யார் இந்த சிவராமன்!?

இந்த பதிவில் யாருடய சொந்த விசயங்களும் இழுக்கப்படவில்லை, அவ்வாறு இருந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும் நீக்கி விடுகிறேன்,


பதிவில் சில சம்பவங்களை நினைவூட்ட சில பெயர்கள் எழுத வேண்டிய கட்டாயத்தால் பெயர்கள் பயன்படுத்தபட்டுள்ளது, அதற்காக மன்னிக்கவும்!


தனிநபர் மீதான கொள்கை மற்றும் கருத்துகள் ரீதியான விமர்சனம் தவிர நேரடி தாக்குதல் பின்னூட்டங்கள் வெளியிடப்படாது!

**************************

நாயகன் என்ற உரல் முகவரியுடன், சிதைவுகள் என்ற வலைப்பூ தலைப்புடன், தோழமையுடன் பைத்தியக்காரன் என்ற புனைப்பெயருடன், பூக்கோ, தஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய் என தம்மை ஒரு உலக இலக்கிய ஆர்வளராகவும், பார்பனர்கள் என அறியபட்டவர்கள் செய்ததாக, நினைத்தையெல்லாம் பதிவாக எழுதி தன்னை ஒரு அறிவுஜீவியாக காட்டும் மற்றொரு பார்பன புற்றுநோயே தோழர்!?(வெட்கக்கேடு) சிவராமன்!

சிவராமனுக்கும் எனக்கு வாய்க்கா, வரப்பு தகராறெல்லாம் கிடையாது, முதன் முதலாக ஆசிப் அண்ணாச்சி இல்ல திருமண விழாவில் சந்தித்தேன், பின் மெரினாபீச் சந்திப்பில் ஒருமுறை(கோபி கிருஷ்ணன் புத்தகம் வாங்க), கடைசியாக உரையாடல் அமைப்பு நடத்திய சிறுகதை பட்டறையில்!. மொத்தம் மூன்று முறை, ஆனால் இவருக்கு எதிராக எழுதினால் இன்னொருவருக்கு ஆதரவு என சொல்லப்படும் நபரை ஒரே ஒருமுறை ரமேஷ்வைத்யாவுடன் வைத்து பார்த்திருக்கிறேன்!, சிறுகதை பட்டறையில் அவருடன் பேசியதாக எனக்கு ஞாபகமில்லை, பேசியிருந்தால் இரண்டு முறை, அவர்கள் இருவருடன் எனக்கிருக்கும் பழக்கம் இவ்வளவே, பின் ஏன் இந்த பதிவு!

தோழர் கார்திக் வெண்ணிற இரவுகள் என்ற அவரது வலைப்பூவில் சிவராமன் எழுதியது தவறல்ல என்றும், மற்றொருவர் அவர் பூனூல் அணிந்திருந்தாலும் சரியாக தானே சொல்கிறார் என்றும் அவரது பார்பனீய தந்திரம் தெரியாமல் சொல்கிறார்கள், மணிரத்னத்தின் பார்பனீய குறியீடுகள் வெளிபடுத்திவிட்டார் என்பதால் அவரை ஆட்டு கூட்டுத்திற்குள் சேர்க்க நினைக்காதீர்கள், அவருக்குள் இருக்கும் பார்பனீய குறீயீடுகளை நான் வெளிச்சம் போட்டு காட்டுகிறேன், பிறகு முடிவு செய்யுங்கள், அவர் ஆடா இல்லை ஆடு உருவம் தரித்து வரும் ஓநாயா என்று! அதற்கு தான் இந்த பதிவு!

//காட்சி படிமங்கள் முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்பது போலல்லவா இருக்கிறது ???
சரி இதை விடுங்கள் , ரோஜா படத்தில் கொடியை எரிக்கும் பொழுது நமாஸ் செய்வாரே , இதில் என்ன சொல்லவரார்//



ரோஜா படதில் வரும் ஒரு காட்சி, உள்ளே ஒருவன் நமாஸ் செய்கிறான், வெளியே சிலர் கொடியை எரிக்கிறார்கள், அதை கதையின் நாயகன் தடுக்க நினைக்கிறான் என்பது காட்சி, உள்ளே நமாஸ் செய்பவனுக்கு வெளியே கொடியை எரிக்கிறார்கள் என்று யாராவது போய் ஜோசியம் சொல்வாங்களா!? அடிவாங்கி நாயகன் மயக்கமுறும் வரை அவனது நமாஸ் முடியாது, அதன் குறியீடு அவன் இருந்தால் தடுத்திருப்பான் என்பதே ஒழிய, அவன் ஒருவன் தீவிரவாதி என்றால் மொத்த இஸ்லாமியனும் தீவிரவாதி என்ற அர்த்தமல்ல,

காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் நமக்கே இப்படி கவட்டி கவட்டியா மூளை வேலை செய்யுதே, காசு போட்டு படம் எடுக்கும் அவனுக்கு எவ்வளவு வேலை செய்யும், விஜயகாந்த் படத்தில் பாகிஸ்தான் அதிபர் கூட தமிழில் பேசுவான், ஆனால் என்ன லாஜிக் என்று ஒருவருக்கும் புரியாது, ரோஜா படத்தில் ஒரே ஒரு தீவிரவாதி தமிழ் பேசுவான், அதற்கான லாஜிக் அவன் கோவையில் படித்தவன், பார்பவனுக்கு புரியனும், அதே நேரம் அவனுக்கு எப்படி தமிழ் தெரியும் என்கிற விசயத்தையும் சொல்லனும் என்ற யதார்த்த சினிமா விரும்பியுடன் பார்பனீய வியாபாரம் செய்யும் சிவராமனின் பார்பனிய உண்மை முகம் இதே பதிவில்!

