முதலாளித்துவமும், கம்யூனிஷமும்!

அமெரிக்காவை கண்டுபிடித்தது அமெரிக்கோ வெஸ்புகியா அல்லது கொலம்பஸ்சா என்ற சந்தேகம் பலரை போலவே எனக்கும் இருக்கிறது, அமெரிக்கா என பெயர் வைத்து இருந்தாலும் அது அவரை பெருமை படுத்தும் வகையில் வைக்கப்பட்டது, உண்மையில் கண்டுபிடித்தது கொலம்பஸ் தான், அதனால் தான் முக்கிய நகரத்துக்கு கொலம்பியா என பெயரிடப்பட்டது என சிலர் கூறுகிறார்கள்! சரி பற்றிய ஆராய்ச்சியை பிறகு பார்ப்போம், நன்றாக வளர்ந்த அமெரிக்கா எப்படி நாசமா போச்சுனு இப்ப பார்ப்போம்!

பல அதிபர்களின் கடுமையான உழைப்பாலும், தொழில் புரட்சியாலும் அமெரிக்காவை வல்லரசாக மாற்றினார்கள், பின்னாளில் வந்தவர்கள் முதலாளிகளுக்கு சொம்பு தூக்கி அமெரிக்காவை அதலபாதாளத்துக்கு தள்ளினார்கள், சில உதாரணங்களோட ஆரம்ப்பிகிறேன்!

சில வருடங்களுக்கு முன் அரசின் கட்டுபாட்டில் இருந்த போக்குவரத்து துறையை ஒரு பிரபல மோட்டார் நிறுவனம் தன் வசமாக்க அரசை அணுகியது, பெட்டி நகர்ந்ததோ அல்லது மூளை மழுங்கிய அமைச்சர்களோ அதை தனியார்துறைக்கு தாரைவார்த்தார்கள்! கைக்கு வந்தவுடன் அவர்கள் செய்த முதல் காரியம் ஒரு ரூட்டில் பத்து பேருந்து சென்றதென்றால் அதை ஐந்தாக குறைப்பது, பின் சுலப தவணையில் அவர்கள் நிறுவனத்துக்கு சொந்தமான காரை விற்பது, வீட்டுக்கு ஒரு கார் என்ற விளம்பரத்தின் மூலம் அவர்களது விற்பனை கனஜோராக நடந்தது, நடுத்தரவர்க்கமும் இமேஜ் கருதி கடன் வாங்கி கார் வாங்கினார்கள், சில வருடங்கள் குடும்பத்துக்கு ஒரு கார் என்ற விகிதத்தில் அமெரிக்காவில் கார் இருந்தது! பேருந்து பெயரளவே இயக்கப்பட்டது, நடுத்தரவர்க்கத்துக்கு கீழுள்ளவர்கள் மேலும் கீழ் சென்றார்கள், அவர்களை பற்றி இன்றளவும் எந்த முதலாளிகளுக்கும் அக்கறையில்லை!

மேலுள்ளது ஒரு சாம்பிள் தான், அதன் பின் தற்போது ஏற்பட்ட பெரும்சரிவுக்கு காரணம் வேறு, நுகர்வோரை மட்டுமே நம்பியிருக்கும் அமெரிக்க முதலாளிகள், அவர்களை கையில் வைத்து கொள்ள அள்ளி அள்ளி கடன் கொடுத்தார்கள், உலகிலேயே அதிக கிரிடிட் கார்டு வைத்திருப்போர் எண்ணிக்கை அமெரிக்காவில் தான் அதிகம் என்ற கணக்கெடுப்பு சொன்னது, நீங்கள் ஒரு வீடு வாங்க வேண்டுமென்றால் 90% பணம் கடனாக வங்கியே கொடுக்கும், மீதியையும் அவர்கள் வேறிடத்தில் கடனாக பெற்றனர், வெறும் கடனிலேயே வாழ்க்கையை ஓட்டிய அமெரிக்கர்களின் வாங்கும் திறன் அதிக வட்டியால் சரிந்தது, மிக அத்தியாவிசய பொருள் தவிர மற்ற பொருள்களின் விலை சரிந்தது!

மிக முக்கியமாக ரியல் எஸ்டேட், நீங்கள் ஒரு லட்சத்திற்கு வாங்கிய வீடு வெறும் ஐம்பதாயிரத்துக்கு தான் போகுமென்றால் உங்களுக்கு எப்படியிருக்கும், கடன் நிலுவையுள்ளவர்கள் தங்கள் வீடுகளை அப்படியே விட்டு விட்டு தங்களது நான்கு சக்கர வாகனங்களில் கிளம்பிவிட்டனர், இன்றும் பல குடும்பங்கள் வாகனங்களிலேயே திரிந்து கொண்டிருப்பதாக தகவல் உண்டு, விலை குறைந்த சொத்தை பறிமுதல் செய்தாலும் கொடுத்த பணத்திற்கு ஈடாகாது வங்கிக்கு, அதனுடன் கடனட்டை மூலம் வராக்கடன்கள் கோடிகணக்கில் ஏறியது, வங்கியில் ஆரம்பித்து ஒன்றுடன் ஒன்று தொடர்பாக அனைத்து தொழில்களும் முடங்கின!

பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்தனர், வெளிநாட்டில் இருந்து வேலைக்கு வந்தவர்களிடம் வேலை பறிக்கப்பட்டது, நாடு திரும்ப முடியாத சிலர் தற்கொலை செய்து கொண்டனர்(வழக்கம் போல் வெளிவராது). அமெரிக்காவுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்த அனைத்து நாடுகளும் சற்றும் எதிர்பாராத சரிவை சமாளிக்க முடியாமல் பொருளாதார பின்னடவை கண்டது, தன் தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ள முடிந்த தகுதியான சில நாடுகள் மட்டும் காலூன்றி நின்றது, அமெரிக்க அரசும் பல கோடி நிதி அளித்து பல முதலாளிகளுக்கு உதவி செய்தது, ஆனாலும் நேற்று வரை அமெரிக்காவில் திவால் ஆன வங்கிகளின் எண்ணிக்கை 124!. பலகோடிகள் பேப்பரை டாலராக மாற்றி அரசு பல நிறுவனங்களில் தம்மையும் பங்குதாரராக ஆக்கி கொணடது! (இதை முன்னாடியே செஞ்சிருக்கலாம்ல)

****

இந்தியாவில், இந்திராகாந்தி பிரதமராக இருந்த சமயங்களில் தனியார் வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன! அதனாலேயே பலருடய எதிர்ப்பை அவர் சம்பாரித்தார், இன்றும் சில முதலாளித்துவ ஆதரவாளர்களுக்கு இந்திராகாந்தியை பிடிக்காது, அதற்கு பல அரசியல் காரணங்கள் கூட சொல்வார்கள்!

தமிழகத்தில் நான் பிறப்பதற்கு டி.வி.எஸ் கையில் போக்குவரத்து இருந்ததாக சில பெருசுகள் சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன், இன்றும் இருந்திருந்தால் நம் அனைவருக்கும் நிச்சயமாக ஒரு டி.வி.எஸ் 50 யாவது கையில் இருந்திருக்கும் அதாவது வாங்க வைக்கப்பட்டிருப்போம்! இன்றும் கூட பெங்களூரில் தனியார் பேருந்துகளும் அரசுக்கு இணையாக இயங்குகின்றன!, ஒருவேளை அரசு பேருந்து இல்லையென்றால் தனியார் வைத்தது தான் சட்டம்! சில முதலாளித்துவவாதிகள் சொல்வார்கள் ஏன் ஒருவருக்கு மட்டும் கொடுக்கிறீர்கள் பலருக்கு பகிர்ந்து கொடுங்கள் என்று.

