இயக்குனர் கிம்-கி-டுக் என் பார்வையில்!..

Kim-ki-duk இதுவரை 16 படங்களுக்கு கதை எழுதியுள்ளார், அதில் அவர் இயக்கியது 15, அதில் எடிட்டராக பணிபுரிந்தது 6, சொந்தமாக தயாரித்தது 5, சிறு வேடங்களில் நடித்தது 2, இவையில்லாமல் கலை போன்ற துறைகளிலும் இவரது பங்களிப்பு இருக்கும்! அந்த அளவுக்கு சினிமாவை காதலிப்பவர். உணர்வுபூர்வமான சினிமாக்களில் மொத்த உலகத்தையும் கவர்ந்தவர்.
இவரை பற்றி, இவரது படங்களே சொல்லும்.

***************************

பயணங்களின் போது உடன் பயணம் செய்யும் முன்பின் பார்த்திராத ஒருவரை பார்த்து உங்களுக்கு காதல் தோன்றியிருக்கிறதா?.(இனக்கவர்ச்சி தான் காதலில் முதல்ப்படி). உரையாடல் இல்லாத அந்த சூழ்நிலையிலும் பார்வையிலேயே உணர்வின் ஆழம் வரை சென்றதுண்டா! அந்த நபர் நீங்கள் இறங்கும் போது உங்களுடனே வந்துவிட்டால்....

இவைகளெல்லாம் சாத்தியமில்லை என்று சொல்லாதீர்கள்,
உங்களுக்கு சம்பவிக்கவில்லை என்று சொல்லுங்கள்.
அம்மாதிரியான ஒருப்படம் தான் 3IRON. இந்த இயக்குனரின் நான் பார்த்த முதல் படம்.
இந்த படத்தில் நாயகன் செய்யும் சேட்டைகளை தான் லாடம் என்ற தமிழ் படத்தில் நாயகி செய்கிறாளாம்!. இயக்குனரை பொறுத்தவரை முக்கிய கதாபாத்திரங்கள் பேச வேண்டிய அவசியமில்லை என்பது அவரது கருத்து! அதற்காக அவர்கள் ஊமைகள் என்று நினைக்க வேண்டாம். இறுதியில் சில அமானுஷ்ய தன்மைகளுடன் முடித்திருந்தாலும், முடிவில் வரும் டிஸ்கி அவரது கற்பனை திறனை நமக்கு காட்டுகிறது.
அந்த டிஸ்கி:
நீங்கள் வாழ்வது நிஜமா, கற்பனையா என்று அறுதியிட்டு கூற இயலாது!



நான் நிஜத்தில் மட்டுமே தான் வாழ்கிறேன் என்று சொல்பவர்கள் மூளை சரியாக வேலை செய்வதில்லை என்பது என் கணிப்பு!


**********************************

கிராமப்புரங்களில் அதிகமாக சொந்தங்களுக்குள் தான் திருமணம் செய்து வைப்பார்கள், அது ஐந்திலிருந்து எட்டு வயது வித்தியாசம் இருக்கும். சில இடங்களில் என் தம்பிக்காகவே வளர்த்து வர்றேன்னு தாய்மாமனுக்கு மணம் முடித்து வைப்பார்கள், அவர்களுக்கு 15 திலிருந்து 20 வருடங்கள் கூட வித்தியாசம் இருக்கும், அது மாதிரியான ஒரு கதை தான் the Bow.

