எனக்கு யாரோ சூனியம் வச்சிட்டாங்க!

நடந்து முடிந்த விசயங்களை என்ன செய்தாலும் மாற்றமுடியாது என்பதை நன்கு அறிவேன்! கற்பனை பிம்ப எதிர்பார்ப்பில் என்னை பார்த்தவர்களுக்கு அன்றைய நாள் நான் வில்லனாகி போனேன்! இருக்கட்டும் இன்றைய சூப்பர்ஸ்டாரே அன்றைய வில்லன் தானே!. நான் மற்றவர்களை கலாய்த்தது பற்றி எனக்கு எந்த வருத்தமுமில்லை, எனக்கு முன்னரே பழக்கமில்லாத யாரையும் நான் கலாய்க்க வில்லை என நம்புகிறேன்! புலவர் ராசு அய்யாவை தவிர! அதற்கு போன பதிவிலேயே வருத்தமும் தெரிவித்திருந்தேன்!

சீனா அய்யா, வசந்தகுமார், ஸ்ரீதர் அனைவரும் எனக்கு முன்னரே பழக்கமானவர்கள், நட்போட என்னிடம் இன்றும் பழகி வருபவர்கள், அவர்களுக்கு எனது குணம் தெரியும் என்பதால் அவர்களுக்கும் வருத்தம் இருக்காது என நம்புகிறேன்! ஆனால் எனக்கும் நடந்த நிகழ்ச்சிக்கும் சம்பந்தமில்லை, ”நான் ஏன் கவனிக்கனும்” என்ற தோணியில் நான் சொன்னதாக சஞ்சய் அங்கிள் எழுதியது தான் கொஞ்சம் உறுத்தல்! அந்த வார்த்தை என்ன சொல்லும் என்றால், நிகழ்ச்சியே வால்பையனுக்கு பிடிக்கல, அதனால வேணும்மின்னே பண்ணிய கலாட்டா என்ற எண்ணத்துக்கு கொண்டு செல்லும்!

அதை கவனிக்க அவுங்க இருக்காங்க தல, நமக்கு வேற வேலை இருக்குன்னு சொல்ல வந்தது, இப்படி மாறி போகும்னு நான் எதிர்பார்க்கவேயில்லை, ”சோசியகாரங்களை சும்மா வம்பிழுத்துகிட்டே இருக்குறதால எல்லா சோசியகாரங்களும் சேர்ந்து எனக்கு சூனியம் வச்சிடாங்கன்னு நண்பர் ராதாமணாளன் காலையிலிருந்து என்னை கிண்டல் பண்ணிகிட்டு இருக்கார்!”(தலைப்புக்கு காரணம்). மனம் புண்படும் படி பேசியிருந்தால் அது நிச்சயமாக உளமறிந்து செய்யவில்லை! அங்கிள் நம்புவாராக!

சென்னையில் இருந்து நண்பர்கள் வருவது உறுதியானவுடன், அறை எடுக்கும் பொறுப்பை நானே எடுத்து கொண்டேன், நான் சென்னை செல்லும் பொழுதெல்லாம் ஒரு இளைய சகோதரனை கவனிப்பது போலவே அன்பாக கவனிக்கும் அண்ணன்களுக்கு இதையாவது செய்யும் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் மொத நாளே கொஞ்சம் ஓவராதான் போச்சு! நண்பர்கள் வருவதற்கு தாமதமானதால் நான் வீட்டிற்கு செல்லாமல் அந்த அறையிலேயே தங்கிவிட்டேன்! சனிக்கிழமை காலையில் வீட்டிலிருந்து வந்த நான் ஞாயிற்றுகிழமை இரவு தான் சென்றேன்!



நான் அந்த அளவுக்கு ஸ்டெடியாக இருப்பேன் என்ற டவுட்டு எனக்கே இருந்ததால்(போட்டோவை பார்க்க) எனது தம்பி பிலாலையும் உடன் வைத்திருந்தேன்! அவருக்கு குடிக்கும் பழக்கம் இல்லை,(அவனுக்கு என்ன கோவமோ, போன் அடிச்சா எடுக்க மாட்டிங்கிறான்). எனது செயலை நியாயபடுத்தும் நோக்கில் இந்த பதிவு எழுதவில்லை, எனது பொறுப்புணர்வு எந்த அளவுக்கு மட்டமானது என்பதை நானே ஒருமுறை அசைபோட்டு கொள்கிறேன்! நான் முதல்முறை அப்துல்லா அண்ணனை சந்தித்த நிகழ்ச்சியில், பரிசல்காரனை எவ்வளவு தொந்தரவு பண்ணினேன் என நினைவில் வைத்திருப்பார் என நம்புகிறேன்!(இதிலென்ன பெருமை வேண்டிகிடக்கு)

கதிர் அவருடய பதிவில் ஈரோடு பதிவர்களும் பொருளாதார ரீதியில் பங்கெடுத்து கொள்ளலாம் என எழுதியதும், ரம்யா தொடர்பு கொண்டு தானும் பங்கெடுப்பதாக சொல்லியிருந்தார். கதிர் மறுக்கவும் என்னை தொடர்பு கொண்டு என் பெயரில் பணம் கட்டிவிடுகிறேன் என்றார்! மறுநாள் அது ரம்யாவுடய பணம் தான் என்று கதிரிடம் சொல்லிவிட்டேன்! என் பெயரில் இருந்தாலும் அது ரம்யா அவர்களின் பங்கெடுப்பு தான்! என்னளவு பொருளாதார பங்கெடுப்பை செய்திருப்பேன் என நம்புகிறேன்!

