மதியம் செவ்வாய், அக்டோபர் 6, 2009

குவியல்!..(06.10.09)

பெயரிலேயே அன்பு வைத்திருப்பவர், நேரில் எப்படியிருப்பார் சொல்லவா வேணும்! அன்பை ஜூஸாக பிழியும் அன்பு அண்ணணுக்கு இன்று பிறந்த நாள்! இந்த வாரத்தில் அவர் வலைச்சர ஆசியராக இருப்பது மேலும் சிறப்பு!, இன்னோரு ஆச்சர்யமும் உண்டு இவரது நண்பர் டக்ளஸுக்கு நாளை பிறந்தநாள்! கார்த்திகை பாண்டியன் சொன்னது போல் நமிதா பிறந்த ஊரில் இருப்பது தனது பெருமை என்று அங்கிருந்தாலும் தினமும் தமிழ்பணி ஆற்றுகிறார்!(டீ இல்ல)!
இந்த இருவருமே தங்களை யூத்தாக காட்டி கொள்ள இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள்!, இருவருக்கும் விரும்பிய பெண்ணே மனைவியாக அமைந்து விரைவில் பூரிகட்டையில் பூசை பெற அனைவரும் வாழ்த்துவோம்!

**

எனது பழைய 6600 மாடல் நோக்கியா அலைபேசி பல்லிளித்துவிட்டது! ஓரிரு நாட்கள் அலைபேசி இல்லாமல் நிம்மதியாக இருந்தாலும், எனது வாடிக்கையாளர்களுக்கு அந்த எண்ணை மட்டுமே கொடுத்துள்ளதால் மீண்டும் புது போன் வாங்கிவிட்டேன்! அதே நோக்கியாவிலேயே 5130 என்னும் மியூசிக் ஸ்பெஷல் மாடல், ரேடியோவும் உண்டு! இல்லையென்றால் பதிவு செய்து வைத்துள்ள பாடல்களை கேட்டு கொண்டு இருக்கலாம்! மேட்டர் என்னான்னா உங்களது தொடர்பு எண்கள் அனைத்தும் இழந்து விட்டேன்! அதனால் உங்களால் முடிந்தால் தொடர்பு கொண்டோ, குறுந்தகவல் அனுப்பியோ, அல்லது மின்னஞ்சலோ செய்தால் உதவியாக இருக்கும்!
எனது அதே எண்:9994500540
மெயில்:arunero@gmail.com



**

இரண்டாம் உலகபோர் பற்றி பல படங்கள் வந்துவிட்டது, அல்லது அதன் பாதிப்புகள் பற்றி வரும், அதன் பிறகு போர் பற்றிய படமென்றால் அது வளைகுடா போர் தான், போன வருடம் வரை கூட வந்து கொண்டு இருக்கிறது! அந்த வரிசையில் three kings என்ற படமும் பார்க்க வேண்டிய ஒன்று!, ”பேட்மேன்” புகழ் ஜார்ஜ் க்ளூனி நேர்த்தியான நடிகர் கூடவே ”ப்ளானட் ஆஃப் த ஏப்ஸ்” புகழ் மார்க் வில்ம்பெர்க்கும், ”ட்ரிபிள் எக்ஸ்” புகழ் ஐஸ்க்யூபும், ஆக்ஸனுக்கு பஞ்சமில்லை, இருப்பினும் அங்கிருந்த மக்களின் வாழ்க்கை முறையும் நிம்மதிக்காக அவர்களின் ஏக்கமும் ஒவ்வோரு யுத்தபூமியும் இவ்வாறு தான் இருக்கும் என நமக்கு காட்டுகிறது!



**

சென்ற வாரத்தில் சில மூத்த பதிவர்களோடு நான் வனாந்திரம் சுற்றி வந்தது பற்றி அறிந்திருப்பீர்கள்! அது பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது! புகைப்படங்கள் மிக பெரிய அளவில் இருப்பதால் பிக்காஸாவில் சில ஜிமிக்ஸ் வேலை செய்ய வேண்டியிருக்கிறது! மேலும் பல செய்திகளுடன் விரைவில் ”தெப்பக்காடு பயணக்கட்டுரை” வரும்!

