துணுக்ஸ்!

இன்று இரவு NDTV-HINDU!? டீவியில் byte it என்ற நிகழ்ச்சியில் நண்பரும், பதிவருமான அண்ணன் வடிவேலன் அவர்களின் பேட்டி வருகிறது, அண்ணாரின் கணிபொறி மென்பொருள்களின் கூடம் என்ற வலைப்பதிவு இந்த அளவுக்கு உயர்ந்துள்ளதற்கு அவரின் உழைப்பே காரணம், அவரை மேலும் உயர வாழ்த்துவோம்


********

வரும் இருபதாம் தேதி(20.12.09) ஞாயிற்றுகிழமை, ஈரோட்டில் மீண்டும் ஒரு மாபெரும் சந்திப்பு நடந்த உள்ளோம், சென்ற முறை நடந்த சந்திப்பில் மேடியின் திருமணம் மிக முக்கிய காரணமாக இருந்தது, பல நண்பர்களுக்கு மேடியும்டன் நேரடி அறிமுகமில்லாமல் வர தயங்கியதாக தெரிகிறது, அதனால் இம்முறை பதிவர்களோடு மட்டுமல்லாமல் வாசகர்களுக்கும் சேர்த்து அழைப்பு விடப்படுகிறது!, பரஸ்பர அறிமுகம், ஒருவருகொருவர் உதவியாய்யிருத்தல், ப்ளாக்கர் பற்றிய சந்தேகங்கள், சமூக உதவி, எழுதும் முன் இருக்கும் தயக்கத்தை போக்குதல் போன்றவை முக்கிய விடயங்களாக பேசப்படும்!



இந்த முறை முழு பொறுப்பையும் அண்ணன் கதிர் ஏற்றுள்ளார், அதனால் தைரியமாக வரலாம்! வரும் முன் முன்னஞ்சலிலோ, தொலைபேசியிலோ ஒரு முறை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும்!

வால்பையன்:9994500540
ஈரோடு கதிர்:9842786026

வெளீயூர் பதிவர்களுக்கு சிறப்பு சிகப்பு கம்பள வரவேற்பு உண்டு!

*********

போன பதிவை பற்றி பேச தோழர் கும்க்கிக்கு நேற்று மதியம் அழைத்திருந்தேன், அம்மாதிரியான தலைப்புகளில் அவருக்கு ஆர்வம் அதிகம், பேசி கொண்டிருந்தபோதே சாப்பாட்டு அயிட்டங்களும், முன் வந்து விட்டது, என்ன குழம்பு என கேட்க, ரசம் என்றார் தங்கமணி, கரண்டியை உள்ளே விட்டு கலக்கும் போது அடர் மஞ்சள் வண்ணத்தில் ஆனது, என்ன ரசம் என்றேன், கொள்ளுரசம் என்றார், சரி நேரில் பாராட்டினால் முகஸ்துதி என்ற நினைத்து கொள்வார் என்று போனிலேயே கும்கியிடம் என் மனைவி வைத்த ரசம் அப்படியே சாம்பார் மாதிரி இருக்குது என்றேன், அடத்து நொடி ரசக்கரண்டி என் மண்டையில் ”நச்” என்று இடித்தது, என்னாம்மா உன்னை புகழ்ந்து தானே பேசிகிட்டு இருக்கேன் என்றேன், உண்மையை சொல், என் ரசம், சாம்பார் மாதிரி நல்லாயிருக்குன்னு சொல்றியா இல்லை நான் வைக்கிற சாம்பார், ரசம் மாதிரி இருக்குதுன்னு கிண்டல் பண்றியா என்கிறார்.

ரங்கமணிகளுக்கு விடிவுகாலமே இல்லையா! இப்படியே போனா இதுக்கு என்ன தான் முடிவு! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

*********

2012

புதுசா சொல்ல ஒண்ணுமில்லை, தங்கமணியின் வற்புறுத்தலினால் போய் அமர்ந்தேன், கிராபிக்ஸ் ,கிராபிக்ஸ் மீண்டும் அதே. இமயமலை பகுதியை சீனாவாக காட்டி அரசியல் செய்ததாக சிலர் சொல்லியிருந்தனர், இயமலையின் அந்த(பின்) பக்கம் யாருக்கு சொந்தம் என்று எனக்கு தெரியவில்லை, அதுவும் நமக்கு தான் சொந்தமா!?



