எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.

மா.சிஅவர்களின் பதிவிற்கு டாக்டர் கலைஞர் வலையில் ஜாலிஜம்பர் அளித்த பதில்
//மா.சி நினைப்பது போல் ஒரு உன்னத தலைவர் கனவில் கூட சாத்தியமில்லை.நல்ல தலைவர்கள் என்றால் கோவணத்துணி கூட இல்லாமல் இருக்க வேண்டுமா என்ன?//

எளிமை என்ற வார்த்தையை நீங்கள் கொட்சை படுத்தி விட்டீர்கள், கக்கன் , காமராஜர் போன்ற எளிமையான அரசியல் தலைவர்கள் வாழ்ந்த தமிழகம் இது,
நல்ல தமிழகம் வேண்டும் என்ற கனவு இப்பொழுது ஒவொரு தமிழனுக்கும் வந்து விட்டது,
ஒவொரு மாநாடிற்க்கும் இவர்கள் செய்த செலவை பார்த்தால், உலக பணக்கார நாட்டில் தமிழகம் முதலிடம் வரும் போல தெரிகிறது,
கட்சி அபிமானியாக இருங்கள், ஜால்ரவாக இருக்காதிர்கள்,
இலவச டிவி ஒரு ஏழையின் பசியை போக்காது, ஏழை விவசாயியின் கோரிக்கையை நிறைவேற்றி தமிழகத்தின் தலை மகனை வாழவையுங்கள்,

இரண்டு ரூபாய்க்கு அரிசி கொடுப்பது மட்டும் சாதனை அல்ல,
அதே போல் குறைந்த விலையில் பருப்பு வகைகளையும் கொடுங்கள்,
வெறும் அரிசியை நீங்கள் சாப்பிடுவீர்களா,

வால்பையன்

4 வாங்கிகட்டி கொண்டது:

சாலிசம்பர் said...

//எளிமை என்ற வார்த்தையை நீங்கள் கொட்சை படுத்தி விட்டீர்கள்//

உங்கள் உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது.எரிச்சலாகிப் போய் தான் அவ்வாறு குறிப்பிட நேர்ந்தது.கக்கன்,காமராஜ்,ஜீவா,பாரதியார் போன்றவர்களின் பாணியையே அனைவரும் கடைப்பிடிக்க இயலாது.அவர்களை விட செயலாற்றலில் கலைஞர் குறைந்து விடவில்லையே.

சாலிசம்பர் said...

//இலவச டிவி ஒரு ஏழையின் பசியை போக்காது,//

இந்த இலவச அரசியலின் ஆரம்பம் ஜெயலலிதாவால் ஏற்பட்டது.

வால்பையன் said...

உண்மைதான்.
ஆனால் நான் இனாம் மற்றும் அன்பளிப்பு எனற வார்த்தைகளை லஞ்சத்திற்கு இணையாக நினைக்கிறேன்,
சலுகை நாளடைவில் உரிமையாகும் வாய்புண்டு, இனாம் ஒரு மனிதனை சோம்பேறி ஆக்குகிறது, மேலும் கொடுத்தவரின் தவறுகளுக்கு எதிர் கேள்வி கேட்க முடியாத சூழ்நிலையை உருவாக்குகிறது.
மற்றபடி நான் எந்த கட்சியின் அபிமானியும் கிடையாது, இந்த முறை மதுரை வரும்போது உங்களையும் சந்திக்கலாம் என்று நினைக்கிறேன்

வால்பையன்

சாலிசம்பர் said...

சந்திப்போம் வால்.

!

Blog Widget by LinkWithin