சில வார பத்திரிக்கைகளில் வரும் சில விளம்பரங்களை பார்க்கும் பொழுது என்னுடைய இறை மறுப்பு கொள்கை மேலும் தீவிரம் அடைகிறது,
விளம்பரம் என்பது எதற்காக?. நம்முடைய வியாபாரம் முன்பை விட மேலும் சிறப்பாக செயல் பட வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் நாம் எடுக்கும் முயற்சியே விளம்பரம் .
சில வாரங்களாக ஒரு விளம்பரம் என் கண்ணை உறுத்துகிறது,
அந்த விளம்பரத்தில் இருந்து சில வரிகளும், என் கண்ணோட்டமும்,
அம்மாபகவான் என்று அந்த பத்திரிக்கை மூலம் விளம்பர படுத்துகிறார்கள்,
அவர் அம்மாவுக்கு பகவானா அல்லது பகவானுக்கு அம்மாவா ?
அவர்களின் சிறப்பு தரிசனம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு!
மற்ற நாட்கள் என்ன பகவானுக்கு விடுமுறை நாளா?
அதென்ன சிறப்பு தரிசனம் பணம் கட்டி சிறப்பு தரிசனம் கோயில்களில் தான் இருந்தது , இப்பொழுது மனிதனை பார்க்கவும் சிறப்பு டிக்கெட்டா?
அதுசரி நமக்கு தானே மனிதர்கள், அவர்கள் காலை கழுவி குடிக்கும் கும்பல்கள் மத்தியில் நாத்திகம் பேசுவது வில்லத்தனம் அல்லவா!
சொறி, சிரங்கு படையிலிருந்து சிறுநீரக கல் மற்றும் புற்று நோய் வரை குணமாகிறதாம் இவர்களிடம் வேண்டி கொண்டால், இதுவரை எய்ட்ஸ் மட்டும் தான் வரவில்லை, வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டால் அதுவும் வந்துவிடும்,
இவர்களுக்கு தமிழ்நாட்டில் 28 நகரங்களில் ப்ரோக்கர்கள் இருக்கிறார்கள், அதுவல்லாது
அயல்நாடிலும் இவர்கள் தொழில் களைகட்டுகிறது, கல்லாவும் கட்டுகிறது.
ஒரு சந்தேகம் இந்து கடவுளின் புரோகர் பூசாரி, கிறிஸ்தவர்களுக்கு பாதரியார், முஸ்லீம்களுக்கு அஜ்ரத், இந்த அம்மாபகவான் புரோக்கர்களுக்கு என்ன பேர் வைப்பது?
கேட்டவுடன் துபாயில் வேலை கிடைக்கிறதாம், தமிழ்நாட்டு மக்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு காத்திருப்பதற்கு பதில் இவர்களிடம் சொன்னால் உடனே வேலை கிடைக்குமே!
இதைவிட பெரிய கொடுமை இந்த விளம்பரங்கள் எல்லாம் சாட்சிகளுடன் வருவது,
உண்மை ஆன்மிகவாதிகள், இதற்கென்று தனியாக புத்தகம் விட்டால் கூட இந்த வார பதிரகை விளம்பர செலவு கூட வராது, பின் ஏன் இந்த பத்திரிகையில் விளம்பரம்
நான் ஏற்கனவே சொன்னது போல் நம்முடைய வியாபாரம் முன்பை விட மேலும் சிறப்பாக செயல் பட வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் நாம் எடுக்கும் முயற்சியே விளம்பரம் .
இவனுகளை எல்லாம் 100 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது!
16 வாங்கிகட்டி கொண்டது:
ரொம்ப மோசமான விசயம் தான்ங்க..
ஒன்றா ரெண்டா மோசடிகள்
எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா
காக்க காக்க பாட்டு ஸ்டைலில் படிக்கவும்
வால்பையன்
வால்ப்பையன்,
விகடனில் தொடர்ந்து அந்த விளம்பரம் வரும், ஆனால் இதை விட கொடுமை , அந்த ஆன்மீக ஜோடிகள் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் என ஜூனியர் விகடனில் முன்னர் ஒரு கட்டுரையும் போட்டார்கள்!
மக்கள் எதை நம்புவது!
