ஒரு பெரியாரிஸ்ட் நண்பர் ஒரு பதிவு போட்டார், நான் அதிலிருந்து ஒரு கேள்வி கேட்டேன். உடனே அந்த நண்பர் சொல்றார். பெரியார் எழுதிய புத்தகங்கள் படியுங்கள் தோழர்!
இஸ்லாமியரை கேள்வி கேட்கும் போது குரான் படிக்க சொல்வதற்கும் நீங்க சொல்வதற்கும் என்ன வித்தியாசம் தோழர்னு கேட்டேன். பதிலை காணோம்!
எனது பக்தன், தொண்டன், ரசிகன் ஃபார்முலா படி பெரியாரிஸ்ட் தற்பொழுது தொண்டன் வகையறாவில் இருக்காங்க. நான் பெரியார் என்ற ஆளுமையை மறக்க மாட்டேன். அதற்காக தொண்டரடிபொடிகள் சுயசிந்ந்தனையில்லாமல் பெரியார் அன்னைக்கு பேசியதையே இன்னைக்கு காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருப்பது. மகாகேவலமா இருக்கு அதை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
பெரியாரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவாராக தூக்கிப்பிடிக்கும் போது அவருக்கு புனிதர் பட்டம் கட்டுகிறீர்கள்.என் புரிதல் படி கடவுள் உருவாக்கமே அப்படி தான் தோன்றியது.
புத்தர் நான் கடவுள் என்று சொல்லவில்லை, இயேசு நான் கடவுள் என்று சொல்லவில்லை. அன்றைய காலகட்டத்தில் இருந்த சமூககேடுகளை சுட்டுக்காட்டினார்கள். மக்களிடையே செல்வாக்கு பெற்றார்கள். அதை வைத்து கல்லா கட்டவில்லை.
இன்று இயேசு, புத்தர் பெயரை சொல்லி கல்லா கட்டும் மதவாதிகளுக்கும பெரியார் பெயரை சொல்லி கல்லாகட்டும் வீரமணிக்கும் என்ன வித்தியாசம்?
தமிழ்தேசியத்தை வியாதி என விமர்சிக்க உங்களுக்கு உரிமை உள்ளபொழுது(எனக்கும் விமர்சனம் உண்டு) பெரியாரையும், உங்கள் கொள்கை நழுவல்களையும் கேள்வி கேட்ட பிறருக்கு உரிமை உண்டு தானே.
பெரியார் சொன்னதே எனக்கு போதும் தனியாக சிந்திக்க தேவையில்லை என்ற மனபான்மையில் நீங்கள் தொண்டர்களை உருவாக்கவில்லை. மனபாட்ம் செய்து ஒப்பிக்கும் இயந்திரங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள்!
4 வாங்கிகட்டி கொண்டது:
பகுத்தறியும் உணர்விற்கு விடுதலை பெரியார் பக்தர்களிடமிருந்து!!!
பெரியாரே, இன்னொரு இறைவனின் தூதராகி விடலாம், இன்னும் சில காலங்களில். யாருக்கு தெரியும் ?
"இயேசு நான் கடவுள் என்று சொல்லவில்லை"
Bro in bible Jesus clearly said he is the god.
பைபிள்ல இருக்குறதெல்லாம் உண்மைன்னு நம்புறிங்களா?
நான் சொன்னது இயேசு தன்னை கடவுள் என்று எங்கேயும் சொல்லவில்லை என்று!
Post a Comment