இந்தியாவில் இருக்கும் தனியார் கேபிள் ஆப்புரேட்டர்கள் கண்டிப்பாக தூர்தர்ஷன் சேனலை ஒளிபரப்ப வேண்டும், அவர்களும் ஒளிபரப்புவார்கள் ஆனால், சிக்னல் மிக குறைவாக உள்ள பேண்ட்வித்தில் வெளிச்ச புள்ளியாக, இரைச்சலாக இது தான் பொதிகை என்று நாமே கண்டு பிடித்து கொள்ள வேண்டியது தான்! அரசுக்கு இப்படியென்றால் தனியாருக்கு எப்படியிருக்கும் இருட்டடிப்பு!?, எத்தனை பேருக்கு கொடுத்தாலும் வலியவன் ஒருவன் அனைவரையும் கவுட்டுக்குள் அமுக்கி வைத்து மேலேறி உட்கார்ந்து கொள்வான், நுகர்வோர் தேவைகளை மறந்து தருவதை பெறும் நிலைக்கு தள்ளப்படுவோம்!



***

மேட்டர் என்னான்னா!. கம்யூனிஷம் என்பது தனி மனித கொள்கையாக இல்லாமல் ஒரு நாடு தன் கொள்கையாக வைத்திருந்தது, அது சக வல்லரசான ரஷ்யா , இன்று அதுவும் பல துறைகளை தனியாருக்கு வழங்கி கொண்டிருக்கிறது! ஒரு நாடு முழுக்க முழுக்க கம்யூனிஷ நாடாக இருந்தாலும் ஆப்பு தான், முதலாளித்துவ நாடாக இருந்தாலும் ஆப்பு தான், தனியாருக்கும் வாய்ப்பு வழங்கலாம் ஆனால் அரசின் கட்டுபாடு இருக்க வேண்டும், இல்லையென்றால் இங்கேயிருந்து எடுத்து நமக்கே இயற்கை எரிவாயுயை விற்க முயன்ற ரிலையன்ஸ் முதலைகள் போன்ற பல தோன்றி நம்மை மீண்டும் ஒரு காலணிய அடிமைதனத்திற்கு கொண்டு செல்லும்!

80 வாங்கிகட்டி கொண்டது:

Mahesh said...

நல்ல பதிவு வால்... இன்னுங் கூட உங்க பாணீல நக்கலா எழுதியிருக்கலாம்.

ஆனா வழக்கம் போல நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்பண்றீங்களே தல...

minsarakannan said...

good

தர்ஷன் said...

உயர் நடுத்தர வர்க்கத்துக்கு எப்போதும் தனியார்துறை அள்ளித்தரும் ஆடம்பரங்களில் ஒரு ஈர்ப்புண்டு. ஆகவே அவர்கள் பின் விளைவுகளை யோசிப்பதில்லை. உங்கள் பதிவு மிக எளிமையாக தனியார் மயப்படுத்தலினால் மேலும் கூடும் Economy gap ஐ சொல்கிறது.

Unknown said...

அண்ணே, ரெண்டுலயும் ஓட்டு குத்தியாச்சு... நல்லா அலசி எழுதிருக்கீங்க....

மர தமிழன் said...

உண்மைதான், தம்படி காசில்லாதவங்களுக்கு கடன குடுத்து வீட்ட கட்ட சொன்னங்க ஒதுக்கு புறமா அவனவன் வீட்ட கட்டினதும் ஒண்ணுமில்லாத குப்ப மேடெல்லாம் ரேட் எகிறி போச்சு.. ஏற்கனவே வீடு கட்டின தம்படி பார்ட்டிங்க எடம் ரேட்டும் அது கூடவே ஏரிச்சு.. இன்னும் டாப் அப் லோன் வாங்கிக்குங்கன்னு சொல்லி இன்னும் துட்ட வாரி கொடுத்தாங்க வசூலுக்கு போன 150 வருஷ வங்கி முக்காடு போட்டுகிச்சு...

நம்மூர்லயும் இங்க ஏர்போர்ட் வருது, அங்க கப்பல் வருதுன்னு சொல்லி ஏகப்பட்ட இடம் மக்கள் தலையில கட்டிக்கிட்டு இருக்காங்க (நல்ல மழை பெஞ்சு 20 அடி தண்ணி வந்தா போட்டும் ஹெலிகாப்டரும் வரும் ) ... tv ல வர விளம்பரங்கள் பார்த்தா sun TV ஆரம்பிச்ச pudhusula finance company காரங்க 50% 100% வட்டி தரதா சொல்லி மொத்தமா மக்களை ஆப்பு வேச்சது தான் நினைவுக்கு வருது...

அமெரிக்காவ வேச்புசியும், கொலம்பசும் கண்டுபிடிக்கறதுக்கு பல நூறு வருஷங்களுக்கு முன்பே மூத்த குடி ஒன்று கும்பலாக குடும்பம் நடத்தி கொண்டிருந்தது
இவனுங்க போய் அவங்கள சாவடிச்சு அமெரிக்கான்னு பேர் வெச்சதுதான் சரித்திரம்.. அது கண்டுபிடிக்கப்பட்ட தேசமல்ல ..சுட்ட பழம்.

Maximum India said...

// ஒரு நாடு முழுக்க முழுக்க கம்யூனிஷ நாடாக இருந்தாலும் ஆப்பு தான், முதலாளித்துவ நாடாக இருந்தாலும் ஆப்பு தான், தனியாருக்கும் வாய்ப்பு வழங்கலாம் ஆனால் அரசின் கட்டுபாடு இருக்க வேண்டும், //

நல்ல பதிவு

நல்ல கருத்து.

நானும் வழிமொழிகிறேன்.

அதே சமயம் தனியாருக்கான வாய்ப்புக்கள் எதுவரை அல்லது அரசு கட்டுப்பாடுகள் எதுவரை என்பது ஒரு முடிவில்லாத கேள்வியாகவே இருக்கின்றது.

நன்றி!

cheena (சீனா) said...

அன்பின் வால்

நல்ல முறையில் அலசி ஆய்ந்து எழுதப்பட்ட கட்டுரை. அமெரிக்காவைன் உண்மை நிலை இன்னும் உணரப்பட வில்லை. இத்தனைக்குப் பிறகும் அவர்கள் தான் பெரிய அண்ணன்களாக இருக்கிறார்கள்

நல்ல கட்டுரை நல்வாழ்த்துகள்

நேசமித்ரன் said...

மிகத் தேவை ஆனதும் பிரதானமனதுமான இடுகை தெளிவான பார்வை அருண் சார்

K.R.அதியமான் said...

மேலோட்டமான பதிவு. மொக்கை என்றும் சொல்லாம்.

வால் பையன், ஈரோட்டில் இன்று மிக கடுமையான போக்குவரத்து நெரிசல். இதர ஊர்களிலும் தான். காரணம் போதிய public transport இல்லை.
பார்க்க :

http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_5704.html
போக்குவரத்து நெரிசலும், சோசியலிசமும்

1990களுக்கு முன் தொலைகாட்சி சேவைகள், தொலைதொடர்பு சேவைகள் அரசின் மோனோபலியாக இருந்தது. தனியார்களே இல்லை. அன்றைய நிலைமையும், இன்றைய நிலைமையும் ஒப்பிட்டாலே புரியும். அதை பற்றி விரிவாக படித்து பாருங்க. பெரியவர்களை கேட்க்கவும்.
இன்று மிக சுலபமான தொலை தொடர்பு, மிக மலிவான விலையில். அன்று இதை கற்பனை கூட செய்ய முடியாது.