மெளனராகம் படத்தில் ஒரு பெண்ணின் உரிமை மறுக்கப்படக்கூடாது என்ற கதைக்களம், கடைசியில் நாயகனின் மனம் புரிந்து அவளாக தான் சேருகிறாளே தவிர அவள் கேட்ட டைவர்ஸும் கிடைத்துவிட்டது, ரோஜா படத்தில் கணவனை காப்பாற்ற வீரத்துடன் போராடும் பெண், நாயகன் படத்தில் நாயகி ஒரு பாலியல் தொழிலாளி, “சீக்கிரம் விட்ருங்க, நாளைக்கு கணக்கு பரிட்சை இருக்கு” என்ற வசனத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது, அவளுக்கும் மனம் இருக்கு, அவர்களுடன் சேர்ந்து வாழ்வதும் மனிததன்மையே என்ற பெண் மறுவாழ்வை பேசியது! ஆனால் ஓநாய் சிவராமனுக்கு அதெல்லாம் கண்ணுக்கு தெரியாது, படிப்பவனை முட்டாளாக பாவித்து, நான் சொன்னால் சரியாக தான் இருக்கும் அப்படியே நம்பு என திசை திருப்பும் பார்பனீயதனம் மட்டுமே நிரம்பியிருக்கும்!(மணி ரத்னம் ஒரு வியாபாரி, இது மணிரத்னத்தை நியாயபடுத்தும் நோக்கில் எழுதபட்டதல்ல, சிவராமனின் முகமூடியை கழட்ட எழுதபட்டது, மற்ற படி மணியின் மீதும் எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை, கடைசி சில படங்களினால்)

//இஸ்லாமிய இளைஞன், இந்துப் பெண்ணை காதலிப்பதுபோல் மணிரத்னம் ஏன் அப்படத்தை இயக்கவில்லை என்று கேள்வியில்தான் அவரது பார்ப்பனீய மேல்சாதி - வர்க்க சிந்தனை அடங்கியிருக்கிறது. பெண்ணின் கருப்பையை எந்த இன ஆண் ஆளவேண்டும் என்று தீர்மானிப்பதிலேயே சீழ் வடியும் மேட்டுக்குடி வர்க்க பாசிச சிந்தனை அடங்கியிருக்கிறது.//


இது அதே பதிவில் சிவராமனின் பின்னூட்டம்!, என்ன ஒரு வக்கிர சிந்தனை!, அவர்களுக்குள் மத பேதம் இருந்தால், பிறக்கும் குழந்தைகளுக்கு ஏன் கமல் பஷீர், கபீர் நாராயணன் என பெயர் வைத்தார்கள் என்றால் பதிலைக்காணோம்!, சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தா மாதிரி இது பிரிவினையை தூண்டும் வார்த்தைகள் தானே, சொன்னால் அவருக்கு பட்டியல் வேணுமாம்! ஊரறிஞ்ச பாப்பானுக்கு பூனுல் எதுக்கு மிஸ்டர்.சிவராமன்!

சரி, அந்த ஒரு பெண், அதுவும் இஸ்லாமிய பெண், அதற்காக குரல் கொடுக்கிறார், ஆனால் இவர் செய்தது என்ன!? ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு இன்னொரு பெண்ணை வம்புக்கு இழுக்கிறார், “திறந்த வைத்த பண்டம்” என்றதும் கோபம் கொண்டீர்களே, இதற்கு ஏன் கேட்கவில்லை என்று, இங்கே தான் தோழர்களே நீங்கள் பார்க்க வேண்டும் சிவராமனின் பார்பனிய தந்திரத்தை, ஒரு பெண்ணை கேட்பதின் மூலம், உனக்கு மட்டும் திறந்த வைத்த பண்டம்னா கோபம் வருது, மத்தவங்களுகெல்லம் வரல, என மற்றவர்களை குறிப்பால் திறந்த வைத்த பண்டம் என இவரும் எள்ளி நகையாடுகிறார்! இஸ்லாமிய பிற்போக்குதனத்திற்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்!, சரி கேட்டாரே, அதே போல் அவரது தோழிகளை கேட்டாரா, அந்த விசயத்தில் உங்கள் நிலைப்பாடு என்னவென்று, கேட்க மாட்டார், அதுதான் பார்பனியபுத்தி!, அப்போதே அதற்கு(நற்குடி) எதிர்ப்பு தெரிவித்த பெண் பதிவர்கள் அவர் முகத்தில் காறி உமிழ தயாராக இருக்கிறார்கள்!

ஒரு ஆணாதிக்கவாதியால், ஒரு பெண் அவமான படுத்தபட்டாள் என பதிவெழுதி இவர் எத்தனை பெண்களை அவமானபடுத்தினார் என்ற அடுத்த பார்பனீய குறியீடு இது!,
அபிஅப்பா, மங்களூர்சிவா, லதானந்த் மூவருக்கும் ஜொள்ளு விடுவதில் போட்டி வைத்தால் சரிக்கு சமமாக நிற்பார்களாம்!(இவரு தான் போய் துடைச்சு விடுவார் போல), அதற்கான ஆதாரம் கேட்டபோது கொடுக்க முடியாத சூழ்நிலை என்று அந்த பத்தி நீக்கப்பட்டது, சரி இதில் என்ன பார்பன குறியீடு!?, இதுவரை அவர்களது பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்டவர்கள்/இடுபவர்கள் அவர்களது ஜொள்ளுக்கு உடன்பட்டே நட்பாக இருக்கிறார்கள் என்று தானே பொருள் தரும் வாக்கியம் அது! ஆதாரம் தரமுடியாது என்றபோதே அது வெறும் வெத்து புரளி என்பது தெரிந்தாலும், வேண்டுமென்றே தனது தோழிக்காக மற்ற பெண்களை அதே பாணியில் கேவலபடுத்திய சிவராமன் என்ற பார்பனீய ஓநாயை என்ன செய்ய வேண்டும் தோழர்களே!

இந்த பிரச்சனை ஆரம்பித்த போதே ஆல் இன் ஆலில் ராஜன் எழுதிய பதிவு, அந்த வலைப்பூ நானும் ராஜனும் சேர்ந்து நடத்துவது என்று அனைவருக்கும் தெரியும், எங்களுக்குள் உடன்பாடில்லாமல் ஒரு பதிவும் அதில் வராது!


நான் இந்த ப்ளாக்கில் முதல் எழுதியது

இது அதன் பின் எழுதியது!

எங்களது நிலைப்பாடும் ஆணாதிக்கத்துக்கு எதிராகவே இருக்கிறது, திறமையாக வாதிடக்கூடிய ஒருவனால் கோட்சேவையும் நியாயபடுத்த முடியும், அதற்காக உண்மையை குழி தோண்டி புதைக்கும் பக்கம் நாம் இருக்க வேண்டுமா தோழர்களே!, நர்சிம் எதிரி என்றால், சிவராமன் துரோகி! வெளியே இருக்கும் எதிரியுடன் போரிடலாம், உள்ளிருக்கும் புற்றுநோய் நாம் அறியாமலேயே நம்மை அழிக்கும்! எச்சூழ்நிலையிலும் பார்பனீயத்திற்கு ஆதரவாக போக வேண்டாம் தோழர்களே!

இறுதியாக!