கடைசி கப்பல் ஆபத்தில் சிக்க காரணமாக இருப்பது நாயகன் மற்று குரூப், ஆனால் அந்த சிக்கலை அவரே தீர்த்து வைக்க, என்னவோ அழிந்து கொண்டிருக்கும் மொத்த உலகத்தையும் காப்பாற்றியது போல் ஒருவருகொருவர் முத்தம் கொடுத்து, செண்டி”மெண்டல்” தனம் எல்லா பக்கமும் தான் இருக்கு!

**********

நான் எந்த டாஸ்மாக் பாருக்கு போனாலும் வாட்டர் பாக்கெட் வாங்க மாட்டேன், என்ன ஆனாலும் வாட்டர் பாட்டில் தான், போன வாரம் தண்ணீர் கிடைக்காமல் லோக்கல் தண்ணிர் ஊற்றி சரக்கு அடுத்து தொண்டையில் கரகரப்பு, மூக்கடைப்பு, ஒரே தும்மல்!

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், அடிக்கும் சரக்கு மட்டும் பிரச்சனையில்லை, கலக்கும் தண்ணீரும் பிரச்சனை!

*********

கவிதை மாதிரி(அடிக்க கூடாது)

நீல வடிவ
வண்ணத்தில்
குழைத்த
சதுர வண்ண
மலர்கள் முன்
உயர்ந்ததொரு
ஆற்றினைப் போல்
படுத்து கிடந்த
அருவியின் பின்
கவிழ்ந்த கிடந்த
குவளைக்குள்
உருண்டிருந்த
பூகோளத்தின்
ஒற்றைகால்
சந்திரன்
நான்

********

டிஸ்கி:குவியல் தான், பெயர் மாற்றி!

62 வாங்கிகட்டி கொண்டது:

Raju said...

உங்க தங்கமணிக்கு கோவில் கட்டி கும்பிடனும் சாமி..!
உங்களையெல்லாம் கட்டி மேய்க்கிறாங்களே.

ப்ரியமுடன் வசந்த் said...

பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் தல

கவிதையின் முடிவு வரிகள் மிக ரசனையா இருக்கு பாஸ்

Raju said...

அய்யய்யோ..இங்க வந்து "சாமி, கோயில்"ன்னு சொல்லீட்டேனே..!

அப்பாவி முரு said...

//♠ ராஜு ♠ said...
உங்க தங்கமணிக்கு கோவில் கட்டி கும்பிடனும் சாமி..!
உங்களையெல்லாம் கட்டி மேய்க்கிறாங்களே.//

அம்மனுக்கு எங்கூருலையும் ஒரு கோவில் கட்டணும்.

கட்டிமேய்க்கலையாம், அடிச்சு மேக்கிறாங்களாம்.

அப்பாவி முரு said...

// ♠ ராஜு ♠ said...
அய்யய்யோ..இங்க வந்து "சாமி, கோயில்"ன்னு சொல்லீட்டேனே..!//

அய்யய்யோ.,

நானும், அம்மன், கோவில்ன்னெல்லாம் சொல்லீட்டேனே..

Ashok D said...

கவித சூப்பர் வால்

சந்திப்புக்கு வர ஆசையாகதான் உள்ளது... பார்ப்போம் காலம் ஒத்துழைப்பு கொடுக்கறதா என்று

T.V.ராதாகிருஷ்ணன் said...

பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்

ராஜவம்சம் said...

பாதி உண்மையும் மீதி பொய்யும் தயவு பேசவேண்டாம்
அண்ணி உங்க தலையில போட்டது கரண்டியா தொடப்பமா (வெலக்கமாத்துகட்டை)

நானெல்லாம் பாட்டில் மூடிய முகர்ந்தாலே ஃபிலாட் ஆயிடுவ அப்போர எங்க தண்ணியில சரக்கு கலக்குரது

Mahesh said...

