தமிழ் வலைப்பதிவுலகில் நகைச்சுவைகென்றே இருக்கும் முடிசூடா மன்னன் குசும்பனுக்கு வயசாகி போச்சு, இன்றிலிருந்து அவர் அங்கிள் ஆகிவிட்டார்! அவரை அங்கிள் ஆக்கிய எனது மாப்பிள்ளைக்கு நன்றி!, அதாங்க குசும்பன் அப்பாவாகி விட்டார்!, குசும்பனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்!
இது சுயசொறிதல், என்னை மாதிரி டம்மிபீஸிக்கும் 400 பாலோயர்ஸ் வந்து பெருமை படுத்திவிட்டார்கள். உங்களுக்கு எப்படி கைமாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை!, எனக்கு பாலோயராக இருப்பவர்களுக்கு வலைப்பூ இருப்பின் தயவுசெய்து எனக்கு தெரியப்படுத்துங்கள், குறைந்த பட்ச பதில் மரியாதையாவது செய்ய எனக்கு வாய்ப்பளியுங்கள்!,
ஒரு லட்சம் ஹிட்ஸ் தாண்டியதை பற்றி நான் பெரிதாக அலட்டி கொள்வதற்கில்லை!, ஹிட்ஸ் வேண்டுமென்றால் தினம் ரெண்டு பதிவெழுதி பல லட்சங்களை பெறலாம்! ஆனால் அது உங்களுக்கு திருப்தி அளிக்காத பட்சத்தில் என்னாத்த கிறுக்கி என்ன பண்றது!
***
சாட்டில் லிங்க் கொடுக்கும் நண்பர்களுக்கு, நான் உங்களுக்கு பாலோயராக இருக்கும் பட்சத்தில் உங்கள் பதிவு எக்காரணம் கொண்டும் மிஸ்ஸாகாது, அதான் மிஸ்ஸாகுதுல நாங்க கொடுக்கும் போது படிக்க வேண்டியது தானேன்னு நீங்க கேட்பது தெரிகிறது!, நீங்கள் அனுப்பும் நேரம் நான் எதாவது வேலையாக இருந்து(ஆணிய புடுங்க வேணாம்) என்னாடா நாம எம்மாபெரிய பிரபலம் இவனையும் மனுசனா மதிச்சி லிங்க் கொடுத்தா படிக்காக இருக்குறானேன்னு நீங்க நினைச்சிறக்கூடாதுன்னு தான் எனக்கு வருத்தம்!
எனக்கு பாலோயர்களாக இருப்பவர்களுக்கும், தொடர்ந்து பின்னூட்டம் இடுபவர்களுக்கும் தான் என் முதல் பார்வை, அதன் பின் தான் தமிழ்மணம், தமிழிஷ், மற்ற பதிவர் நண்பர்களெல்லாம்!, ஒருவேளை உங்கள் பதிவில் என்னை கலாய்த்து எழுதியிருப்பீர்களேயானால் தாராளமாக லிங்க் கொடுங்கள், முன்னரே பின்னூட்டம் போட்டு எனக்கு அதில் எந்த வருத்தமுமில்லைன்னு தெரியபடுத்தி விடுகிறேன், இல்லையென்றால் யாராவது வால் கோவிச்சிக்க போறார்ன்னு உங்களை குழப்பக்கூடும்!
***
வாமு.கோமுவின் இந்த கதை சென்ற மாத உயிர்மையில் வந்திருந்தது, அதற்கு இந்த மாதம் வந்திருந்த இரண்டு விமர்சனக்கள் சிறுபிள்ளைதனத்தையும் விட கேவலமாக இருந்தது!, கதையின் உட்கரு கூட தெரியாத இவர்களெல்லாம் எப்படி விமர்சனம் எழுதுகிறார்கள் என்று தெரியிவில்லை, அதையும் வாசகர் கடிதத்தில் வெளியிடுவது இன்னும் காமெடி, அந்த சிறுகதையை பொறுத்தவரை அவர் மையப்படுத்தி எழுதியிருப்பது ”குழந்தை பாலியல் வன்முறை”, அதற்காக அவர் எடுத்து கொண்ட கதைக்களம் ஒரு கிராமம், அங்கு வாழும் பிற்படுத்தப்பட்டோரின் வாழ்க்கை முறை, மையத்தை அணுகாமல், இப்போதெல்லாம் எங்க இப்படி நடக்குதுன்னு இரண்டு விமர்சனக்கள், ஒருத்தருக்கு அது ரொம்ப கேவலமா இருக்காம்!
