மதியம் வெள்ளி, மே 22, 2009

உன்னநான் கட்டிக்கிட்டு!...

உன்னநான் கட்டிக்கிட்டு
என்னாத்த சுகங்கண்டேன்

நகையுண்டா நட்டுண்டா
காதலயும் கழுத்துலயும்

பேருண்டா பெருமையுண்டா
ஊருகுல்ல உலகத்தில

ஓடாத்தேஞ்சு போனேன் -அழுக்கு
துணி துவைச்சு போட்டே

மெழுகா உருகிப்போனேன் -கறியும்
சோறும் ஆக்கி போட்டே

ஒன்னாந்தேதியானா சிரிச்சிகிட்டே
வர்ர மச்சான்

பத்து தேதி மேலே
சிறுக்கின்னு வையுறியே

ஆயிரந்தான் வஞ்சாலும்
உன்போல ஆள் வருமா

ஊருள்ளே நடக்கையில
உனக்காரும் தோள் வருமா

சோலிக்கு போனேயே
தூக்கிசட்டி தூக்கிகிட்டு

ராவும் வந்துருச்சே
கீழ்வானம் இருண்டுருச்சே

இடி சத்தம் மேக்கால
தூறல் ஒண்ணு மார்மேலே

மீன் கொழம்பும் ஆறுது
என் உடம்பும் காயுது

கண்ண கட்டும் முன்னே
ஓடி வாயேன் என் ராசா

86 வாங்கிகட்டி கொண்டது:

சுந்தர் said...

சண்டை இல ஆரம்பிச்சு சமாதானத்துல முடிஞ்சுருசே ! அடடே

சுந்தர் said...

குடும்பம்னாலும் ,கூட்டணி னாலும் , இப்டி தான் இருக்கணும்., சண்டை போடுற மாதிரி போட்டு, அப்புறமா சமாதானமா போய்டனும்.,

Anonymous said...

யாரையோ இடித்துரைப்பது போலவும் அட்வைஸ் அள்ளி விடுவது போலவும் இருக்கே

Anonymous said...

அட கவுஜ...

தினேஷ் said...

அண்ணன் அண்ணி பாடியதா? உங்க எதிர் பாட்டு எப்ப பதிவுல வரும்...

நையாண்டி நைனா said...

soooopppaar

தருமி said...

என்னென்னமோ பண்றீங்க'ப்பா .....

நடத்துங்க.

வேத்தியன் said...

நல்லா கீதுண்ணே...
:-)

சிவக்குமரன் said...

அண்ணன் அண்ணி பாடியதா? உங்க எதிர் பாட்டு எப்ப பதிவுல வரும்...

கடைக்குட்டி said...

நல்லாத்தாங்க இருக்கு... அண்ணி சொல்ல சொல்ல நோட் பண்ணி போட்ட மாதிரி இருக்கே!!!

நையாண்டி நைனா said...

/*ஒன்னாந்தேதியானா சிரிச்சிகிட்டே
வர்ர மச்சான்

பத்து தேதி மேலே
சிறுக்கின்னு வையுறியே*/

ஒ, அப்படின்னா தங்ஸ் தான் வேலைக்கு போற ஆளா....
இப்ப கண்டு பிடிச்சிட்டேன்....இது உங்களோட நொந்த கதை.... சாரி சொந்த கதை தானே???

மனுநீதி said...

நல்லாருக்கு அருண்.

நையாண்டி நைனா said...

கவிதையாடி போடுரே கவிதை.... உனக்கே எதிர் கவிதை நாங்க போடுவம்டி....

(போடுவதற்கு உங்க அனுமதி வேண்டும்)

வால்பையன் said...

அண்ணே என்ன இது அனுமதி கேட்டுகிட்டு!

போட்டு தாக்குங்க!

வால்பையன் said...

தேனீ - சுந்தர் said...

சண்டை இல ஆரம்பிச்சு சமாதானத்துல முடிஞ்சுருசே ! அடடே//

இல்லறம் என்பதே அதானே!

************************

மயில் said...

யாரையோ இடித்துரைப்பது போலவும் அட்வைஸ் அள்ளி விடுவது போலவும் இருக்கே//

நீங்க ஏங்க இப்படி வந்து பத்த வைக்கிறிங்க

*********************

சூரியன் said...

