குவியல்!...(03.09.10)

வேகமாக வண்டி ஓட்டி கோவை சாலையை திணறடிக்கும் தாரணிபிரியாவுக்கு இன்று பிறந்தநாள்!, இவர் வண்டி ஓட்டி வருவதை பார்த்து லாரிகள் கூட பயந்து வழிவிடுமாம்!, வேகமானவருக்கு இங்கே வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!


இன்னைக்கு என்னுடய பாஸ் கார்த்திக்குக்கும் பிறந்தநாள்!
ரகசியகனவுகள் என்று ஒரு ப்ளாக் வச்சிருந்தார், அது ரகசியமாகவே இருக்கட்டும்னு ப்ளாக்கையே அழிச்சிட்டார்!, விளம்பரம் பிடிக்காத மனிதர், மகா பொறுமைசாலி!
எனக்கு மிரட்டல்கள் வரும்போதும் சிரிச்சிகிட்டே நக்கலடிப்பார்!
எனக்கு மாசாமாசம் சம்பளமும் கொடுத்து, மொக்கை போட கம்பியூட்டரும் கொடுத்து அழகு பார்க்கும் என் பாஸ் கார்த்திக்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வெள்ளை பனியன் போட்டிருப்பது பூபதி, அப்போ கார்த்திக் யாரு!?


**************

பத்திரிக்கைத்துறையை ஆக்கிரமித்த வலைப்பதிவர்கள் தற்பொழுது தொலைக்காட்சித்துறையையும் ஆக்கிரமிக்க ஆரம்பத்திவிட்டனர்!.

வலைப்பதிவோ அல்லது வலைப்பதிவர் பெயரோ போடாமல் இனி ஆனந்தவிகடன் பார்க்க முடியாது போல் இருக்கு!, அவர்கள் ஆள் கிடைக்காமல் அதை செய்வதில்லை, வலைப்பதிவு என்னும் ஊடகத்தின் மூலம் நீங்கள் வெளிப்படுத்தும் திறனுக்கான பரிசு அது!

ஜெயா டீவி காலைமலரை முதலில் ஆக்கிரமிக்கத் தொடங்கிய வலைப்பதிவர்கள், விஜய்டீவியின் நீயாநானாவில் கூட்டமாக போய் அசத்திவிட்டனர்!, அப்துல்லாவிற்கும், நர்சிம்மிற்கும் நிறைய பேச வாய்ப்பு கிடைத்தது, அமுல்பேபி பட்டர்ப்ளை சூர்யா நீண்ட நேரம் க்ளோசப்பில் காட்டப்பட்டார்! பரிசு வாங்கிய நர்சிம்மிற்கு வாழ்த்துக்கள்!

வருங்காலத்தில் வலையின் வீச்சு பரவலாக இருக்கும் என்ற அப்துல்லாவின் கூற்றும், இருக்கும் டெக்னாலஜியைப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம் என்ற மற்ற பதிவர்களின் வாதமும் ஏற்றுகொள்ளப்பட வேண்டியதே!, எந்த விசயத்தையும் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் நம்மால் பார்க்க முடியும்! எதிர்மறையை மட்டுமே பார்ப்பது அதை பூதாகரமாக தான் காட்டும்!, நான் கம்பியூட்டர், இணையம் என்பதை தெரிந்து கொண்டதே செக்ஸ் சைட்டுகள் மூலம் தான், அதற்காக இன்றும் அதற்குள்ளேவா உட்கார்ந்திருக்க முடியும்! அதிலிலுள்ள மற்ற பயன்தரும் விசயங்களை இப்பொழுது தேட ஆரம்பித்து விட்டோம் இல்லையா!

வரும் சந்ததியினருக்கு ஆக்கப்பூர்வமாக ஊக்கப்படுத்துவது நம் கையில் தானே இருக்கு!