எதற்காக பதிவர்கள் சில மாதங்களுக்கு முன் டாக்டர் ஷாலினி மற்றும் ருத்ரனை அழைத்து ”குட் டச்” பேட் டச்” என்ற நிகழ்ச்சியை நடத்தினார்கள், இரண்டு மாதத்திற்கு முன் கோவையில் இதே போல் நடத்தலாம் என பேசினார்கள், போன மாதம் மதுரையில் கூட தருமி ஐயா தலையில் அதே நிகழ்ச்சியை நடத்தலாம் என பேசினார்கள்!, நாம் ஆயிரம் தான் ஒன்றுமே நடக்காதது போல் இருந்தாலும் வாழ்க்கையின் எதார்த்தம் இது தான்!, குழந்தை பாலியல் என்பது சில நிமிட நேர பாலியல் வடிகால், ஆனால் அது அந்த குழந்தைக்கு வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடும் விபத்து, அதனால் தான் நாம் இதை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என முனைகிறோம்! மாறிவரும் சமூகசூழல் இக்கல்வியை கட்டாயமாக்குகிறது!
***
கிம் கி டுக்கின் the isle என்ற படம் தரவிரக்கி ரொம்ப நாளாக மடிக்கணிணியில் உறங்கி கொண்டிருந்தது, ஒரு வழியாக பார்த்து முடித்தேன்!, இவரது படத்தை பொறுத்தவரை சமூகத்துக்கு கருத்து சொல்லும் வேலையெல்லாம் கிடையாது! இருவரின் உணர்வு போராட்டங்கள் தான் கதைக்களம், நாயகி அவ்வபோது பாலியல் தொழிலும் செய்து வந்தாலும் நாயகனின் மீது அவளுக்கு அக்கறை இருந்தது, அவன் இவள் மீது கட்டும் அக்கறை பிடித்திருந்தது! அதற்காக இரண்டு கொலைகள் செய்கிறாள், இது கதையின் எதார்த்தம் மட்டுமே! அவ்விடத்தில் அவளுக்கு இருந்த அதிகப்படியான காதலை மட்டுமே நான் பார்க்க வேண்டும்!
உயிரோடிருக்கும் தவளையை தோலை உறிப்பது, உயிரோடு இருக்கும் மீனை வெட்டி பச்சையாக சாப்பிடுவது போன்றவை அதிகப்படியான வன்முறை அல்ல, அவர்களது உணவு பழக்கமுறையே அது தான்!, நாமும் ஆட்டையும், கோழியையும் கழுத்தை அறுத்து தானே கொலை செய்கிறோம்!
***
தமிழ்நாட்டில் இருப்பவர்களில் தமிழில் ஒளிப்பரப்பாகும் டிஸ்கவரி சேனலை தவற விடாதீர்கள், மிக அரிய தகவல்களை நான் அங்கிருந்து பெறுகிறேன்!, உங்கள் குழந்தைகளுக்கும் பயன்படலாம்! ஆரம்பத்தில் இந்தியாவில் மிளகாய் கிடையாது மிளகு தான் காரத்திற்கு, இன்று உலகம் முழுவதும் முக்கிய உணவாக இருக்கும் வாழைப்பழம் கிழக்காசிய நாட்டில் தோன்றியது, ”கோஸ்டோ ரி கா” என்ற நாட்டில் வாழைப்பழத்திற்கு பெரிய பெரிய விதைகள் உள்ளன!, ஆபத்தான விலங்குகளை அணுகுவது எப்படி, மனிதர்கள் எப்படி சுற்றுசூழலுக்கு எதிரியாக இருக்கின்றனர் என பல விசயங்கள்! நம்மை திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பாகவும் எடுத்து கொள்ளலாம், மறக்காமல் பாருங்கள்.
***
கவிதை போரடிச்சி போச்சி அதனால ஒரு புதிர் போட்டி!
