மதியம் செவ்வாய், மே 19, 2009

ஓர் எதிர்வினை!..

டியர் சார்!

சமீபகாலமாக உங்களது கட்டுரைகள் அனைத்தும் படித்து வருகிறேன்! ஒருசில கட்டுரைகள் சுமாரா இருந்தாலும் சில கட்டுரைகள் ஓடி வந்து அப்பலாம் போல இருப்பதால் இதுவரை எந்த கடிதமும் உங்களுக்கு எழுதியதில்லை! ஆனாலும் சமீபத்தில் "குருதிகனல்" என்ற படத்திற்கு நீங்கள் எழுதிய விமர்சனம் எனக்கு ஏற்புடையதாக தான் இருந்தது! தீடிரென்று பாபாபுத்திரன் சொல்கிறார் என்பதற்காக, நான் அந்த விமர்சனம் எப்படி எழுதினேன் என்றே தெரியவில்லை. பாபாபுத்திரன் சொல்வது தான் சரி என்று பல்டி அடித்தது எந்த வகையில் சேரும்!, மேலும் பல விமர்சனங்களை பார்க்கும் போது எப்படி இன்னும் உங்களை விட்டு வச்சிருக்கானுங்கன்னு தோணும், எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க

இந்த கடிதம் எழுதக்கூட எனக்கு பயம் தான்! உங்களை விமர்சித்தால் சோட்டாணிகரை அம்மணிடம் சொல்லி செய்வினை செய்வதாக ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தீர்கள், மேலும் நீங்கள் அதிகம் படித்தவர் என்று எண்ணியிருந்தேன். மழைக்கு கூட பள்ளிப்பக்கம் ஒதுங்கவில்லை என்று போன கட்டுரையில் தான் எழுதியிருந்தீர்கள். அதனால் நான் சமாதானமாக போய் விடுகிறேன்! என்னையும் உங்கள் கொள்ளை ஸாரி இலக்கிய கூட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள்

கம்மாகரை கண்ணன்
செவ்வாய்கிரகம்

**************************************

டியர் கண்ணன்

உங்களது கடிதம் பார்த்து சிரிப்பு தான் வந்தது! பாபாபுத்திரன் கருத்தில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை! குருதிகனல் படத்தை பொறுத்தவ்ரை தீவிரவாதம் தேவையற்றது என்பது தான் எனது முந்தைய கருத்தாக இருந்தது. பாபாபுத்திரன் சொன்ன பிறகு தான் நான் தெரிந்து கொண்டேன், அது அதிகாரமையத்திற்கு எதிரான விளிம்புநிலை மனிதர்களின் போராட்டம் என்று!
பதிமூனரை தடவை பார்த்தும் எனக்கு தெரியாதது பாபாபுத்திரன் சொல்லி தான் தெரிந்தது!
அந்த பதிமூனரை தடவையும் கொஞ்சம் ”தெளிவாக” பார்த்திருக்க வேண்டுமென இப்போது உணர்கிறேன்!

என்னை பத்திரமாக இருக்க சொல்லியிருக்கிறீர்கள்! உங்கள் அன்புக்கு நன்றி, மிஸ்டர் கம்மாகரை கண்ணன், இந்த உலகில் நாம் எதை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் ஆனால் நான் சிலபேரை விமர்சிப்பதில்லை. அவர்களை கீழே வகைப்படுத்துகிறேன்

1.சரக்கு வாங்கி தருபவர்.

2.ஃபாரின் சரக்கு வாங்கி தருபவர்.

3.செலவுக்கு பணம் அனுப்புபவர்.

4.அக்கவுண்டில் பணம் போடுபவர்

5.எப்போ கேட்டாலும் பணம் தருபவர்.

ஒருமுறை இவர்களையே விமர்சித்து, அவர்கள் சட்டையை பிடித்து பணம் கேட்டது தனிக்கதை. அதை இன்னோரு நாள் சொல்கிறேன்.

இவ்விடத்தில் இக்கட்டுரைக்கு சம்பந்தமில்லாத ஒரு சிறு விசயம். போன வாரம் ஜட்டி வாங்க காசு வைத்திருந்ததேன். சனிக்கிழமை ஒயின்ஷாப் முழுநாள் அடைப்பு என்பதால் ப்லாக்கில். வாங்கி பணம் செலவாகிவிட்டது! யாராவது அன்பர்கள் பணம் அனுப்பினால் உங்கள் புண்ணியத்தில் புது ஜட்டி போட்டு திரிவேன்.

