தனியார் புலனாய்வுத்துறை!

ஆணோ, பொண்ணோ நாம் அனைவருகுள்ளும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் இருக்கான்!, புலனாய்வு துறையில் இருந்தால் தான் அது முழுமை அடையும் என்பதில்லை!, ஒவ்வொரு செயலும் உளவியலும், தடவியலும் சம்பந்தபட்டது! ஏ.எக்ஸ்.என் டீவீயில் சி.எஸ்.ஐ மியாமின்னு ஒரு நிகழ்ச்சி வரும், அதுக்கு கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷன்னு அர்த்தம்!, இந்த மாதிரி பல பிரிவுகள் இருக்கு, இந்தியாவில் கூட அத்தனை பிரிவுகளும் இருக்கு ஆனாலும் ரொம்ப பேமஸா இருக்குறது தனியார் புலனாய்த்துறை அதற்கு பிரைவேட் டிடெக்டீவ்ன்னு ஆங்கிலத்தில் சொல்வாங்க.

சிறுவயதில் சிறுவர்மலர், அம்புலிமாமா, பாலமித்ரா படிக்கும் போதே நமக்குள் தூங்கி கொண்டிருக்கும் டிடெக்டீவ் விழிந்து கொள்வான்! பதின்மவயதில் ராஜேஸ்குமார் கிரைம் நாவல்கள் அதற்கு ஒரு உருவமே கொடுத்திருக்கும். இன்றும் யாராவது நான் ராஜேஸ்குமார் நாவல்கள் எதையுமே படித்ததில்லை என்று சொன்னால் ஆச்சர்யமாக பார்ப்பேன்!, தொடர்ச்சியாக அவரது நாவல்களை படிப்பவர்களுக்கு குற்றவாளியை கண்டுபிடிக்கும் திறன் ஓரளவுக்கு வந்திருக்கும், அதிகம் இல்லையென்றாலும் பத்துக்கு மூணு நானும் கண்டுபிடித்து விடுவேன்!, முதல் மூன்று அத்தியாயத்திலேயே அனைத்து கதாபாத்திரங்களும் வந்துவிடுவதால், குற்றம் நடந்த பின் குற்றவாளி யாராக இருக்கலாம் என்ற யூகம் நமக்குள் இருக்கும் டிடெக்டிவுக்கு வேலை கொடுத்து கொண்டே இருக்கும்!

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் அதிக டிடெக்டீவ் ஏஜென்சிகள் இருக்கின்றன!, இன்வெஸ்டிகேட் ஜர்னலிசமும் கிட்டதட்ட இதே முறைதான்! தற்போதெல்லாம் பெரும்பாலும் மணமகன் அல்லது மணமகள் குணம் மற்றும் நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளவே இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள், குற்ற புலணாய்வு குறைந்து விட்டது, நான் சென்னையில் இருக்கும் சமயத்தில் பெரும்புள்ளிகளின் அந்தரங்கங்களை தெரிந்து கொண்டு ப்ளாக்மெயில் பண்ணுவதாக கேள்விபட்டேன், அதனால் சென்னையில் இருக்கும் டிடெக்டீவ் ஏஜென்சிகள் மீது எனக்கு பெரிய மரியாதை ஏற்படவில்லை!

புலனாய்வு பெரிய கம்பசூத்திரமெல்லாம் இல்லை, அடிப்படை உளவியல் கொஞ்சம் குற்றவியல் தெரிந்தால் போதுமானது, இதற்காக டில்லியில் பயிற்சி வகுப்புகள் உண்டு, பல புத்தகங்களும் உண்டு, இவையல்லாது அனுபவித்திலேயே இந்துறைக்கு வந்தவர்கள் பலர் எனக்கு தெரியும், பெரும்பான்மையான ஏஜென்சியில் உடனே வேலைக்கு சேர்த்துவிட மாட்டார்கள், தொடர்பு எண் மட்டும் வாங்கி கொள்வார்கள், நமக்கு எதாவது அசைண்மெண்ட் தருவார்கள் சரியாக செய்தால் தான் வேலை, அதுவும் நாம் அங்கு தான் வேலை செய்கிறோம் என்று யாரிடமும் சொல்லக்கூடாது, ஒரு நபரின் நடவடிக்கைகள் மற்றும் குணாதிசயங்களை உற்று கவனிக்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்!



