குவியல்!....(07.05.09)

நேற்று நண்பனின் திருமணத்திற்காக ஆழயார் சென்றிருந்தேன்! மங்கி ஃபால்சில் குளிக்க அனுமதியில்லையாம்! மலை பிரதேசம் என்பதால் வெயில் அவ்வளவாக இல்லை. குடிக்க தென்னங்கள்ளு கிடைக்கிறது! தேர்தல் களை கட்டவில்லை! மக்கள் அமைதியாக இருக்கிறார்கள்!

*********************************

நண்பர் அதிஷாவின் ”கனாகண்டேன்” என்ற ஒருபக்க கதை, நண்பர் நர்சிம்மின் “இன்னொமொரு காதல் கதை” என்ற சிறுகதை (சற்றே பெருசு) இந்த வார ஆனந்தவிகடனில் வந்துருக்கு. நண்பர்கள் மறக்காமல் வாங்கி படித்து அவர்களுக்கு வாழ்த்து சொல்லுங்கள்

**********************************

நண்பர் விக்னேஷ்வரன் என்னையும் மனுசனா மதிச்சி 25 கேள்விகளை அனுப்பி அதக்கு பதில் வாங்கி அதை ஒரு பதிவா போட்டிருக்கார். ”சுண்டக்கஞ்சி வித் வால்பையன்” என்ற தலைப்பில், நண்பர்களின் கருத்தையும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்!

***********************************

கோடை வெயில் கொஞ்சம் அதிகமாகவே தாக்குகிறது!
மதிய நேரம் வெளியே செல்லவே பயமாக இருக்கிறது. ஆப்ஃபாயில் ஆகி விடுவோம் என்று!
நண்பர்கள் வெயில் நேரங்களில் உப்பு கொஞ்சம் அதிகமாகவே சேர்த்து கொள்வது நல்லது!
நம் உடலில் இருந்து வியர்வையுடன் சேர்ந்து வெளியேறும் உப்புக்கு அது ஈடு கொடுக்கும்! இல்லையென்றால் லோ பிரசர் வர வாய்ப்புண்டு!

*************************************

நண்பர் அப்த்துல்லா அன்பானவர் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் இனிமையான குரல் கொண்டவர் என்பது அவரை பாட சொல்லி கேட்டால் தான் தெரியும். அவர் ”சொல்ல சொல்ல இனிக்குதே” என்ற படத்தில் நமக்காக ஒரு பாடல் பாடியிருக்கிறார்! நண்பர் குசும்பனின் வலைபூவிற்கு சென்றால் பாடலை முழுதாக கேட்கலாம்

**************************************

அனுஜன்யாவின் இந்த கவிதைக்கு எழுதிய எதிர்கவுஜ தான் இன்னைக்கு உங்களுக்கு தண்டனை!

ஏறவில்லை என்றும்
போதை ஏற வாய்ப்புமில்லை என்றும்
சால்னா கடையில்
முறுக்கு கொரித்தபடி பேசிக்கொண்டனர்;
இரவு கவிந்ததும்
வலுவிழந்த கால்களால் வீழ்ந்து
கிளைகளில் சிக்கியிருந்த
சாயம் போயிருந்த வேட்டியை
பார்த்து முறுவலித்தது
முருக்கும்,மிக்சரும் சொரியத்
துவங்கியிருந்த வாந்தி.

48 வாங்கிகட்டி கொண்டது:

வினோத் கெளதம் said...

குவியல் குஜாலாக்கீது..

வினோத் கெளதம் said...

Monkey falls..
குளியல் அருமையா இருக்கும்..

வினோத் கெளதம் said...

நீங்க குளிச்சு இருந்திங்கன ஒரு கவிதை

"மங்கி பால்ஸ்ல ஒரு மங்கி குளிக்குதே"
அடடா ஆச்சரியக்குறி..

ப்ரியமுடன் வசந்த் said...

//நேற்று நண்பனின் திருமணத்திற்காக ஆழயார் சென்றிருந்தேன்! மங்கி ஃபால்சில் குளிக்க அனுமதியில்லையாம்! //

உங்களுக்கே அனுமதியில்லயா?

ஹி...ஹி...

தராசு said...

//தென்னங்கள்ளு கிடைக்கிறது!
மக்கள் அமைதியாக இருக்கிறார்கள்!//

பொருந்தவில்லை


//மக்கள் அமைதியாக இருக்கிறார்கள்!
தேர்தல் களை கட்டவில்லை!//


பொருந்துகிறது

Raju said...

\\சாயம் போயிருந்த வேட்டியை\\

வேட்டி எப்டி சாயம் போகும்..!
கைலி தான சாயம் போகும்..!

தமிழ் அமுதன் said...