அக்கவுண்ட் விபரம்

Name:வாலழகன்

Bank:IC UC VC Bank. டண்டணக்காபட்டி கிளை

A/C No:123456789
(இந்த ஒரு நம்பர் தான் இருக்கான்னு கேக்காத மூதேவி, அதான் ஒம்போது நம்பர் இருக்குல்ல)

எங்கள் கூட்டத்தில் இணைய உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும் அதை சொன்ன சிலேடையையும் ரசிக்கிறேன்! நீங்கள் நினைப்பது போல் நான் படிக்காதவன் அல்ல! IAS படித்தவன், ஆனால் கலைக்டர் என்ற சொல் நியூமரலாஜிப்படி எனக்கு ஒத்து வராததால் நான் வேலைக்கு செல்வதில்லை! மேலும் இதற்கு முன் வேலைக்கு சென்ற இடங்களில் முதலாளிகள் என் சொல் பேச்சு கேட்டு நடக்காததால் இனிமேல் வேலைக்கே செல்வதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன். அதனால் என் கூட்டத்தில் சேருமாசையை இத்துடன் விடுங்கள்!

சனிக்கிழமை மாலை பீச்சுபக்கம் போனால் உங்களுக்கு நல்ல கூட்டம் கிடைக்கும் அங்கேயே ஐக்கியமாகி ”கொல்லுங்கள்”


10.15 PM
19.05.09
சிலுக்குவரமாட்டா பட்டி

87 வாங்கிகட்டி கொண்டது:

Prabhu said...

இந்த தடவ மீ த பர்ஸ்ட்!

Sanjai Gandhi said...

ஒரு மிகப் பெரிய எழுத்தாளரைப் பத்தி எழுதும் போதும் நக்கல் அடிக்கும் போதும் குறைந்த பட்ச நாகரிகத்தைக் கடைபிடிக்கனும் வால். ஊருக்கெல்லாம் அட்வைஸ் பன்றிங்க. உங்களுக்கு அது இல்லையா?

ஒரு காசு said...

ஆட்டோ வந்துகிட்டு இருக்கு, ஜாக்கிரதையா இருங்க.

Prabhu said...

நல்லா சண்ட போடுங்க. டைம் பாஸ் ஆகும்.

தினேஷ் said...

வாலு ஜீ யாரோயோ கொத்துறிங்க போல நடக்கட்டும் நடக்கட்டும்...

Bleachingpowder said...

//ஆட்டோ வந்துகிட்டு இருக்கு, ஜாக்கிரதையா இருங்க.//

அதுக்கும் வாடகை நாம தான் கொடுக்கனும், ஐரோப்பியால எல்லாம் அப்படிதான்.

Bleachingpowder said...

இப்ப தான் வீட்டுக்கு வந்தேன்,மிச்சத்தை காலையில வச்சுக்கலாம்

வால்பையன் said...

pappu said...

இந்த தடவ மீ த பர்ஸ்ட்!//

காலேஜில எப்படி?

வால்பையன் said...

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

ஒரு மிகப் பெரிய எழுத்தாளரைப் பத்தி எழுதும் போதும் நக்கல் அடிக்கும் போதும் குறைந்த பட்ச நாகரிகத்தைக் கடைபிடிக்கனும் வால். ஊருக்கெல்லாம் அட்வைஸ் பன்றிங்க. உங்களுக்கு அது இல்லையா?//

அடடே அப்படியா தல!

இது தெரியாம நான் அதிகபட்ச நாகரிகத்தை கடைபிடிச்சிட்டேனே!
எதாவது சாமிகுத்தம் ஆகிற போகுது!

வால்பையன் said...

//ஒரு காசு said...

ஆட்டோ வந்துகிட்டு இருக்கு, ஜாக்கிரதையா இருங்க.//

வரட்டும் வரட்டும்!
பஸ்ஸ்டேண்டு வரைக்கும் போகனும்!

வால்பையன் said...

pappu said...

நல்லா சண்ட போடுங்க. டைம் பாஸ் ஆகும்.//

நீங்க வந்து நடுவரா நிக்கிறிங்களா?

வால்பையன் said...

//சூரியன் said...

வாலு ஜீ யாரோயோ கொத்துறிங்க போல நடக்கட்டும் நடக்கட்டும்...//

இல்லைங்களே!

இது வெறும் எதிர்வினை தான்!
கொத்துறதுகெல்லாம் நிறைய குத்தூசிகள் இணையத்துல இருக்காங்க!

வால்பையன் said...

//Bleachingpowder said...

இப்ப தான் வீட்டுக்கு வந்தேன்,மிச்சத்தை காலையில வச்சுக்கலாம்//

மறந்துவிடாதீர்கள்!
மறந்தும் இருந்து விடாதீர்கள்!

அ.மு.செய்யது said...

சொந்த செலவில சூன்யமா ??

நடக்கட்டும்..நடக்கட்டும்...

வினோத் கெளதம் said...

தல என்ன சொல்றிங்க..
எதுக்கு அடிசுக்கிறிங்க..
வேணாம்..இப்ப எல்லாம் தூங்குற நேரம்..
நாளைக்கு காலைல அடிசுக்கிடின்கன எங்களக்கு கொஞ்சம் டைம் பாஸ் ஆகும்..

இராகவன் நைஜிரியா said...

ஹா... ஹா........ :)

RAMYA said...