இரு வாகனங்கள் ஒரே இடத்திலிருந்து இரு நேர்எதிர் திசையில் கிளம்பின, ஆறு மைல்களுக்கு பிறகு இரண்டுமே அதன் இடப்பக்கத்தில் திரும்பின. அவ்வழியே எட்டு மைல் பயணம் செய்த பின் நின்றது. தற்பொழுது இரண்டு வாகனங்களுக்கும் உள்ள இடைவெளி தூரம் என்ன?
அ) 2 மைல்கள்
ஆ) 11 மைல்கள்
இ) 14 மைல்கள்
ஈ) 20 மைல்கள்
உ) 26 மைல்கள்
105 வாங்கிகட்டி கொண்டது:
தல வணக்கம்...
நம்ம ஊர்ல இருந்து உங்க ஊருக்கு எத்தன கிலோ மீட்டர் ...
14 Miles
--Kumar (USA)
டிச்கவரி சானளில் உன்னைப் பார்க்க முடியுமா தள , உனக்கு தான் வால் இறுக்கே !
(பலக்கதோஷம், எனக்கு கூட ஜோக் எலுத வருதே, சிர்க்கவும் !!!! )
யூ டேர்ன் அடிதிறுந்தா 2மைல்கல்
இள்ளாட்டி 8+6+6+8=28 மைல்கல்
சொள் அலகன்
20 மைல்கள்
அன்புடன்,
டோண்டு ராகவன்
நானூறுக்கு வாழ்த்துகள் குரு. எப்பூடி இப்படி? Keep rocking.
டிஸ்கவரி உண்மையிலேயே மிக பயனுள்ள சானெல்.
ஹ்ம்ம், விடை இருபது மைல்கள்.
அனுஜன்யா
20 miles.
குசும்பனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நம் வாழ்த்துக்கள்!
2 மைல்கள் பாஸ்
//எனக்கு பாலோயர்களாக இருப்பவர்களுக்கும், தொடர்ந்து பின்னூட்டம் இடுபவர்களுக்கும் தான் என் முதல் பார்வை//
நீங்க சொன்னா சரிதான் தல...............
அப்படியே செய்கிறேன் தல.........
குவியல் அருமை வால். நிறைய விஷயங்கள். புதிருக்கு விடை ஈ 20 மைல்கள்.
400 க்கு வாழ்த்துகள் !!!
அது ஆச்சுதுங்க 20 மைலுக....
நானூறுக்கும், இலட்சத்தி ஐம்பதினாயிரதிற்கும் வாழ்த்துகள்.
குசும்பனாருக்கு வாழ்த்துகள்.
தினமும் கணக்கு போட்டு, போட்டு தலை முடி பாதி காணமப் போச்சு.. இதுல நீங்க வேற ஏன் வயத்தெரிச்சலைக் கொட்டிகிறீங்க.
சாட் பற்றி புரிகின்றது. விளக்கத்திற்கு நன்றி.
கவிதைப் போரடிச்சுப் போச்சு... கவிஜ ???
கவிஜ இல்ல... கவுஜ என்று திருத்திப் படிக்கவும். :-)
குசும்பருக்கு வாழ்த்துக்கள
//ஒருவேளை உங்கள் பதிவில் என்னை கலாய்த்து எழுதியிருப்பீர்களேயானால் தாராளமாக லிங்க் கொடுங்கள், முன்னரே பின்னூட்டம் போட்டு எனக்கு அதில் எந்த வருத்தமுமில்லைன்னு தெரியபடுத்தி விடுகிறேன், இல்லையென்றால் யாராவது வால் கோவிச்சிக்க போறார்ன்னு உங்களை குழப்பக்கூடும்!//
அது சரி....
குசும்பனுக்கு வாழ்த்துக்கள். இன்னொரு பதினாரு இல்லன்னாலும் பத்தாவது பெற்று வளமோடு வாழ வாழ்த்துக்கள்.
உண்மைதான் டிஸ்கவரி சேனல்களில் இடம்பெறும் தகவல்கள் பயனுள்ளதாகவே இருக்கிறது தாங்கள் குறிப்பிடடுள்ள தகவல்கள்போல்....குழந்தைகளும் பார்க்கவேண்டும்....
புதிர்போட்டிக்கான விடை உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன். அதனால் நான் வேறு சொல்லவேண்டுமா என்ன?
குவியல் நன்று...