/// குடிக்க தென்னங்கள்ளு கிடைக்கிறது! ///

இதையெல்லாம் ஒரு வரில சொல்லி முடிக்க கூடாது!

சைடு டிஷ் என்ன ? நண்டு கிடைக்குதா ? தோசை சுட்டு அதுக்கு தொட்டுக்க கார சட்னி
தராங்களா? இதையெல்லாம் கொஞ்சம் விளக்கனும்!!

ராஜ நடராஜன் said...

///// குடிக்க தென்னங்கள்ளு கிடைக்கிறது! ///

இதையெல்லாம் ஒரு வரில சொல்லி முடிக்க கூடாது!

சைடு டிஷ் என்ன ? நண்டு கிடைக்குதா ? தோசை சுட்டு அதுக்கு தொட்டுக்க கார சட்னி
தராங்களா? இதையெல்லாம் கொஞ்சம் விளக்கனும்!!//

ஜீவனோட பின்னூட்டம்.

பீர் | Peer said...

பாட்டு கேட்டேன் அருமை. சொல்லிட்டு வந்துட்டேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

இங்கயும் தண்ணிக் கவிதை தானா??

S.A. நவாஸுதீன் said...

நேற்று நண்பனின் திருமணத்திற்காக ஆழயார் சென்றிருந்தேன்! மங்கி,(இது கொஞ்சம் பொருத்தமா இருக்குமோ) ஃபால்சில் குளிக்க அனுமதியில்லையாம்!

சும்மா தமாசு தல

ராஜ நடராஜன் said...

சும்மா கிடந்த ரோட்ல மடம் எல்லாம் வந்துருச்சாமே!

ஆழியாரு அணையில புதுசா எந்தப்படத்துக்கு அணைச்சுகிட்டாங்க?

ஆழியாரு போனவக அட்டகட்டி வரை ஊசி முனை வளைவுகளைப் பார்த்துகிட்டே நண்பர்களை தரிசித்திருக்கலாம்.

!?.

S.A. நவாஸுதீன் said...

குவியல் நல்லா இருக்கு தல

S.A. நவாஸுதீன் said...

நண்பர் அதிஷாவின் ”கனாகண்டேன்” என்ற ஒருபக்க கதை, நண்பர் நர்சிம்மின் “இன்னொமொரு காதல் கதை” என்ற சிறுகதை (சற்றே பெருசு) இந்த வார ஆனந்தவிகடனில் வந்துருக்கு. நண்பர்கள் மறக்காமல் வாங்கி படித்து அவர்களுக்கு வாழ்த்து சொல்லுங்கள்.

நானும் வாழ்த்திக்கிறேன்

அப்பாவி முரு said...

விக்கியின் கேள்வி, உங்களோட பதில் எல்லாம் சிறப்பு.

வாழ்(ல்)துகள்

அக்னி பார்வை said...

///நண்பர்கள் வெயில் நேரங்களில் உப்பு கொஞ்சம் அதிகமாகவே சேர்த்து கொள்வது நல்லது!
////

உள் குத்து எதுவும் இல்லையே...

புதியவன் said...

//மங்கி ஃபால்சில் குளிக்க அனுமதியில்லையாம்!//

நீங்க உங்க வாலக் காட்டியிருந்தீங்கன்னா ஒருவேளை அனுமதி கிடைச்சிருக்குமோ...?

anujanya said...

இந்த தடவ நான் மாட்டினேனா? அப்துல்லா, நர்சிம், அதிஷா எல்லோருக்கும் வாழ்த்துகள்.

அனுஜன்யா

கண்ணா.. said...

அதிஷா, நர்சிம், அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள்......

வாலு விகடன் தயாரிப்பில் ஏதாவது பாட்டு பாடலாமே..?

Prabhu said...

எப்ப பாத்தாலும் குடி மேட்டரா? ச்சே...என்ன மாதிரி நல்ல பசங்கள இப்படியா கெடுக்கறது?

SUBBU said...

:))))))))))))))

கடைக்குட்டி said...

மொத்தத்தில் குவியல்..

கும் கும்..

அகநாழிகை said...

வால்,
எதிர்கவிதையெல்லாம் இருக்கட்டும்,
எதிர்பாட்டு ஒண்ணு பாடக்கூடாதா..

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

Suresh said...

நரசிமிக்கும் அதிஷாவுக்கும் வாழ்த்துகள்

குவியல் குஜாலாக்கீது..;)

சூப்பர் மச்சி

கார்க்கிபவா said...

எதிர் கவிதை கலக்கல்..

/வேட்டி எப்டி சாயம் போகும்..!
கைலி தான சாயம் போகும்.//

ங்கொய்யால.எவ்ளோ பொறுப்பா படிச்சு பார்த்திருக்காரு பாருங்க

மாதவராஜ் said...