நல்ல நகைச்சுவையாக இருந்தது.
எப்படித்தான் யோசிப்பீங்களோ
ஆட்டோ எல்லாம் போதாது :-)

சின்னப் பையன் said...

அட்றா சக்கை... அட்றா சக்கை...

Mahesh said...

என்னா தல நடக்குது இங்க????

kishore said...

இப்போ நீங்களும் ஆரம்பிச்சிடிங்களா... வால்ஸ். வழக்கமா நம்ம கிட்டேயே எல்லா பொருளும் வாங்கிக்குங்க( ஆசிட், உருட்டு கட்டை, சைக்கிள் செயின், முட்டை, ) அவசரத்துல ஆள மாத்தி ஆர்டர் பண்ணிடாதிங்க.. நீங்க சண்ட போடுறவருகிட்டயும் நம்ம கடை அட்ரஸ் குடுத்துடுங்க... சண்ட குவாலிட்டியா இருக்க வேணாமா?

மேவி... said...

அரசியல் நடக்கிற மாதிரி இருக்கு ......

வாலு சத்யமா "நான் அவர் இல்லை"

(ஹி ஹி ஹி
எதையாவது செய்து பிரபலம் ஆகுவது என்று முடிவு செய்து விட்டேன்)

புதியவன் said...

//ஆனால் கலைக்டர் என்ற சொல் நியூமரலாஜிப்படி எனக்கு ஒத்து வராததால் நான் வேலைக்கு செல்வதில்லை! //

அக்மார்க் வால் டச்...

எம்.எம்.அப்துல்லா said...

இரும்பு அடிக்கிற இடத்துல ”ஈ”க்கு என்ன வேலை? நான் கிளம்புறேன்.
:)

தேவன் மாயம் said...

இந்த ஆட்டத்தில் எனக்கு வேலை இல்லை போல!! விடு ஜூட்!!

மனுநீதி said...

சூப்பர் வால். தொடரட்டும் உங்கள் எதிர்வினைகள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

இது ஆவறதில்ல.. சக்க ஓட்டு வால்.. :-)

கார்க்கிபவா said...

அட்றா றாறா நாக்க முக்க நாக்க முக்க
அட்றா றாறா நாக்க முக்க..

Anonymous said...

ப்ளீசிங் நல்ல வொர்க் அவுட் ஆகுது போல இருக்கே.... நாளைக்கு அங்க இருந்து அம்பு (அலும்பு) வருமோ... ஆனா வெட்டியா இல்ல அத படிக்கற அளவுக்கு அப்படின்னு சொன்னாங்க... ஜாலி .... தொடரட்டும்.......

கண்ணா.. said...
This comment has been removed by the author.
கண்ணா.. said...

//அடடே அப்படியா தல!

இது தெரியாம நான் அதிகபட்ச நாகரிகத்தை கடைபிடிச்சிட்டேனே!
எதாவது சாமிகுத்தம் ஆகிற போகுது!//

ithu val touch..!!

SUBBU said...

ஒன்னுமே பிரியலே உலகத்துலே ;) ;)

ivingobi said...

Summa iruntha Vaal a yaro sorinju vittutanga phola ?

SUBBU said...

//ivingobi said...
Summa iruntha Vaal a yaro sorinju vittutanga phola ?
//

:)))))))))))))))))))))))))))
:)))))))))))))))))))))))))))
:)))))))))))))))))))))))))))
:)))))))))))))))))))))))))))
:)))))))))))))))))))))))))))
:)))))))))))))))))))))))))))
:)))))))))))))))))))))))))))
:)))))))))))))))))))))))))))
:)))))))))))))))))))))))))))

Bleachingpowder said...

டியர் சார்,

உங்களுடைய எதிர்வினையை படித்தேன், தமிழ் மணத்தில் இது வரை வந்த எதிர்வினையில் இது இரண்டாவது இடத்தை பெறும் என்று நினைக்கிறேன். உங்கள் பதிவை திரும்ப திரும்ப படித்தேன் ஆனந்தமாக இருந்தது. எதிர்வினைகளை படிக்கும் போது மனம் ஏன் ஆனந்தமடைகிறது என்பது ஆய்வுக்குரிய தனி விஷயம்.

நான் கடவுள் படத்தை பார்த்தீர்களா? அதில் வரும் அகோரிக்கு ஜீன்ஸ் மாட்டி விட்டால் அவர் யாரைப் போல் இருப்பார் என்று என்றாவது எண்ணியதுண்டா? தமிழகத்தில் உங்களை யாரும் சீண்டாத நிலையில் கேரளாவில் உங்களை தலையில் தூக்கி கொண்டாடுவதாக அறிந்தேன்,பின் இன்னும் தமிழில் எழுதி எங்கள் உயிரை வாங்குவதற்கு காரணம் என்ன?

