ஷீட்டிங் அனுபவங்கள்! - 1

முதல் நாளில் இருந்தே நான் தயாராகிக் கொண்டிருந்தேன், சொதப்பிற கூடாது என்பதற்காக பலவாறு என்னை தயார் படுத்தினேன், கண்ணாடி முன் நின்று எனக்கு நானே நடிச்சு பார்த்தேன். கஜினியில் சத்யம் சொதப்பியது போல் சொதப்பிடுற கூடாது என்பதற்காக, ஹாய் ஐயாம் சஞ்சய் ராமசாமி என நூறு முறையாக சொல்லியிருப்பேன்.

எங்க தூக்கம் வர்றது, விடியற்காலையிலேயே எழுத்து பல்விழக்கி, தலைக்கு ரெண்டு வாட்டி ஷாம்பு போட்டு, உடம்புக்கு மூணு வாட்டி சோப்பு போட்டு. தவுண்ட் பைவ் ஹன்ட்ரன்ட் பக்ஸ் பீட்டர் இங்கிலாந்து சட்டை போட்டுட்டு டைரக்டர் முன்னாடி போய் நின்னேன்.


என்ன தல, ஐடி கம்பெனியில் வேலை செய்யுறவன் மாதிரி வர்றிங்க, உங்களுக்கு விவசாயி வேடம். இந்தாங்க உங்க காஸ்ட்யூம் என ஒரு லுங்கியும், கை வைத்த உள் பனியனும் தந்தார், உடை மாற்றி வந்ததும் தோளில் போட்டுக்க ஒரு துண்டு வேற. செத்தான்டா சேகரு, அன்னைக்கு எழுதும்போதே யாரோ வேண்டபட்ட மகராசி உட்ட சாபம் போலன்னு நடிக்க தயாரானேன்.

சீன் மற்றும் ஷாட்டெல்லாம் ஐடியா பண்ணிய பிறகு முதலில் என்னை வைத்து லாங்ஷாட்டெல்லாம் எடுத்தார் டைரக்டர். என்ட்ரி, டிஸ் என்ட்ரி. சே அசிங்கமா அர்த்தம் வருதே. அதாவது நான் சொல்ல வந்தது என்னான்னா முன்னாடி வர்றது, பின்னாடி போறது. அடக்கருமமே திரும்பியும் அதே அர்த்தம் தான் வருது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். தோட்டத்துக்குள் வருவது, தோட்டத்தை விட்டு வெளிய போற காட்சி சாமியோ!


டைரக்டர் சீன் மற்றும் ஷாட்டுக்கள் ஐடியா பண்ணும் போதே நானும் என் உடன் நடிக்க போகும் நண்பரும் டையலாக் சொல்லி பார்த்துக்கொண்டோம், என் மழலை மொழியில் நான் என்ன சொல்றேன்னு அவருக்கு புரியனும்ல 
முதல் வசன காட்சியில் தோட்டிற்குள் நுழையும் அவரை பார்த்து நான், யாருங்க நீங்க புதுசா இருக்குன்னு கேட்கனும். அவர் உள்ளே வந்ததும் கேட்டேன். அவர், என்னா பாஸ் இப்ப தானே பேசிகிட்டு இருந்தோம், அதுக்குள்ள மறத்துட்டிக்க பார்த்திங்களா எனவும் என்னையும் அறியாமல் கெக்கபிக்கன்னு சிரிச்சிட்டேன்
தொடரும்.....

ஏன் மரச்செக்கு எண்ணெய் ?

ஏன் இயற்கை விவசாயம்?
மண்ணின் தன்மை கெடாது. உரங்கள் மண்ணை மலடாக்கும். இயற்கை விவசாயத்தில் அறுவடைக்குக் காலம் எடுத்துக்கொண்டாலும் ரசாயன உரங்கள் இல்லாததால் பயிரில் வித்தன்மை இருக்காது. ரசாயன உரங்களில் விளைவிக்கப்பட்ட பொருட்களை விட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருள் விலை அதிகமாய் இருக்க காரணம் அதிலிருக்கும் உழைப்பு தான்.
ஏன் மரச்செக்கு எண்ணைய்?
சமையல் எண்ணெய் ஒரு குறிப்பிட்ட சூட்டுக்கு மேல் பயன்பாட்டுத் தன்மையை இழக்கிறது. இயந்திரச் செக்கில் எண்ணெய் எடுக்கும் போது அதன் வேகத்தால் எண்ணெய் அதிக சூடாகிறது. மேலும் ரீபைன்ட் என்ற பெயரில் காஸ்டிக் சோடா போன்ற ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. 30 வருடங்களுக்கு முன் இல்லாத புதுப்புது நோயெல்லாம் தோன்றக் காரணம் நமது உணவுப் பொருட்களே.
மரச்செக்கு முறை பாரம்பரியமானது. எந்த கலப்படமும் இல்லாத சுத்தமான கருப்பட்டி கொண்டு தான் அரைத்து எடுக்கிறோம். 
பயன்படுத்திப் பார்த்தால் அதன் சுவையும் மணமும் உங்களால் உணர முடியும்.
ஒரு லிட்டர் எண்ணெயின் விலை :
நல்லெண்ணெய்               -    320
தேங்காய் எண்ணெய்    -    280
கடலெண்ணெய்    -    220
தற்பொழுது பெட் பாட்டலில் வரும் எண்ணெய் விரைவில் தீங்கிழைக்காத பிளாஸ்டிக் பவுச்சிலும் வரவிருக்கிறது.
உங்களது ஆர்டர்களை 9003063176   என்ற எண்ணில் அழைத்துக் கூறலாம்.
ஃபேஸ்புக்கில் வால்பையன் அக்கவுண்டில் உள்டப்பியில்(chat) கூறலாம்.

பிற நண்பர்களுக்கும் சென்றடைய ஷேர் செய்யுங்கள் நண்பர்களே.

தமிழ் சமூகத்தின் விச ஜந்து ஜெயமோகன்!

எத்தனை பேர் படித்தீர்கள் தேர்வு செய்யப்பட்ட சிலர் என்ற http://www.jeyamohan.in/?p=13982 இந்த கட்டுரையை.

ஜெயமோகனின் சொம்புகளுக்கு அந்த கட்டுரை வேதவாக்காக இருக்கலாம், ஆனால் உங்களுக்கும் அவ்வாறே தோன்றினால் ஜெயமோகன் சொல்லியிருப்பது உங்களைத்தான், நீங்கள் பிறப்பாலே முட்டாள்கள் உங்களால் தம்படி பிரயோஜனம் கிடையாது. ஆம் என்று ஒத்துக்கொள்வீர்களா?