ஒரு குழந்தையை சிறுமியாய் இருக்கும் போதிலிருந்து வளர்க்கும் ஒரு பெரியவர், ஒரு நதியின் நடுவில் படகில் வாழ்கிறார்கள். அங்கே மீன் பிடிக்க வருபவர்கள் தருவது தான் வருமானம்!
ஒரு குறிப்பிட்ட நாளில் அவளை மணந்து கொள்ள நினைக்கிறார் பெரியவர். அதற்குள் மீன் பிடிக்க வந்த ஒருவன் மேல் காதல் கொள்கிறாள் அந்தப்பெண்! அவள் எனது உடமை என பெரியவர் அவனை விரட்ட,. அந்த பெண் இன்னும் பெற்றோர்களால் தேடப்பட்டு கொண்டிருக்கும் ஒரு தொலைந்து போன குழந்தை என மீண்டும் படகிற்கு வந்து சொல்கிறான். அவனுடன் அனுப்பி வைக்கின்ற பெரியவர் அங்கேயே தற்கொலை முயற்சி செய்கிறார், அதை அறிந்த அவள் அந்த பெரியவரை மணக்க சம்மதிக்கிறாள். ஆனாலும் அந்த பெரியவர் தற்கொலை செய்து கொள்கிறார்!



ஆன்மா விரும்பியதை அடையாமல் விடாது என்பது போல் அவரது க்ளைமாக்ஸ் காட்சி இருந்தாலும் எனக்கு அதில் உடன்பாடு, இருப்பினும் உணர்வுகளின் அடுத்தகட்ட பரிணாமமாற்றமாக நம்மை நாமே சமாதானப்படுத்தி கொள்ளலாம்.

இப்படத்திலும் அந்த பெண் பேசுவதை காட்ட மாட்டார்!

********************************

பார்த்த முகங்களையே பார்ப்பதற்காக என்றாவது சலிப்படைந்திருக்கிறீர்களா?
ஒரே இடம், ஒரே வேலை, ஒரே மனிதர்கள் என சலித்து மாற்றம் தேடி உங்கள் மனம் ஏங்கியதுண்டா, ஒருவேளை இல்லையென்றால் உங்களுக்கும் இயந்திரத்துக்கும் என்ன வித்தியாசம் என்று உங்களை நீங்களே கேட்டு கொள்ளுங்கள்



காதலன் ஒருவேளை நம்மிடம் சலிப்படைந்து விட்டானோ! அவனுக்கு என்னை பிடிக்கவில்லையோ, என் முகம் அவனுக்கு எரிச்சலை தருகிறதோ என்று தன்னளவில் மன உளைச்சலால் தனது முகத்தை அறுவை சிகிச்சை மூலம் மாற்றி கொள்கிறாள் நாயகி, சலிப்படைவது காலம் சம்பந்தப்பட்டதால் எனவோ இந்த படத்திற்கு the Time என பெயரிட்டு இருக்கிறார்!

முகம் மாற்றி கொண்ட காதலி, காதலன் இன்னும் பழைய காதலியை தான் நினைத்து கொண்டிருக்கிறான் என அறிகிறாள், சுயத்தை இழந்தவளாய் தன் மீதே கோபம் கொள்கிறாள்.
அவசரப்பட்டுவிட்டோம் என்பதை விட இந்த முகத்துக்கு என்ன குறைச்சல் என்னும் ஏக்கமே அதிகமாகிறது. தான் தான் அவனுடய பழைய காதலி என சொல்லிவிடுகிறாள். கோபமடைந்த காதலன் தானும் முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கிறான். மீண்டும் அவனை எங்கேயும் காண முடியாதவளாக அவள் மாறுவதே இப்படத்தின் கதை!

இப்படத்தில் அனைவரும் பேசி கொண்டாலும், முகம் அறுவை சிகிச்சை செய்து கொண்ட காதலன் அமானுஷ்ய தன்மையுடன் இவளையே கண்காணித்து கொண்டிருப்பது அமானுஷ்யத்தின் மேல் இவருக்கு பற்றை காட்டுகிறது.

*******************************

the Isle என்ற படம் மடிக்கணிணியில் பத்து நாளாக தூக்கி கொண்டிருக்கிறது! இனிமேல் தான் பார்க்கவேண்டும்!