தமிழ் புதினங்கள், பதிவுகள் படிப்பீர்களா, லத்தின், அரபிக் இலக்கியங்களை படிக்கவே எனக்கு நேரம் போதத பொழுது இப்படி கேட்க உனக்கு எப்பது தோனுது மு.கூ தயவுசெய்து திட்டாதீங்க. என்னை பொறுத்தவரை சரோஜாவிற்கு பிறகு தமிழ் இலக்கியத்தில் உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். ஆயில் பிரிண்ட் போடோ இல்லாதது மட்டும் தான் ஓரே குறை.

உங்கள் வாழ்க்கையும், ஷேக்ஸ்பியர் வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நிறைய ஒற்றுமையை என்னால் உணர முடிகிறது. எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதும் வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

ப்ளிச்சிங் பவுடர்
சந்திரமண்டலம்
11.23 am

Tech Shankar said...

OOPs.. ஆஹா

Arun Nadesh said...

எதிர்வினையாம் எதிர்வினை... மண்ணாங்கட்டி...

சாரு மீது புழுதி வாரி தூற்றுவதே சில அற்ப ஜென்மங்களின் வேலையாக இருக்கிறது. அவரை பிடிக்கவில்லையென்றால் ஏன் தினமும் சென்று படித்து அவர் காட்டும் பாதையில் செல்கிறீர்கள்?? அவர் அறிமுகப்படுத்தவில்லை என்றால் கிம் கி டுக் பற்றி உங்கள் பேரனுக்கு கூட தெரிய வாய்ப்பில்லை.. உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு தேவை இல்லாததை விட்டு விட வேண்டியது தானே.. இதுல ஊருக்கெல்லாம் உபதேசம் வேற..

Anonymous said...

Pulla kuttykalai padikka vaingappa !

Mukundan

Mythees said...

யார பத்தி எதிர்வினை எழுதி இருகிங்க வாலு .........
எனக்கு புரியல help பன்னுங்க .........

Arun Kumar said...

என்ன தல
இப்படி போட்டு தாக்கறீங்க
அப்புறம் சில மேட்டர் missing
செருப்பால் அடிப்ப்பேன் சட்டையை கிழிப்பேன் மாமா பிஸ்கோத்து போன்ற எதிர்வினைகளை சேர்த்தால் சோக்கா இருக்கும்

Anonymous said...

சூப்பர்!

வால்பையன் said...

//அ.மு.செய்யது said...
சொந்த செலவில சூன்யமா ??//

சூனியம் வைக்கிறவங்க வேறவங்க! நாம அதை எடுக்குரவங்க!

***************************
vinoth gowtham said...
தல என்ன சொல்றிங்க..
எதுக்கு அடிசுக்கிறிங்க..
வேணாம்..இப்ப எல்லாம் தூங்குற நேரம்..
நாளைக்கு காலைல அடிசுக்கிடின்கன எங்களக்கு கொஞ்சம் டைம் பாஸ் ஆகும்..//

கவலை படாதிங்க! இந்த படம் இன்னும் ஒருவாரத்துக்கு ஓடும்!

***********************

இராகவன் நைஜிரியா said...

ஹா... ஹா........ :) //

எதுக்குண்ணே இந்த இடி சிரிப்பு!

வால்பையன் said...

RAMYA said...
நல்ல நகைச்சுவையாக இருந்தது.
எப்படித்தான் யோசிப்பீங்களோ
ஆட்டோ எல்லாம் போதாது :-) //

இந்த குழந்தைக்கு இங்க என்ன நடக்குதுன்னே தெரியாது! ஆனா பின்னூட்டம் மட்டும் எப்படி பொருத்தமா இருக்குது பாருங்க!
********************

ச்சின்னப் பையன் said...
அட்றா சக்கை... அட்றா சக்கை...//

வர வர உங்க பின்னூட்டம் பெருசு பெருசா இருக்கே

*******************

Mahesh said...
என்னா தல நடக்குது இங்க????//

அதான் சொன்னேன்ல ”எதிர்வினை”
****************

வால்பையன் said...

KISHORE said...

இப்போ நீங்களும் ஆரம்பிச்சிடிங்களா... வால்ஸ். வழக்கமா நம்ம கிட்டேயே எல்லா பொருளும் வாங்கிக்குங்க( ஆசிட், உருட்டு கட்டை, சைக்கிள் செயின், முட்டை, ) அவசரத்துல ஆள மாத்தி ஆர்டர் பண்ணிடாதிங்க.. நீங்க சண்ட போடுறவருகிட்டயும் நம்ம கடை அட்ரஸ் குடுத்துடுங்க... சண்ட குவாலிட்டியா இருக்க வேணாமா?//

நாந்தாங்க முதல்ல ஆரம்பிச்சது!
நமக்கு ஆயுதமெல்லாம் தேவைப்படாது!
தலைமை பண்புகளே இல்லாமல் யாருக்காவது அடைமையாக தான் இருப்பேன்னு சிலர் அடம் பிடிப்பாங்க அவுங்களுக்கு கொடுங்க!

Anonymous said...