முன்பிருந்தே என் நிலைப்பாடு, தவறுக்கான தீர்ப்பு அதை செய்தவர் தவறை உணர்வதாக இருக்க வேண்டும் என்பதே!, கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற தண்டனையில் எனக்கு உடன்பாடில்லை! அதே நேரம் பார்பனியதிற்கு எதிராக எழுதுகிறார் என்று நம்பி இன்னொரு பார்பன ஓநாய்க்கு எலும்பு துண்டை வீசாதீர்கள், ஒருநாள் உங்கள் தொடை எலும்பு காணாமல் போகக்கூடும்!

நட்பு வேறு, கருத்து வேறு என்பதோடு மட்டுமில்லாமல் எதற்காகவும் என் கொள்கையிலிருந்து பின் வாங்காதவன் நான், ஆரம்பத்திலிருந்தே எல்லா மதத்தையும் திட்டி பல கொலை மிரட்டல்கள் வாங்கியாச்சு, இதற்கும் அதிகார மையத்திலிருந்து என்ன மிரட்டல் வந்தாலும் பார்பனீயத்திற்கு ஆதரவாக என் கொண்டைகால் மயிரு கூட தலைவணங்காது என்பதை தெள்ள தெளிவாக சொல்லி கொள்கிறேன்!

பரிணாமம் - இனப்பெருக்கம்!

ஏற்கனவே பலமுறை சொன்னது தான், பரிணாமம் பற்றிய என்னுடைய தொடர் முழுக்க முழுக்க என்னுடய புரிதல் மட்டுமே! புற உலகில் நான் பார்க்கும் விசயங்களில் பரிணாமத்திற்கான சுவடுகள் உணரப்பட்டு அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன், அவைகளில் உள்ள அதிகபட்ச சாத்தியகூறுகளை அறிவது நமது உரையாடலில் தான் இருக்கிறது!


*****************

தன்னை தானே பெருக்கி கொள்ளும் ஒரு செல் உயிரியிலுருந்து பரிணாமத்தின் உச்சாணி கொம்பில் அமர்ந்திருக்கும் மனித இனம் வரை அனைத்திற்க்கும் தலையாய கடமை இனப்பெருக்கம், ஒரு உயிர் பல்கி பெருக அவைகளில் ஜீன்களில் எழுதபட்டிருக்கும் ஒரே விசயம் நீ வாழ்ந்தே ஆக வேண்டும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்!. காட்டு விலங்கிலிருந்து சமூக விலங்கான பிறகு மனித இனம் மட்டும் தனக்கு தேவையானதை தானே உற்பத்தி செய்து கொள்ளும் தகுதியை வளர்த்து கொண்டது, மனிதனின் அபார வளர்ச்சி மற்ற உயிரின பெருக்கத்திற்கு பல வகையில் ஆபத்து என்றாலும் இயற்கை தன்னை சமன்படுத்தி கொள்ள சில நேரங்களில் கூட்டம் கூட்டமாக மனிதனையும் காவு வாங்குகிறது!

உயிரினத்தின் தொடக்கும், முதலில் தாவரங்களிலிருந்து விலங்கினமாக மாறியது என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இருந்தும் படைப்புவத கொள்கையுடவர்களால் அதை ஏற்றுகொள்ள முடியவில்லை, வழக்கம் போல ஏன் இன்னும் குரங்கு குட்டைபாவாடை போடல என்பதிலேயே அவர்கள் கேள்வி நிற்கிறது, விலங்கு செல்லுக்கும், தாவர செல்லுக்கும் அதிகபடியான ஒற்றுமைகள் அறிவியலால் நிறுபிக்கபட்டாலும் எந்த விளக்கமும் கேட்காமல் அதை மறுக்கும் ஒரு சில கூட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன, நாம் இங்கே பார்க்கப்போவது தவாரங்களிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று வளர்ந்திருந்தாலும் ஒரு சில உயிரினங்கள் அதன் நீட்சியை இன்னும் கடைபடித்து வருவதை தான்!



உயிரினங்களின் தொடர்ச்சி தன்னை தானே பெருக்கி கொள்ளும் ஒரு செல் உயிரியாக தான் வாழ்க்கையை ஆரம்பித்தது, இன்றும் பலதரபட்ட உயிரினங்களின் உள்ளிருந்து அதனை இயக்கி கொண்டிருப்பது செல்கள் தான், அவைகளில் பிரதி எடுக்கபட்டு பிரியும் ஒவ்வொரு செல்லும் அதே வடிவை மீண்டும் அடைகிறது, இவைகளின் சுழற்சியே ஒவ்வொரு உயிரனத்தையும் தனிதனி அடையாளத்துடன் வளர்க்கிறது, நரம்பு மணடலங்கள் பெறாத தாவரங்கள் தன்னை பெருக்கி கொள்ள ஆரம்பத்தில் காற்றையே நம்பியிருந்தது, முதல் உயிரினம் நீரும், ஒளி சார்ந்த இடத்தில் தோன்றியிருக்க தான் அதிகபட்ச சாத்தியகூறுகள் இருப்பதாக அறிவியல் கூறுகிறது, அது நாம் சாதாரணமாக பார்த்து பழகிய பாசி!

பலசெல் உடலைப்புடன் தனக்கு தேவையான உணவை தானே உருவாக்கி கொள்ளும் தகுதியுடன் வளர்ந்த தாவரம் நீரின் வேகத்தின் மூலம் இனபெருக்கம் செய்து கொண்டது, தாவரத்திலிருந்து விலங்காக மாறி கொண்டிருக்கையில் ஒரே ஒரு உயிரினம் இன்னும் முழுமையடையாமல் பாதியில் நின்று கொண்டிருக்கிறது, இம்மாதிரியான உயிரினங்கள் தான் பரிணாமம் நம்க்கு விட்டு சென்றுள்ள சுவடுகள், பவழப்பாறை என அழைக்கப்படுவது என்னவென்று பலர் அறிந்திருக்கலாம்! கடற்பரப்பு இவ்வளவு செழுமையாக இருக்கிறது என அறிய பவழப்பாறைகள் தான் சாட்சி, தாவரத்தை போன்று ஓரிடத்தில் தனது காலனியை வளர்த்து கொள்ளும் பவழப்பாறைகள் பெருமளவு தாவரத்தின் குணங்களை கொண்டது, ஆனால் அவைகள் தனிதனியே முட்டையையும், விந்தையும் பீச்சியடித்து இனப்பெருக்கம் செய்து கொள்கிறது!