என்னையும் ஒரு ஒருங்கினைப்பாளாரக தனது பதிவுகளில் மதிப்பளித்த கதிர் மற்றும் ஆரூரான் அவர்களுக்கு, எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை! அடுத்த நிகழ்ச்சிகளில் இதுபோல் நடக்காதிருக்க முயற்சிக்கிறேன்.(இனிமே கூப்டா தான).

****

மேடி திருமணத்தில் என்ன நடந்ததென அறியாதவர்கள், அந்த பதிவிலிருந்து ஒரு பிட்டை எடுத்து எனக்கு போடுகிறார்கள், ரொம்ப நன்றி. இப்படி இருந்தா தான் எனக்கும் பிடிக்கும்!

101 வாங்கிகட்டி கொண்டது:

நட்புடன் ஜமால் said...

அடுத்த நிகழ்ச்சிகளில் இதுபோல் நடக்காதிருக்க முயற்சிக்கிறேன்]]

தங்கள் முதிர்ச்சி கண்டு சந்தோஷம்.

கலையரசன் said...

நிஜமாவே யாரோ சூனியம் வச்சிட்டாங்கதான் போல...?
ஒரு பயலுவோலையும் கமெண்ட் பக்கம் கானாமே????

இப்படிக்கு,
வெந்த புண்ணில் விரல் விடு்வோர் சங்கம்

Rajan said...

//”சோசியகாரங்களை சும்மா வம்பிழுத்துகிட்டே இருக்குறதால எல்லா சோசியகாரங்களும் சேர்ந்து எனக்கு சூனியம் வச்சிடாங்கன்னு நண்பர் ராதாமணாளன் காலையிலிருந்து என்னை கிண்டல் பண்ணிகிட்டு இருக்கார்!”(தலைப்புக்கு காரணம்)//

நீங்க அடங்க மாட்டீங்க போல ! வாத்தியாரு ஆனமல மாசாணியம்மன் கோயில்ல மொளகா அரைச்சிட்டு இருக்காரு ! நீங்க பாருங்க அவரோட பவர !

இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போவுதோ ! பிட்டமிரண்டும் பெருவேல் காக்க ! வட்டக் குதத்தை வால் வேல் காக்க !

தேவன் மாயம் said...

அடுத்த நிகழ்ச்சிகளில் இதுபோல் நடக்காதிருக்க முயற்சிக்கிறேன்//

உணர்ந்து எழுதியது கண்டு மகிழ்கிறேன்!!

ஆரூரன் விசுவநாதன் said...

செய்த தவறுக்கு காரணம் தேடும் உலகில்..............

உங்கள் பேராண்மைக்கு வாழ்த்துக்கள்..


ஆனாலும், பெரிய தவறுகள் ஏதும் நடந்ததாக நினைவில் இல்லை....


யாரோ சூனியம் வச்சிட்டாங்க....என்று சொல்வதை விட.....

சொந்த காசில் சூனியம் வச்சிகிட்டேன் என்று நீங்கள் சொல்லலாம்....

ஹி.....ஹி.....


அன்புடன்
ஆரூரன்

குழலி / Kuzhali said...

//”சோசியகாரங்களை சும்மா வம்பிழுத்துகிட்டே இருக்குறதால எல்லா சோசியகாரங்களும் சேர்ந்து எனக்கு சூனியம் வச்சிடாங்கன்னு நண்பர் ராதாமணாளன் காலையிலிருந்து என்னை கிண்டல் பண்ணிகிட்டு இருக்கார்!
//
செஞ்சிருப்பாங்க செஞ்சிருப்பாங்க ... :-))))

மத்தபடி டேக் இட் ஈஸி...

பின்னோக்கி said...

வால்பையன்னு பேர் வெச்சுட்டு இதக்கூட செய்யலைன்னா எப்படி ? :)

Unknown said...

சரி விடுங்க..

//.. அடுத்த நிகழ்ச்சிகளில் இதுபோல் நடக்காதிருக்க முயற்சிக்கிறேன்..//

நன்றி தல..

Rajan said...

//உங்கள் பேராண்மைக்கு வாழ்த்துக்கள்..//

நீங்களே ஒத்து கிட்டாலும் உலகம் நம்ப மாட்டேங்குதே !

அடங்கப்பா முடியல !

Rajan said...

//யாரோ சூனியம் வச்சிட்டாங்க....என்று சொல்வதை விட.....

சொந்த காசில் சூனியம் வச்சிகிட்டேன் என்று நீங்கள் சொல்லலாம்....//

நீங்களும் அவரோட சீடரா !

பீர் | Peer said...

உதாரணத்துக்கு ஏன் சூப்பர் ஸ்டார எடுத்தீங்க? அவர் இன்றைக்கும் சிலருக்கு வில்லன் தான். :(

நீங்கள் என்றும் எல்லோருக்கும் ஹீரோவாக இருக்கணும், வால்.

வாழ்த்துக்கள்.

ரோஸ்விக் said...

அடுத்த நிகழ்ச்சிகளில் இதுபோல் நடக்காதிருக்க வாழ்த்துகள்... :-)

Beski said...

வாலுக்கு எப்போது சூனியத்தின் மேலெல்லாம் நம்பிக்கை வந்தது?

ஓ! அதானல்தான் இப்படி தலைப்போ?