என்ன தள,

எளக்சன் முடிஞ்சாச்சு , ஏதாவது உருப்படியா எலுதுவன்னு இப்படி யாருக்கும் புரியாம எலுதுரியே என்ன ஆச்சு உனக்கு . ஆனா நகைச்சுவை மட்டும் இந்த புரியாத பதிவிளயும் அப்படியே இருக்குன்னா.

சரி அப்படி யாரு கூட இப்படி சண்டை ?

அப்பறம் உன்னை விமர்ச்சிக்கிறீன் என்று வந்த அந்த நன்பர் எங்கே காணவே கானம்

சொள் அலகன்

வால்பையன் said...

//MayVee said...
அரசியல் நடக்கிற மாதிரி இருக்கு ......
வாலு சத்யமா "நான் அவர் இல்லை"
(ஹி ஹி ஹி
எதையாவது செய்து பிரபலம் ஆகுவது என்று முடிவு செய்து விட்டேன்)
//

பிரபலம் ஆகுறது ஒரு மேட்டரே இல்லைங்க! உங்களுக்கு நீங்களே திட்டியும், பாராட்டியும் லெட்டர் எழுதிகோங்க! அதை உங்க ப்ளாக்குல போடுங்க!

*******************

நன்றி புதியவன்

******************

எம்.எம்.அப்துல்லா said...

இரும்பு அடிக்கிற இடத்துல ”ஈ”க்கு என்ன வேலை? நான் கிளம்புறேன்.//

கொசுவே கும்மியடிக்கும் போது உங்களுக்கு என்ன அண்ணே!

***************

thevanmayam said...

இந்த ஆட்டத்தில் எனக்கு வேலை இல்லை போல!! விடு ஜூட்!!//

யார் சொன்னது நீங்க தான் முக்கிய நடுவர்!

வால்பையன் said...

மனுநீதி said...
சூப்பர் வால். தொடரட்டும் உங்கள் எதிர்வினைகள்.//

அப்படியே செஞ்சுருவோம்!

*******************

கார்த்திகைப் பாண்டியன் said...

இது ஆவறதில்ல.. சக்க ஓட்டு வால்.. :-)//

புடிச்சிடிங்களா பாயிண்ட!

***********************

கார்க்கி said...
அட்றா றாறா நாக்க முக்க நாக்க முக்க
அட்றா றாறா நாக்க முக்க..//

ஆஹா குஷி தாங்க முடியலயாட்றுக்கே!

கண்ணா.. said...

//
Bleachingpowder said...

தமிழகத்தில் உங்களை யாரும் சீண்டாத நிலையில் கேரளாவில் உங்களை தலையில் தூக்கி கொண்டாடுவதாக அறிந்தேன்,பின் இன்னும் தமிழில் எழுதி எங்கள் உயிரை வாங்குவதற்கு காரணம் என்ன?
//

ithu kalakkal

வால்பையன் said...

மயில் said...

ப்ளீசிங் நல்ல வொர்க் அவுட் ஆகுது போல இருக்கே.... நாளைக்கு அங்க இருந்து அம்பு (அலும்பு) வருமோ... ஆனா வெட்டியா இல்ல அத படிக்கற அளவுக்கு அப்படின்னு சொன்னாங்க... ஜாலி .... தொடரட்டும்.......//

உங்களுடய
“பிரபலமான எழுத்தாளர்களும், பிரபலப்படுத்தும் பதிவர்களும்”
என்ற பதிவைப்படித்தேன் சந்தேகமில்லாமல் இருவரும் இந்த விசயத்தில் ஒரே மனநிலையில் தான் இருக்கின்றோம்! மாற்று எழுத்து என்ற பெயரில் வாந்தி எடுத்தலும், பிச்சை எடுத்தலும். சகிக்கல!

வால்பையன் said...

Kanna said...

//அடடே அப்படியா தல!

இது தெரியாம நான் அதிகபட்ச நாகரிகத்தை கடைபிடிச்சிட்டேனே!
எதாவது சாமிகுத்தம் ஆகிற போகுது!//

ithu val touch..!!//

என்னமோ பெரியவங்க சொல்றிங்க!
கேட்டுகிறேன்

*********************

SUBBU said...

ஒன்னுமே பிரியலே உலகத்துலே ;) ;) //

எப்படி நடிச்சாலும் குரல் காட்டி கொடுத்துருதே!

******************

ivingobi said...

Summa iruntha Vaal a yaro sorinju vittutanga phola ?//

கரைக்டா சொன்னிங்க!
நான் எத்தனையாவது திருடன்னு தெரிந்து கொள்ளும் ஆர்வம் தான்

வால்பையன் said...

வாவ் ப்ளீச்சிங்!

இப்படியே போனால் ஆயிரம் கடுதாசி எழுதலாம் போலயே!

********************

நன்றி தமிழ்நெஞ்சம்

******************

நன்றி நடேஷ்!