கவிதை உண்மையிலேயே அருமை... வித்தியாசமான சிந்தனை !!

vasu balaji said...

பதிவர் கூடலுக்கு வாழ்த்துகள். கவிதை அழகும் வித்தியாசமும்.

Tech Shankar said...

ஆர்.வடிவேலன் தலை அவர்களுக்கு வாழ்த்துகள்.

suuppeer


//
இதிலிருந்து தெரிவது என்னவென்றால், அடிக்கும் சரக்கு மட்டும் பிரச்சனையில்லை, கலக்கும் தண்ணீரும் பிரச்சனை!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் தல

பூங்குன்றன்.வே said...

//நான் எந்த டாஸ்மாக் பாருக்கு போனாலும் வாட்டர் பாக்கெட் வாங்க மாட்டேன், என்ன ஆனாலும் வாட்டர் பாட்டில் தான்//

தகவலுக்கு நன்றி தல :)

Anonymous said...

போன பதிவை பற்றி பேச தோழர் கும்க்கிக்கு நேற்று மதியம் அழைத்திருந்தேன், அம்மாதிரியான தலைப்புகளில் அவருக்கு ஆர்வம் அதிகம், பேசி கொண்டிருந்தபோதே சாப்பாட்டு அயிட்டங்களும், முன் வந்து விட்டது, என்ன குழம்பு என கேட்க, ரசம் என்றார் தங்கமணி, கரண்டியை உள்ளே விட்டு கலக்கும் போது அடர் மஞ்சள் வண்ணத்தில் ஆனது, என்ன ரசம் என்றேன், கொள்ளுரசம் என்றார், சரி நேரில் பாராட்டினால் முகஸ்துதி என்ற நினைத்து கொள்வார் என்று போனிலேயே கும்கியிடம் என் மனைவி வைத்த ரசம் அப்படியே சாம்பார் மாதிரி இருக்குது என்றேன், அடத்து நொடி ரசக்கரண்டி என் மண்டையில் ”நச்” என்று இடித்தது, என்னாம்மா உன்னை புகழ்ந்து தானே பேசிகிட்டு இருக்கேன் என்றேன், உண்மையை சொல், என் ரசம், சாம்பார் மாதிரி நல்லாயிருக்குன்னு சொல்றியா இல்லை நான் வைக்கிற சாம்பார், ரசம் மாதிரி இருக்குதுன்னு கிண்டல் பண்றியா என்கிறார்.

ரங்கமணிகளுக்கு விடிவுகாலமே இல்லையா! இப்படியே போனா இதுக்கு என்ன தான் முடிவு! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ஹேய் நீங்க பண்ற லொல்லு எங்களாலயே தாங்க முடியலை கொள்ளு ரசம் வச்ச என் தங்கை எப்படி இத்தனை காலமும் இனி வரும் காலமும் தாங்க போறாங்களோ..சும்மா அவங்களை பத்தி சொன்னீங்க ஒரு மாசத்துக்கு வீட்டில் சோறு போட வேணாமுன்னு சொல்லிடுவேன்...

Anonymous said...

பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.. வழக்கம் போல துணுக்ஸ் அமர்க்களம்

Anonymous said...

நீங்களும் கவிதை களத்தில் குதிச்சிட்டீங்க இனி நான் ஓய்வெடுக்கிறேன்....ஹிஹிஹி நிம்மதின்னு சொல்றது கேக்குது...

Unknown said...

கவிதா கலக்கிடிங்க... போட்டிக்கு அனுபுரிங்களா...

Rajan said...

//அடிக்கும் சரக்கு மட்டும் பிரச்சனையில்லை, கலக்கும் தண்ணீரும் பிரச்சனை!
//

அது மட்டுமில்ல ! வாங்கிக் குடுத்தவன் வயிதேரிச்ச்சலும் தான் ....