அண்ணன் அண்ணி பாடியதா? உங்க எதிர் பாட்டு எப்ப பதிவுல வரும்...//

நான் ஒரு நிமிடம் அண்ணியாக மாறி பாடியது

தமிழ் அமுதன் said...

நிஜமாவே இங்க மழை வர்றதுபோல இருக்கு தல!

மப்பு கொஞ்சம் ஏத்திகிட்டு! ........................

நையாண்டி நைனா said...

ஸ்டார்ட் மீஜிக்.....

உன்னநான் தோஸ்தாக்கிகிட்டு
என்னாத்த சுகங்கண்டேன்

கோட்டருண்டா கோழியுண்டா
கையிலாவது வாயிலாவது

வேலையுண்டா வெட்டியுண்டா
ஊருகுல்ல உலகத்தில

ஓடாத்தேஞ்சு போனேன் -நீ பிகர் மடிக்க
நான் காத்து கிடந்து

எலும்பா உருகிப்போனேன் - லோகல் சரக்கும்
துண்டு பீடியும் நானடிச்சு

ஒன்னாந்தேதியானா சிரிச்சிகிட்டே
வர்ர மச்சான்

பத்து தேதி மேலே
வெட்டிப்பயலேன்னு வையுறியே

ஆயிரந்தான் வஞ்சாலும்
உன்போல தோஸ்து வருமா

ஊருள்ளே நடக்கையில
உனையாரும் சேர்ப்பாரோ

பிகர்பார்க்க போனேயே
வழுக்கு மண்டைய தடவிகிட்டு

ராவும் வந்துருச்சே
கீழ்வானம் இருண்டுருச்சே

அடி சத்தம் போலிசாலே
கீறல் ஒண்ணு மார்மேலே

பழைய புண்ணு ஆறுது
உன் உடம்பும் காயுது

கண்ண மட்டும் காப்பாத்திட்டு
ஓடி வாயேன் என் ராசா

தீப்பெட்டி said...

கவிஞரய்யா நீர்....

;-))

வால்பையன் said...

நையாண்டி நைனா said...
soooopppaar//

நன்றி தல

******************

தருமி said...
என்னென்னமோ பண்றீங்க'ப்பா ...
நடத்துங்க.//

எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் சார்

******************

வேத்தியன் said...

நல்லா கீதுண்ணே...//

நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்!

******************

இரா.சிவக்குமரன் said...
அண்ணன் அண்ணி பாடியதா? உங்க எதிர் பாட்டு எப்ப பதிவுல வரும்...//

இது நான் பாடியது தான்! எதிர்பாட்டி அண்ணிகிட்ட கேட்டு போட்டுடலாம்

**********************

வால்பையன் said...

கடைக்குட்டி said...
நல்லாத்தாங்க இருக்கு... அண்ணி சொல்ல சொல்ல நோட் பண்ணி போட்ட மாதிரி இருக்கே!!!//

வாங்குற திட்டையெல்லாம் கிராமிய ஸ்டைலில சொல்லியிருக்கேன்

*********************

நையாண்டி நைனா said...
/*ஒன்னாந்தேதியானா சிரிச்சிகிட்டே
வர்ர மச்சான்
பத்து தேதி மேலே
சிறுக்கின்னு வையுறியே*/
ஒ, அப்படின்னா தங்ஸ் தான் வேலைக்கு போற ஆளா....
இப்ப கண்டு பிடிச்சிட்டேன்....இது உங்களோட நொந்த கதை.... சாரி சொந்த கதை தானே??? //

அவுங்க தான் முதலாளியம்மா!
அவுங்க ஏன் வேலைக்கு போகனும்

Suresh Kumar said...

நன்னா இருக்கு

வால்பையன் said...

மனுநீதி said...
நல்லாருக்கு அருண்.//

நன்றி தல

*******************

நையாண்டியண்ணே நீங்க ரொம்ப நல்லவரு!
நானா இருந்தா அதையும் ஒரு பதிவா போட்டு கணக்க ஏத்தியிருப்பேன்

*********************
தீப்பெட்டி said...
கவிஞரய்யா நீர்....//

அண்ணே என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலயே

தேவன் மாயம் said...