*************

பெரிதாக இமேஜ் எதையும் உருவாக்கி கொள்ளாமல் வாழ வேண்டும் என்று நினைப்பவன் நான்! அதில் ட்ரஸ் கோடும் ஒன்று, இரண்டு நாள் முன்பு ஈரோடு கதிர், என்ன வால் தீடிர்னு சர்ட்ல வர்றிங்கன்னு கேட்கும் போது தான் எனக்கு ஒரு dress code வந்துருச்சுன்னு தெரியவந்தது! எப்போதும் கார்கோ பேண்ட், டீ ஷர்ட் அல்லது நெக் பனியன் என்றே சுற்றி கொண்டிருக்கிறேன்! வெளியே விசாரித்தபோது தான் தெரிந்தது, யூத்தெல்லாம் இப்படி தான் ட்ரெஸ் பண்ணுவாங்களாம்!


*************

என் இரண்டாவது மகளுக்கு வருணா என பெயர் வைக்க திட்டமிட்டு உள்ளோம்!
வர்ஷா பிற்க்கும் போதும் நல்ல மழை, வருணா பிறக்கும் போதும் நல்ல மழை! இருவருக்கும் ஒரே அர்த்தம் தருவது போல் பெயர் இருப்பதும் சிறப்பு தானே!, வர்ஷா பிறந்தபோது இருந்ததை விட வருணா கூட அதிக நேரம் இருக்க முடியுது! போட்டோ எடுக்கத்தான் எங்கம்மா விட மாட்டிங்கிறாங்க! கொஞ்சநாள் ஆகட்டும், எடுத்து போடுறேன்!

*************

திருமண இலவச விளம்பரங்களுக்கு நண்பர்களிடமிருந்து புரோபைல் வந்து கொண்டிருக்கிறது, நிறைய வரும்பொழுது தனி ப்ளாக் ஆரம்பிச்சு அதில் செய்யலாம், சில நண்பர்கள் உங்கள் கொள்கை கட்டுப்பாடுகளை கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாமே என்கிறார்கள், நண்பர்கள் விரும்பினாலும் அவர்களது பெற்றோர்களுக்காக சில விசயங்களை அனுசரித்து போக வேண்டுமாம்!, பெற்றோர்களை குளிர்விக்க தான் திருமணம் என்றால் அதற்கு ஏகப்பட்ட மேட்ரிமோனியல் இருக்கு, நான் அந்த விளையாட்டுக்கு வரல! எந்த சூழ்நிலையிலும் தம்மை சமரசம் செய்து கொள்ளாத தைரியமான மனிதர்களுக்கு மட்டும் தான் இங்கே விளம்பரம்!

புரோபைலில் கொடுக்கும் தகவல்கள் நல்லெண்ண அடிப்படையில் எந்த மாற்றமும் எங்களால் செய்யப்படாமல் அப்படியே வெளியிடப்படுகிறது, அதிலுள்ள உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது உங்கள் கடமை என்று முன்னரே சொல்லி விடுகிறேன்!, தயவுசெய்து பயனளிக்கும் வகையில் பயன்படுத்த உதவுங்கள்!

தனி ப்ளாக்கோ அல்லது வலைத்தளமோ ஆரம்பிக்கும் பட்சத்தில் நான் ஒருவனாக பார்த்து கொள்வது கொஞ்சம் கடினம், ஆகையால் அனுபவம் மிக்க மற்றும் ஆர்வம்மிக்க நண்பர்களை உடன் இருந்து தோள் கொடுக்க அழைக்கிறேன், விருப்பமுள்ளவர்கள் மெயிலுங்கள்!