வெற்றி-[க்]-கதிரவன் said...

//ஒரு நாடு முழுக்க முழுக்க கம்யூனிஷ நாடாக இருந்தாலும் ஆப்பு தான், முதலாளித்துவ நாடாக இருந்தாலும் ஆப்பு தான்//

100%

-:)

கிருஷ்ண மூர்த்தி S said...

/அன்பின் வால்

நல்ல முறையில் அலசி ஆய்ந்து எழுதப்பட்ட கட்டுரை. /

சீனா சார் ஏதோ பேங்குல இருக்குற மாதிரிக் கேள்விப்பட்டேனே!

அமெரிக்காவுக்கு முன்னாலேயே காகிதப் பணத்தை ஓவர்டைம் வேலை செய்து அச்சடித்தது இந்தியா தானும், கொஞ்சம் ஒய்வு கொடுக்கற மாதிரி, பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ அப்புறம் உள்ளூர் வெளியூர் வாழ் மக்கள், அரசுக்கு அச்சடித்துக் கை வலிக்கும் என்று ஆதூரத்துடன் என்று தாங்களும் இரு கை கொடுத்துக் கொண்டிருப்பது வால்பையனுக்குத் தான் தெரியாது, வங்கியாளரான உங்களுக்குமா?

Keynesian economics பற்றி வால் பையனுக்குக் கத்துக் கொடுப்பீங்கன்னு பாத்தா, நீங்க வாலை இன்னமும் முறுக்கி விடறீங்களே! நியாயமா?

K.R.அதியமான் said...

அமெரிக்க பொருளாதாரம் இன்று மிக மெதுவாக மீண்டு வருகிறது. இந்த பொருளாதார மந்தம் உருவாக காரணிகள் மிக சிக்கலானவை. அதை பற்றிய ஆங்கில பதிவு :

http://athiyaman.blogspot.com/2009/08/financial-crisis-no-capitalism-as-usual.html

http://athiyaman.blogspot.com/2009/04/distortions-in-money-markets-due-to.html

http://athiyaman.blogspot.com/2009/04/how-to-turn-recession-into-depression.html

இந்திய போக்குவரத்து துறை பற்றிய எமது விரிவான ஆங்கில பதிவு :

http://athiyaman.blogspot.com/2009/01/mtc-bus-serives-unable-to-meet-rising.html

வால்பையன் said...

@ அதியமான்!

வாங்க தல, நீங்க என் ப்ளாக் பக்கம் வந்தே ரொம்ப நாளாச்சு, உங்களை வரவழைக்க என்னவெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு,

மேலோட்டமா பார்த்தா அது மொக்கை தான், ஆனா நான் முதலாளித்துவத்துக்கு எதிராக அல்லது முழு கம்யூனிஷத்துக்கு ஆதரவாக எழுதவில்லை.

ரிலையன்ஸுக்கு எதிரான தீர்ப்பு பற்றி அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்,

கூட்ட நெரிசலுக்கு தனியார் தேவை தான், ஆனால் முழுக்க முழுக்க தனியார் மக்களுக்கு ஆப்பு தான் என்பதே என் கருத்து!

வால்பையன் said...

@ அதிகமான்!

ஆங்கிலசுட்டியில் இருப்பது நண்பர்களுக்கு படிக்க உதவலாம், ஆனால் எனக்கு!?

இன்னோரு சந்தேகம்,

நீங்கள் முதலாளித்துவத்துக்கு ஆதரவா அல்லது அமெரிக்காவுக்கா?

ரஷ்யாவும் முதலாளித்துவத்துக்கு மாறி கொண்டிருக்கிறது என்று தானே எழுதியிருக்கிறேன், ஆனா நீங்க ஏன் நாட்டாமைக்கு மட்டும் சப்போர்ட் பண்றிங்க?

வேறு எதாவது ஸ்பெஷல் காரணம்!?

sriram said...

வாலு,
கட்டுரை ஒரு தலை பட்சமாகவும், அரை வேக்காட்டுத் தனமாகவும் இருக்கிறது.
வங்கிகளை நாட்டுடமை ஆக்கியது நல்ல விஷயம் - இதைத் தவிர எல்லாமே உங்களின் கண்மூடித் தனமான அமெரிக்க எதிர்ப்பையே காட்டுகிறது.

ஃபோர்ட் கம்பெனி Public Transport system த்தை அழித்தது உண்மையே, ஆனால் இன்னும் பல நகரங்களில் சிஸ்டம் நல்லாவே இருக்கு (பாஸ்டன், நியூயார்க், நியூ ஜெர்ஸி இன்னும் பல நகரங்களில் பலர் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டை நம்பி இருப்பதை பார்க்கிறேன்)

சாதாரண மனிதன் வாழ்வதற்கு லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை - அமெரிக்காவில் - ஏன் அதை எழுத மறந்தீர்கள்?
உங்களுக்கு பிடித்த சப்ஜெக்ட் - ஜாதி வேற்றுமையின்மை - அமெரிக்காவில் மிக மிக கம்மி - இதை எழுத மறந்தது ஏனோ?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வால்பையன் said...

@ ஸ்ரீராம்

அமெரிக்கா மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை, அதன் பொருளாதாரத்தை பற்றி மட்டுமே உரையாடல் இங்கே!

லஞ்சம்-சாதி-முதலாளித்துவம் என்ன சம்பந்தம்னு தெரியல!

நான் அரைவேக்காடு தான் கொஞ்சம் முழுசா வேக வச்சிங்கன்னா பரவாயில்லை!

VISA said...

ஏற்கனவே பேசப்பட்ட பழைய சமாசாரம் என்றாலும் உங்கள் பாணியில் படிப்பது அருமையாக இருந்தது.
இது போன்ற பதிவுகளை மேலும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

VISA said...

unga karuthukalil silavatril enaku udanpaadu illai. piragu eluthukirean.

தமிழ் அஞ்சல் said...

தல நல்ல கருத்து ...
அமேரிக்கா காரனுக்கு அடி சறுக்கியதை அழகாக விவரித்திருக்கிறீர்கள்..

Anbu said...

நல்ல பதிவு அண்ணே..

அத்திரி said...

அருமையான அலசல் வால்

Jawahar said...

நல்ல அனலிசிஸ். கம்யூனிசத்தை விட காபிடலிசம்தான் தொழில் வளர்ச்சிக்கு உகந்தது என்பது என் தாழ்மையான கருத்து. அமெரிக்காவில் ஏற்பட்ட தொழில் துறை வீழ்ச்சிக்கு அவர்களுடைய inordinate outsourcing தான் காரணம். இதனால் அவர்கள் வாணிபம் செய்த நாடுகளின் கரென்சிக்கு எதிரான டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைய நேரிட்டது. அதனால்தான் ஒபாமா outsourcing ற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க நேரிட்டது.

http://kgjawarlal.wordpress.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பதிவு.நல்ல கருத்து.

அப்பாவி முரு said...