நான் ஏற்கனவே சொன்னது போல் இதில் இரண்டாவது இறுதிகாட்சி தவிர மற்ற படங்கள் மனித உணர்வுகளின் அடுத்தகட்ட பரிணாமமாக பார்க்கிறேனே தவிர, சாத்தியமில்லை என்ற வார்த்தையை இங்கே நிராகரிக்கிறேன்! வெகு அழகாக மெளனத்திலேயே உணர்வுகளை புரியவைப்பதில் வல்லவர் இந்த இயக்குனர்! உலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இவரின் மற்ற படங்களையும் பார்த்துவிட்டு பதிவிடுகிறேன்

41 வாங்கிகட்டி கொண்டது:

geevanathy said...

//நான் நிஜத்தில் மட்டுமே தான் வாழ்கிறேன் என்று சொல்பவர்கள் மூளை சரியாக வேலை செய்வதில்லை என்பது என் கணிப்பு!///

நிஜத்தில் மட்டுமே வாழ்பவர்கள் வாழ்வின் முழுமையையும் அனுபவிக்க மாட்டார்கள்

Kim-ki-duk வின் படைப்புக்களில் சிலவற்றை அறியத்தந்தமைக்கு நன்றிகள்..

ஆளவந்தான் said...

கொரிய படங்கள் இங்கே கிடைக்கமாட்டேங்குது.... ரொம்பவே ஆர்வத்தோட இருக்கேன் பாக்க

selventhiran said...

வால், உங்க வாசிப்பு பற்றியும் உலக சினிமா ஆர்வம் பற்றியும் ஏற்கனவே சிலமுறை ரமேஷ் வைத்யா சொல்லி இருக்கிறார். டைட்டானிக், ஜூராசிக்பார்க் தவிர்த்து பிற மொழிப் படங்களைப் பார்த்தறியாத எனக்கு உங்களது அறிமுகங்கள் ஆவலைத் துண்டுகிறது.

அப்புறம் என்னை 'செலிபிரெட்டி' என்று கேவலப்படுத்தாதீர்கள். அடியேன் எப்பவும் வாலின் அன்புத் தம்பி என்பதே போதும்.

Mahesh said...

சாமி... நீங்க பெரிய ஆளு சாமி.... உங்க கிட்ட கொஞ்சம் சாக்குருதையாத்தேன் இருக்கோணும் :)))

ஆ.சுதா said...

கிம் கி டக் ன் அறிமுகம் அசத்தல்.
அவருடைய படம் Spring, Summer, Fall, Winter... and Spring. மட்டுமே பார்த்திருக்கின்றேன்.
அதுவும் நம் வாழ்வின் மூன்று காலங்களை அற்புதமாக சொல்லியிருப்பார். அவரின் மற்றப் படங்களை அறிய தந்தமைக்கு நன்றிகள்!!!!

அக்னி பார்வை said...

மறக்காமல் ஒரு எட்டு The Breath படத்தையும் பார்த்துவிடுங்கள்

சென்ஷி said...

வாலு.... நீங்க எங்கயோ போயிட்டீங்க :))

வீணாபோனவன் said...

அண்ணா நீங்க பொரிய ஆளுங்கண்ணா.. கொடிய... சே, கொரிய மொழி எல்லா தெரிஞ்சி வச்சிருக்கிங்க... இங்கேயும் கொஞ்சம் போய் பாருங்க:

http://bleachingpowder.blogspot.com/2009/03/blog-post.html


-வீணாபோனவன்.

Cable சங்கர் said...

வால் நானும் 3iron பற்றி எழுதவேண்டு என்று நினைத்து கொண்டிருந்தேன்.. அதற்குள் எழுதிவிட்டீர்கள்.. பேசாமலே கதாபாத்திரங்களின் மன உணர்வுகளை புரிந்து கொள்ள முடியுமா..? முடியும் என்று புரிந்தது இப்படத்தை பார்த்தவுடன்.

புதியவன் said...