இதில் செம காமெடி ஒன்று இருக்கு, ஒரு பெண்மணி , பல ஆண்டுகளாக வேலைக்கிடைக்காமல் கஷ்டப்பட்டாரம்,தனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று கேட்டதும் கிடைத்ததாம், அடுத்த முறை அம்மா பகவானைப்பார்த்த போது அவரது பெண்ணுக்கு வேலை கேட்டு போனார்களாம் கிடைத்ததாம், அரசு வேலைக்கு போக வயது வரம்பே இல்லையா (30 வயது தான் லிமிட்)
இதை எல்லாம் பதிவாக போட்டால் அவர்களுக்கு இலவச விளம்ப்பரம் என நினைத்துக்கொள்வார்கள், கண்டுக்காம விட வேண்டும் விட்டாச்சு!
யாராவது இந்த பூனைக்கு மணி கட்ட மாட்டார்களா என்று பார்த்தேன்.
விளம்பரம் பார்த்து அந்த கடவுளை சிறப்பு தரிசனம் செய்துதான் கும்பிட வேண்டியது இல்லை.
நமது மனமே கடவுள் மற்றும் கடவுள் தூணில் உள்ளார் துரும்பிலும் உள்ளார்.
//இலவச விளம்ப்பரம் என நினைத்துக்கொள்வார்கள்,//
இப்படியே எல்லாத்தையும் நினைத்தால் என்ன ஆவது,
டான்ஸ் சாமியார் உடான்ஸ் சாமியாரான கதையும் மக்களுக்கு தெரியும்,
உழைப்பை நம்பாமல் குறுக்கு வழியில் மற்றவர்களுக்கு போய் சேரும் எல்லாம் தனக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர்கள் உள்ள வரை இந்த மாதிரி போலி சாமியார்கள் வர தான் செய்வார்கள்,
//விளம்பரம் பார்த்து அந்த கடவுளை சிறப்பு தரிசனம் செய்துதான் கும்பிட வேண்டியது இல்லை.//
இவர்கள் செய்வது உண்மை என்றால் ரிப்லீஸ் மற்றும் கின்னஸ் நிறுவனங்கள் இவர்களுக்கு இலவச விளம்பரம் அளிக்கும், தைரியம் இருந்தால் அதற்கு போட்டி போட்டு பாக்கட்டும்,
அப்போது தானே சாயம் வெளுக்கும்
வால்பையன்
நமது பழக்கங்களும் , குணங்களும் வளர்ப்பின் மூலமே தீர்மானிக்கப்படுகிறது என்று தான் இது நாள் வரை நினைத்துக்கொண்டிருந்தேன். (20/01/2008)ம் தேதி ஜீ.வி படித்தபின்பு தான் தெரிந்தது, நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது எதையோ தேடித்தான் போகும்னு. (பிராமணர்களுடன் நாயை ஒப்பிட்டதிற்க்கு , அவைகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்).
ராமநாதபுரம் மாவட்ட திருவாடானை ,அருகில் உள்ளது பண்ணவயல் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் - காளிமுத்து தம்பதியர் , இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்துவளர்த்தார்கள். அந்த குழந்தை பிராமணப் பெண்ணுக்கு தவறான வழியில் பிறந்ததால் , அவள் அக்குழந்தையை தெருவில் எறிந்துவிட்டாள். அந்த குழந்தையை எடுத்து , பெற்ற பிள்ளைகளை விட பாசமாக வளர்த்தார்கள் சுப்பிரமணியனும் காளிமுத்துவும்.
வளர்ந்து பெரியவனானதும் , தன் பிறப்பை பற்றி தெரிந்த கணேசன் , ( தத்தெடுக்கப்பட்ட குழந்தை) தன் தாய் பிராமண சமூகத்தை சேர்ந்தவள் என்று தெரிந்தவுடன் , வெள்ளை வேட்டி கட்டுவதும் , நெத்தி நெறைய விபூதியை பூசுறதுமா மாறினான். அதுமட்டுமில்லாமல் அசைவம் சாப்பிடுவதையும் நிறுத்திவிட்டான். (ஒதுங்குவது , ஒதுக்கிவைப்பதும் அவாள் குணம்னு தெரியாதா என்ன?)..தன்னை பிராமணன் என்று காட்ட பல வழிகளிலும் முயற்சி செய்தான்.