Kodees said...

இதெல்லாம் ஒரு கலாட்டாவா? விடுங்க வால்!!

ஷாகுல் said...

பாஸ்! கவலை படாதீங்க சூனியத்த எடுக்க நம்மகிட்ட வழி இருக்கு!

பேமந்தான் கொஞம் ஜாஸ்தி. ஒகேவா?

இராகவன் நைஜிரியா said...

// அடுத்த நிகழ்ச்சிகளில் இதுபோல் நடக்காதிருக்க முயற்சிக்கிறேன்.//

குட். கீப் இட் அப்.

இராகவன் நைஜிரியா said...

// "எனக்கு யாரோ சூனியம் வச்சிட்டாங்க!" //

உங்களுக்குமா?

Rajan said...

//பாஸ்! கவலை படாதீங்க சூனியத்த எடுக்க நம்மகிட்ட வழி இருக்கு!

பேமென்ட் கொஞம் ஜாஸ்தி. ஒகேவா?//


கைய விட்டு தான் எடுக்கணும் ! வெச்ச எடம் பயங்கரமானது தலைவா ! பார்த்தா பயந்துருவீங்க !

Sanjai Gandhi said...

அய்யோ. இவர்கிட்ட இருந்து யாராச்சும் என்னைக் காப்பாத்துங்க.. நீங்கள் நிகழ்ச்சியின் போது நடந்துக் கொண்டதில் எனக்கு எந்த வருத்தமோ பிரச்சனையோ இல்லை வால். அதை என் பதிவிலும் சொல்லிட்டேன். உங்கள் பல கேள்விகளுக்கு நான் தான் கைதட்டினேன். இந்த போட்டோவில் மப்பில் இருப்பது போல் போஸ் கொடுத்ததும் நான் போட்டோ எடுக்கிறேன் என்பதால் தான். அதை எடுத்த புண்ணியவானும் நான் தான். உணவுக்கு செல்லும் வரை நான் உங்களிடம் வழக்கம் போல் கலாட்டா செய்துக் கொண்டு தான் இருந்தேன். கடைசியாக நீங்கள் தனியாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது உங்கள் அருகில் அமர்ந்து நாம் இருவரும் தான் பேசிக் கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் நீங்கள் நடந்துக் கொண்டது தான் வருத்தம். அதற்கு நீங்கள் போதையைக் காரணம் காட்டறிங்க. என்னால் ஏத்துக்க முடியலை. அவ்ளோ தான்.

சந்திப்புக்கான ஏற்பாடு மிகச் சிறப்பாக இருந்தது. நீங்கள் தாமதமாக்த் தான் வந்திங்க. நான் கேட்டதுக்கு என்ன பதில் சொன்னிங்கன்னு மனசாட்சியோட யோசிங்க. நீங்கள் சொன்னதை நான் நம்பினேன். அதனால் தான் உங்களுக்கு இதில் பங்கில்லைன்னு எழுதினேன். ஞாபகம் இல்லைன்னு புருடா விடற வேலை எல்லாம் வேண்டாம்.

நிகழ்ச்சியில் ஹேக்கிங் பற்றி கேட்டது அதுக்கு கதிர் சொன்ன பதில் எல்லாம் நினைவிருக்குமாம். இவர் பேசிய மற்றவை எல்லாம் அடுத்த நாள் இவர் பாஸ் சொல்லித்தான் தெரியுமாம். அடிங்க.

இனி இதுபோல் நடந்துக்கொள்ள மாட்டேன் என சொல்வது மிக்க மகிழ்ச்சி. ஏன்னா நீங்களும் எங்க நண்பர் தான். ராத்திரி தானே விம் போட்டு வெளக்கினேன். இப்போ கைவலிக்க இது வேறையா?.

எல்லாம் சரி தான். நான் கிளம்பும் போது வந்து “ நீ ஈரோட்ல இருந்துடிவியா?”ன்னு கேட்டிங்களே. எதுக்கு பாஸ்?. என்னடா இது வம்பா போச்சேன்னு பயந்து நான் வேகவேகமா வெளியேறினதும் மஜா படம் அசின் கணக்கா பின்னாடி வந்து முத்தம் குடுத்துட்டு வேற போனிங்க.. கர்மம்.. கர்மம்.. :)))

Sanjai Gandhi said...

ஆனாலும் ராத்திரி போன் போட்டு ”அது நீங்களா?” என்று கேட்டிங்க பாருங்க. உங்க அன்புக்கும் நம்பிக்கைக்கும் நன்றி வால். வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களை கவனிக்கும் மனநிலைக் கூட போயிடிச்சி. என்ன நினைச்சாங்களோ அவங்க?.

வால்பையன் said...

//மஜா படம் அசின் கணக்கா பின்னாடி வந்து முத்தம் குடுத்துட்டு வேற போனிங்க.. //

லதானந்த் சார் மாதிரி ”ஈரோட்டில் தாக்கபட்டேன்னு” பதிவு போடுவிங்கன்னு தான்!

வால்பையன் said...

//ஆனாலும் ராத்திரி போன் போட்டு ”அது நீங்களா?” என்று கேட்டிங்க பாருங்க. உங்க அன்புக்கும் நம்பிக்கைக்கும் நன்றி வால். //


வேறு யாராவதாக இருந்தால் கேட்டிருக்க கூட மாட்டேன்! நீங்கள் விளையாட்டுக்குட செய்திருக்கலாம் என நினைத்து தான் கேட்டேன்!, அதை சீரியஸாக எடுத்திருந்தால் கேட்டிருக்க மாட்டேன் என்பதே உண்மை!

sathishsangkavi.blogspot.com said...