இத்துறையில் நிறைய காமெடிகளும் நடந்துள்ளது, ஒரு முறை ஒரு பெண்ணை பின்பற்றி சென்ற நண்பர் தர்ம அடி வாங்க தெரிந்தார்! நல்லவேளையாக அந்த வழியில் ஒரு நண்பரின் அலுவலகம் இருந்ததால் இங்கே தான் வந்தேன் என சமாளித்தார், பின்பொரு சமயம் அவசரத்துக்கு இரு சக்கர வாகனம் இல்லாமல் ஒரு ஆட்டோவில் ஏறி ஒருவரை பின் தொடர ஆட்டோகாரர் விவரம் தெரியாமல் அந்த நபரின் முன் போய் ஆட்டோவை நிறுத்திவிட்டார்! தெரிந்த நண்பர் போல் இருந்தது என்று சமாளித்து வந்தார் நண்பர், நல்லவேளையாக ஆட்டோகாரர் எதுவும் வாய் திறக்காமல் இருந்ததால் அங்கு விழுந்திருக்க வேண்டிய தர்ம அடியில் இருந்து தப்பித்தார் நண்பர்!

அனுமானங்களாக இருந்தாலும் அதிகப்படியான சாத்தியகூறுகள் இருக்கின்றன என லாஜிக்கோடு நிறுபிக்க வேண்டியது ஒரு நல்ல டிடெக்டீவின் கடமை!, இன்னும் நிறைய சொல்லலாம் ஆனால் பல விசயங்கள் தொழில் சார்ந்த ரகசிங்கள் என்பதால் வெளியிட எனக்கு உரிமையில்லை, டிடெக்டீவாக ஆக அனைத்து தொழில் நுட்பத்திலும் குறைந்த பட்ச அறிவு இருக்க வேண்டும், முக்கியமாக ஆர்வம் அதிகமாக இருக்க வேண்டும்!
உங்களில் யாருக்காவது அந்த ஆர்வம் உண்டா!?

டிஸ்கி:பதிவில் புலனாய்ந்த நண்பர் நானென்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!

101 வாங்கிகட்டி கொண்டது:

ஈரோடு கதிர் said...

என்ன தல டிடக்டிவ் ஏதாவது ஆரம்பிக்றீங்களா...

பின்னோக்கி said...

என்னுடைய டிடக்டிவ் பிரெய்ன் (?!!?) டிஸ்கி படித்தவுடன் அந்த நண்பரின் பெயர் வால் பையன் என சொல்கிறது ? உண்மையா ?

கோபிநாத் said...

\\உங்களில் யாருக்காவது அந்த ஆர்வம் உண்டா!?\\

இருக்கு தல..இப்ப இந்த பதிவில் இருக்கும் டிஸ்கியை பத்தி புலனாய்வு பண்ண ஆரம்பிச்சிட்டேன் ;))

கிருஷ்ண மூர்த்தி S said...

டிடெக்டிவ் வேற, டிடக்டிவ் ரீசனிங் வேற வால்ஸ்!

ஃபீல்ட் ஒர்க் பண்றதுக்கு டிடக்டிவ் ரீசனிங் அவசியமில்லே.

தொழில் தெரிஞ்ச தனியார் அல்லது அரசுப் புலனாய்வுத் துறையில் எவரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளவும்!

ஸ்ரீனிவாசன் said...

என்ன திடிர்னு TRACK வேற பக்கம் போகுது ? sir எங்கியோ செமத்தியா வாங்கி கட்டிகிட்டாரு போல ?

ஈ ரா said...

வால் இனி சங்கர் லால் ..... அப்படியா

வால்பையன் said...

//தொழில் தெரிஞ்ச தனியார் அல்லது அரசுப் புலனாய்வுத் துறையில் எவரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளவும்! //

இதை எனது சீனியருக்கு அனுப்பியிருக்கேன்! இன்னும் பதிலில்லை!

கிருஷ்ண மூர்த்தி S said...

/வால் இனி சங்கர் லால் ..... /

அதெப்படி? வால் எப்பவும் வால் தான்!

அப்பால, வால் சொன்னது:

/இதை எனது சீனியருக்கு அனுப்பியிருக்கேன்! இன்னும் பதிலில்லை!/

அவருக்கும் தெரியாம, அவருடைய சீனியருக்கு அனுப்பியிருக்கிறாரோ என்னவோ?

வால்பையன் said...

//அவருக்கும் தெரியாம, அவருடைய சீனியருக்கு அனுப்பியிருக்கிறாரோ என்னவோ? //


அவருக்கும் சீனியர் இருக்கார்! நான் அவரை பார்த்ததேயில்லை,

Unknown said...

வால் பயன் சார் எனக்கும் தனியார் புலனாய்வு துறையில் வேலை செய்ய ஆசை அதற்க்கு நன் என்ன செய்யாலம் முடிந்தால் விவரம் கொஞ்சம் கொடுங்களேன் , prabakar1982@gmail.com, www.sathuragirisundaramhalingam.blogspot.com

Unknown said...