இனபெருக்க உறுப்பை பெற்றிருந்தாலும் இன்னும் பாலூட்டி அல்லாத மீன்கள், விந்தையும், முட்டையையும், பீச்சியடித்து தான் இனபெருக்கம் செய்து கொள்கின்றன, தாவரங்களுக்கு இனபெருக்கத்திற்கு பருவகாலம் இருப்பது போல், மீன்கள் மட்டுமல்லாது பல உயிரினங்களும் தனக்கென ஒரு காலத்தை வைத்திருக்கின்றன, விதைகள் எவ்வாறு கடினமான ஓடுகளால் பாதுகாக்கபடுகின்றதோ அதே போல் பல உயிரினங்களின் முட்டைகள் கடினமான ஓடுகளால் பாதுகாக்கப்படுகின்றன! பாலூட்டிகள் அல்லாத அனைத்து விலங்களும் பிறந்த உடனே தனியாக வாழும் தகுதியை பெற்றிருக்கின்றன, ஆனால் அவ்வாறு தகுதி பெறாத விலங்குகள் தான் பாலூட்டிகளாக பரிணமித்தன என்பதே உண்மை!

உயிரினங்களில் இனபெருக்கத்திற்கு கூடுதல் தகுதி பெற்ற ஒரே விலங்கு மனிதன் மட்டுமே, பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பிறகே உச்சகட்டம்(orgasm) என்பது மனிதனுக்கு மட்டுமே வாய்த்த ஒரு அரிய நிகழ்வு என்பது புரிந்தது, மனிதனுக்கு நெருங்கிய உயிரினமான சிம்பன்சியை தவிர வேறு எந்த விலங்குகளும் சுயமைதுனம் செய்து கொள்ள விரும்பியதில்லை, மனிதனுக்கு மட்டுமே இனபெருக்கத்தின் தேவையையும் மீறி உடலுறவில் அதிகபட்சம் இன்பம் தேவைபட்டது, ஏன் என்ற கேள்விக்கு இன்னும் ஆராய்ச்சி நடந்து கொண்டுதானிருக்கிறது, நாடோடிகளாக வாழ்ந்த முதல் வளர்ச்சி பெற்ற மனித இனம் உணவுக்காக சண்டையிட்டு கொண்டதை விட இணைக்காக சண்டையிட்டதே அதிகம் என்கிறார்கள்!


நான்கு காலில் நடந்து கொண்டிருந்த மனிதன் நிமிர்ந்து நின்றது, உடலுக்கு குறைவான வேலையும், அறிவுக்கு(மூளைக்கு) அதிகப்பட்ச வேலை கொடுத்தது, உடைகள் மூலம் இனபெருக்க உறுப்பை மறைத்தது, மனிதனுக்கு உடலுறவில் மேல் நாட்டத்தை குறைத்தது என்பது விஞ்ஞானிகள் கருத்து, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இனபெருக்கம் கட்டாய கடமை என்றாலும் மனித இனத்தில் மட்டுமே ஆன்மீகம் குறுக்கே நின்றது, பிரம்மச்சார்யம், கடவுளுக்கு உகந்த நாட்களில் மட்டுமே கூட வேண்டும் என பூசாரிகளால் உடலுறவு மறுக்கப்படுதல், இடைவிடாத போர்களால் பல ஆண்கள் உயிரிழப்பு,(தலைவனுக்கு தான் பெண்கள், மீதி தான் மற்றவர்களுக்கு) ஆகியவை மனித இனத்தொகை வெகுவாக குறைத்தது, வாழும் தகுதியை உடலளவில் வளர்த்து கொள்ள மனிதன் பெற்ற பரிணாம மாற்றம் தான் உடலுறவில் உச்சகட்ட இன்பம்!


பவழப்பாறைகள் பற்றிய ஆங்கில விக்கிபீடியா செய்தி



நண்பர் தெகா எழுதிய பவழப்பாறைகள் பற்றிய விரிவான தமிழ்ப்பதிவு!


பூமியும் அதன் வளர்ச்சியும் - தமிழ் விக்கிபீடியா!

பரிணாமம் பற்றிய மொத்த இடுக்கைகளையும் படிக்க!

தொடரும்!..........

பொய் மனிதர்கள்!

பொய் மனிதர்கள்!


புறவெளியில் ஆசையை துறந்தும்
நினைவுலகில் அதனுடன் புணர்ந்தும்,
கனவு வாழ்க்கை
நன்றாக தான் இருக்கிறது
எல்லோரும் அதை தான்
செய்தாலும்
சொல்வதற்கினிய வார்த்தை
கிடைக்காமல்
பொய் சொல்கிறார்கள்!










 கண்ணீர்

கணப்பொழுதில்
நிரம்பும் குழியொன்றில்
புலியொன்று
வேட்டைக்கு சென்றது
பசி விட்ட கண்ணீரால்
அது
உப்புக்கடல் ஆனது!

குவியல்!..(14.06.10)

முன்னுறே பதிவுகள், அதிலும் ஏகபட்ட மொக்கைகள் ஆனால் உங்களின் அன்பு உலகத்தை விட பெரியது, 703 பாலோயர்ஸ் என்பது நிச்சயம் எனக்கு நீங்கள் அளித்திருக்கும் மாபெரும் அங்கிகாரம்! 1072 ரீடர்கள், கூகுள் ரீடரில்! நான் அவ்ளோ வொர்த்தா என்று அடிக்கடி என்னையே கேட்டு கொண்டிருக்கிறேன்!, இதில் ஓரினசேர்க்கைக்கு எதிராக அதாவது அது அவர்களின் விருப்பம், விருப்பமில்லாதவர்களை தொந்தரவு செய்வது தவறு என்று எழுதியதற்கு 10 பாலோயர்ஸ் காணாமல் போய்விட்டார்கள், அவர்களது உரிமையில் தலையிட்டது பிடிக்கவில்லை போலும், எனது கடவுள் மறுப்பு கொள்கையால் பல பாலோயர்ஸ் காணாமல் போனது அனைவரும் அறிந்ததே, ஆயினும் நட்பு வேறு தனிநபர் கருத்து வேறு என்று இன்றும் நட்பு பாராட்டி கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!