வால்பையன்னா இப்படித்தான் இருக்கனும்.... ஆனா நீங்க அன்றைய தினம்
செய்ததெல்லாம் வாலே இல்லை.........(ரொம்ப கம்மிதான்)

வால்பையன் said...

//வால்பையன்னா இப்படித்தான் இருக்கனும்.... ஆனா நீங்க அன்றைய தினம்
செய்ததெல்லாம் வாலே இல்லை.........(ரொம்ப கம்மிதான்) //

இப்படி உசுபேத்தி உசுபேத்தி தான் ரணகளம் ஆகி கிடக்கு!

கண்ணா.. said...

உங்களுக்கு யாரும் சூனியம் வைக்கலை வால்,

இந்த சந்திரன் பக்கத்து வீட்டுல இருந்து பாக்குறான், அது போக உங்களுக்கு ஏழரைல சனி ... அதான் ஏழரையா வருதுன்னு நினைக்குறேன்.. நல்ல சோசியரை பார்த்து என்ன பரிகாரம்னு கேளுங்க..

நிகழ்காலத்தில்... said...

அருண், உங்களது தனிப்பட்ட விசயங்களில் நான் தலையிடவே இல்லை.,

உங்கள் உடல், அதை தண்ணியடித்து கெடுக்கவும் நல்லபடியாக வைக்கவும் உங்களுக்கு முழு உரிமை உண்டு.

ஆனாலும் போன பதிவின் பின்னுட்டங்களிலும் இதிலும் பேசும் அனைவருமே உங்களை, உங்களின் சங்கம நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்ட தொனியிலோ, அல்லது பொறுத்து கொண்ட தொனியிலோ எழுதுகிறார்கள்.

நான் மாறுபடுகிறேன். அனைவரும் நீங்கள் இன்னும் உடலளவில், மனதளவில் கீழ்நிலைக்கு செல்ல மறைமுகமாக ஆதரவு அளிப்பதாகவே நான் எண்ணுகிறேன்.

குறைந்தபட்ச நண்பர்களுடன் தண்ணியடியுங்கள், ஜாலியாக இருங்கள். பலர் கூடும் இடத்தில் ஏன் இப்படி, அப்படி குடிக்காமல் இருந்தால் என்ன ஆகிவிடும்,?

தண்ணி உங்களுக்கு விடமுடியாத பழக்கம் எனில் கோவில், சாதி, சோதிடமும் பலருக்கு இதுபோல பழக்கம்தான்.

குறைந்த பட்சம் சோதிடம், சாமி, சாதி இவற்றினை குறையாவது கூறாமல் இருங்கள். ஏனெனில் குடிகாரன் பேச்சுக்கு என்றுமே மதிப்பில்லை.

அல்லது குடியை நிறுத்தி விட்டு சமுதாயத்திற்கு புத்தி சொல்லுங்கள்.கடுகளவேனும் பலன் இருக்கும்.

மனதில் பட்டது, சொல்லிவிட்டேன். பிடிக்கவில்லை எனில் தெரிவியுங்கள், ஒதுங்கி விடுகிறேன்

சகோதரன்..

Rajan said...

//குறைந்த பட்சம் சோதிடம், சாமி, சாதி இவற்றினை குறையாவது கூறாமல் இருங்கள். //

நான் சொல்லல ! ஜோசிய காரனுங்க சூனியம் வெச்சுடானுகபா!

வால்பையன் said...

//
நிகழ்ச்சியில் ஹேக்கிங் பற்றி கேட்டது அதுக்கு கதிர் சொன்ன பதில் எல்லாம் நினைவிருக்குமாம். இவர் பேசிய மற்றவை எல்லாம் அடுத்த நாள் இவர் பாஸ் சொல்லித்தான் தெரியுமாம்.//

புலவர் ராசுவுக்கும், பதிவுலகத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்ற விசயம் எனக்கு காலையில் தான் தெரியும்!

நான் சாப்பிடுவதற்கு முன்னால் ஹாலின் கீழே என்ன நடந்தது என கேட்டுப்பாருங்கள்!

Rajan said...

//நான் சாப்பிடுவதற்கு முன்னால் ஹாலின் கீழே என்ன நடந்தது என கேட்டுப்பாருங்கள்!//

யார கேக்கறது ~!

ஆடு நடந்தது மாடு நடந்தது

நிகழ்காலத்தில்... said...

\\rajan RADHAMANALAN said...


நான் சொல்லல ! ஜோசிய காரனுங்க சூனியம் வெச்சுடானுகபா!\\
\\கைய விட்டு தான் எடுக்கணும் ! வெச்ச எடம் பயங்கரமானது தலைவா ! பார்த்தா பயந்துருவீங்க !\\

வெச்ச இடமும் தெரியும், எடுக்க வேண்டிய இடமும் தெரியும். அப்புறம் என்ன எடுத்து விட்டீங்கன்னா
இது போன்ற பின்னூட்டமெல்லாம் வராது அல்லவா. ராதா மணாளன்.

நண்பனுக்கு ஒரு நல்லது பண்ண மாட்டீர்களா :))

Rajan said...

முள்ள முள்ளாலதான் தான் எடுக்கணும் தலைவா !

வால்பையன் said...

