எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு!...

பெருசா ஆச்சர்யபடுறதுக்கு ஒண்ணுமில்லை, அது மனிதனுக்கே உரிய குணம் தான், எங்க கூட்டம் இருந்தாலும் நம்ம மக்களால எட்டிபார்க்காம இருக்க முடியாது, உதாரணத்துக்கு சொல்லனும்னா குரளி வித்தை காட்டுறவன் கூடவே ஒரு நாலு பேரை வச்சிருப்பான், முதலில் அவனுங்க தான் சுத்தி நிப்பானுங்க, அரைமணி நேரத்தில் இருபது, முப்பது பேர் சேர்ந்திருவாங்க, ஆனா கடைசி வரைக்கும் அவன் கூடவே இருந்த அந்த நாலை பேரை நம்மால கண்டுபுடிக்கவே முடியாது, இப்பெவெல்லாம் அந்த மாதிரி வித்தை காட்டும் பொழுப்பு நடக்கிறதில்லை, ஆனாலும் மனுசன் புத்தி மட்டும் மாறாதே, அதனால தான் பெரும்பான்மைகிட்ட தன்னை ஒப்பு கொடுத்துகிட்டு சுத்துறான்!

நூத்துக்கு எண்பது பேருக்கு மேல இந்த மனநிலை உள்ளவர்கள் தான், சொந்த அண்ணன் தேர்தல்ல நிப்பாரு ஆனா ஓட்டு வேற ஆளுக்கு போடுவான், ஏன்னு கேட்டா, நான் ஓட்டு போட்டா அவரு ஜெயிக்க போறாருன்னு சொல்லுவான், தன்னை எப்போதும் ஜெயிக்கும் பக்கம் இருப்பது போலவே காட்டிகொள்வது பொதுபுத்தியுள்ள மனிதனின் குணம், ஜெயிக்கும் ஆட்களை பொறுத்து அவர்களது இடமும் மாறும், ஆனால் பொதுபுத்தி மட்டும் போகாது, தன்னம்பிக்கை குறைவான ஒருவித பாதுகாப்பற்ற தன்மையா உணர்பவர்கள் இந்த பொது புத்திகாரங்க!, இவுங்களை ஒண்ணும் பண்ணமுடியாது, ஏன்னா தப்பாவேயிருந்தாலும் அதிகம் பேர் சரிதான்னு சொன்னா அது சரியாத்தான் இருக்கும்னு நம்புறவங்க இவுங்க!

பொதுவாவே மனுசனுக்கு மிஸ்டிரிஸ் எனப்படும் ஆச்சர்யங்களை பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம், பொதுவா ஒரு விசயத்தை உண்மைன்னு நம்புறதுக்கு அதிகபடியான சாத்தியகூறுகள் இருக்கான்னு பார்ப்பான், அவனாலே உள்ளேயே போகமுடியலைனா அதை அப்படியே நம்பும் மனநிலைக்கு தள்ளப்படுவான், அதற்கு அவன் சொல்ற காரணம் தான் தமாசா இருக்கும், அந்த கலைக்டர் நம்புறாரு, அந்த அரசியல் தலைவர் நம்புறாரு அதனால நானும் நம்புறேம்பாம், பொதுபுத்தி உள்ள மனிதர்களுக்கு மாற்று கோணம்னா என்னானே தெரியாது, ஒருத்தன் அவனுக்கு நண்பனாகவோ அல்லது எதிரியாகவோ தான் இருக்க முடியும், அவனால ஒருத்தரை தனிபட்ட ஒரு புரிதல் கொண்ட மனிதரா பார்க்கவேமுடியாது!

கைரேகை ஒருத்தருக்கு ஒருத்தர் வேறுபடுவது போல் நமது கருத்துகளிலும் வேறுபடுகிறோம், சிலருக்கு மட்டும் சில விசயங்களில் ஒத்த கருத்து இருக்கும், ஆனால் ஒருவருக்கு முழுமையான ஜெராக்ஸாக யாருமே இருக்கமுடியாது, இந்த பொதுபுத்தி மக்கள் மட்டும் கொஞ்சம் வித்தியாசம், தனக்கு ஒரு ரோல்மாடல் இல்லைனா வாழ்கையே முழுமையடயாதது போல் உணர்வாங்க, தன்னை மற்றொருவரின் வழி தோன்றலாக காட்டிக்க விரும்புவாங்க, தன்னை ஒருத்தருக்கு வாரிசாகவோ, சீடராகவோ, ரசிகராகவோ அவுங்களே சொல்லிக்குவாங்க!, தனித்தன்மைனா கிலோ என்னவிலைன்னு கேட்பாங்க!.

அஸ்வினி,ப்ரணி எல்லாம் நட்சத்திரம் இல்லை, அவையெல்லாம் 360 டிகிரிய 27 பிரிச்சி சும்மா வச்சிகிட்ட பேரு, அதெல்லாம் கற்பனை தான், இருந்தாலும் உங்களுக்கு அடிப்படை வான சாஸ்திரம் தெரிஞ்சிருக்கனும், அப்போ தான் உங்களுக்கு புரியும், கற்பனையை நான் ஏங்க தெரிஞ்சிகனும்னு கேள்வி கேட்டா நீங்க முட்டாளாவோ, லூசுப்பயலாவோ பார்க்கபடலாம், எனக்கு என்ன சந்தேகம்னா ஒருத்தரை சோசியம் சொல்லி ஏமாத்த அந்த கற்பனை குதிரைங்க எல்லாம் தேவையேயில்ல, நீ பொறந்த தேதி பதினெட்டா, ஒவ்வோரு பதினெட்டாம் நாளும் நீ புதுசா பொறக்குற மாதிரி, அதனால நீ வெளியூர் பயணத்தை, கொடுங்கல், வாங்கலை தவிர்ன்னு சொன்னா மண்டையாட்டி கேட்க நாப்பது பேர் இருக்கான், ஆனா எவனுமே ஒண்ணாந்தேதி பிறந்தவன் தினமும் இதை கடைபிடிக்கனுமான்னு எதிர் கேள்வி கேட்க மாட்டான்!
அப்படி கேட்டாத்தான் நாடு என்னைக்கோ உருப்பட்டிருக்குமே!