வால் பயன் சார் எனக்கும் தனியார் புலனாய்வு துறையில் வேலை செய்ய ஆசை அதற்க்கு நன் என்ன செய்யாலம் முடிந்தால் விவரம் கொஞ்சம் கொடுங்களேன் , prabakar1982@gmail.com, www.sathuragirisundaramhalingam.blogspot.com

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்ஸ்!

எதுக்கும் பின்னோக்கியின் வலைப்பதிவுக்குப் போய் அவரையும் துப்பறியலாம் வாங்கன்னு கூப்பிட்டுப் பாருங்க!

அதுவும் முடியாட்டி நம்ம ஈஸ்வரி ஆத்தா கிட்ட அருள்வாக்கு கேளுங்க!

ஆ.ஞானசேகரன் said...

//இன்றும் யாராவது நான் ராகேஸ்குமார் நாவல்கள் எதையுமே படித்ததில்லை என்று சொன்னால் ஆச்சர்யமாக பார்ப்பேன்!,//

முழுமையாக படித்தில்லை!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பதிவில் புலனாய்ந்த நண்பர் நானென்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல//

நாங்க ஏன் நினைக்கப்போறோம்

Anonymous said...

//இன்னும் அவலாஞ்ச் போனது, மறுநாள் முதுமலை போனதென்று நிறையா இருக்கு!//

என்ன தள , எங்கல காடுக்குல்ல விட்டுட்டு "குப்பைக்" கதை, டிடெக்டிவ் -ன்னு கிளம்பிட்ட ?? அது அவ்வலவு தானா ??

சொள் அலகன்

வால்பையன் said...

//எதுக்கும் பின்னோக்கியின் வலைப்பதிவுக்குப் போய் அவரையும் துப்பறியலாம் வாங்கன்னு கூப்பிட்டுப் பாருங்க!

அதுவும் முடியாட்டி நம்ம ஈஸ்வரி ஆத்தா கிட்ட அருள்வாக்கு கேளுங்க! //

பின்னோக்கி ஏற்கனவே பெரிய டிடெக்டீவ் தான்!

ஈஸ்வரியக்கா, லூசு மேவி ஸாரி டம்பி மேவி வந்தா தான் அருள் வாக்கு தருவாங்களாம்!

Kumky said...

ப்லாக்கர்ஸ்ல யாரோ டிடக்டிவ் இருக்காங்களாமே...உண்மையா?
அதாவது ப்லாக்கை மட்டும்......

ஆ.ஞானசேகரன் said...

// பல விசயங்கள் தொழில் சார்ந்த ரகசிங்கள் என்பதால் வெளியிட எனக்கு உரிமையில்லை, டிடெக்டீவாக ஆக அனைத்து தொழில் நுட்பத்திலும் குறைந்த பட்ச அறிவு இருக்க வேண்டும், முக்கியமாக ஆர்வம் அதிகமாக இருக்க வேண்டும்!
உங்களில் யாருக்காவது அந்த ஆர்வம் உண்டா!?//

அய்ய்ய்ய் இதுவும் நல்லாயிருக்கே!... இறங்கிட வேண்டியதுதான்..

வால்பையன் said...

//என்ன தள , எங்கல காடுக்குல்ல விட்டுட்டு "குப்பைக்" கதை, டிடெக்டிவ் -ன்னு கிளம்பிட்ட ?? அது அவ்வலவு தானா ??

சொள் அலகன்//

சில புகைபடங்களுக்காக வெயிட்டிங்!
வந்தவுடன் அடுத்த பாகம் பயண கட்டுரை வரும்!

வால்பையன் said...

//ப்லாக்கர்ஸ்ல யாரோ டிடக்டிவ் இருக்காங்களாமே...உண்மையா?
அதாவது ப்லாக்கை மட்டும்...... //

டிடெக்டீவின் முக்கிய வேலையே வாட்ச்மேன் வேலை தானே!

இங்க தான் நிறைய வாட்ச்சர்கள் இருக்காங்களே!, ப்ளாக்கில் நிறைய பத்திரிக்கையாளர்கள் இருக்காங்க ஆனா வெளியே தெரியாது!

தமிழன்-கறுப்பி... said...

எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு துறை, விருப்பமமும் கூட...

பீர் | Peer said...

துறை சார்ந்த பதிவா வால, நடத்துங்க..

ஏதாவது வேலை காலி இருந்தா சொல்லி அனுப்புங்க..

Romeoboy said...

என்ன தல எதாவது புது முயற்சில இறங்குற ஐடியா இருக்கா?

தமிழன்-கறுப்பி... said...

எனக்கு ஒரு வேலை கிடைக்குமா?

வால்பையன் said...

// கதிர் - ஈரோடு said...

என்ன தல டிடக்டிவ் ஏதாவது ஆரம்பிக்றீங்களா...//

இனிமே தானா!

வால்பையன் said...

//பின்னோக்கி said...

