ராமேஸ்வரத்தில் ஒரு மாநாட்டுக்காக, மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 2000 பேர், அவர்கள் வந்த ரயிலில் டிக்கெட் எடுக்க வில்லை, அதிகாரிகள் கேட்டதற்கு
'டிக்கெட் வாங்குறதா'? சின்ன புள்ள தனமாவுள்ள இருக்கு! என்று அதிகாரிகளை கிண்டல் செய்திருக்கிறார்கள். முன்பதிவு இருக்கைகளையும் ஆக்கிரமித்து கொண்டு, "முன்னாடி ஒடி வந்து சீட் பிடிப்பது தான் முன்பதிவு"? என்ற ரீதியில் மண்டை காய வைத்திருக்கிறார்கள், அதிகாரிகள் எவ்வளவோ மன்றாடியும் அவர்கள் டிக்கெட் எடுக்கவில்லை.
ரயில்வே அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "தமிழ்நாட்டுக்கு தான் இது புதிது, ஆந்த்ரா பார்டர் தாண்டிட்டா, டிக்கெட் வாங்குறது தங்களோட வம்சத்துகே அவமானம் என்று நினைக்கிற ஆட்கள் அங்கே அதிகம். ஓடுற ரயில்ல தீக்குச்சி கூட கொளுத்த கூடாது, ஆனா அவங்க ஸ்டவ் கொளுத்தி சப்பாத்தி சுட்டு சாப்பிடுவார்கள், டேய் வீடு வந்துருச்சு.... இறங்கலாம் என்று நினைகிறபடி அபாயசங்கிளியை பிடித்து இழுத்து இறங்கி செல்வார்கள்,
இந்தவிசயத்தில் தென் மாநிலப் பயணிகளுக்கு கோவில் கட்டி கும்பிடனும். ஆயிரத்தில் ஒருத்தர் டிக்கெட் வாங்காம வந்தாலே அதிசயம். அரசின் விதிகளுக்கு பொதுவாகவே இங்கு மரியாதை இருக்கு என்று பெருமை ஊட்டினார்.
ஆனால் கட்சி மாநாட்டுக்கும், தலைவர் பிறந்த நாளுக்கும், அரசாங்க பஸ்களையும் தனியார் பஸ்களையும் தங்கள் சொந்த வாகனமாக பயன்படுத்துவதை பார்த்து மக்களும் கெட்டு போகாமல் இருந்தால் சரி,
நன்றி ஆனந்த விகடன்,
0 வாங்கிகட்டி கொண்டது:
Post a Comment