குசும்பனுக்கு வாழ்த்துக்கள்.
நீங்கள் 400ஐ கடந்ததிற்கும் வாழ்த்துக்கள்.
நானும் இலங்கையில் இருக்கும் போது அங்குள்ள அரச தொலக்காட்சியில் கிழமை நாட்களில் ஒரு மணிநேரம் தமிழ் டிஸ்கவரி போட்டார்கள் அதை தவற விடாமல் பார்த்து வந்தேன். நல்ல நிகழ்ச்சி...:)
குவியல் ஓகே .. ஆனால் சுவாரசியம் கம்மியா இருக்கே.
400 பேர் உங்களை நம்பி படிக்குறாங்க இன்னும் கலகலா எழுதுங்க தல.
புதிர்க்கு பதில் சத்தியமா எனக்கு தெரியல..
402 ற்கு வாழ்த்துகள்
//இந்தியாவில் மிளகாய் கிடையாது மிளகு தான் காரத்திற்கு//
ஆமாங்க மிளாகாயோடு வந்ததுதான் நெஞ்சு எரிச்சல்
தரமான படைப்புக்கள் வரவேற்கப்படுகிறது.
கதை, கட்டுரை, கவிதை, புனைவுகள் மற்றும் சிற்றிலக்கியம் சார்ந்த உங்களின் படைப்புக்களை தமிழ்க்.காம் இணையத்தில் இணைக்கலாம்.
இணையதள முகவரி.
www.tamilk.com
மின்னஞ்சல் முகவரி.
infotamilk@gmail.com.
20 Miles..
Length of the diagonal of a rectangle with (16,12) :)
இந்த மாதிரி சின்ன கணக்கு மட்டும் தான் எனக்கு வரும். அதுவும் கால்குலேடர் எல்லாம் இருந்தா தான் :)
//உயிரோடிருக்கும் தவளையை தோலை உறிப்பது, உயிரோடு இருக்கும் மீனை வெட்டி பச்சையாக சாப்பிடுவது போன்றவை அதிகப்படியான வன்முறை அல்ல, அவர்களது உணவு பழக்கமுறையே அது தான்!, நாமும் ஆட்டையும், கோழியையும் கழுத்தை அறுத்து தானே கொலை செய்கிறோம்!
///
Very Nice..Without understanding one country's culture we used to comment it... Your view shhould be appreciated
//சாட்டில் லிங்க் கொடுக்கும் நண்பர்களுக்கு, நான் உங்களுக்கு பாலோயராக இருக்கும் பட்சத்தில் உங்கள் பதிவு எக்காரணம் கொண்டும் மிஸ்ஸாகாது, அதான் மிஸ்ஸாகுதுல நாங்க கொடுக்கும் போது படிக்க வேண்டியது தானேன்னு நீங்க கேட்பது தெரிகிறது//
கோவப்படாதீங்க தல.....நிதானமா படிங்க.........யாரு வேணாமுன்னா.........
நானூறுக்கும் லட்சத்துக்கும் வாழ்த்துக்கள் வாலு, கேள்விக்கு பதில் ஆங்கிலத்தில்.
2 vehicles start at the same point and travel 6 miles in opposite direction. They turn left and travel 8miles. Now from the end point to starting point if you draw a Right Angle Triangle, the distance is 10 miles (ABsquare + BC square = AC Square)= AC square = 6*6 + 8*8 = 100, so AC = 10.similarly the distance between the start point and the end point of the second vehicle is 10 miles, so the distance between 2 vehicles is 10+ 10 Miles = 20 Miles.
சரிதானே வாலு...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
குசும்பர்க்கு வாழ்த்துக்கள்..
வால்ஸ் நான் கணக்குல கொஞ்சம் இல்லை நிறையா வீக்..
எப்படி போட்டாலும் 16 தான் வருது..
நான் ஒரு முட்டாள் ... அதனால் நான் இந்த விளையாட்டுக்கு வரல
"Anonymous said...
14 Miles
--Kumar (USA)"
usa nna ulavar sandhai of andipatti yaa??????
குசும்பனுக்கு வாழ்த்துக்கள்.
நீங்கள் 400ஐ கடந்ததிற்கும் வாழ்த்துக்கள்.