**

பதிவுலகை விட்டு சற்றே விலகி இருக்கும் மூத்த, பிரபல, சர்ச்சைகுறிய ஒரு பதிவரின் கவிதை இது! கிட்டதட்ட எதிர்கவுஜ மாதிரி தான்!, யாருக்கு எதிர் கவுஜ என்பது உங்கள் சிந்தனைக்கு!

சந்திப்புகளின் போது
சிரித்த முகத்தோடு
அருகில் வந்து முகமன்
கூறினார் ,
முன்வந்து கைகுலுக்கியபோது
சிரித்தபடி அணைத்துக்
கொண்டார்,
அணைக்கையில் முதுகு தடவி
இறுக்கினார்
பாராட்டினால் மென்முருவலோடு
மறுதலித்தார்
தேசிய ஒருமைப்பாடு பேசினார்
சாதிகள் இல்லையடி பாப்பா
என்றான் பாரதி என்றார்
இப்ப எல்லாம் எங்கே சாதி பார்க்கிறார்கள்
என்று அங்கலாய்த்தார்
மனிதம் ஓங்க
ஒன்றுபடுவோம் என்றார்
சக்தி வாய்ந்த கடவுள் என்றார்
கூட்டுப்பிரார்த்தனை பலிக்குமென்றார்
வணங்கும் போது
அவர் உள்ளே
நான் வெளியே

92 வாங்கிகட்டி கொண்டது:

நையாண்டி நைனா said...

super kuviyal

மேவி... said...

supero super

மேவி... said...

avangalukku valthukkal

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

வணக்கம் தல.
குவியல் நல்லா இருக்கு,
ஆனா கும்மி எப்போ?

Raju said...

அன்புவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

நாளை என் பிறந்த நாள் இல்லை..தவறான தகவல்.
:)

அப்பாவி முரு said...

அன்புவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!


//♠ ராஜு ♠ said...
நாளை என் பிறந்த நாள் இல்லை..தவறான தகவல்.
:)//

கேக், மாலை etc., etc க்கு ஆர்டர் பண்ணியாச்சு, இனி மாற்ற முடியாது, டக்ளசுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

பித்தனின் வாக்கு said...

வணக்கம் தலைவா, குவியல் நல்லா இருக்கு. நான் புதுசு என்பதால் எனக்கு புரியலை. தோழமைக்கு நன்றி

பின்னோக்கி said...

three kings படம் நல்லா இருக்கும். அதுவும் சதாம் ஹுசேன் வர்றாருன்னு தெரிஞ்சவுடனே அவுங்க ஆர்மி மக்களே ஓடுவாங்க பாருங்க. அது நல்ல சீன்.

நோக்கியாலயே நல்ல போன் நிறைய இருக்கு. இத ஏன் வாங்குனீங்க ??

ஜெட்லி... said...

அன்புக்கு வாழ்த்துக்கள்...
ராஜுக்கு வாழ்த்துக்கள்..
புது கைப்பேசி வாங்கியதற்கு
உங்களுக்கும் வாழ்த்துக்கள் வால்....

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அன்புவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

வால்பையன் said...

நாளை போஸ்ட் செய்யலாம் என்று எழுதி ட்ராஃப்டில் வைத்திருந்த குவியல் மக்களின் பதிவார்வத்தில் இன்றே போஸ்ட் செய்ய வேண்டியதாயிற்று!

அன்புவுக்கு நாளை பிறந்த நாள்
(07.10.09)
டக்ளஸுக்கு நாளை மறுநாள் பிறந்தநாள்.
(08.10.09)

butterfly Surya said...

நண்பர்களுக்கு வாழ்த்துகள்.

குவியல் அருமை.

பதி said...