”3IRON ” இந்தப் படம் சில மாதங்களுக்கு முன்பு தான் பார்த்தேன் மிகக் குறைந்த வசனங்கள் மட்டுமே கொண்ட அருமையான படம்...

இந்த இயக்குனரின் வேறெந்தப் படமும் நான் பார்த்ததாய் நினைவில் இல்லை...

நல்ல பகிர்வு அருண்...

அகநாழிகை said...

அருண்,
படங்கள் பற்றிய விவரணையும், பகிர்ந்து கொண்ட விதமும் அருமையாக உள்ளது.
வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Jackiesekar said...

நீங்கள் சொல்வது உண்மைதான் சினிமா ஒரு விஷீவல் மிடியா என்பதை உலகில் புரிந்து வைத்து இருக்கும் ஒரு சில இயக்குநர்களில் கிம் மிக முக்கியமானவர் த்ரீ அயன் படத்தில் டயலாக்கை அரை பக்க பேப்பரில் எழுதி விடலாம். காட்சியாக காட்டும் போது வசனம் எதற்க்கு என்று கேட்பவர்

கார்த்திகைப் பாண்டியன் said...

நான் இவருடைய படங்கள் பார்த்தது கிடையாது வால்.. ஆனால் உலக சினிமா புத்தகத்தில் ஸ்ப்ரிங்.. சம்மர் படம் பற்றி படித்தபோது மிரண்டு விட்டேன்.. கொஞ்ச நாள் முன்னாடி சாரு வேற "the isle"பத்தி எழுதி இருந்தார்.. இப்போ நீங்க.. பார்க்கனும்னு ஆவலைத் தூண்டுது..

Venkatesh Kumaravel said...
This comment has been removed by the author.
Venkatesh Kumaravel said...

//உலக சினிமா புத்தகத்தில் ஸ்ப்ரிங்.. சம்மர் படம் பற்றி படித்தபோது மிரண்டு விட்டேன்//

ஓ! செழியன் அந்த படத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறாரா? 3-வது பாகம் வந்துருச்சா?
நான் S.S.F.W&S மட்டும் தான் பார்த்திருக்கிறேன்.. வால் அண்ணன் நமக்கு மேன்மேலும் உலக சினிமா பத்தி சொல்லித்தரணும்.. நாமும் கொரியப்படமெல்லாம் பார்த்து புரிஞ்சுக்கணும்!

கலையரசன் said...

Dreams படம் பாருங்கள், அதுதான் அவர் கடைசியாக இயக்கிய படம்.

நம்ம இயக்குனர்கள், நாம கொரியன் படமெல்லாம் பாக்க மாடோமுன்னு நனச்சிகிட்டு இருக்கானுங்க.

OLDBOY (2003) படம் பாருங்கள், கொரியன் படம்தான்! (என்னால் மறக்க முடியாத படம்)

Anonymous said...

உங்கபதிவுக்கு வந்தேன்...தமிழ் தெலுங்கு தவிர (இது கூட அதிகம் பார்ப்பது இல்லை)பிறமொழிப் படங்கள் பார்த்ததில்லை...மிகச் சில வரிகளில் கதையை தெளிவாச்சொல்லிருக்கீங்க...இதுக்கு மேலச் சொல்ல தெரியலைப்பா....

தேவன் மாயம் said...

பயணங்களின் போது உடன் பயணம் செய்யும் முன்பின் பார்த்திராத ஒருவரை பார்த்து உங்களுக்கு காதல் தோன்றியிருக்கிறதா?.(இனக்கவர்ச்சி தான் காதலில் முதல்ப்படி). உரையாடல் இல்லாத அந்த சூழ்நிலையிலும் பார்வையிலேயே உணர்வின் ஆழம் வரை சென்றதுண்டா! அந்த நபர் நீங்கள் இறங்கும் போது உங்களுடனே வந்துவிட்டால்..///

அசத்தலான படம் போல.... பார்க்கவேண்டும்!!

சின்னப் பையன் said...

