காங்கிரஸின் அலட்சியமும் ஆபத்தே!

2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற காரணம் கடைசி நேரத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த இரண்டு மணி நேர மின்வெட்டு அதுக்கு முன்னாடி நடந்த அமைச்சர் பதவி பேரம், உண்ணாவிரத நாடகம் இதெல்லாம் மக்கள் வழக்கம் போல் மறந்திருப்பாங்க. சோ மின்வெட்டு மட்டுமே
ஆனால் 2006/2011 திமுக ஆட்சி காலத்தில் அதிமுக தன் இருப்பதை தக்கவைத்து கொண்டது. உண்மையில் 2011 தேர்தல் தான் தேமுதிக என்ற கட்சிக்கே உயிர் கொடுத்தது. அதே நேரம் 2011 திலிருந்து பார்த்தால் மின் கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு இது மட்டுமில்லாது எல்லா துறையிலும் ஊழல்
இருப்பினும் ஏன் 2016 தேர்தலில் திமுக தேற்றது. அடுத்த தேர்தலில் எப்படியும் நாம தான் வருவோம் என்ற அலட்சியமும் தன் இருப்பை தக்கவைத்து கொள்ளாததும் தான்.
சரி விசயத்துக்கு வருவோம்.
அதிமுகவிற்கென்று எப்படி ஒரு வாக்கு வங்கி இருக்குதோ அது எப்படி அதிமுக எல்லா கொடுமைகளும் பண்ணாலும் அதிமுகவிற்கே ஓட்டு போடுதோ அதே மாதிரி கிறுக்கு கூட்டம் பாஜகவிலும் இருக்கு. மதம் ஒன்றே பிரதானம் அவர்களுக்கு.
2011-2016 திமுக அலட்சிய்த்திலும் இறுமாப்பிலும் இருந்தது போலவே தற்போது காங்கிரஸ் இருந்து வருகிறது. இதுக்கு காங்கிரஸ் ஆட்சியே பரவாயில்லன்னு என்னை போல் ஆட்கள் தான் சொல்லிட்டு இருக்கோம். காங்கிரஸ் யார் விரலை சூப்பிகிட்டு இருக்காங்கன்னு தெரியல

தமிழகத்தில் திமுக ஓரளவுக்கு வலுவா இருந்தாலும் தேசிய அரசியலில் வலுவான எதிர்கட்சி இருப்பதா கண்ணுக்கே தெரியல. இடதுசாரிகள் என்ன பண்றாங்க. அட்லீஸ்ட் இந்த மதவாத கிறுக்கு கூட்டங்களை வீட்டுக்கு அனுப்பவாவது கூட்டணி அமைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டாமா?
இப்படியே இருந்தாலும் தொங்கு பாராளுமன்றம் அமையும் தான். ஆனா கிறுக்கு தனமா போட்ட திட்டங்களை மாற்றி அமைத்து சட்ட திருத்தம் செய்ய, பெரும்பான்மை வேணுமே
இந்தியாவுக்கு என்ன தான் ஆச்சு?

facebook savings part 1

பொறாமை 
கொள்ள வைக்கிறாள்
ஒவ்வொரு முத்தத்திலும்
என் காதலை தோற்கடித்து
முத்தத்தால் மூழ்கடித்து
வேகத்தால் சாகடித்து......


******

நான் வார்த்தையால்
கவிதை எழுதி கொடுத்தால்
அவள் முத்தத்தால்
கவிதை படித்து செல்கிறாள்
பண்ட மாற்றுமுறை
நன்றாக தான் இருக்கிறது


*****

டா சொல்லாதே
இனி டா சொன்னா
ஒவ்வொரு டாவுக்கும்
பத்து முத்தம் என்றேன்
போடா டால்டா
என்கிறாள்
லாபம் முப்பது
முத்தம்!....