எனக்கு பாலோயராக நீங்கள் இருந்தால் நிச்சயம் நானும் பாலோயராக இருப்பேன், அப்படி இல்லையென்றால் எனக்கு மெயில் அனுப்பவும் உங்கள் ப்ளாக் முகவரியுடன், நான் உங்களுக்கு பாலோயராக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் உங்கள் பதிவுகள் எதுவும் மிஸ்ஸாகாது, படிக்காமல் சென்று விடுவேனோ என்று சந்தேகித்து சாட்டில் கொடுப்பது கஷ்டமாக இருக்கிறது, உங்கள் பதிவுகள் அனைத்தையும் படிக்க வேண்டும் என்பதற்காகவே நான் தினம் ஒரு பதிவு எழுதுவது இல்லை!
****

திருப்பூரில் paazee என்ற நிறுவனம் கரன்சி ட்ரேடிங் செய்கிறோம் என்று சொல்லி பல கோடி ஏமாற்றி இருப்பதாக நண்பர் ஒருவர் தொலைபேசினார், 29 இளைஞர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து தற்சமயம் கோவை மருத்துவமனையில் இருக்கிறார்களாம்! உயிருக்கு ஆபத்தான நிலை என்பது வருத்தம் தரும் செய்தி, இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மந்திரிமார்கள் யாராவது பிண்ணனியில் இருப்பார்களோ என்ற சந்தேகம் கொள்ள வைக்கிறது, இது தமிழகம் முழுவதுமாக நடந்த மோசடி என்று நண்பர்கள் சொல்கிறார்கள் பாதிக்கபட்ட நண்பர்களுக்கு விரைவில் அவர்களது பணம் கிடைக்கும் என நம்புவோம்!, இம்மாதிரி முதலீடு செய்யும் போது நிபுணர்களின் ஆலோசனை பெறுவது நல்லது, தன்னிசையாக செயல்படுவது சிலசமயம் முதலுக்கே மோசமாகலாம்!


****

போபால் விஷவாயு கசிவு சம்பவத்துக்கான தீர்ப்பு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியளிக்க செய்தது அனைவரும் அறிந்ததே, அதை ஒரு விபத்து என்ற நோக்கில் மட்டும் பார்த்து இந்த தீர்ப்பு அளித்திருப்பதாக அரசு தரப்பு பதில், அதற்கான நியாயம் கேட்கும் பணி ஒருபக்கம் இருக்கையில் வரும்முன் காக்க வேண்டிய மற்றொன்றையும் மறக்கக்கூடாது, அமெரிக்காவுடனான அணு மின்சார திட்டம் எந்த வகையில் பயனளிக்கும் என்று பார்ப்பதை விட என்னவெல்லாம் தீங்கு நேரிபடும் என்பதை கவனிக்க வேண்டியது மிக முக்கியம், பன்னாட்டு முதலாளிகளுக்கு விளிம்புநிலை மனிதர்களின் உயிர் பற்றி சிறிதும் கவலையில்லை, ஆர்கானிக் கழிவுகளை ஏழை நாடுகளில் கொட்டுவது, தன் தேவைக்காக ஒரு நாட்டையே அழிப்பது போன்ற செயல்களை செய்து வரும் ஏகாதிபத்திய அரசு ஏற்கனவே சொல்லிவிட்டது இத்திட்டத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பில்லை என்று, அதிலேயே பாதுகாப்புக்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை என்று தெரிந்து விட்டது, மின்சாரம் இல்லாமல் கூட இருந்து விடலாம், உயிர் இல்லாமல் இருக்க முடியுமா!? ஒட்டுமொத்த குரலில் இத்திட்டத்தை எதிர்ப்பதே சரியான வழி!


****


பார்த்தே ஆக வேண்டிய படங்கள் என என் லிஸ்டில் இருப்பதில் முக்கியமானது இந்த படம், அல்பசினோவின் அசத்தலான நடிப்பு மொழி புரியாததை மறக்க செய்யும்! வசனம், இசை இப்படத்தின் முதுகெலும்புகள், அல்பசினோவின் நடிப்பு இப்படத்தின் உயிர், கண் தெரியாதவராக வாழ்ந்திருப்பார் மனுசன்! கையை பிடிக்கும் போது கண் உனக்கு தெரியாதா, எனக்கு தெரியாதா வேண்டுமென்றால் நானே பிடித்து கொள்கிறேன் எனும் போது பாத்திரதிற்குள் இருக்கும் தன்னம்பிக்கை தெரியும்!, அல்பசினோவின் ஒவ்வொரு வசனமும் மிகுந்த சிரத்தையுடன் நேர்தியாக செதுக்கப்பட்டிருக்கும், அனைத்தும் கூர்முனை தீட்டப்பட்ட வாள் போல, இதுவரை பார்த்திருராதவர்கள் தயவுசெய்து மிஸ் பண்ணிடாதிங்க,



படம் குறித்து பிரபல பதிவர் சுரேஷ்கண்ணன் எழுதிய விமர்சனம்!


*****

நீண்ட நாள் கழித்து அண்ணன் அனுஜன்யா எழுதிய ஒரு கவிதைக்கு எதிர்கவுஜ எழுதியிருந்தேன், அது உங்கள் பார்வைக்கு!


சுவற்றிற்கு முதுகு காட்டி
சரக்கு அடிக்கும் நண்பர்கள்
மற்றும்
சைடிஷ் திண்ணும் வம்பர்கள்
வழிந்தோடும் நுரையை
உள்வாங்கும் பீர்கிளாஸ்
விரலின் உத்வேகத்தில்
எகிறி பறக்கும் மூடி
புளித்த பீர்
முழுதாய் குடித்தபின்
மூக்கு விடைத்து
வாய் திறந்து
நாற்றமாய் வரும்
கு”பீர்” ஏப்பம்
புதிய பீரின் வாசத்துக்கும்
வம்பர்களின் தொல்லைக்கும்
சில பீர் காலியாகும்
எப்போதும் சைடிஷ் இல்லாமல்
அனைத்தையும் கண்காணிக்கும்
மௌனக் கண்ணாடியாக
வியாபித்திருக்கும் பீர்பாட்டில்

வால் பையனின் ”ஓப்பன் வேட்டி சாரி பேட்டி”

வால்பொரேட் வாலி எனும் உன்னதமான நிலையினை வலையுலகில் அடைந்திருக்கும் பிரபல எழுத்தாளர் வால்பையன் அவர்களின் வலைப்பூவின் 300 வது பதிவான இப்பதிவில் அவருடனான ஒரு சந்திப்பு....சைக்கிள் கடை பெஞ்சில் ஒரு அழகான மாலைப் பொழுது ........



இதோ திறக்கிறார் வால் பையன் நமக்காக மனதை!

ராஜன் : வணக்கம் மிஸ்டர் வால்! முதலில் உங்களோட முன்னூறாவது பதிவுக்கு எங்கள் மனம் கனிந்த வாழ்த்துகள்! சரி....பேட்டி எடுக்குமளவு நீங்க என்ன புடுங்கீட்டீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?