எதிர்க் கவிதை அனாயசமாக வந்திருக்கிறது.

மாதவராஜ் said...

எதிர்க் கவிதை அனாயசமாக வந்திருக்கிறது.

அ.மு.செய்யது said...

//ஏறவில்லை என்றும்
போதை ஏற வாய்ப்புமில்லை என்றும்
சால்னா கடையில்
முறுக்கு கொரித்தபடி பேசிக்கொண்டனர்;
இரவு கவிந்ததும்
வலுவிழந்த கால்களால் வீழ்ந்து
கிளைகளில் சிக்கியிருந்த
சாயம் போயிருந்த வேட்டியை
பார்த்து முறுவலித்தது
முருக்கும்,மிக்சரும் சொரியத்
துவங்கியிருந்த வாந்தி.//

தர(தாறுமாறு)மான ஆம்லெட் கவிதை.

குவியலை பார்த்து யாரும் கும்மாதிருப்பாராக !!!

VIKNESHWARAN ADAKKALAM said...

டெம்ப்லெட் பின்னூட்டம் தான் போட வருது. இருந்தாலும் வேற யோசிக்கிறேன்....


//குடிக்க தென்னங்கள்ளு கிடைக்கிறது!//

ஐ லைக் இட்.... ஒரு மரத்து கள்ளு குடிக்கலாம்னு நண்பன் கூட்டிக்கிட்டு போயிருந்தான். ஒரு ஓரமா உக்காந்து அடிச்சிகிட்டு இருக்கும் போது ஒரு தொழிலாளி கள்ளு சட்டியை இறக்கினாரு. ஒரு சின்ன சுண்டெலி செத்து கிடந்துச்சு... அதெல்லாம் பார்த்தா முடியுமா? நான் வேறு பக்கம் திரும்பிகிட்டேன். :)

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே அது சொல்ல சொல்ல இனிக்குதே அல்ல...சொல்ல சொல்ல இனிக்கும்.

அப்புறம் எதிர் கவிதை சான்ஸே இல்லை :))

தேவன் மாயம் said...

அதிஷா, நர்சிம், அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள்......
இதைச்சொன்ன வாலுக்கு நன்றி!

கிரி said...

//நேற்று நண்பனின் திருமணத்திற்காக ஆழயார் சென்றிருந்தேன்! மங்கி ஃபால்சில் குளிக்க அனுமதியில்லையாம்!//

என்ன கொடுமை சார் இது! அருணுக்கே அனுமதி இல்லையா! ;-)

Suresh Kumar said...

கோடை வெயில் கொஞ்சம் அதிகமாகவே தாக்குகிறது!
மதிய நேரம் வெளியே செல்லவே பயமாக இருக்கிறது////////////


பார்த்து வெளிய போங்கோ கருத்துடுவீங்க

Cinema Virumbi said...

விக்னேஷ்வரனின் சிந்திக்கத் தூண்டும் கேள்விகள்!
வால் பையனின் maturity கொப்பளிக்கும் பதில்கள்!

நன்றி!

சினிமா விரும்பி

நல்லதந்தி said...

வெயிலுக்கு தென்னங்கள்ளு சூப்பரா இருக்கும். ஒரு மரத்துக் கள்ளா இருந்தா இன்னும் டாப். கள்ளுக்கு நெத்திலி கருவாடுதான் நல்லகாம்பினேசன்!., இல்லையா வால்!

Anonymous said...

அண்ணா,வாங்க... நாங்களும் புதுசா கம்பெனி தொடங்கி இருக்கோம். அப்படியே வந்து பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

மணிகண்டன் said...

Good one.

RAMYA said...

ஒரு பதிவிலே பல மேட்டர்கள் சொல்லி இருக்கீங்க வால்ஸ்.
இதுதான் உங்க பிராண்ட்!!

இது நம்ம ஆளு said...

அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

Tech Shankar said...

அதிஷா, மற்றும் நர்சிம் - இருவருக்கும் வால்(ழ்)த்துகள்

//நண்பர் அதிஷாவின் ”கனாகண்டேன்” என்ற ஒருபக்க கதை, நண்பர் நர்சிம்மின் “இன்னொமொரு காதல் கதை” என்ற சிறுகதை (சற்றே பெருசு) இந்த வார ஆனந்தவிகடனில் வந்துருக்கு. நண்பர்கள் மறக்காமல் வாங்கி படித்து அவர்களுக்கு வாழ்த்து சொல்லுங்கள்

Tech Shankar said...


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

கலையரசன் said...

வால் பையன் அவர்களே, உங்கள் அன்னைக்கு...
என் அன்னையர் தின வாழ்த்துக்கள்!!
அப்படியே நம்ம வூட்டுக்கும் வந்துட்டு போங்க!
http://www.kalakalkalai.blogspot.com

Tech Shankar said...