என்னண்ணே இந்த அலசு அலசுறீங்களே, சர்ப், நிர்மா -வுக்கெல்லாம் போட்டியாக ஆசையோ??

வா(ல்)ழ்த்துகள்

sriram said...

தல
மொதல்ல ஒண்ணு சொல்லிடறேன்..
நான் உங்கள அரை வேக்காடுன்னு சொல்லவே இல்ல. உங்க கருத்துதான் அரை வேக்காட்டுத்தனமாக இருக்குன்னு சொன்னேன். அருணையும் அருணின் கருத்தையும் வேறு படுத்திப் பார்க்கும் பக்குவம் எனக்கு கண்டிப்பா இருக்கு..
உங்க பதில பாத்தா, நீங்க என்னோட கருத்த பர்சனலா எடுத்துகிட்ட மாதிரி இருக்கு - எனவே இந்த டிஸ்கி..

Coming to the point(s) உங்க பதிவு அமெரிக்காவுக்கு எதிரா இருந்த மாதிரி எனக்கு பட்டது, அதனாலத்தான் ஜாதி, லஞ்சம் பத்தியெல்லாம் சொன்னேன்..

பொருளாதாரம் பத்தியெல்லாம் பேச எனக்கு அருகதை கிடையாது. எனக்கு தெரிஞ்சத சொல்றேன். ஜவகர் சொன்னா மாதிரி வளர்ச்சிக்க்கு கம்யூனிசத்தை விட காபிடலிஸம் பெட்டர்னு நான் நெனைக்கிறேன். கம்யூனிசம் கிட்ட தட்ட செத்தே போச்சு. ஒரு முறை பேசும் போது சொன்னேன் ஞாபகம் இருக்கா? இன்னும் 9 மாசத்தில் அமெரிக்க பொருளாதாரத்தில் மாற்றம் வரும்னு?
கன்னா பின்னான்னு கடன் கொடுத்தது மடத்தனம், அதையும் மீறி மக்களின் Spending Culture அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்கும்..
இன்னும் ஆன்லைன்ல வந்தீங்கன்னா பேசலாம், இல்லன்னா போன் பண்றேன்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வால்பையன் said...

//உங்க பதிவு அமெரிக்காவுக்கு எதிரா இருந்த மாதிரி எனக்கு பட்டது, அதனாலத்தான் ஜாதி, லஞ்சம் பத்தியெல்லாம் சொன்னேன்..//

பொருளாதாரம் வீழ்ச்சியடைய மிக முக்கிய காரணியா இருந்தது அமெரிக்கா தான் என்பது என் கருத்து, அதனால் தான் அமெரிக்காவை பற்றி எழுத வேண்டியிருந்தது! அதே நேரம் ஒரு சில விசயங்களை வைத்து மொத்த அமெரிக்காவையும் எதிர்க்கும் நோக்கத்திலும் நான் இல்லை!

//ஜவகர் சொன்னா மாதிரி வளர்ச்சிக்க்கு கம்யூனிசத்தை விட காபிடலிஸம் பெட்டர்னு நான் நெனைக்கிறேன்.//

தவறு என்று நானும் சொல்லலயே தல! தற்சமயம் ரஷ்யா கேப்படலிஷத்துக்கு மாறுவதையும் சுட்டி காட்டியுள்ளேனே! நான் குறிப்பிடுவதெல்லாம் ரிலையன்ஸ் மாதிரியான கம்பெனிகளுக்கு முழு அதிகாரம் கொடுத்தால் நமக்கு மொத்தமாக ஆப்பு என்பது தான்!

//கம்யூனிசம் கிட்ட தட்ட செத்தே போச்சு//

சாகட்டுமே தல! நான் சொல்வது அரசின் மேற்பார்வை மட்டுமே!

//ஒரு முறை பேசும் போது சொன்னேன் ஞாபகம் இருக்கா? இன்னும் 9 மாசத்தில் அமெரிக்க பொருளாதாரத்தில் மாற்றம் வரும்னு?//

இன்றும் வேலையில்லாதோர் தினம் தினம் அதிகரிக்கிறார்கள்!

//இன்னும் ஆன்லைன்ல வந்தீங்கன்னா பேசலாம், இல்லன்னா போன் பண்றேன்.//

எனக்கு மட்டும் புரிந்தால் போதுமா தல! என்னை போல் எத்தனை பேர் நினைத்து கொண்டிருப்பார்கள், உரையாடலை பொதுவிலேயே வைத்து கொள்ளலாமே!

hariharan said...

"கம்யூனிசத்தை விட காபிடலிசம்தான் தொழில் வளர்ச்சிக்கு உகந்தது என்பது என் தாழ்மையான கருத்து. "

capitalism will produce the product only with profits. it can be useful for humans or not no problem. profit ! more profit!!

socalism / communism only produce people NEEDS! not unwanted ! unwanted products make thw world polution.

K.R.அதியமான் said...

வால்,

’அமெரிக்கா’ என்றால் எதை சொல்றீக ? மக்களையா, நிறுவனங்களையா, அரசியல்வாதிகளையா, ஊடகங்களையா, கொள்கைகளையா ?
கண்மூடித்தனமான எதிர்ப்பு அல்லது ஆதரவு அளிக்கவில்லையே.

உங்க தலைப்பே தவறு. கம்யூனிசம் எங்கும் இன்று இல்லை. (எப்போதும் தூய, இறுதி நிலை கம்யூனிசம் வந்ததில்லை என்கின்றனர் தோழர்கள்). காபிடலிசம் என்பதும் இன்று vagueஆன சொல். பல ரகங்கள், வேறுபாடுகள், பாணிகள், அளவுகள் உள்ளன. ஜனனாயக பாணி மற்றும் சர்வாதிகார பாணிகளும் உள்ளன.

இரண்டுகெட்டான் நிலை வேண்டும் என்றும் சொல்கிறீர்கள். அதாவது ஜனனாயக பாணி ‘சோசியலிசம்’ அல்லது mixed economy ; அதை பல ஆண்டுகள் பரிசோதித்துதான் சீரழிந்தோம். பார்க்க :

http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_2745.html
நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது

அமெரிக்க பாணி, சரியான சந்தை பொருளாதாரம் அல்ல. ஜெர்மனி, நெதர்லாந் மாடல்களை சொல்லாம்.

அமெரிக்க வெளியுறவு கொள்கைகள் வேறு விசியம். அதி்ல் மிக தவறான கொள்கைகள் உண்டு. அதற்க்கா மொத்த ’அமெரிக்காவை’ எதிர்க்கவோ அல்லது ஆதரிக்கவோ செய்ய வேண்டாமே. issue based ஆக செயல்படுவதே சரியாகும்.

பொருள் போக்குவரத்து துறை : அதாவது லாரி மற்றும் டெம்ப்போக்கள் விசியம் ; இதில் பெரிய சிக்கல்களோ, பற்றாகுறைகளோ, ஊழல்களோ இல்லையே. முழுவதும் தனியார் வசம். அதே சாலைகளில்தான் பயணம். ஆனால் பஸ் போக்குவரத்து துறையில் இத்தனை பற்றாக்குறை மற்றும் கடும் ஊழல். ஏன் ? பதில் சொல்லுங்களேன்.

ஆன்லை டிரேடிங்கில் கில்லாடியான நீங்க, ஆங்கில பதிவுகள் புரிவதில்லை என்று கதைப்பது escapism. மிக சுலபமாக புரியும். டபாய்க்காதீங்க.