பிராமணான தன்னை , இதுநாள் வரை சேரியில் வாழவைத்ததிற்க்காக தன்னை வளர்த்த தாய் தந்தையை அடிக்கவும் ஆரம்பித்தான்.( பிராமணன்னு ஆனதுக்கு அப்புறம் தாழ்த்த்ப்பட்ட மக்களை அடிக்காட்டா எப்படி ).
தலித்துக்களின் வேர்வையும் , இரத்தத்தையும் குடித்தே பழக்கப்பட்ட இனம், தன்னை வளர்த்த பெற்றோர்களையும் கொல்லவும் தயங்கவில்லை. வளர்த்த பாவத்துக்கு அப்பனை கொன்னுட்டு , பாலூட்டுன பாவத்துக்கு தாயை விதவையாக்கிட்டு, இன்று அந்த மிருகம் தன்னை ” பிராமணன் ” என்று தலைநிமிர்ந்து சொல்கிறது.
செய்திய படிச்சீங்களா?
கேட்கவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது சாப்ளின்,
நான் உயர்ந்தவன் என்று சொல்ல ஒருவருக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே போல் மற்றவர்களையும் தல்தவர்கள் என்று நினைப்பது கடமை,
வளர்த்தவர்களை அடித்த அந்த மனிதன், முதலில் மனிதனே அல்ல, பிறகு என்ன பிராமணன்
வால்பையன்
மற்றவர்களையும் தாழ்ந்தவர்கள் இல்லை என்று நினைப்பது கடமை,
எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்
வால்பையன்
செய்திய படிச்சீங்களா?
இன்னும் இல்லை இந்த வார ஜூ.வி தானே கண்டிப்பாக படித்து விடுகிறேன்
வால்பையன்
//வளர்த்தவர்களை அடித்த அந்த மனிதன்// அடிச்சானா ?. அப்பன கொன்னுபுட்டான் ஒய். ஆத்தாளையும் வெட்டிருக்கான் , ஆனா பொழச்சிட்டா.
உங்களுடைய பதிவின் பதிலுக்கு அது ஒரு மனநோய் அதில் ஏன் ஜாதியை நுழைகிறீர்கள் என்று கேட்டுஇருக்கிறார்கள்,
பிராமணம் மட்டுமல்ல எவன் ஒருவன் தன் ஜாதியை உயர்வாக நினைகிறானோ அவன் மனநோயாளி தான்,
ஜாதியில்லாத இந்தியா என்று வருகிறதோ அன்று தான் நாட்டு முன்னேறும்
வால்பையன்
பதிவும் சரி, பின்னூட்டத்தில வந்த விஷயமும் சரி ... இப்பதைக்கு நாம ஒண்ணும் தேறப் போவதில்லைன்னுதான் தெரியுது....
சரியாக சொன்னீர்கள், இரவு நேரங்களில் டிவி பார்க்கவே முடியவில்லை, தமிழ் சேனல் தான் இப்படி என்று டிஸ்கவரி போனால் அங்கேயும் ராசிகல் விற்கிறார்கள்,
என்ன கொடும சார் இது ?
வால்பையன்
வால்பையன்! அந்த விளம்பரங்களில் வரும் மொபைல் நம்பர்களைக் கவனமாகம் குறித்து வாருங்கள், ஊர்ப் பெயரோடு. நான்கு புத்தகங்கள், நான்கு வாரங்கள். இதிலும் அவர்கள் முட்டாள்தனம் தெரியும்.
சாணக்யன்
வால்பையன், ஜாதியைப் பற்றி உயர்வாக நினைப்பது பிராமணர்கள் மட்டுமா? மதம் மாறிய பின்னும் சர்ச்சுகளில் தீண்டாமையை அனுபவிக்கும் தோழர்களைக் கேட்டுப் பாருங்கள். எப்படி ஒரு ஜாதி உயர்ந்தது என்று நினைப்பவன் மனநோயாளி என்று கூறுகிறீர்களோ அது போல ஒரு ஜாதியைக் கீழானது என்று சொல்பவனும், அதனை நாயை விடக் கேலவமானது என்று கூறுபவனும் யார்?
ஜாதிகள் வேண்டாம் என்பது இந்நாட்டின் கோஷம் அல்ல. அதன் உண்மையான நோக்கம், ஒரு ஜாதியினர் மட்டும் வேண்டாம், அந்த இடத்திற்கு நாங்கல் வர வேண்டும் என்பதுதான். புரிந்து கொள்ளுங்கள்.
சாணக்யன்
Post a Comment