கிம் கி டுக்கை உலகத்துக்கே அறுமுகம் செய்தவர் அவர் தான்னு சொல்லிறாதிங்க! நான் அவரை பற்றி இப்போ தான் எழுதுறேனே தவிர! தினம் ஒரு வேற்று மொழி படமாவது பார்த்து கொண்டு தானிருக்கிறேன்!
அப்புறம் இன்னொரு மேட்டர்!
உங்களுக்கு பதில் உங்களுக்கு கீழயே முகுந்தன்னு ஒருந்தர் சொல்லியிருக்கார்!

*************************

Anonymous said...
Pulla kuttykalai padikka vaingappa !
Mukundan//

சொல்லிட்டேன் முகுந்தன்!
ஸ்கூல் தொறந்தவிடனே போய் படிக்க வைக்கிறாராம்!

இராகவன் நைஜிரியா said...

// ஹா... ஹா........ :) //

எதுக்குண்ணே இந்த இடி சிரிப்பு!//

காரணம் புரிந்து சிரிச்சதன் விளைவு. பல எதிர் வினைகள் எனக்கு புரிவதே இல்லை. இந்த எதிர்வினை எனக்கு நன்கு புரிந்ததால் வந்த சிரிப்பு இது.

வால்பையன் said...

//mythees said...

யார பத்தி எதிர்வினை எழுதி இருகிங்க வாலு .........
எனக்கு புரியல help பன்னுங்க ........//

க்ளூ கொடுக்குறேன் கண்டுபிடிங்க!

தமிழகத்தில் பிரபலம் இல்லை
லக்கியே(அதிர்ஷடமே இல்லைன்னு அர்த்தம்) இல்லை

கேரளாவில் வெகு பிரபலம்
ஷகிலாவும் அல்ல!

********************

Arun Kumar said...

என்ன தல
இப்படி போட்டு தாக்கறீங்க
அப்புறம் சில மேட்டர் missing
செருப்பால் அடிப்ப்பேன் சட்டையை கிழிப்பேன் மாமா பிஸ்கோத்து போன்ற எதிர்வினைகளை சேர்த்தால் சோக்கா இருக்கும்//

அதை ஏன் கேட்க்குறிங்க!
எழுதிய பிறகு நானே நிறைய எடிட் பண்ணிட்டேன்! ஒரு தடவை பார்த்தா சின்ன குழந்தை கூட அப்படியே எழுதும் போலருக்கே!

அப்புறம் என்னாத்துக்கு இந்த அலட்டல்!

*****************

Anonymous said...

சூப்பர்!//

நன்றி அனானி

Anonymous said...

எங்கல் தளிவர் சொள் அலகனுக்கு மட்டும் பதில் அலிக்காத வாலை கண்டிகிரென்

வால்பையன் said...

//எங்கல் தளிவர் சொள் அலகனுக்கு மட்டும் பதில் அலிக்காத வாலை கண்டிகிரென் //

இந்த சிங்கம் யாருன்னு தெரிஞ்சி போச்சு!

*******************

சொள் அலகன்
நீங்க NOன்னு ஒருத்தர் வந்தாரே அவரை தானே கேக்குறிங்க!

அந்த மாதிரி ஆட்களெல்லாம் எதிர்த்து சண்டை போட்டால் தான் மகிழ்ச்சி அடைவாங்க! அவுங்க திட்ட திட்ட நாமே சிரிச்சிகிட்டே இருந்தோம்னா கடுப்பாயி ஓடி போயிருவாங்க!

Suresh said...

வாலு மச்சான் யாரயோ தாக்குறிங்க யாருனு தான் தெரியல ...

அப்போ சரக்கு வாங்கு கொடுத்தாலும் அடி தானா உங்க கிட்ட ;)

Suresh said...

//ஆனால் கலைக்டர் என்ற சொல் நியூமரலாஜிப்படி எனக்கு ஒத்து வராததால் நான் வேலைக்கு செல்வதில்லை! மேலும் இதற்கு முன் வேலைக்கு சென்ற இடங்களில் முதலாளிகள் என் சொல் பேச்சு கேட்டு நடக்காததால் இனிமேல் வேலைக்கே செல்வதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன்.//

ஹாஹா

வாலு நீங்க பெரிய வாலு தான் ;) அதிலும் அந்த

//சனிக்கிழமை மாலை பீச்சுபக்கம் போனால் உங்களுக்கு நல்ல கூட்டம் கிடைக்கும் அங்கேயே ஐக்கியமாகி ”கொல்லுங்கள்”//


சரி அந்த சிலுக்குவரமாட்டா பட்டி எங்க் இருக்கு பாவம் நயன் தாரவை இல்லைனா நமீதாவை யாவது அனுப்பி வைப்போம் அண்ணே

சுந்தர் said...

உங்களை மதுரையில் சந்திக்க மிக ஆவலாக உள்ளேன்.

வால்பையன் said...

//Suresh said...
வாலு மச்சான் யாரயோ தாக்குறிங்க யாருனு தான் தெரியல ...
அப்போ சரக்கு வாங்கு கொடுத்தாலும் அடி தானா உங்க கிட்ட ;)
//

பதிவுலேயே தெளிவா சொல்லியிருக்கேனே! சரக்கு வாங்கி தர்றவங்கள விமர்சிக்க மாட்டேன்னு!