என்னப்பா இது! கிராமத்து பாணியில் கலந்துகட்டி இருக்கீங்க வால்!!

நையாண்டி நைனா said...

இப்ப உங்க கிட்டே அனுமதி வாங்கி எங்க அக்கவுன்ட்லயும்..... போடுவோம்... OK...

அப்புறம் நம்ம கவிதைய பத்தி ஒண்ணுமே சொல்லலையே....

Anonymous said...

இப்ப நைனா ரசிகர் நாங்க...

வால்பையன் said...

Suresh Kumar said...
நன்னா இருக்கு//

நன்றி தல

************************
thevanmayam said...

என்னப்பா இது! கிராமத்து பாணியில் கலந்துகட்டி இருக்கீங்க வால்!!//

வித்தியாசமா ஒரு முயற்சி செய்து பார்க்கலாம்னு தான் தல!

**********************

அப்புறம் நம்ம கவிதைய பத்தி ஒண்ணுமே சொல்லலையே.... //

பொறமையில வார்த்தையே வரல தல! அவ்வளவு நல்லாயிருக்கு!

**********************

மயில் said...
இப்ப நைனா ரசிகர் நாங்க...//

நைனா இப்போ சந்தோசம் தானே!

Anonymous said...

கவித.. கவித.. அபிராமி அபிராமி..!!

ஆனா ஏன் இவ்ளோ சந்தோஷமா இருக்குனு தான் பிரியலே...!

Prabhu said...

உங்க பாட்டும் அதுக்கு நையாண்டி நைனாவின் வெர்சனும் சூப்பர்

நட்புடன் ஜமால் said...

அருமை நண்பா

அருமை

கூ - வுக்காக

ஒரு

மாதவராஜ் said...

மிரள வைத்து விட்டீர்கள்.
இந்தக் (கவிதையை) பாடலை கைவசம் வைத்துக் கொண்டா, சென்ற பதிவில்(குவியலில்), கவிதை நமக்கு சொந்தமா எழுத வராதுங்கன்னு சொன்னீங்க...!

வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

//Anonymous said...
கவித.. கவித.. அபிராமி அபிராமி..!!
ஆனா ஏன் இவ்ளோ சந்தோஷமா இருக்குனு தான் பிரியலே...!//

இரவுக்கு பின் விடியல், சோகத்துக்கு பின் மகிழ்ச்சி, இது தான் லாஜிக்

**********************
pappu said...
உங்க பாட்டும் அதுக்கு நையாண்டி நைனாவின் வெர்சனும் சூப்பர்//

நீங்களும் ஒரு எதிர்கவிதை போடுங்க பப்பு!

*********************
நட்புடன் ஜமால் said...
அருமை நண்பா
அருமை
கூ - வுக்காக
ஒரு
ஊ//

என்னாங்க அந்த ஊ, ஒன்னுமே புரியலையே!

*********************
மாதவராஜ் said...
மிரள வைத்து விட்டீர்கள்.
இந்தக் (கவிதையை) பாடலை கைவசம் வைத்துக் கொண்டா, சென்ற பதிவில்(குவியலில்), கவிதை நமக்கு சொந்தமா எழுத வராதுங்கன்னு சொன்னீங்க...!//

தலைவா, இத கவிதைன்னு சொன்னிங்கன்னா இண்மையத்துல இருக்குற கவிஞர்கள் எல்லோரும் உங்ககிட்ட சண்டைக்கு வருவாங்க!

ஆ.ஞானசேகரன் said...

//மீன் கொழம்பும் ஆறுது
என் உடம்பும் காயுது

கண்ண கட்டும் முன்னே
ஓடி வாயேன் என் ராசா//

ஹிஹிஹிஹி...

அ.மு.செய்யது said...

தல வட்டார மொழியிலயும் பிண்றீங்களா..

இதுவும் ஒருவகையில பின்நவீனத்துவம் தான்.

நடத்துங்க..

( நையாண்டி நைனா உல்ட்டா கலக்கல்...)

நசரேயன் said...

அடுத்த படத்துக்கு பாட்டு தயார்

வசந்த் ஆதிமூலம் said...

வால்!!!!
என்ன நடக்குது இங்க...!!
பின்னி பெடல் எடுக்குறீங்க ...

Ragztar said...