எதிர் கவிதைக்கு ஒரு +1 !!!!

:-))))

ஹேமா said...

வாலு,கவிதையை மாத்தினாலும் அழகா மாத்தியிருக்கீங்க.

எங்கே ரொம்ப நாளாக் காணோம் உங்களை!

யோ வொய்ஸ் (யோகா) said...

அன்புக்கு வாழ்த்துக்கள்...
ராஜுக்கு வாழ்த்துக்கள்.

ரிப்பீட்டு தல..

எதிர்கவுஜ சவுக்கடி..

க.பாலாசி said...

அன்பு மற்றம் டக்ளஸ் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

//இருவருக்கும் விரும்பிய பெண்ணே மனைவியாக அமைந்து விரைவில் பூரிகட்டையில் பூசை தர அனைவரும் வாழ்த்துவோம்!//

இருவருக்கும் விரும்பிய பெண்ணே மனைவியாக அமைந்து, விரைவில் பூரிக்கட்டையில் பூசை பெற அனைவரும் வாழ்த்துவோம்.

கவிதை நேராயிருந்தாலும், எதிராயிருந்தாலும் நல்லாருக்கு....

க.பாலாசி said...

// க.பாலாஜி said...
அன்பு மற்றம் டக்ளஸ் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். //

அன்பு மற்றும் டக்ளஸ் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Sanjai Gandhi said...

//மேட்டர் என்னான்னா உங்களது தொடர்பு எண்கள் அனைத்தும் இழந்து விட்டேன்! //

குடுத்து வச்ச மகராசனுங்க எல்லாம் அப்டியே தப்பிச்சி ஓடிப் போய்டுங்க.

மாதவராஜ் said...

போன் தொலைந்ததைத் தவிர வழக்கமான நசைச்சுவையைக் காணோமே! :-)))))

Anonymous said...

தள!!! என்னோட நம்பறையுமா தொளைசிட்டே !!! இந்த தடவையாச்சும் என் நம்பறை மனசிள் குரிச்சுக்கோ

சொள் அலகன்

☼ வெயிலான் said...

// குடுத்து வச்ச மகராசனுங்க எல்லாம் அப்டியே தப்பிச்சி ஓடிப் போய்டுங்க. //

ஐயோ! நான் என் நம்பரைக் கொடுத்திட்டேனே :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

யாருய்யா அது சொள் அலகன்! சும்மா சிக்ஸரா அடிக்கறாரு!!

Menaga Sathia said...

குவியல் நல்லாயிருக்கு வால்!!

அன்புக்கும்,டக்ளஸ்க்கும் அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

தினேஷ் said...

:) வாழ்த்துக்கள் நண்பர்களுக்கு..

க்ச்விதை ...

S.A. நவாஸுதீன் said...

குவியல் நல்லா இருக்குன்னாலும் ‘வால்’தனம் கம்மிதான் தல

Anonymous said...

அருண்,

5130 தவறான தேர்வு. பேசிக்கொண்ட்டிருக்கும்போதே, திடீரென ஹேங்க் ஆகி விடும், அழைத்தவர் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

அவ்வாறு ஹேங்க் ஆனால் பேட்டரியைக் கழட்டி மீண்டும் மாட்டினால்தான் வேலை செய்யும்.

முடிந்தால் உடனே மாற்றிக் கொள்ளுங்கள். நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. நோக்கியாவில் கொடுத்திருக்கிறேன் 15 நாட்களாகி விட்டது இன்னமும் சரி செய்ய வில்லை. வேறு ஹேண்ட்செட்டும் தரவில்லை. நோக்கியா என்ற பெயர்தான் பிரபலமே தவிர தரமில்லை.

என் சகோதரனுக்கும் இதே பிரச்சினை இருக்கிறது. என் ஹேண்ட்செட்டுக்கு என்ன தீர்வு வருகிற்து என்பதற்காகக் காத்திருக்கிறோம்.

நட்புடன் ஜமால் said...