தமிழ்நாட்டில் இருப்பவர்களில் தமிழில் ஒளிப்பரப்பாகும் டிஸ்கவரி சேனலை தவற விடாதீர்கள்,
//
இது சன் DTH ல் மற்றும் ரிலையன்ஸில் வருகிறதா..?
வந்தால் வீட்டில் உள்ளவர்களை பார்க்க சொல்லலாம் !
பதிவுலகுக்கு வந்து நான் விரும்பி படித்த முதல் பதிவு உங்களோடதுதான். இப்பொழுதும் கூட அதே எழுத்து நடை. இன்றைய பதிவு அருமை...
லட்சம் தண்டியதற்கு வாழ்த்துக்கள்.
நானூறுக்கு வாழ்த்துகள்
400க்கு வாழ்த்துகள் வால்..
விடை 20 மைல்னு எல்லாரும் சொன்னதை நானும் ரிப்பீட்டிக்கிறேன்,
குசும்பனுக்கு நல்வாழ்த்துகள்
உன் மாப்பிள்ளை ஜூனியருக்கும் நல்வாழ்த்துகள்
402க்கும் நல்வாழ்த்துகள்
ரெண்டு லச்சத்துக்கும் நல்வாழ்த்துகள்
புதிருக்கு விடை பிதாகோரஸ் தேற்றம்கை கொடுக்கும் - விடை இருபது மைல்கள்
400க்கு வாழ்த்துக்கள் தல.
20 மைல்னு நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள் வால் 400 பாலோயர்ஸ்க்கு
வாழ்த்துக்கள் வால் அவர்களே..!
குவியல் அருமை வால். நிறைய விஷயங்கள்..
:)))
400 க்கு வாழ்த்துக்கள்
20 miles. catku prepare panitu idhu kandu pidikalaina avamanam.... discovery idhuka pathukitu irukom.....
kim 2 kik matteruku pathil solirukinga pola... :)
பிதாகரஸ் தேற்றத்தையில்ல திரும்ப படிக்கணும் அவ்வ்வ்வ்...
400க்கு வாழ்த்துக்கள் தல குசும்பன் சரவணருக்கும் வாழ்த்துக்கள்
குசும்பனுக்கு வாழ்த்துகள் !!! 400 அடிச்சதுக்கு உங்களுக்கும் வாழ்த்துகள் !!!
குழந்தை பாலியல் கல்வி குறித்த உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
Vaal. Neenka Brian LAra Record aa muri adichupittenka..
20 Miles..
Length of the diagonal of a rectangle with (16,12)//
எனக்கு தெரிஞ்சு பித்தாகோரச் தான் போட முடியும். இது எப்படி? . ஹைப்பாடன்னியுசின் தூரம் தானே கேள்வி?
குசும்பனுக்கு வாழ்த்துகள்..
400 க்கு உங்களுக்கு வாழ்த்துகள்..
டிஸ்கவரி சனல் எங்களுக்கு தெரியாது வால்...
கேட்டா செட் அப் பாக்ஸ் வாங்கனுமா...
நல்ல குவியல்...
குசும்பனுக்கு வாழ்த்துகள்..
அப்பறம் நல்ல கணிதம் பாராட்டுகள்..
20 மைல்கள்
வாழ்த்துகள் வால்பையா...
400 followersனா சும்மாவா...
நல்ல குவியல்..
குசும்பனுக்கு வாழ்த்துகள்...
20 miles !!!
குசும்பன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்..
இனிமே உங்களை தொந்தரவு பண்ணமாட்டேன் வால் அண்ணே..
டிஸ்கவரி சேனல் நீங்க வருவீங்களா அண்ணா..
20 மைல்கள் என நினைக்கிறேன்...
அருமையான குவியல்
அப்பாவான குசும்பன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
நான் 397வது. சன் டீடிஹெச்'ல டிஸ்கவரி கமல் ரேஞ்சுக்கு ஆங்கிலம் பாதி ஹிந்தி பாதின்னு வருது...
அதர் ஆப்சன் யூஸ் செய்யாது சொல் அழகன் பெயரில் நீங்கள் ஏன் ஒரு ஐ.டி ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.
கொமாரு
400க்கு வாழ்த்துக்கள்.
- பொன்.வாசுதேவன்
Use Pithagurus Theorem!