//நண்பனுக்கு ஒரு நல்லது பண்ண மாட்டீர்களா :)) //

நண்பரே!
ராதாமணாளன் எனக்கு சாட்டில் அதையெல்லாம் செய்து கொண்டு தான் இருக்கிறார்! பின்னூட்டம் முழுக்க முழுக்க ஆலோசனை கூடமாக ஆயிருக்கூடாது என்பதற்காக கும்மி அடிக்கிறார்!

இழவு வீட்டில் எல்லோரும் அழுது கொண்டிருந்தால் யார் சமைப்பது!
ராதா மணாளன் எனக்கு எந்த கெடுதலும் செய்யவில்லை, உங்களை போலவே அவரும் உதவி தான் செய்து கொண்டிருக்கிறார்!

Kumky said...

அவரு உதவியா செய்யறார்...
சிச்சு சிச்சு வவுத்து வலிதான் வருது..

டாப் கியர்ல போயிட்டிருக்கார்...

Kumky said...

உண்மையிலேயே சூனியம்தான் வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது..

வால் உமக்கு நம்பிக்கை இல்லையெனில்
உம்மீது காட்டேரி யை ஏவி விடட்டுமா?
அதுவும் ஊட்டியிலிருந்து..?

வால்பையன் said...

//கும்க்கி said...

அவரு உதவியா செய்யறார்...
சிச்சு சிச்சு வவுத்து வலிதான் வருது..//

அதுவே பேருதவி!
வயித்தவலி வர்ற அளவுக்கு ஒருத்தரால் சிரிக்க வைக்க முடியுதுன்னா அவரு மேதாவி தான் போங்க!

Rajan said...

வாலுக்கு,

முருங்க மரத்து வேதாளம் - நாலு

கொட்டக் காட்டு குரால் - ரெண்டு

கொல்லி வாயி, கொக்கர வெட்டி தலா ஒன்னு

மொத்தம் எட்டு ஐட்டம் ஏவப் பட்டு இருக்கிறது

வால்பையன் said...

//உம்மீது காட்டேரி யை ஏவி விடட்டுமா?
அதுவும் ஊட்டியிலிருந்து..?//

எத்தனை காட்டேரி வந்தாலும் சமாளிப்போமாக்கும்!

பாபு said...

சந்திப்பு பற்றிய பதிவுகளில், அந்த சந்திப்பு பற்றிய தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்வதை விட்டு விட்டு , ஒருவரின் தனிப்பட்ட செயல்களை மட்டும் ஏன் எல்லோரும் அறிய பதிவிடுகிறார்கள் என்று தெரியவில்லை.
அவரின் செயலால் சிலருக்கு மனகசப்பு இருந்தால் கூட அதை பொதுவில் வைக்காமல் இருப்பதுதானே பெருந்தன்மை.

பாபு said...

வால் மிகவும் வெளிபடையாக இருப்பதினாலேயே அவரை அதிகம் விமர்சிக்கிறோம் என்று நினைக்கிறேன்

Rajan said...

காட்டேரி நல்ல கட்டையா இருந்தா ஆன் த வே அவினாசில கொஞ்சம் எறக்கி விடுங்க தல

T.V.ராதாகிருஷ்ணன் said...

டேக் இட் ஈஸி arun

வெற்றி said...

இனிமேலாவது சூதானமா இருங்கப்பு..
அப்புறம் காட்டேரி,காட்டு கடல்,காட்டு சமுத்திரம் எல்லாத்தையும் ஏவி விட்டுட போறாணுக.. :)

வால்பையன் said...

//காட்டேரி நல்ல கட்டையா இருந்தா ஆன் த வே அவினாசில கொஞ்சம் எறக்கி விடுங்க தல //

அது ஆலமரம் தல, உங்களால மேய்க்க முடியாது!

Rajan said...

அது என்ன ஆடா தல மேய்க்கரதுக்கு!

அதுவும் நானும் உழவோட்டலாம்னு இருக்கோம் !

Kumky said...

rajan RADHAMANALAN said...
காட்டேரி நல்ல கட்டையா இருந்தா ஆன் த வே அவினாசில கொஞ்சம் எறக்கி விடுங்க தல...

யோவ் அடங்க மாட்டீராய்யா...உமக்கு 24 மணி நேர ட்யூட்டி போட சொல்லனும்....

நீரு அடிக்கற கொட்டம்லாம் அக்காவுக்கு தெரியாதாட்ட இருக்கே...

Rajan said...

//நீரு அடிக்கற கொட்டம்லாம் அக்காவுக்கு தெரியாதாட்ட இருக்கே...//

தலைவா எனக்கு சூனியம் வெச்சுராதீங்க!

அது காட்டேரிக் கெல்லாம் காட்டேரி !

Rajan said...

//இந்த சந்திரன் பக்கத்து வீட்டுல இருந்து பாக்குறான், அது போக உங்களுக்கு ஏழரைல சனி //


அவன் உங்கள பாத்து என்ன பண்ண போறான் !

ஒருவேள அவன் அஜக்கா இருப்பானோ !

Kumky said...

rajan RADHAMANALAN said...
//நீரு அடிக்கற கொட்டம்லாம் அக்காவுக்கு தெரியாதாட்ட இருக்கே...//

தலைவா எனக்கு சூனியம் வெச்சுராதீங்க!

அது காட்டேரிக் கெல்லாம் காட்டேரி !