அன்புக்கு அன்பான வாழ்த்துகள்.

வால்பையன் said...

//5130 தவறான தேர்வு. //

அவ்வ்வ்வ்வ்வ்

வடிவத்தை பார்த்து ஏமாந்துட்டேன் போலயே!

கலையரசன் said...

சுற்றுபயணம் போயிருந்தீங்களா? அதான் ஆளையே கானாமா தல..?
ரைட்டு பயணக்கட்டுரைக்கு வெயிட்டிங்! குவியல் சுமார்தான்!!

கலாட்டாப்பையன் said...

அய்யா அந்த கவிதைக்கு சொந்த காரர் யாருங்கய? ஒன்னுமே புரியல ??

அறிவிலி said...

//பதிவுலகை விட்டு சற்றே விலகி இருக்கும் மூத்த, பிரபல, சர்ச்சைகுறிய ஒரு பதிவரின் கவிதை இது! //

எட்டு நாள்தானே எழுதல.. அதுக்கே "சற்றே விலகி இருக்கும்"னு போட்றுக்கீங்க....

cheena (சீனா) said...

குவியல் நல்லாவே இருக்கு

அன்பின் அனிபிற்கும்
அன்பின் டக்ளசுக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

Prabhu said...

இருவருக்கும் விரும்பிய பெண்ணே மனைவியாக அமைந்து விரைவில் பூரிகட்டையில் பூசை பெற அனைவரும் வாழ்த்துவோம்!/////

ஓம்!

அந்த கவித கொஞ்சூண்டு தான் மாத்திருக்கீங்களா!

தீப்பெட்டி said...

எதிர் கவிதை அருமை..

பீர் | Peer said...

வாழ்த்துக்கள் தம்பிகளா...

அன்புடன் அருணா said...

/மக்களின் பதிவார்வத்தில்/
மக்களின் பதிவார்வத்திலா? உங்களின் பதிவார்வத்திலா?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அடப்பாவமே! காத்திருந்து வாங்குனது இப்படி ஒரு ஹேண்ட் செட்டா?

குடுகுடுப்பை said...

எதிர் கவுஜயில் இருக்கும் அர்த்தம் தனிப்பதிவாக வரவேண்டியது
தனியாக பதிவிடுங்கள். கிளப்புவோம் சர்ச்சையை

ஆ.ஞானசேகரன் said...

//இந்த இருவருமே தங்களை யூத்தாக காட்டி கொள்ள இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள்!, இருவருக்கும் விரும்பிய பெண்ணே மனைவியாக அமைந்து விரைவில் பூரிகட்டையில் பூசை பெற அனைவரும் வாழ்த்துவோம்!//

வாழ்த்துவோம்

ஆ.ஞானசேகரன் said...

குவியல் அருமை நண்பா

Jerry Eshananda said...

பெர்த் டே பேபீஸ் களுக்கு [அன்பு+ டகளஸ் ] இறுக்கி அன்னைசசு ரெண்டு "உம்மா " தர்றேன். அப்புறம் எப்பா டக்ளசு, எங்களையும் சூரத்துக்கு சுத்தி பாக்க,கூட்டிட்டு போகலாமுள்ள.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//வணங்கும் போது
அவர் உள்ளே
நான் வெளியே\\


அருமையான குவியல்

எம்.எம்.அப்துல்லா said...

இரண்டு அண்ணன்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்.

அப்புறம் அந்த கவிதை யாருக்கு யாரோட எதிர் கவிதைன்னு தெரியல :)

வினோத் கெளதம் said...

நல்லா irukkuthu kuviyal...:)

Kumky said...

நமஸ்காரம்...

Unknown said...

அன்புவுக்கும், ராஜுவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்..

கவித அருமை தல..

ப்ரியமுடன் வசந்த் said...

அன்புக்கும் டக்ளசுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

மணிஜி said...

சிங்கம்,புலியெல்லாம் பாத்தியா?

புலவன் புலிகேசி said...

