எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு!...

பெருசா ஆச்சர்யபடுறதுக்கு ஒண்ணுமில்லை, அது மனிதனுக்கே உரிய குணம் தான், எங்க கூட்டம் இருந்தாலும் நம்ம மக்களால எட்டிபார்க்காம இருக்க முடியாது, உதாரணத்துக்கு சொல்லனும்னா குரளி வித்தை காட்டுறவன் கூடவே ஒரு நாலு பேரை வச்சிருப்பான், முதலில் அவனுங்க தான் சுத்தி நிப்பானுங்க, அரைமணி நேரத்தில் இருபது, முப்பது பேர் சேர்ந்திருவாங்க, ஆனா கடைசி வரைக்கும் அவன் கூடவே இருந்த அந்த நாலை பேரை நம்மால கண்டுபுடிக்கவே முடியாது, இப்பெவெல்லாம் அந்த மாதிரி வித்தை காட்டும் பொழுப்பு நடக்கிறதில்லை, ஆனாலும் மனுசன் புத்தி மட்டும் மாறாதே, அதனால தான் பெரும்பான்மைகிட்ட தன்னை ஒப்பு கொடுத்துகிட்டு சுத்துறான்!

நூத்துக்கு எண்பது பேருக்கு மேல இந்த மனநிலை உள்ளவர்கள் தான், சொந்த அண்ணன் தேர்தல்ல நிப்பாரு ஆனா ஓட்டு வேற ஆளுக்கு போடுவான், ஏன்னு கேட்டா, நான் ஓட்டு போட்டா அவரு ஜெயிக்க போறாருன்னு சொல்லுவான், தன்னை எப்போதும் ஜெயிக்கும் பக்கம் இருப்பது போலவே காட்டிகொள்வது பொதுபுத்தியுள்ள மனிதனின் குணம், ஜெயிக்கும் ஆட்களை பொறுத்து அவர்களது இடமும் மாறும், ஆனால் பொதுபுத்தி மட்டும் போகாது, தன்னம்பிக்கை குறைவான ஒருவித பாதுகாப்பற்ற தன்மையா உணர்பவர்கள் இந்த பொது புத்திகாரங்க!, இவுங்களை ஒண்ணும் பண்ணமுடியாது, ஏன்னா தப்பாவேயிருந்தாலும் அதிகம் பேர் சரிதான்னு சொன்னா அது சரியாத்தான் இருக்கும்னு நம்புறவங்க இவுங்க!

பொதுவாவே மனுசனுக்கு மிஸ்டிரிஸ் எனப்படும் ஆச்சர்யங்களை பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம், பொதுவா ஒரு விசயத்தை உண்மைன்னு நம்புறதுக்கு அதிகபடியான சாத்தியகூறுகள் இருக்கான்னு பார்ப்பான், அவனாலே உள்ளேயே போகமுடியலைனா அதை அப்படியே நம்பும் மனநிலைக்கு தள்ளப்படுவான், அதற்கு அவன் சொல்ற காரணம் தான் தமாசா இருக்கும், அந்த கலைக்டர் நம்புறாரு, அந்த அரசியல் தலைவர் நம்புறாரு அதனால நானும் நம்புறேம்பாம், பொதுபுத்தி உள்ள மனிதர்களுக்கு மாற்று கோணம்னா என்னானே தெரியாது, ஒருத்தன் அவனுக்கு நண்பனாகவோ அல்லது எதிரியாகவோ தான் இருக்க முடியும், அவனால ஒருத்தரை தனிபட்ட ஒரு புரிதல் கொண்ட மனிதரா பார்க்கவேமுடியாது!

கைரேகை ஒருத்தருக்கு ஒருத்தர் வேறுபடுவது போல் நமது கருத்துகளிலும் வேறுபடுகிறோம், சிலருக்கு மட்டும் சில விசயங்களில் ஒத்த கருத்து இருக்கும், ஆனால் ஒருவருக்கு முழுமையான ஜெராக்ஸாக யாருமே இருக்கமுடியாது, இந்த பொதுபுத்தி மக்கள் மட்டும் கொஞ்சம் வித்தியாசம், தனக்கு ஒரு ரோல்மாடல் இல்லைனா வாழ்கையே முழுமையடயாதது போல் உணர்வாங்க, தன்னை மற்றொருவரின் வழி தோன்றலாக காட்டிக்க விரும்புவாங்க, தன்னை ஒருத்தருக்கு வாரிசாகவோ, சீடராகவோ, ரசிகராகவோ அவுங்களே சொல்லிக்குவாங்க!, தனித்தன்மைனா கிலோ என்னவிலைன்னு கேட்பாங்க!.

அஸ்வினி,ப்ரணி எல்லாம் நட்சத்திரம் இல்லை, அவையெல்லாம் 360 டிகிரிய 27 பிரிச்சி சும்மா வச்சிகிட்ட பேரு, அதெல்லாம் கற்பனை தான், இருந்தாலும் உங்களுக்கு அடிப்படை வான சாஸ்திரம் தெரிஞ்சிருக்கனும், அப்போ தான் உங்களுக்கு புரியும், கற்பனையை நான் ஏங்க தெரிஞ்சிகனும்னு கேள்வி கேட்டா நீங்க முட்டாளாவோ, லூசுப்பயலாவோ பார்க்கபடலாம், எனக்கு என்ன சந்தேகம்னா ஒருத்தரை சோசியம் சொல்லி ஏமாத்த அந்த கற்பனை குதிரைங்க எல்லாம் தேவையேயில்ல, நீ பொறந்த தேதி பதினெட்டா, ஒவ்வோரு பதினெட்டாம் நாளும் நீ புதுசா பொறக்குற மாதிரி, அதனால நீ வெளியூர் பயணத்தை, கொடுங்கல், வாங்கலை தவிர்ன்னு சொன்னா மண்டையாட்டி கேட்க நாப்பது பேர் இருக்கான், ஆனா எவனுமே ஒண்ணாந்தேதி பிறந்தவன் தினமும் இதை கடைபிடிக்கனுமான்னு எதிர் கேள்வி கேட்க மாட்டான்!
அப்படி கேட்டாத்தான் நாடு என்னைக்கோ உருப்பட்டிருக்குமே!

ஜாதகம்னா என்னான்னு சொல்லி கொடுக்க வர்றவங்களே சொல்ற முத வார்த்தை இதனால் உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றமும் செய்ய முடியாது! ஆனாலும் மனிதனுக்கு தன்னை பற்றிய எதிர்காலம் என்னான்னு தெரிஞ்சிகிற ஆர்வம் எதாவது செய்ய சொல்லிகிட்டே இருக்கு, மேலும் தன்னை பற்றிய மற்றவர்களது அபிப்பிராயங்களுக்கும் அதிகமுக்கியத்துவம் கொடுப்பான், அது ஒருவித சுய பரிசோதனை தான், ஆனால் சோதிடம் என்பது அதிர்ஷ்டத்துக்கு மறுபெயர், தன்னம்பிக்கையற்ற, பாதுகாப்பற்ற தன்மையா உணர்ற மக்களை ஜாதகம் என்ற பெயரில் எளிதில் ஏமாற்றமுடியும்! ரொம்ப சுலபமா அதை செய்யலாம், ஒரு பெண் கர்ப்பமா இருக்கான்னு வச்சுகோங்க, என்ன தெரியுமா சோசியகாரரு சொல்லுவாரு, நிச்சயமா ஆண்குழந்தை பிறக்கும், மிஸ்ஸாச்சுன்னா பெண் குழந்தை தான்! எப்பூடி!



ஜோதிடம் இந்துதுவாவின் நீட்சி தான்னு எல்லோருக்குமே தெரியும், எல்லா கோள்களுக்கும் ஒரு உருவத்தை கொடுத்து, சனி திசை நடந்தா திருநள்ளாறு போய் கும்பிடுன்னு பாப்பானை தவிர வேற எவன் சொல்லியிருக்க முடியும்! உலகத்துல 6 ல ஒருத்தன் இந்தியன் ஆனா எல்லோருமே ஜோசியம் பாக்குறதில்லை, அதனால நாசமாவா போயிட்டாங்க, நம்மளை சுத்தி ஆயிரம் முட்டாள்கள் வாழ்க கோஷம் போடும் போது ந்மக்கு ஒரு சந்தோசமாதான் இருக்கு இல்லையா!? இல்லைனா இத்தனை நடிகர்களும், அரசியல்வாதிகளும் பொழுப்பு நடந்த முடியுமா, அந்த கோஷ்டியில் இப்போ இன்னும் சிலர் சேர்றாங்க!


********************


டிஸ்கி:எனக்கும் சலிப்பா தான் இருக்கு, என்ன தான் சொன்னாலும் யோசிக்கவே மாட்டோம்னு சொல்றவங்களுக்கு திரும்ப திரும்ப சொல்லனுமான்னு, ஆனா இப்படி கொஞ்சமாவது யோசிக்கிறதால தான் எனக்கு இன்னும் கிறுக்கு பிடிக்காம இருக்கு!

204 வாங்கிகட்டி கொண்டது:

«Oldest   ‹Older   1 – 200 of 204   Newer›   Newest»
Mythees said...

me tha first

hiuhiuw said...

//ஒருத்தரை சோசியம் சொல்லி ஏமாத்த அந்த கற்பனை குதிரைங்க எல்லாம் தேவையேயில்ல,//

அதேதான் தல !

Vadielan R said...

ரொம்ப கரெக்ட் தல ஒருத்தர ஜோசியம் சொல்லி ஏமாத்தனும் அவசியமே இல்லை என்ன செய்யறது நல்லா இருக்கு

Anonymous said...

தள!!
நீ புகுந்து வெளயாடு, பார்ப்பனர்கலின் முக திறைய கிளி .

கிலி ஜோச்யம் பாற்த்தேன். மதுரை அய்யா ( மதங்கலை ஓட ஓட வைக்கிராருள்ள ) என்னைத் திட்ட மாட்டறுன்னு வந்துது , அது தான் இப்ப பின்னூட்டம் .

சொள் அலகன்

க.பாலாசி said...

//இப்பெவெல்லாம் அந்த மாதிரி வித்தை காட்டும் பொழுப்பு நடக்கிறதில்லை//

யாரு சொன்னா? போன வாரம் ஊருக்கு போனப்ப அப்டித்தானே தாயத்து வாங்கிகிட்டு வந்தேன்.

//அப்படி கேட்டாத்தான் நாடு என்னைக்கோ உருப்பட்டிருக்குமே!//

கவலைப்படவேண்டிய விசயம்தான்.

hiuhiuw said...

//யாரு சொன்னா? போன வாரம் ஊருக்கு போனப்ப அப்டித்தானே தாயத்து வாங்கிகிட்டு வந்தேன்.//


எங்க கட்டறது தல !

Unknown said...

// எனக்கும் சலிப்பா தான் இருக்கு, என்ன தான் சொன்னாலும் யோசிக்கவே மாட்டோம்னு சொல்றவங்களுக்கு திரும்ப திரும்ப சொல்லனுமான்னு, ஆனா இப்படி கொஞ்சமாவது யோசிக்கிறதால தான் எனக்கு இன்னும் கிறுக்கு பிடிக்காம இருக்கு!//

ஹா.., ஹா.., இப்டியே நல்லா சிந்திங்க...,

அ.மு.செய்யது said...

நல்ல விஷயங்கள திரும்ப திரும்ப சொல்லிக்கறதுள்ள தப்பே இல்ல.

hiuhiuw said...

//நல்ல விஷயங்கள திரும்ப திரும்ப சொல்லிக்கறதுள்ள தப்பே இல்ல.//

ஒரு தடவ உங்க பிளாக்ல சொன்னபோது வந்து திட்டறீங்களே ! :-(

Prabhu said...

டிஸ்கி:எனக்கும் சலிப்பா தான் இருக்கு, என்ன தான் சொன்னாலும் யோசிக்கவே மாட்டோம்னு சொல்றவங்களுக்கு திரும்ப திரும்ப சொல்லனுமான்னு, ஆனா இப்படி கொஞ்சமாவது யோசிக்கிறதால தான் எனக்கு இன்னும் கிறுக்கு பிடிக்காம இருக்கு! ///

யோசிக்காதவங்க இத படிச்சு திருந்தப் போறது இல்ல. திருந்தினவனுக்கு இது தேவையில்லை. ஸோ, கூல்!

இதனால தான் நாடு திருந்தப் போறதில்லை. அமெரிக்காவ எல்லாத்துக்கும் திரும்பி பார்க்கிறோமே, முக்கால்வாசி பேர் பரிணாம வளர்ச்சியை நம்புவதில்லை. என்ன முட்டாள்தனம்?
உலகம் முழுக்க உண்டு. ஸோ மோர் டென்ஷன் லெஸ் வொர்க், லெஸ் டென்ஷன் மோர் வொர்க். ஹி... ஹி..

சும்மா... சீரியஸா எடுத்துக்க்காதீங்க! :)

vasu balaji said...

:)).ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ ஹய்ய்ய்யோ. இந்த இடுகையிலயே பாருங்க. வால்னு பேரு இருக்கு. எல்லாருக்குந்தெரியும். ஆனாலும் ஒருத்தரு தலன்னா எல்லாரும் தல தலன்னே சொல்றாங்க. திருந்த மாட்டாங்க வால்.

வால்பையன் said...

//ஒரு தடவ உங்க பிளாக்ல சொன்னபோது வந்து திட்டறீங்களே ! :-(//

யாருக்கு நல்ல விசயம்னு நீங்க முழுசா கேட்கல போல!

hiuhiuw said...

//எல்லாருக்குந்தெரியும். ஆனாலும் ஒருத்தரு தலன்னா எல்லாரும் தல தலன்னே சொல்றாங்க. திருந்த மாட்டாங்க வால்.//

அதுக்கு ஏங்க நீங்க தலைல கை வெச்சா மாதிரியே போஸ் குடுக்கறீங்க

பாபு said...

//தன்னை எப்போதும் ஜெயிக்கும் பக்கம் இருப்பது போலவே காட்டிகொள்வது பொதுபுத்தியுள்ள மனிதனின் குணம், //

sariyaa sonneenga

hiuhiuw said...

//யாருக்கு நல்ல விசயம்னு நீங்க முழுசா கேட்கல போல!//

அது சரி !

Iyappan Krishnan said...

விவேகானந்தரின் வாக்கு : ( கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்தின் சொற்பொழிவு )


" நாம் சத்தியமாக நடக்கும் என்று நினைத்த ஒன்று நடக்காத வரைக்கும், நடக்காது என்று நிச்சயமாக ஒன்று நடந்துக் கொண்டிருக்கும் வரை கடவுள் என்ற ஒன்றை நம்ப வேண்டி இருக்கிறது "


:)

தமிழ் அமுதன் said...

////தன்னம்பிக்கையற்ற, பாதுகாப்பற்ற தன்மையா உணர்ற மக்களை ஜாதகம் என்ற பெயரில் எளிதில் ஏமாற்றமுடியும்! ////


அதேதான்...

வலைஞன் said...

வால்,
ஒரு விஷயம் பற்றி
ஒண்ணுமே புரியலேன்னா ஒன்னு சும்மா இருக்கணும் இல்ல பாப்பான் தான் இத்தனைக்கும் காரணம்னு
'அவா' பேரிலே பழி போடணும்
இதுதான் இப்போ தமிழ் நாட்டிலே பொழைப்பு நடத்த உதவும் எழுதப்படாத விதி.
அதுல நல்ல தேறிட்டீங்க போல!
வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

//நீ பொறந்த தேதி பதினெட்டா, ஒவ்வோரு பதினெட்டாம் நாளும் நீ புதுசா பொறக்குற மாதிரி, அதனால நீ வெளியூர் பயணத்தை, கொடுங்கல், வாங்கலை தவிர்ன்னு சொன்னா மண்டையாட்டி கேட்க நாப்பது பேர் இருக்கான், ஆனா எவனுமே ஒண்ணாந்தேதி பிறந்தவன் தினமும் இதை கடைபிடிக்கனுமான்னு எதிர் கேள்வி கேட்க மாட்டான்!
அப்படி கேட்டாத்தான் நாடு என்னைக்கோ உருப்பட்டிருக்குமே!//

நச் தல..

//ஆனா இப்படி கொஞ்சமாவது யோசிக்கிறதால தான் எனக்கு இன்னும் கிறுக்கு பிடிக்காம இருக்கு!//

இப்படி சொல்லி கிட்டே இருக்கனும் தல..அப்பதான் எவனாவது ஒருத்தனாவது யோசிப்பான்...உங்களுக்கு கிறுக்கு புடிச்சிருக்கோ இல்லையோ..எனக்கு இந்த பதிவு புடிச்சிருக்கு...

கலையரசன் said...

அடங்கமாட்டீங்க போல...?
வரும்போது கருப்பு நாயோட வர்றேன், அடக்க!!
(க.நா. புரிஞ்சுதா?)

வால்பையன் said...

@ வலைஞன்

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்துக்கு காரணம் பாப்பான்னு இங்க யாரும் கூவிகிட்டு இருக்கல, இந்து மதத்தையும், ஜோசியத்தையும் கொண்டு வந்தது பாப்பான்னு தான் சொல்லிகிட்டு இருக்கேன்!