என்னுடைய டிடக்டிவ் பிரெய்ன் (?!!?) டிஸ்கி படித்தவுடன் அந்த நண்பரின் பெயர் வால் பையன் என சொல்கிறது ? உண்மையா ?//

அது ஒரு அழகிய கனாக்காலம் தல!

வால்பையன் said...

//கோபிநாத் said...

\\உங்களில் யாருக்காவது அந்த ஆர்வம் உண்டா!?\\

இருக்கு தல..இப்ப இந்த பதிவில் இருக்கும் டிஸ்கியை பத்தி புலனாய்வு பண்ண ஆரம்பிச்சிட்டேன் ;))//


உங்களுகுல்ல தூங்கிகிட்டு இருந்த சிங்கத்தை எழுப்பிவிட்டுடேனா!?

வால்பையன் said...

//ஸ்ரீனிவாசன் said...

என்ன திடிர்னு TRACK வேற பக்கம் போகுது ? sir எங்கியோ செமத்தியா வாங்கி கட்டிகிட்டாரு போல ?//

ஒரே மாதிரி இருக்குறது எனக்கு பிடிக்காது தல!

வால்பையன் said...

//ஈ ரா said...

வால் இனி சங்கர் லால் ..... அப்படியா//

சங்கர் லாலும் ஒரு கற்பனை பாத்திரம் தான்!

வால்பையன் said...

//prabakar.l.n said...

வால் பயன் சார் எனக்கும் தனியார் புலனாய்வு துறையில் வேலை செய்ய ஆசை அதற்க்கு நன் என்ன செய்யாலம் முடிந்தால் விவரம் கொஞ்சம் கொடுங்களேன் , prabakar1982@gmail.com, www.sathuragirisundaramhalingam.blogspot.com//

உங்களை பற்றிய தகவல்களை எனது மெயிலுக்கு அனுப்புங்கள்!

வால்பையன் said...

//ஆ.ஞானசேகரன் said...

//இன்றும் யாராவது நான் ராகேஸ்குமார் நாவல்கள் எதையுமே படித்ததில்லை என்று சொன்னால் ஆச்சர்யமாக பார்ப்பேன்!,//

முழுமையாக படித்தில்லை!!!//


இப்பவெல்லாம் ராஜேஸ்குமார் நாவலே போரடிக்குது தல!

வால்பையன் said...

//T.V.Radhakrishnan said...

//பதிவில் புலனாய்ந்த நண்பர் நானென்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல//

நாங்க ஏன் நினைக்கப்போறோம்//

நீங்க ரொம்ப நல்லவரு!

வால்பையன் said...

//ஆ.ஞானசேகரன் said...

// பல விசயங்கள் தொழில் சார்ந்த ரகசிங்கள் என்பதால் வெளியிட எனக்கு உரிமையில்லை, டிடெக்டீவாக ஆக அனைத்து தொழில் நுட்பத்திலும் குறைந்த பட்ச அறிவு இருக்க வேண்டும், முக்கியமாக ஆர்வம் அதிகமாக இருக்க வேண்டும்!
உங்களில் யாருக்காவது அந்த ஆர்வம் உண்டா!?//

அய்ய்ய்ய் இதுவும் நல்லாயிருக்கே!... இறங்கிட வேண்டியதுதான்..//


நீச்சல் தெரியுமா தல!
ரொம்ப முக்கியம் இதுக்கு!

வால்பையன் said...

//தமிழன்-கறுப்பி... said...

எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு துறை, விருப்பமமும் கூட...//

சொன்னேனே எல்லோருகுள்ளும் ஒரு ஜேம்ஸ் பாண்ட் தூங்குறாருன்னு!

வால்பையன் said...

//பீர் | Peer said...
துறை சார்ந்த பதிவா வால, நடத்துங்க..
ஏதாவது வேலை காலி இருந்தா சொல்லி அனுப்புங்க..//


கலெக்டர் வேலை ஒகேவா தல!

வால்பையன் said...

//Romeoboy said...

என்ன தல எதாவது புது முயற்சில இறங்குற ஐடியா இருக்கா?//

இருக்கலாம்

வால்பையன் said...

//தமிழன்-கறுப்பி... said...

எனக்கு ஒரு வேலை கிடைக்குமா?//


உங்களை பற்றிய தகவல்களை மெயிலுக்கு அனுப்புங்கள்!

வினோத் கெளதம் said...

பயங்கரமாக புலனாய்வு வேலை எல்லாம் பார்கிறிங்க போல..:))

கார்ல்ஸ்பெர்க் said...

பதிவுலக ஜேம்ஸ் பாண்டு 'வால்' வாழ்க!!!

அறிவிலி said...