ஜெயமோகன் தம்மை எழுத்தாளாரக மட்டுமல்ல, உலகை உய்விக்க வந்த ஞானப்பிறவி என நினைத்துக்கொள்ளும் மனபிறழ்வு நோய்க்கு ஆளானவர். அவர் கண்ணில் படபவர்கள் அனைவரும் முட்டாள்கள் தான், அதிலும் மாற்று கருத்து கொண்டவர்கள் வாழவே தகுதியில்லாதவர்கள் என்று கூசாமல் சொல்லக்கூடியவர்.

தமது பேச்சை நிராகரித்து சென்ற ஈரோட்டு மக்களை காக்கைகள் கூட்டம் என்ற விமர்சித்து யானைப்பால் குடித்த மரமண்டை. இன்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் வருணாசிரம கொள்கையை தமது வாசகர்களுக்கு திணித்து கொண்டிருக்கிறது.

தொழில் அடிப்படையில் சாதி உருவானது ஆனால் இன்று சாதி அடிப்படையில் தொழில் இருக்கிறது, அதை மாற்றவே பெரியார் போன்ற சமூக ஆர்வலர்கள் போராடி அனைத்து மக்களும் சமம் என்ற கோட்பாட்டை நிறுவினர்.

பார்பனிய சமூகத்தில் பிறந்த சுஜாதா கூட வெகுஜன மக்களால் சிறந்த எழுத்தாளர் என ஏற்றுக்கொள்ளப்பட்ட போதும், என் எழுத்தை படிக்காதவர்கள் எல்லாம் முட்டாள்கள், அவனுங்க இதுக்கு தான் லாயக்கு என என்றும் பேசியதில்லை.

பார்பனியம் என்ற கொள்கையை எந்த மூதேவி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தம்மை எழுத்தாளர் என கூறிக்கொள்ளும் விசஜந்து ஜெயமோகன்.

சரி, அப்படி என்ன அந்த கட்டுரையில் இருக்குன்னு கேக்குறிங்களா? நீங்க ஜெயமோகனுக்கு குண்டி கழுவிவிட வரிசையில் நிற்கலாம்.

//ஆகவேதான் ‘எனக்கு புத்தகம் வாசிக்கவேண்டும் என்றே தோன்றவில்லை, ஏன் நான் வாசிக்கவேண்டும்?’ என்று ஒருவர் கேட்டபோது ‘என்ன வேலைசெய்கிறீர்கள்?’ என்றார் நித்யா. ‘மர ஏற்றுமதி’  என்றார் அவர். ‘அதைச்செய்யுங்கள். உங்கள் அம்மா அதற்காகத்தான் உங்களைப்பெற்றார்’ என்றார். குரூரமான பதில் என்று எனக்கு இப்போதும் தோன்றுகிறது. ஆனால் அது உண்மை.//

உங்க அம்மா உங்களை மரம் விற்கத்தான் பெற்றார் என்பதற்கும்,
உங்க அம்மா உங்களை கக்கூஸ் கழுவத்தான் பெற்றார் என்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும், அதுவும் பிறப்பின் அடிப்படையில். உங்க அம்மா அதுக்கு தான் பெற்றாராம். என்ன மாதிரியான விச வார்த்தைகள்.

அது நித்யா சொன்னது தானே என அப்பாவித்தனமாய் கேட்பவர் சற்றே ஓரம் நில்லுங்கள், உங்களுக்கு தடவி கொடுக்க ஜெயமோகன் வந்து கொண்டிருக்கிறார்.

ஈரோட்டு மக்களை காக்கைகள் கூட்டம் என்று சொன்ன போதே நேரில் பார்த்தால் கேட்கனும்னு தான் இருந்தேன். ஆனா இனி நேரில் பார்த்தால் வேற எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஜெயமோகன் முதலுதவி பெட்டியுடன் உலவுவது நலம்!

தேர்தல்-2014

டிஸ்கி: இவை முழுக்க முழுக்க என்னுயட சொந்தக்கருத்துகளே

இந்த நாடாளுமன்றத்தேர்தலில் தமிழகத்தில் சில முக்கிய கட்சிகள் தனித்து போட்டியிட்டது சிறப்பம்சம். அவர்களுடய வாக்கு வங்கி சதவிகத்தை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஆனாலும் முடிவுகள் பலருக்கு பெருத்த ஏமாற்றமே!

காங்கிரஸ்:-
           தமிழகம் மட்டுமல்ல அகில இந்திய அளவிலும் இக்கட்சி மண்ணைக்கவ்வியது சிலருக்கு அதிர்ச்சி, பலருக்கு ஆனந்தம். இக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஒவ்வொரு முறையும் விலைவாசி ஏற்றத்திற்கு மக்களின் வாங்கும் சக்தி அதிகமானதே காரணம் என்றாரே தவிர தங்களது ”கை”யாலாகதனத்தை ஏற்றுக்கொள்ளவேயில்லை.

இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட 2ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசாவின் வாக்குமூலம் வரும் வரை ராசா மட்டுமே குற்றவாளியாக பார்க்கக்பட்டார், பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் நன்கு தெரியும் என்ன நடந்தது என அவரளித்த வாக்குமூலம் காங்கிரஸின் எந்த பிரச்சாரத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

நிலக்கரி ஊழல் மற்றும் அதன் கோப்புகள் காணாமல் போனது, காமென்வெல்த் விளையாட்டுப்போட்டியில் நடந்த ஊழல் என இவர்கள் மேல் குற்றசாட்டுகள் இருந்தாலும் நாங்கள் எந்த ஊழலும் செய்யவில்லை என்ற இவர்களது பிரச்சாரத்திற்கு மக்கள் கொடுத்த பரிசே படுதோல்வி எனச்சொல்லலாம்.

திமுக:-
          இவர்கள் தோல்விக்கு முதல் காரணம் உட்கட்சி பூசல் தான் என்றால் பாவம் அவர்களாலே ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியே தெரியாதேயொழிய காங்கிரஸிற்கு சமமாக திமுகவிலும் கோஷ்டிகள் இருக்கின்றன. பல வேட்பாளர்களுக்கு அவர்கள் ஆதரவாளர்களை தவிர பிறர் பிரச்சாரம் செய்யவில்லை என்பதும் இவர்கள் தோற்க காரணம்.

எதிர்கட்சியான அதிமுக மீது குற்றசாட்டுகள் வைக்க பல காரணிகள் இருந்தன, மின்கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு மற்றும் சொத்துகுவிப்பு வழக்கில் தொடர் வாய்தா என, ஆகினும் திமுகவின் பிரச்சாரம் எடுபடாமல் போன காரணம். ஈழதமிழர்கள் விசயத்திலும், தமிழக மீனவர்கள் விசயத்திலும் திமுக செய்த துரோகம் மற்றும் நாடகம்.