கலக்குறீங்க தல. கிம்மின் படம் ஒண்ணுதான் எனக்கு கிடைச்சது... spring summer... மத்ததை தேடிக்கிட்டே இருக்கேன்....

Poornima Saravana kumar said...

நல்ல பகிர்வு வால்:)

அ.மு.செய்யது said...

வால் உங்களுக்கு எப்படி இங்கிலிஷ் புரியுது ??

அதுவும் முழு கதையும் ??

நான் கடைசியா பாத்த இங்கிலிஷ் படம் ஷோலேங்க..

கிரி said...

//Mahesh said...
சாமி... நீங்க பெரிய ஆளு சாமி.... உங்க கிட்ட கொஞ்சம் சாக்குருதையாத்தேன் இருக்கோணும் :)))//

மகேஷ் நீங்களும் அருணை போலவே விமர்சனம் எழுதறீங்க.....

நான் இன்னும் அதிகமா இங்கிளிபீச்சு படம் பார்க்க ஆரம்பிக்கல .. :-)

Anonymous said...

சாருவோட ப்லோகிலேதான் இந்தா கிம் கி டுக் கொசுத்தொல்லை தங்கமுடிஎலேனுட்டு இங்க வந்தா வந்த எடத்திலேயும் அதேவா?

Anonymous said...

//அ.மு.செய்யது saidவால் உங்களுக்கு எப்படி இங்கிலிஷ் புரியுது ??

அதுவும் முழு கதையும் ??

நான் கடைசியா பாத்த இங்கிலிஷ் படம் ஷோலேங்க..//

கண்டிப்பா இங்க்ளீஸ் இள்ள, என் நன்பர் யேசுராஜா விடம் கேட்ட போது தெளுங்காக இருக்களாம் அதிள பாட்டுகல் நள்ள இருக்கும்,ஹீரோ சோமையா ஜீளு என்று ஞாபகம் என்றார்.

சொள் அலகன்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இது வரை அவரோட படங்கள் எதையும் பார்த்ததில்லை.இனிமேல் கண்டிப்பாக பார்க்கிறேன்.அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் வால்.

நட்புடன் ஜமால் said...

3-Iron மட்டும் பார்த்தேன்.

நல்ல இயக்கம்.

மற்ற படங்களை பார்க்கின்றேன் ...


நன்றி.

SUBBU said...

வால் உங்களுக்கு எப்படி இங்கிலிஷ் புரியுது ??

அதுவும் முழு கதையும் ??

Anonymous said...

தளைவா,
சேர் மார்கெட் தளகீலா தொங்கி ஆடிக்கிட்டு இருக்கு அதுள உஸ்தாதான நீ அதைப் பத்தி எலுதாம, உன் பாட்டுக்கு சினிமா-வைப் பிடிச்சிக்கிட்டு அளயற, நள்ள ஸ்டாக் பத்தி எலுது அல்லது அது மாதிரி எலுதற பதிவுகலைப் பற்றி தொடுப்பு குடு.

சொள் அலகன்

RAMYA said...

”3IRON ” இந்தப் படம் பார்த்திருக்கின்றேன், மீதி படங்கள் நான் பார்த்ததில்லை.

படங்களின் விளக்கங்கள் அனைத்தும்
நன்றாக சொல்லி இருக்கின்றீர்கள்.

படிப்பவர்களுக்கு நீங்கள் கூறிய படங்கள் அனைத்தும் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் கண்டிப்பா வந்திருக்கும்.

வால்பையன் said...

//த.ஜீவராஜ் said...
//நான் நிஜத்தில் மட்டுமே தான் வாழ்கிறேன் என்று சொல்பவர்கள் மூளை சரியாக வேலை செய்வதில்லை என்பது என் கணிப்பு!///
நிஜத்தில் மட்டுமே வாழ்பவர்கள் வாழ்வின் முழுமையையும் அனுபவிக்க மாட்டார்கள்
Kim-ki-duk வின் படைப்புக்களில் சிலவற்றை அறியத்தந்தமைக்கு நன்றிகள்..
//

நன்றி ஜீவராஜ்
கற்பனை தான் பல கண்டுபிடிப்புகளுக்கு மூலம்!