ரொம்ப உறுத்தலா இருந்தா பூணூலை கழட்டி வச்சிட்டு வாங்க பேசலாம்!

hiuhiuw said...

என்னதான் காலர் பட்டன் போட்டாலும் இந்த பூணூல் எப்பிடியோ வெளிய வந்துருது

SUFFIX said...

நல்லா யோசிச்சு எழுதியிருக்கிங்க வால்.

Menaga Sathia said...

தலைப்பை பார்த்து பயந்துட்டேன் வால்.நல்லா யோசிச்சு எழுதிருக்கிங்க...

ஆரூரன் விசுவநாதன் said...

nice article

ஈரோடு கதிர் said...

//ஜோதிடம் இந்துதுவாவின் நீட்சி தான்னு எல்லோருக்குமே தெரியும், //

இல்லை மற்ற மதத்தினர் சோதிடர் முன்னால் உட்கார்ந்திருப்பதை பார்த்திருக்கிறேன்...

Anonymous said...

சோதிடம் எல்லா நாட்டிலும் இருக்கு , பிளாக் மாஜிக் எல்லா ஊரிலேயும் இருக்கு. அதல்லாம் உங்களுக்கு தெரியுமா வால் !! + வாலின் மனசாட்சி சொல் அழகன்+மற்றும் பின் பாட்டு மாதிரி கூடவே பின்னூட்டும் மிஸ்டர். எக்ஸ்.

நட்புடன் ஜமால் said...

வேட்டைகாரன் படம் வந்திடிச்சோன்னு பயந்து வந்தேன் ...

Dr.Rudhran said...

""எனக்கும் சலிப்பா தான் இருக்கு, என்ன தான் சொன்னாலும் யோசிக்கவே மாட்டோம்னு சொல்றவங்களுக்கு திரும்ப திரும்ப சொல்லனுமான்னு, ஆனா இப்படி கொஞ்சமாவது யோசிக்கிறதால தான் எனக்கு இன்னும் கிறுக்கு பிடிக்காம இருக்கு...."" i agree. keep writing

வால்பையன் said...

//இல்லை மற்ற மதத்தினர் சோதிடர் முன்னால் உட்கார்ந்திருப்பதை பார்த்திருக்கிறேன்... //

நான்கூடத்தான் ரம்ஜானுக்கு பிரியாணி தின்றேன்!

வால்பையன் said...

//Anonymous said...

சோதிடம் எல்லா நாட்டிலும் இருக்கு , பிளாக் மாஜிக் எல்லா ஊரிலேயும் இருக்கு. அதல்லாம் உங்களுக்கு தெரியுமா வால் !! + வாலின் மனசாட்சி சொல் அழகன்+மற்றும் பின் பாட்டு மாதிரி கூடவே பின்னூட்டும் மிஸ்டர். எக்ஸ்.//

நிச்சயமாக இருக்கு, அவையெல்லாம் தான் மனிதன் குழுமம் குழுமமாக வாழ்ந்ததற்கு ஆதாரங்கள்,

பலவகையான வாழைபழங்கள் இருக்கு, ஆனா அனைத்திற்கும் நிறைய வித்தியாசம், ஒரே ஒற்றுமை அவைகளுகெல்லாம் மூல பழம் ஒன்னு இருக்கு!

புரியுதா!?

எல்லாமே டுபாக்கூர் தான்னு சொல்றேன்

hiuhiuw said...

//வேட்டைகாரன் படம் வந்திடிச்சோன்னு பயந்து வந்தேன் ...//

இப்பதான் ரெண்டு நாளா அந்த பயம் மறந்து போயிருந்துது ..... நீங்க ஏன் பாஸ் மறுபடி பயமுறுத்தறீங்க !

க‌ரிச‌ல்கார‌ன் said...

வால்
ப‌குத்த‌றிவு சிங்க‌ம் க‌லைஞ‌ர் டிவியில‌ அதிர்ஷ்ட‌ க‌ற்க‌ள் விள‌ம்ப‌ர‌ம் போடுறாங்க‌ அத‌ போட்ட‌தனால‌ டிவியோட‌ டிஆர்பி ரேட்டிங் எகிறிடுச்சாம் அப்புற‌ம் த‌லைவ‌ர் டிவியிலேயே சொல்லிட்டாங்க‌ன்னு அவ‌ங்க‌ க‌டைல‌ உட‌ன்பிற‌ப்புக‌ள் கூட்ட‌ம் அள்ளிட்டு போகுதாம்

நாட்டு ந‌ட‌ப்பு எப்ப‌டி இருக்குனு பார்த்தீங்க‌ளா?

முடியும்கிறீங்கா???????

ஈரோடு கதிர் said...

//வால்பையன் said...
நான்கூடத்தான் ரம்ஜானுக்கு பிரியாணி தின்றேன்!//

அடிச்சிட்டா... அடிக்கிறதுக்கு முன்னாலையா..

கறி நிறைய இருந்ததா பிரியாணியில

வால்பையன் said...

@ கதிர்

இந்தியாவில் இருக்கும் 90% இஸ்லாமியர்கள் இந்து மதத்திலிருந்து மாறியவர்கள் தான், அவர்களில் ஓரிருவரை நீங்கள் பார்த்திருக்கலாம், ஆனால் ஜோதிடம் என்பது இஸ்லாமியர்களால் ஏற்றுகொள்ளபட்ட ஒன்றல்ல!

கிருஸ்துமஸ்சுக்கு வான்கோழி பிரியாணி,. ரம்ஜான், பக்ரீத்துக்கு மட்டன் பிரியானி ரெகுலராக வந்துவிடும், அந்த அளவுக்கு நமக்கு நட்பு கூட்டங்கள் அதிகம்!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

great, keep rocking.

க‌ரிச‌ல்கார‌ன் said...

//வலைஞன் said...
வால்,
ஒரு விஷயம் பற்றி
ஒண்ணுமே புரியலேன்னா ஒன்னு சும்மா இருக்கணும் இல்ல பாப்பான் தான் இத்தனைக்கும் காரணம்னு
'அவா' பேரிலே பழி போடணும்//

அதான் லேபிள்ளேயே விவாதம்னு சொல்றாரே உங்க‌ளால‌ தெளிவுபடுத்த‌ முடிஞ்சா வ‌ர்ற‌து அத‌ விட்டுட்டு ஏன் "பழி போடறிங்க‌,பழி போடறிங்க‌"னு புலி வ‌ருது புலி வ‌ருது மாதிரி உறுமுறிங்க??

Anonymous said...

//ஆனால் ஜோதிடம் என்பது இஸ்லாமியர்களால் ஏற்றுகொள்ளபட்ட ஒன்றல்ல!//

இந்து ரிலிஜின் மட்டும் எத்துகிச்சா ? இன்னா சொல்ற ? அதுக்குன்னு தனி தலிவனோ , தனி பொஸ்தவமோ எதிவும் கெடியாது. அத புரிஞ்சுசுக்க சொல்ல, நிறைய ப்ரைன்னு வேணும். சோதிடம் பொழப்புக் கோசரம் எடயில வந்ததுப்பா ! அத்தை போய் ரிலிஜின் கூட கண்பூஸ் பண்ணிக்காத !!

கூலா இருவேன் இன்னாத்துக்கு இப்படி டென்சன் காட்டுற

வால்பையன் said...

//இந்து ரிலிஜின் மட்டும் எத்துகிச்சா ? இன்னா சொல்ற ? அதுக்குன்னு தனி தலிவனோ , தனி பொஸ்தவமோ எதிவும் கெடியாது. அத புரிஞ்சுசுக்க சொல்ல, நிறைய ப்ரைன்னு வேணும். சோதிடம் பொழப்புக் கோசரம் எடயில வந்ததுப்பா ! அத்தை போய் ரிலிஜின் கூட கண்பூஸ் பண்ணிக்காத !!//

சிவனுக்கு, பிள்லையாருகெல்லாம் சனி பிடிச்சா மாதிரி சினிமாவுல காட்டுனாங்க தல,

உடல் உறுப்புகளை பாத்துக்க சோதிடத்தில் கோள்கள் வேலை செய்வதற்கும், இந்து மதத்தில் கக்கூஸ் போறதுக்கு கூட கடவுள் இருக்குறதுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கே!

அதாவது நீங்க இந்து மதத்தை ஏத்துகிறிங்க ஆனா சோதிடம் பொய்யுன்னு சொல்றிங்க சரியா!?

hiuhiuw said...

//இந்து மதத்தை ஏத்துகிறிங்க ஆனா சோதிடம் பொய்யுன்னு சொல்றிங்க சரியா!?//

அடாடா ! இதல்லவா கொள்கைச் சித்தாந்தம்

Anonymous said...

//இந்து மதத்தை ஏத்துகிறிங்க ஆனா சோதிடம் பொய்யுன்னு சொல்றிங்க சரியா!?//

அடாடா ! இதல்லவா கொள்கைச் சித்தாந்தம் //

நீ அப்பால குந்திக்கினு வேடிக்கை பாரு, உனக்கு ஒன்னும் வெளங்காது உனக்க சொந்தமா எதுனா பேச எழுத கத்துக்கினுவா

hiuhiuw said...

//நீ அப்பால குந்திக்கினு வேடிக்கை பாரு, உனக்கு ஒன்னும் வெளங்காது உனக்க சொந்தமா எதுனா பேச எழுத கத்துக்கினுவா//

ஆமா வெளங்கல கொஞ்சம் வந்து வெளக்கு புடிங்க

Anonymous said...

கண்ணா நா என்கப்பனுக்கே வெளக்கு புடிச்சவன் . என்ட விலாடாத

hiuhiuw said...

ஓ! அப்பனுக்கே வெளக்கு புட்ச சுப்பனா நீ !

அப்ப சரி !

Thuvarakan said...

//என்ன தெரியுமா சோசியகாரரு சொல்லுவாரு, நிச்சயமா ஆண்குழந்தை பிறக்கும், மிஸ்ஸாச்சுன்னா பெண் குழந்தை தான்//

கலக்கிட்டிங்க

Anonymous said...

//சிவனுக்கு, பிள்லையாருகெல்லாம் சனி பிடிச்சா மாதிரி சினிமாவுல காட்டுனாங்க தல, //

இராம. நாராயணன் நாய், பாம்பு எல்லாம லவ் பண்ற மாறி, பாம்பு காண்டு வச்சு பழிவாங்கிற மாறி காமிக்க சொல்ல, அத்தப் போய் மெய்யாலுமே நம்பிடனுமா ?

சினிமாகாரனை ரெபரன்ஸ் காமிச்சு தான் இப்படி தப்பு தப்பா புரிஞ்சிக்கினியா. எத்தினை பேர் இன்னா இன்னா சொன்னாலும் அத்தப் படிச்சு புரிஞ்சிகினு மெய் இன்னான்னு அன்டர்ஸாண்டு பண்ணிக்கோ -ன்னு அய்யன் வள்ளுவரே சொல்லிகீறாரே .

வால், விவாதம் பண்ண சொல்ல கோபம் வந்தா கீழ்தரமா எழுத ஆரம்பிசிடுவானுங்க சில கயிதங்க அத்த அப்பால போடு

hiuhiuw said...

அது போக அலி பொறந்தா அப்பனுக்கு தோஷம் னு
பிளேட்ட திருப்பிருவாணுக

hiuhiuw said...
This comment has been removed by the author.
Anonymous said...

//அது போக அலி பொறந்தா //

இப்ப தேவை இல்லாத என்ன எதுக்கு கண்ணா இழுக்கற

உன்ன நா எதுனா சொன்னனா

hiuhiuw said...

அன்பின் அனானி நா உங்கள சொல்லல ! பொதுவா தான் சொன்னேன் !

டென்சனாகாதீங்க ஒடம்புக்கு ஆவாது

கிரி said...

//இந்தியாவில் இருக்கும் 90% இஸ்லாமியர்கள் இந்து மதத்திலிருந்து மாறியவர்கள் தான்//

இதை நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன்! இதற்க்கு ஏதாவது ஆதாரம் உண்டா?

எனக்கு சோதிடம் என்பதில் முழு நம்பிக்கை இல்லை ஆனால் ஒரு சிலவற்றை புறக்கணிக்க முடியவில்லை. ஜோதிடத்தை அப்படியே கண்மூடித்தனமாக பின்பற்றவில்லை என்றாலும் சில விசயங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு, அதை முட்டாள் தனம் என்றால் என்னிடம் பதில் இல்லை.

ஜோதிடம் என்பது பல டுபாக்கூர் ஜோதிட நபர்களால் மற்றவர்கள் கிண்டலடிக்கும் நிலைக்கு வந்து விட்டது என்பதே என்னுடைய கருத்து.

இதைப்போல பதிவுகளில் வெற்று பாராட்டு மற்றும் எதிர்ப்பு காட்டாமல் சரியான முறையில் விவாதம் செய்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

காந்தி காங்கிரஸ் said...

நல்ல பதிவு

Jerry Eshananda said...

ராகு திசையில சூரிய புத்தி நடந்தா இப்படியெல்லாம் புலம்பச்சொல்லும்,ஒன்னும் கவலைப்படவேணாம், நான்தான் ஈரோடு வர்ன்றேன்ல, யாருக்கும் தெரியாம ஜாதக நோட்டை என் கிட்ட கொடுப்பா, சரிபண்ணிடலாம்

கிருஷ்ண மூர்த்தி S said...

"எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு?!..."

இதுவரை சந்தேகம் மட்டும் தான் இருந்தது!

Romeoboy said...

இந்த மாதிரி எழுதிட்டு போன கண்டிப்பா படிக்கிற எங்களுக்கு கிறுக்கு புடிச்சிடும் தல

COMMON MAN said...

ரைட்டு... பாப்பானோட ஜோதிடம் பத்தி எழுதியாச்சு..அடுத்த கும்பல்லயும் வானத்த காமிக்காம வேற எத எதையோ காமிச்சி கும்பல் கூட்டி கும்மி அடிக்கிறாங்களே அவங்கள பத்தியும் பதிவு வருமா??? சுத்தமா பிரிச்சு மேஞ்சு சொல்லிட்டீங்கன்னா எல்லாருக்குமே பொதுவான கருத்து வந்துடும்.. இல்லன்னா இது ஒன் சைடு கோலாவே இருக்கும்..

வால்பையன் said...

//பாப்பானோட ஜோதிடம் பத்தி எழுதியாச்சு..அடுத்த கும்பல்லயும் வானத்த காமிக்காம வேற எத எதையோ காமிச்சி கும்பல் கூட்டி கும்மி அடிக்கிறாங்களே அவங்கள பத்தியும் பதிவு வருமா???//


அதோட ஆரம்பம் தான் தலைவா இது!

Anonymous said...

//இந்தியாவில் இருக்கும் 90% இஸ்லாமியர்கள் இந்து மதத்திலிருந்து மாறியவர்கள் தான்//

இதை நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன்! இதற்க்கு ஏதாவது ஆதாரம் உண்டா?

எனக்கு சோதிடம் என்பதில் முழு நம்பிக்கை இல்லை ஆனால் ஒரு சிலவற்றை புறக்கணிக்க முடியவில்லை. ஜோதிடத்தை அப்படியே கண்மூடித்தனமாக பின்பற்றவில்லை என்றாலும் சில விசயங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு, அதை முட்டாள் தனம் என்றால் என்னிடம் பதில் இல்லை.

ஜோதிடம் என்பது பல டுபாக்கூர் ஜோதிட நபர்களால் மற்றவர்கள் கிண்டலடிக்கும் நிலைக்கு வந்து விட்டது என்பதே என்னுடைய கருத்து.

இதைப்போல பதிவுகளில் வெற்று பாராட்டு மற்றும் எதிர்ப்பு காட்டாமல் சரியான முறையில் விவாதம் செய்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


repeattttttttt..........

Anonymous said...

மேட்ரிக்ஸ் -ன்னு ஒரு படம் வந்துதே அதப் பாரு வால் (சப் டைட்டிலோட ) நம் முன்னோர்கள் சொன்ன தத்துவங்களின் தொகுப்பு அதில அங்காங்கே வரும்.
வெளிநாட்டுகாரன் சொன்னா நமக்கு எல்லாம் ஒஸ்த்தி இல்லையா

Anonymous said...

என்ன "நோ' உங்க சைட்டில் மட்டும் நிசப் பேரோட நடமாடுறாரே

வால்பையன் said...

//மேட்ரிக்ஸ் -ன்னு ஒரு படம் வந்துதே அதப் பாரு வால் (சப் டைட்டிலோட ) நம் முன்னோர்கள் சொன்ன தத்துவங்களின் தொகுப்பு அதில அங்காங்கே வரும்.
வெளிநாட்டுகாரன் சொன்னா நமக்கு எல்லாம் ஒஸ்த்தி இல்லையா //

நீங்க எழுதியிருந்தா லிங்க் கொடுங்களேன்!
மேட்ரிக்ஸ் படத்தில் காட்டியிருப்பது சாத்தியம்னு நீங்க நம்புறிங்களா?
எனக்கு அதில் உடன்பாடில்லை, ஆனா ஜுராசிக் பார்க் சாத்தியம்னு நம்புறேன்!

நான் சொல்ல வர்றது அதிகபட்ச சாத்தியகூறுகளே உண்மையென நம்பப்படுது!