//மனிதம் ஓங்க
ஒன்றுபடுவோம் என்றார்
சக்தி வாய்ந்த கடவுள் என்றார்
கூட்டுப்பிரார்த்தனை பலிக்குமென்றார்
வணங்கும் போது
அவர் உள்ளே
நான் வெளியே//

குவியல் நல்லா இருக்கு.....அந்த நபரின் கவிதை அருமை......

anujanya said...

'வால்தனம்' கொஞ்சம் கம்மிதான் இந்த முறை :)

அன்பு, ராஜு இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.

சொள் அலகனுக்கு விசிறிகள் ஆகிடுவோமோன்னு பயமா இருக்கு :)

அனுஜன்யா

மங்களூர் சிவா said...

இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

வரதராஜலு .பூ said...

சக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்

குவியல் நல்லாயிருக்கு

வரதராஜலு .பூ said...

சக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்

குவியல் நல்லாயிருக்கு

Beski said...

இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கண்ணகி said...

பூரிகட்டை பூசை வேண்டாதவர்கள் விவேகானந்தராகவே இருக்கலாமே

ஊடகன் said...

நண்பர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .......
இந்த வார குவியல் அருமை.....
தொடருங்கள் நண்பரே ..............!

அ.மு.செய்யது said...

அந்த சொள் அலகன் யாருன்னு எனக்கு மட்டும் தனியா போன் பண்ணி சொல்லுங்க வால் !!

அன்பு, ராஜு Birthday wishes !!

மைனர் குஞ்சு said...

தல..... நானும் படிச்சிட்டேன்....

Anbu said...

வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த சிறுவனின் மனமார்ந்த நன்றிகள்..

Anbu said...

\\\இருவருக்கும் விரும்பிய பெண்ணே மனைவியாக அமைந்து விரைவில் பூரிகட்டையில் பூசை பெற அனைவரும் வாழ்த்துவோம்!\\\

ஏன் அண்ணா இந்த கொலைவெறி...

வரதராஜலு .பூ said...

//இருவருக்கும் விரும்பிய பெண்ணே மனைவியாக அமைந்து விரைவில் பூரிகட்டையில் பூசை பெற அனைவரும் வாழ்த்துவோம்!

ஏன் அண்ணா இந்த கொலைவெறி...//

வாங்கறவங்கல்லாம் அப்படிதான் சொல்லுவாங்க. இதுக்கெல்லாம் பயப்படதிங்க அன்பு. எல்லாம் பழகிடும்

குசும்பன் said...

முதல் பத்தி மேட்டருக்கு இரு பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

************
இரண்டாம் பத்தி மேட்டருக்கு வாழ்த்துக்களோ வாழ்த்துக்கள்!

மீ தி எஸ்கேப்பு:)

வெண்ணிற இரவுகள்....! said...

//வணங்கும் போது
அவர் உள்ளே
நான் வெளியே//

அருமையான வரிகள் நண்பரே

நிஜாம் கான் said...

ஏண்ணே! அதே நம்பர்னு பொய் சொல்றீங்க. உங்க பழைய போன் நம்பர் 6600, இப்போ புதிய போன் நம்பர் 5130.

RAMYA said...

அன்புவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

RAMYA said...

அந்த சொள் அலகன் யாருன்னு எனக்கு மட்டும் தனியா சொல்லுங்க வால் !!


குவியல் வழக்கம் போல அருமை :))
பயணக் கட்டுரைக்காக காத்திருக்கோம்:)



//
SanjaiGandhi said...
//மேட்டர் என்னான்னா உங்களது தொடர்பு எண்கள் அனைத்தும் இழந்து விட்டேன்! //

குடுத்து வச்ச மகராசனுங்க எல்லாம் அப்டியே தப்பிச்சி ஓடிப் போய்டுங்க.
//

எல்லாரையும் தப்பிக்க வச்சிட்டாரமா
இஃகிஃகி இஃகிஃகி!

Romeoboy said...