பாஜக:-
           அகில இந்திய அளவில் தனித்து ஆட்சியமைக்க இவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும் தமிழகத்தில் ஒரு இடம் மட்டுமே வெற்றியடைய காரணம் தமிழகத்தில் இவர்கள் வைத்திருந்த கோமாளி கூட்டணியே காரணம்.

தேர்தலின் போது கேப்டன் டீவியின் டீ.ஆர்.பி. ரேட்டிங் எகிறியது. அனைத்தும் கேப்டனின் கோமாளித்தனங்களை பார்க்கவேயன்றி வேறொன்றுமில்லை. தேமுதிகவிற்கும், பாமகவிற்கும் தொகுதி பங்கீட்டில் இருந்த கசப்புணர்ச்சி தேர்தலிலும் தெரிந்தது. இருவரும் பரஸ்பரம் கூட்டணிக்காக போனாபோகுதுன்னு ஓட்டுக்கேட்டார்களேயொழிய யாரிடமும் அர்பணிப்பு இல்லை. மேலும் மோடி அலை என்பது தமிழகத்தில் எடுபடப்போவதில்லை என்பது காரணம். அதற்கு முற்போக்கு சிந்தனைவாதிகளின் சீரிய பிரச்சாரம் பயன்பட்டது

பாமக:-
           கூட்டணி வைத்தே அவர்களால் ஒரு சீட் தான் வர முடிந்தது. அதுவும் மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி மட்டுமே. மேலும் சாதி அரசியல் செய்ய சாதகமாக இருந்த தர்மபுரி தொகுதியில் மட்டும். மேலும் அவர்கள் சாதி அரசியல் மட்டுமே செய்வோம் என சொல்லிக்கொண்டிருந்தால் இனி வரும் தேர்தலிலும் அவர்கள் நிலமை மோசமடைய வாய்ப்புள்ளது.

மதிமுக:-
          பேச்சுதிறன் இருந்தாலும் சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பவர் என்ற முத்திரை இவர் மீது குத்தப்பட்டுள்ளது, இவர் கட்சியை பலப்படுத்தாமல் யார் தோளிலாவது யாரிக்கொண்டு சவாரி செய்து கொண்டிருப்பது இவரது கட்சிக்கு தான் ஆபத்து.

தேமுதிக:-
    ஜோக்கர் பாய்ஸ்

ஆம் ஆத்மி:-
          பரவலாக மக்களிடயே எங்கள் கட்சி போய் சேரவில்லை என்ற ஞாநியின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. பெரிதாக பிரச்சாரத்தில் இடம்பெறாத நோட்டா அளவு கூட ஆம் ஆத்மிக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. இவர்களது அனுபவமின்மை ஒரு காரணம். என்ன தான் இவர்களது கொள்கை என அவர்களுக்கே தெரியாதது இன்னொரு காரணம்.

அதிமுக:-
    தெரியாத தேவதையை விட தெரிஞ்ச பிசாசு எவ்வளவோ மேல் என்பதற்கான சான்று அதிமுகவின் 37 இடங்கள். கட்டண உயர்வு வந்த அளவு நலத்திட்டங்கள் வரவில்லை. இன்னும் இரண்டு வருட ஆட்சி அவர்களுக்கு கொடுக்கபட்டிருக்கும் வாய்ப்பு, பயன்படுத்தப்படவில்லை என்றால் சட்டமன்ற தேர்தலில் மக்கள் பரிசளிப்பார்கள்.

***

மத/கடவுள் மறுப்பாளனாகிய நான் ஆச்சர்யப்பட்ட விசயம் ஜம்மு-காஷ்மீரில் பாஜக 3 இடம், ஹிமாச்சல் பிரதேசத்தில் பாஜக அனைத்து இடங்களும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மோடி தலைமையிலான பாஜக ஆட்சி இந்த்துதுவாவை முன்னிறுத்தினால் அடுத்த தேர்தலிலேயே பாஜக மூன்றாமிடம் செல்லக்கூடும். மக்கள் விரும்புவது அமைதியை தான். நாங்க தான் பெருசு என்ற கர்வத்தை அல்ல!

உங்களுக்கு தெரிந்த காரணங்களை கமெண்ட்டில் சொல்லலாம்

      

ஆதலால் காதல் செய்வீர்!

அவரவர்க்கான சமரசங்களில்
காதல் அர்த்தபடுத்தப்படுகிறது!
புணர்தலில் காதலின்
வெளிபாடு தெரியும் என்கிறான்
நண்பனொருவன்
எதிர்பார்பற்ற காதலே
நேர்மையானது என்கிறாள்
தோழியொருத்தி
அர்பணித்தலில் காதலின்
சுகம் என்கிறான் மற்றொரு நண்பன்
காதலே பைத்தியகாரத்தனம் என்கிறாள்
மற்றொரு தோழி
பார்வையற்றோர் தடவிப்பார்த்த
யானையைப்போல் நின்றது காதல்
இதனால் யாதொரு
பாதகமும் இல்லை அதற்கு
எப்போதும் போல் அது காதலர்களை
மகிழ்வித்துக்கொண்டிருந்தது
எதோ ஒரு இடத்தில்!

அட்டென்சன் ரோமியோஸ்!

சமீப காலமா என் உள்டப்பில் ஓடுற படம்

“இந்த பொண்ணுங்களை எப்படித்தாங்க புரிஞ்சிகிறது” என்பது தான்.

நான் சுஜாதா படிச்சிருக்கியான்னு கேட்டா, இல்ல சினிமாவில் பார்த்திருக்கேன்றா,

மார்க்ஸ் தெரியுமான்னு கேட்டா நான் மேக்ஸில் 90 மார்க்குன்றா.

என்ன தாங்க பண்றதுங்கிறார் நண்பர்.

புரிஞ்சிகிறதுன்னா உனக்கு என்ன தெரியும், எனக்கு என்ன தெரியும் என்பதில்லைங்க.

உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் நாலெட்ஜ், எனக்கு இதெல்லாம் தெரியும்னு காட்டிகிறது. தேவைப்பட்ட இடத்தில் தேவையான அளவு வாந்தி எடுக்குறது.

நுண்ணறிவு என்னும் இண்டெலிஜென்ஸ் பத்தி கேள்வி பட்டுருக்கிங்களா? சமயோகிதபுத்தின்னு சொல்வாங்க. இடத்திற்கு தகுந்தாற்போல் நடந்துக்கொள்வதும் அதில் ஒன்னு.

