அட்டென்சன் ரோமியோஸ்!

சமீப காலமா என் உள்டப்பில் ஓடுற படம்

“இந்த பொண்ணுங்களை எப்படித்தாங்க புரிஞ்சிகிறது” என்பது தான்.

நான் சுஜாதா படிச்சிருக்கியான்னு கேட்டா, இல்ல சினிமாவில் பார்த்திருக்கேன்றா,

மார்க்ஸ் தெரியுமான்னு கேட்டா நான் மேக்ஸில் 90 மார்க்குன்றா.

என்ன தாங்க பண்றதுங்கிறார் நண்பர்.

புரிஞ்சிகிறதுன்னா உனக்கு என்ன தெரியும், எனக்கு என்ன தெரியும் என்பதில்லைங்க.

உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் நாலெட்ஜ், எனக்கு இதெல்லாம் தெரியும்னு காட்டிகிறது. தேவைப்பட்ட இடத்தில் தேவையான அளவு வாந்தி எடுக்குறது.

நுண்ணறிவு என்னும் இண்டெலிஜென்ஸ் பத்தி கேள்வி பட்டுருக்கிங்களா? சமயோகிதபுத்தின்னு சொல்வாங்க. இடத்திற்கு தகுந்தாற்போல் நடந்துக்கொள்வதும் அதில் ஒன்னு.

ஒருத்தர் உங்களுக்கு ஃப்ரெண்டா இருக்குறதுக்கு தகுதிகள் நிர்ணயிச்சிங்கன்னா உங்களுக்கு நீங்களே ஃப்ரெண்டா இருக்க முடியாது. உங்களுக்கு என்ன தெரியும்னு கேட்டுகிட்டு இருக்குறதுக்கு ஆள் தேடாதிங்க. எப்பவும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்திலேயே இருங்க.

இயற்கையிலேயே பொண்ணுங்க ரொம்ப பாதுக்காப்பு உணர்வு மிக்கவுங்க. நான் இவ்ளோ ஃப்ராங்கா இருக்கேன், நீ ஏன் இல்லன்னு கோவிச்சிகிறது அர்த்தமற்றது.நீங்க ஒருத்தரை அவுங்க அனுமதியில்லாம விரும்புறது இயற்கையாப்படலாம் ஆனா அம்மாதிரியான விசயங்கள் தான் முகத்தில் ஆசிட் அடிக்கும் அளவுக்கு போச்சு. முதல்ல ஃப்ரெண்டா பேசுங்க. உங்களை பற்றிய நல்ல அபிப்பிராயத்தை வளர்க்க முயற்சி பண்ணுங்க. வெட்டி நம்பிக்கையில் அவ கிடைப்பான்னு லவ் பண்றது உங்களை நீங்களே ஏமாத்திகிறது, ஏமாற்றம் கோவமாகும் போது வன்முறையில் முடியும்.

தெய்வீக காதல், கடலை மிட்டாய், புண்ணாக்கு கதையெல்லாம் இப்ப இருக்கும். ஆனா யதார்த்தம் வேற. இரு தரப்பினரிடமும் சரியான புரிதல் இல்லைனா நீங்க காதலிச்சாக்கூட அது ஒரு வருசத்தை தாண்டாது. இன்னைக்கு தேவதையா திரியுறவ அப்புறம் சனியனா தெரிவா!

உண்மையில் பொண்ணுங்களை புரிஞ்சிக்கிறது ரொம்ப ஈஸி. அதுக்கு நீங்க வாயை மூடிகிட்டு காதை திறந்து வச்சிகிட்டாளே போதும்.

9 வாங்கிகட்டி கொண்டது:

ரூபன் said...

வணக்கம்

நல்ல கருத்தை பதிவு செய்துள்ளீர்கள் இறுதியில்.சொன்னது சிறப்பு..பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
என்பக்கம் கவிதையாக
எப்போது ஒளிருமட வசந்த காலம்...... வாருங்கள் அன்போடு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

saamaaniyan saam said...

எனக்கு இதெல்லாம் தெரியும்ன்னு காட்டிக்கிறது மாதிரி எனக்கும் காதலி இருக்கான்னு காட்டிக்க காதலிக்கறதாலதானே பிரச்சனை ! சுஜாதா படிச்சி மார்க்ஸ் பத்தி தெரிஞ்சிக்கிட்டாலும் பத்தாது, அடுத்தவ மனச, அவளோட உணர்வுகளை புரியனுமே முதல்ல !!!

saamaaniyan.blogspot.fr

karthikeyan k.s said...

penkalin manathai purinthukolla penkalal mudiayathu athu aankalal matuma mudiyum

by
www.supertamilan.blogspot.in

HariShankar said...

// உண்மையில் பொண்ணுங்களை புரிஞ்சிக்கிறது ரொம்ப ஈஸி. அதுக்கு நீங்க வாயை மூடிகிட்டு காதை திறந்து வச்சிகிட்டாளே போதும். // :-)

!

Blog Widget by LinkWithin