வடகரை வேலன் said...
அருண்,

5130 தவறான தேர்வு. பேசிக்கொண்ட்டிருக்கும்போதே, திடீரென ஹேங்க் ஆகி விடும், அழைத்தவர் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

அவ்வாறு ஹேங்க் ஆனால் பேட்டரியைக் கழட்டி மீண்டும் மாட்டினால்தான் வேலை செய்யும்.

முடிந்தால் உடனே மாற்றிக் கொள்ளுங்கள். நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. நோக்கியாவில் கொடுத்திருக்கிறேன் 15 நாட்களாகி விட்டது இன்னமும் சரி செய்ய வில்லை. வேறு ஹேண்ட்செட்டும் தரவில்லை. நோக்கியா என்ற பெயர்தான் பிரபலமே தவிர தரமில்லை.

என் சகோதரனுக்கும் இதே பிரச்சினை இருக்கிறது. என் ஹேண்ட்செட்டுக்கு என்ன தீர்வு வருகிற்து என்பதற்காகக் காத்திருக்கிறோம்.//

நல்ல வேலை நான் இந்த மாடல் மொபைல் தான் வாங்கலாம் என்று இருந்தேன்.

தமிழ் அஞ்சல் said...

நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

ISR Selvakumar said...

நல்ல அவியல் . . . ஸாரி குவியல்

கார்த்திகைப் பாண்டியன் said...

குவியல் அருமை..:-))))

விக்னேஷ்வரி said...

பூரிகட்டையில் பூசை பெற அனைவரும் வாழ்த்துவோம் //

ஹிஹிஹி... நானும் வாழ்த்திக்கிறேங்க.

நம்பரை மிஸ் பண்ணதை மாடலோட சொல்லனுமா... :P

THREE KINGS - பார்த்திடலாம்.

பயணக் கட்டுரையா... ஐ, நல்லா இருக்குமே....

கவிதை நல்லாருக்கு. யாரோ யாருக்கோ எழுதிட்டு போறாங்க. நாம எதுக்கு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு...

அப்துல்மாலிக் said...

முழுதும் ரசித்தேன் தல‌

सुREஷ் कुMAர் said...

//
அதனால் உங்களால் முடிந்தால் தொடர்பு கொண்டோ, குறுந்தகவல் அனுப்பியோ, அல்லது மின்னஞ்சலோ செய்தால் உதவியாக இருக்கும்!
//
சாரி தல.. ஒருவாரமா பிளாக் பக்கம் வரமுடியலை.. கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.. மன்னிச்சுகோங்க..

தொடர்பு கொண்டுகிறோம் தல..

सुREஷ் कुMAர் said...

//
three kings என்ற படமும் பார்க்க வேண்டிய ஒன்று!
//
ஓ பாத்துடலாமே..

सुREஷ் कुMAர் said...

//
சென்ற வாரத்தில் சில மூத்த பதிவர்களோடு நான் வனாந்திரம் சுற்றி வந்தது பற்றி அறிந்திருப்பீர்கள்!
//
ஆமா.. நெம்ம்ம்ம்ம்ப மூத்தவர் ஒருத்தர் சொன்னாரு.. ஆனா அது வால் இல்லை..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

2009- என் 100-ஆவது இடுகை
இட்ட உங்களுக்கு எனது
வாழ்த்துக்கள்!

கூடுதுறை said...

நான் கூட தேடி பிடித்து வாங்கிய சைனா மொபைல் ஒரே அடியாக பல் இளிக்காமல் மாதம் ஒரு சர்விஸ் கட் ஆகி வருகிரிது.

குவியல் இது கூட நல்ல தான் இருக்கு

ஆப்பு said...

ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)
http://evandapirabalam.blogspot.com/2009/10/blog-post.html

Tech Shankar said...

2009ன் 100வது பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள். வாழ்த்துகள்

thanks dear dude

குசும்பன் said...