சொந்த செலவுல சூனியம்கறது இதான் போல....சொல்லும்போது இதையும் சேர்த்து சொல்லிட்டாப்போச்சு.

Rajan said...

அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் !

Rajan said...

நான்லாம் எலக்கிய வாதி!
பேர கெடுத்து விட்ராதீங்க தல !

வால்பையன் said...

//நான்லாம் எலக்கிய வாதி!
பேர கெடுத்து விட்ராதீங்க தல ! //

இந்த வியாதி எப்போருந்து தல!

Rajan said...

//இந்த வியாதி எப்போருந்து தல!//

எல்லாம் உம்மால தான் ஓய்!

வர வர யாரும் நம்ப மாட்டேங்கறாங்க !

எதோ பூச்சாண்டிய பாக்கறமாதிரி பாக்கறாங்க !

உண்மைத்தமிழன் said...

சஞ்சய் தம்பி..

எதுக்கு நீயும் சரக்கடிச்ச மாதிரி புலம்புற..? லூஸ்ல விடு..!

சில லூஸ்களை என்ன செஞ்சாலும் திருத்த முடியாது..! அது மாதிரியான கேஸ்தான் இந்த வாலு..! அடங்காதது..!

தண்ணியடிச்சிட்டு குஷாலா இருந்த ஒரு ஆளை மண்டபத்துக்குள்ள கூப்பிட்டு உக்கார வைச்சிருந்தாங்க பாரு.. அவங்களைத்தான் மொதல்ல மொத்தணும்..!!!!

வால்பையன் said...

//சில லூஸ்களை என்ன செஞ்சாலும் திருத்த முடியாது..! அது மாதிரியான கேஸ்தான் இந்த வாலு..! அடங்காதது..!//

நல்லா உரைக்குற மாதிரி சொல்லுங்கண்ணே!
(யாருக்குன்னு கேட்கப்பிடாது)

Rajan said...

@ உண்மைத் தமிழன்

கொல்லுங்க எசமான் !
கொல்லுங்க !

இந்த குடிகாரங்களே இப்புடித்தான்

கொல்லுங்க எசமான் !
கொல்லுங்க !

கிரி said...

அருண் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை ..அது உங்கள் விருப்பம்..பொது இடத்தில் (என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது மற்றவர்கள் கூறுவதை வைத்தே கூறுகிறேன்) இதைப்போல நடப்பதை தவிர்ப்பது நல்லது.

உங்களை பற்றி தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்..அனைவரும் அப்படி எடுப்பார்கள் என்று எண்ண முடியாது.

ஒரு சிலருக்கு உங்கள் செயல் தர்மசங்கடத்தை வரவழைத்து இருக்கலாம்.

இதை அனுபவமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

அகல்விளக்கு said...

அட

எவ்வளளோ தாங்குறோம். இத தாங்க முடியாதா?

பை த வே...

தல நீங்க அன்னிக்கு ஹேக்கிங் பத்தி சொன்னது ரொம்ப யூஸ்புல்லான மேட்டரு. ஆனா நீங்க டைட்ல இருந்ததாலதான் மத்தவங்க அத சொல்லும்போது கூட கலாய்ச்சாங்க...

உங்க மேல யாரும் கோபப்பட்ட மாதிரியே தெரியலியே...

அப்புறம் ஒய் 'சூனியம்'.

ஒரு சின்ன வருத்தம் அம்புட்டுத்தேன்.

விடுங்க விடுங்க...

நோ ஃபீலிங்... ஓக்கேவா???

Anonymous said...

எங்க தளய இப்படி கைப்புல்ல மாதிரி ஆகிடீங்கலே அப்பு. குடிச்சிட்டு கவுந்து கெடக்கிரிது குத்தமா அய்யா ? என்ன பேசுரீங்க. நீங்கெள்ளாம் தண்ணி அடிக்கவே மாடிங்கலா ?? இதைப் போய் பெறிசு பண்ணிகிட்டு.
தள பதிவர்ங்க கிட்ட உறிமைய பலகுறது புடிக்காம உங்க கதிகலா அவுத்து விடதிங்கப்பு. அன்னா என்ன செஞ்சாழும் நாங்க தங்குவோம் ஏன்னா அன்னா எங்க உடன்பிரப்பு, அதை பிரிக்க எந்த கிராம, நகற வாசிகலாலும் முடியாது

MADURAI NETBIRD said...

தள சத்யராஜ் மாதிரியே இருகிங்க................

Rajan said...

எந்த படத்து சத்யராசுனு சொன்னா நல்லா இருக்கும்

MADURAI NETBIRD said...

தள பாட்டில திறக்காம குடிக்கிற பழக்கத்த நீங்க இன்னும் நிறுத்தலையா.
என்ன தள என்னால நம்ப முடியல................

MADURAI NETBIRD said...

மொத படம் தான் ............

MADURAI NETBIRD said...

இனிமே தான் அந்த படம் வரபோகுது.
படத்தோட பேரு Mr.வால்

பரிசல்காரன் said...

தீதும் நன்றும் பிறர் தர வாரா

MADURAI NETBIRD said...

மொத்த பாட்டிலையும் குடிச்சு கவுத்துபுட்டு. குறு குறு பார்வ வேற.

அத்திரி said...

பேருக்கேத்த மாதிரி போட்டோவுல இருக்கீங்க

வெற்றி-[க்]-கதிரவன் said...

உங்க குழந்தை எப்படி இருக்கா ?

ஈரோடுவாசி said...