************************

ஆமாங்க தயவுசெய்து நயனையோ, நமிதாவையோ அனுப்பி வையுங்க!
இங்க சிலுக்கு வரமாட்டா!

Anonymous said...

சமீபகாலமாக உங்களது கட்டுரைகள் அனைத்தும் படித்து வருகிறேன்! ஒருசில கட்டுரைகள் சுமாரா இருந்தாலும் சில கட்டுரைகள் ஓடி வந்து அப்பலாம் போல இருப்பதால் ...

ஜிம்ஷா
http:tvmalaionline.blogspot.com/

Arun Nadesh said...

மிக்க நன்றி வால்.. தங்கள் வருகைக்கும், உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கும்.. தமிழில் எழுத ஆவல். எழுத ஆரம்பித்தவுடன் அறிவிக்கிறேன். நீங்களும் வந்து குத்தலாம் குடையலாம்.. :-)

Prabhu said...

நீங்க வந்து நடுவரா நிக்கிறிங்களா?//////

நாங்களாம் வேடிக்கை பாக்கிறவங்க!

சிலுக்கு புருஷன் said...

நல்லா சண்ட போடுங்க. டைம் பாஸ் ஆகும்.

இப்படிக்கு,
சிலுக்கு புருஷன்,
சிலுக்கு வருவாபட்டி :))))))))))

Ashok D said...

ஏன் வாலு..? கடசில நம்ம தலைவரேயே கலாச்சிட்டியே இது நியாமா?

Suresh said...

நீங்க கொடுத்த கிளூ ஸாரி குளுவுல கண்டு பிடித்துவிட்டேன் அவரு தான் பதிவு படிக்கும் போதே டபுட் இருந்தது கேரளா சொல்லி கண்பரம் பண்ணிடிங்க...

சாமி நல்ல நக்கல் அதுவும் கடிதாசி வர மாதிரி .... ;)

ers said...

ஆட்டோ வந்துகிட்டு இருக்கு, ஜாக்கிரதையா இருங்க.//

வரட்டும் வரட்டும்!
பஸ்ஸ்டேண்டு வரைக்கும் போகனும்!


சூப்பர் தல... நானும் வரட்டா... ஈரோட்டில ஏற்கனவே ஆட்டோ கிடைக்காது. இப்படி அனுப்பினா.. டிரிப் போயிட்டு வந்த மாதிரி இருக்கும்.

அசின் அப்பா said...

நல்லா சண்ட போடுங்க. டைம் பாஸ் ஆகும்.

சும்மா டைம்பாசுக்கு தானே இப்படி சொன்னிங்க சிலுக்கு புருசன்.

Anonymous said...

நல்ல நகைச்சுவையாக இருந்தது.

பட்டாம்பூச்சி said...

ஒன்னுமே பிரியலே :(

வால்பையன் said...

Anonymous said...

சமீபகாலமாக உங்களது கட்டுரைகள் அனைத்தும் படித்து வருகிறேன்! ஒருசில கட்டுரைகள் சுமாரா இருந்தாலும் சில கட்டுரைகள் ஓடி வந்து அப்பலாம் போல இருப்பதால் ...
ஜிம்ஷா
http:tvmalaionline.blogspot.com///

நீங்க தானா ஜிம்ஷா இது அனானியா வந்துருக்கிறது!
என்ன கேள்வி இது முதல ஓடி வந்து அப்புங்க

வால்பையன் said...

Nadesh said...

மிக்க நன்றி வால்.. தங்கள் வருகைக்கும், உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கும்.. தமிழில் எழுத ஆவல். எழுத ஆரம்பித்தவுடன் அறிவிக்கிறேன். நீங்களும் வந்து குத்தலாம் குடையலாம்.. :-)//

நண்பர்களுக்குள் நன்றியெல்லாம் எதுக்கு!
கருத்து வேறுபாடுகள் இல்லைனா நாடு இயந்திரதனமா மாறிரும்!
ஆரோக்கியமான உரையாடலுக்கு நான் எப்பவுமே ரெடி!

வால்பையன் said...

//pappu said...
நீங்க வந்து நடுவரா நிக்கிறிங்களா?//////
நாங்களாம் வேடிக்கை பாக்கிறவங்க!//

என் நண்ப்ன் ஒருத்தன் சொல்லுவான்!
ஆட்டத்துல தோக்குறவனை நம்பலாம்!
ஜெயிக்கிறவனை நம்பலாம்!
ஆனா இந்த வேடிக்கை பாக்குறான் பாரு அவன மட்டும் நம்பவே கூடாது!

அவன் தான் எல்லா குசும்புக்கும் காரணமா இருப்பான்

வால்பையன் said...