ஜாதகம்னா என்னான்னு சொல்லி கொடுக்க வர்றவங்களே சொல்ற முத வார்த்தை இதனால் உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றமும் செய்ய முடியாது! ஆனாலும் மனிதனுக்கு தன்னை பற்றிய எதிர்காலம் என்னான்னு தெரிஞ்சிகிற ஆர்வம் எதாவது செய்ய சொல்லிகிட்டே இருக்கு, மேலும் தன்னை பற்றிய மற்றவர்களது அபிப்பிராயங்களுக்கும் அதிகமுக்கியத்துவம் கொடுப்பான், அது ஒருவித சுய பரிசோதனை தான், ஆனால் சோதிடம் என்பது அதிர்ஷ்டத்துக்கு மறுபெயர், தன்னம்பிக்கையற்ற, பாதுகாப்பற்ற தன்மையா உணர்ற மக்களை ஜாதகம் என்ற பெயரில் எளிதில் ஏமாற்றமுடியும்! ரொம்ப சுலபமா அதை செய்யலாம், ஒரு பெண் கர்ப்பமா இருக்கான்னு வச்சுகோங்க, என்ன தெரியுமா சோசியகாரரு சொல்லுவாரு, நிச்சயமா ஆண்குழந்தை பிறக்கும், மிஸ்ஸாச்சுன்னா பெண் குழந்தை தான்! எப்பூடி!



ஜோதிடம் இந்துதுவாவின் நீட்சி தான்னு எல்லோருக்குமே தெரியும், எல்லா கோள்களுக்கும் ஒரு உருவத்தை கொடுத்து, சனி திசை நடந்தா திருநள்ளாறு போய் கும்பிடுன்னு பாப்பானை தவிர வேற எவன் சொல்லியிருக்க முடியும்! உலகத்துல 6 ல ஒருத்தன் இந்தியன் ஆனா எல்லோருமே ஜோசியம் பாக்குறதில்லை, அதனால நாசமாவா போயிட்டாங்க, நம்மளை சுத்தி ஆயிரம் முட்டாள்கள் வாழ்க கோஷம் போடும் போது ந்மக்கு ஒரு சந்தோசமாதான் இருக்கு இல்லையா!? இல்லைனா இத்தனை நடிகர்களும், அரசியல்வாதிகளும் பொழுப்பு நடந்த முடியுமா, அந்த கோஷ்டியில் இப்போ இன்னும் சிலர் சேர்றாங்க!


********************


டிஸ்கி:எனக்கும் சலிப்பா தான் இருக்கு, என்ன தான் சொன்னாலும் யோசிக்கவே மாட்டோம்னு சொல்றவங்களுக்கு திரும்ப திரும்ப சொல்லனுமான்னு, ஆனா இப்படி கொஞ்சமாவது யோசிக்கிறதால தான் எனக்கு இன்னும் கிறுக்கு பிடிக்காம இருக்கு!

204 வாங்கிகட்டி கொண்டது:

«Oldest   ‹Older   201 – 204 of 204   Newer›   Newest»
மாதாகுஜாலன் said...

நல்ல அடிடா ஜால்ரா

வால்பையன் said...

உரையாடிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி! இது தொடர்பாக இன்னும் பல பதிவுகள் இருப்பதால் நண்பர்கள் தொடர்ந்து உரையாடலில் கலந்து கொள்ளவும்!

SHAREMARKET said...

சனி பகவான் தன் சொந்தவீட்டை 7 இல் இருத்து 11 இல் உங்கள் (BLOG)ப்லோக்யை 4௦ இல் மறித்து 13 இல் பார்க்கிறார் அதான் இப்படி எழுதேரிங்க , இதற்கு பரிகாரம் தினமும் இந்த போஸ்ட் ஒரு வாரத்துக்கு பதிவிடனும் .

நன்றி
ஜோதிடர்

ganesan said...

அய்யா வால் பையன் தங்கள் ஒரு அனுபவம் உங்களை இப்படி பேச வைத்து இருக்கிறது . ஆனால் ஒரு உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் சோதிடம் சொல்பவர் இருகிராரே அவருக்கே ஜாதகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் . கணிதம் எந்த அளவுக்கு உண்மையோ அதிய அளவுக்கு ஜோதிடமும் உண்மை .........................................................! என் கருத்தை பார்த்து சிலர் சிரிக்கலாம் . ஆனால் மனதில் கொள்ளுங்கள் நானும் உங்களை போல் இருந்தவன் தான் நான் .................................!



இப்படிக்கு
தமிழ் கிறுக்கன் .

«Oldest ‹Older   201 – 204 of 204   Newer› Newest»

!

Blog Widget by LinkWithin