Anonymous said...

Blogger வால்பையன் said...

// நான்கூடத்தான் ரம்ஜானுக்கு பிரியாணி தின்றேன்! //

அடுத்த முறை பண்டி பிரியாணி சாப்பிடு

வால்பையன் said...

//அடுத்த முறை பண்டி பிரியாணி சாப்பிடு //


பண்டி!?

பண்டிகையா!?
பன்றியா!?

நான் பாம்பை கூட திம்பேன்!

வலைஞன் said...

ஜோதிடம் என்பது மூட நம்பிக்கை என விளக்க வந்த ஒரு கட்டுரையில் அனாவசியமாக ஜாதி வெறுப்பு ஏன் தெரிகிறது என்று கேட்டால்
முன்பை விட மோசமான ஒரு கமெண்ட்!!.உங்களை பொறுத்தவரையில் பார்பனர்களை பழிப்பதை கண்டிப்பவர் ஒரு பார்பனர் அல்லாதவராக இருக்க முடியாது !! என்ன ஒரு நம்பிக்கை!! Anyway நம்மிடையே புரையோடி போய் எல்லோரையும் பாதித்திருக்கும் ஒரு நோயை நாம் இருவர் பேசி தீர்க்க முடியுமா என்ன ?
நன்றி வால்பையன் !

வால்பையன் said...

@ வலைஞன்!

இந்து மதத்தின் பவுண்டர் நாமதான் என்பது பல பார்பனர்களே இப்பொழுது ஒப்புகொள்வதில்லை, ஆனால் ஆதாரங்கள் அதை தான் ஊர்ஜிதப்படுத்துது!

சும்மா இருக்குற பாப்பானை சொறிஞ்சி கொடுக்குரது என் வேலையில்லை, அதே நேரம் சோதிடமும் பாப்பானின் ஒரு கண்டுபிடிப்பு தான் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை!

RaGhaV said...

உங்ககிட்டயிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.. ;-))

எனக்கு மிக மிக பிடித்த பதிவுகளில் இதுவும் ஒன்று.. :-)

வெற்றி-[க்]-கதிரவன் said...

//தனக்கு ஒரு ரோல்மாடல் இல்லைனா வாழ்கையே முழுமையடயாதது போல் உணர்வாங்க, தன்னை மற்றொருவரின் வழி தோன்றலாக காட்டிக்க விரும்புவாங்க, தன்னை ஒருத்தருக்கு வாரிசாகவோ, சீடராகவோ, ரசிகராகவோ அவுங்களே சொல்லிக்குவாங்க!, //

பொதுபுத்திய பற்றிய செய்தி அசத்தல்...

****

ஜோதிடம் பற்றி கற்பனை என்று ஒரு வரியில் சொல்லிட்டா போதுமா ?

ஜோதிடம் என்றால் என்ன ? கடவுள் என்றால் என்ன என்று முழுவதுமாக ஆராய்ந்துவிட்டு கூறுகிறிர்கள் என்றால் சபாஷ் வால்ஸ் ....

இல்ல நா ஆரம்பத்திலிருந்தே இப்படியே சொல்லி பழகிட்டேன் அந்த பக்கம் போய் பாக்கல போய் பாக்குறது வீண் என்று கூறினால்.... பொது புத்தி உங்களுக்கும் பொருந்தும் ( ஒரு கூட்டம் கடவுள் இல்லைன்னு சொல்லுச்சி எனக்கு பிடித்திருந்தது அப்படியே போயிட்டேன் என்ற அர்த்தத்தில்)

வால்பையன் said...

//( ஒரு கூட்டம் கடவுள் இல்லைன்னு சொல்லுச்சி எனக்கு பிடித்திருந்தது அப்படியே போயிட்டேன் என்ற அர்த்தத்தில்) //

எனக்கு கடவுள் இல்லைன்னு யாரும் சொல்லல, நான் தான் எங்கே கடவுள்ன்னு கேட்டேன்!

ஜோதிடம் பற்றிய அடிப்படை விசயங்களும் படிச்சிருக்கேன்!, அதனால தான் அது ஒரு டுபாக்கூர்னு உணர முடிஞ்சது!

இளைய கவி said...

மாப்பி மப்புல வந்து உன் பதிவ படிச்சி மப்பு இறங்கிடுச்சு, மரியாதையா மேன்சன் ஹவுஸோ இல்லாட்டி ஹனி பீ ஒரு ஆப்ப் வாங்கி அனுப்பு , ஏன் டா இப்படி சுத்தி சுத்தி அடிக்கிறீங்க ?? நானும் வலிக்காதமாதிரி எவ்வளவுதான் தாங்குறது?

இளைய கவி said...

.

வெற்றி-[க்]-கதிரவன் said...

முதலில் கடவுள் என்பதற்கு உங்களுடைய புரிதல் என்ன ? நாலு பதில் சொல்லமுடியாத கேள்வியை கேட்டுவிட்டு, பாத்தியா உன்னால பதில் சொல்லமுடியல, இப்பவாவது நம்பு கடவுள் இல்லை என்று கூறுவதில் எந்தபயனும் இல்லை -:)))

விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு, முழுவதுமாக ஆராய்ந்துவிட்டு கூறுங்கள் கடவுள் இல்லை என்று அப்பொழுது ஏற்றுகொள்கிறேன் அதவுட்டுபுட்டு கடவுள் இல்லை கடவுள் இல்லைன்னு மேலோட்டமா பாத்துட்டு/கேட்டுட்டு சொல்லுவது பாக்காத படத்துக்கு விமர்சனம் எழுதுவது போல -:)

வால்பையன் said...

//விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு, முழுவதுமாக ஆராய்ந்துவிட்டு கூறுங்கள் கடவுள் இல்லை என்று அப்பொழுது ஏற்றுகொள்கிறேன் அதவுட்டுபுட்டு கடவுள் இல்லை கடவுள் இல்லைன்னு மேலோட்டமா பாத்துட்டு/கேட்டுட்டு சொல்லுவது பாக்காத படத்துக்கு விமர்சனம் எழுதுவது போல -:) //

இது அவ்வளவு சாதாரணமாக சொல்லிட்டு போற கேள்வியோ, பதிலோ இல்லை நண்பரே!

உணருதல், புரிதல்னு சப்பை கட்டு கட்டுறதை விட்டுட்டு இது வரை கடவுள் என்ற தேவையால் அல்லது இருப்பால் என்ன மாற்றம் நடந்திருக்குன்னு நாமளே கொஞ்சம் யோசிச்சு பார்ப்போமே!

உங்களுக்கு ஏற்பட்டது போல் கிளர்ச்சி சிலருக்கு கக்கூஸில் கூட ஏற்படும் என்பதை ஒப்புகொள்வீர்கள் என நம்புகிறேன், அவையெல்லாம் மனரீதியான கற்பனை காட்சிகளோ, உணர்தலோ மட்டுமே, கடவுள் என்ற வியாபார பொருளுக்கு இம்மாதிரியான திரித்தல் அவசியமாகிறது!

இருந்தாகாட்டு என்பதை விடுங்க, இருந்து மட்டும் என்னாத்த புடுங்கினா கடவுள்!

Anonymous said...

கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் இத்தகைய பல நம்பிக்கைகள் உள்ளன.

நல்ல வேளையாக அதற்கெல்லாமும் அவாதான் காரணம் என்று அது சம்பந்தமான பின்னூட்டங்களில் நீங்கள் சொல்லவில்லை.

அவாதான் ஆரம்பிச்சு வெச்சான்னு வெச்சுண்டாலும் இன்னைக்கு டிவியிலயும், பத்த்ரிக்கைகள்லயும் அவ்வளவு ஏன் பதிவுகளிலும் அதிகமாக ஜோசியத்தை பற்றி பிரலாபங்கள் செய்வது யார்.

அவா சொன்னதை அவாளே ஃபாலோ பண்றதில்லை, மத்தவாதான் கட்டிண்டு அழறா.

நீங்க யார திருத்த பதிவு போடறேள்?

பூமி த்ட்டையா இருக்கு, செவ்வகமா இருக்குன்னு முத்ல்ல பல பேரு சொன்னாங்க. அப்பறம் அது த்ப்புன்னு தெரிஞ்சப்பறம் யாரும் அவர்களையோ அவர்கள் சந்ததியினரையோ தூற்றவில்லை. எது சரியோ அதை நம்ப ஆரம்பித்தார்கள்.

அதே போல் முதலில் சொன்னவனை தூற்றாமல் இன்றைக்கு அதை கட்டிக்கொண்டடு அழும் எல்லோரையும் கண்டியுங்கள்.

ஒரு வேளை இதை பார்ப்பனன் ஆரம்பித்து வைத்தது என்று சொன்னால் எல்லாரும் ஜோதிட நம்பிக்கைகளை விட்டுவிடுவார்கள் என்று நம்புகிறீர்களா?

அப்படி நடந்தால் மகிழ்ச்சியே

thamizhparavai said...

நானும் தனித்தன்மை மாதிரி நடிக்கும் பொதுப் புத்திக்காரன் தான்...
நல்ல கேள்விகள்தான்... ஆனா உடனே ஏத்துக்கத்தான் கொஞ்சம் கஷ்டம்...

Anonymous said...

//எனக்கு கடவுள் இல்லைன்னு யாரும் சொல்லல, நான் தான் எங்கே கடவுள்ன்னு கேட்டேன்!//

itha than Vivekanandar kettar?

Vellathanaya malar neetam

வெற்றி said...

// வால்பையன் said...
பலவகையான வாழைபழங்கள் இருக்கு, ஆனா அனைத்திற்கும் நிறைய வித்தியாசம், ஒரே ஒற்றுமை அவைகளுகெல்லாம் மூல பழம் ஒன்னு இருக்கு!

புரியுதா!?

எல்லாமே டுபாக்கூர் தான்னு சொல்றேன்//

அய்யயோ அப்போ நேத்து நான் சாப்பிட்ட வாழைபழம் டுபாக்கூரா ???? அவ்வ்வ்வவ் :-) :-)

Anonymous said...

//பண்டி!?

பண்டிகையா!?
பன்றியா!?

நான் பாம்பை கூட திம்பேன்//

மதுரை-ல் பினாயில் குடித்துட்டு விழுந்து எழுந்ததை பற்றி பதிவே போட்டார்கள் "பார்பான்"கள். (பார்பானை எல்லாத்திலையும் சேர்த்துக்கனும்)

வெற்றி-[க்]-கதிரவன் said...

//உணருதல், புரிதல்னு சப்பை கட்டு கட்டுறதை விட்டுட்டு இது வரை கடவுள் என்ற தேவையால் அல்லது இருப்பால் என்ன மாற்றம் நடந்திருக்குன்னு நாமளே கொஞ்சம் யோசிச்சு பார்ப்போமே//

எதுக்கு மாற்றம் நிகழனும் என்று எதிர்பாக்குரிங்க, உலகத்துல முக்காவாசி பேர் கோவிலுக்கு போறேன் என்ற பேருல கோவிலுக்கு வெளில இருக்கவங்ககிட்ட பிச்சையை போட்டுட்டு , உள்ளுக்கு உள்ள கடவுள் சிலைகிட்ட பிச்சை கேப்பாங்க.

அவங்க கிட்டயும் உங்க கிட்டயும் இருப்பது ஒரே எதிர்பார்ப்பு/ புரிதல் தான் -:)))

****

ஆணி புடுங்கினாதான் கடவுள் என்பது உங்கள் புரிதல், மனித உருவில் ஒருவர் பலசாகசங்களை செய்து காட்டினால் தான் நம்புவேன் என்றால் என்ன செய்யமுடியும்,

நான் எங்கும் கடவுள் இருக்கிறார் என்று கூற வில்லை, கடவுள் என்ற ஒன்று இருக்கிறது நம்புங்கள் என்றும் கூறவில்லை, நான் கிளர்ச்சி மலர்ச்சி ,குலர்ச்சி உணர்ந்தவன் என்றும் உங்களிடம் சொல்லவில்லை.,,,

ஒன்றை பற்றி விமர்சனம் வைக்கும் பொழுது மேலோட்டமாக வைக்காதிர்கள் என்று கூறினால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,

திரும்ப திரும்ப பாக்காத படத்துக்கு விமர்சனம் எழுதிறிங்க,...

உங்க ஸ்டைல்ல சொல்லனும்ன்னா சரக்க அடிக்காமலே இந்த சரக்கு இவ்வளவுதான்/இவ்வளவுதான் போதை தரும் என்று மனதுக்குள் நீங்களாகவே முன்கூட்டியே எதையும் ஆராயாமல் தீர்ப்பெளுதுவது போல் உங்களுக்கான கடவுள் நம்பிக்கை -:)))

Anonymous said...

ஹய்யய்யோ...
ஹய்யய்யோ......
இந்த பாப்பார பசங்கள பற்ரி எலுதாதிங்கன்னு சொந்நா கேட்டாத்தாநே...

வீன் கெட்ட பேறு பாத்திங்களா..?
எவனும் திறுந்த போரதுல்ல...அல்லாம்
ஜாள்ரா போட்டுட்டேஇறுப்பாநுங்க..என்னமோ இண்டர்னெட்டும் கம்பூட்டரும் இவனுங்கலுக்குத்தான் கண்டுபுடிச்சாமாரி...

கெறகம் புடிச்ச பயளுங்க...வுடுங்க தள...

சொல் அளகன்.

அத்திரி said...

))))))

ஹேமா said...

//ஆனா இப்படி கொஞ்சமாவது யோசிக்கிறதால தான் எனக்கு இன்னும் கிறுக்கு பிடிக்காம இருக்கு!//

யாரு சொன்னா.இப்பிடியெல்லாம் புலம்புறதால உங்களுக்கு இப்பவே கிறுக்குன்னுதான் சொல்றாங்க.
யார்ன்னு கேக்காதீங்க ! அதோட இதையெல்லாம் கண்டுக்காதீங்க வாலு.

Chitra said...

பெருசா ஆச்சர்யபடுறதுக்கு ஒண்ணுமில்லை, அது மனிதனுக்கே உரிய குணம் தான், எங்க கூட்டம் இருந்தாலும் நம்ம மக்களால எட்டிபார்க்காம இருக்க முடியாது, ..............நானும் எட்டி பாத்துட்டேன். வித்தை நல்லா காட்டுறீங்க, வால்.

வால்பையன் said...

////எனக்கு கடவுள் இல்லைன்னு யாரும் சொல்லல, நான் தான் எங்கே கடவுள்ன்னு கேட்டேன்!//

itha than Vivekanandar kettar?

Vellathanaya malar neetam //

விவேக்கின் முன் பாதி கதை வெகு சுவாரஸ்யமானது! ராசாராம் மோகன்ராயின் சீடராக உருவ வழிபாட்டில் நம்பிக்கையற்று இருந்தார், ஆனால் அவரிடம் உருவமற்ற கடவுளின் மேல் நம்பிக்கையில்லை,

ஆக அவர் எங்கேயாவது இருக்கும் என்ற நம்பிக்கையில் தேடினாரே தவிர, அவரிடம் நாத்திகம் இல்லை, ராமகிருஷ்ணருக்கு காளி காட்சியளித்ததை கேள்விபட்டு அவரிடம் சீடராக சேர்ந்தார்!

நான் உனர்ந்து அவர் சிக்கி கொண்டார் என்றே கூறலாம், அவரது படிப்பும், அனுபவமும் அவரை வேறு வழியில் கொண்டு சென்றது, இல்லையென்றால் விவேக்கை இன்னேரம் கடவுளாக்கியிருப்பீர்கள்!

ராம்கியும், விவேக்கும் பார்த்தது மாய தோற்றங்கள் தானேயொழிய கடவுள் அல்ல! அம்மாதிரியான தோற்றங்கள் இன்றும் பலரால் பார்க்கபடுகிறது! அவர்களை பார்க்க நாம் தான் மனநல மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருக்கும்!

வால்பையன் said...

//மதுரை-ல் பினாயில் குடித்துட்டு விழுந்து எழுந்ததை பற்றி பதிவே போட்டார்கள் "பார்பான்"கள். (பார்பானை எல்லாத்திலையும் சேர்த்துக்கனும்) //

பத்து தலைமுறைக்கு முன்னாடி பார்த்தா பாப்பானும் பங்காளி தான்!
நீங்க கூட எனக்கு தாத்தாவாகவோ, பெரிய தாத்தாவாகவோ இருக்கலாம்!
எல்லாரும் சொந்தபந்தங்கள் தான்!


அப்புறம், பினாயில் நான் குடித்ததில்லை, உங்களுக்கு நிறைய அனுபவம் போல, நல்ல மப்பு இருக்குமா!?

வால்பையன் said...

//திரும்ப திரும்ப பாக்காத படத்துக்கு விமர்சனம் எழுதிறிங்க,... //

நீங்க அந்த படத்தை எத்தனை தடவை பார்த்திங்க!?

ILA (a) இளா said...

அஜக்குயின்னா அஜக்குதான் குமுக்குன்னு குமுக்குதான்

A rose is a rose is a rose.

ரெண்டும் ஒரு மாதிரிதானே. அப்புறம் ஏன் கிண்டலு?

Anonymous said...

நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?நீங்க யார திருத்த பதிவு போடறேள்?

சொள் அலகன்.