நல்லா கீதுபா

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

:)
//சண்டை இல ஆரம்பிச்சு சமாதானத்துல முடிஞ்சுருசே ! அடடே//

இல்லறம் என்பதே அதானே!

//நல்லாத்தாங்க இருக்கு... அண்ணி சொல்ல சொல்ல நோட் பண்ணி போட்ட மாதிரி இருக்கே!!!//

சூப்பர்அப்பு :)

நல்லாருக்கு அருண் :)))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

புதியவன் said...

வட்டார மொழியில் கவிதை கலக்கல்...

உங்க மேல் அவுங்க ரொம்ப பசம் வச்சிருக்கிறது கவிதையில அப்பட்டம தெரியுது அருண்...

Maximum India said...

இதுதான் உங்க குடும்ப வாழ்கையின் வெற்றி ரகசியமா?

நடக்கட்டும்! நடக்கட்டும்!

:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்.. கிழிச்சுட்டீங்க தல.. அந்தப் பக்க பீலிங்க்ஸ் எல்லாத்தையும் ஒண்ணா திரட்டி.. சொன்ன விதம் நல்லா இருக்கு..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வால், நல்லா இருக்கு கவிதை.

Mythees said...

என்னத்த சொல்றது .......

கவிஞரய்யா நீர்....

Venkatesh Kumaravel said...

அடடே! அருமை அருமை.. ரொம்ப நாள் கழிச்சு இந்த பாணியில ஒரு கவித.. :D

அப்துல்மாலிக் said...

வால்.... கவிதை வாராதுனு பக்காவான கவிதை போட்டு தாக்கிருக்கீரே ரொம்ப அருமையா கற்பனையில்லா எதார்தமான வரிகளுடன் கலக்கல்...



நாட்டுப்புற பாட்டா மியூசிக் சேர்த்து பாடினால் ரொம்ப தூளாயிருக்கும்..

இன்னும் மேலும் எதிர்ப்பார்க்கிறோம் உங்ககிட்டேயிருந்து

வாழ்த்துக்கள்

வியா (Viyaa) said...

vitiyasamana kavithai valpaiyan..
arumai

SUBBU said...

இதெல்லாம் நமக்கு தேவையா பாஸ்? :)))))))))

SUBBU said...

48

SUBBU said...

49

SUBBU said...

50 :))))))))))))))

விஜி said...

இப்போதுதான் உங்கள் வலைப்பதிவை பார்க்க நேர்ந்தது. நிறைய நானும் உங்களோடு விவாதிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் வாய்ப்புதான் இல்லை.

Suresh said...

மிக அழகான் கவிதை ஊடலும் கூடலும் அழகாய் ஒரு ஏழை மனைவியின் பார்வையில் அதே நடையில் கலக்கிட்ட வாலு

Anonymous said...

தள,

என்ன சுரத்தே இள்ளாம பதிவுகள் வருதே என்ன சிங்கத்தோட சண்டையும் கல கட்டவிள்ளை போளருக்கே.

சொள் அலகன்

Mahesh said...

சொள்அலகனே சொள்லீட்டாறு...
நீங்க ஒரு கரிசக்காட்டுக் கவிஞ்சரு !!!

நல்லா இருக்கு அருண்..

तमिलन said...

READ : http://loshan-loshan.blogspot.com/2009/05/blog-post_23.html

Gowripriya said...

வால்பையன் மற்றும் நையாண்டி நைனா...சூப்பருங்க...
வால் பையன்...எல்லா blog லயும் கமெண்ட் போடணும்னா இந்த கூகிள் transliterate page கு வந்து, டைப் பண்ணி, காப்பி பண்ணி, பேஸ்ட் பண்ணி...இத்தன வேல இருக்கும்... நீங்க இங்கயே லிங்க் கொடுத்துட்டீங்க... என்ன மாரி புது ஆளுங்களுக்கு ஈசியா இருக்கு.. ரொம்ப நல்லவருங்க நீங்க..

இளைய கவி said...

மச்சான் இதுக்கு பேர்தான் பாட்டாளி கவித.. கலக்குற போ

இளைய கவி said...

.

Thamira said...