சிகரெட்டு எடுத்துக்குங்கன்னு ஒரு மரியாதைக்கு பாகெட்டோட கொடுத்தா ஒன்னு ரெண்டு எடுத்துட்டு திருப்பி கொடுக்கணும் .... அப்பிடியே சோப்புல வெச்சுக்க கூடாது ...

எதோ கல்யாண வீடாச்சேன்னு சும்மா விட்டேன் அல்லாங்காட்டி டகுலு பிகிலாயிருக்கும்
டங்கு டனாலாயிருக்கும்

பீர் | Peer said...

@ராஜூ, @முரு, ஆமாமா நிச்சயமா கொவில் கட்டணும். அடிக்கல் நாட்டும் போது சொல்லியனுப்புங்கப்பா.. நானும் வந்துடறேன். :)

இளவட்டம் said...

அது என்ன கம்பள வரவேற்பு?

Anonymous said...

பழமைபேசி வர்றார் போலிருக்கு. சந்திப்பு களை கட்ட வாழ்த்துக்கள்

VISA said...

//இதிலிருந்து தெரிவது என்னவென்றால், அடிக்கும் சரக்கு மட்டும் பிரச்சனையில்லை, கலக்கும் தண்ணீரும் பிரச்சனை!
//

எங்கள மாதிரி ராவா அடிக்கிற பார்ட்டிக்கு
தொண்டையில கிச் கிச் வர்றதே இல்ல.

குடி குடியை கெடுக்கும்.
குடி தண்ணீர் குரல் வளையை கெடுக்கும்.

VISA said...

நீல வடிவ
புடவையில்
குழைந்த
சதுர வண்ண
மலர்கள் முன்
உயர்ந்ததொரு
ஆறைப் போல்
படுத்து கிடந்த
குருவியின் பின்
கவிழ்ந்து கிடந்த
குவளைக்குள்
உருண்டிருந்த
பூகோளத்தின்
ஒற்றைக்கால்
மந்திரன்
யாரப்பா?

ஈரோடு கதிர் said...

யப்பா...

சிவப்பு கம்பள வரவேற்புனு போட்டாலும் போட்டீங்க..

மக்கா.... ரவுசு தாங்க முடியல

எல்லா நண்பர்களும் வாங்க! வாங்க!!

cheena (சீனா) said...

அன்பின் வால்

NDTV நிகழ்ச்சி பார்ப்போம்

இருபதாம் நாள் நடக்க இருக்கும் சந்திப்பு வெற்றி பெற நல்வாழ்த்துகள்

நாங்கல்லாம் சிகப்பு கம்பள பார்ட்டியா

ஆமா ஊட்ல தங்கஸ் எப்படி சமாளிக்கறாங்க

தண்ணி அடிக்கப் போயிட்டு தண்ணி பாக்கெட்டா பாட்டிலான்னு பாத்துக்கிட்டு இருந்தா சரியா வருமா

அதென்னது கவிதை - ஒரு எழவும் புரில

நல்வாழ்த்துகள் வாலு

Romeoboy said...

\\இதிலிருந்து தெரிவது என்னவென்றால், அடிக்கும் சரக்கு மட்டும் பிரச்சனையில்லை, கலக்கும் தண்ணீரும் பிரச்சனை//

அடடா என்ன ஒரு கண்டுபுடிப்பு , நியூட்டன்க்கு அப்பறம் நீங்கதான் தல இந்த உலகத்துல ..

Ungalranga said...

//ஒற்றைக்கால் சந்திரன் நான்//

அப்பு..கரண்டியால கால்லையும் அடிச்சிட்டாங்களா?

இருந்தாலும் கவிதை (மாதிரி) சூப்பரா கீது..!!

Anonymous said...

உங்களுக்கும் எண்டர் கீ பிரச்சினை வந்திருச்சா ??

Menaga Sathia said...

/உங்க தங்கமணிக்கு கோவில் கட்டி கும்பிடனும் சாமி..!
//ரிப்பிட்ட்ட்

பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் வாலு.