கண்ணா.. said...

வால்,

கடவுள், ஜோதிடம் உண்மையா பொய்யா என ஆராய்வதை விட அதை வைத்து கல்லா கட்டும் ஆட்களை குறித்து விவாதித்தால்...விவாதம் ஆரோக்யமாக இருக்கும் என நினைக்கிறேன்.

சங்கர் said...

:D உண்மைய சொன்னா பைத்தியக்காரென்னுவாங்க....
நீங்க Continue பண்ணுங்க தல... Sorry வால்.... :D

-நவநீத சங்கர்

ஊர்சுற்றி said...

கலக்கல் இடுகை வாலண்ணே!

இளைய கவி said...

யப்பா இப்படி ஆளு ஆளுக்கு ஒன்ன பேசிகிருந்தா எப்பூடி? உங்க வூட்டுல எல்லாம் சோரு பொங்க வேணாமா? சட்டு புட்டுன்னு ஆட்டய கலைச்சுபுட்டு வீட்டப்பாக்க போவிகளா, அட விடுங்கப்பா இளந்தாரி பய எழுத்திட்டான், பெரியவங்க நாம தான் புத்தி சொல்லணும், தம்பி வாலு நீ பஞ்சாயத்தார்க்கு இப்புடி எல்லா எழுதமாட்டேன் சொல்லி கற்பூறத்த அனைச்சி சத்தியம் பண்ணிட்டு ஒரு 101ரூவா அவராதம் குடுத்துட்டு போயிரப்பா! என்ன நாஞ்சொல்றது ?

KASBABY said...

மிஸ்டர் வால்,
ஜோசியம்,கைரேகை,இந்துக்களால்-பார்பனர்களால் வந்தது அல்ல.அவர்களால் அதிகமாக பயன் படுத்தப்பட்டதாக இருக்கலாம்.

ஏனெனில்,பண்டைய சீனா மற்றும்,கிரேக்கத்திலும் இருந்துள்ளது,இருக்கிறது.

இந்து என்பது ,மதம் அல்ல.மாறாக பிராமிநிகல் என்பது தான் பார்பனர்களால் உருவாக்க பட்ட மதம்.இதில் தான் நீங்கள் குறிப்பிடும் ஏமாற்று வேலை..

இது உங்களை குறை கூற அல்ல.ஏற்கனவே எரிகிறது,என் பங்குக்கு கொஞ்சம் கருவேப்பிலை போடுகிறேன்.அவ்வளவே.

Anonymous said...

சொல்லிட்டாருப்பா...பெரிய புடுங்கி.....

இளைய கவி said...

அனானி அவரு உங்களோட பெரிய புடுங்கியா ?

ராஜவம்சம் said...

பதிவு என்பது எப்போதும் கருத்து சுதந்திரத்துக்காவே இருக்கவேண்டும் வாலோட கருத்தை அவர் சொல்லியிருக்கிரார் எதிர் கருத்து உள்ளவர்கள் ஆதாரத்தோடு நிருபிக்கவேண்டும் அதை விட்டுவிடு சிலர் அனாகரிகமாக பின்னூட்டம் இடுவது ஏன் என்று புரியவில்லை
http://nizamroja01.blogspot.com/2009/10/blog-post_16.html

Muhammad Ismail .H, PHD., said...

@ அன்பின் அருண்,

நான் பின்னூட்டமிட ஆரம்பித்து எப்போதும் போல் அது அளவில் பெரிதாகி இங்கே இட இயலாமல் தனி இடுகையாக இட்டுள்ளேன். அதன் சுட்டி இதோ --

http://gnuismail.blogspot.com/2009/12/blog-post.html


இதை வரும் ஈரோடு சங்கமத்திலும் ஒரு பொதுவான சவாலாக வைக்கலாம். அதற்கு நாங்கள் தயார்தான். உங்களின் வசதி எப்படி ? பதில் தரவும். நான் ஆன்மீக வாதி தான். மதவாதியல்ல. ஆகவே இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று கருதுகிறேன்.


with care & love,


Muhammad Ismail .H, PHD,
http://gnuismail.blogspot.com

ஜோதிஜி said...

இன்று தான் என்னுடைய முதல் வருகை. அப்பட்டமாக அடித்து துவைத்து விட்டீர்கள். சமீபத்தில் வாத்தியார் சுப்பையா அவர்கள் தினமும் கோவிலுக்கு செல்ல வேண்டிய அவஸ்யத்தை எழுதி இருந்தார். அவருடைய கருத்தில் உண்மை இருந்தாலும் அப்போது அவருக்கு கடிதம் வாயிலாக எழுதிய எழுத்தை இங்கு பதிய வைக்க ஆசைப்படுகின்றேன். காரணம் நீங்கள் சொல்லி இருப்பது சிந்திக்கக்கூடிய விசயங்கள். உண்மையான விசயங்கள் உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் புரியும். ஜாதகம், கடவுள் இரண்டுமே தமிழர்களால் வேறு தளத்திற்குத்தான் இட்டுச் செல்கிறது என்பதால்.

உங்கள் எழுத்துக்கள் மூலம் உயர்ந்தவன் நான். நீங்கள் சொல்ல வரும் கருத்தும் அந்த வாசகர் கருத்தும் உண்மையானது தான். நிகழ்காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். பக்தி என்பது பாமரத்தனம் என்பதாகி புரிதல் அற்ற அமைதியை தராத, அமைதியை உருவாக்காத நிலைக்கும் வந்துள்ளது. தன்னை உணராமல், தனக்குள் இருக்கும் பலத்தை உணராமல், தகுதியில்லாதவர்கள் ஆட்சிபுரியும் இடத்திற்கு செல்பவர்கள் வாழ்க்கை முழுக்க பெறுவது இரைச்சல் மட்டுமே.

வாங்கி வருவது கால்படி வெளியே கொண்டு வந்து கொட்டுவது முக்கால்படி.

தவறு தனி மனிதனுக்கு மட்டுமே தவிர அமைதியாய் பார்த்துக்கொண்டுருக்கும் தெய்வத்திற்கு அல்ல. உயர்சக்தி என்பது உண்மை. அதைவிட உள்ளே இருக்கும் சக்தி அதையும் விட உன்னதமானது. காலம் முழுக்க ஆக்கிப்போட்டவர் வெறும் மனைவி. கூடவே காபந்து செய்து கலங்கிய போது ஆசுவாசப்படுத்தக்கூடியவள் நல்ல துணைவி. துணைக்கு வந்தவர்கள் வினையை
விதைத்து விட்டு செல்லும் போது மீட்டு எடுத்து வழிநடத்துபவள் வழிகாட்டி தோழி. இருண்டு விடாமல் பரம்பரை தன்மைகளை வழித்தோன்றல்களுக்கு வழங்குபவள் சக்திக்கும் மேல். புரிந்தவர்களுக்கு வீடே கோவில்.

புரியாதவர்கள் தேடுவது தான் ஞானம்.

மூடத்தனம் மூர்க்கத்தனத்தை சரியா தவறா என்று உணர வைக்காது. கூடவே மூளையும் மழுங்கச் செய்து விடுகின்றது. கடைசியில் மொத்தமும் சேர்ந்து பெரியாரை இன்னமும் நினைவு படுத்தும் அளவிற்கு ஆகி விடுகின்றது. தவறுகள் மட்டுமே அதிகமாக நடக்கும், காசுக்காக கல்லாபெட்டியை திறந்து வைத்து காத்துக்கொண்டு இருக்கும் கடவுள் இருப்பதாக நம்பப்படும் கோவில்களை விட கட்டிய மனைவியை, குழந்தைகளை, சார்ந்த உறவுகளை, பார்க்கும் தனிமனித அன்புகளை வளர்க்க உங்கள் எழுத்துக்களை பயன்படுத்துங்கள். அந்த தகுதி உங்களுக்கு முழுமையாக உண்டு. தொடக்கம் முதலே தொடர்ந்து கொண்டுருப்பவன். வாழ்த்துக்கள்.

ஜோதிஜி
தேவியர் இல்லம் திருப்பூர்
http://deviyar-illam.blogspot.com

Kumky said...

பதிவில் சொல்லியுள்ள கருத்துக்களில் பாதி மட்டுமே உடன் படுகிறேன் வால்.
எனெனில் அவரவர் நம்பிக்கைகளில் நாம் பொதுக்கருத்தை திணிக்கக்கூடாது அல்லவா?
ஆனாலும் மக்களின் பயத்தினை இங்கு பணம் பன்னுவோரே அதிகம்..

ஈரோடு கதிர் said...

// Muhammad Ismail .H, PHD, said...
இதை வரும் ஈரோடு சங்கமத்திலும் ஒரு பொதுவான சவாலாக வைக்கலாம். அதற்கு நாங்கள் தயார்தான். உங்களின் வசதி எப்படி ? பதில் தரவும்.//

அய்யா இஸ்மாயில்...

உங்க வாதத்தை, சவாலை இங்க மட்டுமே வச்சிக்கிங்க...

தயவுசெய்து ஈரோடு பதிவர் சங்கமத்தை இதில் இழுக்காதீங்க...

நீங்க வேணா... உங்க வாதத்தைச் சொல்ல ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யுங்கள்... அழைப்பு விடுங்கள், விருப்பம் இருப்போர் கலந்து கொள்ளட்டும்...

தங்கள் தனிப்பட்ட வாதங்களுக்காக பதிவர் சங்கம நிகழ்வை யாரும் தொடர்பு படுத்த வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

Kumky said...

:-))

Anonymous said...

இதையும் சொல்லிடுங்க

பதிவர் சந்திப்பில் சொல் அழகர்கள் கொட்டம் அடித்தால் நாங்கள் வெளி நடப்பு செய்வோம். ஸ்ப்ளிட் பர்சனாலிடி-களை நேரில் பார்த்து சகித்துக்கொள்ள எங்களால் ஆகாது

மேவி... said...

"நிச்சயமா ஆண்குழந்தை பிறக்கும், மிஸ்ஸாச்சுன்னா பெண் குழந்தை தான்! எப்பூடி!"

ஏன் அலியாக பிறந்தால் ஏற்று கொள்ள மாட்டார்களா ?????

அதுவும் ஓர் பாலினம் தானே

மேவி... said...

இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் ஜோசியம், ஜாதி மதத்தை எல்லாம் பெரிய விஷயமாக கொண்டு விவாதம் செய்து நேரத்தை வீணாக்க போகிறார்களோ ??????

இதற்க்கு ஒரு முடிவே இல்லையா

K.R.அதியமான் said...

///"எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு!..."
///

அப்படிதான் தோனுது !!!!
:))))))))

பி.கு : நான் ஒரு ametuer ஜோதிடன் தான். ஏப்ரல் மாதத்தில், ஆங்கில aries ராசியில் நீங்க பிறதிருக்கிறீர்கள். உங்களை புரிந்து கொள்ள ஜோதிடம் பெரிது உதவுகிறது.
aries களுக்கே உண்டான வேகம், கோபம், உழைப்பு எல்லாம் சரி. அதே போல கொஞ்சம் insensitivity and immature and rash mentality.
lots of eqo drive. etc.

அடுத்த முறை சந்திக்கும் போது சாவகாசமா பேசலாம். உங்கள் ‘அசத்தற’ மாதுரி யாரும் இதுவை ஜோதிடம் சொன்னதில்லை போல. ஆனால் பெரும்பாலானா ஜோதிடர்கள் அரைகுறை மற்றும் ஃப்ராடுகள் தாம். வெகு சிலரே ஒரிஜினல். அது வேறு விசியம்.

வால்பையன் said...

//ஏப்ரல் மாதத்தில், ஆங்கில aries ராசியில் நீங்க பிறதிருக்கிறீர்கள். உங்களை புரிந்து கொள்ள ஜோதிடம் பெரிது உதவுகிறது.
aries களுக்கே உண்டான வேகம், கோபம், உழைப்பு எல்லாம் சரி. அதே போல கொஞ்சம் insensitivity and immature and rash mentality.//


ஏப்ரல் மாசத்துல பொறந்தநாலத்தான் நான் இப்படி இருக்கேனாக்கும்!

உங்களுக்கு ஜோக் அடிக்கவும் வருமா!?

Anonymous said...

//அதே போல கொஞ்சம் insensitivity and immature and rash mentality.
lots of eqo drive. etc.//
jothidam nijamao illayo ithu nijam.
iyalpai eluthikondae varupavar, thideer ena vulgar-aka comment elutha arampiththuviduvaar.
poonul athu ithu-nnu vaanthi eduppar.

Pudichiruntha poonul vangi maadikka veNdiyathuthane ?

Anonymous said...

//ஜாதகம்னா என்னான்னு சொல்லி கொடுக்க வர்றவங்களே சொல்ற முத வார்த்தை இதனால் உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றமும் செய்ய முடியாது! //

உன் கூற்று படியே அதான் அவாளே "டிஸ்கி" போட்டுத்தானே , பதியமே போடுறா , அப்புறமும் போய் அதில முட்டிக்கிட்டு "பார்பான்" பார்ப்பான் ன்னு கத்தினா என்ன செய்றது.

பில்டிங்காவது ஸ்டிராங்கா இருக்கும்னு நினைச்சேன் !!! இப்படி பண்ணிட்டேளே.

Muhammad Ismail .H, PHD., said...

// அய்யா இஸ்மாயில்...

உங்க வாதத்தை, சவாலை இங்க மட்டுமே வச்சிக்கிங்க...

தயவுசெய்து ஈரோடு பதிவர் சங்கமத்தை இதில் இழுக்காதீங்க...

நீங்க வேணா... உங்க வாதத்தைச் சொல்ல ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யுங்கள்... அழைப்பு விடுங்கள், விருப்பம் இருப்போர் கலந்து

கொள்ளட்டும்...

தங்கள் தனிப்பட்ட வாதங்களுக்காக பதிவர் சங்கம நிகழ்வை யாரும் தொடர்பு படுத்த வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் //



@ அன்பின் கதிர்,

தங்களின் நிலைப்பாட்டை எனக்கு அறிய தந்தமைக்கு நன்றி. நீங்கள் சொல்வதும் சரிதான். சிலரது சொந்த செலவில் நடக்கும் நிகழ்வில்,நான் எனது வாதங்களை முன்வைப்பது சரியற்ற ஒன்றுதான்.இந்த நிகழ்வில் சமுதாயத்திலுள்ள பலரும் கலந்து கொள்வதால் இது பற்றி பலருக்கும்
அறியப்படும் என நான் கருதினேன். தவிர இது எனது தனிப்பட்ட விஷயமும் அல்ல. காரணம் கடந்த 22 ஜீலை 2009 போது நடந்த சூரிய
கிரகணத்தினால் சுனாமி உருவாகும் என நம்புங்கள் நாரயணன்களால் கிளப்பிவிடப்பட்ட பீதியால் கடற்கரையோரத்தில் வாழும் மக்கள் பெரும் அவதிக்குள்ளனர்கள். இது முற்றிலும் உண்மை. அதுவும் சம்பந்த சம்பந்தமில்லாமல் இதில் அமெரிக்க வான்ஆராய்ச்சி நிலையமான 'நாஸா' வின் பெயர் நாசமாக்கப்பட்டது. ஆனால் உண்மை என்னவென்றால் USGS தான் பூமியின் நிகழ்வுகளைப்பற்றி தகவல் தரும். NASA அல்ல.

இது பற்றி மேலும் அறிய இந்த சுட்டி உதவும் - http://mrishan.blogspot.com/2009/07/22.html


நானும் அன்று எந்த வேலைக்கும் போகாமல் கணினி திரையையை வெறித்த பார்வை பார்த்துக்கொண்டிருந்ததை எனது மரணம் வரை மறக்க இயலாது.ஒரு வேளை மரணத்திற்கு பிறகும் ஞாபகசக்தி இருந்தால் அப்பவும் மறக்க இயலாது ;-). அதி ஆச்சரியமாக அன்று எப்போதும் சாதாரணமாக ரிக்டர் ஸ்கேலில் M 5.0 > க்கு மேலான உள்ள பூகம்பம் ஒன்று கூட ஏற்படவில்லை. பூகம்பம் ஏற்பட்டால் தான் சுனாமியே ஏற்படும். ஆகவே சூரிய கிரகணத்தின் போது பெரும் பூகம்பம் ஏற்படும் என்பது மட்டுமில்லை , சிறிய பூகம்பங்கள் கூட ஏற்படாது என்பது அறிவியல் மற்றும் பகுத்தறிவு ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.இனி வரும் காலங்களிலும் இதை ஆராய்வோம். இதை மக்கள் மறந்து விடலாம். நாங்கள் மறக்க இயலாது. காரணம் நாங்கள் விஞ்ஞானத்தை நம்பும் ஆன்மீகவாதிகள்.

ஒரு வேளை நான் தான் உங்களைப்படைத்த கடவுள் என எங்களின் முன்னால் எந்த ஒன்று வந்து நின்றாலும் அதை விஞ்ஞான ரீதியாக சோதித்து பார்க்காமல் நம்பி விட மாட்டோம். காரணம் வேதங்கள் கூறும் அடிப்படையில் இறைசக்தி என்பது மனிதனால் செய்ய சாத்தியமற்ற செயல்களை மிகச்சாதாரணமாக செய்து முடிக்கும் எனக்கூறப்பட்டுள்ளது. அதன்படி அதை செய்யச்சொல்லி சோதித்துப்பார்க்க நிறைய ஐடியாக்கள் எங்களிடம் உள்ளது.

cont....