சுஜாதாவின் ப்ரியா நாவல்/ப்ரியா சினிமாவில் வருவதுபோல் ஏதும் நடந்தால் நீங்கள் சிங்கப்பூர் வரும் சிரமத்தை தவிர்க்கலாம். நான் பார்த்துக் கொள்கிறேன். அதுவும் ஸ்ரீதேவி போல் அழகான க்ளையண்டாக இருந்தால் கூலியே வேண்டாம்.

இராகவன் நைஜிரியா said...

இந்த தமிழ் மணத்தில் யாரெல்லாம் நெகட்டிவ் ஓட்டு குத்துகின்றனர் என்று கண்டுபிடிக்க வழியிருக்கான்னு சொல்லுங்களேன்... அதையும் கொஞ்சம் புலனாய்வு செஞ்சு சொல்லுங்க

வால்பையன் said...

//வினோத்கெளதம் said...

பயங்கரமாக புலனாய்வு வேலை எல்லாம் பார்கிறிங்க போல..:))//

உங்க எல்லோரையும் ஜேம்ஸ்பாண்ட் ஆக்கும் வேலை தல இது!

வால்பையன் said...

//கார்ல்ஸ்பெர்க் said...

பதிவுலக ஜேம்ஸ் பாண்டு 'வால்' வாழ்க!!!//

இந்த பட்டதிற்கெல்லாம் நான் தகுதியில்லாதவன் தல!

வால்பையன் said...

//அறிவிலி said...

சுஜாதாவின் ப்ரியா நாவல்/ப்ரியா சினிமாவில் வருவதுபோல் ஏதும் நடந்தால் நீங்கள் சிங்கப்பூர் வரும் சிரமத்தை தவிர்க்கலாம். நான் பார்த்துக் கொள்கிறேன். அதுவும் ஸ்ரீதேவி போல் அழகான க்ளையண்டாக இருந்தால் கூலியே வேண்டாம்.//


ஹாஹாஹா!

அப்ப நாங்கெல்லாம் எப்ப சிங்கப்பூர் பாக்குறதாம்!

Anbu said...

\\\பதிவில் புலனாய்ந்த நண்பர் நானென்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!\\

நம்பிட்டேன் வால் அண்ணே....

வால்பையன் said...

//இராகவன் நைஜிரியா said...

இந்த தமிழ் மணத்தில் யாரெல்லாம் நெகட்டிவ் ஓட்டு குத்துகின்றனர் என்று கண்டுபிடிக்க வழியிருக்கான்னு சொல்லுங்களேன்... அதையும் கொஞ்சம் புலனாய்வு செஞ்சு சொல்லுங்க//

தமிழ்மண கருவிபட்டையில் சில வேலைகள் செய்தால் கண்டுபிடிக்கலாம்! அதற்கு தொழில்நுட்ப அறிவு வேண்டும்!

தமிழிஷில் ஓட்டளிப்பவர்கள் பெயர் பார்க்க முடியும் என்பதை இங்கே நினைவூட்டுகிறேன்!

ஆனால் அது ஓட்டளிப்பவர்களின் சுதந்திரத்தை பறிக்கும்!

அறிவிலி said...

///ஹாஹாஹா!

அப்ப நாங்கெல்லாம் எப்ப சிங்கப்பூர் பாக்குறதாம்!///

அப்ப நாங்கெல்லாம் எப்ப ஸ்ரீதேவிய பாக்குறதாம்?

ஹி..ஹி..ஹி..

வால்பையன் said...

//அறிவிலி said...

///ஹாஹாஹா!

அப்ப நாங்கெல்லாம் எப்ப சிங்கப்பூர் பாக்குறதாம்!///

அப்ப நாங்கெல்லாம் எப்ப ஸ்ரீதேவிய பாக்குறதாம்?//

இப்ப இருக்குற ஸ்ரீதேவிய பாக்குறதுக்கு சும்மாவே இருக்கலாம் தல!

சினிமா உலகில் நிறைய கேஸ்கள் வரும்!, கதை திருட்டு, படபிடிப்பில் இருந்து ஆடியோ திருட்டு, வீடியோ திருட்டு இந்த மாதிரி ஆனா எல்லாமே உள்நாட்டில் தான்!

நாமக்கல் சிபி said...

எனக்கு ஆர்வம் இருக்கு!

மற்றபடி அந்த தொப்பி, கருப்பு கண்ணாடி, கோட் எல்லாம் எங்கே கிடைக்கும்?

வால்பையன் said...

//நாமக்கல் சிபி said...

எனக்கு ஆர்வம் இருக்கு!

மற்றபடி அந்த தொப்பி, கருப்பு கண்ணாடி, கோட் எல்லாம் எங்கே கிடைக்கும்?//

அதெல்லாம் ஜுஜுபி மேட்டர்!
ரெயின் கோட் தான் அது!

ஊடகன் said...