K.R.அதியமான் said...

ஜவகர்,

//அமெரிக்காவில் ஏற்பட்ட தொழில் துறை வீழ்ச்சிக்கு அவர்களுடைய inordinate outsourcing தான் காரணம். இதனால் அவர்கள் வாணிபம் செய்த நாடுகளின் கரென்சிக்கு எதிரான டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைய நேரிட்டது. அதனால்தான் ஒபாமா outsourcing ற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க நேரிட்டது.///

இல்லை. தவறான அனுமானம். நிதி நிறுவனங்களின் மிக தவறான விதிமுறைகள் மற்றும் credit to subprime borrowers, fuelled by cheap credit and govt subsidies : இவையும் முக்கிய காரணிகள். outsourcing எந்தவிதத்திலும் காரணமில்லை. ஒபமா அதை கட்டுபடுத்தவம் இல்லை. முடியவும் முடியாது. இன்றும் தொடர்கிறது.

மேலும் பார்க்க :

Who murdered the financial system?
by Swaminathan S. Anklesaria Aiyar
http://www.swaminomics.org/articles/20081022.htm

வால்பையன் said...

//ஆன்லை டிரேடிங்கில் கில்லாடியான நீங்க, ஆங்கில பதிவுகள் புரிவதில்லை என்று கதைப்பது escapism. மிக சுலபமாக புரியும். டபாய்க்காதீங்க. //

சத்தியமாக பொய் சொல்லவில்லை!

படித்தால் முழுமையான அர்த்தத்துடன் புரியவேண்டும், அரைகுறையாக புரிய கடினபட்டு தான் நான் ஆங்கில பதிவு பக்கம் போவதில்லை!

ஆன்லைன் ட்ரேடிங் வெறும் நம்பர் தான், எல்லா நாட்டுகாரர்களும் பொது!

Romeoboy said...

முதலாளிதுவம் என்பது யாதெனில் ஒரு முட்டை போண்டாவை செய்தவன் மற்றவர்களிடம் அதை காமித்துவிட்டு அவர்கள் அதை சாப்பிட நினைக்கும் போது அதை அவனே அவர்கள் முன்னிலையில் அவனே சாப்பிடுவது.

இந்த வாரத்துக்குகாண சூடான போண்டா வால் பதிவில் இருக்கிறது..

Romeoboy said...
This comment has been removed by the author.
Indian said...

http://www.crisisofcredit.com/

Watch the nice video.

அது சரி(18185106603874041862) said...

முக்கியமான விஷயத்தை பற்றி நல்லதொரு இடுகை...

NILAMUKILAN said...

சரியான நேரத்தில் எழுதப்பட்ட மிகச்சரியான பதிவு. கம்யுனிஸ்டுகளே தங்களை அடகு வைத்து கொண்டிருக்கிறார்கள், மற்ற அரசியல் கட்சிகளிடம். அப்புறம் எப்டி இங்க கம்யுனிசம் பேச.. எல்லாம் கலிகாலம்சாமி.

பெசொவி said...

உண்மைதான்....ஆயிரம் ஊழல் புகார்கள் சொன்னாலும், அரசின் கையில் சில துறைகள் இருப்பதுதான் மக்களுக்கு நல்லது. தனியார்மயத்தில் ஊழலே இருக்காது என்று வாதிடும் சிலருக்கு monopolyயின் கொடூர விளைவுகளைப் பற்றி தெரியவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

Jawahar said...

நன்றி அதியமான், நீங்கள் சொல்லியிருப்பது போலவே அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பற்றிய என் கருத்துக்கள் அனுமானங்களே. ஏனெனில் என் பொருளாதார ஞானம் ரொம்ப சொற்பம். ஆனால் அனுமானங்களை ஒரு FMEA வின் அடிப்படையில் செய்திருக்கிறேன். சந்தேகமில்லாமல் நீங்கள் சொன்ன credit தொடர்பான தவறுகள்தான் காரணம். ஆனால் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டது எப்படி என்கிற சிந்தனைக்குக் கிடைத்தவிடைதான் நான் சொன்ன காரணங்கள். அதாவது, நீங்கள் சொன்னவற்றை effect என்று வைத்துக் கொண்டு ஒரு படி மேலே போய் அதன் cause என்ன என்று பார்க்க முயன்றேன். இதர நாடுகளுடன் அளவுக்கதிகமான ஒரு வழி வாணிபத்தில் ஈடுபடுகிற போது நாட்டுக்குள் புழக்கத்தில் இருக்கும் டாலர்களின் அளவு இதர நாட்டில் இருக்கும் டாலர்களை விடக் குறைகிறது. இதனால் பணம் குறைவாகவும் பொருட்கள் அதிகமாகவும் இருக்கிற deflation சூழல் ஏற்படுகிறது. விலைகளையும் கடனுக்கான வட்டி விகிதங்களையும் குறைக்கா விட்டால் இது போன்ற சூழலில் பொருளாதாரச் சமநிலையை கொண்டு வர முடியாது. அதைத்தான் அமேரிக்கா செய்தது.

மறுபடி சொல்கிறேன், பொருளாதாரம் தெரிந்தவர்களோடு நான் விவாதத்தில் ஈடுபடும் போது நேருவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட ராஜ்நாராயண் மாதிரி சிங்கத்தைக் குறி வைத்து அம்பு தவறினாலும் வருகிற சந்தோஷம் எனக்கு வரும்.

(அருண் : நீஈண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்)

http://kgjawarlal.wordpress.com

ரோஸ்விக் said...

பதிவும், பின்னூட்டமும் பல விஷயங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் உள்ளது...நான் ஓட்டளித்து பலருக்கு தெரியப்படுத்துகிறேன். :-)

நன்றி தல (வால்).

Anonymous said...

நல்ல பதிவு.. நிறைய விரிவான விளக்கம்...

ஆ.ஞானசேகரன் said...

//தனியாருக்கும் வாய்ப்பு வழங்கலாம் ஆனால் அரசின் கட்டுபாடு இருக்க வேண்டும்,//

கண்டிப்பாக நண்பரே... நல்ல அலசலுடன் கூடிய இடுகை. பாராட்டுக்கள் நண்பா.... இதுபோல அலசலகள் வரனும்...

Itsdifferent said...

The current world events prove few things. No system is perfect, if there are no proper checks and balances, people's greed etc.
As lot of people have said before me, without private investments in many fields, most of the innovations would not have happened. With all due respects, your analysis are very premature.
US for all its flaws, is still the only nation in the world which is going to standup, when there is any atrocities across the world. The fundamentals in the country is so strong, none of these failures is going to shake up the democracy in this country. This is where still the major innovation happens, thats mainly due to the individual freedom and opportunities that are provided by these fundamentals. Remember I am not saying the US is perfect, if you want to see somewhat closer to perfect society, look at the Indian diaspora in the US, which is very conservative in nature, who even though we are in the US, we are not that crazy to spend huge amounts beyond our means, have utilized the system perfectly to enhance our lives, innovate. In most of the fields in the US, Indians have been playing great role in so many discoveries, which I very much doubt would have been possible, if we stayed back home. Why? because, for all the positive things of India, we do not have means to nurture this intelligence to the benefits of the humanity. There are few other diaspora, here, who are not greedy, are doing well in many aspects.
So bottom line is, it is the individual and their characters who form the society or the nation, determines, whether the system performs well or deteriorates.

வெண்ணிற இரவுகள்....! said...