***********************

ஆளவந்தான் said...

கொரிய படங்கள் இங்கே கிடைக்கமாட்டேங்குது.... ரொம்பவே ஆர்வத்தோட இருக்கேன் பாக்க//

தற்ச்சமயம் UTV world movies இல் நல்ல படங்கள் போடுவார்கள் பாருங்கள்!

நீங்கள் தமிழ்நாடென்றால் தொடர்பு கொள்ளுங்கள்!

*****************************

செல்வேந்திரன் அண்ணே!
நான் சினிமா பார்ப்பதில் குழந்தை! இப்போது தான் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்! இதற்கான கிரிடிட் அய்யனாருக்கு தான் போக வேண்டும்!

வால்பையன் said...

Mahesh said...

சாமி... நீங்க பெரிய ஆளு சாமி.... உங்க கிட்ட கொஞ்சம் சாக்குருதையாத்தேன் இருக்கோணும் :)))//

என்ன அண்ணே இப்படியெல்லாம்

*******************
ஆ.முத்துராமலிங்கம் said...

கிம் கி டக் ன் அறிமுகம் அசத்தல்.
அவருடைய படம் Spring, Summer, Fall, Winter... and Spring. மட்டுமே பார்த்திருக்கின்றேன்.
அதுவும் நம் வாழ்வின் மூன்று காலங்களை அற்புதமாக சொல்லியிருப்பார். அவரின் மற்றப் படங்களை அறிய தந்தமைக்கு நன்றிகள்!!!!//

பாருங்களேன் அது தான் அவரது புகழ் பெற்றபடம்! அதை இன்னும் நான் பார்க்கவில்லை!

*************************

அக்னி பார்வை said...

மறக்காமல் ஒரு எட்டு The Breath படத்தையும் பார்த்துவிடுங்கள்//

நிச்சயமாக பார்த்துவிடுகிறேன் தல!

வால்பையன் said...

சென்ஷி said...

வாலு.... நீங்க எங்கயோ போயிட்டீங்க :))//

நோ நோ நோ
இப்படியெல்லாம் உணர்ச்சிவசப்படக்கூடாது! நான் எங்கயும் போகல! இங்க தான் இருக்கேன்

************************

நன்றி வீணாபோனவன் அண்ணே!
போன போஸ்ட்ல அதுக்கு பபதில் சொல்லீட்டேன் பாருங்களேன்

*************************

நன்றி கேபிள்சங்கர்
நன்றாக பாருங்கள் நான் படத்தை பற்றி பெரிதாக ஒன்றும் எழுதவில்லை!
நீங்கள் தாராளமாக விமர்சனம் எழுதலாம்!

நான் இயக்குனரை அவரது படங்களீன் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளேன்!

வால்பையன் said...

நன்றி புதியவன்!

இவரின் மற்ற படங்களும் அருமையாக இருக்கும் பாருங்கள்! அனைத்து டீ.வீ.டீ களும் சென்னையிலேயே கிடைக்கும்!

************************

நன்றி அகநாழிகை

***********************

உண்மை தாங்க ஜாக்கிசேகர்
வசனமே தேவையில்லைன்னு நினைப்பவர் அவர்

**********************

கார்த்திகை பாண்டியன்!
ஈரோடு வரும் போது சொல்லுங்க!
எல்லா படத்துலயும் ஒரு காப்பி போட்டுடலாம்!

வால்பையன் said...

நன்றி வெங்கிராஜா
மூனாவது பாகமெலாம் இல்லை!
அந்த படத்தின் பெயரே அது தான்!