ஒருத்தர் உங்களுக்கு ஃப்ரெண்டா இருக்குறதுக்கு தகுதிகள் நிர்ணயிச்சிங்கன்னா உங்களுக்கு நீங்களே ஃப்ரெண்டா இருக்க முடியாது. உங்களுக்கு என்ன தெரியும்னு கேட்டுகிட்டு இருக்குறதுக்கு ஆள் தேடாதிங்க. எப்பவும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்திலேயே இருங்க.

இயற்கையிலேயே பொண்ணுங்க ரொம்ப பாதுக்காப்பு உணர்வு மிக்கவுங்க. நான் இவ்ளோ ஃப்ராங்கா இருக்கேன், நீ ஏன் இல்லன்னு கோவிச்சிகிறது அர்த்தமற்றது.



நீங்க ஒருத்தரை அவுங்க அனுமதியில்லாம விரும்புறது இயற்கையாப்படலாம் ஆனா அம்மாதிரியான விசயங்கள் தான் முகத்தில் ஆசிட் அடிக்கும் அளவுக்கு போச்சு. முதல்ல ஃப்ரெண்டா பேசுங்க. உங்களை பற்றிய நல்ல அபிப்பிராயத்தை வளர்க்க முயற்சி பண்ணுங்க. வெட்டி நம்பிக்கையில் அவ கிடைப்பான்னு லவ் பண்றது உங்களை நீங்களே ஏமாத்திகிறது, ஏமாற்றம் கோவமாகும் போது வன்முறையில் முடியும்.

தெய்வீக காதல், கடலை மிட்டாய், புண்ணாக்கு கதையெல்லாம் இப்ப இருக்கும். ஆனா யதார்த்தம் வேற. இரு தரப்பினரிடமும் சரியான புரிதல் இல்லைனா நீங்க காதலிச்சாக்கூட அது ஒரு வருசத்தை தாண்டாது. இன்னைக்கு தேவதையா திரியுறவ அப்புறம் சனியனா தெரிவா!

உண்மையில் பொண்ணுங்களை புரிஞ்சிக்கிறது ரொம்ப ஈஸி. அதுக்கு நீங்க வாயை மூடிகிட்டு காதை திறந்து வச்சிகிட்டாளே போதும்.

நான் ஏன் சாதியத்தை எதிர்க்கிறேன்!

எவ்வளவோ காரணம் இருந்தாலும் இது ஒரு உதாரணத்திற்காக.

 நான் பிறந்தது மதுரையாக இருந்தாலும் அப்பாவின் சொந்த ஊர் தேனிக்கும், உசிலம்பட்டிக்கும் நடுவில் இருக்கும் கன்னியம்பட்டி. சின்ன வயசுல மூணுசாமின்னு குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்தோட கூட்டிட்டு போவாரு, வளந்தபிறகு நான் போறதில்ல.

அங்கே தேவர் சாதியினர் தான் ஆதிக்கம், வேறு எந்த சாதிக்கும் இல்லாத அளவு ஆதிக்கதிமிர் நிறைந்தவர்கள் அவர்கள். என் கண்ணால் பார்த்திருக்கிறேன். தெருவிற்குள் தாழ்த்தப்பட்டவர்கள் செருப்பணிந்து வர அனுமதியில்லை. தற்பொழுது கொஞ்சம் மாறியிருந்தாலும் தமிழகத்தில் நடந்த சாதி மோதலில் முதலிடத்தில் இருப்பவர்கள் தேவர் சாதியினராகத்தான் இருக்கும்.

இப்ப நான் எடுத்துக்கப்போற விசயம் வேற. காங்கிரஸ் தமிழ் இனத்திற்கு எவ்வளவு துரோகம் செய்துள்ளது என காங்கிரஸ் கட்சிக்காரங்க மனசாட்சிக்கே தெரியும். அதுவல்லாது 2ஜி, ஆதர்ஷ், காமன்வெல்த், நிலக்கரி என அவர்கள் ஊழல் செய்து நாட்டை குட்டிச்சுவராக்கியதும் நாம் அறிவோம்.



இந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி பகுதியில் திமுக, அதிமுக, மதிமுக என அனைவரும் தேவர் சாதியை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். காங்கிரஸ் சார்பில் இஸ்லாமியர்.

அப்பகுதியில் தாழ்த்தபட்டவர்கள் 15% அவர்கள் ஓட்டு நிச்சயம் தேவர் சாதியினருக்கு போகாது. இஸ்லாமியர் 10% அவர்கள் வாக்கும் மதவாத சக்திக்கு எதிராக என்று காங்கிரஸிற்கே வாய்ப்பு, ஒண்றையனா பெறாத இந்த புண்ணாக்கு சாதியால தமிழகத்தில் இருந்து ஒரு காங்கிரஸ் எம் பி போனா எவ்ளோ கடுப்பா இருக்கும்.

இப்படி சாதி வேட்பாளர்களா பார்த்து ஒவ்வொரு தொகுதியிலும் நிறுத்தி சாதியத்தை நீர்த்துப்போக செய்ய வேண்டிய கட்சிகளே அதை வைத்து அரசியல் செய்யும் பொழுது எப்படி நாடு உருப்படும். தமிழகம் சாதிய ரீதியாக பிரிந்து கிடக்காமல் ஒன்றாக இருந்தால் முல்லை பெரியார் அணையில் நம் உரிமை மறுக்கப்பட்டிருக்குமா?. காவிரி நீரில் நம் பங்கு மறுக்கப்பட்டிருக்குமா?

சக மனிதனின் உயிரை பறித்ததை விட இந்த சாதி உங்களுக்கு என்ன தான் செய்திருக்கிறது. தயவுசெய்து சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்

கடவுள்!.............


ஒருவன் எவ்ளோ பெரிய பக்தி பலாப்பழமாக இருந்தாலும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது உண்மையில் இந்த கடவுள் இருக்கா இல்லையா என யோசிப்பான். அப்படி யோசிப்பவனை திரும்ப இழுத்துப்போட்டு மதத்திற்குள் வைத்திருப்பதே மதத்தின் வெற்றி!

கடவுள் இல்லையென்றால் மதம் இல்லை. மதம் இல்லையென்றால் பிரிவினை இல்லை. பிரிவினை இல்லையென்றால் சண்டை இல்லை. இவ்வுலகில் நில ஆக்கிரமிப்பிற்காக நடந்த போர்களை விட அதிக மக்கள் மதசண்டையில் கொல்லப்பட்டுள்ளனர் என்றால் நீங்கள் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்.