Muhammad Ismail .H, PHD., said...

cont ....

தில் ஒன்று 'உலகில் உள்ள அனைத்து செல்லிட பேசிகளுக்கும் அவரவர் மொழியில் ஒரே விஷயமான 'நான் தான் கடவுள்' எனும் குறுந்தகவலை ஒரே நேரத்தில் அனுப்ப சொல்லுவோம். அது கால தாமதமின்றி ஒரே நேரத்தில் அனைவராலும் பெறப்பட வேண்டும். அதே நேரத்தில் அதே எண்ணிலிருந்து உலகிலுள்ள அனைத்து செல்லிட பேசிகளுக்கும் ஒரு அழைப்பும் கிடைக்கப் பெற வேண்டும். அதிலும் நான் தான் கடவுள் எனும் குரல் அவரவர் தாய் மொழியில் கேட்கப்பட வேண்டும். அப்போது நெட்வோர்க் பிஸி, நோ கவரேஜ் ஏரியா என குறைபாடெல்லாம் இருக்ககூடாது. இந்த இரண்டு நிகழ்வும் இயக்கத்தில் உள்ள(on mode), மற்றும் இயக்கத்தில் இல்லாத (off mode) அனைத்து செல்லிட பேசிகளிலும் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும். கடவுள் தானே . இயக்கத்தில் இல்லாத செல்லிடபேசியையும் அந்நேரத்தில் இயக்கத்திற்க்கு கொண்டு வரட்டுமே. என்ன நான் சொல்றது சரியா? இது உள்ளதிலேயே சின்ன ஐடியா. இதை விட டெரர் திட்டங்களும் இருப்பில் உள்ளது. வேறு யாருக்கேனும் இது போல ஐடியா இருந்தால் இங்கே கூறலாம். அனைவருக்கும் உதவும்.


பிறகு இது இன்னும் சில காலத்திற்குள் கடவுள் நாம் முன்னால் வந்தால் தான். மனிதன் தன் அறிவினால் கூடிய விரைவில் இதையும் செய்து காட்டும் ஆற்றல் பெற்றுவிட்டால் இது செல்லுபடியாகாது. எங்களின் நம்பிக்கையின் படி இறைவன் எனும் சக்தி இந்த பூமியில் உள்ள ஏதே ஒரு கற்சிலையிலோ, வேறு ஏதே ஒரு வடிவத்திற்குள்ளேயே அல்லது அந்த கருங்கல் கட்டிடமான காஃபாவிலே இருக்க வாய்ப்பே இல்லை. காரணம் இந்த பிரபஞ்சத்தின் அளவுடன் நாம் வசிக்கும் பூமியை பொருத்தி பார்த்தால் சின்ன தூசிதான். இந்த தூசியில் தான் இறைசக்தி குடியிருந்து கொண்டு இந்த பிரபஞ்சத்தை நிர்வாகித்து வருகிறது எனபது "கொட்டாம்பட்டியில் சாலை ஓரத்தில் உள்ள குப்பனின் குடிசை வீட்டில் இருந்து தான் இந்தியப்பிரதமர் இந்தியாவை நிர்வாகிக்கிறார்" என்பதை விட மிக மோசமான ஒப்புமை. இது புரிந்திருக்கும் என நம்புகிறேன். என்னைப்பற்றியும் ஒரு சிறு அறிமுகமும் கிடைத்திருக்கும்.



இறுதியாக நான் கேட்பது , இனிமேலும் நான் அந்த 'ஈரோடு பதிவர் சங்கமத்திற்கு' வர அனுமதி உண்டா? வந்தாலும் இது பற்றித்தான் பேச வேண்டும், அல்லது இதைப்பற்றி விவாதிக்க கூடாது என கோயில்கள், சர்ச்சுகள், பள்ளிவாசல்களில் உள்ளது போல ஏதேனும் கட்டுப்பாடுகள் உண்டா? அது போல இவர்களிடம் மட்டும் தான் உரையாட வேண்டும், இவர்களிடம் உரையாடக்கூடாது எனும் சிறப்புக்கட்டுபாடுகளோ அல்லது வேறேந்த நிலைப்பாடும் இருந்தால் இங்கேயே தெரிவிக்கவும். நான் முடிவெடுக்க வசதியாக இருக்கும். நன்றிகள் தங்கள் இதுவரையிலும் பொறுமையாக இதை படித்தமைக்கு !!!



with care & love,


Muhammad Ismail .H, PHD,

Anonymous said...

Muhammad Ismail .H, PHD,,
அண்ணா கதிர் றோம்ப கடுமையான சப்ஜெக்ட் வேனமின்னு தான் சொன்னாறு . நீங்க நள்ளா வாங்க எள்ளாருடனும் எள்ளாத்தையும் பேசளாம் வாங்க.

வால் தள கறுத்து இதத்தான் இருக்கும் .
சொள் அலகன்

Anonymous said...

Muhammad Ismail .H, PHD,,
அண்ணா கதிர் றோம்ப கடுமையான சப்ஜெக்ட் வேனமின்னு தான் சொன்னாறு . நீங்க நள்ளா வாங்க எள்ளாருடனும் எள்ளாத்தையும் பேசளாம் வாங்க.

வால் தள கறுத்து இதத்தான் இருக்கும் .
சொள் அலகன்

மேவி... said...

@ K.R.அதியமான் :

naan may 18-19, 00.00 hrs la piranthen....

naan eppudi iruppen entru solla mudiyumaaa????

Anonymous said...

zeroவாத்தான் இருப்ப

Anonymous said...

தம்பி சொல் அழகன் பேரில் பின்னூட்டம் போட்டு போரடிச்சிருச்சா ? இப்ப நிசப் பேருல வேறயா ?

Muhammad Ismail .H, PHD., said...

// "நிச்சயமா ஆண்குழந்தை பிறக்கும், மிஸ்ஸாச்சுன்னா பெண் குழந்தை தான்! எப்பூடி!"

ஏன் அலியாக பிறந்தால் ஏற்று கொள்ள மாட்டார்களா ?????

அதுவும் ஓர் பாலினம் தானே //


@ டம்பி மேவீ,

ஒரு சின்ன திருத்தம். இந்த மூன்றாம் பாலினரை பிறப்பின் போதே கண்டறிய இயலாது.

'அதாவது தாய் மிஸ் யூனிவர்ஸ்சும், தந்தை மிஸ்டர் யூனிவர்ஸாக இருந்தாலும், அவர்களுக்கும் பிறக்கும் குழந்தையானது பருவ வயதில் இதைப்போல் மூன்றாம் பாலினராக ஆக வாய்ப்புகள் உண்டு'



இதை ஆன்மீகவாதிகள் இறைச்செயல் என்கிறனர். விஞ்ஞானிகளே ஹார்மோன்களின் விளையாட்டு (Game of Harmone) என்கிறனார். ஆனால் இந்த மூன்றாம் பாலினரே மனிதர்களில் பெரும்பாலனரால் பந்தாடப்படுவது நெஞ்சில் அறைகின்ற உண்மை.


இவர்களை பிறக்கும் போதே கண்டுபிடித்திருத்தால் அப்போதே ஒரு நெல்மணியே அல்லது கொஞ்சம் கள்ளிப்பாலோ ஊற்றி அனுப்பி வைத்திருப்பார்கள். அப்படி இல்லாமல் பருவ வயதில் இது வெளிப்படுவதால் தான் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி , பிச்சை எடுத்து உயிர் வாழ்கிறார்கள்.

நம்ம பதிவர் லிவிங் ஸ்மைலிடம் அவரது வாழ்க்கையை கேட்டால் கண்டிப்பாக கண்ணீர் வரும்.

அவர்களுக்கும் ஓர் அடையாள அட்டை உருவாக்க நான் பட்ட பாடு இதில் உள்ளது. நேரமிருந்தால் பார்க்கவும்.

http://tech.groups.yahoo.com/group/Indian_Techies_Zone/message/115

K.R.அதியமான் said...

//டம்பி மேவீ

@ K.R.அதியமான் :

naan may 18-19, 00.00 hrs la piranthen..

naan eppudi iruppen entru solla mudiyumaaa???? /

டம்பி மேவீ,

பெரிய மாய காம ருப மன்னாக இருபீர் !! காதல் மன்னன் என்றும் சொல்லாம்.

ஈரோடு கதிர் said...

அய்யா இஸ்மாயில்..

//சிலரது சொந்த செலவில் நடக்கும் நிகழ்வில்,நான் எனது வாதங்களை முன்வைப்பது சரியற்ற ஒன்றுதான்.//

இது நீங்கள் சொன்னது தானே...

//இறுதியாக நான் கேட்பது , இனிமேலும் நான் அந்த 'ஈரோடு பதிவர் சங்கமத்திற்கு' வர அனுமதி உண்டா?//

மீண்டும் ஏன் இந்த கேள்வி....?

சக பதிவராக நட்பை மட்டும் நாடி வாருங்கள்

//வந்தாலும் இது பற்றித்தான் பேச வேண்டும், அல்லது இதைப்பற்றி விவாதிக்க கூடாது என கோயில்கள், சர்ச்சுகள், பள்ளிவாசல்களில் உள்ளது போல ஏதேனும் கட்டுப்பாடுகள் உண்டா?//

எங்கள் நிகழ்ச்சி நிரலை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்... பார்க்கவில்லையென்றால் பார்த்துக்கொள்ளவும்

//அது போல இவர்களிடம் மட்டும் தான் உரையாட வேண்டும், இவர்களிடம் உரையாடக்கூடாது எனும் சிறப்புக்கட்டுபாடுகளோ//

அது உங்கள் இஷ்டம், பேசுவது பேசாமல் இருப்பது பற்றி குறிப்பிட நாங்கள் யார்

// அல்லது வேறேந்த நிலைப்பாடும் இருந்தால் இங்கேயே தெரிவிக்கவும். நான் முடிவெடுக்க வசதியாக இருக்கும்.//

வால்பையன் தன் கருத்தை இடுகையாக எழுதியிருக்கிறார். அது பற்றி உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். அது பற்றி எங்களுக்கு எந்த நிலைப்பாடும் இல்லை.

மீண்டும் கேட்க விரும்புவது....
எந்த அடைப்படையில் ஈரோடு பதிவர் சங்கமத்தை உங்கள் தர்க்கத்திற்கு இழுத்து விடுகிறீர்கள்...

உங்களுக்கு எது விவாதிக்க வேண்டுமானாலும், தனிப்பட்ட முறையில் அந்த பதிவரிடமோ அல்லது இந்த இடுகை எழுதியிருக்கும் வால்பையனிடமோ விவாதித்து தீர்த்துக் கொள்ளுங்கள்.

மீண்டும் அறிவுறுத்துவது ஈரோடு பதிவர், வாசகர் சங்கமத்தை உங்கள் தனிப்பட்ட தர்க்கத்திற்கு இழுக்காதீர்கள்

மேவி... said...

@ K.R.அதியமான்
"டம்பி மேவீ,

பெரிய மாய காம ருப மன்னாக இருபீர் !! காதல் மன்னன் என்றும் சொல்லாம்."

ரொம்ப. நன்றி. என் கேள்வியை மதித்து பதில் சொன்னதற்கு. இது ஓரளவுக்கு உண்மை தான். (பெருமளவு உண்மையை பிறகு சொல்கிறேன்)

இது அடிப்படை குணமாக இருக்குமா ?????

கிரக நிலையில் வேறுபாடு வந்ததால்.... இதில் மாற்றம் வருமா ?????

இதை எப்புடி derive பண்ணிங்க என்று சொல்ல முடியுமா ???????

மேவி... said...

இதை எதிர்த்தால் எவ்வளவு காசு வரும் ????? ஏற்று கொண்டால் எவ்வளவு காசு வரும் ????

சொன்னால் அதுக்கு ஏற்ற மாதிரி விவாதம் செய்கிறேன்

மேவி... said...

"mythees said...
me tha first"


vadai poche...

he he he he

இளைய கவி said...

//நான் அந்த 'ஈரோடு பதிவர் சங்கமத்திற்கு' வர அனுமதி உண்டா? வந்தாலும் இது பற்றித்தான் பேச வேண்டும், அல்லது இதைப்பற்றி விவாதிக்க கூடாது என கோயில்கள், சர்ச்சுகள், பள்ளிவாசல்களில் உள்ளது போல ஏதேனும் கட்டுப்பாடுகள் உண்டா? அது போல இவர்களிடம் மட்டும் தான் உரையாட வேண்டும், இவர்களிடம் உரையாடக்கூடாது எனும் சிறப்புக்கட்டுபாடுகளோ அல்லது வேறேந்த நிலைப்பாடும் இருந்தால் இங்கேயே தெரிவிக்கவும். நான் முடிவெடுக்க வசதியாக இருக்கும். நன்றிகள் தங்கள் இதுவரையிலும் பொறுமையாக இதை படித்தமைக்கு !!!//

இது உண்மையா தல??? நெசமாவே கட்டுப்பாடு உண்டா?? மக்கா முன்னடியே சொல்லிருங்கையா !! புண்ணியமா போவட்டும்,

நிகழ்காலத்தில்... said...

//எந்த அடைப்படையில் ஈரோடு பதிவர் சங்கமத்தை உங்கள் தர்க்கத்திற்கு இழுத்து விடுகிறீர்கள்...

உங்களுக்கு எது விவாதிக்க வேண்டுமானாலும், தனிப்பட்ட முறையில் அந்த பதிவரிடமோ அல்லது இந்த இடுகை எழுதியிருக்கும் வால்பையனிடமோ விவாதித்து தீர்த்துக் கொள்ளுங்கள்.

மீண்டும் அறிவுறுத்துவது ஈரோடு பதிவர், வாசகர் சங்கமத்தை உங்கள் தனிப்பட்ட தர்க்கத்திற்கு இழுக்காதீர்கள்\\

பதிவர் சந்திப்பு முகம் தெரியாமல் பழகிக் கொண்டு இருக்கும் நாம் நேரில் கண்டு மகிழவே..

கருத்து மோதல்களை தனியே வைத்துக் கொள்வதே சிறப்பு..

கதிரின் கருத்தை ஆதரிக்கிறேன்

Muhammad Ismail .H, PHD., said...

@ ஈரோடு பதிவர் சங்கமம் குழுவிற்கு,


கவலை வேண்டாம். என்னால் அங்கு எந்த பிரச்சினையும் வராது. காரணம் நான் அங்கு வரப்போவதில்லை. முன்னரும் நான் யாருடனும் கருத்து மோதல் நடத்தும் எண்ணத்துடன் அங்கு வர ஆசைப்படவில்லை. எனக்கு கிடைத்த சில விஷயங்களை அனைவரிடத்தில் பகிரவும், அதே நேரத்தில் மற்றவரிடத்தில் இருந்து உபயோகமாக ஏதாவது கற்கவும் தான் ஆசைப்பட்டேன்.


ஆனால் திரு.கதிரின் பின்னூட்டங்கள் அவற்றை மாற்றியமைத்து விட்டது. அந்த பின்னூட்டங்களுக்கு நான் தான் 100% காரணம். ஆகவே தவறுக்கு வருந்துகிறேன். நன்றி வணக்கம்.

Nara said...

//ஈரோடு கதிர்//

தாங்கள் Muhammad Ismail .H, PHD-க்கு இரண்டாவதாக கொடுத்த பின்னூட்டம் அத்தனை போற்றுதலுக்குரியதாக இல்லை.

இங்கே வெளியாகியுள்ள பல பின்னூட்டங்கள் வெகுவான ரசனைக் குறைவானதாக இருப்பது கொடுமை.(வால்பையனின் பின்னோடங்களையும் சேர்த்து)

மேவி... said...

முஹம்மத் இஸ்மாயில் ..... ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ...இங்கு இருப்பவர்கள் உங்களின் கருத்தை தான் எதிர்க்கிறர்களே தவிர உங்களை அல்ல ..........

நான் உங்களுக்கு நல்ல நண்பராக இருப்பேன்......

ஈரோடு கதிர் said...

//Nara said...
//ஈரோடு கதிர்//
தாங்கள் Muhammad Ismail .H, PHD-க்கு இரண்டாவதாக கொடுத்த பின்னூட்டம் அத்தனை போற்றுதலுக்குரியதாக இல்லை.//


போற்றுவதற்கா நான் பின்னூட்டம் இடவில்லை நாரா...

இந்த இடுகைக்கும் ஈரோடு பதிவர் சங்கமத்திற்கும் ஏன் தொடர்பு படுத்தி பின்னூட்டம் வந்தது என்பதை விளக்குங்கள்...

இந்த சங்கம ஏற்பாட்டிற்கு பின் உள்ள உழைப்பு குறித்து எதுவுமே தெரியாமல்... தொடர்பில்லாமல் தொடை தட்டி, தோள் தட்டி வாதத்திற்கு அழைத்ததைத் தான் கண்டிக்கிறோம்...

தயை கூர்ந்து அதை புரிந்து கொள்ளுங்கள்

மேவி... said...