20 Miles Apart!
ஒரு லட்சம் ஹிட்ஸ்க்கு வாழ்த்துகள், 400 பலோயருக்கு வாழ்த்துகள்,
தமிழ்நாட்டில் இருப்பவர்களில் தமிழில் ஒளிப்பரப்பாகும் டிஸ்கவரி சேனலை தவற விடாதீர்கள்,
இப்படி ஒரு சேனல் இருக்கா? எங்களுக்கு தெரியாதே? சேட்டிலைட் சேனலா தல?
//ஒருவேளை உங்கள் பதிவில் என்னை கலாய்த்து எழுதியிருப்பீர்களேயானால் தாராளமாக லிங்க் கொடுங்கள், முன்னரே பின்னூட்டம் போட்டு எனக்கு அதில் எந்த வருத்தமுமில்லைன்னு தெரியபடுத்தி விடுகிறேன், இல்லையென்றால் யாராவது வால் கோவிச்சிக்க போறார்ன்னு உங்களை குழப்பக்கூடும்!//
அடிக்கடி சொரிய விடாதிங்க தம்பிபிபிபிபி...
நான்கு சதம் அடித்த 'வாலுக்கு' நீண்ட நானூறு வாழ்த்துக்கள்....
400-க்கு வாழ்த்துக்கள் தல.
புதிருக்கு தரை வழி - 28 மைல்கள்
Diagonal என்றால் - 20 மைல்கள்
//புதிருக்கு தரை வழி - 28 மைல்கள்
Diagonal என்றால் - 20 மைல்கள்//
சபாஷ்... சரியான விடை...
எல்லோரும் சொன்னதுதான். 20 மைல்.
மீ த 406
//Prakash said...
20 Miles..
Length of the diagonal of a rectangle with (16,12)//
எனக்கு தெரிஞ்சு பித்தாகோரச் தான் போட முடியும். இது எப்படி? . ஹைப்பாடன்னியுசின் தூரம் தானே கேள்வி?
//
If you make a pictorial rep of what 'Vaal' said, it comes as a rectangle(16x12) and the length of the diagonal gives the exact distance between the two..
Also, rectangle itself is a combination of two RA Triangles.. So Pythagoras theorem can also be applied..
407 க்கு வாழ்த்துகள். இது போல கேள்வி எல்லாம் கேட்கறதா இருந்தா பதிலை முதல்ல மெயில்ல சொல்லிட்டு அப்புறம் கேளுங்க சரியா
400க்கு வாழ்த்துக்கள் வால்.
மிளகு பற்றி சொன்னதும் எங்க வாத்தியார் சொன்னதுதான் ஞாபகம் வந்தது...
’மிளகுதான் உடம்புக்கு நல்லது. அது தெரிஞ்ச வெள்ளக்காரன் அதையே உபயோகிக்க ஆரம்பிச்சுட்டான்... நாம மிளகாய்க்கு மாறிட்டோம்...’
டிஸ்கவரி சேனல் பத்தி நீங்க எழுதுனதால ஒரு 400 பேருக்கு அதப் பத்தி தெரிஞ்சுருக்கும். நன்றிகள் எழுதுனதுக்கு. மெகா,கிகா சீரியலில் இருந்து தமிழகம் மீள வேண்டும்.
////Prakash said...
20 Miles..
Length of the diagonal of a rectangle with (16,12)//
எனக்கு தெரிஞ்சு பித்தாகோரச் தான் போட முடியும். இது எப்படி? . ஹைப்பாடன்னியுசின் தூரம் தானே கேள்வி?
//
If you make a pictorial rep of what 'Vaal' said, it comes as a rectangle(16x12) and the length of the diagonal gives the exact distance between the two..//
அந்த செவ்வக வடிவத்தின் மூலை விட்டத்தின் நீளம்தான் அந்த வண்டிகளுக்கிடையேயான தொலைவு!
அந்த செவ்வகத்தை பாதியாகப் பிரித்தால் இரண்டு செங்கோண முக்கோணங்கள் கிடைக்கும்!
அந்த செங்கோண முக்கோணங்களின் கர்ணம், செவ்வகத்தின் மூலைவிட்டம் இரண்டும் ஒரே அளவுதான்!