*****

உன் கரங்களுக்குள்
இருந்தது போல்
கவலை மறந்து
முன்பெப்போதும்
இருந்ததில்லை


****

பட்டாம்பூச்சியின்
சிறகைப்போல்
என் மேனியெங்கும்
வர்ணம் பூசியிருக்கிறாள்
முத்தத்தடத்தில்
என் மொத்ததடமும்
மாறிவிட்டது!

*****

நண்பனை போல்
தாங்கும் தோள்களையும்
தாயைப்போல்
பாச தலைகோதலையும்
மகளைப்போல்
அன்பு அதட்டல்களையும்
காதலியால் மட்டுமே
கொடுக்க முடிகிறது
யாதுமாகி என் வாழ்வில்
நிறைந்திருக்கிறாள்!

*****

தொலைதூரப்பயணமும்
ஜன்னலோர இருக்கையும்
அவளுக்கு பிடித்தமானதாய்
இருக்கிறது
என்னேரத்திலும்
எவ்விடத்திலுமெனக்கு
அவள் மடி மட்டுமே
உறங்க ஏதுமானதாய்
இருக்கிறது!

******

உன் தியாகங்களை
கொழுத்திப்போடு
பெற்றதையே தான்
திருப்பிக் கொடுத்தாய்
உன் உழைப்பென்பது
உயிர் வாழப்பெறும் கூலி
அசையாத பொருட்களை
கல்லென்பர் உலகில்
நீயே சத்தியமும்
ஜீவனுமாய் இருக்கிறாய்
கொண்டாட எதுவுமில்லையெனில்
அமைதியை கொண்டாடு
ஒன்றுமில்லாதவனுக்கு
திருட்டுபயம் எதற்கு.

*****

எப்போழுதெல்லாம்
முத்தமிடுவதை நிறுத்துகிறோமோ
அப்பொழுதெல்லாம்
ஒருவரையொருவர்
பார்த்துக்கொள்வோம்
பின் புன்னகைத்துவிட்டு
மீண்டும் முத்தமிடுவோம்
ஒரே புன்னகையாக இருந்தாலும்
ஒன்று கொடு என்றும்
ஒன்று எடு என்றும்
பேசும்.......

******


கேள்வி - பதில் 27-09-17 (பொருளாதாரம்)

கேள்வி: இந்தியா சுயசார்பு உள்ள நாடுன்னு சொல்றிங்க, ஆனாலும் 2019 ஆம் ஆண்டு ஒரு பொருளாதார வீழ்ச்சி இந்தியாவுக்கு இருக்குன்னு சொல்றிங்க. வழக்கம் போல பாஜக எதிர்ப்பா?
பதில்:
பாஜகவின் மதவாத கருத்துகளை எதிர்க்க நான் அதிகம் மெனக்கெட தேவையில்ல. கட்சி ஆட்களின் முட்டாள்தனமான அறிக்கைகளே போதுமானது. ஆனாலும் பாஜகவின் பொருளாதார கொள்கைகளை விமர்சிக்க நிறைய புரிதல் வேண்டும். பொய்யான புள்ளிவிபரங்கள் பத்தாது
கடந்த மூணு வருசமா பாஜக தரும் ஜிடிபி புள்ளிகள் பொய்யானவை. உண்மையில் மூணு வருசமா நாம் வளர வில்லை. மாறாக வீழ்ச்சியடைந்து கொண்டுருக்கிறோம். 1991 ல் இருந்து ஜிடிபி தான் தற்போதைய நிலை
வருடத்திற்கு 2 கோடி வேலை வாய்ப்பு ஏற்படுத்துவேன்னு மோடி சொன்னார். கடந்த மூணு வருடத்தில் அதில் 1% கூட மோடி உருவாக்கவில்லை. மாறாக பணமதிப்பு இழப்பு மூலம் லட்சகணக்கானோர் வேலை இழக்க செய்தார். இப்போதும் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகமாக தான் இருக்கு. குடும்பத்தில் யாரோ ஒருவர் சம்பாத்தியம் உணவுக்கு உதவுது
2014க்கு பிறகு கார்ப்ரேட்கள் பெற்ற வரிசலுகை, மானியம், கடன் தள்ளுபடி போன்ற்வற்றில் அரசுக்கு இழப்பு 8 லட்சம் கோடி. 2009/2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் மொத்த இழப்பு 2 லட்சம் கோடி. நம்மிடம் இருந்து பெறப்படும் வரிகள் மீண்டும் மக்களுக்கே பயன்படாமல் சிவாஜி சிலையாகவும், பட்டேல் சிலையாகும், கார்ப்ரேட் வரிசலுகையாகவும் தான் செல்கிறது
ஒரு பொருள் அப்படியே இருக்கு, ஆனால் நாளுக்கு நாள் விலையேறிக்கொண்டே செல்வது. பணம் தன் மதிப்பை இழக்கிறது என அர்த்தம். அதை தான் பணவீக்கம் என்பார்கள். ஜிஎஸ்டி மூலம் சொகுசு கார்களுக்கு வரிகள் குறைந்துள்ளது. அத்தியாவிச்ய பொருள்களுக்கு வரி ஏறியுள்ளது. பணவீக்கம் இருந்தால் பணபுழக்கம் இருக்க வேண்டும் என்பது பொருளாதார விதி. ஆனால் கேஸ்லெஸ் எக்கனாமி என்ற தவறான கொள்கை பணபுழக்கம் இல்லாமல் பொருளாதரத்தை சறித்துக்கொண்டு இருக்கிறது. புது 200 ரூபாய் நோட்டுக்கு அதான் காரணம்