கிறிஸ்தவனிடம் பேசினால் சிலுவையை பற்றிய உபதேசம் பிறருக்கு பைத்தியமாய் இருக்கிறது என்பான். இஸ்லாமியனுக்கு முஸ்லீம்கள் தவிர மற்ற அனைவரும் காஃபீர்கள். இந்துவிடம் பேசினால் நீ கடவுளை மறுத்தாலும் இந்துதான்னு பெரிய குண்டாத்தூக்கி போடுவான். ஆனா கடைசி வரை ஏன் கடவுள் எதற்கு கடவுள்னு யோசிக்க மட்டும் மாட்டான்.

ஆதியில் இருந்தே மக்கள் குழுமத்தை ஒரு தலைவன் நிர்வாகிக்கும் பழக்கம் மனித இனத்திற்கு உண்டு, அவன் என்ன சொன்னாலும் கேட்கனும் அப்பொழுது கடவுள் என்ற பதம் இல்லையேயொழிய அரசன் கடவுள் மாதிரி தான் நடத்தப்பட்டான். அவன் சிறப்பு பிறப்பு அவன் வம்சாவழிகளே மீண்டும் நம்மை நிர்வாகிக்க தகுதியானவர்கள் என்ற கட்டம் வரும்பொழுது அதில் சிக்கல் ஏற்படாமல் இருக்க அவனை முன்னிறூத்தி பல வழிபாட்டு துதிகளையும் பாடச்சொன்னேன். காலம் காலமாக அது தொடர்ந்து வருகிறது.

ஆதிகாலத்துக்கு மனிதனுக்கு இயற்கையின் மேல் இருந்த பயத்தை விட மரணத்தின் மேல் அதிக பயம் இருந்தது. அதுவரை அனுபவித்ததை அப்படியே விட்டு செல்லவேண்டும் என்பதை அவனால் ஜீரணிக்கமுடியவில்லை. இறப்பிற்கு பின் என்ன என்ற குழப்பத்தில் ஒருவனுக்கு ஏற்பட்ட கனவே மறுஜென்மத்திற்கான முதல் விதையை விதைத்தது. ஆம் ஒருவனது கனவில் வந்த இறந்தவன் அவனை குழப்பினான். அவன் எங்கே இருக்கிறான் எப்படி வந்தான் என யோசித்தவன் முடிவில் இதுவல்லாது எதோ ஒரு உலகம் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான்.

தகவல் தொடர்பே ஒன்றை தொட்டு அடுத்ததற்கு நம்மை யோசிக்க வைத்தது, அன்றிருந்த குறைந்தபட்ச தகவல் தொடர்பிற்கு அதற்கு மேல் மனிதனால் சிந்திக்கமுடியவில்லை. எதோ ஒன்று இருக்கிறது என்று முடிவுக்கு வந்தவன் நாளடைவில் அதற்கு உருவம் கொடுத்தான். குழுக்கள் பிரிந்தது ஒவ்வொருவரும் அவர்கள் வசதிகேற்ப வழிபாடுகளை வைத்துக்கொண்டனர். ஆபிரஹாம மதத்தின் தோற்றம் வரை உலகில் உருவ வழிபாடு மட்டுமே இருந்தது.

ஆபிரஹாம மதத்தின் தோற்றத்தின் போதே இந்தியசுற்று வட்டார பகுதிகளில் த்வைதம், அத்வைதம் என்ற உருவ மற்றும் உருவமற்ற வழிபாட்டு சிக்கல்கள் உருவாகின. கடவுளை மனிதனைப்போல் காது, மூக்கெல்லாம் வச்சு, தினம் காலையில் மனிதனைப்போலவே கக்கா போக வைப்பதெல்லாம் அவனால் ஏற்றுக்கொள்ள முடியாததே அதற்கு காரணம். நன்றாக சிந்தித்தி பார்த்தீர்களேயானால் உலகில் உள்ள மதம் அனைத்திற்கும் ஒன்றிற்கொன்று தொடர்பிருப்பது தெரியும்.

இன்று பகுத்தறிவு இல்லாத மனிதனே இல்லை M370 விமானம் ஆஸ்திரேலியாவிற்கு மேற்கே விழுந்து விட்டதாம் என்றால் தெக்கால போக வேண்டிய விமானம் ஏண்டா வடக்கால வந்துச்சு என உலக வரைபடம் தெரிந்த ஒவ்வொருவனும் கேப்பான். ஒருவிசயத்தின் அதிகபட்ச சாத்தியகூறுகளை ஆராய்வதே பகுத்தறிவு. கடவுள் விசயத்தில் மட்டும் ஏன் பலருக்கு பகுத்தறிவு வேலை செய்வதில்லை என தெரியவில்லை.

சிலரால் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அது கடவுள் செயல் என கன்னத்தில் போட்டுகொண்டு ஒதுங்கி சென்று விடுகிறான். அதை புரிந்து கொள்ள சிரத்தையே மேற்கொள்ளாதவன் கலைக்டர் போறார் கோயிலுக்கு, முதலமைச்சர் போறார் கோவிலுக்கு அவங்க என்ன முட்டாளா அதுனால நானும் போவேன் என்கிறான். சுயமா அறிவில்லாதவன் தான் அடுத்தவன் பண்ணான் நானும் பண்ணேன்னு சொல்லுவான்.

காலம் காலமாக தொன்று தொட்டு வந்த வழக்கம் என்பதால் உளவியல் ரீதியாக கடவுள் வழிபாடு சிறிது மன அழுத்ததை குறைக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன் ஆனால் அதுவே தீர்வாகாது. எதாவது ஒருகட்டத்தில் அதுவே உங்களுக்கு அதிக மன அழுத்தத்தைக்கொடுக்கலாம். உங்களது இயற்கை கடமைகளிலிருந்து நீங்கள் விடபட நினைக்கத்தோன்றும் அளவிற்கு கடவுள் பக்தி உங்களை இழுத்துச்செல்லும். பயந்து ஓடுபவர்கள் என அதை கடவுள் மறுப்பாளன் சொல்லுவான்

இவ்வுலகை படைத்தது கடவுள் என்றால் கடவுளை படைத்தது யார்?
கடவுள் சுயம்பு என்றால் ஏன் இவ்வுலகம் சுயம்பாக இருக்கக்கூடாது. இந்த பிரபஞ்சத்தை என்றேனும் பார்த்துள்ளீர்களா? அதற்கு முன் நாம் அணுவிலும் ஆயிரம் கோடி மடங்கு சிறியவர்கள். ஆனால் அந்த பிரபஞ்சத்தை அறியும் அறிவை பெற்றுள்ளோம். கற்றதை தகவல் தொடர்பு மூலம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றால் மட்டுமே இதற்கொரு தீர்வு கிடைக்கும். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதால் எந்தவித பயனும் இல்லை. எத்தனையோ கோடி பேர் பிறந்தது போல் நீயும் பிறந்தாய் செத்தாய் அவ்ளோ தான்.

