்."

எழுத்தாளன் என்பவன் நேர்மையாக இருக்க வேண்டும் என்று கேள்வி கேட்பதில் என்ன தவறு...அப்படி பார்த்தல் ஞானியை விட பெரிய கோமாளி இந்த எழுத்துலகில் இல்லை. ஞானி என்ற கோமாளி ஒவோருவீடாக மாறி மாறி வந்து இப்போது குடிஇருக்கும் வீடு குமுதம்..ஆனால் இன்னும் எத்தனை நாளைக்கொ?


"சட்டரீதியான தவறு,
மாற்றான் பொருள்களை அபகரிக்க நினைப்பவனுக்கு சட்டம் சரியான தண்டனை கொடுக்க வேண்டும். அதை கண்டிக்கிறேன் என்று எழுதி விஜயகாந்தை பெரிய ஆளாக்க விருப்பமில்லாமல் இருந்திருக்கலாம் ஞாநிக்கு"

அப்போ பெரியாளாக மரவிட்டளும் தவறு செய்யலாம்...இல்லையா? ஜூபருங்கோவ்...


"ஐயா, இதில் யார் எத்தனையாவது வரிசையில் இருக்கிறார்கள்,
ஞாநிக்கு முன்னால இரண்டாவதாக யார் இருக்கிறார்கள்,
பின்னால் நான்காவதாக யார் இருக்கிறார்கள் போன்ற தகவல்கள் எனக்கு தெரியாது.

ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது,
உங்களிடம் ஒரு கேள்வி கேட்டால் பதில் சொல்ல தெரியாது.
ஆனால் திரும்ப பல கேள்விகள் கேக்க தெரியும்."

சரியா கண்டுபுடிசிடீங்கபோல....நீங்க கேள்கி கேட்ட உடனே பதில் சொல்லாட்டி உங்களுக்கு என்ன கோவம் வருது...

ஒழுங்கான கேள்விய கேளுங்க பதில் தானா கிடைக்கும்....
ஆமா இந்த பதிவு உங்க கருத்துதானே.....நீங்க என்ன கேள்வியா கேட்டிங்க.....அப்பு இன்னும் வார விடுமுறைக்கு நாலு இருக்கு.....இப்பவே உங்க ஜலகிரீடைய ஆரமிச்சுராதீங்கோவ்வ்.......

வால்பையன் said...

வருகைக்கு நன்று ரமி.

சீனு தெரிஞ்சது தானே இவர்கள் வாதம் செய்யும் முறை!
பதில் இருந்தா தானே சொல்றதுக்கு

Anonymous said...

"சீனு தெரிஞ்சது தானே இவர்கள் வாதம் செய்யும் முறை!
பதில் இருந்தா தானே சொல்றதுக்கு"

அஸ்கு புஸ்கு...என்ன ஆடாத இப்பவே கலைகுறீங்க...சரி எனக்கு இல்ல...உங்களுக்கு இருக்க...(பதிலதாங்க சொல்றேன்)

வால்பையன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அறிவன்!

கூடவே நட்சத்திர வாழ்த்துக்களும்

ரவி said...

ட்ட்ட்ட்டோய் ஒரு மணி நேரத்துல 30 கமெண்டு குத்துறீங்க ???

ஏன் இந்த கொலைவெறி ???

வால்பையன் said...

// Anonymous said...
I do not agree with what you have to say, but I'll defend to the death your right to say it.
-Voltaire
சங்கரனுக்கும் மூலைல ஒரு சின்ன எடம் கொடுங்கடே!//

சத்தியமா எனக்கு ஒன்னும் புரியல!
இது எங்கயாவது மாறி போகவேண்டியது!
திசை மாறி வந்துருச்சா

Anonymous said...

வால்பய்யனுக்கு வால் மட்டும்தாங்க நீளம்...மத்ததெல்லாம் கம்மி..நான் சொன்னது அவருடைய அறிவை.......தப்பாநிநைசிராதீங்கோவ்வ்வ்வ்

வால்பையன் said...

வாங்க நல்லதந்தி!

ஞானியிடம் கலைஞர் பூச்செண்டு வாங்கியதும் உண்டு,
ஆனால் ஜெயலலிதா ஒருமுறை கூட வாங்கவில்லை
அந்த கோபம் தானே உங்களுக்கு

சீனு said...

//சத்தியமா எனக்கு ஒன்னும் புரியல!
இது எங்கயாவது மாறி போகவேண்டியது!
திசை மாறி வந்துருச்சா//

ஞாநி (அ) சங்கரன்

Anonymous said...

"ஞானியிடம் கலைஞர் பூச்செண்டு வாங்கியதும் உண்டு,
ஆனால் ஜெயலலிதா ஒருமுறை கூட வாங்கவில்லை
அந்த கோபம் தானே உங்களுக்கு"

சும்மாவாங்க பூச்செண்டு குடுப்பாரு ஞானி.....ஜெயலலிதா இன்று ஆட்சியில் இல்ல அதனால தலையில குட்டினாலும் சரி பூச்செண்டு குடுத்தாலும் சரி எல்லாமே ஒன்னுதான்....ஆமா தலைல ஞானி குட்டுவேச்சா அந்தம்மா சும்மாருப்பாங்களா?

வால்பையன் said...

அனானி!

ஞாநியின் கருத்துகளை நான் பார்க்க சொல்லும் கண்ணோட்டம்,
அதிகாரமையத்தை எதிர்த்தல்!

சின்ன சின்ன சில்வண்டு பிரச்சனைகளை லைட்டு போட்டு காட்டுவதற்கு நிறைய பத்திரிகைகள் இருக்கின்றன, அதிலும் எதிர்கட்சிகளின் சிறு அசைவு கூட பூதக்கண்ணாடி வைத்து காட்டப்படும் என்பது அனைவரும் அறிந்ததே!

இன்றும் தமிழகத்தில் பெரும் பகுதிகளில் கழகத்தின் ஆட்களால் சுருட்டப்படும் சொத்துக்கள் கோடிக்கணக்கில் ஆனால் ஞாநி எதிர்ப்பது இவர்களுக்கெல்லாம் தலைமையில் இருக்கும் அதிகார மையத்தை தான்.

//நீங்க கேள்கி கேட்ட உடனே பதில் சொல்லாட்டி உங்களுக்கு என்ன கோவம் வருது...//

இதில் கோபம் வருவதற்கு ஒன்றும் இல்லை,
ஏன் கருணாநிதியை மட்டும் கேள்வி கேக்கிறாய் என்று பதிவி எழுதுற மாதிரி,
ஏன் மற்றவர்களை கேள்வி கேப்பதில்லை என்று ஒரு பதிவும் உங்கள் பங்குக்கு எழுதுங்கள். பின்னூட்டத்தில் வரும் நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விக்கு பதில்கள்

Anonymous said...

வால்பையா ... உன்னை பாராட்டுகிறேன். எடுத்துகிட்ட விசயத்துல ஸ்ட்ராங்கா இல்லன்னா இப்படி எல்லா கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது. யார் கட்டம் கட்டினாலும் லொள்ளு பதிவுகளை ஒதுக்கிட்டு ... சீரியஸ் பதிவுகள் எழுதுங்கள். பின்னூட்டங்கள் வேண்டுமானால் குறையலாம். ஆனால் படிப்பவர்கள் ஜாஸ்தி ஆவார்கள்.

Anonymous said...

"ஞாநியின் கருத்துகளை நான் பார்க்க சொல்லும் கண்ணோட்டம்,
அதிகாரமையத்தை எதிர்த்தல்!"

என்ன பொல்லாத அதிகரமய்யம்...ஞானி இல்ல எந்த ஒரு பத்திரிக்கையாளன் கேள்வி கேட்டலும் கருணாநிதி பதில் சொள்ளபோறது இல்ல...ஏன்ன அவரு பண்றது தப்புன்னு அவருக்கே தெரியும்..கருணாநிதி இன்னைக்கு இருந்து நாளைக்கு போகபோற மனுஷன்....ஆனா அவருடைய அரசியல் வாரிசாக வரதுடிக்குற வாரிசுகள இப்பவே அடையாளம் காட்டவேணாமா...இல்ல சமநோக்கோட எல்லா பிரச்சனையும் இவரு எழுதுறாரா....யார பத்தி எழுதுனா விற்பனை அதகம இருக்குமோ அவர பத்தி மட்டும் எழுதவேண்டியது......பின்ன உப்பு சப்பு இல்லாத ரஜினிகாந்த் விஷயத்துக்கு எவரு ரெண்டு பதிவ குமுதத்துல போடுவாரா....