ஆக அடிப்படையில் பித்தாகரஸ் தேற்றம் மூலமும் கணக்கிடலாம்! அல்லது செவ்வகத்தின் மூலைவிட்டமாகவும் கணக்கிடலாம்!
பித்தாகரஸ் தேற்றம்:
ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின் வர்க்கம் அதன் மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்குச் சமம்!
ஏ ஸ்கொயர் + பி ஸ்கொயர் = சி ஸ்கொயர்!
கணித மேதை நாமக்கல் சிபி வால்க.. வால்க.. :)))
400 க்கு வாழ்த்துக்கள் வால்.
குசும்பனுக்கும் வாழ்த்துக்கள்.
குசும்பனுக்கு வாழ்த்துக்கள். 400 க்கு மேல் ஃபாலோயர்ஸ் பெற்றதுக்கு உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
யாராவது வால் கோவிச்சிக்க போறார்ன்னு உங்களை குழப்பக்கூடும்! //
எதுக்கு இந்த எச்சரிக்கையெல்லாம்...
24miles nice kuviyal
here is my new blog if u have time come to my blog
www.rohithjkr.blogspot.com
குசும்பனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நம் வாழ்த்துக்கள்!
407 க்கு வாழ்த்துக்கள் வால்!
//நாமக்கல் சிபி said
அந்த செவ்வகத்தை பாதியாகப் பிரித்தால் இரண்டு செங்கோண முக்கோணங்கள் கிடைக்கும்!
அந்த செங்கோண முக்கோணங்களின் கர்ணம், செவ்வகத்தின் மூலைவிட்டம் இரண்டும் ஒரே அளவுதான்!//
//Also, rectangle itself is a combination of two RA Triangles.. So Pythagoras theorem can also be applied..//
இதத் தான் நானும் சொல்லி இருக்கேன் தல.. ஆமா, 'Main' தல ரெம்ப நேரமா சீன்லயே காணோமே??
/உயிரோடிருக்கும் தவளையை தோலை உறிப்பது, உயிரோடு இருக்கும் மீனை வெட்டி பச்சையாக சாப்பிடுவது போன்றவை அதிகப்படியான வன்முறை அல்ல, அவர்களது உணவு பழக்கமுறையே அது தான்!, நாமும் ஆட்டையும், கோழியையும் கழுத்தை அறுத்து தானே கொலை செய்கிறோம்!//
வாலு,
தேன் தடவிய மருந்து.
உங்க மாப்பிள்ளய விசாரிச்சதா சொல்லுங்க.
நாலாயிரத்துக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.
வா.மு கோ.மு கதை நானும் மிகவும் ரசித்தேன்.இது போன்ற கதைகளுக்கு பல விதமான ரியாக்ஷன்ஸ் இருப்பதில் பெரிய ஆச்ச்ரியம் எதுவுமில்லை.
குவியல் அருமை...
வாமு .கோமுவின் கதை சூப்பர்!
நீங்க நீங்கதான் பாஸு!
:)
வாமுகோமு அவர்களின் கதைக்கு பின்னூட்டம் இட்டாச்சுங்க தல... சாரி வால்!
புதிர் விடை: 20 மைல்
குவியல் கலக்கல்.. வாழ்துக்கள் ஸார்.
-Toto
www.pixmonk.com
//எனக்கு பாலோயர்களாக இருப்பவர்களுக்கும், தொடர்ந்து பின்னூட்டம் இடுபவர்களுக்கும் தான் என் முதல் பார்வை\\
இது தான் போட்டு வாங்குறதா
வடை
ஈ) 20 மைல்கள்
கேள்வி மட்டும் அலர்ஜி..
மத்ததெல்லாம் ஜாலி..
(சே.. என்ன ஒரு ரைமிங்குப்பா...)
407 க்கு வாழ்த்துக்கள்.
என்ன இரகசியம் நமக்கும் சொல்லிக்குடுப்பா...
அந்த டிஸ்கவரி சேனல் டிஸ் டீவீலே வருமா?
400 க்கு வாழ்த்துக்கள்
அந்த டிஸ்கவரி சேனல் டிஸ் டீவீலே வருமா?
400 க்கு வாழ்த்துக்கள்
குவியல் கலக்கல் தல.. அப்புறம் 400க்கு வாழ்த்துகள்..