இதுக்கு எல்லாம் வருத்தபட்ட எப்படிதல இன்னும் சாதிக்கவேண்டியது எவ்வளவோஓஓஓஓ ..................

cheena (சீனா) said...

அன்பின் வால்

இடுகை நன்று நன்று

தவறா - சரியா - இது அவரவர் எடுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கிறது - இருப்பினும் அது ஒரு பொது நிகழ்ச்சி - அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் கூடிய கூட்டம் - அங்கு இதனைப் பொறுத்துக் கொள்ள இயல்பான மனிதர்களால் இயலாது. உன்னைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் கூட சபை நாகரீகம் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்படலாம் அல்லவா. உன்னைப் பற்றி நான் நன்கு அறிந்தவன் - சிந்திக்கலாமே நண்பா - பொது மேடைகளில் தவிர்க்கலாம் நண்பா.

அடுத்த நிகழ்ச்சிகளில் புதிய வால் முளைக்க எடுக்கும் முயற்சி வெற்றி பெற நல்வாழ்த்துகள் நண்பா - புதிய வால்.

நல்வாழ்த்துகள் நண்பா

Prabhu said...

பெரிய மனுஷங்க ஏரியாவா இது? நாங்கள்லாம் குலோப் ஜாமூன்ல இனிப்பு அதிகமா இருந்தாலே போதையாயிடுறவங்க!

Romeoboy said...

விடுங்க பாஸ் . அடுத்த கூடத்துல பெரிய பட்டைய (திருநீறு சொல்லுறேன் வேற எதையும் நினைக்க வேண்டாம்) போட்டு முதல் சீட்ல செட்டில் ஆகிடுங்க.

வானதி said...

குறு குறு கண்களிலே

எனையவள் வென்றாளே

இதோ

இதோ

அவள்

எனை

பதம்

பார்க்கிறாள்ள்ள்ள்ள்........

வானதி said...

பொது இடத்தில்,
அதுவும் பதிவர்கள் சந்திக்கும் இடத்தில்,
உங்களை முதன்முதலாய் பார்ப்பவர்களை எண்ணியாவது தவிர்த்திருக்கலாம். (எண்றதுன்னா 1 2 3 ன்னு இல்ல)

Anonymous said...

//விடுங்க பாஸ் . அடுத்த கூடத்துல பெரிய பட்டைய (திருநீறு சொல்லுறேன் வேற எதையும் நினைக்க வேண்டாம்) போட்டு முதல் சீட்ல செட்டில் ஆகிடுங்க.//

சந்தடி சாக்கில இப்படி அசிங்கப்படுத்த வேனாம். ஒரு போதும் திருநீறு மாதிரி முட நம்பிக்கைகளுக்கு அடிபணியமாட்டார். அடுத்த மீட்டிங்-ல குடிச்சுட்டு சட்டைய வேனா கிழிசுக்குவார், அது அவர் இஷ்டம், அதுக்காக நல்லது பண்ற மாதிரி இப்படி அவரை இகழவேண்டாம். குடிப்பது ஒருவரின் தனிப்பட்ட பழக்கம் அதை விமர்சிக்காதீர்

supersubra said...

சூனியம் என்றால் ஒன்றும் இல்லை என்று பொருள். அதை யார் யாரிடம் எப்படி வைக்க முடியும்.

Rajan said...

//சூனியம் என்றால் ஒன்றும் இல்லை என்று பொருள். அதை யார் யாரிடம் எப்படி வைக்க முடியும்.//

இதுக்கு பதில் சொல்லுங்க தல மொதல்ல

Anonymous said...

உனக்கு வேற வேலைய கிடையாதா ?

Rajan said...

கேக்கறாரு சொல்லுங்க தல

Anonymous said...

தோணி வருகுதுண்ணு
துறைமுகமே காத்திருந்தேன்
தோணி கவுந்திருச்சே
துறைமுகமே ஆசையில்லை!

கப்பல் வருகுதுண்ணு நான்
கடற்கரையே காத்திருந்தேன்
கப்பல் கவுந்திருச்சே
கடற்கரையே ஆசையில்ல‌!

Rajan said...

//தோணி வருகுதுண்ணு
துறைமுகமே காத்திருந்தேன்
தோணி கவுந்திருச்சே
துறைமுகமே ஆசையில்லை!

கப்பல் வருகுதுண்ணு நான்
கடற்கரையே காத்திருந்தேன்
கப்பல் கவுந்திருச்சே
கடற்கரையே ஆசையில்ல‌! //

யப்பா கவிஞர்களே !

இதல்லாம் நோட் பண்ணுங்கப்பா !

Anonymous said...

உனக்கு வேற வேலைய கிடையாதா ?

Anonymous said...

'muLLu munaiyilE mooNu kuLam vettinEn, reNdu kuLam pAzhu, oNNulE thannIiyE ilai'- I dug three ponds- two were dry and one did not have water.

You can listen to it sung by Pushpavanam Kuppusami here: http://www.musicindiaonline.com/music/f … album.552/
Look for the song "Mullu Munaiyile - Vedanta Paattu"

The sequence goes from 3 ponds to 3 men who came to the pond (2 lame & one handless), 3 pots made by the handless man, 3 rice grains cooked, and so on

This song is opt for the situation

Anonymous said...