வால் : வாழ்த்துக்கு நன்றி ! வலையுலகத்தைப் பொறுத்த மட்டில் எதாவது புடுங்கினாத்தான் பேட்டி எல்லாம் எடுத்து போடணும்னு எந்த அவசியமுமில்ல.... பொழப்பத்து ரெண்டு பேர் பொரி தின்னுட்டு இருந்தா, அப்பிடியே ஒரு பேட்டி எடுத்து பதிவிடறது இங்க சர்வ சாதாரணம். உதாரணமா பாத்தீங்கன்னா.... போனவாரம் கூட இப்பிடித்தான்.................
...

ராஜன் : யப்பா சாமி போதும் இதோட நிறுத்துங்க... அந்த மேட்டருக்கு இப்பதான் கொஞ்சம் கோவணம் கட்டி மூடி வெச்சிருக்கு; சந்து கேப்புல மறுபடி நோண்டாதீங்க! சரி நீங்க எப்பிடி மொதல் மொதல்ல எழுத ஆரமிச்சீங்க?

வால்: ம்ம்! அது எப்பிடினா... ரொம்ப்ப வருசத்துக்கு முன்னால ..... சிலேட்டு பென்சில எடுத்து ......

ராஜன் : யோவ்! ஒழுங்கா பதில் சொல்லு இல்லாட்டி நான் தர ரேட்டுக்கு எறங்கிடுவேன்!

வால் : ஒய் டென்சன்! ஓகே! கூல்... என் எழுத்து கொளந்தை மாதிரி குட்டிசாத்தான் மாதிரின்னு எல்லாம் நான் பெணாத்த மாட்டேன். மனசுல நெனைக்கறதுதான் சப்ஜெக்ட் வாய்ல வர்றதுதான் எழுத்து நடை!

ராஜன் : நெக்ஸ்ட் எறை மறுப்பு! கடவுள் இல்லைனு சொல்ல உங்களுக்கு பலான கதைகளை டிங்கரிங் பண்ணி பிட்டு ரேஞ்சுக்கு கதை சொல்லறதையும்,அடுத்தவன் நம்பற விசயத்த குச்சி விட்டு குடைவதையும் எதுக்கு வழக்கமா வெச்சிருக்கீங்க!

வால்: ஏங்க... இல்லாத கடவுள வெச்சு அந்தக்காலத்திலிருந்து குடுமிக்காரனுக ஆக்சன் கதையும் விட்டலாச்சாரியார் கதயும் சொல்லிட்டு இருக்காங்க ! நாங்க பலான் கத சொன்னா தப்பா... ஒரு கிரியேட்டருக்கு இந்த சொதந்திரம் கூட இல்லைனா எப்பிடிங்க!


ராஜன்: ம்ம்ம் ! ரைட்டு விடுங்க... அப்ப்றம் பாப்பாங்கறவன் யாரு? பூணூல் போட்டவன்லாம் பாப்பானா?

வால்: அதுக்கெல்லாம் இப்ப பதில் சொல்லிட்டு இருந்தா டைமாயிடும்ப்பா!


ராஜன் : எழுத்தாளர்னு பேருக்கு முன்னாடி பதிவர்கள் போட்டுக்கறதப் பத்தி என்ன சொல்றீங்க?

வால் : யப்பா... கேமராவ கொஞ்சம் ஆஃப் பண்ணுங்கய்யா! தல செம்மொழி மாநாடு வேற வரப் போவுது! அதப் பத்தி எதானும் கேளுங்க தல! செருப்படி வாங்கிக் கொடுக்கவே பிளான் பண்றீங்களே நல்லாவா இருக்கு!

ராஜன்: சங்கம் வேணுமா!

வால்: அய்யோ அம்மா... இந்தாள்ட்ட இருந்து யாராச்சும் என்னக் காப்பாத்துங்களேன்!

ராஜன் : டோண்டு ஏன் நம்ம திட்டற கமெண்ட மட்டும் போடறார் மன்னிப்பு கேட்டாலோ , சமாதாந்த்துக்கு வந்தாலோ அந்த கமெண்ட்ட எல்லாம் ஒளிச்ச்சு வெச்சுக்கறார்.

வால்: இதெல்லாம் ஒரு கேள்வியா! அவரெல்லாம் வலையுலக ”கலைஞர்” தல!

ராஜன் : இப்பயும் பொண்ணுங்க கூட சாட் பண்றீங்களா என்ன!

வால்: என்னை என்ன கேனப் பயன்னு நெனச்சுட்டீங்களா? மாட்டிக்காம பண்ணனும் தல! அது எப்பிடின்னு உங்களுக்கு பேட்டிக்கு அப்பறம் தனியா சொல்லித் தரேன்!

ராஜன் : வலையுலகத்துல யார் யாரெல்லாம் லூசுப் பசங்கன்னு அன்னைக்கி ஒரு நாள் லிஸ்ட்டு கொடுத்தீங்களே! அத இப்ப மறுபடி சொல்ல முடியுமா!


வால் : வணக்கம் அனைவருக்கும் செம்மொழி மாநாட்டு வாழ்த்துக்கள்! விடை பெறுவோம்!

ராஜன் : யோவ் லிஸ்ட் கேட்டா எங்கய்யா ஓடற?


--
அன்பின் ராஜன் இராதாமணாளன்.,


கொன்றல்காற்று http://kondralkatru.blogspot.com

“ ஆல் இன் ஆல் “http://allinall2010.blogspo.com


**********************************

இது எனது 300 ஆவது பதிவு!

மானங்கெட்ட பதிவரசியல்!

இந்த பதிவு சனிக்கிழமையே எழுத நினைத்தது, அலுவலகம் விடுமுறை என்பதாலும், திங்கள்கிழமை ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்றிருந்ததாலும் இன்று எழுதுகிறேன்!

**********************

ஏற்கனவே நர்சிம், சந்தனமுல்லை பிரச்சனை குறித்து நான் எழுதிய பதிவு!

அதன் பின் நான் கேள்வி பட்ட விசயங்கள், சிவராமன் என்ற பைத்தியகாரனின் மேல் உள்ள நம்பிக்கையை முழுவதுமாக சிதைத்து விட்டது!, அவை உண்மையா பொய்யா என்பது எனக்கு தேவையில்லாதது, அல்லது சிவராமனின் சொந்த விசயங்கள், ஒருமுறை அவருக்கு போன் பண்ணி லவ் பண்ணா தப்பான்னு கேட்டேன், ஏன் சொல்றேன்னா அவரே புலனாய்ந்த மாதிரி பின்னால் ஒருநாள் எழுதக்கூடும்! முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமே முந்தி கொள்வது நல்லது!