"முழுக்க முழுக்க கம்யூனிஷ நாடாக இருந்தாலும் ஆப்பு தான், முதலாளித்துவ நாடாக இருந்தாலும் ஆப்பு தான்" தல kalakal .உண்மை தான்

பீர் | Peer said...

பின்னூட்டங்கள் பல புதிய தகவல்களைத் தருகிறது.

எறும்பு said...

எங்க சொள் அளகன கானும்

Rajeswari said...

தெரிந்த விசயங்கள் ஆனாலும் பகிர்வுக்கு நன்றி...


பின்னூட்டங்களிலும் நிறைய விசயங்கள்...நன்றி

அகல்விளக்கு said...

பதிவு நல்ல அலசல் தல...

பின்னூட்டங்கள் கூட நல்ல விவாதத்தை ஏற்படுத்துகிறது.

Unknown said...

எல்லா பின்னோடத்தையும் சேர்த்த ரெண்டு மூணு பதிவே போற்றலாம் போல இருக்கே...

S.A. நவாஸுதீன் said...

வளர்ந்த வல்லரசு நாடுகளில் வங்கிகள், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், அன்னிய தொழில் கூடங்கள், ஆலைகள், தொழிற்சாலைகள் அனைத்தும் நாட்டுடைமையாகின்றன. இங்கே நாட்டுடைமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் தனியாருக்குப் பட்டா போட்டுக் கொடுக்கப்பதற்கு யோசித்து வருகிறார்கள். அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் நாளுக்கு ஒன்றாக நரகத்தில் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. எஞ்சியிருக்கின்ற தனியார் துறையை எப்படிக் காப்பது என்று அங்கே (அடுத்தவர்) தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கே தனியார் துறைதான் மாமருந்து என்று நம்மவர்களின் கணிப்பு.

இதை என்னோட ஒரு பதிவில் நானும் மேலோட்டமா சொல்லி இருக்கேன் தல. நீங்க கொஞ்சம் டீப்பா சொல்லி இருக்கீங்க. நல்ல அலசல்.

அன்பேசிவம் said...

அண்ணே வணக்கம், நல்ல பதிவு. தேவையானதும் கூட, இதை அப்படியே தொடர்பதிவாக எழுதச்செய்யலாமே? சக பதிவர்களை. என்னை பொருத்தவரை, கம்யூனிசம் ஒரு சுத்தி மாதிரி, ஆணி அடித்ததும் அல்லது பிடுங்கியது, மறுபடி அதன் தேவை வரும்வரை ஒரு ஓரத்தில் வைத்துவிட வேண்டும்.

K.R.அதியமான் said...

oru repeat question to Vaalpayyan :

பொருள் போக்குவரத்து துறை :
அதாவது லாரி மற்றும் டெம்ப்போக்கள் விசியம் ; இதில் பெரிய சிக்கல்களோ, பற்றாகுறைகளோ, ஊழல்களோ இல்லையே. முழுவதும் தனியார் வசம். அதே சாலைகளில்தான் பயணம். ஆனால் பஸ் போக்குவரத்து துறையில் இத்தனை பற்றாக்குறை மற்றும் கடும் ஊழல். ஏன் ? பதில் சொல்லுங்களேன்.

வால்பையன் said...

@K.R.அதியமான்

//பொருள் போக்குவரத்து துறை :
அதாவது லாரி மற்றும் டெம்ப்போக்கள் விசியம் ; இதில் பெரிய சிக்கல்களோ, பற்றாகுறைகளோ, ஊழல்களோ இல்லையே.//


தனியார் துறையெல்லாம் பெரிய யோக்கிங்ககிற மாதிரி இருக்கு இந்த வாசகம், தனியார் வாகனங்கள் தமது தவறை மறைக்க கொடுக்கும் லஞ்சமே மொத்த ஊழலுக்கும் காரணம், ஒவ்வோரு மாநில நெடுஞ்சாலையிலும் தனியார்துறை வாகனங்களை சோதனையிடுகிறார்கள், ஆனால் எல்லாமே லஞ்சத்தில் தப்பித்து கொண்டு தான் இருக்கிறது, பின் எங்கிருந்து பிரச்சனை வெளியே தெரிய போகிறது!? பெர்மிட் இல்லாமால் ஓடுவது, எஃப்.சி காட்டாமால் ஓட்டுவது என்று இந்தியா முழுவதும் கோடி கணக்கில் வாகனங்கள் இருக்கிறது! வெளியே தெரியவில்லை என்பதற்காக புற்றுநோய் இல்லையென்றாகிவிடாது!


அரசு பேருந்துகள் தற்பொழுது எலக்ட்ரானிக் பில்லிங் முறை கொண்டு வந்திருக்கிறது, ஆள் போகாதா இடத்திலும் போக கூடிய ஒரே சேவையாக இருக்கிறது, சில அரசியல் முதலாளிகளால் மேன்மையடையாமல் இருக்கிறது, இனிமேல் அரசியல்வாதிகள் போக்குவரத்து தொழிலில் இறங்கக்கூடாதுன்னு சொல்லுங்க, போக்குவரத்து தங்கமா மாறிடும்!

மாற்றத்திற்கு வழி தேடுவது பற்றி நான் யோசிக்கிறேன், மதவாதிகளை போல் எல்லாமே முதலாளிகளால் தான் முடியும்னு நீங்க யோசிக்கிறிங்க, கம்யூனிஷத்துக்கு எதிரி என்பதற்காக முதலாளித்துவத்துக்கு ஜால்ரா போடுவது பயங்கர ஆபத்து!

Tamil Home Recipes said...

அடேயப்பா

Valaignan said...

Dear tailboy,
I find that you are responding here freely with those who have posted their views.I have been posting a mail on a movie but you have not acknowledged it even.Is there any reason?
I would not like to post if none offer their comments (both for and against are welcome but silence is not).Generally I find that interaction is lacking in most of the Tamil blogs
Thanks

வால்பையன் said...

//.I have been posting a mail on a movie but you have not acknowledged it even.Is there any reason?//

அந்த படத்தை பார்த்து மொத்தமாக விமர்சனம் எழுதி, அதை சொன்னதற்காக பதிவிலேயே நன்றி சொல்லலாம் என்று இருந்தேன் தல!

விடுமுறை தினத்தில் தான் பார்க்க முடியும் தல படம்!

Rajan said...

கும்பி கூழுக்கு அழுதுதாம் .... கொண்டை பூவுக்கு அழுதுதாம் ....

K.R.அதியமான் said...

வால்,

தனியார் துறையினர் பெரிய யோக்கியர்கள் என்று சொல்லவில்லை.
இந்தியாவில், ஊழல் பரவி கிடக்கிறது. தனியார் துறைகள் விதிவிலக்கல்ல. ஆனால் அரசு துறைுகளின் ஊழல்களுக்கான cost அய் சுமப்பது வரி கொடுக்கும் மக்கள். இது ஒன்றுதான் வித்தியாசம்.
எனது தமிழ் சுட்டிகளை படிக்கவில்லை போல.

சரி, நான் சொல்ல வந்த அடிப்படை விசியத்தை புரிந்து கொள்ளவில்லை நீங்க. பற்றாக்குறை. அதாவது SHORTAGE OF BUSES AND ALL FORMS OF PUBLIC TRANSPORT FOR PEOPLE. ACUTE SHORTAGE. ஆனால், பொருள் போக்குவரத்து துறையில் பற்றாக்குறை இல்லை. ஏன் ?