ம்ம் வால் பையன் இட்லி வடயில் சற்று முன் நீங்கள் பார்த்த அதே ANONY தான் நான் .
கணக்கு வழக்கு இல்லாமல் எல்லா ப்லோக்சையும் படிக்கும் பழக்கம் எனக்கு.
அனோனி (ANONY ) வலையில் இருந்து விடுபடும் வழிதான் தெரியவில்லை.
முடிந்தால் உதவுங்கள்.

அப்துல் சலாம்
கோலாலம்பூர் -மலேசியா

வால்பையன் said...

@ அப்துல்

உங்களுக்கு ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் ஒப்பன் செய்து கொள்ளுங்கள்!

அல்லது அதர் ஆப்சனில் உங்கள் பெயர் கொடுத்து பின்னூட்டம் இடலாம், உங்களுடம் உரையாடுவதற்கு அது வசதியாக இருக்கும்!

Anonymous said...

நன்றி வால் பையன்,

கூகிள் அக்கௌன்ட் create செய்து anony திரை விலக்குகிறேன்

அப்துல் சலாம்

அப்துல் சலாம் said...

வந்து விட்டேன் ஹ ஹ ஹா...
இனிமேல் anony முகமுடி தேவை இல்லை (தற்காலிகமாக).
யாரையாவது திட்ட வேண்டுமென்றால் எடுத்து மாட்டிக்க வேண்டியதுதான்.
சும்மா உளுளுவாய்க்கு.

அப்துல் சலாம் said...

testing with photo

கூடுதுறை said...

என்ன வால் அவர்களே ஈரோட்டில் இவ்வளோ நடந்து இருக்கு எனக்கு ஒன்னும் சொல்லவே இல்ல

என்னையும் ஈரோடு குழுமத்தில் சேர்த்துக்குங்க பாஸ்

மேவி... said...

"எனக்கு யாரோ சூனியம் வச்சிட்டாங்க!"


ellam neengaga irukkinga nnu poramai vaals....

Anonymous said...

அன்பின் வால் பையன், !!
போறவன் வாறவன் எல்லாம் உனக்கு புத்தி சொல்ல ஆரம்பிச்சுட்டானுக. அங்கே போய் வேற டவுசரை நீயா ஏன் கிழிச்சுகிறாய். கொஞ்சம் நாளைக்கு பின்னூட்டம் ஏதும் போடாம ஒய்வு எடு.
அன்பு நண்பன்

அப்துல் சலாம் said...

விடுங்க பாஸு தண்ணி அடிகறதுல்லாம் ஒரு விஷயமா ?
நாம நெனச்சா அடுத்த வாரமே திருந்த முடியாதா ?
But கொஞ்ச நாளைக்கு "இட்லி வடை" மட்டும் சாப்பிட வேண்டாம்
நம்மல சுத்தி அங்க ஒரு குரூப் அலையுது ஹி...ஹி...ஹி...

Rajan said...

//நாம நெனச்சா அடுத்த வாரமே திருந்த முடியாதா ?//\\


அதான ! நாமள்லாம் எத்தன தடவ திருந்திருக்கோம்

அப்துல் சலாம் said...
This comment has been removed by the author.
அப்துல் சலாம் said...

//அதான ! நாமள்லாம் எத்தன தடவ திருந்திருக்கோம்//

தண்ணி அடிச்சா திருந்துறதும்
ஜன்னி கண்டா புலம்புறதும் சகஜம்தானே பாஸு...
ம் ம் என்னும் எத்தனை வாட்டி தான் திருந்தன மாதரியே நடிக்கிறது ?

Anonymous said...

தளைவ, இன்னாது இப்படி கவுந்துக்கினு கிடக்க. சட்டுனு ஏந்திறி. .

ஏந்திறி தள ஏந்திறி
ஏந்திறி தள ஏந்திறி
ஏந்திறி தள ஏந்திறி

சொள் அலகன்

பித்தனின் வாக்கு said...

// யாரோ சூனியம் வச்சிட்டாங்க....என்று சொல்வதை விட.....

சொந்த காசில் சூனியம் வச்சிகிட்டேன் என்று நீங்கள் சொல்லலாம்....

ஹி.....ஹி..... //
நான் இதை வழிமொழிகின்றேன்.

அட விடுங்க வால்ஸ் , சும்மா இதைப் போய் குழப்பிக் கிட்டு. சில சமயங்களில் நாம் செய்யும் அநாகரிகங்களில் இருந்துதான் நாகரீகத்தைக் கற்றுக் கொள்ள முடியும். இதை இத்துடன் மறந்து, இனி மாற முயற்ச்சிக்கின்றேன் என்பதை மட்டும் நினைவில் கொள்ளவும். நன்றி வால்ஸ்.

Anonymous said...

பினாயில் குடித்தால் போதை வருமா என்று கேட்டிர்களே , அதற்காக பதிவர் சந்திப்பு அன்று அதை ஏதாவது கலந்து அடித்து விட்டீர்களா ? அதனால் தான் ஒரே தூக்க தூக்கிடிச்சா ??

அதற்கு பதில் லிஸ்டிரின் மவுத் வாஸ் கலந்து பாருங்கள் (அடுத்த திருப்பூர் மீட்டிங் ல)

Anonymous said...

ராஜன்.. எங்க போய்ட்ட சீக்கிரம் நம்பரை போடு , நூறுக்கு கொண்டுவா

அகல்விளக்கு said...

அட 500க்கு வாழ்த்துக்கள் தல..

அகல்விளக்கு said...

மீ த 100........

வால்பையன் said...

பின்னுட்டமிட்டு ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

!

Blog Widget by LinkWithin