பணபுழக்கம் இல்லாததால் சிறு தொழில்கள் நசித்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது, வங்கிகளின் வட்டி வரவு குறைந்துள்ளது. சில வங்கிகள் திவால் ஆகலாம் என எதிர்பார்த்தேன், அதற்குள் வங்கி இணைப்பு வேலை நடந்தது. அது முக்கியமான பொருளாதர கொள்கை தான்.
உங்களுக்கு ஒரு விசயம் தெரியமாட்டிங்குது. விலை ஏறியதை உணராமல் இருக்கிறீக்ர்கள். ஒரு ரூபாய் கொடுத்து அன்னைக்கு வாங்கிய திப்பெட்டியில் 50 குச்சிகள் இருந்தது. இப்பொழுது 40 குச்சிகள் மட்டுமே உள்ளன. பத்து ரூபாய் கொடுத்து வாங்கிய பேஸ்ட் 25 கிராம் இருந்தது. இப்பொழுது 20 தான் உள்ளது. இதெல்லாம் மாசத்துக்கு கணக்கு போட்டா நடத்தர வர்க்கத்துக்கு 3000 ரூபாய் வரை செலவை அதிகபடுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கைகள் எல்லாம் நாட்டின் வளர்ச்சிக்காக தான் மூளை சலவை செய்யப்படுவதால் இதன் உண்மை நிலையை பேசுபவர்களை பாகிஸ்தான் போ, கடல்ல விழு, ஆண்ட்டி இந்தியன் என விமர்சிக்கிறார்கள். தானும் பாதிக்கபடுகிறோம் என்பதை அறியாத பக்தாஸ்.
ரொம்ப வேண்டாம். 2014 கச்சா எண்ணைய் விலை 160 டாலர். அப்ப பெட்ரோல் விலை 67 ரூபாய். இப்ப கச்சா எண்ணெய் 52 டாலர் ஆனால் பெட்ரோல் விலை 74 ரூபாய். தனியார் விலை நிர்ணயக்கும் முறை வாபஸ் பெறப்படாதுன்னு மத்திய அரசு கை விரித்து விட்டது. உலகில் வடகொரியா, அமெரிக்கா போர் பதட்டம் நிலவிக்கொண்டு இருக்கிறது. இப்ப கச்சா எண்ணைய் விலை 100 டாலருக்கு உயர்ந்தால் நிலமை என்னாகும் என யோசித்து பாருங்கள்.
ஏழ்மையை ஒழிப்பது தான் ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி, ஏழைகளை ஒழிப்பது அல்ல. பாஜகவின் எந்த கொள்கைகள் பற்றியும் உங்களுக்கு அக்கறையில்ல. நீங்கள் அவர்கள் அடிமைகளாக இருப்பது இந்து என்ற மாயையில். அதை பயன்படுத்தி மோடியின் பொருளாதார கொள்கை நாட்டை மோசமான நிலைக்கு தள்ளிக்கொண்டிருக்கிறது. அதுக்கு நாங்கெல்லாம் விரும்பமில்லாமே வெட்டப்படுகிறோம், நீங்கல்லாம் விரும்பி பலியாகிறிங்க என்பது தான் வருத்தம்