"சின்ன சின்ன சில்வண்டு பிரச்சனைகளை லைட்டு போட்டு காட்டுவதற்கு நிறைய பத்திரிகைகள் இருக்கின்றன, அதிலும் எதிர்கட்சிகளின் சிறு அசைவு கூட பூதக்கண்ணாடி வைத்து காட்டப்படும் என்பது அனைவரும் அறிந்ததே!"

ஐயா,விஜயகாந்த் சின்ன வண்டோ இல்ல சில்வண்டோ....ஆட்சிக்கு வரதுக்கு முன்னாடியே லவுட்டுற வேலைய பாகுரறு...இன்னும் ஆட்சிய குடுத்துட்டா என்னவெல்லாம் நடக்கும்....என்ன கருணாநிதி மேல இன்னும் முடிகபடமல் இருக்குற சர்க்கரியா கமிசன்"sarkaria commission" போல இவரு மேல ஒரு "புகாரியா கமிசன்" இருக்கும்....

"இன்றும் தமிழகத்தில் பெரும் பகுதிகளில் கழகத்தின் ஆட்களால் சுருட்டப்படும் சொத்துக்கள் கோடிக்கணக்கில் ஆனால் ஞாநி எதிர்ப்பது இவர்களுக்கெல்லாம் தலைமையில் இருக்கும் அதிகார மையத்தை தான்."

நான் கூட சொல்லுவேன்,ஞானி ஆறு மாசத்துக்கு ஒரு தரவ அட்வாநியோட ஆலோசன பண்றாரு,மோடியோட விருந்து சாபிடராறு"னு...ஆனா அதற்கான ஆதாரம்? அப்புறம் இவருக்கும் சுப்ரமனிய சுவாமிக்கும் என்ன வித்தியாசம்.....

Mr.வால்பய்யன்,
நீங்க காமெடி கீமடி பண்ணலியே....

george said...

ஞாநி தான் கேட்கும் கேள்விகளுக்கு
a) விடை தேடுகிறாரா ?
b) காசு வாங்குகிறார ?( பத்திரிகையில் வெளியிடுவதற்கு ).

மோகன் கந்தசாமி said...

எதைப்பற்றி பேசினாலும் சுற்றி வளைத்து ஞானி கலைஞரை சாடுவதில் தவறெதுவும் இல்லை. விமர்சனத்துக்கு உரியவர்தான் கலைஞர். கலைஞரை அவர் முதல் மனைவி விளக்கமாற்றால் அடித்திருக்க வேண்டும் என்று எழுதவும் அவருக்கு உரிமை இருக்கு. கருத்து சுதந்திரம் என்ற அர்த்தத்தில். ஆனால் மைய்யக்கொள்கையை கைவிடாமல் இந்திய வகை ஜனநாயகத்தில் அரசியல் செய்ய அநாகரீக அரசியல் செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை சிறிதளவும் புரிந்து கொள்ளாமல் ஞானி கலைஞரை கண்டமேனிக்கு விமர்சனம் செய்வதற்கு ஒரே காரணம் தான் இருக்கமுடியும். எதிர்மறை புகழ்(notorious) நாட்டம். பிராமணர் அனைவருக்குமே ஆரியக்கொழுப்பு உண்டென்று சொல்வதிற்கில்லை. ஞானிக்கும் அது இல்லை. ஆனால் அவருக்கு ஆரியக்கொழுப்பு இருக்கிறது என அவதூறு சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. ஏனெனில் அடாவடி விமர்சனம் செய்ய அவருக்கு உரிமை தந்த கருத்து சுதந்திரம் எனக்கும் அவதூறு கிளப்ப உரிமை தந்துள்ளது. கருத்து சுதந்திரத்தை அவர் கேவலமாக பயன்படுத்துவதை நிறுத்தும் வரை நான் விடாமல் சொல்வேன் அவருக்கு ஆரியக்கொழுப்பு உள்ளது என்று.

Anonymous said...

arumaiyana vaatham vaal payyan.
lucky I didn't expect this from you.
ungal ezhuthil mithaminjiya anavam therihirathu.Kalainrin mel ulla abhimanathal nadunilai thavari vitteergal.

Anonymous said...

"உங்கள் நடவடிக்கைகள் தான் இப்போது சந்தேகத்துக்குரியதாக மாறிவிட்டது. உங்கள் ஓ பக்கங்களை வாசிக்கவே வர வர அருவருப்பாக இருக்கிறது. "

லக்கி நீங்கள் எழுதிய இந்த வார்த்தைகள் உங்களுக்கும் பொருந்துகிறது!!!!
நீங்கள் வளர்ந்து விட்டே பிளாக்கர்.உங்கள் கருத்துக்களை,கேள்விகளை நாகரீகமான முறையில் வெளியிட்டுருக்கலாம். உங்கள் எழுத்தில் ஆணவம் குடிகொண்டு விட்டது. எல்லாம் விகடனுக்கே வெளிச்சம்

உங்கள் பதிவில் நான் இட்ட இடுகைகள் வராததால் இங்கு கருத்தை பதிகிறேன்

Anonymous said...

"கருத்து சுதந்திரத்தை அவர் கேவலமாக பயன்படுத்துவதை நிறுத்தும் வரை நான் விடாமல் சொல்வேன் அவருக்கு ஆரியக்கொழுப்பு உள்ளது என்று"

ரிபிட்ட்டே...............

Anonymous said...

சரியாகச்சொன்னீர்கள் வால்பையன்.

லக்கியின் பதிவில் இட்ட பின்னூட்டம் இங்கும் :

லக்கி சார்,

திமுக அபிமானிகளுக்கு நிச்சயம் எரிச்சல் கொடுக்கும் தான் இந்தவார ஓ பக்கங்கள்! என்ன செய்வது?

ஞானி அவர்கள் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு பதில் எழுதிவிட்டு அவர் யோக்கியதை பற்றி கேள்விகள் கேட்டால் சிறப்பாக இருந்திருக்கும்.

தவிர்த்து, ஞானி அவரளவில் அயோக்கியர் உங்கள் தலைவர் நாட்டளவில் அயோக்கியர் என்ற ஒரு வரியைச்சொல்ல இவ்வளவு எழுதவேண்டிய அவசியமில்லை!

ஒரு தமிழ்நாட்டின் குடிமகனுக்கு இயல்பாக எழும் கேள்விகளே இவை. ஞானி கேட்டுவிட்டார் என்பதால் அவை உண்மைக்குக் புறம்பானவை அல்ல. நீங்கள் எழுப்பிய கேள்விகள் சரியென்றே வைத்துக்கொண்டால், எள்முனையளவும் குற்றமற்ற ஒரு குடிமகன் தான் ஆள்பவரை கேள்வி கேட்டவேண்டும் என்ற உங்கள் உயர்ந்த உள்ளம் புரிகிறது !

உங்கள் விருப்பப்படி, பாவம் செய்யாதவர்கள் முதல் கல்லை எரியும் காலம் வரக்கடவதாக!

அதுவரை, ஞானி அவர்கள் நீடூழி வாழட்டும் !

அன்புடன்
குரு

வால்பையன் said...

//Anonymous said...
வால்பையா ... உன்னை பாராட்டுகிறேன். எடுத்துகிட்ட விசயத்துல ஸ்ட்ராங்கா இல்லன்னா இப்படி எல்லா கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது//

மிக்க நன்றி அனானி,
இந்த வார்த்தைகள் என்னை மேலும் புத்துணர்ச்சியோட வாதம் செய்ய உதவுகிறது,
மீண்டும் நன்றி

வால்பையன் said...

//.பின்ன உப்பு சப்பு இல்லாத ரஜினிகாந்த் விஷயத்துக்கு எவரு ரெண்டு பதிவ குமுதத்துல போடுவாரா.... //

ரஜினி ஒகேனக்கல் பிரச்சனையில் பேசியதை ஞானி கட்டம் கட்டி பெரிதாக்கவில்லை.
குசேலன் ரசிகர்களால் நிராகரிக்கப் பட்டபோதும், திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்டஈடு கேட்டு போராடும் போது தான் அதை பற்றி எழுதினார்.