**************

புதிய பதிவர்கள் பலருக்கு வேர்டு வெரிபிகேஷனை எடுக்க தெரியவில்லை, NHM உபயோகித்து பின்னூட்டம் இடுபவர்கள் அம்மாதிரி தளங்களில் பின்னூட்டம் இட கடுப்படைவார்கள், எடுக்க மாட்டோம் அப்படியே வச்சிருப்போம், பின்னூட்டம் போட்டா போடு, இல்லாட்டி போ என்பவர்களுக்கு இது இல்லை!


dash board -> settings -> comments போய் கீழே இதை மாற்ற வேண்டும், விருப்பமுள்ளவர்கள் மாடுரேஷன் வைத்து கொள்ளவும் சுட்டிக் காட்டியுள்ளேன்!

*************

எழுத்துக் கவிதைக்கு பதிலா இன்று புகைப்படக் கவிதைகள்!
இவர்களெல்லாம் எனக்குப் பிடித்த நடிகைகள்!








ஏன் பிடிக்கும் என்ற விவாதத்தை தனி மடலில் வைத்து கொள்லலாம்!

68 வாங்கிகட்டி கொண்டது:

ப்ரியமுடன் வசந்த் said...

தா.பிக்கும்.. தங்கள் பாஸ் கார்த்திக்குக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்

priyamudanprabu said...

ஏன் பிடிக்கும் என்ற விவாதத்தை தனி மடலில் வைத்து
//////

haha y?

உமர் | Umar said...

//திருமண இலவச விளம்பரங்களுக்கு நண்பர்களிடமிருந்து புரோபைல் வந்து கொண்டிருக்கிறது,//

ஏற்கனவே திருமணம் ஆனவுங்களும் அனுப்புறாங்களா தல?

ஈரோடு கதிர் said...

கார்த்திக்
மற்றும்
தாரணிப்பிரியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

ஈரோடு கதிர் said...

கார்த்திக் பிறந்த நாள் மெனு
காலை 11.30 லெமன் டீ
மாலை 05.00 சுக்கு டீ
இரவு 9.30 @#$%^&* டீ

ராம்ஜி_யாஹூ said...

எந்திரன் பார்க்க போக வில்லையா விமர்சனப் பதிவு எங்கே

அகல்விளக்கு said...

தாரணி அவர்களுக்கும், கார்த்திக் அவர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....

கோவி.கண்ணன் said...

2 பேருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்

க.பாலாசி said...

ரெண்டுபேருக்கும் வாழ்த்துக்கள்.

//எனக்கு மிரட்டல்கள் வரும்போதும் சிரிச்சிகிட்டே நக்கலடிப்பார்!//

ஆனாலும் அவரு ரொம்ம்ம்ப நல்லவருங்க...

புரட்சித்தலைவன் said...

nice post

சத்ரியன் said...

கார்த்திக்,தாரணிப்பிரியா இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!

சத்ரியன் said...

//கார்த்திக் பிறந்த நாள் மெனு
காலை 11.30 லெமன் டீ
மாலை 05.00 சுக்கு டீ
இரவு 9.30 @#$%^&* டீ//

வாலு,

மேல இருக்கிற டீ வரிசையில, கடைசி வரில இருக்கிற “டீ” எங்க கெடைக்குதுன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க சாமி.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

youth????

T.V.ராதாகிருஷ்ணன் said...

கார்த்திக்
மற்றும்
தாரணிப்பிரியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

நிகழ்காலத்தில்... said...

//எந்த விசயத்தையும் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் நம்மால் பார்க்க முடியும்! எதிர்மறையை மட்டுமே பார்ப்பது அதை பூதாகரமாக தான் காட்டும்!//

எனக்குப் பிடித்தது :))

கவிதைகளும்தான் :)))

sathishsangkavi.blogspot.com said...

கார்த்திக்,தாரணிப்பிரியா இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்....

வருணாவிற்கு என் வாழ்த்துக்கள்.... அழகான பெயர்...

புகைபடங்கள் கவிதையை விட அழகு...

தனி காட்டு ராஜா said...