நண்பர்கள் கவனத்திற்கு
Tamil
Web Submit
(comeing soon) - Auto Submit
Tamil News Submit
English
Top Blogs
Cinema
Cine Gallery
எந்தா சாரே சுகந்தானே. இவ்விட வல்லிய சுகமாயிட்டு உண்டு. எந்தா க்விஸ் எல்லாம் பறையின்னது. நமக்கு அறிவு கொஞ்சம் கம்மியாக்கும். பின்ன அந்த காட்டுப் பயண கட்டுரை எந்தாயிற்று. பின்ன பதிவிட்டா மதி. நன்றி. வரேன் சாரே.
கிம் கி டுக்.. படம் கருத்து அருமை.
நண்பா 10 மைகள் என்று நினைகின்றே
ithu ungal karutha ? copied from ur comment on dondu site. if yes, the nobel prize should be given to u for this "kandupiduppu", ethnai periyar vanthalum....
இடஒதுக்கீடு என்ற பெயரில் பார்பனர்களை எல்லாம் வெளிநாட்டுக்கு துரத்திவிட்டுட்டோம்! இந்தியாவிற்கு வர வேண்டிய வளர்ச்சியும், பொருளாதார முன்னேற்றமும் வெளிநாட்டுக்கு போய்விட்டது!,
இடஒதுக்கீட்டில் மாற்றம் கண்டிப்பாக தேவை, உயிரை கொடுத்து படிக்கும் மாணவர்கள் சாதிய அடிப்பையில் சீட் கிடைக்காமல் நிறிகும் போது அவனுக்கு மொத்த இந்தியாவின் மீதே கோபம் வரும்!
தாழ்த்தபட்டவர்களும் உயர வேண்டியது அவசியம் தான், அதே வேலையில் திறைமையானவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்! இல்லையென்றால் நாட்டின் மனிதவளம் நாசமாய் போய்விடும்.
சாதிய அடிப்படையில் சீட்டு வாங்குவதும், லஞ்சம் கொடுத்து சீட்டு வாங்குவதும் என்னை பொறுத்தவர ஒண்ணு தான்!
கலக்குறீங்க பாசு குவியலிலையும்
ரவி அண்ணாத்தே
அந்த பின்னூட்டம் மாதவராஜின் பதிவில் ஒருவர் இட்டிருந்த பின்னூட்டம்!
அதை அங்கேயே தெளிவா சொல்லியிருக்கேன்!
நோபல் பரிசு உங்களுக்கு தான்! அப்பாவி மாதிரியே நடிக்கிறதுக்கு!
//தமிழ்நாட்டில் இருப்பவர்களில் தமிழில் ஒளிப்பரப்பாகும் டிஸ்கவரி சேனலை தவற விடாதீர்கள், //
அப்படியா! ரொம்ப நல்ல விஷயம். இதை மற்றவர்களுக்கும் தெரிவிக்கிறேன்
வாழ்த்துக்கள் வால்
கணக்குன்னா எனக்கு ரொம்பப் புடிக்குமுங்ககோ! செங்கோண முக்கோணக் கணக்கு ஏழாம் வகுப்புலேயே படிச்சிருக்கனுங்கோ! 20 கிலோ மீட்டருங்கோ! கணக்குக்கும் எனக்கும் இல்லீங்கோ. விடையைச் சொன்னேங்கோ!
20 ௦ மைல்'கள்
புதிருக்கான விடை!
20 மைல்கள் தான்!
விளக்கமா நாமக்கல் சிபி சொல்லிட்டாரு!
//சிம்பா said...
பதிவுலகுக்கு வந்து நான் விரும்பி படித்த முதல் பதிவு உங்களோடதுதான். இப்பொழுதும் கூட அதே எழுத்து நடை. இன்றைய பதிவு அருமை...//
உங்கள் நம்பிக்கையை மேலும் காப்பாற்றுவேன்னு நம்புறேன் தல!
வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!
//போன மாதம் மதுரையில் கூட தருமி ஐயா தலையில் அதே நிகழ்ச்சியை நடத்தலாம் என பேசினார்கள்!, //
தருமி ஐயா தலையை நிகழ்ச்சிக் கூடம் ஆக்கிவிட்டீர்களே !
:)
Post a Comment