முஹம்மத் இஸ்மாயில் அண்ணே ...எதுவாக இருந்தாலும் இங்கேயே போட்டு கிழிங்க... இல்லடி உங்க பதிவில் உங்களின் எதிர் கருத்தை சொல்லுங்க ......பதிவாளர் சந்திப்பு என்பது நட்பு பாராட்ட படும் ஒரு இடம் ..... அதனால் தங்களின் சிரித்த முகத்துடன் அங்கு போகும் மறு நான் சொல்லி கொள்கிறேன் .....

மேவி... said...

வாலு பழகுவதற்கு நல்ல, இனிய நண்பர் ..... அவரை ஒரு முறை நேரில் சந்தித்து பேசுங்க

வால்பையன் said...

@ இஸ்மாயில்

உங்கள் வருகையை குறித்து எந்த வருத்தமமுமில்லை, சங்கமம் நிகழ்ச்சி ஏற்கனவே திட்டமிட்டு நிகழ்ச்சிநிரல் முதற்கொண்டு தயாரித்து நடத்தப்படும் நிகழ்வு, உண்மையில் இந்த நேரமே எங்களுக்கு போதாது!

இதில் புதிதாக ஒரு தகவல பரிமாறி கொள்ள நேரம் ஒதுக்குவது கடினம், பரஸ்பர அறிமுகத்தின் போது உங்களுக்கு தரப்படும் ஐந்து நிமிடத்தில் உங்களது தொழில் அல்லது சேவையை பற்றி சொல்லலாம், அங்கே யாருக்கும் விவாதிக்க நேரம் இருக்காது என்பதே உண்மை!

உங்கள் வருகையை எதிர்பார்த்து!

வால்பையன் said...

@ நாரா!

ரசனையை முன்வைத்து எந்த உரையாடலும் ஆரம்பிப்பது இல்லை, ஒருவேளை உங்கள் ரசனைக்கு என்னால் தீனி போடமுடியவில்லையென்றால் அதற்காக வருந்துகிறேன், அப்படியே உங்கள் ரசனை என்னவென்று சொன்னால் வளர்த்து கொள்ள முற்படுகிறேன், அந்த பின்னூட்டத்தையும் சுட்டிகாட்டினால் விளக்கமளிக்க தயாராக உள்ளேன்!

ஆ.ஞானசேகரன் said...

சிந்தித்து எழுதியுள்ளது தெரிகின்றது நண்பா,...

வலைஞன் said...

அன்புள்ள Nara,
வலைத்தளம் என்பது மிகப்பெரிய super market.இதில் நமக்கு தேவையான பொருட்கள் விற்கும்
கடைக்கு செல்லலாமே தவிர,
மற்ற கடைகளை அப்பொருட்களை விற்குமாறு சொல்வதில் பயனில்லை

நான் பார்த்தவரையில் தமிழ் வலைதளங்களில் அதிகம் விற்கப்படும் பொருட்கள் :

அரசியல்
சினிமா
இலக்கியம்
ஜோதிடம்
இசை
சமையல்
தனி நபர் சிந்தனைகள்
ஜாதி எதிர்ப்பு (அதாவது) பார்ப்பன எதிர்ப்பு

உங்களுக்கு எது தேவையோ அந்தக்கடைக்கு செல்லலாம்
அல்லது நீங்களே கடை ஒன்று போடலாம்

உங்களுக்கு உடன்பாடில்லாத் தளங்களை ஒதுக்குவதே சால சிறந்தது

ஒரு சிலர் அவ்வகைத்தளங்களில் தம் மாற்றுக் கருத்துக்களை நாகரீகமாகவோ,
ரவுடித்தனமாகவோ தெரிவிக்கின்றனர்

ஆனால் இரண்டிற்கும்
எந்த பயனும் இரா.

எல்லாமே இலவசத்தால் வந்த கோளாறுகள் ப்ளாக் site ஒன்றுக்கு மாதம் ரூ .100 சார்ஜ் வைக்கட்டும்
வலைதளமே காலியாகி விடும்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உலகத்துல 6 ல ஒருத்தன் இந்தியன் ஆனா எல்லோருமே ஜோசியம் பாக்குறதில்லை, அதனால நாசமாவா போயிட்டாங்க, நம்மளை சுத்தி ஆயிரம் முட்டாள்கள் வாழ்க கோஷம் போடும் போது ந்மக்கு ஒரு சந்தோசமாதான் இருக்கு இல்லையா!? இல்லைனா இத்தனை நடிகர்களும், அரசியல்வாதிகளும் பொழுப்பு நடந்த முடியுமா, அந்த கோஷ்டியில் இப்போ இன்னும் சிலர் சேர்றாங்க!
//
இன்றைய நாளில் முட்டாள்கள் தேவைப்படுகிறார்கள் என்று விளம்பரம் கொடுத்தாலும்,அதுக்கு அப்ளை பண்ண, வாழ்க கோசம் போடறதுக்கோசம் ஆட்கள் நிறைய இருக்கு.
இல்லன்னா பிரியாணிய துன்னுபுட்டு பணத்த வாங்கிக்கிட்டு ஓட்டு போடுவானா எவனும்?

K.R.அதியமான் said...

/////இதை எப்புடி derive பண்ணிங்க என்று சொல்ல முடியுமா ???????
/////

டம்பி மேவீ,

தொழில் ரகசியம் அது. பீதாம்பர வித்தை பற்றி தெரியமா ?

மருத்துவர் ருத்திரன் அவர்களின் ஜாதகம் கிடைத்தால், அவரை ஒரு அசத்து அசத்திவிட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. பார்க்கலாம்.

:))))

hiuhiuw said...

உட்டார் பெரியோர் !
உடாதோர் இழிகுலத்தோர் !

அவ்வளவுதான் ....

Nara said...

ரசனை-க்கு இங்கே Literal meaning
இல்லை. இந்த context-ல் அதன் அர்த்தம் ”அநாகரீகமான”

உங்களுக்கு ஒரு கேள்வி. ரெட்டை குவளை முறைய ஒழிக்க நேரடியாக களத்தில் குதிப்பேன் என்றெல்லாம் எழுதுபவர், ஆனால் ஒரு சாராரை மட்டும் பூனூல் உறுத்துகிறதா என்று எப்படி கேட்பீர்கள்.

சாதியின் பெயரால் ஒருவரை இகழ்வதும் வன்கொடுமை தான். முதலில் நீங்கள் இதிலிருந்து வெளிவாருங்கள் பிறகு ஊரைத் திருத்துங்கள்.

Nara said...

வலைஞன் said...
//ஒரு சிலர் அவ்வகைத்தளங்களில் தம் மாற்றுக் கருத்துக்களை நாகரீகமாகவோ,
ரவுடித்தனமாகவோ தெரிவிக்கின்றனர்//

இது தான் எதார்த்தம்.இதானாலேயே நான் வெகு அரிதாக பின்னூட்டம் இடுகிறேன். கொஞ்சம் தரமான வலைப்பூக்ககளை படிப்பதோடு சரி

//எல்லாமே இலவசத்தால் வந்த கோளாறுகள் ப்ளாக் site ஒன்றுக்கு மாதம் ரூ .100 சார்ஜ் வைக்கட்டும்
வலைதளமே காலியாகி விடும்//

சில தளங்களை பார்க்கும் போது அப்படி வரக்கூடாதா என்றே என்னத் தோன்றுகிறது.

வால்பையன் said...

//உங்களுக்கு ஒரு கேள்வி. ரெட்டை குவளை முறைய ஒழிக்க நேரடியாக களத்தில் குதிப்பேன் என்றெல்லாம் எழுதுபவர், ஆனால் ஒரு சாராரை மட்டும் பூனூல் உறுத்துகிறதா என்று எப்படி கேட்பீர்கள்.//


நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று கூட பார்க்காமல் வந்து பார்பனரை நான் குற்றம் சாட்டவதாக சொன்னது வலைஞன், இதே பதிவின் பின்னூட்டத்தில் பார்பனர்களும் எனக்கு பங்காளி தான் என்று சொல்லியிருக்கிறேன்!

காஷ்மீர் பிரச்சனைக்கு மூலகாரணம் நேருவின் தவறாம நடவடிக்கை என்றால் அது மொத்த நேரு குடும்பத்தையும் சேராது, பார்பனர்கள் கொண்டு வந்தது என்றால் இப்போதிருக்கும் பார்பனர்களை நான் குறி வைக்கிறேன் என அர்த்தம் ஆகாது!

நான் பெரியாரிஷ்ட் கிடையாது, உயர்சாதி வன்கொடுமைகளை கண்டுக்காமல் பார்பனர்களை மட்டும் குறிவைக்க!

வலைஞன் said...

வால்பையன்
//நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று கூட பார்க்காமல் வந்து பார்பனரை நான் குற்றம் சாட்டவதாக சொன்னது வலைஞன், இதே பதிவின் பின்னூட்டத்தில் பார்பனர்களும் எனக்கு பங்காளி தான் என்று சொல்லியிருக்கிறேன்!//

நீங்கள் பதிவு செய்தது:

// சனி திசை நடந்தா திருநள்ளாறு போய் கும்பிடுன்னு பாப்பானை தவிர வேற எவன் சொல்லியிருக்க முடியும்!//

உண்மையில்
பார்பனர்களை பங்காளிகள் என கருதும் எவரும், பார்பனர்களை நண்பர்களாக கொண்ட எவரும், இவ்வளவு அநாகரீகமாக எழுதமாட்டார்கள்.

தனிமையில் சற்று அமைதியாக சிந்தியுங்கள் உங்களுக்கே உண்மை விளங்கும்

நன்றி

வால்பையன் said...

//நீங்கள் பதிவு செய்தது:

// சனி திசை நடந்தா திருநள்ளாறு போய் கும்பிடுன்னு பாப்பானை தவிர வேற எவன் சொல்லியிருக்க முடியும்!//

உண்மையில்
பார்பனர்களை பங்காளிகள் என கருதும் எவரும், பார்பனர்களை நண்பர்களாக கொண்ட எவரும், இவ்வளவு அநாகரீகமாக எழுதமாட்டார்கள்.

தனிமையில் சற்று அமைதியாக சிந்தியுங்கள் உங்களுக்கே உண்மை விளங்கும் //


என்னளவில் நான் தெளிவாக தான் இருக்கிறேன்!

ஸ்ரீஸ்ரீகோதண்டராம அய்யர் என்று சொன்னால் தான் தனிமனித தாக்குதல், எவனோ ஒரு பாப்பான்னா உங்களுக்கு ஏங்க வலிக்குது!

காஸ்மீர் பிரச்சனைக்கு நேரு தான் காரணம்னு சொன்னேன்! அதையே காங்கிரஸின் அப்போதைய தலைமை தான் காரணம்னு சொன்னா எப்படி அர்த்தம் எடுத்துகுவிங்க,

எப்படிடா நீ மொத்த காங்கிரஸையும் காரணம் சொல்லலாம்னா!?

**********

எங்கே பிராமனன்னு பாவம் அவுங்களே தேடிகிட்டு இருக்காங்க, நீங்க ஏன் தொலைந்து போனவர்களை பற்றி கவலைபடுறிங்கன்னு தான் தெரியல!

வலைஞன் said...

வால்பையன்:

உண்மையில் தூங்கினால் எழுப்ப முடியும் ; தூங்குவது போல் நடித்தால் எழுப்பமுடியாது.

பாப்பான் என்பது ஒரு
கொச்சை சொல்
வசை சொல்
இழிசொல்

இது கூடவா தெரியாது உங்களுக்கு?
சும்மா நடிக்காதீங்க ஐயா

எங்கே நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள்?

நீங்களே ,
பிராமணன்,
பார்பனர்,
பார்பனன்,
பாப்பான்
என பல பிரயோகம் செய்துள்ளீர்கள்

எல்லாம் ஒரே அர்த்தத்தில் செய்யப்பட்டது தானா?

நன்றி

வால்பையன் said...

பார்பனீயத்தை கடைபிடிப்பவன் பாப்பான்!

எனக்கு தூக்கமே வராது, இன்சோமேனியா இருக்கு! நான் எதுங்குங்க நடிக்கனும்!

hiuhiuw said...

//எங்கே நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள்?//

கேட்டாரே ஒரு கேள்வி !

எங்க சொல்லுங்க பாப்போம்

hiuhiuw said...

//பார்பனீயத்தை கடைபிடிப்பவன் பாப்பான்!//

இதை வன்மையாக கண்டிக்கிறேன் வால்!

அப்ப பிராமணன் எதைக் கடைப் பிடிப்பதாகச் சொல்ல வருகிறீர்கள் !
ரொம்பவும் ஆபாசமாக இருக்கிறது

நாடோடி இலக்கியன் said...

//தன்னை மற்றொருவரின் வழி தோன்றலாக காட்டிக்க விரும்புவாங்க, தன்னை ஒருத்தருக்கு வாரிசாகவோ, சீடராகவோ, ரசிகராகவோ அவுங்களே சொல்லிக்குவாங்க!, தனித்தன்மைனா கிலோ என்னவிலைன்னு கேட்பாங்க!.//

சூப்பர்.

Anonymous said...

Ayyo Atha vida intha nadi jothidam oolaichuvadi nu solarangale athu maga fradunga!

பெசொவி said...

இறைவனை நம்பி பொழைப்பை நடத்தும் ஆட்களும் இருக்கிறார்கள்............நாத்திகம் பேசி பொழப்பை ஓட்டுகிறவர்களும் இருக்கிறார்கள்....
உங்கள் கருத்துகளை உங்கள் வலைப்பூவில் எழுதுகிறீர்கள்....வாழ்த்துகள்!
என்னுடைய ஒரு சிறு வேண்டுகோள்.....தயவு செய்து பிறர் மனம் புண்படுமாறு எழுதாதீர்கள்......உங்களுக்கும் "நாத்திக" வியாபாரிகளுக்கும் கொஞ்சம் வேறுபாடு இருக்கட்டும்.

MADURAI NETBIRD said...

//எல்லா கோள்களுக்கும் ஒரு உருவத்தை கொடுத்து, சனி திசை நடந்தா திருநள்ளாறு போய் கும்பிடுன்னு பாப்பானை தவிர வேற எவன் சொல்லியிருக்க முடியும்!//

ஜோதிடம் என்பது மூட நம்பிக்கை என விளக்க வந்த ஒரு கட்டுரையில் அனாவசியமாக ஜாதி வெறுப்பு எதற்கு.

நல்ல பேனா முனை என்பதற்காக அதை அடுத்தவர் ரத்தத்தில் எழுதுவது ....................

வால்பையன் said...

//.தயவு செய்து பிறர் மனம் புண்படுமாறு எழுதாதீர்கள்.//


நான் பொதுவா தான் எழுதியிருக்கேன்,
இந்த பதிவோட ஒரிஜினல் தலைப்பு!

பொதுபுத்தியும், மூடநம்பிக்கையும்!

இதை படிச்சிட்டு யார் மனசாவது புண்பட்டா நான் எப்படி பொறுப்பாக முடியும்!

வால்பையன் said...

//எல்லா கோள்களுக்கும் ஒரு உருவத்தை கொடுத்து, சனி திசை நடந்தா திருநள்ளாறு போய் கும்பிடுன்னு பாப்பானை தவிர வேற எவன் சொல்லியிருக்க முடியும்!//

ஜோதிடம் என்பது மூட நம்பிக்கை என விளக்க வந்த ஒரு கட்டுரையில் அனாவசியமாக ஜாதி வெறுப்பு எதற்கு.//

இது சாதி எதிர்ப்பல்ல, பார்பனியம் என்பது ஆரியர்களின் தொன்றுதொட்ட வழக்கம், அவர்கள் தான் உருவ வழிபாடு, வர்ணபேதம், தீண்டாமை என பல கெடுதல்களை சமூகத்திற்கு கொண்டு வந்தவர்கள், ஆக நான் பாப்பான் என்றால் தப்பு செய்பவர்களுக்கு தான் உறுத்தனும்!

MADURAI NETBIRD said...

ஜோதிடத்தை பார்பனர்கள் தான் கொண்டுவந்தார்கள் என்பதற்க்கு என்ன ஆதாரம் இருக்கு தோழரே.............

Anonymous said...

தள.,
கவண்டன்னா அந்த மேள் ஜாதி சோமாரி பேர் மட்டுந்தா குரிக்கும்.
நாக்கியன்நா அதெ வெங்காய நாக்கியனத்தா குரிக்கும்.

இன்னும் தலித்துன்னா உன்னிய சொள்ளலப்பா அந்தா அந்த பயலுவலத்தான் சொன்னேந்நு சொள்ளளாம்.

ஆனா தள இந்த பா...புடுங்கிகல சொன்னீங்கன்னா லோகத்துள உல்ல எள்ளா பா..வனையும் சொன்னாப்பலதான் அர்த்தம்.

என்னா தள சாக்கடைள கைய உட்டுகிட்டு..சே.

சொள் அலகன்.

வால்பையன் said...

//ஜோதிடத்தை பார்பனர்கள் தான் கொண்டுவந்தார்கள் என்பதற்க்கு என்ன ஆதாரம் இருக்கு தோழரே..//

விரிவா தான் எழுதனும்!

உருவ வழிபாடு,
முற்பிறவி நம்பிக்கை,
அடுத்த பிறவி
என பல விசயங்கள் பார்பனர்களீன் இந்து மதத்தோட ஜோதிடம் ஒத்து போகுது!

