பாலியல் உளவியல்!

டெல்லியில் வன்புணர்வினால் இறந்த நிர்பயாவும், அதனை தொடர்ந்து பிபிசி எடுத்த ஆவணபடமும் தான் இன்னைக்கு talk of the city. குற்றவாளியின் பேட்டியின் மூலமும் அதனை தொடர்து பேட்டி எடுத்தவரின் உரையில் குற்றவாளின் கருத்து தான் இந்தியாவில் பெரும்பான்மையினரின் கருந்தாக இருக்கின்றது என்ற பேச்சும் இந்தியாவுக்கு அவமானம் என்பதே இந்த ஆவணப்படம் தடை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.

கட்டி காக்க இங்கே என்ன மானம் இருக்கென்று இந்த துள்ளல்னு எனக்கு புரியல, ஆவணபடத்தில் சொன்னாலும் சொல்லாடியும் இந்திய ஆண்களில் பெரும்பான்மையினோர் பாலியல் வன்புணர்வுக்கு காரணம் பெண்களே என்று தான் கருத்து தெரிவிக்கின்றனர்.

முருகன் என்ற ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சொல்கிறார். எங்கள் வீட்டிற்கு சொந்தகாரங்க யாராவது வந்தா வீட்டில் இருக்கும் பெண்கள் உள்ள போய் ஒழிஞ்சிக்குவாங்க, இன்னைக்கு அப்படியா இருக்கும் கலாச்சாரம்னு சொல்றார்.
மத அடிப்படைவாதிகள் பத்தி சொல்லவே வேண்டாம். மூடிவைத்த பழங்கள் கெடாது, ஒரு மொபைல் போனை பாதுகாக்க அதுக்கு உறை போட்ற, உன்னை(பெண்ணை) பாதுகாக்க பர்தா போடுன்னு பெண்ணை ஒரு மெட்டீயிரலா(பொருளா)தான் பார்க்குறாங்க.

இதுக்கு பின்னாடி இருக்கும் உளவியல் என்ன? 

ஆண்கள் யாரும் யோக்கியம் கிடையாது, எல்லாரும் பெண்ணை ரசிக்கதான் செய்கிறான். மற்ற உடைகளை விட இருப்பதிலேயே செக்ஸியான உடை சேலை என்பதும் அவனுக்கும் தெரியும். ஆனால் இம்மாதிரியான பாலியல் குற்றங்களின் போது அவனுக்குள் இருக்கும் குற்ற உணர்வு எட்டிபார்க்கிறது. தானே குற்றம் செய்தது போல் பாவிக்கிறான். குற்றத்தை நியாயப்படுத்த பெண்ணின் மீதே பழியை போடுகின்றான்.

மேலும் இந்த சமூதாயம் பெண்ணை ஆணுக்கு அடிமை என்றே சொல்லி வளர்த்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் எடுத்த சர்வேயில் 10% பெண்களுக்கு ஆர்கஸம் என்றால் என்னவென்றே தெரியாது என புள்ளிவிபரம் சொல்கிறது. இருவரும் ஜெயிக்கும் ஒரே விளையாட்டு செக்ஸ். ஆனால் ஆண் தன் தேவைக்கு மட்டுமே (பெண்ணின்)உடலையும், உறவையும் வைத்துக்கொள்கிறான். அந்த குற்ற உணர்வையும் மறைக்க பெண்ணை கேள்வி கேட்க விடாமல் அடிமை ஸ்தானத்திலேயே வைத்திருக்க முயல்கிறான். நைட்டு வெளிய என்ன வேலை உனக்கு. அதென்ன கண்டபயலுகளுடன் ஊர் சுத்துவது என்பதெல்லாம் ஒரு ஆணுக்கு மட்டுமே கட்டுபட்டவளாக பெண் இருக்கு வேண்டும் என்ற ஆணாதிக்க திணிப்பு,

ரெண்டு தலைமுறைக்கு முன் இந்தியாவில் ரவிக்கை(ஜாக்கெட்) என்பது நாகரீக பெண்கள் மட்டுமே அணிந்திருந்த ஒன்று. ரோசாப்பூ ரவிக்கைகாரி என்ற படத்தில் இதன் உளவியல் அழகாக காட்டப்பட்டிருக்கும். ஒரு பெண் பிரா, ரவிக்கை அணிய விரும்புவதே கலாச்சாரத்துக்கு எதிரான செயலாக பார்க்கப்படும். அப்போதெல்லாம் உடலியல் மீதான வன்முறைகள் ஏன் இல்லை?