//நான் கம்பியூட்டர், இணையம் என்பதை தெரிந்து கொண்டதே செக்ஸ் சைட்டுகள் மூலம் தான், அதற்காக இன்றும் அதற்குள்ளேவா உட்கார்ந்திருக்க முடியும்!//

But...உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு ....

KARTHIK said...

அனைவருக்கும் நன்றிங்க :-))

// இரவு 9.30 @#$%^&* டீ //

இது என்ன புது டீயா இருக்கு
சரி வாங்க போவோம் :-))

கையேடு said...

நீயா நானா பார்த்தேன், ஆனாலும், முத்துகுமார் அவர்களின் கேள்விக்கு அழுத்தமான பதிலை யாரும் தரவில்லை என்றே தோன்றியது, ஒருவேளை வெட்டப்பட்டும் இருக்கலாம்.

உங்கள் நண்பர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

சீக்கிரம் ஃபோட்டோ எடுத்துப் போடுங்க நாங்கெல்லாம் பாக்க வேணாமா.

VISA said...

Varna
Nalla peyar

suneel krishnan said...

உங்கள் list ல இருக்குற ஆளுங்களுக்கு எல்லாம் ஒரு ஒத்துமை இருக்க தன செய்யுது :) moore,belluci, drew..ஹ்ம்ம்
இணையத்தின் அறிமுகம் இன்று 30 கலீல் அதற்கு கீழும் உள்ள பலருக்கு நீங்கள் சொன்ன காரணங்கள் தான் பரிச்சயத்திற்கு மூலம் :)

suneel krishnan said...

உங்கள் list ல இருக்குற ஆளுங்களுக்கு எல்லாம் ஒரு ஒத்துமை இருக்க தன செய்யுது :) moore,belluci, drew..ஹ்ம்ம்
இணையத்தின் அறிமுகம் இன்று 30 கலீல் அதற்கு கீழும் உள்ள பலருக்கு நீங்கள் சொன்ன காரணங்கள் தான் பரிச்சயத்திற்கு மூலம் :)

மருது said...

என்ன தல .. பேசுரதெல்லாம் பெரியாரியம் ...

பிள்ளைக்கு பேர் மட்டும் வருணா , வர்சா .. னு பார்ப்பாரியமா வச்சிருக்கிங்க ?..

அம்பேத்கர்

Anonymous said...

வர்ஷா பிற்க்கும் போதும் நல்ல மழை, வருணா பிறக்கும் போதும் நல்ல மழை!//
உங்க செண்டிமெண்டை ரசித்தேன்!பெயர்கள் இரண்டும் அருமை...

Anonymous said...

வர்ஷா பிற்க்கும் போதும் நல்ல மழை, வருணா பிறக்கும் போதும் நல்ல மழை!//
உங்க செண்டிமெண்டை ரசித்தேன்!பெயர்கள் இரண்டும் அருமை...

ஜில்தண்ணி said...

வருணா அருமையான பேரு வால் சூப்பர்

/// இணையம் என்பதை தெரிந்து கொண்டதே செக்ஸ் சைட்டுகள் மூலம் தான், அதற்காக இன்றும் அதற்குள்ளேவா உட்கார்ந்திருக்க முடியும்! அதிலிலுள்ள மற்ற பயன்தரும் விசயங்களை இப்பொழுது தேட ஆரம்பித்து விட்டோம் இல்லையா! ///

சரியா சொன்னீங்க :) ஆமாம் தேட ஆரம்பித்துவிட்டோம்

தாரணி பிரியா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி வால் வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

கார்த்திக் உங்களுக்கும் இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள் :)

ஜோதிஜி said...

நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் நம்மால் பார்க்க முடியும்! எதிர்மறையை மட்டுமே பார்ப்பது அதை பூதாகரமாக தான் காட்டும்

பிடித்தது

பா.ராஜாராம் said...

தாரிணி ப்ரியா, கார்த்திக், பிறந்த நாள் வாழ்த்துகள்!