பஸ்கள் பற்றாமல், மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். கூட்டம் மிக மிக அதிகம். கிரம்ப்புர பஸ்களிலும் தான். ஏன் ? தேவைக்கேற்ப்ப போதிய பஸ்கள், மினி பஸ்கள், வேன்கள் ஏன் இயக்கபடுவதில்லை ? எந்த கொள்கை அதை தடுக்கிறது. டிராக்டர்களிலும், டெம்போக்களிலும், திறந்த மினி ஆட்டோக்களிலும் மக்கள் பல இடங்களில் கூட்டமாக பயணிப்பது சகஜம். கிரமாப்புர திருவிழாக்களில் போதும் அதிகம். சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பல வேலைகளுக்கு கூலி தொழிலாளர்கள் இப்படி மிருகங்களைப் போல டெம்போக்களில், மினி வண்டிகளில், அடைத்து செல்லப்பட்டு கொண்டு செல்லப்படுவது ஏன் ? அவர்களுக்கு மலிவான பஸ்கள் அல்லது மினி பஸ்கள் அல்லது பயணிகள் செல்லும் வேன்கள் ஏன் கிடைப்பதில்லை. அல்லது பத்தவில்லை. அப்படியே கிடைத்தாலும், கட்டணம் அதிகம். ஏன் ? ஏன் ? ஏன் ?

ஆனால் பொருள் போக்குவரத்து துறையில் (ஊழல்கள் வேறு விசியம்) எத்தனை டன் பொருட்களையும், எங்கிருந்தும், எந்த மூலைக்கும் மிக சுலபமாக, குறைந்த வாடகையில் கொண்டு செல்ல முடிகிறது. எப்படி ? அங்கு ஏன் பற்றாக்குறை இல்லை. அதாவது SHORTAGE OF SUPPLY TO MEET THE EVER RISING DEMAND.

Rajan said...

//யணிகள் செல்லும் வேன்கள் ஏன் கிடைப்பதில்லை. அல்லது பத்தவில்லை. அப்படியே கிடைத்தாலும், கட்டணம் அதிகம். ஏன் ? ஏன் ? ஏன் ?//

அடிங்கண்ணா ! அடிங்கண்ணா !

வளச்சு வளச்சு அடிங்கண்ணா !

வலைஞன் said...

இத, இத, இததான் நான் எதிர்பார்த்தேன்!
மிக்க நன்றி வால்!
என்ன,கொஞ்சம் (நீங்க) பொழுதோட சொல்லியிருந்தா, (நானும்) spamming ஐ
தவிர்திர்க்கலாம்!!
அப்பொறம்,நம்ம நண்பர் திருப்திக்கு:
Capitalism is where "man exploits man",
whereas Communism is the other way about it!
so கொண்டையும் கூழுக்கு அழுதாச்சு!
;-))

வால்பையன் said...

//பொருள் போக்குவரத்து துறையில் பற்றாக்குறை இல்லை. ஏன் ?//


ஆட்களை ஏற்றி செல்வது போல் எல்லா பொருள்களையும் ஒரே நேரத்தில் ஏற்றி செல்ல வேண்டுமென்றால் எல்லாவற்றிக்கும் பற்றாகுறை வரும்.

மேலும் சரக்கு வாகனத்திற்கும், ஆட்கள் ஏற்றி செல்லும் வாகனத்திற்கும் உள்ள மெய்ண்டனன்ஸ் செலவீனங்கள், விதிமுறைகள் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும், சும்மா பற்றாக்குறை என்று அளவுக்கதிகமான வாகனக்களுக்கு அனுமதியளித்தால் காத்து வாங்க வேண்டியது தான்!

எந்த ரூட்டிலும் காலை எட்டு மண்யிலிருந்து 11 மணி வரை, மாலை 4 மணீயிலிருந்து 7 மணீ வரை தான் கூட்டம் அதிகமாக இருக்கும், அப்போது மட்டும் வாகனங்களை அதிகபடுதினாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்படும்!

குசும்பன் 30 கிலோமீட்டர் கடக்க காலை 5 மணிக்கு கிளம்புவாராம் 8 மணிக்கு சென்றடைவாராம்!
கேக்கவே நல்லாயிருக்குல்ல, அங்க அரசு பேருந்து அதிகமாயில்ல, ஒன்லி பிரைவேட் டாக்ஸி


மினி பஸ்கள், சேர் ஆட்டோக்கள் இயங்கி கொண்டு தான் இருக்கின்றன, பற்றாக்குறையை பற்றி பேசும் முன் ஒரு மினி பஸ் காரணிடம் இன்னும் ரெண்டு பஸ் விடு நல்லா போகும்னு சொல்லி பாருங்க!

சரக்கு போக்குவரத்தில் நேரம் பெரிய பொருட்டல்ல, ஆனால் ஆட்கள் அப்படி காத்திருக்க முடியாது!,

இதெல்லாம் தெரியாமத் தான் கேக்குறிங்களா, இல்ல போட்டு வாங்குறிங்களா?

வலைஞன் said...

பணக்காரர்கள் உண்மையான நிம்மதியுடனும்,ஏழைகள் உண்மையான சங்கடங்களுடன் வாழ்வது capitalism

பணக்காரர்கள் போலியான சங்கடங்களுடன்,ஏழைகள் போலியான நிம்மதியுடனும் வாழ்வது communism

இரு தரப்பினரும் உண்மையான சங்கடங்களுடன் வாழ்வது socialism

ரவி said...

மேலோட்டமான பதிவு. மொக்கை என்றும் சொல்லாம். ///////////

அதியமான் சார். நீங்க வால்பையனை புரிஞ்சுக்கிட்டது இவ்ளாதானா ???

அடலேறு said...

நல்ல விவரனை

குசும்பன் said...

//போக்குவரத்து துறையை ஒரு பிரபல மோட்டார் நிறுவனம் தன் வசமாக்க அரசை அணுகியது, பெட்டி நகர்ந்ததோ அல்லது மூளை மழுங்கிய அமைச்சர்களோ அதை தனியார்துறைக்கு தாரைவார்த்தார்கள்! //

நல்லவேளை விமானபோக்குவரத்தை தனியார் வசம் ஒப்படைக்கவில்லை!:))))

Anonymous said...

நல்ல பதிவு அண்ணே..

Anonymous said...

நல்ல பதிவு அண்ணே..

Anonymous said...

// எறும்பு said...

எங்க சொள் அளகன கானும் //

தள சீரியஸ பதிவு போட்டும் போது வந்து உலறக் கூடாதுன்னு வறாதிறப்பேன்.
சறக்கு கவிதை போடா புடிக்காது அதனால வறாதிறப்பேன்.

சிரு வின்னப்பம்: என் பெயறை தவரில்லாமல் எலுதவும். "சொள் அலகன்" என்றால் மரங்கொத்தி என்று தூய தமிழில் அற்த்தம்

அப்துல்மாலிக் said...

ஒரு அலசல் ரிப்போர்ட் தல‌

வரவேற்கிறேன்

Kumky said...

அமெரிக்கா ..ஒகே..

அதுக்கு பின் சொதப்பலா இருக்கே வால்ஸ்..?

இங்கயும் மொதளாலி வந்துட்டாரா?

கோவம் வந்தா அப்புறம் இங்லிபிச்சுலயே திட்டப்போறம்...ஆமா.

மேவி... said...