அதன் காரணம், மக்களுக்கு புத்தி வந்து விட்டது, நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டு கொண்டிருக்க அவர்கள் தலையாட்டி பொம்மை இல்லை என்பதை சுட்டி காட்ட

//ஆட்சிக்கு வரதுக்கு முன்னாடியே லவுட்டுற வேலைய பாகுரறு...இன்னும் ஆட்சிய குடுத்துட்டா என்னவெல்லாம் நடக்கும்.//

விஜயகாந்த் ஒரு கோமாளி என்று முதலிலேயே சொல்லிவிட்டேன்.
கூட இருக்கும் அல்லகைகள் ஏத்தி விடுவதை நம்பி நாசமாய் போன அரசியல்வாதிகள் பெயரில் விஜயகாந்த் பெயரும் வரும் பாருங்கள்.

//அதற்கான ஆதாரம்? அப்புறம் இவருக்கும் சுப்ரமனிய சுவாமிக்கும் என்ன வித்தியாசம்.....//


ஞானி சொல்லவேண்டாம் அடுத்த பின்னூட்டத்தில் நானே கேட்கிறேன்.
உடன்பிறப்புகள் பதில் சொல்லட்டும்

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

மிகவும் அருமையாக உண்மையான கருத்துக்களை கூறியிருக்கிறீர்கள் !
பாராட்டுக்கள் !
அந்த கூட்டம் கேள்விக்கு பத்தி கூறாது ! எதிர் கேள்வி கேட்கும் !
நீங்கள் கூறியுள்ளதுபோல் எப்போது அந்த கடிவாளத்திலிருந்து மீண்டு வரப்போகிறார்களோ ?

வால்பையன் said...

சுடுகாட்டு ஊழல் வழக்கில் தம்மாலேயே வழக்கு தொடரப்பட்ட முன்னாள் எதிர்கட்சிகாரரை தமது கட்சியில் இணைத்து கொண்டது?
(உங்கள் கட்சியில் இருந்தால் குற்றங்கள் மன்னிக்கப்படுமா)

ஆட்கடத்தல் வழக்கில் ஈரோட்டு கைத்தறி துறை அமைச்சர் பதவியை பிடுங்கியது?
(கட்சியை விட்டே அல்லவா தூக்கியிருக்க வேண்டும்)

உறவினருக்கு சிபாரி செய்ததால் இன்னொரு பெண் அமைச்சரின் பதவியை பறித்தது
(இவருக்கும் மேலே சொன்னதை தானே செய்திருக்கவேண்டும்)

முதுகெலும்பை உடைத்தாலும் கூட்டு குடிநீர் திட்டத்தை விடமாட்டேன் என்று சூளுரைத்து விட்டு பின் பல்டி அடித்தது, தேர்தலுக்கு பின் பேசுவோம் என்று சொல்லிவிட்டு அதை அடியோடு மறந்து போனது.

சேது சமுத்திர திட்டத்தால் பயன் தமிழ்நாட்டுக்கா இல்லை டி.ஆர்.பாலுவுக்கா என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல் இருப்பது.

மீனவர்கள் பிரச்சனைக்காக கட்ச தீவை இன்னும் மீட்காமல் இருப்பது

இந்தியாவிலேயே இருண்ட மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது.

குடும்ப சண்டைக்காக மதுரையில் அநியாயமாக இரண்டு பேர் உயிரை வாங்கியது

இலவச தொலைக்காட்சி, ஓட்டு வாங்க ஒரு வகையான லஞ்சம் என்று தேர்தல் கமிஷன் கூறியும், அதை திரும்ப பெறாமல் இருப்பது.
(எங்க வாங்குறது, எல்லாத்தையும் தான் வித்து புட்டாங்க்களே)

தமிழ்நாடு முழுவதும் முடிக்கப்படாமல் இருக்கும் சாலைபணிகள்.

மின்சார தட்டுப்பாடு இருப்பது தெரிந்தும் மாநாட்டுக்கு வரிசையாக ட்யுப்லைட், சீரியல் செட் போட்டு கலக்குவது.

இன்னும் ஆழமாக நோண்டினால் எல்லா குப்பைகளும் வெளியே வரும்
முதலில் இதற்கு பதிலளிக்கட்டும் உடன்பிறப்புகள்

பதில் இல்லையா
நான் சறுக்கல்களை பட்டியலிட்டேன்
நீங்கள் சாதனைகளையாவது பட்டியலிடுங்கள்

நாங்களும் தெரிந்து கொள்கிறேன்

வால்பையன் said...

//panaiyeri said...
ஞாநி தான் கேட்கும் கேள்விகளுக்கு
a) விடை தேடுகிறாரா ?
b) காசு வாங்குகிறார ?( பத்திரிகையில் வெளியிடுவதற்கு ).//


சேது திட்டத்தில் பல இடங்களில் உள்ள ஓட்டைகளை தமிழகத்துக்கு வெளிபடுத்தியது அவரே.
தகவல் அறியும் சட்டத்தில் எவைகளுகேல்லாம் பதில் சொல்ல மறுக்கிறார்கள் என்பதை மக்களுக்கு சொல்வதும் அவரே.

மக்களுக்காக நாடாளுமன்றத்தில் கேள்வி கேக்கவே அமைச்சர்கள் காசு வாங்குகிறார்கள், அந்த அமைச்சர்களையே கேள்வி கேக்க ஞானி காசு வாங்கினால் தவறா என்ன?

வால்பையன் said...

வாங்க மோகன் சார்!

கருத்து சுதந்திரத்தின் எல்லை எதுவென்று எனக்கு தெரியவில்லை.
ஞாநி, நாட்டுக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்கிறார் தவிர. நீங்கள் ஏன் கோழிக்கறி மட்டுமே சாப்பிடுகிறீர்கள் என்று கேட்பதில்லை.

ஞாநி ஆசைப்படுவது எதிர்மறை புகழுக்கேன்றால், ஞானியை எதிர்த்து பதிவிடுவது என்ன புகழுக்கு?

ஞாநி கேட்டதில் என்ன தவறு என்றால், பார்ப்பான் ஊடுருவல் என்கிறார்கள்.
ஒரு திராவிடன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அதை கேட்க எவனுக்கும் துணிவிருக்காது, அதே நேரம் ஒரு பார்ப்பானும் கேட்க்ககூடாது.

ஒரு காலத்தில் பார்ப்பானின் கையில் இருந்த அதிகாராம் இன்று யார் கையில் இருக்கிறது.

நான் ஆரியன் ,திராவிடன் என்ற வார்த்தைகளை வெறுக்கிறேன்
மனிதனாக வாழவே ஆசைப்படுகிறேன்.

வால்பையன் said...

//Anonymous said...
arumaiyana vaatham vaal payyan.
lucky I didn't expect this from you.
ungal ezhuthil mithaminjiya anavam therihirathu.Kalainrin mel ulla abhimanathal nadunilai thavari vitteergal.//

நன்றி அனானி,
சிபி ராஜன் என்ற கதையுண்டு.
படிக்கும் போது சொல்லி கொடுத்திருப்பார்கள்.
ஆனால் இந்த ராஜனுக்கு இருந்த பிள்ளை பாசத்தால் இரண்டு குடும்பங்கள் தெருவுக்கு வந்துவிட்டதே

வால்பையன் said...

//உங்கள் பதிவில் நான் இட்ட இடுகைகள் வராததால் இங்கு கருத்தை பதிகிறேன்//

நன்றி அனானி,
வந்துவிடும் என்று நம்புவோம்

வால்பையன் said...