கொஞ்சம் டைம் கொடுத்தா மேலும் பல ஆதாரங்களை காட்ட முடியும்!

வால்பையன் said...

//தலித்துன்னா உன்னிய சொள்ளலப்பா//

சொன்ன மட்டும் உயிர் உடம்பை விட்டு போயிருமா!?

MADURAI NETBIRD said...

//தள.,
கவண்டன்னா அந்த மேள் ஜாதி சோமாரி பேர் மட்டுந்தா குரிக்கும்.
நாக்கியன்நா அதெ வெங்காய நாக்கியனத்தா குரிக்கும்.

இன்னும் தலித்துன்னா உன்னிய சொள்ளலப்பா அந்தா அந்த பயலுவலத்தான் சொன்னேந்நு சொள்ளளாம்.

ஆனா தள இந்த பா...புடுங்கிகல சொன்னீங்கன்னா லோகத்துள உல்ல எள்ளா பா..வனையும் சொன்னாப்பலதான் அர்த்தம்.

என்னா தள சாக்கடைள கைய உட்டுகிட்டு..சே.

சொள் அலகன்.//

உன்னுடைய சொந்த முகத்தில் பேச உன்னால முடியல. முடிஞ்சா நிஜத்துல பேசு. என்ன
.
சொள் அலகன்......................................... நீ ஒரு காமடி பீசு

Anonymous said...

அவாலுக்கு ஆதறவா அனானி கம்மெண்ட் போடளாம். ஆனா பொது கறுத்து சொள்ரவாள்ளாம் காமெடி பீசு ஆகிடரா.
இதுதான் நாயம்.

எள்ளோறுக்கும் தெரிச்சதுதானே. நடத்துங்க.

சொள் அலகன்

MADURAI NETBIRD said...

வால்பையன் said...

//ஜோதிடத்தை பார்பனர்கள் தான் கொண்டுவந்தார்கள் என்பதற்க்கு என்ன ஆதாரம் இருக்கு தோழரே..//

விரிவா தான் எழுதனும்!

உருவ வழிபாடு,
முற்பிறவி நம்பிக்கை,
அடுத்த பிறவி
என பல விசயங்கள் பார்பனர்களீன் இந்து மதத்தோட ஜோதிடம் ஒத்து போகுது!

கொஞ்சம் டைம் கொடுத்தா மேலும் பல ஆதாரங்களை காட்ட முடியும்!//

உலகம் தோன்றிய முதல் பார்ப்பனியர்கள் தான் இருந்தார்களா. பிரமிட் மம்மி எல்லாம் அப்போ பார்ப்பனியர்கள் தான் உருவாக்கம்தான.

MADURAI NETBIRD said...

பெர்முடா முக்கோணம் போல் எவ்வளவோ விஷயங்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டு இன்னும் பூமியில் மர்மங்களாகவே இருக்கு. விஞ்ஞானம் அதை அறிய முற்படுது. அது போலத்தான் கடவுள் என்பதும் விஞ்ஞானம் அதை இயற்கை அல்லது ஒரு சக்தி என்று சொல்லுது .உருவ வழிபாடு மனதை கட்டு படுத்துவதற்காக ஒரு வழிமுறை தான். ஆனா சிலர் அந்த நம்பிக்கையை மூடனம்பிகையா மாத்திட்டாங்க அதுக்காக பொதுவா யாரையும் இழிவா பேச கூடாது .

MADURAI NETBIRD said...

//அவாலுக்கு ஆதறவா அனானி கம்மெண்ட் போடளாம். ஆனா பொது கறுத்து சொள்ரவாள்ளாம் காமெடி பீசு ஆகிடரா.
இதுதான் நாயம்.

எள்ளோறுக்கும் தெரிச்சதுதானே. நடத்துங்க.

சொள் அலகன்//


பொது கருத்துன்னு எதவேனாலும் சொல்ல முடியாது...........
எல்லா பெண்களும் மோசமானவர்கள் என்று பொதுவாக சொன்னால் உன்னை பெத்த அம்மாவுக்கும் கோவம் வரும்................
.உங்களை பொறுத்தவரையில் பார்பனர்களை பழிப்பதை கண்டிப்பவர் ஒரு பார்பனர் அல்லாதவராக இருக்க முடியாது !! என்ன ஒரு நம்பிக்கை!! Anyway நம்மிடையே புரையோடி போய் எல்லோரையும் பாதித்திருக்கும் ஒரு நோயை நாம் இருவர் பேசி தீர்க்க முடியுமா என்ன ?

அவரவர் ஜாதி விருப்பு வெறுப்பிணை பதிவு செய்யாதீர்........................

K.R.அதியமான் said...

வால்,

//பார்பனீயத்தை கடைபிடிப்பவன் பாப்பான்!

எனக்கு தூக்கமே வராது, இன்சோமேனியா இருக்கு! நான் எதுங்குங்க நடிக்கனும்! ///

இல்லை. பார்பனீயத்தை கடைபிடிப்பவருக்கு சரியான பெயர் :
‘பார்பனீயவாதி’ ; இவர்கள் எல்லா (repeat : எல்லா) சாதிகளிலும் உள்ளனர்.

இதை முதலில் தெளிவாக புரிந்து கொள்ளுங்க.

- இரவீ - said...

பெருசா ஆச்சர்யபடுறதுக்கு ஒண்ணுமில்லை, அது மனிதனுக்கே உரிய குணம் தான். he he he - naalla sonna thala.

hiuhiuw said...

//பார்பனீயத்தை கடைபிடிப்பவருக்கு சரியான பெயர் :
‘பார்பனீயவாதி’ ; இவர்கள் எல்லா (repeat : எல்லா) சாதிகளிலும் உள்ளனர்.
//

நிஜம் தான் ...

ஆனால் ஒரு வித்யாசம் பார்ப்பனீயம் பார்பனர் அனைவருக்கும் பீடித்திருக்கிறது ....
வேறெந்த ஈயத்தையும் விட பார்ப்பனீயத் தாக்கம் நம் சமூகத்தை புரையோடச் செய்கிறது .

ராஜவம்சம் said...

// மதுரைநண்பன் said...
ஜோதிடத்தை பார்பனர்கள் தான் கொண்டுவந்தார்கள் என்பதற்க்கு என்ன ஆதாரம் இருக்கு தோழரே.//

இந்தியாவில் ஜோசியம் சூனியம் போன்றவைகளுக்கு மூல நூல் யசுர் வேதம் தான் அனால் அதர்க்கு முன்பே உலகில் இருந்தது என்பது உன்மைதான் இந்தியாவில் சில பார்ப்பனர்களால் சமஸ்கிருத மொழியில் உருவாக்கப்பட்ட யசுர் வேதமே இந்திய ஜோசியத்தின் ஆரம்பம் என்பது அப்பட்டமான உண்மை

K.R.அதியமான் said...

rajan RADHAMANALAN,


////நிஜம் தான் ...

ஆனால் ஒரு வித்யாசம் பார்ப்பனீயம் பார்பனர் அனைவருக்கும் பீடித்திருக்கிறது ....

வேறெந்த ஈயத்தையும் விட பார்ப்பனீயத் தாக்கம் நம் சமூகத்தை புரையோடச் செய்கிறது . ///

இல்லை ராஜன், இப்படி generalise செய்வது தவறு. மிக தவறு. பார்பனர்கள் அனைவரும் அப்படியல்ல. எனக்கு தெரிந்து, பிற ஆதிக்க மற்றும் நடு சாதிகளில் பிறந்தவர்களில் சாதிய உணர்வு மிக அதிகம் கொண்டவர்களின் விகுதத்தை விட குறைவுதான். பொதுவாக நகர்புறங்களில் தாம் பிராமணர்கள் அதிகம் வாழ்கின்றர். சாதியம் மிக கோரமாக கிராமபுறங்களிலும், சிறு நகர்களிலும் வெளிப்படுகிறது. நகரங்களில் மிக மிக குறைவு.

’பார்பனீயம்’ என்ற சொல்லைக் காட்டிலும் ’சாதியம்’ என்ற சொல்தான் இக்காலத்தில் பொருத்தமானது. தேவையில்லாத குரோதங்களை இங்கு வளர்க்காது.

கல்வெட்டு said...

//அதியமான்....
இல்லை. பார்பனீயத்தை கடைபிடிப்பவருக்கு சரியான பெயர் :
‘பார்பனீயவாதி’ ; இவர்கள் எல்லா (repeat : எல்லா) சாதிகளிலும் உள்ளனர்.//


அதியமான்,

ரேசிசம், நாஜிசம் வரிசையில் இந்தியாவின் கண்டுபிடிப்பு பார்ப்பனிசம்.

வர்ணாசிரம செங்கலில் கட்டப்பட்ட கட்டிடிடமே பார்ப்பனிசம்.

"எல்லா சாதிகளிலும் ‘பார்பனீயவாதி’ உள்ளனர்" என்று சொல்வது தவறு.


சாதியக் கட்டுமானத்தில் உள்ளவர் அனைவருமே பார்ப்பனர்கள்தான்.

அதாவது நீங்கள் உங்களை ஒரு சாதியைச் சேர்ந்தவர் என்று நீங்கள் சொல்லும் பொழுது , நீங்கள் வர்ணாசிரம ஏணியில் ஏதோ ஒரு இடத்தில் போய் உட்கார்ந்து கொள்கிறீர்கள்.

வர்ணாசிரம ஏணியில் எந்த நிலையில் ஒருவன் தன்னை வைத்துக் கொண்டாலும் அவன் பார்ப்பனனே.

பார்ப்பனிஸம் என்பதே பிறப்பால் அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு முறை.

**

வர்ணாசிரமம்: பிறப்புவழி சாதிய கொள்கை/வழிகாட்டல்.

பார்ப்பனிசம்: வர்ணாசிரம கொள்கை/வழிகாட்டலில் கட்டப்பட்ட சாதிய அடுக்கு.

பார்ப்பனர்: பிறப்பால் வந்த ஒன்றை தனது சாதியாக ஏற்றுக்கொண்டு தனக்கு மேலோ கீழோ சில சாதி அடுக்குகளை விரும்பியோ விரும்பாமலோ அங்கீகரிப்பவ்ர்கள்.

ஐயர், ஐயங்கார்...etc: அக்கிரமச்சாதி அல்லது அக்ரகாரச்சாதி

தேவர், வெள்ளாளர்... etc: ஆதிக்கச்சாதி.

பழங்குடி/பள்ளர்/பறையர் .etc: ஒடுக்கப்பட்ட சாதி

கல்வெட்டு said...

அக்கிரமச்சாதி அல்லது அக்ரகாரச்சாதி, ஆதிக்கச்சாதி ,ஒடுக்கப்பட்ட சாதி...எதுவாக இருந்தாலும் இவர்கள் தெரிந்தோ தெரியமலோ பார்ப்பனசித்தை ஏற்றுக் கொண்டவர்கள். இதில் எந்த நிலையில் இருந்தாலும் அனைவரும் பார்ப்பனர்களே.

K.R.அதியமான் said...

கல்வெட்டு,

நலமா ? சந்தித்து பல காலமாச்சு..

///அக்கிரமச்சாதி அல்லது அக்ரகாரச்சாதி, ஆதிக்கச்சாதி ,ஒடுக்கப்பட்ட சாதி...எதுவாக இருந்தாலும் இவர்கள் தெரிந்தோ தெரியமலோ பார்ப்பனசித்தை ஏற்றுக் கொண்டவர்கள். இதில் எந்த நிலையில் இருந்தாலும் அனைவரும் பார்ப்பனர்களே. ///

சரி, ஒத்துக்கொள்கிறேன். ஆனா ‘பார்பான்’ என்ற சொல்லுக்கு உங்க definition அய் இங்கு அனைவரும் ஏற்றால் பரவாயில்லையே. பிரமணர்கள் தான் பார்பான் என்றுதான் கருதப்படுகிறதே..

hiuhiuw said...

@ அதியமான்

இங்கு சாதியின் பெயரால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை வன் கொடுமைக்கு இலக்காக்குவது குறித்து பேசவில்லை ; அது குறித்தான பிரஞை நடப்புக் காலத்தில் கொஞ்சம் வளர்ந்திருக்கிறது . ஊரகப் பகுதிகளிலும் தாழ்த்தப் பட்டவர்களை நடத்தும் விதத்தில் வேறுபாடு காட்டுவதுண்டு எனிலும் பீ சீ ஆருக்கு பயந்து பல நாட்கள் எனக்குத் தெரிந்த பல கிராமப் பெருசுகள் தலை மறைவாகிப் பயந்து ஒளியும் நிலையும் ஏற்ப்பட்டுள்ளது ..

அதே போல பழங்குடிகள் என வழங்கப் படும் மலை இன மக்களின் இருப்பிடத்துக்கு அருகில் அவரல்லாதோர் சில காலம் வாழ நேரிட்டால் அவர்களது சாதீய ஆதிக்கம் புலனாகும் .

இங்கு விவாதிக்கப் படுவது வன் கொடுமை குறித்தல்ல



சமூக வியாதியில் பார்ப்பனர் பங்கு வேறெந்த சாதியாலும் எட்டித் தொட முடியாதது

hiuhiuw said...

இலியட்டிலும் ஓடிசியிலும் ஹோமர் படைத்த கடவுளர்களின் இன்றைய நிலையினையும் ராமன் கிருஷ்ணன் நிலையினையும் ஒப்பிட்டுப் பாருங்கள் ....

ராமனை வைத்தே பதினைத்து வருடமாக ஓட்டு வேட்டை நடந்து வருகிறது ...

தாம் கட்டிய கதையினை தேசத்தின் மூலை முடுக்கு வரை நம்ப வைத்தது யார்

கல்வெட்டு said...

//அதியமான்,
சரி, ஒத்துக்கொள்கிறேன். ஆனா ‘பார்பான்’ என்ற சொல்லுக்கு உங்க definition அய் இங்கு அனைவரும் ஏற்றால் பரவாயில்லையே.

அதியமான் ,

என்னைத்தவிட யாரும் ஏற்கமாட்டார்கள். :-))))

அவரவர் சுதந்திரம் அவரவர் கருத்து. இதையெல்லாம் யாரும் ஏற்கவேண்டியது இல்லை. எனது புரிதல் மட்டுமே.


// பிரமணர்கள் தான் பார்பான் என்றுதான் கருதப்படுகிறதே..//


ஐயர் , அய்யங்கார் என்பதுதான் சாதி.
தமிழகத்தில் பிராமணன் என்றோ அந்தணன் என்றோ பார்ப்பனன் என்றோ சாதி இல்லை.

Genetic study of Dravidian castes of Tamil Nadu
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf

எனவே பார்ப்பான் என்ற சொல் "சாதி"ச்சட்டையைப் போட்டுள்ள அனைவருக்குமே பொருந்தும்.(எனது புரிதல் மட்டுமே)

ஏன் ஐயர் ,அய்யங்கார் மட்டும் கோபப்படுகிறாகள் என்பது அவர்கள் விளக்க வெண்டிய ஒன்று.

*****************


//நலமா ? சந்தித்து பல காலமாச்சு..//

ஜாதகத்தைக் கேட்பீங்களோன்னுதான் உங்க கண்ணுல படுறது இல்லை. :-)))))

hiuhiuw said...

//ஏன் ஐயர் ,அய்யங்கார் மட்டும் கோபப்படுகிறாகள் என்பது அவர்கள் விளக்க வெண்டிய ஒன்று.//

ம்ம்ம் ... பதில் தேவை !

கோவி.கண்ணன் said...

// பார்பனியம் என்பது ஆரியர்களின் தொன்றுதொட்ட வழக்கம், அவர்கள் தான் உருவ வழிபாடு, //

தகவல் பிழை. (ஆரிய) பார்பனர்களுக்கு உரியது தீ வணக்கம். வேள்வி மற்றும் பஞ்சபூத வழிபாடு ஆரியர்களது வேதங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. உருவ வழிபாடு கிடையாது. அவர்கள் இந்தியாவெங்கும் பரவும் போது அங்கே அங்கே இருந்த நாட்டார் தெய்வங்களுக்கு வைதீக கதைகள் புனைந்து வைதீகக் கடவுள் ஆக்கினார்கள். உருவ வழிபாடு பார்பனர்களின் வைதீகத்தில் நுழைந்தது இப்படித்தான்.

கந்த புராணத்திற்கு முன்பு முருகன் வழிபாடு சேயோன் என்கிற நாட்டார் வழிபாட்டு முறையாகும். கந்த புராணம் வைதிகக் கதையாக புனையப்பட்டு முருகனுக்கு பூணூல் போட்டு வைதீக தெய்வம் ஆக்கினார்கள்.

பார்பனர்கள் உருவ வழிபாட்டைக் கொண்டு வந்தார்கள் என்கிற உங்கள் கருத்திற்கு ஆதாரம் இல்லை. ஆனால் உருவ வழிபாட்டை வைதீக மயமாக்கியவர்கள் அவர்களே.

***********
இந்தப் பின்னூட்டம் இந்த கருத்துக்கு மட்டுமே.

கல்வெட்டு said...