செல்வா said...

///
வெளியே விசாரித்தபோது தான் தெரிந்தது, யூத்தெல்லாம் இப்படி தான் ட்ரெஸ் பண்ணுவாங்களாம்!///
அப்ப இது வரைக்கும் உங்களுக்கு இந்த விசயமே தெரியாதா ...?

பீர் | Peer said...

பிறந்தநாள் பேபிகளுக்கு வாழ்த்துக்கள்.

வருணாவிற்கும் வாழ்த்துக்கள்.

பீர் | Peer said...

//போட்டோ எடுக்கத்தான் எங்கம்மா விட மாட்டிங்கிறாங்க! கொஞ்சநாள் ஆகட்டும், எடுத்து போடுறேன்!//

.............

//நண்பர்கள் விரும்பினாலும் அவர்களது பெற்றோர்களுக்காக சில விசயங்களை அனுசரித்து போக வேண்டுமாம்!, //

.............

//எந்த சூழ்நிலையிலும் தம்மை சமரசம் செய்து கொள்ளாத தைரியமான மனிதர்களுக்கு... //

:))

தர்ஷன் said...

கார்த்திக்,தாரணிப்பிரியா இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
வருணாவிற்கு என் வாழ்த்துக்கள்
அட ஜூலியானா மூரை எனக்கும் பிடிக்கும் பட் இப்ப வயசாகிருச்சி இல்ல.
மோனிக்கா பெல்லுச்சி ம்ம் ரொம்பவே பிடிக்கும்.

நிலாமதி said...

தாரணி பிரியா கார்த்திக் இருவருக்கும் என் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்.

Unknown said...

//புதிய பதிவர்கள் பலருக்கு வேர்டு வெரிபிகேஷனை எடுக்க தெரியவில்லை, NHM உபயோகித்து பின்னூட்டம் இடுபவர்கள் அம்மாதிரி தளங்களில் பின்னூட்டம் இட கடுப்படைவார்கள், //

என்னை தான் என்று புரிகிறது, இனி குழப்பம் வராது என நினைகிறேன்.

நசரேயன் said...

பிறந்தநாள் வாழ்த்துகள்

Menaga Sathia said...

கார்த்திக்,தாரணிப்பிரியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!!

வால்பையன் said...

@ பீர்

நல்ல வெளிச்சமான நேரத்தில் நான் வீட்டில் இருக்க முடிவதில்லை, நான் இருக்கும் போது என் அமா கையில் தூக்கிவைத்து கொள்கிறார்கள்! அவர்கள் தூரத்தில் இருந்து வேண்டாம் என்றால் கண்டுக்க மாட்டேன், அவர்கள் சொல்வது கையில் தூக்கி மறைத்து வைத்து கொண்டு!

ஒரு மாதத்திற்கு பின் என் வீட்டிற்கு அழைத்து செல்ல ப்ளான், அப்புறம் தினம் ஒரு போட்டோ கூட வரும்!

பழமைபேசி said...

தாரணி பிரியா மற்றும் அன்பர் கார்த்திக் ஆகியோருக்கு வாழ்த்துகள்!

வரும் 7ந்தேதி, செப் 7, செவ்வாய் அன்று கூட எதோ ஒரு பதிவர் ஜெயா தொலைக்காட்சியின் காலை மலரில் வருகிறாராம்.

ரிஷபன் said...

வெளியே விசாரித்தபோது தான் தெரிந்தது, யூத்தெல்லாம் இப்படி தான் ட்ரெஸ் பண்ணுவாங்களாம்!

நைஸ்!

அன்பரசன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் இருவருக்கும்...

//வெளியே விசாரித்தபோது தான் தெரிந்தது, யூத்தெல்லாம் இப்படி தான் ட்ரெஸ் பண்ணுவாங்களாம்!//

அப்புறம்...

மங்குனி அமைச்சர் said...