இப்பிரபஞ்சம் உருவாக கடவுள் தேவை என்பவர்கள் உரையாடலுக்கு வரலாம்!

யாருக்கு உங்கள் ஓட்டு?

பொதுவா கட்சிகளோட கூட்டணி அந்த கட்சிக்கு இருக்கும் வாக்கு வங்கி அடிப்படையிலயே இருக்கும். கொள்கை கருப்பட்டியெல்லாம் சில நேரம் ரெண்டாம் பட்சம் தான், இந்த தேர்தல் அதுக்கு நல்லதொரு உதாரணம்.

தமிழகத்தின் ஆளுமை கட்சிகள்னா அது திமுக, அதிமுகன்னு ரெண்டும் தான் இது வரைக்கும் இருக்குது. அதுல உள்நோக்கி பார்த்தோம்னா 35 வயசுக்கு மேல இருக்குறவங்க தான் அந்த கட்சியோட உண்மையான வாக்கு வங்கி. கடந்த பத்து வருடத்திற்குள் கட்சியில் சேர்ந்தவங்க அவ்வளவு கொள்கைப்பிடிப்போட இருக்க மாட்டாங்க. பிரச்சாரத்துக்கே போனாலும் ஓட்டை மாத்தி குத்திட்டு போயிடுவான்

பெரிய கட்சிக்கே அந்த நிலமைன்னா பாமக, மதிமுக, தேமுதிக பத்தி சொல்லவே வேணாம். அவுங்களும் கட்சி உறுப்பினர் அட்டை இருந்தாலும் ஓட்டை அந்த கட்சிக்கு தான் போடுவாங்கன்னு சொல்ல முடியாது.

இது சாதாரண் விசயம் தானே, மேலும் அது அவுங்களோட உரிமைன்னு நாம பேசலாம். ஆனா கொஞ்சம் கூர்நோக்கி பார்த்தோம்னா மாற்றி விழும் ஒவ்வொரு ஓட்டும் பொது புத்தி அடிப்படையில் நான் ஜெயிக்கிறவன் பக்கம் நிக்கிறேன்னு போடும் ஓட்டு. அதுனால அவனுக்கு யாதொரு பயனும் இல்லைன்னு லேட்டா புரிஞ்சாலும் அடுத்த தேர்தல்லயும் அதே பொது புத்திக்குள்ள போயிருவான்.

ஒவ்வொரு தனிமனிதனுக்கு ஒரு அரசியல் நிலைப்பாடு இருக்கு, ஒரு பக்கம் கூட்டம் அதிகமாகும் பொழுது கோழைகள் மிகச்சர்வ சாதாரணமாக தங்களை சமரசம் செய்து கொள்கிறார்கள். கோழைகள் என்ற வார்த்தை கொஞ்சம் அதிக்கபடிதான். இயலாதவர்கள்னு வச்சுக்கோங்க.



நாம எதுக்காக ஓட்டுப்போடுறோம்? யாரோ ஒருத்தர் மேல போய் உட்கார்ந்துகிட்டு நல்லா அனுபவிக்கட்டும்னா, உங்களுக்கும், உங்களை சார்ந்த சமூகத்திற்கும் நல்லது பண்ணனும்னு தானே, அப்போ நமக்காக பாராளுமன்றத்தில் பேசக்கூடியவர்களால் தானே அது சாத்தியமாகும்

சாதிகாரருக்கு ஓட்டுப்போடுவிங்களோ, மத அபிமானத்தில் ஓட்டுப்போடுவிங்களோ, உங்களுக்காக குரல் கொடுக்கும் வேட்பாளருக்கு ஓட்டுப்போடுங்க. ஓட்டு போடாம இருக்குறதை விட தவறான ஓட்டு பெரிய தண்டனை கொடுக்கும். அழகிரி, ரித்தீஷ், ராமராஜன் மாதிரியான ஆட்களை செலிபிரட்டி மோகத்தில் ஓட்டுபோட்டு எண்ணத்த கண்டிங்க? வாயை திறந்து பேசுனாங்களா நாடாளுமன்றத்தில்?

உங்களுடய ஒவ்வொரு ஓட்டும் சமுதாய நலன் கருதி இருக்க வேண்டும். மாற்று கட்சியா, மாற்று சாதியா, மாற்று மதமான்னு பார்க்காதிங்க. நம் சமுதாயத்திற்கு நல்லது செய்வாங்களா, நமக்காக நாடாளுமன்றத்தில் பேசுவாங்களான்னு யோசிச்சு உங்க ஓட்டை கொடுங்கள்

சிறு தவறும் ஐந்து வருடத்திற்கான தண்டனையை அளிக்கும்!

மரண தண்டனையை எதிர்க்கிறேன்!

குற்றங்கள் நடக்கையில் பொதுமக்கள் பெரும்பாலோர் உணர்ச்சி அடிப்பையிலேயே அதை அணுகுகின்றனர்.
அதிகபட்ச தண்டனை/கடுமையான தண்டனை என்றாலே அவர்களுக்கு கண் முன் மரண தண்டனை தான் வந்து நிற்கிறது.

மரணதண்டனை பெற்ற கைதி மரணத்தின் போது ஐந்து நிமிடம் அந்த வலியை அனுபவிப்பானா? அதன் பின்?

மரணம் தண்டனை அல்ல, விடுதலை என நான் ஆரம்பத்திலிருந்தே வலியிறுத்தி வருவதன் காரணம் அதுதான், மரண தண்டனையால் குற்றங்கள் குறையும் என எந்த நாட்டிலும் நிரூபிக்கப்படவில்லை. அதனால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது, ஒரு மரண தண்டனையால் குற்றவாளியால் கொல்லப்பட்டவர் எழுந்து வரபோவதில்லை.

ஏன் குற்றங்கள் என சமூகம் ஆராய்வதேயில்லை, வேலையின்மை, அங்கிகாரமின்மை, ஆதிக்க மனப்பான்மை(ஆதிக்கசாதி மனப்பான்மையும் தான்), பாலியல் வறட்சி கூடவே குடி இப்படி சமூகமே ஒரு மனிதனை குற்றம் செய்ய தூண்டும் பொழுது எவ்வாறு நாம் தண்டனையின் மூலம் மட்டுமே குற்றங்களை குறைத்து விட முடியும் என நம்புவது?