"Itsdifferent said...
The current world events prove few things. No system is perfect, if there are no proper checks and balances, people's greed etc.
As lot of people have said before me, without private investments in many fields, most of the innovations would not have happened. With all due respects, your analysis are very premature.
US for all its flaws, is still the only nation in the world which is going to standup, when there is any atrocities across the world. The fundamentals in the country is so strong, none of these failures is going to shake up the democracy in this country. This is where still the major innovation happens, thats mainly due to the individual freedom and opportunities that are provided by these fundamentals. Remember I am not saying the US is perfect, if you want to see somewhat closer to perfect society, look at the Indian diaspora in the US, which is very conservative in nature, who even though we are in the US, we are not that crazy to spend huge amounts beyond our means, have utilized the system perfectly to enhance our lives, innovate. In most of the fields in the US, Indians have been playing great role in so many discoveries, which I very much doubt would have been possible, if we stayed back home. Why? because, for all the positive things of India, we do not have means to nurture this intelligence to the benefits of the humanity. There are few other diaspora, here, who are not greedy, are doing well in many aspects.
So bottom line is, it is the individual and their characters who form the society or the nation, determines, whether the system performs well or deteriorates."


இதன் கருது என்ன வால்ஸ் ?????

மேவி... said...

வால்ஸ் ... இவ்வளவு எழுதி இருக்கீங்க ...... பொருளாதாரத்தின் கதை ன்னு ஒரு புக் இருக்கு தமிழில் கிடைச்ச வாங்கி படிங்க


(ஆமா நீங்க பொருளாதாரத்தின் அடியாள் படித்து விட்டதாக கேள்வி பட்டேனே )

மேவி... said...

1930 economic crisis.... case study padichu parunga.....


america vil sales yai porutha varaikkum push strategy thaan. athan intha gathi.....

neenga solli iruppathu FORD thane???

மேவி... said...

பொருளாதரத்தை பொறுத்த வரைக்கும் எல்லா கோட்பாடுகளை கலந்து நன்றாக மிக்ஸ் பண்ணி புதுசா ஒன்றை கண்டுபிடித்தால் தான் வரும் தலைமுறைக்கு நல்லது ....

அதே சமயம் எல்லோரும் CAUSE AND EFFECTS OF BRANDING யை படிக்க வேண்டும்

ஜெட்லி... said...

// ரிலையன்ஸ் முதலைகள் போன்ற பல தோன்றி நம்மை மீண்டும் ஒரு காலணிய அடிமைதனத்திற்கு கொண்டு செல்லும்!

//

மஞ்சள் விலை ஏற்றத்துக்கு
ரிலையன்ஸ் தான் காரணம்
என்று கேள்வி பட்டேன்...
ஒரு வேலை அது உண்மை
தான் என்றால் நாம் ரிலையன்ஸ்க்கு
அடிமையாக தான் இருக்கிறோம்....

நசரேயன் said...

பெரியவங்க நீங்க சொன்னா சரிதான்

மஞ்சரி said...

//இங்கேயிருந்து எடுத்து நமக்கே இயற்கை எரிவாயுயை விற்க முயன்ற ரிலையன்ஸ் முதலைகள் போன்ற பல தோன்றி நம்மை மீண்டும் ஒரு காலணிய அடிமைதனத்திற்கு கொண்டு செல்லும்//

ரொம்ப சரி

அரசு போக்குவரத்து துறையிலும் நெறைய குளறுபடி/மோசடி. PEEK HOURSல Deluxe பஸ்சாகவே வரும். நமக்கும் வேறு வழியில்லை. :-( (இல்லாவிட்ட்டால் ஆபீஸ் போன உடனே வாங்கி கட்டி கொள்ள வேண்டுமே). Deluxe பேருந்துகள் கட்டணம் சாதாரண கட்டணத்தை விட்ட ஒரு மடங்குக்கு மேல் அதிகம்.

கோவி.கண்ணன் said...

//@ அதியமான்!

வாங்க தல, நீங்க என் ப்ளாக் பக்கம் வந்தே ரொம்ப நாளாச்சு, உங்களை வரவழைக்க என்னவெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு,//

கம்யூனிசம் என்று எழுதி இருந்தால் அங்கே இவர் நின்று கொண்டு இருப்பார் போல !
:)

Gnanaputhran said...

KattRalin KEttale NanRu

A speech in You Tube in March 2008

http://video.google.com/videoplay?docid=4343898391323537541

Gnanaputhran said...

Vaal
If you explain with a story people can understand better

It goes like this
Heidi is the proprietor of a bar in Berlin. In order to increase sales, she decides to allow her loyal customers - most of whom are unemployed alcoholics - to drink now but pay later. She keeps track of the drinks consumed on a ledger (thereby granting the customers loans). Word gets around and as a result increasing numbers of customers flood into Heidi's bar. Taking advantage of her customers' freedom from immediate payment constraints, Heidi increases her prices for wine and beer, the most-consumed beverages. Her sales volume increases massively.
A young and dynamic customer service consultant at the local bank recognizes these customer debts as valuable future assets and increases Heidi's borrowing limit. He sees no reason for undue concern since he has the debts of the alcoholics as collateral. At the bank's corporate headquarters, expert bankers transform these customer assets into DRINKBONDS, ALKBONDS and PUKEBONDS. These securities are then traded on markets worldwide. No one really understands what these abbreviations mean and how the securities are guaranteed. Nevertheless, as their prices continuously climb, the securities become top-selling items.
One day, although the prices are still climbing, a risk manager (subsequently of course fired due his negativity) of the bank decides that slowly the time has come to demand payment of the debts incurred by the drinkers at Heidi's bar . However they cannot pay back the debts. Heidi cannot fulfil her loan obligations and claims bankruptcy. DRINKBOND and ALKBOND drop in price by 95 %. PUKEBOND performs better, stabilizing in price after dropping by 80 %. The suppliers of Heidi's bar, having granted her generous payment due dates and having invested in the securities are faced with a new situation.
Her wine supplier claims bankruptcy, her beer supplier is taken over by a competitor.
The bank is saved by the Government following dramatic round-the-clock consultations by leaders from the governing political parties. The funds required for this purpose are obtained by a tax levied against the non-drinkers. Finally an explanation I understand

Rajan said...

ஏன் தல ! நாம தமிழ்லயே தற்குறி இங்கிளிபீசுலஎல்லாம் கேட்டா நாம என்னதான் பண்ணறது ! :-((

Shrek said...

ever increasing demand.why?

POPULATION-a koraikkara vazhiya paarunga vennai-ngala

oruthanukkum budhi illa intha paazha pona naatla...

yethi vuttuttu pechukku mattum korachalilla...

india-la paakkara jadhagam, joshiyam, raasi kal, vasthu- kku inneram oruthana vidama ellarum maharaja-va illa irukkanum..

olagathula ithellam (joshyam..etc)paarthu ivanunga(indians) mattum thaan sirappaana vazkhai vaazharaanga...westerners idhellam nambathadhala ellam veena poitaanga...apdi thaane???

savathu moodhi...Kadavula nambara kootam innoru saabakkedu .....buddhi-nu onnu irukkey...atha konjamaavathu use pannanum-nu thonavey thonaadha..

evano, eppavo...sonnatha,ezhuthi vechatha....semmari aattu kootam maari kelvi kekkaama madathanamaa nambikittu........

nalla varuthu...

sorry vaal...padhivukku sambantham illama ezhuthiyatharku.

!

Blog Widget by LinkWithin