விளம்பரம் பிடிக்காத மனிதர், மகா பொறுமைசாலி///

உங்க ஓனரும் என்னை போல தானா ??? (ஹி.ஹி.ஹி.)

மங்குனி அமைச்சர் said...

எப்போதும் கார்கோ பேண்ட், டீ ஷர்ட் அல்லது நெக் பனியன் என்றே சுற்றி கொண்டிருக்கிறேன்! வெளியே விசாரித்தபோது தான் தெரிந்தது, யூத்தெல்லாம் இப்படி தான் ட்ரெஸ் பண்ணுவாங்களாம்!////

இப்பவாது தெரிஞ்சு போச்சுல்ல எங்க பேர கெடுக்காம இனமே உங்க வயசுக்கு தகுந்த ட்ரெஸ் பண்ணுங்க .

மங்குனி அமைச்சர் said...

ஏன் பிடிக்கும் என்ற விவாதத்தை தனி மடலில் வைத்து கொள்லலாம்! ////

அதானே , எங்கள மாதிரி யுத்துகளுக்கு பிடிக்கும் போட்டோ உங்களுக்கு ஏன் புடிக்குது ? கொஞ்சம் விவரமாக கூறவும்

Thekkikattan|தெகா said...

//நீயா நானா பார்த்தேன், ஆனாலும், முத்துகுமார் அவர்களின் கேள்விக்கு அழுத்தமான பதிலை யாரும் தரவில்லை என்றே தோன்றியது, ஒருவேளை வெட்டப்பட்டும் இருக்கலாம்.//

கையேடுவின் ஐயத்தை நானும் வழிமொழிகிறேன்.

மற்றுமொரு விசயம். வலைப்பூக்களில் முத்துக்குமார் குறிப்பிட்டது போல, இங்கே 90 விழுக்காடுகளுக்கும் மேலே டைரிக் குறிப்புகளும், சுய சொறிதல்களுமே பிரதானப் படுத்தப் படுகிறது. .00001% வடிகட்டினால் நல்ல விசயங்கள் கண்ணுக்கு தட்டுப்படலாம்.

Jackiesekar said...

குவியல் அற்புதம்.. மிக முக்கியமாக புதிய வலைஞர்களும் உதவிடும் வகையில் வேர்ட வேரபிகேஷன்.. எடுத்து விட விரிவாய் விளக்கியமைக்கும்....நன்றிகள்..

Thekkikattan|தெகா said...

//இணையம் என்பதை தெரிந்து கொண்டதே செக்ஸ் சைட்டுகள் மூலம் தான், அதற்காக இன்றும் அதற்குள்ளேவா உட்கார்ந்திருக்க முடியும்! //

அதே! தாண்டி வந்திரணும். அதான் சரியான ஆரோக்கியமான வளர்ச்சியா இருக்க முடியும். இல்லன்னா, தேங்கின குட்டை மாதிரி ஆகிப்பூடும்... ஓடிட்டே இருக்கிறதுதான் அழகு, வாழ்க்கை --ஆஹா! இங்கே என் வச்சனமெல்லாம் பேசினா கட்டி வைச்சு உதைப்பீங்களே :D ...

நேர்மறையா பார்த்தா அது நேர்மறையாவேதான் போயி முடியும். சோ, அதில எந்த மாற்றுக் கருத்துமில்ல.

பனித்துளி சங்கர் said...

கார்த்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் .

வழமை போல இன்றும் குவியல் அசத்தல் நண்பரே

நாடோடி said...

பிற‌ந்த‌ நாள் கொண்டாடும் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு வாழ்த்துக்க‌ள்..

Arun Nadesh said...

வாழ்த்துக்கள் வால். :)

//போட்டோ எடுக்கத்தான் எங்கம்மா விட மாட்டிங்கிறாங்க! கொஞ்சநாள் ஆகட்டும், எடுத்து போடுறேன்!//

இப்படி சொல்றீங்க..