இது அண்ணன் லக்கிலுக்கின் இந்த பதிவிற்கு நான் எழுதிய பின்னூட்டம்.
அங்கே இருக்கும் தொழில் நுட்ப பிரச்சனையால் இது வெளிவராமலும் போகலாம்.
எனக்கு ஞாபகம் இருக்கட்டுமேன்னு இங்கேயும் போட்டுகிறேன். ஹீ ஹீ


கார்டூன் வசனம் சூப்பர்

//நாம் கொடுக்கும் காசு கேபிள் டிவி காரனுக்கு தான், சேனலுக்கு இல்லை) சன், கலைஞர், ஜெயா போன்ற சேனல்களுக்கு இந்த விளம்பர வருவாய் தான் ஆக்சிஜன்.//

சன் டிவீ காசு கொடுத்து பார்க்கும் சேனலாக மாறிவிட்டதாக எங்க வீட்டுக்கு கேபிள் போடுபவர் சொன்னாரே

//சன் (30%), கலைஞர் (21%), சன் மியூசிக் (4%), விஜய் (3%), இசையருவி (2%), ஜெயா (2%), ஜெயா மேக்ஸ் (1%), சன் நியூஸ் (1%), ராஜ் (1%), மெகா (1%)//

நடந்து முடிந்த மாராத்தான் ஓட்டத்தில் ஒருவர் இறந்து விட்டார். அதை கலைஞர் டிவியில் சொல்லவில்லை, அப்படியானால் அது ஒருதலை பட்சமானதா, இல்லை செய்தியை செய்தியாகவே சொல்கிறதா

//இன்னும் இரண்டு ஆண்டுகளில் சன் தொலைக்காட்சியிடம் புதிய படமே இருக்காது என்ற நிலை இருக்கிறது.//

அதான் அவுங்களே படம் எடுக்க போராங்களாமே, அப்புறம் எதுக்கு வெளியே வாங்கனும்

இந்த பதிவு கூட கலைஞர் டிவியை ஒருதலை பட்சமாக ஆதரிப்பது போல் இருக்கிறதே.
சன் டிவி வீட்டில் இருக்கும் பெண்களை மையமாக கொண்டு நிகழ்ச்சிகளை உருவாக்கியது, உதாரணம் தொடர்ச்சியாக வரும் சீரியல்கள்
ஆனால் விஜய் டிவி அதை நிராகரித்து முடிந்தவரை சிறந்த நிகழ்ச்சிகளையே ஒளிப்பரப்பி வருகிறது, இது அனைவரும் அறிந்ததே.

சன்டிவி, கலைஞர் டிவி சண்டையில் ஏன் விஜய் டிவியை இருட்டடிக்க வேண்டும்.

விஜய்டிவியை பார்த்து மற்ற தொலைக்காட்சிகள் காப்பியடித்த நிகழ்ச்சிகளின் பெயர்கள் வேண்டுமா

Anonymous said...

Superb Post Valpaiyan,

நெத்தியடி to லக்கிலுக்.

--
Raji.

சீனு said...

லக்கிக்கு ஏதோ டெக்னிகல் ப்ராப்ளமாம். மப்புல பின்னூட்டமிடிருந்தா தான் கரீக்டா ரிலீஸ் பன்னமுடியுமாம். அதனால் அங்க மூன்றாவது முறையா போட்ட பின்னூட்டத்தை இங்க ரிலீஸ் பன்னுறேன்....

/////
இது தான் நான் போட்டிருந்த கமென்ட். இப்போவாச்சும் வந்திருந்ததா?

"சே! நான் கூட ஏதோ ஞாநியின் கேள்விகளுக்கு கலைஞர் சார்பா பதில் சொல்றீங்களோன்னு நெனச்சு ஏமாந்திட்டேன்...பதில் கேள்விகள் தானா???

அந்த கேள்விகளுக்கு பதில் வந்திருந்தாத்தான் நாம் உருப்பட்டிருப்போமே!!!"

மப்புல கமென்ட் போடுறது, ஓட்டு போடுறது எங்க வேலை இல்லை.

அது ஏன் என்னுடைய சில கமென்ட் 'மட்டும்' உங்களுக்கு ரீச் ஆகலைன்னு தெரியல...இது எங்க பீல்டுல நாங்களும் இப்படித்தான் பொய் சொல்லுவோம். "சார்! இன்னும் மெயில் வரலை. ஈ தின்க் தெரெ இச் அ ப்ரொப்லெம் நித் தெ மைல் செர்வெர்".

சீனு.
/////

குசும்பன் said...

// நேர்மையான அரசியல்வாதிகளையா!//

அட்ரஸ் பிளீஸ் அட்லீஸ் பேராவது பிளீஸ்!!!

குசும்பன் said...

வால்பையன் ரொம்ப சூடா இருக்குது இந்த பக்கம் ஏதும் நான் ஒதுங்கும் படி இடம் ஏதும் இருக்கா?

Anonymous said...

அந்த அனானி எட்டு ஆண்டுகள் குடித்துவிட்டு அதை எப்படி விட்டார் என்று தெரியவில்லை. நான் குடித்த காசைச் சேர்த்து வைத்திருந்தால் சென்னையில் தற்போதைய மதிப்பில் முப்பது லட்ச ரூபாய் பெறுமான அபார்ட்மென்ட்டுக்கு சொந்தக்காரனாகியிருப்பேன். தவிர, குடித்திருந்த நேரங்களில் செய்திருக்கக்கூடிய வேறு வேலைகளின் பண மதிப்பு கணக்கிட முடியாதது. எல்லாம் தெரிகிறது. கடை இருப்பதால் குடித்தே ஆக வேண்டியிருக்கிறது.

வால்பையன் said...

இந்த பின்னூட்டமும் அங்கே போட்டதே! அதுவே இங்கேயும்
ஏனென்றால் தொழில் நுட்ப பிரச்சனை எப்போது வேண்டுமானாலும் வரலாம்


//தற்போதைய டி.டி.எச்., முறையிலான ரேட்டிங்கில்//

இதற்கும் சாதாரண முறையில் எடுக்கும் ரேட்டிங்குக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் மட்டும் கருத்து கணிப்பு நடத்தி விட்டு மொத்த தமிழகமும் இதை தான் நினைக்கிறது என்று சொல்வார்களே அது மாதிரியா?
டி.டி.எச் சேவையை தமிழ்நாட்டில் தொலைகாட்சி பெட்டி வைத்துள்ள எத்தனை பேர் உபயோகிக்கிறார்கள்.
கொசுறு கேள்வி: தினமலர் சொல்வதெல்லாம் உண்மையா

//தாம்பரத்தை தாண்டினாலேயே விஜய் டிவியை ஏதோ இங்கிலீஷ் டிவி என்ற ரேஞ்சுக்கு பார்க்கிறார்கள். //

//இது உண்மைதான். கிராமங்களில் விஜய் டிவி யா... அப்படின்னா ... என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். விஜய் டிவி படித்த பட்டனத்துகாரர்கள் மத்தியில் மட்டுமே எடுபடுகிறது//

நீங்களெல்லாம் தமிழ்நாட்டில் தான் இருக்குகிறீர்களா, கிராமத்து பக்கமெல்லாம் சென்றுரிக்கிறீர்களா?

தற்போது ஸ்டார்விஜய் என்று அழைக்கப்படும் விஜய் டி.வி. சன் டி.வி காலத்திலேயே விஜய் மல்லையாவால் கோல்டன் ஈகிள் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் குதிரை ஓடிவரும் லோகோவோடு விஜய் ஆக மாறியது.

கேபிளில் படம் காட்டி கொண்டிருந்தவர்கள் சேட்டிலைட் சேனலை காட்டிய புதிதில் ராஜ் டி.வி கூட கிடையாது. மீதமிருந்த இடத்தை சன் டி.வி வேகமாக சன் மியூசிக் மற்றும் சன் மூவீஸ் என்று நிரப்பி கொண்டது. அந்த காலக்கட்டத்தில் விஜய் டி.வியின் நிகழ்ச்சிகள் கொஞ்சம் மந்தமாக இருந்தது உண்மைதான்.

உலகெங்கும் பழம் திண்ணு கொட்டை போட்ட ஸ்டார் குழுமம் விஜய் டிவியை வாங்கியவுடன் சூடு பிடித்தது. ஒரு நண்பர் சொல்லியது போல் கேபிள் சர்வீஸ் நடத்திய ஆளும் கட்சியினர் அதை ஒளிபரப்பாமல் இருட்டடிப்பு செய்தது மறுக்க முடியாத உண்மை.

கழகத்தின் பலம்மிக்க உடன்பிறப்புகள் தான் உண்மையில் கழகத்தின் தூண்கள்.
ஒவ்வொரு ஊரிலும் பெரிய பெரிய தொழில்கள் கழக உடன்பிறப்புகளின் கையில் தான் இருக்கும். பொது மக்கள் அவர்கள் சொல்வதை தான் கேட்க வேண்டும், காட்டுவதை தான் பார்க்க வேண்டும்

ரமேஷ் வைத்யா said...