கமல் vs திமுக

திமுக வலும்பெறும் போதெல்லாம் மத்திய அரசு கோடம்பாக்கத்தில் இருந்து ஒரு ஆளை இறக்கும், இப்ப கமல்ஹாசன் - உபிஸ்
முதல் நகைப்பு வலுபெறுவதற்கு. எதிராளியின் பலவீனத்தை தன் பலமா நினைப்பது புத்திசாலி தனமல்ல, கேவலம். உண்மையில் அதிமுக பலவீனம் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியையும், பாஜகவையும் வளர்த்து விட்டுள்ளது. களத்தில் நான் எடுத்த சர்வே அதை தான் காட்டுது. நீங்க திரும்பவும் மிதப்புக்கு போயிட்ட போல
அடுத்த நகைப்பு, நியாயமா பாஜகவின் ஸ்லீப்பர் செல் ரஜினி தான். ரஜினி அரசியலுக்கு வந்துருந்தா அந்த கருத்தை சொல்வதில் லாஜிக் இருக்கு. பல பேட்டிகளில் கமல் திராவிடமும், பொது உடமையும் என் கொள்கைகள்னு பேசிய ஆளு. முரசொலி விழாவில் சர்ச்சைகளுக்கு மத்தியில் கலந்துகிட்ட ஆளு. ஆனாலும் உங்களுக்கு பயம் வருது. அதுக்கு பேரு வலு இல்ல. ஸ்பேண்ட்மெண்ட் வீக்குன்னு அர்த்தம்

2015 சென்னை வெள்ளத்தின் போது மக்கள் வரி பணம் எங்கேன்னு டுவிட் போட்டது. அதுக்கு பன்னிர்செல்வன் பதில் சொன்னது தான் தேரை இழுத்து தெருவில் விட்ட கதை. அதன் பின் தான் கமல் நேரடியாக இது ஊழல் ஆட்சி, ஊழல் இல்லாத துறைகளே இல்லை என டுவிட் போட்டதும், தமிழகத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் எதிர்வினை ஆற்றுவதும். ஃபைவ் ஸ்டார் சிறை உட்பட.
கமலுக்கு வயசாகி போச்சு, நடிக்க வாய்ப்பில்ல, சரக்கு தீர்ந்து போச்சு, சின்னதிரை வந்தாச்சு என்பதெல்லாம் தன் அரிப்புக்கு சொறிந்துகொள்ளும் சுய சமாதானம். கமல் வந்தது அதிமுக மேல் உள்ள வெறுப்பினால், அரசியலுக்கு வருவேன்னு சொன்னது தமிழக அரசியல் முழுக்க காமெடி பீஸ்களா இருந்த காரணத்தில்.
ஆனாலும் கமலுகெல்லாம் பயந்து கதறி கதறி ஸ்டேட்டஸ் போடுறிங்களே அந்த லட்சணத்திலா கட்சியை வளர்த்து வச்சிருக்கிங்க. போன தடவை மண்ணை கவ்வியதற்கு மக்கள் நல கூட்டணி மேல பழியை போட்டிங்க., இப்ப கமலை ரெடி பண்றிங்களா. அப்ப நீங்க எப்படி வெற்றி பெறலாம்னு யோசிக்கல. தோத்தா யாரை காரணம் சொல்லலாம்னு யோசிக்கிறிங்க
நல்லா இருக்குடே உங்க அரசியல்.
ஜெயலலிதா இறந்தால் அந்த கட்சி உடையும்னு முன்னாடியே எழுதினேன். கருணாநிதி மறைவுக்கு பின் நீங்க என்னாவிங்களோ. கொஞ்சமாச்சும் தவறை திருத்திக்க முயற்சி பண்ணுங்க, மக்கள் முன்ன மாதிரி இல்ல. சட்டைய பிடிக்க தயார் ஆகிட்டாங்க