ஒவ்வொரு மனுசனுக்குள்ளும் ஒரு JAMES BOND..............
முடியல தல...........கலக்குங்க..........

ஹேமா said...

வாலு,ஓட்டு எல்லாம் போட்டாச்சு.கலக்குங்க.

வால்பையன் said...

//ஊடகன் said...

ஒவ்வொரு மனுசனுக்குள்ளும் ஒரு JAMES BOND..............
முடியல தல...........கலக்குங்க..........//

உண்மையை தான் தல சொல்லியிருக்கேன்!

வால்பையன் said...

//ஹேமா said...

வாலு,ஓட்டு எல்லாம் போட்டாச்சு.கலக்குங்க.//

ரொம்ப நன்றி!
பெண்களும் புலனாய்வுதுறையில் கலக்குறாங்க!

Sanjai Gandhi said...

என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது..

அது மியாமி இல்லையாம்.. மயாமியாம்.. அவிங்க அப்டி தான் சொல்றாய்ங்க..

வால்பையன் said...

/SanjaiGandhi said...

என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது..

அது மியாமி இல்லையாம்.. மயாமியாம்.. அவிங்க அப்டி தான் சொல்றாய்ங்க..//


பூவை பூன்னு சொல்லலாம்!
புய்பம்னு சொல்லலாம்!
நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்!

Sanjai Gandhi said...

//நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்!//

நான் சொல்ற மாதிரி இல்ல.. அவங்க சொல்ற மாதிரி..

நான் மியாமி கட்சி தான்..

Jackiesekar said...

எனக்கென்வோ அது நீங்கதான்னு தோனுது.. எப்படி நம்ம இன்வெஸ்ட்டி கேஷன்...

வால்பையன் said...

//நான் மியாமி கட்சி தான்.. //

அப்ப நம்மாளு!

வால்பையன் said...

//எனக்கென்வோ அது நீங்கதான்னு தோனுது.. எப்படி நம்ம இன்வெஸ்ட்டி கேஷன்... //

உங்களுகுள்ளயும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் இல்லாமலா போயிருவார்!

Beski said...

புலனாய்வா? ம்ம்ம்...

தர்ம அடி வாங்க நான் தயாரா இல்ல.

ரவி said...

தமிழ்ச்சூழலில் பொலனாய்வுக்கு உண்மையில் மார்க்கெட் இருக்கிறதா அல்லது பார்த்துள்ள மாப்பிள்ளை சிகரெட் பிடிப்பதை கண்டிபிடிப்பது மட்டும்தானா ?

ப்ரியமுடன் வசந்த் said...

ம்ம்

தல நான் ரெடி...

அது சரி(18185106603874041862) said...

//
டிஸ்கி:பதிவில் புலனாய்ந்த நண்பர் நானென்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!
//

புலனாய்வு செய்யப்பட்ட நபர் நீங்கன்னு நினைச்சேன்...:))))

அ.மு.செய்யது said...

இஸ்ரேலின் மொஸார்ட் ப‌ற்றி கேள்வி ப‌ட்ட‌துண்டா ???

மங்களூர் சிவா said...

தர்ம அடி வாங்க நான் தயாரா இல்ல.

தமிழ் அஞ்சல் said...

ம்...ம்...நல்லாருக்கு பாஸ் ...!

ஜெட்லி... said...

//உங்களில் யாருக்காவது அந்த ஆர்வம் உண்டா!?//

அண்ணே எதுவும் உள்குத்து இருக்கா??
வேலை எங்கே சென்னையிலா??

Mahesh said...

சின்ன வால்னு நினைச்சா..... பெரிய வாலா இருக்கும் போல இருக்கே :)

எறும்பு said...

400 followersku வாழ்த்துக்கள் விரைவில் ஐய்நூறை தொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

தல நீங்க டிடக்டிவ் ஆரம்பிச்ச எனக்கொரு வேலை கொடுங்க.........

Suresh Kumar said...

வாழ்த்துக்கள் தல டிடெக்டிவ் ஆரம்பிக்க

Eswari said...

//ஈஸ்வரியக்கா, லூசு மேவி ஸாரி டம்பி மேவி வந்தா தான் அருள் வாக்கு தருவாங்களாம்//

அருள் வாக்குன்னா என்ன? அதை எப்படி தரணும்?

Eswari said...

என் டிடக்டிவ் பிரெய்ன் use பண்ணி மத்தவங்க செய்யுற தப்பை கண்டுபிடுச்சு சொல்லி நெறைய திட்டு வாங்கிய அனுபவம் இருக்கு. எதாவது டிடக்டிவ் agencykku ஆள் தேவைன்னா சொல்லுங்க

வால்பையன் said...