Me the 100ththu
-ramesh vaidya

Tech Shankar said...

Me the 101st Person.. Hi.. I enjoyed it.

தொடர்புடைய சுட்டியாக நான் கருதுவது


எழுத்தாளர் ஞாநி , மு.க. மற்றும் ரீமாசென்

Krishnan said...

லக்கி லுக் தேவையில்லாமல் ஞானி-யை சாடுகிறார் என நினைக்கிறேன். உங்கள் rebuttal superb.

சீனு said...

இன்னும் கூட லக்கிக்கு நான் அனுப்பிய மூன்றாவது பின்னூட்டம் கிடைக்கவில்லை போலிருக்கு. இங்கே ஏன் புலம்பறேன்னா, அங்கு அதற்கு கூட முடியாதே. விஜய் டி.வி., மக்கள் தொலைக்காட்சி மாதிரி தெரியாதே.

வால்பையன் said...

வருகைக்கு நன்றி ராஜி என்ற அனானி

குசும்பன்!
கூகுளில் நேர்மையான அரசியல்வாதி என்று தேடிப் பார்த்தேன்.
ரிசல்ட் ஜீரோ என்று வந்தது

//நான் ஒதுங்கும் படி இடம் ஏதும் இருக்கா?//

என் மனதை விட பாதுகாப்பான இடம் வேறொன்று இருக்கா என்ன?

வால்பையன் said...

வருகைக்கு நன்றி அனானி

தவறு செய்கிறோம், விட வேண்டும் என்று எப்பொழுது ஆசை பட ஆரம்பித்து விட்டோமோ, அப்பொழுதே அதிலிருந்து வெளி வரும் தகுதியும் நமக்கு வந்து விட்டது.
ஆக்கபூர்வமான வேலைகளில் இனி கவனம் செலுத்துவோம்

Anonymous said...

விட்டோமோ, அப்பொழுதே அதிலிருந்து வெளி வரும் தகுதியும் நமக்கு வந்து விட்டது.ஆக்கபூர்வமான வேலைகளில் இனி கவனம் செலுத்துவோம்"

பிள்ளையையும் கிள்ளிவிட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுற உங்க அதிமேதாவிதனத்த நிநைச்சா ரொம்ப சிரிப்பா இருக்குங்க...முதல்ல ஞானி புகழ் படுறத விட்டுட்டு ஆக்கபூர்வமான வேலைய நீங்க பாருங்க...

ஆமா யாரு அந்த "லக்கிலுக்"...சும்மா எல்லோருமா சேந்து இந்த குத்து குத்துறீங்க...
நான் "லக்கிலுக்"கும் இல்ல "பக்கிலூக்"கும் இல்ல.....பாவம் அவர கொஞ்சம் விட்டு வையுங்க...வர்ட்ட்ட்ட்டா.....

வால்பையன் said...

//நான் "லக்கிலுக்"கும் இல்ல "பக்கிலூக்"கும் இல்ல.//

எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல டைப்பாவுள்ள இருக்கு

Iyappan Krishnan said...

வேஸ்ட் ஆஃப் டைம்.

கேள்விக்கு கேலியும், இன்னும் பிற கேள்விகளும் மட்டுமே விடையாக அமையும் என்று தெரியும்போதில் இதைக் கேட்பதில் என்ன பயன்

Anonymous said...

வால்,

கலைஞரிடம் கேள்வி கேட்டால் கீழ்க்கண்ட 4 பதில்களில் ஏதாவது ஒன்று உறுதி.

1. நீ ஐயர், செட்டியார் போன்ற ஜாதி சொல்லித் திட்டும் கீழ்த்தரம்.
2. நாங்கள் எரித்தது அரசியல் சாசனமல்ல ஜெராக்ஸ் காப்பிதான் என்ற பிளேட்டு திருப்புதல்
3. எதுகை மோனையுடன் கூடிய வார்த்தை ஜாலம்.
4. அவஞ் செய்யாததையா நான் செய்தேன் போன்ற மட்டைவாதம்.

ஆகவே ஞானி செய்வது வெ வே.

வால்பையன் said...

யாரது
தலை ரமேஷ் வைத்யாவா!
வெறும் நூறு தான் போட்ருகிங்க போதுமா!
கூட ஒரு ஐநூற சேத்துகோங்க!
அப்போ தான் கின்னுன்னு இருக்கும்

george said...

அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

அவர்களிடம் எல்லாம் கேள்வி கேட்டால் பதில்வராது. ஆனால் நமக்கு நாமே விழிப்புணர்வு ஏற்படுத்தி கொள்ளலாம்.

மொத்தத்தில் எல்லாம் கழுதை விட்டைகளே... இதில் முன் விட்டை சிறந்ததா பின்விட்டை சிறந்ததா என்று ஆராய்ச்சி பண்ணுவது வீண்வேலை.

ஆனாலும் ஞானி வழக்கமான விட்டை ஆராய்ச்சியை விட்டு விட்டு கொஞ்சம் அதிகமாக குசேலனை (ரஜினியை) தாக்கிவிட்டார். அது தான் அவரை தனி மனித தாக்குதல் முத்திரை குத்திவிட்டது.....

Anonymous said...

'''சத்தியமா எனக்கு அவ்ளோ அரசியல் அறிவு இல்லைங்கண்ணா''

Mr.வால்பய்யன்,
நீங்க காமெடி கீமடி பண்ணலியே...

please mind your work instead supporting loose Gani.

Sathappan

Blogger said...

ஞாநி எழுதியதில் எந்த ஒரு தவறும் இல்லை..

Anonymous said...

எனக்கு ஒன்று புரியவில்லை, காமராஜருக்கு பிறகு யார் நல்ல அரசியல்வாதி? ஞானி போன்றவர்கள் ஏன் அதை பற்றி எல்லாம் பேசுவது இல்லை ? தனி நபர் தாக்குதலால் எந்த பயனும் இல்லை, ஞானி போன்றவர்கள் இது போன்ற வேலையே விட்டுவிட்டு வேறு உருப்படியான வேலையை பார்க்கலாம்

george said...

http://www.youtube.com/watch?v=ssTdyW6YuDk&feature=related

RATHNESH said...

உங்கள் கருத்துக்கள் வெளிப்படையாக இருக்கின்றன. இத்தனை பேரின் கேள்விகளுக்கும் பதில் தந்துள்ள பொறுமை உங்கள் கருத்தின் உறுதியைக் காட்டுகின்றது. வாழ்த்துக்கள்.

ஞாநி ஒரு சுதந்திர எழுத்தாளர் என்றாலும் அவர் சார்ந்துல்ள பத்திரிகையின் நோக்கத்துக்கும் கொஞ்சம் தீனி போட வேண்டிய அவசியம் உள்ளவராக இருக்கலாம். மற்றபடி அவருடைய கட்டுரைகளின் பன்முகப் பார்வை பாராட்டுக்குரியதே.

//ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வை ஞாநி நோன்டியதில்லை.
வயதான காலத்தில் தன்னையறியாமல் மூத்திரம் போகும் வயதில் கூட பொது வாழ்வில் ஈடுபட வேண்டுமா என்ற கேள்வி இருந்ததே தவிர, கருணாநிதி ஒய்வு எடுக்க போவதால் ஞானிக்கு யாரும் கட்சியின் தலைவர் பதவி தந்துவிடப் போவதில்லை.//

கருணாநிதியை ஓய்வெடுக்கச் சொல்வதற்கு ஞாநி, அவருடைய கொள்கைத் தடுமாற்றங்களைக் காரணமாக்கி இருந்தால் விமர்சனம் வந்திருக்காது. கழிப்பறை மேட்டர் விஷயத்தில் அவர் மீறியது கருத்துச் சுதந்திர வரம்பை.

கருணாநிதி ஓய்வெடுக்கப் போனால் யாருக்கு லாபம்; எந்த இடத்தில் இருந்து கொண்டு அதனை ஞாநி சொன்னார்; அவர் எந்த இனம் என்று 1+1=2 கணக்கினைத் தான் கருணாநிதி மீது அபிமானம் கொண்டோர் போடுவார்கள்.

Kumky said...