2ஜி வழக்கு!

2ஜி வழக்கு மிகைபடுத்தப்பட்ட ஒன்று ஒத்துகிறேன், ஆனால் அதில் தவறே நடக்கவில்லை என்பது முட்டு கொடுக்கும் தன்மை.

முதல் விசயம்
முதல் அலைகற்றை துறைக்கு சம்பந்தமே இல்லாத துறை ஒன்று பங்கெடுத்தது, சேவை பெற்ற சில நாட்களில் பல மடங்கு லாபத்துக்கு இந்திய நிறுவத்தினற்கு விற்றது

சம்பந்தமில்லாத துறை அப்ளை பண்ணிருக்குன்னா அதில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்காதா? ஏன் குறைந்த விலைக்கு கொடுத்திங்கன்னு கேட்கும் போது அப்ப தான் குறைந்த விலையில் மக்களுக்கு சேவை கிடைக்கும்னு சொன்னிங்க. ஆனால் வெளிநாட்டி கம்பெனி பல கோடி பாலம் பார்த்தானே. பின் எப்படி குறைந்த விலைக்கு சேவை கிடைக்கும்.



இரண்டாவது விசயம்
முறையான தேதி அறீவிக்கப்படாமல் அவசரம் அவசரமாக பிரித்து கொடுக்கப்பட்டது. இந்த வாதம் நீதிமன்றத்தில் வரும்பொழுது அது உள்துறை அமைச்சருக்கும்(ப.சிதம்பரம்) பிரதமருக்கும் (மன்மோகன்சிங்) தெரியும் என்றார் ராசா. அன்று வழங்கப்பட்ட அலைகற்றை யாவையும் நீதிமன்றம் கேன்சல் செய்தது தெரிந்தே தான் தப்பு பண்ணேன் என்ற அவரது வாதம் தான்

இது போக
நீரா ராடியா போன் விவகாரம், சொன்னா உதைப்பிங்க ஜாபர்சேட் போன் விவகாரம் அனைத்தும் இந்த வழக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட ஒன்று. மேலும் 2ஜி வழக்கில் சம்பந்தபட்ட ஒரு நிறுவனம் தான் கலைஞர் டீவிக்கு 200 கோடி வழங்கியது. வழங்கு விழந்தவுடன் அது கடனாக மாற்றப்பட்டு திரும்ப செலுத்தப்பட்டது.



அதிமுகவா இருந்தாலும் சரி, திமுகவா இருந்தாலும் சரி, இப்பல்லாம் யார் தான் தப்பு பண்ணல என்பது மோசமான மனநிலை. கனிழொழி கருணாநிதியின் மகள் என்பதாலும், ஆ.ராசா, கனிமொழிக்கு நெருக்கமான நண்பர் என்பதாலும் இருவரும் கட்சியை விட்டு விலக்கப்பட வில்லை. தனி மனித துதியும் புனித படுத்தலும் கேள்விகளை வெறுக்கும், உண்மைகள் கண்ணுக்கு தெரியாது

#திமுக
#வால்பையன்

!

Blog Widget by LinkWithin