//எவனோ ஒருவன் said...
புலனாய்வா? ம்ம்ம்...
தர்ம அடி வாங்க நான் தயாரா இல்ல.//


இப்படித்தான் உஷாரா இருக்கனும்!

வால்பையன் said...

//செந்தழல் ரவி said...

தமிழ்ச்சூழலில் பொலனாய்வுக்கு உண்மையில் மார்க்கெட் இருக்கிறதா அல்லது பார்த்துள்ள மாப்பிள்ளை சிகரெட் பிடிப்பதை கண்டிபிடிப்பது மட்டும்தானா ?//

கிரைம் வழக்குகள் எதுவும் கிடைப்பதில்லை! ஆனால் சில நேரங்களில் சுவாரஸ்யமாக மற்ற நிறுவங்னகளின் வியாபரதளம் அறிய வேலை வரும், எப்போதாவது தான் சவாலான வேலை கிடைக்கும்!

மற்றபடி வாட்ச்மேனாகத் தான் பொழப்பு ஓடுது!

வால்பையன் said...

//பிரியமுடன்...வசந்த் said...
ம்ம்
தல நான் ரெடி...//

உங்கள் தகவல்களை தனிமெயிலாக அனுப்பவும்!

வால்பையன் said...

//அது சரி said...

//
டிஸ்கி:பதிவில் புலனாய்ந்த நண்பர் நானென்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!
//

புலனாய்வு செய்யப்பட்ட நபர் நீங்கன்னு நினைச்சேன்...:))))//


நாம அம்புட்டு வொர்த்தா தல!

வால்பையன் said...

//அ.மு.செய்யது said...

இஸ்ரேலின் மொஸார்ட் ப‌ற்றி கேள்வி ப‌ட்ட‌துண்டா ???//


நிறைய!

உலகிலுள்ள உளவுதுறையிலேயே மிகவும் திறமையானவர்கள்!

வால்பையன் said...

//மங்களூர் சிவா said...
தர்ம அடி வாங்க நான் தயாரா இல்ல.//

எல்லா நேரமும் அப்படி இருக்காது தல!

வால்பையன் said...

//திருப்பூர் மணி Tirupur mani said...
ம்...ம்...நல்லாருக்கு பாஸ் ...!//

எது பாஸ்! போட்டோவா!?

வால்பையன் said...

//ஜெட்லி said...
//உங்களில் யாருக்காவது அந்த ஆர்வம் உண்டா!?//
அண்ணே எதுவும் உள்குத்து இருக்கா??
வேலை எங்கே சென்னையிலா??//

உங்கள் தகவல்களை தனி மெயிலில் அனுப்புங்கள் தல!

க.பாலாசி said...

//பல விசயங்கள் தொழில் சார்ந்த ரகசிங்கள் என்பதால் வெளியிட எனக்கு உரிமையில்லை//

//டிஸ்கி:பதிவில் புலனாய்ந்த நண்பர் நானென்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!//

இப்படி சொல்லிட்டு டிஸ்கி போட்டா என்ன அர்த்தம்.

வால்பையன் said...

//Mahesh said...
சின்ன வால்னு நினைச்சா..... பெரிய வாலா இருக்கும் போல இருக்கே :)//

அடியேன் சின்ன வால் தான்!

பெரிய வால்கள் தனியே உண்டு!

வால்பையன் said...

//எறும்பு said...

400 followersku வாழ்த்துக்கள் விரைவில் ஐய்நூறை தொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்//


மிக்க நன்றி எறும்பு!

இன்று தான் குவியல் எழுதலாம் என்று இருந்தேன்!

வால்பையன் said...

//புலவன் புலிகேசி said...

தல நீங்க டிடக்டிவ் ஆரம்பிச்ச எனக்கொரு வேலை கொடுங்க.........//


தனி மெயிலில் உங்களை பற்றிய தகவல்கள் அனுப்புங்க தல!

வால்பையன் said...

//Suresh Kumar said...

வாழ்த்துக்கள் தல டிடெக்டிவ் ஆரம்பிக்க//


மிக்க நன்றி தல!

வால்பையன் said...

//Eswari said...

//ஈஸ்வரியக்கா, லூசு மேவி ஸாரி டம்பி மேவி வந்தா தான் அருள் வாக்கு தருவாங்களாம்//

அருள் வாக்குன்னா என்ன? அதை எப்படி தரணும்?//

புலனாய்வுதுறையால கண்டுபிடிக்க முடியாத குற்றவாளிகளை வெத்தலையில மை போட்டு கண்டுபிடிச்சி தரணும்!

வால்பையன் said...

//பல விசயங்கள் தொழில் சார்ந்த ரகசிங்கள் என்பதால் வெளியிட எனக்கு உரிமையில்லை//

//டிஸ்கி:பதிவில் புலனாய்ந்த நண்பர் நானென்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!//

இப்படி சொல்லிட்டு டிஸ்கி போட்டா என்ன அர்த்தம். //


அப்ப நானாத்தான் உளரிட்டேனா!