கொஞ்ஞம் லேட்டா வந்து பாத்தா.......அடேங்கப்பா...பின்னூட்டமே பெறிய்ய்ய்ய்ய்ய வாலா இல்ல இருக்கு..இதுக்கெல்லாம் பதில் சொல்லிக்க எம்புட்டு கட்டிங் செலவாச்சுதோ..பாவம்..வாலூ.

rapp said...

பாமரனைப் பத்தி சொல்லி இருக்கீங்களே, அது நூத்தில் ஒரு வாக்கியம். ஆனா ஞாநி அவர்களைப் பற்றி அதே வகையில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமீரை குடைகிற குடைச்சலில் ஒரு பகுதியைக் கூட விக்கரவாண்டியிடம் காட்டவில்லை. இதை கேட்டால் நீங்கள் ஏன் கம்பேர் பண்ணுகிறீர்கள் என்றால், சார்புநிலைங்கர(பார்ஷியாலிட்டி) வார்த்தயயே சொல்வழக்கிலிரிந்து எடுத்திடனும். என்னைக் கேட்டால் அவர் கூறும் பல விஷயங்கள் நியாயமாக இருந்தால் கூட அது மக்களிடம் நம்பகத்தன்மையை பாமரன் அளவிற்கு ஏற்படுத்தாதற்குக் காரணம் அவரின் இந்த போக்குத்தான். பல விஷயங்களில் மேம்போக்காக பொறுப்பில்லாமல் இவர் சொன்ன கருத்துக்கள், முக்கியமான அணு ஒப்பந்த விவகாரம் போன்றவற்றில் தேவையில்லாமல் அப்துல் கலாம் அவர்களை தனிப்பட்ட முறையில் ஒரு சோப்லாங்கியாக வர்ணித்தது, இதெல்லாம் உண்மைக் கூற்றை மக்களிடம் கொண்டு சேர்க்காவண்ணம் எரிச்சலை ஏற்படுத்தி திசைதிருப்புகிறது. இவரா தனிப்பட்ட முறையில் விமர்சிக்காதவர். நீங்கள் இவருடைய அத்துணை எழுத்துக்களையும் சமீபத்தில் படித்தீர்களா? கலைஞர் அவர்களின் குடும்ப வாழ்க்கைப் பற்றி பலமுறை டபுள் மீனிங்கில் அடித்துவிட்டுள்ளார். சாதாரணப் பெண்ணான எனக்கே பல சமயங்களில் இப்படி எதிராளியை நக்கல் செய்ய நன்றாக வரும்போது, இவர் செய்வதில் ஆச்சர்யமில்லை. இதை செய்யாதவர் எவருமில்லை எனலாம்(குறைந்தபட்சம் எதிர்த்தாக்குதல் என்ற அளவிலாவது). ஆனால் எல்லாவற்றிலும் திசைதிருப்பும் போக்கை சமீபமாக இவர் கையாண்டு வருகிறார். கிரண்பேடியை அப்துல்கலாமின் ஆளுமையோடு ஒப்பிட்டு நக்கலடிப்பது தவறில்லையா? ஒரு விஞ்ஞானியை விட காவல்துறை உயரதிகாரிக்கு ஆளுமைத்திறன் அதிகமாகவே இருப்பதுதானே இயல்பு? இருவரும் ஒடுக்கப்பட்ட சமூகப்பின்னணி கொண்டவர்களின் நம்பிக்கையாக திகழும்போது, விஞ்ஞானியையும் போலீஸ் அதிகாரியையும் ஒப்பிடும் சிறுபிள்ளைத்தனத்தை வாசகன் அடையாளம் கண்டுகொள்ள மாட்டானா? அவனுக்கு, பின்னர் இவர் எழுதும் பல விஷயங்களை படித்து உணரும் தன்மை குறைந்து, இவர் போங்கடிப்பவர் என்றுதானேத் தோன்றும்? பாமரனும் அப்துல் கலாம் அவர்களை நக்கலடித்துள்ளார். ஆனால் இப்படி அல்ல. அதில் துவேஷம் இருக்காது. ரசிக்கும்படி இருக்கும்.
ஞாநி சார்புநிலை எடுத்துவிட்டால் வாசகனும் சார்புநிலை எடுக்கத்தான் செய்வான். வாசகன் சார்புநிலை எடுக்கும் சூழ்நிலையை இவராக வலிய ஏற்படுத்திக்கொடுத்து விட்டார்.

R.Gopi said...

வால்பையன் said...

பகுத்தறிவு என்ற பெயரில் அரசியல் நடத்தும் கழகத் தலைவரின் தொண்டர்கள் கொஞ்சம் உண்மையான பகுத்தறிவு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
அப்படி ஒருவேளை அவர்களுக்கு தெரியும் என்றால் எனக்கும் சொல்லி கொடுக்கட்டும்
-----------------------------------

Superrrrrrrrrrrrrrrrrrr

Itsdifferent said...

I think the bottom line is Mr MK has lost his shine. He is very weak now. There are real problems in the country people are facing, and all he can do is write kavithai, attend wedding/cinema functions.
1. Electricity - Big mess, how long will it take for him to change the minister or give the minister a team of professionals to resolve the issue, atleast take steps.
2. Fire in a building - all he can say is that they did not follow the rules? Where does the buck stop in TN? Isnt it, his office?
3. Is there any simple steps he took to avoid corruption in people's basic needs?-Water, home approvals, electricity etc? He has been CM for how many years?
We can keep writing, but again bottom line is he has failed in every step of the way.
How long will it take for him to repeal caste? a good set of folks can comeup with very good recommendations, and if he has any backbones, he should implement.
There are so many things. He should gracefully resign, let Stalin or someone step in and start making real changes in TN, towards our 2020 vision.

வால்பையன் said...

//முதல்ல ஞானி புகழ் படுறத விட்டுட்டு ஆக்கபூர்வமான வேலைய நீங்க பாருங்க...//

எனது 98 பதிவுகளில் எத்தனை பதிவுகளில் நான் ஞாநி புகழ் பாடியதை நீங்கள் பார்த்தீர்கள்,
ஆக்கபூர்வமான வேலையை நீங்கள் பார்த்தால் நாங்கள் ஏன் உங்களை சொறிகிறோம்.

வால்பையன் said...

வருகைக்கு நன்றி பனையேறி!

நீங்கள் சொல்வதும் சரி தான்.
ஆனால் ரஜினி மேட்டரில், ஒகேனக்கல் விசயமும் குசேலன் தோல்விக்கு ஒரு காரணம் என்று சுட்டி காட்ட போய் அது ஓவராக போய் விட்டது.

வால்பையன் said...

சாத்தப்பன்!
நான் ஞாநிக்கு ஆதரவு கொடி ஒன்றும் காட்டவில்லை!
ஞானியை கேள்வி கேக்கும் முன் ஞாநி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என்று தான் கேட்கிறேன்

வால்பையன் said...

வருகைக்கு நன்றி ரிபெல்

அனானி

//காமராஜருக்கு பிறகு யார் நல்ல அரசியல்வாதி? ஞானி போன்றவர்கள் ஏன் அதை பற்றி எல்லாம் பேசுவது இல்லை ? //

எதை பற்றி பேச சொல்கிறீர்கள் அனானி!
காமராஜர் இவ்வாறு ஆட்சி புரிந்தார் என்று சொன்னால் இவர்களெல்லாம் திருந்திவிடுவார்களா, இவர்களும் அவர் காலத்திலேயே அரசியலில் இருந்தவர்கள் தானே,

கடைசியா சொன்னிங்களே அது வேணா சரி,
ஞாநி செவுடன் காதுல சங்கு ஊதுரத விட்டுட்டு உருப்படியா ஏதாவது செய்யலாம்.

வால்பையன் said...

வருகைக்கு நன்றி ரத்னேஷ்!

உங்கள் கருத்துகளுடன் நான் ஒத்து போகிறேன்!
சில விசயங்களை ஞாநி தவிர்த்திருந்தால் கருணாநிதி பதவியை ராஜினாமா செய்யவேண்டிய சூழ்நிலையே ஏற்பட்டிருக்கலாம்

வால்பையன் said...

//இதுக்கெல்லாம் பதில் சொல்லிக்க எம்புட்டு கட்டிங் செலவாச்சுதோ..பாவம்..வாலூ.//

ஒரு வாரமா காய்ச்சல்ல படுத்துட்டு இப்போ தான் எந்திருச்சிருக்கேன்.
கணக்கு வச்சிருக்கேன் மொத்தமா வர்ற ஞாயிறு போட்டு தாக்கிரலாம் .