Politicians' Drama 2009

sakthi said...

ஏறவில்லை என்றும்
போதை ஏற வாய்ப்புமில்லை என்றும்
சால்னா கடையில்
முறுக்கு கொரித்தபடி பேசிக்கொண்டனர்;
இரவு கவிந்ததும்
வலுவிழந்த கால்களால் வீழ்ந்து
கிளைகளில் சிக்கியிருந்த
சாயம் போயிருந்த வேட்டியை
பார்த்து முறுவலித்தது
முருக்கும்,மிக்சரும் சொரியத்
துவங்கியிருந்த வாந்தி.//

mudiyalai

ers said...

இரவு கவிந்ததும்
வலுவிழந்த கால்களால் வீழ்ந்து
கிளைகளில் சிக்கியிருந்த
சாயம் போயிருந்த வேட்டியை
பார்த்து முறுவலித்தது
முருக்கும்,மிக்சரும் சொரியத்
துவங்கியிருந்த வாந்தி.///
கவித நல்லாத்தான் இருக்கு அருண். ஆனா... புட்டிக்கவித தான் எழுதனுமா.. குட்டிக்கவிதை எழுத கூடாதா..

வால்பையன் said...

நன்றி வினோத் கெளதம்!
கவுஜ நல்லாயிருக்குது!

நன்றி வசந்த்
ஆமாங்க யாரையும் விடமாட்டேன்னுடாங்க

நன்றி தராசு
ஆராய்ச்சிக்கு

நன்றி டக்ளஸ்
போதையில் வேட்டியுலும் சாயம் போகும்! அதற்கு பெயர் மானம்னு சொல்லுவாங்க!

நன்றி ஜீவன்
சைடிஷ் இட்டிலியும் கோழிகறியும்!

நன்றி ராஜநடராஜன்
ஜீவனுள்ள பின்னூட்டம்னும் சொல்லலாம்

நன்றி சில்-பீர்

நன்றி கார்த்திகைப்பாண்டியன்
எங்கேயும் அப்படிதான்

நன்றி S.A. நவாஸுதீன்
தாராளமாக கலாய்க்கலாம்

நன்றி அப்பாவி முரு

நன்றி அக்னிபார்வை
கககபோ!

நன்றி புதியவன்
கரைக்ட் காட்டியிருக்கனும்

நன்றி அனுஜன்யா
இது பழைய கவிதை தான் ஞாபகம் இருக்கா!

நன்றி பப்பு!
குடியும், குடுத்தனமா வாழ சொல்லி தானே வாழ்த்துறாங்க!

நன்றி சுப்பு
வேலை அதிகமோ

நன்றி கடைகுட்டி

நன்றி அகநாழிகை
கூடிய விரைவில் பாடிருவோம்!

நன்றி சுரேஷ் மச்சி

நன்றி கார்க்கி
படிக்கிறவங்களையும் கிண்டல் பண்றிங்களே

நன்றி மாதவராஜ்!
அது மட்டும் தான் வருது!

நன்றி அ.மு.செய்யது
வார்த்தையில விளையாடியிருக்கிங்க

நன்றி விக்னேஷ்
தொடர்ச்சியாக ஒரே மாதிரி போடுவது தான் டெம்ப்ளெட் பின்னூட்டம்

நன்றி அப்துல்லா அண்ணே
சந்தேகப்பட்டேன், குசும்பன் தப்பு பண்ண மாட்டாருன்னு போட்டுட்டேன்

வால்பையன் said...

நன்றி தேவன்குமார்

நன்றி கிரி
வாங்க ஸ்ட்ரைக் பண்ணலாம்

நன்றி சுரேஷ்குமார்
நீங்களும் பார்த்து இருங்க!

நன்றி சினிமாவிரும்பி

நன்றி நல்லதந்தி
உங்களுக்கு தெரியாததா புதுசா நான் சொல்லப்போறேன்

நன்றி மங்களூர் சிவா

நன்றி ராசுகண்ணு
வர்றேன்

நன்றி மணிகண்டன்

நன்றி ரம்யா
என் பிராண்ட் நெப்போலியன்

நன்றி இது நம்ம ஆளு
வந்துடுவோம்!

நன்றி தமிழ்நெஞ்சம்
உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

நன்றி கலையரசன்
வந்தாச்சு வந்தாச்சு

நன்றி சக்தி
ஓவரா போனா முடியாது தான்

நன்றி நெல்லைதமிழ்
நமக்கு தெரிஞ்சது தானே எழுதனும்!

Deepa said...

குவியல் அருமை!

!

Blog Widget by LinkWithin