//வடிவத்தை பார்த்து ஏமாந்துட்டேன் போலயே!//

இத்தனை வயசு ஆகி இன்னுமா அப்படி?

வால்பையன் said...

//பின்னோக்கி said...

three kings படம் நல்லா இருக்கும். அதுவும் சதாம் ஹுசேன் வர்றாருன்னு தெரிஞ்சவுடனே அவுங்க ஆர்மி மக்களே ஓடுவாங்க பாருங்க. அது நல்ல சீன். //

அதற்காக அவர்கள் செட்டப் செய்து காரெல்லாம் ரெடி பண்ணி வரும் சீன் சூப்பரோ சூப்பர்!

வால்பையன் said...

//மாதவராஜ் said...

போன் தொலைந்ததைத் தவிர வழக்கமான நசைச்சுவையைக் காணோமே! :-)))))//

என்னா கொலைவெறி!

வால்பையன் said...

//Anonymous said...

தள!!! என்னோட நம்பறையுமா தொளைசிட்டே !!! இந்த தடவையாச்சும் என் நம்பறை மனசிள் குரிச்சுக்கோ

சொள் அலகன்//

உங்க நம்பர் மட்டும் கிடைச்சா தன்யனாவேன்!

வால்பையன் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...

யாருய்யா அது சொள் அலகன்! சும்மா சிக்ஸரா அடிக்கறாரு!!//

எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சவர் தான்!

வால்பையன் said...

//குடுகுடுப்பை said...

எதிர் கவுஜயில் இருக்கும் அர்த்தம் தனிப்பதிவாக வரவேண்டியது
தனியாக பதிவிடுங்கள். கிளப்புவோம் சர்ச்சையை//

இப்படி உசுபேத்தி உசுபேத்தியே!

வால்பையன் said...

//தண்டோரா ...... said...

சிங்கம்,புலியெல்லாம் பாத்தியா?//

நான் வர்றேன்னு தெரிஞ்சதும் பயந்து ஓடிருச்சாம்!

வால்பையன் said...

//அ.மு.செய்யது said...

அந்த சொள் அலகன் யாருன்னு எனக்கு மட்டும் தனியா போன் பண்ணி சொல்லுங்க வால் !!//

பூனேல இருக்குறதா கேள்வி!

வால்பையன் said...

//NIZAMUDEEN said...

2009- என் 100-ஆவது இடுகை
இட்ட உங்களுக்கு எனது
வாழ்த்துக்கள்!//

எதையெல்லாம் நோட் பண்றாங்க பாருங்கப்பா!

வால்பையன் said...

//கூடுதுறை said...

நான் கூட தேடி பிடித்து வாங்கிய சைனா மொபைல் ஒரே அடியாக பல் இளிக்காமல் மாதம் ஒரு சர்விஸ் கட் ஆகி வருகிரிது.//

உங்களுக்கும் சைனாவுக்கும் எதோ தொடர்பு இருக்கு தல!

வால்பையன் said...

//ஆப்பு said...

ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)
http://evandapirabalam.blogspot.com/2009/10/blog-post.html//

ஆப்பை பேக்குல வைக்காம இருந்தா சரி!

வால்பையன் said...

//குசும்பன் said...
//வடிவத்தை பார்த்து ஏமாந்துட்டேன் போலயே!//
இத்தனை வயசு ஆகி இன்னுமா அப்படி?//

உங்க அளவுக்கு அனுபவம் பத்தாதே அங்கிள்!

வால்பையன் said...

அன்பு நண்பர்களுக்கு,

உங்க்ளுக்கே தெரியும் பதிவிடுவதை விட நண்பர்களுக்கு பின்னுட்டம் இடவே நான் அதிக நெரம் செலவழிக்கிறேன் என்று!, அதனால் முக்கியமான பின்னூட்டங்களுக்கு மட்டும் பதி அளித்திருக்கிறேன்!

என் நிலையை புரிந்து கொண்டு எப்போதும் ஆதரவளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்!

!

Blog Widget by LinkWithin