வால்பையன் said...

வாங்க ராப்!

பாமரன் எனது நெருங்கிய நண்பர், அவரை பற்றி சொன்னால் அது முகஸ்துதி ஆகிவிடும் அதனால் தான் அவரை பற்றி எதுவும் பெரிதாக சொல்லவில்லை, மற்றபடி ஞாநி எனக்கு எந்தவகையிலும் பரிச்சியமில்லை.

ஞாநி என்ற பெயருள்ளதே தவிர, அவரை ஞானி என்றே ஏற்று கொண்டு தலையில் தூக்கிவைத்து ஆட நான் சாதாரண அரசியல் தொண்டன் அல்ல.

தவறிழைக்காத மனிதனே இல்லை, என்பது போல் ஞாநியும் முழு மனிதன் இல்லை, அங்கேயும் ஏற்க முடியாத சில கருத்துகள் இருக்கலாம், இங்கே என் வாதத்திற்கு காரணம் "என்ன கொடுமை ஞானி இது" என்ற பதிவுக்கு நான் போட்ட பின்னூட்டம் வரவில்லை, என்னுடையது போலவே சில நண்பர்களுக்கும்.

ஆக அந்த பதிவிற்கு எதிர் கருத்து இல்லையென்றால் ஞாநி கருணாநிதியிடம் கேட்ட கேள்விகள் அனைத்தும் பொய்யானது ஆகிவிடும், மற்ற விசயங்களுக்காக ஞானியை தூக்கி குப்பையில் போடலாம், ஞானியின் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாததால் தி.மு.காவினரை எங்கே போடலாம்

வால்பையன் said...

வாங்க கோபி!

பகுத்தறிவு என்பது இன்றைய அரசியலில் தேவைப்படும் வார்த்தைகளான பெரியார், அண்ணா போன்று மற்றொரு வார்த்தை இதற்கு அர்த்தம் எங்கிருந்து சொல்வார்கள்

வால்பையன் said...

வாங்க கோபிநாத்!

உங்க கேள்விகள் எல்லாமே நச்சுன்னு இருக்கு
பதில் கேட்ட அங்கிருந்து எதிர் கேள்வி தான் வரும்!
அப்புறம் ஸ்டாலின் வந்து மாத்துவாரான்னு சந்தேகமே வேணாம் உங்களுக்கு
அவர் வந்து நம்மளையெல்லாம் செமத்தியா முதுகுல மாத்துவார்.

பதவிக்கு ஆசைபடாத பேராசிரியர் கொஞ்சம் தகுதியிடு இருக்கிறார், அவரையும் நாற்காலி மாற்றி விட்டால் செய்வதற்கு ஒன்றுமில்லை

வால்பையன் said...

கோபிநாத் முடிந்தவரை தமிழில் எழுத முயற்சி செய்யுங்கள்,
நீங்கள் எழுதியதை படிக்க எனக்கு இன்னொருவர் உதவி தேவைப்படுகிறது.
தமிழ் எழுதிக்கும் லிங்க் கொடுத்துள்ளேன் மேலே,
தயவுசெய்து உங்கள் ப்ளாக்கையும் தமிழிலேயே எழுதவும்

rapp said...

நீங்க பாமரன் அவர்களுடைய நண்பரா? எனக்கு அவரோட எழுத்துக்கள் ரொம்பப் பிடிக்கும். நீங்கள் அடுத்தமுறை அவரை பார்க்கும்போது என் வணக்கத்தை தெரிவிக்கனும்னு கேட்டுக்கறேன். நன்றிங்க வால்பையன்

Sanjai Gandhi said...

ராப் தல இக்கட சூடுங்க்.. http://pamaran.wordpress.com/

rapp said...

சஞ்சய் ரொம்ப நன்றிங்க. ஆனா நான் ஏற்கனவே இந்தத் தளத்திற்கு சென்றிருக்கிறேன். வால்பையன் அவர்கள், அவருடைய நெருங்கிய நண்பர் என்ற காரணத்தால் என்னுடைய விஷசை தெரிவிக்கச் சொல்லிக்கேட்டேங்க. ரொம்ப ரொம்ப நன்றிங்க சஞ்சய்

Anonymous said...

// மோகன் கந்தசாமி said...
அடாவடி விமர்சனம் செய்ய அவருக்கு உரிமை தந்த கருத்து சுதந்திரம் எனக்கும் அவதூறு கிளப்ப உரிமை தந்துள்ளது. கருத்து சுதந்திரத்தை அவர் கேவலமாக பயன்படுத்துவதை நிறுத்தும் வரை நான் விடாமல் சொல்வேன் அவருக்கு ஆரியக்கொழுப்பு உள்ளது என்று.\\

இது நம்ப லக்கிலுக்குக்கும் பொருந்தும் தானே அப்ப அவருக்கு இருப்பது என்ன திராவிட கொழுப்பா!
;-))))))))))

வால்பையன் said...

ராப்

உங்களுக்கு அவரது அலைபேசி எண் வேண்டுமென்றால் மெயில் பண்ணுங்க

வால்பையன் said...

அனானி கேள்வியெல்லாம் சூடா தான் இருக்கு
அவர நேர்ல பார்த்தா இப்படி கேக்க மாட்டிங்க
பாவம் சாப்பிட்டே நாலு நாள் ஆனா மாதிரி ஒல்லியா இருப்பார்,
ஏற்கனேவே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன்.
இந்த மாதிரி உடல்வாகு உள்ளவர்களின் வயசை கண்டு பிடிக்க முடியாதென்று

george said...

//நீங்க பாமரன் அவர்களுடைய நண்பரா? எனக்கு அவரோட எழுத்துக்கள் ரொம்பப் பிடிக்கும். நீங்கள் அடுத்தமுறை அவரை பார்க்கும்போது என் வணக்கத்தை தெரிவிக்கனும்னு கேட்டுக்கறேன். நன்றிங்க வால்பையன் //

நானும்கேட்டுகிறேன் ...
http://panaiyeri.blogspot.com/

Sanjai Gandhi said...

// rapp said...

சஞ்சய் ரொம்ப நன்றிங்க. ஆனா நான் ஏற்கனவே இந்தத் தளத்திற்கு சென்றிருக்கிறேன். வால்பையன் அவர்கள், அவருடைய நெருங்கிய நண்பர் என்ற காரணத்தால் என்னுடைய விஷசை தெரிவிக்கச் சொல்லிக்கேட்டேங்க//

சில நாட்களுக்கு முன்பு அவர் அறைக்கு சென்றிருந்த போது இயக்குநர் ராம் கொண்டுவந்திருந்த சில குறும்படங்களை பார்த்துவிட்டு வெளியே வந்து பேசிக் கொண்டிருந்தோம்.. அப்போது பாமரனிடம்.. அண்ணே.. உங்களுக்கு பெண் ரசிகைகள் அதிகம் என்று சொன்னேன்.. அதற்கு அவர் முகத்தை பார்க்கனுமே.. :P

Itsdifferent said...

Thank you for your kind words Valpayyan.
I am trying to write in Tamil.
Its been almost 20 years I have been out of the country. I am not able to write that fluently, and seem to loose my thoughts. So I just put it out in English.
I know, its no excuse. I am trying.

வால்பையன் said...

சொல்லிவிடுகிறேன் ராப் மற்றும் பனையேறி

rapp said...

//சில நாட்களுக்கு முன்பு அவர் அறைக்கு சென்றிருந்த போது இயக்குநர் ராம் கொண்டுவந்திருந்த சில குறும்படங்களை பார்த்துவிட்டு வெளியே வந்து பேசிக் கொண்டிருந்தோம்.. அப்போது பாமரனிடம்.. அண்ணே.. உங்களுக்கு பெண் ரசிகைகள் அதிகம் என்று சொன்னேன்.. அதற்கு அவர் முகத்தை பார்க்கனுமே//

நான் நடுவுல ரொம்ப போர் அடிக்குதுன்னு குமுதம் படிக்காம இருந்தேன், இவர் எழுதறார்னு அக்கா சொல்லவும் திரும்ப படிக்க ஆரம்பிச்சேன். ஆனா பாருங்க, இவ்ளோ சீக்கிரம் அவர் முடிச்சுக்கிட்டார். அவர் ப்ளாகில் படிக்கிறது நல்லா இருந்தாலும், இதில்(குமுதம்) ஒரு வாரம் முழுக்க நடக்கிற விஷயங்கள் எல்லாத்தையும் கலந்துக்கிட்டி அவ்ளோ சூப்பரா நக்கல் கலந்து விமர்சிக்கறது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

rapp said...