கரண்டியால மண்டைல நச் னு ஒண்ணு போட்டாங்களா சூப்பர்ர்ர்.கற்பனை பண்ணி பார்க்கிறேன்...வாழ்க அண்ணி!!

Kumky said...

ஈரோடு பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

நீதி: பாராட்டும்போதும் உஷாரா இருக்கனும்.

உங்களுக்கு கவிதை நன்றாக வருகிறது...அது கவிதையா இல்லையா என நாங்கள் முடிவு செய்துகொள்கின்றோம்...தொடர்ந்து கவிக்கவும்..சே....கூவிக்கவும்.


வடிவேலன் அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்.


அப்புறம் “சிகப்பு கம்பளம் “ என்றால் வைனா?

Kumky said...

முத்தம் கொடுக்க யாராவது வருகிறார்களா?

இது சென்னை முத்தம் அல்ல....

தேவன்மாயம் said...

வரும் இருபதாம் தேதி(20.12.09) ஞாயிற்றுகிழமை, ஈரோட்டில் மீண்டும் ஒரு மாபெரும் சந்திப்பு நடந்த உள்ளோம், ///

பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்!!

Sanjai Gandhi said...

குதிரை வாங்கிட்டு அங்குசம் வாங்க யோசிக்க முடியுமா என்ன? :)

Jerry Eshananda said...

வணக்கம் வால்ஸ்,நாங்களும் வர்ரோம்ல

அன்புடன் அருணா said...

கவிதை ரொம்ப குழப்பிடுச்சு!

நாடோடி இலக்கியன் said...

ரசம் அட்டகாசம்.

பா.ராஜாராம் said...

கவிதை மட்டும் வாசித்து போயிருக்கேன்.இரவு வந்து மிச்சது வாசிக்கணும்.

ரொம்ப பிடிச்சிருக்கு அருண்,கவிதை!கவிதை போட்டி வார்ம் அப்?

ILA (a) இளா said...

சில நேரங்களில் வயித்தெரிச்சலும், ஆற்றாமையும், பொறாமையும் ஒன்னு கூடி வரும். இப்போ எனக்கு கோவமும் சேர்ந்தே வருது

கலையரசன் said...

பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்....

அகல்விளக்கு said...

சங்கமிப்போம்..

:-)))

Thamira said...

சந்திப்பு சிறக்க வாழ்த்துகள். 20ல் கலந்துகொள்ள முடியாத சூழல். அனைவரையும் மிஸ் செய்கிறேன். வாழ்த்துகள்.

புத்தாண்டு தினத்தில் நான் ஈரோடில் இருக்கக்கூடும். வாய்ப்பிருப்பின் 31 இராவில் சந்திப்போம்.

thiyaa said...

குட் பிளக் பதிவுக்கு வாழ்த்துக்கள்.

தாரணி பிரியா said...

பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் வாலு.

ஹேமா said...

வாலு உங்க பதிவு பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு.சுகம்தானே !

உங்க தங்கமணி பாவம்.

கவிதை குட்டியா அழகாயிருக்கு.வாழ்த்துக்கள்.

Chitra said...

Good one! பதிவர் சந்திப்பு சிறப்புற வாழ்த்துக்கள். சந்திப்பின் விவரம் அறிய ஆவல்............

ஆ.ஞானசேகரன் said...

//இதிலிருந்து தெரிவது என்னவென்றால், அடிக்கும் சரக்கு மட்டும் பிரச்சனையில்லை, கலக்கும் தண்ணீரும் பிரச்சனை!//

உண்மைதான் வால்..

அப்பறம் சந்திப்பு சிறக்க வாழ்த்துகள்..

கவிதையும் அழகு

ஜெட்லி... said...

//இதிலிருந்து தெரிவது என்னவென்றால், அடிக்கும் சரக்கு மட்டும் பிரச்சனையில்லை, கலக்கும் தண்ணீரும் பிரச்சனை!
//
ஓகே ஓகே...

யோ வொய்ஸ் (யோகா) said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள், 2012 பார்த்து மிரண்டுட்டேன், அனிமேஷன் காட்சிகள் அபாரம்

எறும்பு said...