//பெற்றோர்களுக்காக சில விசயங்களை அனுசரித்து போக வேண்டுமாம்!, பெற்றோர்களை குளிர்விக்க தான் திருமணம் என்றால் அதற்கு ஏகப்பட்ட மேட்ரிமோனியல் இருக்கு, நான் அந்த விளையாட்டுக்கு வரல! எந்த சூழ்நிலையிலும் தம்மை சமரசம் செய்து கொள்ளாத தைரியமான மனிதர்களுக்கு மட்டும் தான் இங்கே விளம்பரம்!
//

இப்படியும் சொல்றீங்க. நெருடலா இருக்குது வால். அப்புறம் இன்னொரு விஷயம். இந்து கடவுளர்களின் டவுசர் அவிழ்க்கும் நீங்கள் உங்கள் மகளுக்கு வருணா என்று பெயர் வைத்ததேனோ??
#புதசெவி

வால்பையன் said...

போட்டோ எடுக்க முடியாததற்கான விளக்கம் சொல்லிட்டேன்!

வருணா என்றால் கடவுள் பெயரா?
எங்கே இருக்கு அப்படி?

முத்துசாமி என்று பெயர் இருக்கு, அப்போ முத்து என்றால் கடவுளா?

பரிசல்காரன் said...

பெயர் தேர்வு - சிறப்பு!

Arun Nadesh said...

நீங்கள் கூட அம்மாவுக்காக சமரசம் செய்து கொண்டுள்ளீர்கள் என்ற அர்த்தத்தில் சொன்னேன்.

அப்புறம், வருணா வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மழை,கடல்,நதி போன்ற நீர் சம்பத்தப்பட்ட வஸ்துக்களின் கடவுள். வருணனைப் புகழ்ந்து பாடப்பட்ட பல பாடல்கள் ரிக் வேதத்தில் உள்ளன.

உதாரணத்திற்கு..
http://www.sacred-texts.com/hin/rigveda/rv01025.htm

Unknown said...

தா. பி , கார்த்திக் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள். 

வருணா நல்ல பெயர். அனால் தமிழ்ப் பெயரில்லை. 

a said...

வருணா................
நல்ல பெயர்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

/// நான் கம்பியூட்டர், இணையம் என்பதை தெரிந்து கொண்டதே செக்ஸ் சைட்டுகள் மூலம் தான், அதற்காக இன்றும் அதற்குள்ளேவா உட்கார்ந்திருக்க முடியும்! ////

ஹி ஹி ஹி நானும் தான் !!!!!!! ஆனா இப்ப அந்த சைட் போறதுக்கே நேரம் கிடைக்கலே ...,

அஞ்சா சிங்கம் said...

தல யாராவது அந்த அவிச்ச முட்ட தலையன் சோ பத்தி எழுதியிருந்த அந்த லிங்க் குடுங்க

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

படம் சூப்பரு.. எங்க புடிச்சீங்க..

கிரி said...

அருண் arunero@gmail.com பதில் arunero [at] gmail.com என்று வையுங்கள். ஸ்பாம் மின்னஞ்சல்கள் இதன் மூலம் வருவதை தவிர்க்கலாம்.

cheena (சீனா) said...

அன்பின் அருண்

குவியல் நன்று

தார்ணிப்ரியாவிற்கும் மச்சி கார்த்திக்கிற்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
வருணா - வர்ஷா - இருவருக்கும் அன்பான நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Unknown said...

அருணின் மகள் வருணா. அழகான பெயர்த்தேர்வு.

பெசொவி said...

கவிதா, கமலா, இதெல்லாம் கூட வடமொழிச் சொல்தான், ஆனால் தமிழில் சொல்லும்போது அழகு குறையாமல் இருக்கிறது. அதேபோல், வருணா என்பதும் செவிக்கு இனிமையாகத் தான் இருக்கிறது. இதிலெல்லாம் கடவுள் பெயர், வடமொழிச் சொல் என்று பார்ப்பதே பார்ப்பனீயம்தான்!