சந்தனமுல்லை என்ற பதிவரை நர்சிம் வன்புணர்ச்சி செய்தார் என்ற வார்த்தையை எதிர்த்தவர்களில் நானும் ஒருவன், அந்த பின்னூட்டம் வினவு பதிவில் இன்னும் இருக்கும், இன்றைக்கு பார்க்கும் போது பிரச்சனையின் வீரியத்தை காட்ட பயன்படுத்தபட்ட வார்த்தை என்ற தொனி தெரியலாம், ஆனால் இன்னும் ஒரு வருடம் கழித்து பார்த்தால் வேறு மாதிரியான அர்த்தம் தரலாம் என்பது என் கருத்து, இல்லை சந்தனமுல்லையின் ஒப்புதல் பெயரிலேயே அதை எழுதியதாக கூறுகிறார்!, அப்படியானால் லதானந்த், அபிஅப்பா, மங்களூர் சிவா மீதான புகார்கள் ஒப்புதல் பெயரில் தானே எழுதியிருக்கனும், மங்களூர் சிவா அப்பட்டமாக பதிவு போட்டு கேட்டும் நீங்க பதில் சொல்லல, அதுக்கு நீங்கள் சொல்லும் காரணம் அந்த பெண் பதிவர்களே வந்து சொல்லனும்னு சொல்றிங்க, அப்படி சொல்பவர் கிசுகிசு பாணியில் அதை எழுதியிருக்க கூடாது, ஆண்கள் மட்டும் தான் பொய் சொல்வார்களா, தனிபட்ட விரோதம் காரணமாக ஏன் பெண் பொய் சொல்லியிருக்க கூடாது, எந்த ஆதாரமும் இல்லாமல் ஒருவரை பெயருடன் எப்படி எழுத முடிகிறது, அந்த அதிகாரத்தை உங்களுக்கு அளித்தது யார்!?

நர்சிம் செய்தது தவறு, அதை யார் செய்திருந்தாலும் தவறு தான், அதை மற்றொரு வன்னியர் சாதியை சேர்ந்த ஒரு ஆண் எழுதியிருந்தால் ஒத்தசாதிகாரங்க சண்டை போட்டுகிறாங்க, நாம தலையிட வேணாம்னு விட்டு போயிருவிங்களா?, ஆணாதிக்கம் என்ற பதம் நீர்த்து போகும் வண்ணம் இந்த விசயத்தில் தேவையில்லாமல் சாதியை இழுத்து “வளர்ப்பு அப்படி” என்ற வார்த்தையை மட்டுமே வைத்து கொண்டு கடைசி வரை போராடுகிறீர்கள், அப்படியானால் உங்கள் வளர்ப்பும் அப்படி தானா? அதனால் தான் இன்னும் உங்கள் பூனூலை கழட்டவில்லையா?, சரி இந்த விசயத்தில் சாதியை இழுத்ததினால் பார்பனர்களையும், பார்பன ஆதரவாளர்களையும் ஒன்று திரட்டி பிரச்சனைக்கு எதிரணி உருவாக்கியதை தவிர்த்து வேறு என்ன சாதித்து விட்டீர்கள்!?

குசும்பன் கேட்கவில்லை, கலகலபிரியா கேட்கவில்லை, சுகுணாதிவாகர் கேட்கவில்லை என்று சந்தனமுல்லைக்கு ஆதரவாக ஆள் பிடிக்கிறீர்கள் நல்லது தான், தனிமனிதருக்கு ஆதரவு தேடும் நீங்கள், உத்தாபுரம் பிரச்சனைக்கோ,சரி அதை கூட விடுங்க ”வன்னியர்களின் உயர்சாதி திமிர்” என்ற வினவு பதிவுக்கு என்ன ஆதரவு தெரிவித்தீர்கள், உங்கள் அரசியல்நிலைப்பாடே கேவலமான ஒன்றாக இருக்கும் பொழுது அடுத்தவர்களை ”மச்சான் நீ கேளேன்” என்பது எந்த வகையில் நியாயம், உங்களுக்கு பிரச்சனைக்கு தீர்வு வேணுமா? இல்லை பதிவுலகம் அடிச்சிகிட்டு சாகணுமா?


ஒரு தவறுக்கான தீர்ப்பு தவறு செய்தவர் மாற அல்லது தவறின் வீரியம் குறித்து திருந்தத் தான் இருக்க வேண்டும்! கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற கேவலமான பிற்போக்குதனமாக இருக்கக்கூடாது, ஆனால் இந்த விசயத்தில் நர்சிம்மின் மன்னிப்பு குறித்து எந்த பதிலும் இல்லை, அல்லது நீங்கள் எதிர்பார்ப்பது என்னவென்ற தகவலும் இல்லை, இனி எதுவும் எழுதப்போவதில்லை என்பவரை இன்னும் என்ன செய்ய ஆசை, இதற்கு பின்புலத்தில் இருந்து தூண்டிவிடுபவர்களுக்கு என்ன ஆதாயம்,சந்தனமுல்லையின் பதிவில் என் ஆதரவை தெரிவித்திருக்கிறேன், நர்சிம் மீண்டும் மீண்டும் அதை நியாயபடுத்தி தன்னை நிரபராதி என்றால் நிச்சயம் பிரச்சனை பண்ணலாம், ஆனால் தப்புதான் மன்னிச்சிகோங்க என்பவரை என்ன செய்ய உத்தேசம்! மானங்கெட்ட பதிவரசியலை கண்டால் எனக்கு எரிச்சலாய் வருகிறது, பெருந்தன்மையாக நடந்து கொள்ளுங்கள் முடியவில்லையா குறைந்த பட்சம் மனிதர்களாகவாவது நடந்து கொள்ளுங்கள்!


பார்பனீயம் எந்த வடிவத்தில் வந்தாலும் நசுக்கபட வேண்டியதே!

மானங்கெட்ட மதமும், கடவுளும்!


நீண்ட பெரிய உருவம் அது
மேல் நோக்கிய கைகளுடன்
திறந்த வாயுடன் இருந்தது
தன்பெயர் மதம் என்றது
வெளீர் நிற நீண்ட கூந்தல்
பறக்க உதவுமாம்
அதன் பெயர் கடவுளாம்
காலில்லாத காரணத்தால்
ஓரிடத்தில் அமராமல்
அங்குமிங்கும் அலைந்தது
பசித்தால் என்ன செய்வாய் என்றேன்
அருகில் இருந்த முத்துசாமியை விழுங்கியது
அவன் இஸ்மாயிலை அருவாளால் வெட்டினான்!

நசுங்கும் சொம்புகள்!