குற்றவாளியின் மனநிலையையும், குற்றம் செய்ததற்கான காரணங்களையும் ஆராயும் பொழுது அந்த சூழ்நிலை மற்றவர்களுக்கு ஏற்படாமல் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த முடியும். அதன் பொருட்டு எந்த சிரத்தையும் எடுத்துக்கொள்ளாதது அரசாங்கத்தின் தவறு.

சமூகம் நல்ல ஆண்மகனை வளர்க்க தவறுகிறது, அவன் செய்யும் குற்றங்களுக்கு பெண்கள் மேல் பழிபோடுகிறதும் ஆம்பளைன்னா அப்படி இப்படித்தான் இருப்பான் என்ற மனநிலையை சமூகத்தில் திணித்தது குறித்து இச்சமூகம் வெட்கமோ, வேதனையோ அடைந்ததாக தெரியவில்லை.



ஒவ்வொரு குற்றவாளியின் பிண்ணனியிலும் ஒரு மோசமான குடும்ப சூழ்நிலையும், சமூக அமைப்பும் இருக்கிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா? மரண தண்டனையினால் குற்றங்கள் குறையும் என்றால் நாட்டில் முக்கால்வாசி பேரை தூக்கில் போட வேண்டுமே. அத்தனை வஞ்சங்களும் நெஞ்சில் வைத்துக்கொண்டு தானே அலைகிறான்.

பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்ற பழிவாங்கும் முறையினால் குற்றவாளி செய்த அதே தவறை தானே சமூகமும் செய்கிறது. இதை எவ்வகையில் நியாயப்படுத்தமுடியும். உணர்ச்சிமிக்கவர்களின் ஓட்டைப்பெற அதிகபட்ச தண்டனை வழங்க அரசு உத்தரவிடும் அதே நேரம் ஒவ்வொரு மனிதனின் மனிதனின் மனதிலும் பழிவாங்குவது தவறில்லை என்ற எண்ணமும் வளரும். அரசே எவ்வழியோ மக்களும் அதே வழியே!

பானைக்கு வைத்தியம் பார்த்தா எனக்கெப்படி வலிபோகும்!

ரொம்ப கஷ்டப்படுறேன்னு அம்மா பக்கத்துல விசாரிச்சாங்க,
ரத்த்கட்டா இருக்கும் இல்லைனா மூச்சுபிடிப்பா இருக்கும். மாணிக்கம்பாளையம் முக்குல ஒருத்தர் எடுப்பாருன்னு அட்ரஸ் கொடுத்துருக்காங்க.

காலையிலயே நேரமா போயிட்டோம். அவரு விசயம் கேட்டுட்டு இருங்க தள(இலை) பறிச்சிட்டு வர்றேன்னு போயிட்டாரு, அரைச்சு பத்து போடுவாரு போலன்னு நினைச்சேன். ஒரு மண்பானை எடுத்துட்டு வந்து அது மேல இலையை கசக்கி + மார்க் போட்டாரு. நான் வேடிக்கை பார்த்துகிட்டே இருந்தேன்

உள்ளிருந்து ஒரு தாம்பாளதட்டு எடுத்துட்டு வந்தாரு, என்ன வைத்திய முறைன்னே புரியாம ஆச்சர்யமா பார்த்துகிட்டு இருந்தேன், அந்த தாம்பாளத்தில் முழுக்க தண்ணீர் ஊற்றினார். என்னை செருப்பை கழட்டிட்டு ஓரமா நிற்க சொன்னாரு. கவனிக்க, என்னை தொடக்கூட இல்லை.

கொஞ்சம் பேப்பர் எடுத்துட்டு வந்து அதை தீயிட்டு மண்பானைக்குள் போட்டாரு, அப்படியே தாம்பாளத்தட்டில் கவுத்துனாரு, கொஞ்சநேரத்தில் தட்டில் இருந்த தண்ணியை பானை உறிஞ்சிகிச்சு, பார்த்திங்களா மூச்சுகட்டு தான் இதுன்னாரு. இந்த தண்ணி கொஞ்ச கொஞ்சமா ரிலீஸ் ஆகும். அப்படியே உங்களுக்கு மூச்சுகட்டும் ரிலீஸ் ஆகும்னாரு.

எங்கம்மா வலி குறைஞ்சிருக்காடான்னுச்சு, பானைக்கு வைத்தியம் பார்த்தா எனக்கெப்படிமா குறையும்னு கேட்டேன். அவரு ஸ்ட்ராங்கா சொல்றாரு, சாயங்காலம் 6 மணிக்கு வாங்க கண்டிப்பா வலி இருக்காதுன்னு, ஒரு டம்பளர் எடுத்துட்டு வாங்க இதே ஜிமிக்ஸ் வேலையை நான் செஞ்சு காட்டுறேன்னு சொன்னேன். அதுக்கு மேல இருந்த நான் சண்டை போடுவேன்னு எங்கம்மா கூட்டிட்டு வந்துருந்துச்சு.

இந்த சீன பாரம்பரிய வைத்தியத்தை லோக்கலிலும் செய்யுறாங்க, பழைய பத்துபைசாவில் ஒரு சூடம் வச்சு என் முதுகில் வலி இருக்கும் இடத்தில் வச்சாங்க. அதை பற்றவைத்து அதன் மேல் டம்ப்ளரை கவுத்தினாங்க, உள்ளே வெற்றிடம் ஆகி என்னை கெட்டியா பிடிச்சிகிச்சு. பத்துநிமிடம் அப்படியே தான் இருந்தது.

முன்னைக்கு கொஞ்சம் நல்லா குனிய முடியுது, வலியும் குறைஞ்சிருக்கு, இன்னும் ரெண்டு நாளைக்கு இதையே செய்யலாம்னு இருக்கேன். இந்த வைத்திய முறையை கராத்தேகிட் படத்தில் ஜேடன் ஸ்மித்துக்கு ஜாக்கிசான் பண்ணுவார்

கொஞ்சம் உளவியல் பேசலாம் வாங்க!

ஹோட்டல் லாஸாகி, கடனாளி ஆகி சென்னைக்கு வேலைக்கு போனேன். அங்க கொடுத்த டார்கெட் பிரஸ்ஸரால் மன உளைச்சலாகி திரும்ப ஈரோட்டுக்கே வந்துட்டேன். சரியான வேலை எதுவும் அமையல, கிடைச்சதை பார்த்து வாழ்க்கையை ஓட்டிகிட்டு இருந்தேன்.

அந்த நேரத்தில் தான் அப்பா சீரியஸா இருந்தாரு, நொறுக்கிட்டேன். நண்பர்கள் உதவியுடன் உயிரை காப்பாத்துன பிறகு வந்துச்சு அடுத்த அடி, என் தோளில் அமர்ந்திருந்த சுமை ஒன்று என்னை கூர்வாளால் குத்திக்கொண்டிருந்தது.