//உலகத்தையும் காப்பாற்றியது போல் ஒருவருகொருவர் முத்தம் கொடுத்து,///

முத்தம் கொடுக்கிறது ஒரு குத்தமான்னா??

Eswari said...

// ♠ ராஜு ♠ said... தங்கமணிக்கு கோவில் கட்டி கும்பிடனும் சாமி..!
உங்களையெல்லாம் கட்டி மேய்க்கிறாங்களே.//
repeatuuuuuu.......

S.A. நவாஸுதீன் said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள் வால்.

குவியல்(அ)துணுக்ஸ் வழக்கம்போல் வால்தனம்.

// தமிழரசி said...

ஒரு மாசத்துக்கு வீட்டில் சோறு போட வேணாமுன்னு சொல்லிடுவேன்..//

அப்போ ஒரு மாசம் வாலுக்கு பெயில் கிடைக்கும்.

பின்னோக்கி said...

தண்ணியில இவ்வளவு விஷயம் இருக்கா. அதுக்கு அடுத்த மேட்டர் கவிதை. என்ன சொல்ல வர்றீங்க. தண்ணிக்கும் கவிதைக்கும் எதாவது லிங்க் இருக்கா ? :) கவிதை போட்டி இருக்கு..ஆனா கவிதை ஒன்னும் சிக்க மாட்டேங்குது :)

Anonymous said...

:-)))

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

இளவட்டம் said...//அது என்ன கம்பள வரவேற்பு?// ஹி... ஹி.... அதான் தலையோட ஸ்பெஷல்.

Unknown said...

ஹ்ம்ம் வருகிற இருபாதம் தேதி சற்று சிரமம் தன வாழ் நன் வர , பதிவராக இல்லை வாசகர வர இருந்தேன் அனால் சில முக்கிய நிகழ்வுகள் அன்று உண்டு ஆதலால் நன் வர வில்லை மன்னிக்கவும் வாழ் நல்ல நிகழ்ச்சியை மிஸ் பண்ண போறேன்னு தெரியுது ,

சிவாஜி said...

பதிவர் சந்திப்பு போஸ்டர் நல்லா இருக்குங்னா.

//பரஸ்பர அறிமுகம், ஒருவருகொருவர் உதவியாய்யிருத்தல், ப்ளாக்கர் பற்றிய சந்தேகங்கள், சமூக உதவி, எழுதும் முன் இருக்கும் தயக்கத்தை போக்குதல் போன்றவை முக்கிய விடயங்களாக பேசப்படும்!//

உண்மையிலேயே நான் இதை எதிர்பார்த்தேன்! ரொம்ப சந்தோசம்! கண்டிப்பா கலந்துக்குவோம்.

அப்புறம் மாதிரி கவிதை ரொம்ப குழப்புது! ஒன்னும் புரியல.

ஆ! இதழ்கள் said...

பதிவர் சந்திப்பில் கலக்க வாழ்த்துக்கள்

vadivelsamy said...

ஈரோடு பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

நாகா said...

அண்ணே சிகப்பு கம்பளம் ரெடியா??

Karthick said...

நண்பரே -

உங்கள் ப்ளாக் நல்ல இருக்கு. நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். ஒரு தொடர் கதை என் ப்ளோகில் எழுதுகிறேன்.
உங்கள் கருத்தை படித்துவிட்டு சொல்லவும்.
என் வலைபூ முகவரி:
http://eluthuvathukarthick.wordpress.com/

மஞ்சரி said...

உங்கள் பதிவுகள் மிகவும் அருமை :-)) வாழ்த்துகள் :-))

என்ன
ஒரு
கவிதை!!!
எதாவது அவார்டுக்கு முயற்சி பண்ணலாமே (சத்தியமாக இது வஞ்ச புகழ்ச்சி அணி இல்லைங்க!!!! நம்புங்க)

புலவன் புலிகேசி said...

பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்

!

Blog Widget by LinkWithin