வால்பையன் said...

//Eswari said...

என் டிடக்டிவ் பிரெய்ன் use பண்ணி மத்தவங்க செய்யுற தப்பை கண்டுபிடுச்சு சொல்லி நெறைய திட்டு வாங்கிய அனுபவம் இருக்கு. எதாவது டிடக்டிவ் agencykku ஆள் தேவைன்னா சொல்லுங்க//

அப்பவே நீங்க பெரிய டிடெக்டீவ் போலயே!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-)))))))))))
(இப்படி ஸ்மைலி போட்டா நான் சொல்ல நினைச்சதை எல்லாரும் சொல்லீட்டாங்க ,எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலன்னு அர்த்தம்.)

ஈ ரா said...

உமக்கு ஒரு கவிதை (??) டெடிகேட் பண்ணியிருக்கேன்..

http://padikkathavan.blogspot.com/2009/10/blog-post_20.html

வால்பையன் said...

//ஸ்ரீ said...

:-)))))))))))
(இப்படி ஸ்மைலி போட்டா நான் சொல்ல நினைச்சதை எல்லாரும் சொல்லீட்டாங்க ,எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலன்னு அர்த்தம்.)//

மதுரையில் சில பல வேலைகள் உனக்கு உண்டு மச்சி!

வால்பையன் said...

//ஈ ரா said...

உமக்கு ஒரு கவிதை (??) டெடிகேட் பண்ணியிருக்கேன்..

http://padikkathavan.blogspot.com/2009/10/blog-post_20.html//


பின்னூட்டம் போட்டுட்டேன் தல!

Eswari said...

//அருள் வாக்குன்னா என்ன? அதை எப்படி தரணும்?//

புலனாய்வுதுறையால கண்டுபிடிக்க முடியாத குற்றவாளிகளை வெத்தலையில மை போட்டு கண்டுபிடிச்சி தரணும்//

அப்படியா..!!!
ok ok.

மகனே கிருஷ்ணமூர்த்தி
vitamin "M" நெறைய இருக்கிற ஆளா பார்த்து என்கிடே அருள் ketka அனுப்பி விடு. வரதுல 50:50 வச்சுக்கலாம்

வால்பையன் said...

//மகனே கிருஷ்ணமூர்த்தி
vitamin "M" நெறைய இருக்கிற ஆளா பார்த்து என்கிடே அருள் ketka அனுப்பி விடு. வரதுல 50:50 வச்சுக்கலாம்//

ஆசிரமத்துல எதாவது வேலை போட்டு கொடுங்களேன்!, சிந்துறது, சிதறுறதை பொறுக்கி வாழ்ந்துகிறேன்!

Eswari said...

//ஆசிரமத்துல எதாவது வேலை போட்டு கொடுங்களேன்!, சிந்துறது, சிதறுறதை பொறுக்கி வாழ்ந்துகிறேன்!//

ரொம்ப பாவமா கெஞ்சுறிங்க... ஓகே. But No ஆசிரமம் only அரசமரம் தான். அங்க காக்கா போடுற முச்சா எல்லாம் கூட்டி சுத்த படுத்துற வேலை தான். ஓகேயா? கிருஷ்ணமூர்த்தி கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க.

வால்பையன் said...

//ரொம்ப பாவமா கெஞ்சுறிங்க... ஓகே. But No ஆசிரமம் only அரசமரம் தான். அங்க காக்கா போடுற முச்சா எல்லாம் கூட்டி சுத்த படுத்துற வேலை தான். ஓகேயா? கிருஷ்ணமூர்த்தி கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க. //

காக்காவா!

அப்ப நான் வரல! கோயம்புத்தூர்ல ஒரு சித்தர் ஆசிரமத்துல வேலை தர்றேன்னு சொல்லியிருக்கார், அங்கேயே போய்கிறேன்!

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//நமக்கு எதாவது அசைண்மெண்ட் தருவார்கள் சரியாக செய்தால் தான் வேலை, அதுவும் நாம் அங்கு தான் வேலை செய்கிறோம் என்று யாரிடமும் சொல்லக்கூடாது\\


அப்ப நீங்க வேலை செய்யலியா

Thamira said...

மீ த 100 பாஸ்.! என்ன இப்படி திடீர்னு துப்பறிய ஆரம்பிச்சுட்டீங்க.?

வால்பையன் said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...

மீ த 100 பாஸ்.! என்ன இப்படி திடீர்னு துப்பறிய ஆரம்பிச்சுட்டீங்க.?//

வாழ்த்துக்கள் சதத்துக்கு!

சும்மா தான்!

!

Blog Widget by LinkWithin