*******************

கண்டிப்பாக பார்க்கிறேன் கலையரசன்!
ஆனா நிறைய தமிழ் பட காட்சிகள் உலக சினிமாவிலிருந்து காப்பி அடிக்கப்படுகிறது!

************************
நன்றி தமிழரசி!

மொழியை விட உலகசினிமாக்களில் அந்தந்த நாட்டின் கலாச்சாரம் தெளிவாக விளக்கபடிருக்கும்!
அதற்காகவே பார்க்கலாம்!

*********************

நிச்சயமாக அசத்தலான படம்!
ஆனா நான் கதை சொன்ன மாதிரி இருக்காது, பாருங்க

வால்பையன் said...

நன்றி சின்னப்பையன்
விரிவான பின்னூட்டத்திற்கு!

***********************

நன்றி பூர்ணிமாசரண்

**********************

இது ஆங்கில படமல்ல அ.மு.செய்யது!
கொரியப்படம்! இந்த படங்கள் பாமரனுக்கும் புரிய ஒரே காரணம் சும்மா பேருக்கு தான் வசனங்கள்

********************

நன்றி கிரி!
உங்க தலைவர் படமே(எந்திரன்) இங்கிலீஷ் படம் மாதிரி தான் போங்க!

**********************

நன்றி அனானி!
கிம் கி டுக் ஒரு சிறந்த இயக்குனர் என்பதில் யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இருக்காது!

வால்பையன் said...

சொள் அலகன் அண்ணே!
ஏன் இப்பெல்லாம் அடிக்கடி வர மாட்டிங்கிறிங்க! என்மேல எதாவது கோபமா?

******************

நன்றி ஸ்ரீதர்!
அவசியம் பாருங்க!

************************

அவசியம் பாருங்க ஜமால்!

********************

சுப்பு சினிமா பார்க்க மொழி அவசியமில்லையே!

***********************

சொள் அலகன் அண்ணே
சேர் மார்கெட் நல்லாதான்ணே இருக்கு!
மேலும் எனக்கு சேர பத்தி ஒன்னும் தெரியாது! ஒன்லி கமாடிடி

************************

கண்டிப்பா பாருங்க ரம்யா!
எல்லா படமும் நல்லாயிருக்கும்!

Ayyanar Viswanath said...

வால்
பகிர்வுக்கு நன்றி..
bow download செய்து கொண்டிருக்கிறேன்
பார்த்துவிட்டு விரிவாய் பேசலாம்

sankarkumar said...

my favourite movie of kim ki duk is badguy.
such a good movie

U.P.Tharsan said...

நானும் இவருடைய The Bow படம் மட்டும் பார்த்தேன்.... அதன் பின் அவருடைய படங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவல் தொற்றிக்கொண்டது....

Vivek said...

கிம் கி டுக் ஓட ரசிக பெருமக்கள் லிஸ்ட்ல என்னையும் சேர்த்துகோங்க. நேத்து தான் spring, summer, fall,winter,spring பாத்தேன். சினிமா ஒரு கலை'னு நிரூபிக்கிற இன்னொரு படம். One of the simple and best movies that i have watched recently. Even 'Bow' too is an amazing script.

http://vivekapithan.wordpress.com

Unknown said...

கிம் கி டுக்கின் முக்கியமான மூன்று படங்களையும் ரத்தினச் சுருக்கமாக அருமையாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள் அருண். நான் ஐல் பார்த்துவிட்டேன்.அவரின் ஒவ்வொரு திரைபடமும் ஆழ்ந்து பார்க்கப்பட வேண்டிய ஒன்று கவிதைத்தன்மையும் குரூரத்தன்மையும் ஒரே மனதில் இருப்பதைப் போல வன்முறையும் அதீத அன்பும் அவரின் படங்களில் இழையாக இருக்கும். சமாரிட்டன் கர்ல் பாருங்கள், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும், பார்த்ததும் பதிவிட மறக்காதீர்கள்.

!

Blog Widget by LinkWithin