மனித உளவியல் படி மறைபொருளின் மீதே உன் ஈர்ப்பு இருக்கும் என்பதே உண்மை. ஆனால் உடை தான் பாலியல் குற்றங்களுக்கு காரணம் என்பது ஒட்டுமொத்த ஆண்களின் பாலியல் வறட்சிக்கும்.குறைபாடுகளையும் மறைக்க ஆண், பெண் மீதே அம்பை திரும்பும் உக்தி. மேலும் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு உடை தான் காரணம் என்போர் வாய் ப்பப்பப்ப தான்.

உலகில் 90$ உயிரினங்கள் உடலுறுவு கொள்கின்றன ஆனால் ஒரு சில இனங்களுக்கு மட்டுமே ஆர்கஸம் என்ற உட்சகட்ட இன்பம் கிடைக்கிறது. உடலறுவு என்பது இனப்பெருக்திற்காக மட்டும் என்பதை தாண்டி கிடைக்கும் இந்த இன்பம் மட்டுமே மனிதனை உடலுறவின் பால் இவ்வளவு நாட்டம் கொள்ள வைக்கிறது. ஆனாலும் மனிதனின் அடிப்படை குணம் உன்னை சந்தோசப்படுத்தி நானும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பது தான். செக்ஸ் ஒன்றை தவிர மற்ற விசயங்களில் இதை கடைபிடிக்கவும் செய்கிறான், ஆனால் இதில் மட்டும் ஆணாதிக்க சிந்தனையும், இயலாமையும் பெண்ணை அடிமையாக வைத்திருக்கவே விரும்புகிறது. 

இன்று, நேற்றல்ல. சமூக அமைப்பான குடும்ப முறை உருவானதிலிருந்தே பெண்ணை ஆண் அடிமையாக தான் வைத்திருக்கின்றான். பொருள்முதல்வாதத்தின் படி என் சொத்து என் உரிமை என்பது எனக்கு பின்னால் என் வாரிசுகளுக்கு என்ற எண்ணம் தோன்றியதில் இருந்து ஆணாதிக்க சிந்தனையும் சேர்ந்தே வளர்ந்து வந்துள்ளது.

பாலியல் குற்றங்கள் அறவே நீங்க மக்களுக்கு கல்வியறிவு வேண்டும், போதிய வயதில் வெளிப்படையான செக்ஸ் கல்வி வேண்டும். சுய விருப்பத்துடன் பாலியல் தொழிலை தேர்தெடுப்பவர்களுக்கு சமூக அங்கிகாரம் அளித்து பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும். பிற்போக்கு தனங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும்.

அய்யோ சுய இன்பம் பண்ணியா, உன் வாழ்க்கையே போச்சேடா பேரண்டி, உன்னை நம்பி வரும் பெண் தெருவில் நிற்பாளேன்னு கதறி சீன் போடும் தாத்தாங்களுக்கு டீவி பொட்டியில் இடம் தர வைக்கும் இது கொஞ்சம் கஷ்டம் தான். அந்த தாத்தாகளை எல்லாம் தூக்கி கொஞ்சநாள் உள்ளவச்சா கொஞ்சமாவது நாடு உருப்பட வழி கிடைக்கும்.

1 வாங்கிகட்டி கொண்டது:

Annogen said...

//அந்த தாத்தாகளை எல்லாம் தூக்கி கொஞ்சநாள் உள்ளவச்சா கொஞ்சமாவது நாடு உருப்பட வழி கிடைக்கும்// ஹிஹி மெய்யாலும் உண்மைதான்...

!

Blog Widget by LinkWithin