அதியமான்,
தாழ்த்தப்பட்டவர்கள் என்பது "குழுக்குறியீடு" ஆனால் பள்ளர் ,பறையர் என்பது சாதி.

அதுபோல "பிராமின்" என்பது குழுக்குறியீடு. அய்யர், அய்யங்கார் என்ப‌துதான் சாதி.

**

எனவே "பார்ப்பான்" என்பது பார்ப்பனிசம் கடைபிடிக்கும் அனைவருக்குமேயான குழுக்குறியீடு.

வர்ணாசிரம ஏணியில் எந்த அடுக்கில் இருந்தாலும் "பார்ப்பனர்" என்பது பொருந்தும் ஏன் என்றால் அது ஒரு குழுக்குறியீடு மட்டுமே சாதியல்ல‌.

(இது குழப்பலாம் . எனது புரிதல் மட்டுமே. அல்லது நான் இப்படித்தான் பார்க்க நினைக்கிறேன்)

கோவி.கண்ணன் said...

//பாப்பான் என்பது ஒரு
கொச்சை சொல்
வசை சொல்
இழிசொல்//

மாமுது பார்பன் மறைவழி காட்டிட என்று இளங்கோ சிலப்பதிகாரத்தில் எழுதி இருக்கிறார்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்! - திருக்குறள்

இதில் எங்குமே இழிவாகக் குறிக்க பார்பான் என்ற சொல் பயன்படுத்தபடவில்லை.

பார்பனர்கள் தங்களை அந்தணர்/பிராமணர் என்று உயர்த்திக் கொண்டதால் ஒரிஜினல் பெயரே அவர்களுக்கு இழிவாகத் தெரிகிறது.

காலம் காலமாக பறையன், பள்ளன் என்று இழிவாகவே சொல்லியதை வந்தவையெல்லாம் தலித்துகள் ஏற்றுக் கொண்டே வந்திருக்கிறார்கள். இன்றைக்கும் அவர்களுக்கான சலுகை இழிவு படுத்திய பெயருடன் தான் கிடைக்கிறது. அவன் இழிவு நீங்க மதம் மாறினால் சலுகை கட் ஆகிவிடும். இழிவை தாங்கிக் கொண்டு இருந்தால் தான் அரசு சலுகை என்பதாகத்தான் நம் இந்திய அரசின் இந்து சார்ப்பு சட்டமாகவே இருக்கிறது. அதெல்லாம் இழிவு ஆக தெரியாத போது....

பார்பான் என்று ஒரிஜினல் பெயரில் அழைப்பது எப்படி இழிவாகும் ? பார்பனர்களின் பிராமணர் பட்டம் படித்து வாங்கியதா ?

கல்வெட்டு said...

கோவி,

//(ஆரிய) பார்பனர்களுக்கு உரியது தீ வணக்கம்//

ஆரியர் என்பது நிலப்பரைப்பை ஒட்டிய அடையாளம் என்றுதான் நினைக்கிறேன் .
.
ஆரியர்கள்தான் பார்ப்பனர்கள் என்று சொன்னால், ஆரியம் ‍பாரப்பனர் என்ர தொடர்பு எப்படி வருகிறது.?

ஆரியர் அனைவரும் பார்ப்பனர் என்றால் பின்லேடனும் பார்பனர்தானே? (இந்துகுஸ்மலை வகையரா அனைத்தும் ஆரியர் என்று வந்தால்.)

hiuhiuw said...

நல்லா வெச்சீங்க போஸ்டுக்கு டைட்டிலு !

இங்க டவுசர் அவுருது

கோவி.கண்ணன் said...

//ஆரியர் என்பது நிலப்பரைப்பை ஒட்டிய அடையாளம் என்றுதான் நினைக்கிறேன் .
.
ஆரியர்கள்தான் பார்ப்பனர்கள் என்று சொன்னால், ஆரியம் ‍பாரப்பனர் என்ர தொடர்பு எப்படி வருகிறது.?
//

ஆர்ய என்ற சொல்லுக்கு மேன்மையுடையோர் என்ற பொருளாம்.
(Great Britan, British என்பது போல), அது இன அடையாளம் என்றும் சொல்கிறார்கள். ஆனால் பார்பனர்களின் நான்கு வேதத்தில் ஆர்ய, தஸ்யு என்ற சொற்கள் மக்கள் குழுவைக் குறிக்கும் பண்புப் பெயர்களாக (இனமோ, குணமோ) பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

ஆரியர்கள் அனைவருமே பார்பனர்கள், ஆனால் பார்பனர்கள் அனைவரும் ஆரியர்கள் அல்ல
(இராமனுஜரால் சாதி மாற்றம் செய்யபட்டவர்களை நினைவில் கொள்க, மேலும் அவர்களில் பலருக்கு (திராவிடக்) கலப்புகளினால் உடல் நிறக் கலப்பு ஏற்பட்டது, தந்தைவழி சமூகம், தந்தை ஆரியராக இருந்தால் தாய் ஆரியராக இல்லாவிட்டாலும் வாரிசுகள் ஆரியராகவே கருதப்படும், எந்த இனத்திலும் இடப்பெயர்சி நடை பெறும் போது பின்னாளில் அவை தந்தைவழி சமூகமாகத் தொடரும் )

//ஆரியர் அனைவரும் பார்ப்பனர் என்றால் பின்லேடனும் பார்பனர்தானே? (இந்துகுஸ்மலை வகையரா அனைத்தும் ஆரியர் என்று வந்தால்.)//

பின்லேடன் ஈரானில் இருந்து அங்கு சென்றிருக்கிறான். நீங்கள் சொல்வது ரிஜெக்டட்
:)

கல்வெட்டு said...

பெரிய டிஸ்கி:
வர்ணாசிரமத்தால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்றால் முதலில் அவர்களை கண்டறிவது அவசியம்.

அவர்களைக் கண்டறிவதற்கு அதே சாதியை வைத்துதான் தேட வேண்டியுள்ளது. எனவே இட ஒதுக்கீட்டில் ஒடுக்கப்பட்டவர்களைக் கண்டறிய சாதி பயன் படுகிறது.

விசமே விசமுறிவாக பயன்படுதல்போல.

ஜோசியத்தில் இருந்து சாதிய நோக்கி வந்துள்ள இந்தப்பதிவின் பரிணாம வளர்ச்சி அடுத்து இட ஒதுக்கீட்டிற்கு போகவேண்டாம்.

கோவி.கண்ணன் said...

//ஆரியர்கள்தான் பார்ப்பனர்கள் என்று சொன்னால், ஆரியம் ‍பாரப்பனர் என்ர தொடர்பு எப்படி வருகிறது.?//

ஆரியர்களின் தமிழ் பெயர் தான் பார்பனர் என்பது, திருகுறளில் அந்தப் பொருளில் தான் எழுதப்பட்டு இருக்கிறது என்பதை விளக்கவதாக,

பால் நிறத்தோர் என்கிற சொற் குறியீடு தான் பார்பனர் என்கிற நிற அடையாள இனச் சொல்லாக வழங்கப்பட்டதாக பாவாணர் முதலியோர் சொல்லி இருக்கிறார்கள்.

கோவி.கண்ணன் said...

//ஆரியர்கள்தான் பார்ப்பனர்கள் என்று சொன்னால், ஆரியம் ‍பாரப்பனர் என்ர தொடர்பு எப்படி வருகிறது.?//

2000 ஆண்டுக்கு முன்பு தமிழ் நாட்டுக்குள் வெள்ளையர் நுழைந்திருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள். வெள்ளைக்காரர்கள் என்பதற்கு பதிலாக பார்பனர் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். நற்கீரனார் நன்கு வெண்மையாக இருப்பாராம்.

2000 ஆண்டு பரிணாமத்தில் உடல் அமைப்பு, நிறம் எல்லாம் மாறிவிட்டது.

(அதற்கான நான் தமிழர்களில் கலப்பு இல்லை என்று சொல்லவரவில்லை, கலப்பு இருபக்கமும் நடந்தது, மேலே சொன்னது போல் தந்தைவழியாக கலப்புகள் நடந்திருக்கிறது)

இன்றைக்கும் காஷ்மிரத்து பார்பனர்களுக்கு வெள்ளைக்காரர்களுக்கும் அவ்வளவாக வேறுபாடு தெரியாது, அவர்கள் பிற சமூகத்துடன் கலக்கவில்லை, இடப்பெயற்சியும் சென்ற நூற்றாண்டு வரைச் செய்யவில்லை

கல்வெட்டு said...

நன்றி கோவி!

இந்த ஆரிய இனக்கூட்டத்தை அறிய யாரில் இருந்து ஆரம்பிக்கலாம் யுவான் சுவாங்?

வேதங்களைத் தவிர ஏதேனும் வரலாற்று நூல்கள் இருந்தால் பரிந்துரை செய்யுங்கள்.

***

//பால் நிறத்தோர் என்கிற சொற் குறியீடு தான் பார்பனர் என்கிற நிற அடையாள இனச் சொல்லாக வழங்கப்பட்டதாக பாவாணர் முதலியோர் சொல்லி இருக்கிறார்கள்.//

இருக்கலாம் கோவி. அது அந்தக்காலத்தில் .
பால் நிற அய்ரோப்பியர்களை என்ன செய்வது?

**
முன்னோர்கள் அவர்களின் காலத்தில் அவர்கள் அறிந்த புரிதலின் அடிப்படையில் சொல்லியிருப்பார்கள்.
திருத்தி எழுதப்படவேண்டியது அவசியம் என்றே நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் said...

// கல்வெட்டு said...
நன்றி கோவி!

இந்த ஆரிய இனக்கூட்டத்தை அறிய யாரில் இருந்து ஆரம்பிக்கலாம் யுவான் சுவாங்?

வேதங்களைத் தவிர ஏதேனும் வரலாற்று நூல்கள் இருந்தால் பரிந்துரை செய்யுங்கள்.

//

ஆரிய இடப் பெயர்ச்சி பற்றி மாக்ஸ்முல்லர் எழுதிய போது தான் அவை பற்றி பெரிதாகப் பேசப்பட்டு பாடம் திட்டங்களிலும் ஆரியர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் என்று வைத்தார்கள்.

ஆனால் அண்மைய ஆராய்ச்சிகளால் மாக்ஸ் முல்லர் எழுதியது மொழி ஒப்பீடு மற்றும் வேதத்தில் குறிப்பிட்டு இருக்கும் இடங்கள் (சரஸ்வதி நதி) பற்றியது என்பதால் அது பின்னாளில் மறுக்கப்பட்டது.

அதாவது மாக்ஸ்முல்லரின் ஆரியர் வருகை என்பதற்கு ஆதாரம் இல்லை என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ஆதாரம் இல்லை என்பதற்காக கோட்பாடு தவறு இல்லை என்று சொல்லிவிட முடியாது, பின்னாளில் உறுதியான வேறு ஆதாரம் கிடைக்கும் போது நிலமை மாறலாம்.

மற்றபடி ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழையவில்லை என்பதற்கும் வரலாற்று அளவில் போதிய ஆதாரம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மாக்ஸ்முல்லரின் கருத்து ஒரு தியரி என்பதாக மட்டுமே புரிந்து கொள்ளலாம் என்கிறார்கள்

கல்வெட்டு said...

பார்ப்பனர் என்பது அவச்சொல் என்று நினைத்தால் அது வர்ணாசிரம வழிகாட்டலில் வந்த சாதியைத் இன்னும் தொங்கிக்கொண்டு தீண்டாமை , அடக்குமுறை செய்யும் அனைவருக்கும் பொதுவாக இருக்கட்டும்.

ரேசிசம் என்பதும் நாசிசம் என்பதும் அவச்சொல்லே பார்ப்பனிசமும் பார்ப்பனரும் அதேதான்.

கல்வெட்டு said...
This comment has been removed by the author.
கல்வெட்டு said...

நன்றி கோவி!

ஒரு இனம் ஒரு பெயரில் அடையாளப்படுத்தப்பட்டால் அது அதைச் சார்ந்த அண்டைநாடுகளில் ஒன்றிற்கு மேற்பட்ட நாடுகளில் (குறைந்த பட்சம்)அதே அடையாளத்தில்,வழங்கப்பட்டு இருக்கலாம். இந்தியா தவிர மற்ற நாடுகளில் கபர் போலன் அந்தாண்ட மக்கள் அந்தக்காலத்தில் எப்படி மற்றவர்களால் அடையாளப்படுத்தப்பட்டார்கள் என்று மலைக்கு அந்தப்பக்கம் கொஞ்சம் தேடினால் கிடைக்கும்.

பழையவை எதையும் உதாசீணப்படுத்தவில்லை ஆனால் அதைத்தாண்டியும் கேள்வி கேட்க்காவிடில் தேடல் நின்றுவிடும் என்ற‌ பயம் உள்ளது.

:-))

கோவி.கண்ணன் said...

//இந்தியா தவிர மற்ற நாடுகளில் கபர் போலன் அந்தாண்ட மக்கள் அந்தக்காலத்தில் எப்படி மற்றவர்களால் அடையாளப்படுத்தப்பட்டார்கள் என்று மலைக்கு //

செருமானியர்கள் குறிப்பாக ஹிட்லர் தன்னை ஆரியன் என்றே முன்மொழிந்து கொண்டு இனவெறி போர் நடத்தினான்

கோவி.கண்ணன் said...

//பழையவை எதையும் உதாசீணப்படுத்தவில்லை ஆனால் அதைத்தாண்டியும் கேள்வி கேட்க்காவிடில் தேடல் நின்றுவிடும் என்ற‌ பயம் உள்ளது.

:-))//

இதை இதை இதைத்தான் சோ இராமசாமியும் சொல்லி தேடுகிறார்.

'எங்கே பிராமணன்?' தேடல் போல் மாபெரும் தேடலாக இருக்கிறதே !
:)

ஆர்ய சொல் பற்றி விக்கி கட்டுரை

கல்வெட்டு said...

கோவி,
//இதை இதை இதைத்தான் சோ இராமசாமியும் சொல்லி தேடுகிறார்.

'எங்கே பிராமணன்?' தேடல் போல் மாபெரும் தேடலாக இருக்கிறதே !
:)
//


நம்ம (எனது) தேடல் ஆரிய இனக்குழு மட்டுமே கோவி. :-)))))

கல்வெட்டு said...

கோவி,
ஈரான் ஹிட்லர் என்று கலந்துகட்டித்தான் ஆர்யன் தியரி வருகிற‌து.

The Origins of Aryan People
http://www.iranchamber.com/history/articles/aryan_people_origins.php

ஆரியர்களை சர்வதேச இனக்குழு என்று கொள்ளலாம்.

பார்ப்பனர்களை இந்திய சாதிய அடுக்கில் அடைத்துக் கொண்டவர்கள் என்று சொல்லலாம்.

பித்தனின் வாக்கு said...

// ஆனா இப்படி கொஞ்சமாவது யோசிக்கிறதால தான் எனக்கு இன்னும் கிறுக்கு பிடிக்காம இருக்கு! //
அதை நாங்க சொல்லனும் தலை. நீங்க கிறுக்கா இல்லையான்னு உங்களுக்கு தெரியாது.

என்ன வர வர தத்துவஞானியா மாறி வர்ரீங்க. இப்படியே போனா நாங்க
சாக்ரட்டிஸின் தம்பியே, அரிஸ்டாடிஸின் அண்ணனே ந்னு ஈரோடு பூரா கட் அவுட் வைக்கனும் போல.
இம்ம் ஜாதகம் கூறுவது ஓரளவு உண்மைதான் வால்ஸ். அதை வைத்து பொழப்பு நடத்துவர்களிடம் ஏமாறமல், உண்மையாக பார்ப்பவர்களிடம் போனால் பல அதிசயத் தகவல்கள் பெறலாம். நன்றி வால்ஸ்.
கட்டுரை பார்ப்பான் என்ற வரியால் திசைமாறி விட்டது.

Anonymous said...

என்னா ஒரு றண்டு நாலு நான் கிரிஸ்மஸ் ப்ர்சேசுக்கு போய்ட்டு வாறதுக்குள்ள இப்படி ஆட்டம் போடு வச்சுறுக்கீங்க. தள!! ஜாதி மதம்-நு வந்தா கசாமுசாவா எலுதுவாறு , அந்த பளகீனத்தை வச்சு சிங்கத்தை சாச்சுப்புட்டிங்க்களே !!
என் தள, முன்ன எப்புதும் தான் போட்ட பின்னு-வை அளிச்சதே இள்ளா. இப்ப அளிக்க வச்சுட்டீங்க.
தள இந்த மாதிரி எவானவ்து ஏத்தி விட்டா அதுக்காக நீ குதிக்காது, சூதானமா இறு.

ஏளேய் தல-ய வச்சு காமெடி கீமெடி பண்ணினா தொளைச்சுடுவேன் ஆமா

சொள் அலகன்

hiuhiuw said...

192

hiuhiuw said...

193

hiuhiuw said...

194

hiuhiuw said...

195

hiuhiuw said...

196

hiuhiuw said...

197

hiuhiuw said...

198

hiuhiuw said...

199

hiuhiuw said...

200 டபுள் சென்ச்சுரி ! நான்தான் டாப்பு ! வெக்காதீங்க ஆப்பு

«Oldest ‹Older   1 – 200 of 204   Newer› Newest»

!

Blog Widget by LinkWithin