மன உளைச்சல் மனச்சிதைவு நிலைக்கு போனது, வார்த்தையால் எப்படி விவரிக்கிறதுன்னு தெரியல. முதல்ல தூக்கம் போச்சு, அப்புறம் என் மனசுக்குள்ள இன்னொரு பர்சனாலிடி உருவான மாதிரி ஆச்சு. லேசா கண்ணை மூடுனா உள்ளுங்கள்ள ரெண்டு பேர் பேசிகிட்டே இருப்பாங்க.

நீ தோத்துட்ட, நீ வாழ்றதே வேஸ்ட், எல்லாரும் உன்னை வெறுக்குறாங்கன்னு. ஆளவந்தான் படத்துல கமலை பல உருவங்கள் வந்து தொல்லை கொடுத்துகிட்டே இருக்குமே அது மாதிரி பலர் வருவாங்க. என்னை அறியாமல் என் மனசு அதை நம்ப ஆரம்பிச்சு. என்னை சுத்தி இருந்த எல்லாத்தையும் சந்தேகப்பட்டேன். யார்கிட்டயும் எதையும் பகிர்வதில்லை, எல்லாரும் என்னை வாழவிடாம அவமான படுத்தி தற்கொலை செய்துக்கனும்னு நினைக்கிறாங்கன்னு மனசு சொல்லிகிட்டே இருக்கும்

அடுத்த கட்டத்துக்கு போச்சு மனச்சிதைவு. பைப்ல இருந்து வர்ற தண்ணி, வண்டி ஓடுற சத்தம், ஃபேன் சுத்துற சத்தத்துல எல்லாம் குரல் கேக்க ஆரம்பிச்சது, இசையமைப்பாளர் போடும் டியூனுக்கு பாடலாசிரியர் எழுதும் வசனம் போல மனம் மாயை பண்ணுச்சு. ஆனா நான் அதை நம்பும் அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தேன்.

அந்த மாதிரி நேரத்துல நம்மை நம்பும், நமக்கு நம்பிக்கை தரும் நண்பர்களால் மட்டுமே நம்மை காப்பாற்ற முடியும். அந்த நேரத்தில் என்னை சுழலில் இருந்து கரை சேர்த்தது
Surya Prakash கூத்தன் Rakshasan Ganesamoorthy Lives-in Flux Karthik Ero ஈரோடு சசி வா.மு. கோமு இவுங்க தான்.

ஒரு கட்டத்தில் என் தோளில் இருந்த சுமையை இறக்கி வைக்கும் சந்தர்ப்பம் அமைந்தாலும் காயமான மனசு சட்டென்று ஆறவில்லை. எனது பிரச்சனைகள் தொடர்ந்தது. அந்த நேரத்தில் உள்ளுங்கள் நடப்பதை வெளியிருந்து கவனி என்ற ஆன்மிக பாணியில் போயிருந்தால் சிதைவு முத்தி எனக்கு கற்பனை உருவங்கள் தெரிய ஆரம்பிச்சிருக்கும், அப்புறம் சிகிச்சை இல்லாமல் சமூகத்தில் நடமாட முடியாத நிலை தான் ஏற்படும். மனசிதைவு உள்ளவர்கள் இறந்தவர்களை பார்த்ததாக சொன்ன ரிக்கார்ட்ஸ் இருக்கு. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருந்தால் கடவுளை பார்த்ததாக சொல்லியிருப்பேன், இல்லைனா நான் தான் கடவுள்னே சொல்லியிருப்பேன். நல்லவேளை ராமகிருஷ்ண பரமஹம்சர் தொட்ட சிதைவுக்கு நான் போகல :)

 ஒருகட்டத்தில் கவுன்சிலிங் போயே ஆகனும்னு ஃபேஸ்புக்கில் புலம்பினேன், அதிலிருந்து வெளிவர நான் ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சேன்.

பழசை மறக்க புதுசா எதாவது பண்ணுன்னு ரிசல்ட் சொல்லுச்சு, சோக/புலம்பல் கவிதைகள் எழுதுறதை விட்டுட்டு பொது அறிவு விசயங்கள் தேடுனேன். #சில_தகவல்கள் பிறந்தது.

அதை பார்த்த சிபிசெல்வன் மலைகள் இணைய இதழில் அறிவியல் கட்டுரைகள் எழுதச்சொன்னார். ஏற்கனவே உளவியல் பற்றி நிறைய ஆராய்ச்சி பண்ணி வச்சிருந்ததால் எளிமையாக புரியிற மாதிரி அதையே மாதம் இரண்டு கட்டுரை எழுதலாம்னு இருக்கேன்.(ப்ளாக்கில் என்னுடய அறிவியல் கட்டுரைகள் படிச்சிருப்பிங்கன்னு நம்புறேன், இல்லைனா சொல்லுங்க லிங்க் தர்றேன்)

கூடவே ஒரு வேண்டுகோள். உளவியல் பிரச்சனைகளை பேசிடனும். அதும் அதை பற்றி புரிஞ்சிவங்க கிட்ட. மத்தவங்கன்னா குரு குப்புற படுத்ததுருக்கான், ராகு நட்டுகிட்டதும் சரியாகிடும்னு முத்த விட்ருவாங்க. உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கோ நடவடிக்கையில் எதாவது வித்தியாசம் உணர்ந்தா/தெரிஞ்ச எனக்கு உள்டப்பியில் சொல்லலாம் அல்லது மெயில் பண்ணுங்க. arunero@gmail.com போன் நம்பர் 9003063176

பேசலாம் நிறைய

ஜன்னலோர இருக்கையின் வன்மங்கள்!...

என்னை வெறுத்து
உலகம் பின்னோக்கி சென்றது
காற்று என் முகத்தில்
வேகமாக அறைந்தது.
எதிரில் அமர்ந்திருந்த குழந்தை 
என்னைப் பார்த்து அழுதது.

புத்தகத்தின் அட்டையை பார்த்தேன்
என்ன புரிந்து கொண்டாளோ அப்பெண்
தன் மாராப்பை இழுத்து மூடினாள்.
காசு போடாததால் பிச்சைக்காரர்
பூச்சியை போல் என்னை பார்த்தார்.

சூனியமாகிவிட்ட உலகில்
தனித்து விடப்பட்டவன் ஆனேன்.
மறுமுறை ரயிலில் ஏறியவுடன்
தூங்கிவிட வேண்டும்!



!

Blog Widget by LinkWithin