ரொம்ப ரொம்ப நன்றிங்க வால்பையன்

வால்பையன் said...

புரிதலுக்கு நன்றி கோபிநாத்
http://www.google.com/transliterate/indic/Tamil
இந்த தளத்தில் தமிங்கிலிஷில் டைப் செய்தால் தமிழில் கிடைக்கும்
சில எழுத்து பிழைகள் வரலாம், நாளடைவில் சரியாகி விடும்

வால்பையன் said...

ராப்
பாமரனின் சிறப்பே சீரியசான விசயத்தையும் அவர் நகைச்சுவையுடன் சொல்வது தான்.
அவரின் சீரியல் பற்றிய கட்டுரையை படித்து ஒரு மாதம் நினைக்கும் போதெல்லாம் சிரித்து கொண்டிருந்தேன், இன்னும் நிறைய விசயங்கள்.

வெறும் எழுதுவது மட்டும் அவரது தொழில் அல்ல, வேறு பல சமூப பணிகளிலும் அவர் ஈடுபட்டு இருப்பதால் குமுதத்தில் அவர் நிறுத்தி கொண்டார் . அவரது தொகுப்புகள் ஏதேனும் வெளிவந்தால் உங்ககளுக்கு தெரிய படுத்துகிறேன்

g said...

வாலு கும்மி நீளுது.

வால்பையன் said...

கும்மியடித்து வாழ்வாரே வாழ்வர் மற்றோரெல்லாம்
பின்னூட்டம் எதிர்பார்த்தே காய்வார்

g said...

வால்பையன் said...
கும்மியடித்து வாழ்வாரே வாழ்வர் மற்றோரெல்லாம்
பின்னூட்டம் எதிர்பார்த்தே காய்வார்

வால்பையன் said...

நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு இப்படி கோபபடுரிங்க ஜிம்ஷா.
இன்னும் ரெண்டு தான் இருக்கு 150-க்கு வந்து குத்திட்டு போங்க

Tech Shankar said...

me the 150-th

Tech Shankar said...

Me the 150th.. congrats Arun The Hero.

Raman Kutty said...

//பகுத்தறிவு என்ற பெயரில் அரசியல் நடத்தும் கழகத் தலைவரின் தொண்டர்கள் கொஞ்சம் உண்மையான பகுத்தறிவு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
அப்படி ஒருவேளை அவர்களுக்கு தெரியும் என்றால் எனக்கும் சொல்லி கொடுக்கட்டு//

repeatey....!!!!!

Raman Kutty said...

வால் பையன், அருமை, இதை இதை , இப்படி ஒரு நடு நிலையான கருத்து உள்ள பதிவைதேடி எனக்கு அலுத்து விட்டது. கடைசியில் கண்டு படித்து விட்டேன். தங்களின் (தங்கள் குழுவினரின்) மொக்கைப்பதிவினிடையில்,அவ்வப்போது இது போன்ற நடு நிலையான தனிமனித சாடல்கள் இல்லாத, கருத்துள்ள பதிவுகளையும் எதிர்பார்க்கிறோம்.என் எனில், தங்களைப் போன்றவர்கள் சொல்லும் பொழுது அதன் தரம் மற்றும் சேரும் தொலைவு அதிகம். இதையே தான் நான் லக்கிலுக்கிடமும், அபி அப்பாவிடமும் எதிர்பார்த்தேன் ஹும் பார்ப்போம் காலம் கனியும்.
மேலும், ஒரு பின்னூட்டத்தில் இட்டது.
தலைவர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்கிற மாதிரியான் ஒரு தோற்றம், நமது சமுதாயம் முழுவதும் விரவிக்கிடக்கிறது. ஏன் நமது குடும்ப அமைப்பில் கூட, குடும்பத்தலைவர் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர், பிறகு நாமே குடும்பத்தலைவராகும் பொழுது நாமும் கூட..

நமது தலைவர்களின் உடனடித்தேவை, மதியூக மந்திரிகள்தானே தவிர, அடிவருடிகளும் ஜால்ராக்களும் அல்ல.
அன்புடன் ராமன்.

சீனு said...

/////
//பகுத்தறிவு என்ற பெயரில் அரசியல் நடத்தும் கழகத் தலைவரின் தொண்டர்கள் கொஞ்சம் உண்மையான பகுத்தறிவு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
அப்படி ஒருவேளை அவர்களுக்கு தெரியும் என்றால் எனக்கும் சொல்லி கொடுக்கட்டு//

repeatey....!!!!!
/////

Me 2...Me 2...

நாமக்கல் சிபி said...

/இந்த விசயத்தில் நான் ராமதாசை ஆதரிக்கிறேன்.
கடை இல்லையென்றால் நான் எப்படி குடிப்பேன்//


வால் பையா!

இதே மாதிரி சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்களை மூட வழி செய்யாமல் அங்கே நின்னு புகை பிடிக்காதே இங்கே நின்னு புகை பிடிக்காதேன்னு சொல்லுறாரே அவரு!

மத்திய மந்திரி ஒரு ஆர்டர் போட்டா ஃபேக்டரியெல்லாம் மூடிடலாம்! அப்புறம் இருக்குற ஸ்டாக் தீரும் மட்டும் விற்பனை ஆகும்! அதுக்கப்பிறகு யாரும் புகை பிடிக்க மாட்டார்கள் அல்லவா?

வால்பையன் said...

வருகைக்கு நன்றி ராமன்!
உங்கள் கருத்துக்கள் அத்தனையும் ஒத்துக்கொள்ள கூடியவையே

வால்பையன் said...

வருகைக்கு நன்றி சிபி அவர்களே

நீங்க சொல்றது சரி தான்!
ஆனால் குடியினால் பாதிப்புகள் நிறைய
அதை கொஞ்சமாவது குறைக்க தமிழக அரசு என்ன முயசி செய்கிறது, வருமானம் வருகிறதென்றால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா?
ராமதாஸ் ஒரு ஸ்டண்ட் பார்டிஎன்று அனைவருக்கும் தெரியும்.
ஆனாலும் ஆளும் கட்சியினால் பதில் சொல்ல முடியவில்லையே

vels-erode said...

இம்மாதிரி ஞானியின் போக்கு பற்றி http://vels-erode.blogspot.com ல், நான் ஒரு கருத்தை எழுதியிருந்தேன். படித்து, கருத்து சொல்லவும்.

கவிதை பூக்கள் பாலா said...

இந்த அரசியல் பதிவெல்லாம் தேவையா? kandippaka thevai nanbare
பகுத்தறிவு என்ற பெயரில் அரசியல் நடத்தும் கழகத் தலைவரின் தொண்டர்கள் கொஞ்சம் உண்மையான பகுத்தறிவு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
naanum

இ(எ)ந்திரன் said...

ஞாநி சொல்வதில் எந்த தவறும் கிடையாது கலைஞர் பற்றி எழுதியது எல்லாம் சரியே.ஆனால் ஒன்றை பற்றி ஒருவர் எழுதும் பொழுது அவர் அதற்கு எந்த அளவிற்கு தகுதியனவர் என்பதையும் பார்க்கவேண்டும். ஞாநி,கலைஞர் இரண்டும் ஒரே சாக்கடைதான் ஒன்று அரசியல் வியாபாரம், இன்னொன்று இலக்கிய வியாபாரம் இரண்டுமே போலிகள்

Jayadev Das said...

//ஆரியனாய் பிறந்தாலும் சாதி,மதத்தை எதிர்த்து ஜோதிடம், கடவுள் மூட நம்பிக்கைகளை சாடி வரும் ஞாநி பகுத்தறிவு வாதியா. இல்லை மஞ்சள் துண்டை போட்டுகொண்டு, சாதி ஓட்டை பெற சாதிக்காரரை தொகுதியில் நிறுத்தும் கழகத் தலைவர் பகுத்தறிவு வாதியா //நெத்தியடி.

!

Blog Widget by LinkWithin