ரசனையான Folk கவிதை, வால்.! ஊருக்குள்ள கவிதை எழுத வராதுன்னு சொல்லிகிட்டு திரியுறீங்களாமே.! இந்த வடிவத்தில் இதை சிறந்த கவிதையாக எண்ணுகிறேன்.

Anonymous said...

அண்ணா சான்சே இல்ல உங்க கவிதையும் சூப்பர்.
உங்க கவிதைக்கு எதிர் கவிதையா வந்த நையாண்டி நைனா அண்ணாவோட கவைதையும் சூப்பர்.
அருமை அருமை..

Anonymous said...

அண்ணா சான்சே இல்ல உங்க கவிதையும் சூப்பர்.
உங்க கவிதைக்கு எதிர் கவிதையா வந்த நையாண்டி நைனா அண்ணாவோட கவிதையும் சூப்பர்.
அருமை அருமை..

Vishnu - விஷ்ணு said...

வால் அண்ணே! என்னாது இப்படி பின்னுறீங்க.

வீணாபோனவன் said...

எல்லா நல்லா தானே போய்க்கிட்டு இருந்திச்சி.. இப்போ என்னாச்சி?

-வீணாபோனவன்.

RAMYA said...

கவிதை நல்லா இருக்கு வால்ஸ். இதை கவிதை என்று சொல்லுவற்ற்தக் முன் கிராமத்து பாடல் போல் பாடிப் பார்த்தா ரொம்ப நல்லா வருது.

நம்ப நவநீதம் அம்மா பாடறமாதிரி இருக்கும் பாடினா.

நல்ல பாட்டு எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க. அடுத்து என்னா சினிமாவுலே உங்களை அள்ளிகிட்டு போபோறாங்க.

RAMYA said...

//
மயில் said...
யாரையோ இடித்துரைப்பது போலவும் அட்வைஸ் அள்ளி விடுவது போலவும் இருக்கே
//

நிதானிச்சு படிச்சா மயில் கூறியதும் உணமயோ வால்ஸ்??

RAMYA said...

நையாண்டி நைனா!

இவரின் கவிதையும் சூப்பர்.

RAMYA said...

நையாண்டி நைனா இவரின் எதிர் கவிதை ச்சான்சே இல்லை தூள் !

Unknown said...

//..அட கவுஜ...//
அதே..

நட்புடன் ஜமால் said...

\\என்னாங்க அந்த ஊ, ஒன்னுமே புரியலையே!\\


கூடலுக்காக

ஒரு

ஊடல்

Prabhu said...

pathivar santhippu vara mudiyaama ponaduku romba varutha paduren. varenu solitu varala, sorry. anda mazhayala cold, wheezing jasti aayiduchu. vetla veliya vidala. 3 naala colkae poga mudiyala. blog site kuda adigama varala. adan ipo solren.

ஐi said...

ஐந்தாவது லைன்ல இதை சேர்த்து கொள்ளவும் பட்டுண்டா பகட்டுண்டா பாழா போன உலகத்திலே

Poornima Saravana kumar said...

வால், சினிமால பாடல் எழுத முயற்சி செய்யலாமே!

Poornima Saravana kumar said...

கடைசில சமாதானம் ஆயாச்சா...:))

ny said...

கொஞ்சம் லேட்டாயிருச்சு...
இருந்தாலும் present sir!!

மலைப்பா இருக்கு...scrolling ல
இன்னும் 185 சுத்து பாக்கியிருக்கே
உங்க கோவிலுல!!
:))

செந்தில்குமார் said...

வால் அண்ணே...

கவித அருமை.. கலக்கிப்புட்டீங்க போங்க..

ஆனந்தன் said...

(அனைத்தும் பொருந்தி வருது!
புடிங்க அட்வான்ஸ!
நீங்க நம்ம சீரியலோட டைரக்டர்!)

na unga mega serial productinukku yenna directora pottadhukku nanreenganna

வாழவந்தான் said...

பதிவிலிருக்கும் கவிதை சூப்பர், நையாண்டி கவிதை டக்கர்

NILAMUKILAN said...

எதோ கவித மாதிரி இருக்குங்கோ

வால்பையன் said...

நன்றி ஆ.ஞானசேகரன்

//அ.மு.செய்யது said...
தல வட்டார மொழியிலயும் பிண்றீங்களா..
இதுவும் ஒருவகையில பின்நவீனத்துவம் தான்.//

எதுவோ பண்ணப்போய் இது வந்துருச்சுங்க! எனக்கு ஒன்னுமே புரியல!