Anonymous said...

mooda nambikkaiyin munnilaiye..
unga amma sonnanganna, ungalukku enga pochu arivu.. varuna enbadhu sanskrit name, as well as Varsha. ungalukku appo ellam tamilname kannil padaadhaa??
ivaru, davusar-i kalataporaaar.. ellam neram.. unga amma kitte poi pesi phot eduka vendiyadhudhaane.. athukku vakkillai..

vinu said...

present sir

Rajan said...

அவ்வ்வ்வ்வ்! ரொம்ப நாளாச்சா!

Anonymous said...

//இன்னைக்கு என்னுடய பாஸ் கார்த்திக்குக்கும் பிறந்தநாள்!//

கார்த்திக்குக்கு என் வாழ்த்துக்கள்.


//அப்துல்லா, நர்சிம், அமுல்பேபி பட்டர்ப்ளை சூர்யா //

ஓ நீயா நானாவில் வந்த பதிவர்கள் இவர்களா?
அவர்களது வலைபதிவு லிங்க் கொடுத்திருந்தால் உபயோகமாய் இருந்திருக்கும்.


//யூத்தெல்லாம் இப்படி தான் ட்ரெஸ் பண்ணுவாங்களாம்!//


யூத்தாமா???????



//வர்ஷா பிறந்தபோது இருந்ததை விட வருணா கூட அதிக நேரம் இருக்க முடியுது//

ஏன் இந்தப் பாரபட்சம்??? சூழ்நிலை என்று சப்பை காரணம் சொல்ல கூடாது. இருவருக்கும் சமமான நேரம் ஒதுக்குவது நல்லது.



//எந்த சூழ்நிலையிலும் தம்மை சமரசம் செய்து கொள்ளாத தைரியமான மனிதர்களுக்கு மட்டும் தான் இங்கே விளம்பரம்//

இதற்காகவே பிடியுங்கள் எனது பாராட்டை..



//புதிய பதிவர்கள் பலருக்கு வேர்டு வெரிபிகேஷனை எடுக்க தெரியவில்லை//

சத்தியமா நா வைக்கவே இல்ல



//இவர்களெல்லாம் எனக்குப் பிடித்த நடிகைகள்
ஏன் பிடிக்கும் என்ற விவாதத்தை தனி மடலில் வைத்து கொள்லலாம்//

ஹி ஹி ஹி
என்னடா இன்னும் எதுவும் நடக்கலயேன்னு பாத்தேன்.. நடந்துடுச்சு.. நடத்திட்டீங்க..

butterfly Surya said...

இருந்தாலும் வாலு.. இது ரொம்ப ஓவர்.. நான் அமுல் பேபியா..??

ஆட்டையாம்பட்டி அம்பி said...

நன்றாக எழுதுகிறீர்கள். கொஞ்சம் நீளத்தை குறைத்தால் படிப்பதற்கு எளிதாக இருக்கும். ஏனென்றால் ஏகப பட்ட பேர்கள் நன்றாக எழுதுகிறார்கள். எல்லாவற்றையும் படிக்க நேரம் இல்லை. ஆதலால் உங்களுடை முழு உழைப்பையும் படிக்க முடியாமல் போகலாம்.

இதை எடுத்துக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம்.

நானும் ஈரோடுதான்...அன்பரே! பெரியார் என் உயிர்...

கலாசாரத்தை பற்றி எழுதி உள்ளேன். உங்கள் கருத்தை சொல்லுங்கள். ஏனென்றால் உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன்.

http://tamilkadu.blogspot.com

இதை படிக்க வேண்டும் என்று சும்மா சொல்லவில்லை. நிசமாலும் எனது ஊர் ஈரோடு தான்...

!

Blog Widget by LinkWithin