ஒரு விசயத்தை எப்படியெல்லாம் அணுகக்கூடாதோ, அப்படியெல்லாம் தட்டையாக அணுகுவது, அதை நீர்த்து போக செய்ய என்னவெல்லாம் முடியுமோ அதையெல்லாம் செய்வது தான் தலையாய பணி நமது நடுநிலையாளர்களுக்கு, காலை ரெண்டையும் அகட்ட சொல்லி நடுவாலயே ஒரு உதை விட்டா நடுநிலமை சரியாயிரும்!, எதுவுமே சொல்லாம போற ஆளை கூட மன்னிச்சி விட்றலாம் எதுவும் சரியா தெரியாம பேசக்கூடாதுன்னு நினைக்கிறாங்கன்னு, ஆனா தெரிஞ்சும் சொம்பை எடுத்துட்டு வந்து பஞ்சாயத்து பண்ற ஆளுங்க இருக்காங்களே அவுங்க தான் ரொம்ப டேஞ்சர்! அதிலயும் தகரடப்பா பண்ற காமெடி தாங்க முடியல!


நர்சிம் மன்னிப்பு கேட்டுவிட்டார், இத்துடன் விட வேண்டியது தானே என்பவர்கள் சில பேர்களில் வர்றாங்களா, இல்ல ஆதரிக்கும் பல பேர்களில் வர்றாங்களான்னு தெரியல, நர்சிம் எனக்கும் தான் நண்பர், நான் பிறந்த மதுரை ஊர்காரர், அதுக்காக அவரோட கருத்துகள் எல்லாம் எனக்கும் ஒத்துதல்ன்னு ஆயிறுமா!? விமர்சனத்துக்கு அப்பாற்றபட்ட கடவுளா?, இங்கே கடவுள் டவுசரே கிழிஞ்சு தொங்குதாமாம்! வேற யாரா இருந்தா என்ன?
நர்சிம் மீண்டும் மீண்டும் தன்னை நியாயபடுத்த முயற்சிப்பதே குற்றம், மனசாட்சி உள்ள மனிதராக செயல்படுவதே சிறந்த வழி!

சகோதரன் என்ற வார்தையின் சுருக்கம் தான் ”சகா” என பெருமையாக சொல்லி கொண்ட கார்க்கி தான் நர்சிம் தானாக தேடி போய் உட்கார்ந்த ஆப்பு என்று தான் எனக்கு தோன்றுகிறது, ஒரு நாள் தாமதம் செய்திருந்தாலும் நர்சிம்மின் வயதனுபவம் இவிசயத்தை இந்த அளவு கொண்டு வந்திருக்காது, பின்னால் இருந்து தூண்டி விட்டார்களா? அல்லது தூண்டி விட்டு பின்னால் போனார்களா தெரியவில்லை, என்ன தான் நர்சிம் அதை புனைவு என்று சாதித்தாலும் கார்க்கியின் பின்னூட்டங்கள் அப்பட்டமான எதிர்வினை அந்த பதிவு என காட்டுகிறது, ”எதிரியை நான் பார்த்து கொள்கிறேன், நண்பர்களிடமிருந்து என்னை காப்பாற்று” என்ற ரசினியின் வசனம் தான் ஞாபகம் வருகிறது!


ஒரு விசயத்தை இவ்வளவு தட்டையாக அணுக முடியும் என்பதற்கு உண்மைதமிழன் ஒரு உதாரணம், இது அவர்கள் குடும்ப பிரச்சனையாம், வெளி ஆட்கள் வரக்கூடாதாம், அதுவும் சினிமா விமர்சனத்தில் படத்திற்கு போகாதிங்க என்று எழுதுவது போல், வினவை புறக்கணியுங்கள் என்கிறார்!, வினவு வெளி ஆள் என்றால் அவர் நர்சிம்முக்கு மாமனா, மச்சானா!? இவர் யார் வினவை புறக்கணிக்க சொல்ல, வரிக்கு வரி கவுண்டர் அட்டாக் கொடுப்பதாக நினைத்து கொண்டு காமெடி செய்யும் இவர் என்று தான் மாறப்போகிறாரோ!?


சோபாஷ்க்தி எழுதிய பதிவோட பலர் உடன்படிகிறார்களாம், பட்டுகோங்க, வினவு தளம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது இல்லையே, வினவு ஒரு அமைப்பில் குழுமமாக, கொள்கையுடன் செயல்படுவது, அவர்கள் கொள்கைக்கு எதிரான விசயங்கள் அவர்கள் முன்னின்று கள பணி ஆற்றுகிறார்கள், ஆக அவர்களது கொள்கை திறந்த புத்தகமாக இருக்கிறது, அவர்கள் மேல் உங்களுக்கு முன்முடிவுடன் இருக்கும் விமர்சனமே சோபாஷ்கிதியுடன் ஒத்து போக வைக்கிறது, அது புறம் இருக்கட்டும், நர்சிம், சந்தனமுல்லை விவகாரத்தில் உங்களது நிலைப்பாடு என்ன? கிடக்குறது கிடக்கட்டும், கிழவனை தூக்கி மனையில் வை என்பது போல் ”நீ யோக்கியமா” பதிவுடன் ஒத்து போனால் பிரச்சனையின் மையம் என்னாவது!

மற்ற காமெடிபீஸ்கள் என்ன உளறியிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும், அதையெல்லாம் இடதுகரத்தால் புறகணித்து வினவுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்!, ஒரு பதிவருடய பதிவை ஏற்றும் போது சற்றே அவருடய அரசியல் நிலைபாட்டையும் பாருங்கள், போற போக்கில் அயிட்டம் ஷாங் மாதிரி, குசும்பனை கோமாளி என்று சாடியிருக்கிறார்!, அனைவரும் ஆயுதம் எடுத்து களத்தில் குதிக்க முடியாது, அதுக்கு அவர்கள் வந்த விதமும், வாழ்ந்த விதமும் காரணமாக இருக்க முடியும்!. சாவோஸும், டோனிப்ளேயரும் ஒன்றா? அவரவர், அவரவர் நிலைபாட்டுக்கு ஏற்றவாறுச் செயல்படுகிறார்கள், பதிவின் மையத்தை நீர்த்து போக செய்யும் அல்ல பிடுங்கல்களை நீங்களும் ஆதரிக்ககூடாது என்பது வேண்டுகோள்!

மங்களுர் சிவா உங்களத்தில் பகிரங்க கேள்வி வைத்திரிக்கிறார், அவருக்கு பதில் சொல்ல வேண்டியதும் உங்கள் கடமை!

!

Blog Widget by LinkWithin