*********************

//நசரேயன் said...
அடுத்த படத்துக்கு பாட்டு தயார்//

நீங்க தான் புரடியூசரா? வீட்ல சொல்லிட்டு வந்துடிங்களா?

**********************

வசந்த் ஆதிமூலம் said...
வால்!!!!
என்ன நடக்குது இங்க...!!
பின்னி பெடல் எடுக்குறீங்க ...//

அதாங்க எனக்கே ஒன்னும் புரியல!

வால்பையன் said...

நன்றி ஓவியன்

நன்றி வைகறைதென்றல்
உண்மை தான்!

நன்றி ராதாகிருஷ்ணன்

நன்றி புதியவன்
உலகம் கண்ணாடி மாதிரி, நாம என்ன கொடுக்குறோமோ அதான் திரும்ப கிடைக்கும்

நன்றி மேக்ஸி இந்தியா
கண்டுபிடிச்சிடிங்களே

நன்றி கார்த்திகைபாண்டியன்
தப்பா சொல்றிங்க!
அந்த பக்க புலம்பல்களையெல்லாம் திரட்டி சொல்லியிருக்கேன்

நன்றி ஜ்யோய்ராம் சுந்தர்
என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலையே

நன்றி மைதீஸ்

வால்பையன் said...

நன்றி வெங்கிராஜா

நன்றி அபுஅஃப்ஸர்
இது ஒரு ஆக்ஸிடெண்டுன்னு தான் சொல்லனும் நண்பா!

நன்றி வியா

நன்றி சுப்பு
நியாயமான கேள்வி,
ஒரு மொக்கையை போட்டோமா, எதிர்கவுஜ எழுதனொமான்னு இருக்கனும் இல்லையா

நன்றி உங்களில் ஒருத்தி
எப்போது வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயார்!

நன்றி சுரேஷ்

நன்றி சொள் அலகன்
உசுப்பேத்தி அடி வாங்க வைக்காதிங்க நண்பா!

நன்றி மகேஷ்

வால்பையன் said...

நன்றி இந்திகார அண்ணே!

நன்றி கெளரிபிரியா
சொந்த கணிணியாக இருந்தால் NHM Writer யூஸ் பண்ணுங்க, ரொம்ப ஈஸியாக இருக்கும்.

நன்றி இளையகவி

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்
நிஜமாவே எழுதத்தெரியாது
இது அக்மார்க் ஆக்ஸிடெண்ட்

நன்றி தமிழர்ஸ்

நன்றி மகா

நன்றி விஷ்ணு

நன்றி வீணாபோணவன்

நன்றி ரம்யா

நன்றி பட்டிக்காட்டான்

நன்றி பப்பு!
ஏன் வரலைன்னு ஒரு பதிவு பொடுங்க அப்ப தான் நம்புவோம்!

நன்றி ஐ!
உங்க பேரு வித்தியாசமா இருக்கு!
நீங்களும் பெரிய கவிஞர் தான் போலயே!

வால்பையன் said...

நன்றி பூர்ணிமாசரண்

நன்றி kartin

நன்றி செந்தில்குமார்

நன்றி ஆனந்தன்!
உங்ககிட்ட எல்லா தகுதியும் இருக்கு நண்பா!

நன்றி வாழவந்தான்

நன்றி நிலாமுகிலன்!

ஊர்சுற்றி said...

கலக்கல் கவிதை வால்பையன்... :)

cheena (சீனா) said...

ஹாய் வாலு

நல்லாருக்கு கவித - கிராமத்து நட நல்லாருக்கு - புருசன் பொஞ்சாதின்னா இப்படித்தான் - இருந்தாலும் அவன் பண்றது தப்பு

தொடர்ந்து எழுது வாலு

கிருஷ்ண மூர்த்தி S said...

/நிஜமாவே எழுதத்தெரியாது
இது அக்மார்க் ஆக்ஸிடெண்ட்/

அப்பப்ப இந்த மாதிரி அக்மார்க் ஆக்சிடென்ட் கவுஜ எல்லாம் எடுத்து உடுங்க!

!

Blog Widget by LinkWithin