ஜன்னலோர இருக்கையின் வன்மங்கள்!...

என்னை வெறுத்து
உலகம் பின்னோக்கி சென்றது
காற்று என் முகத்தில்
வேகமாக அறைந்தது.
எதிரில் அமர்ந்திருந்த குழந்தை 
என்னைப் பார்த்து அழுதது.

புத்தகத்தின் அட்டையை பார்த்தேன்
என்ன புரிந்து கொண்டாளோ அப்பெண்
தன் மாராப்பை இழுத்து மூடினாள்.
காசு போடாததால் பிச்சைக்காரர்
பூச்சியை போல் என்னை பார்த்தார்.

சூனியமாகிவிட்ட உலகில்
தனித்து விடப்பட்டவன் ஆனேன்.
மறுமுறை ரயிலில் ஏறியவுடன்
தூங்கிவிட வேண்டும்!3 வாங்கிகட்டி கொண்டது:

Ramani S said...

பயண அவஸ்தையைப்
பகிர்ந்த விதம் அருமை

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

கவிப்ரியன் ஆர்க்காடு said...

கவிதையில் கழிவிறக்கம் வழிந்தோடுகிறது!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : காக்கையும் குருவியும் எங்கள் ஜாதி

!

Blog Widget by LinkWithin