இன்றைய செய்தித்தாளின் வித்தியாசமான செய்தி
சாருநிவேதிதா அவர்களின் மூன்று புத்தகங்கள், உயிர்மை பதிப்பகம் வாயிலாக வெளியிடப்பட்டது, மத்திய அமைச்சர் கனிமொழி வெளியிட, நடிகை மதுமிதா பெற்று கொண்டார், இயக்குனர் பாலு மகேந்ரா சிறப்புரை ஆற்றினர்,
அப்படி என்னத்தை ஆத்தினார் என்றால்,
சாருநிவேதிதா நல்ல எழுத்தாளர், அவரை பற்றி எல்லோரும் கலககாரர் என்று சொன்னதால் அவரை படித்தேன், நன்றாக இருந்தது, இதோடு நிறுத்தி இருக்கலாம்,
இயக்குனர் பாலாஜி சக்திவேலின் கல்லூரி படம் பார்த்தேன்,
அவரது முந்தய படம் "காதல்" நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, எதிபார்த்தது போல் இதுவும் நன்றாக தான் இருந்தது, ஆனால் ஒரு கலை படமாக எடுக்க வேண்டியதை வியாபார ரீதியாக எடுத்து விட்டார் என்று மனம் வருந்தினார்,
என் கேள்வி எல்லாம் இவர் சாருவை அவமான படுத்த இப்படி பேசினாரா, அல்லது இவருக்கும் அரசியல் வாடை அடித்து விட்டதா?!,
அவர்கள் தான் ஒரு கல்யாணத்திற்கு சென்றாலும், "நான் எதிர்கட்சியை பார்த்து கேட்கிறேன்" என்று மணமக்கள் பயப்படும் படி கத்துவார்கள்,
புத்தக வெளியிட்டு விழாவிற்கு போனவர் புத்தகத்தை பற்றி தானே பேச வேண்டும்,
இவர் ஏன் சினமவை பற்றி பேசினார்
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
14 வாங்கிகட்டி கொண்டது:
சினிமாக்காரங்களைக் கூப்பிட்டிருக்காங்க .. அவரு சினிமா பற்றி பேசியிருக்கார்.
அம்புடுதன் ...
//சினிமாக்காரங்களைக் கூப்பிட்டிருக்காங்க .. அவரு சினிமா பற்றி பேசியிருக்கார்.//
அது சரிதான், நல்லவேளை கனிமொழி எதிர்கட்சிகளை பற்றி அறிக்கை எதுவும் விடவில்லை.
வால்பையன்
மத்திய அமைச்சர் கனிமொழியா?
செய்தி தாள்கள் படிப்பதில்லையா anonymous நண்பரே ?
வால்பையன்
செய்தித்தாள்கள் படிக்கிற வழக்கம் உண்டுதான். எப்படியோ இந்த செய்தியை மிஸ் பண்ணிட்டேன் போல. இந்த விபரம் இருக்கற லிங்க் கொடுப்பீர்களா? (பை தி வே நானும் ஈரோடு தான்)
கனிமொழி எம்.பி. அவர்கள் எப்போது மத்திய அமைச்சரானார்? எந்தத்துறை என்றும் சொல்வீர்களா?
இரண்டு நாட்களுக்கு முன் வந்த செய்தி என்பதால் செய்தி தாளையே பிடித்துவிட முடியும்.
//கனிமொழி எம்.பி. அவர்கள் எப்போது மத்திய அமைச்சரானார்? எந்தத்துறை என்றும் சொல்வீர்களா?//
ராஜ்ய சபா அமைசரவையில் முதல்வரால் அமர்த்தி வைக்க பட்டதாக கேள்வி!
அவர் அமைசரவையில் பேசியது பற்றி கூட செய்தி வந்ததே!
வால்பையன்
ஐயா, எனக்கு சத்தியமா அந்த செய்தி கண்ணுக்கு படல. அட்லீஸ்ட் எந்த துறை அமைச்சர்னாவது சொல்ல முடியுமா?
மன்னிக்கவும் அமைச்சறல்ல உறுபினராக இருக்கிறதாய் தகவல்,
சுட்டி காட்டியதற்கு நன்றி.
ஈரோட்டில் நான் கருங்கல்பாளையத்தில் இருக்கிறேன்,
என்னுடைய யாஹூ தொடர்பு முகவரி,
phsarun
நீங்கள் messenger- ல் வருவீர்கலேயனால் என்னை இணைத்து கொள்ளவும்
வால்பையன்
அதான பார்த்தேன். அவரு அமைச்சராயிருந்தா இன்னேரம் வலையுலகம் அதிர்ந்திருக்குமே?
உங்களுக்கு ஏதும் வலைபூ இல்லையா! அல்லது யாரும் பார்க்க கூடாதென்று மறைத்து வைத்திருக்கிறீர்களா?
வால்பையன்
தவறு செய்வது இயல்புதான். உங்களை தனி மடலில் தொடர்பு கொள்கிறேன். நன்றி.
உங்கள் வருகைக்கு நன்றி!
வால்பையன்
எனக்கு வலைப்பூ எதுவும் இல்லை நண்பரே. வலைப்பூக்களில் பின்னூட்டமிடுவது மட்டுமே வழக்கம்.
Post a Comment