சிலுக்கு புருஷன் said...
நல்லா சண்ட போடுங்க. டைம் பாஸ் ஆகும்.
இப்படிக்கு,
சிலுக்கு புருஷன்,
சிலுக்கு வருவாபட்டி :))))))))))//

சிலுக்குவருவாபட்டியா!
நீங்க என்ன மேலோகத்துலயா இருக்கிங்க!

வால்பையன் said...

D.R.Ashok said...

ஏன் வாலு..? கடசில நம்ம தலைவரேயே கலாச்சிட்டியே இது நியாமா?//

மன்னிகனும் தல!
நமக்கு தலைவர்ன்னுல்லாம் யாரும் கிடையாது!
சபைக்கு வந்துட்டா எல்லாரையும் கலாய்க்க வேண்டியது தான்!

வால்பையன் said...

Suresh said...

நீங்க கொடுத்த கிளூ ஸாரி குளுவுல கண்டு பிடித்துவிட்டேன் அவரு தான் பதிவு படிக்கும் போதே டபுட் இருந்தது கேரளா சொல்லி கண்பரம் பண்ணிடிங்க...
சாமி நல்ல நக்கல் அதுவும் கடிதாசி வர மாதிரி .... ;) //

நக்கலா அண்ணே இது புனைவுன்னே!

சும்மா லுலுலாயிக்கு!

வால்பையன் said...

//நெல்லைத்தமிழ் said...
ஆட்டோ வந்துகிட்டு இருக்கு, ஜாக்கிரதையா இருங்க.//
வரட்டும் வரட்டும்!
பஸ்ஸ்டேண்டு வரைக்கும் போகனும்!
சூப்பர் தல... நானும் வரட்டா... ஈரோட்டில ஏற்கனவே ஆட்டோ கிடைக்காது. இப்படி அனுப்பினா.. டிரிப் போயிட்டு வந்த மாதிரி இருக்கும்.//


ஷேர் ஆட்டோவா பார்த்து அனுப்ப சொல்லலாம்! அப்ப தான் நாம எல்லோரும் குரூப்பா ஊர் சுத்த முடியும்!

வால்பையன் said...

//அசின் அப்பா said...
நல்லா சண்ட போடுங்க. டைம் பாஸ் ஆகும்.
சும்மா டைம்பாசுக்கு தானே இப்படி சொன்னிங்க சிலுக்கு புருசன்.//

மாமா எப்படி இருக்கிங்க!
நல்லா இருக்கிங்களா
என் செல்லத்தை நல்லா பார்த்துகோங்க!

வால்பையன் said...

மகா said...
நல்ல நகைச்சுவையாக இருந்தது.//

நன்றி மகா!

***********************

பட்டாம்பூச்சி said...

ஒன்னுமே பிரியலே :(//

சில விசயங்கள் புரியாம இருக்குறது தான் நல்லது!

Anonymous said...

http://gnanaputhran.blogspot.com/

நான் said...

நான் http://www.tamil.sg/thiratti/ இலிருந்து வ‌ருகிறேன். http://www.tamil.sg/q.php சென்ற‌ போது ஒரு புதிய‌ feautureஐ க‌ண்டுப்பிடித்தேன். Feedjitடிலிருந்து என்னோடிய‌ ப்லொகை ஹைட் ப‌ன்னிட்டேன்!!

Unknown said...

சும்மா கொல குத்து குத்துரிங்க..
அப்படி அந்த மனுஷன் ப்ளாகுல என்னதான் எழுதி இருக்காரு..??

என்னுடைய மெயிலுக்கவது லிங்க அனுப்பி வையுங்க..

Prawintulsi said...

//நீங்கள் நினைப்பது போல் நான் படிக்காதவன் அல்ல! IAS படித்தவன், ஆனால் கலைக்டர் என்ற சொல் நியூமரலாஜிப்படி எனக்கு ஒத்து வராததால் நான் வேலைக்கு செல்வதில்லை! //

arumaiyaaa... :)

பதி said...

:))))))))

//இது தெரியாம நான் அதிகபட்ச நாகரிகத்தை கடைபிடிச்சிட்டேனே!//

கலக்கல்...

//பிரபலம் ஆகுறது ஒரு மேட்டரே இல்லைங்க! உங்களுக்கு நீங்களே திட்டியும், பாராட்டியும் லெட்டர் எழுதிகோங்க! அதை உங்க ப்ளாக்குல போடுங்க!//

அதையும் முடிஞ்சா அடுத்தவங்களை விட்டு அவங்க பதிவுல போட சொல்லுறது.. !!!!!!!!!!!

வால்பையன் said...

//Anonymous said...
http://gnanaputhran.blogspot.com/
//

வருகைக்கும் உங்கள் வலைப்பூவின் அறிமுகத்திற்கும் நன்றி தல!

வால்பையன் said...

//நான் said...
நான் http://www.tamil.sg/thiratti/ இலிருந்து வ‌ருகிறேன். http://www.tamil.sg/q.php சென்ற‌ போது ஒரு புதிய‌ feautureஐ க‌ண்டுப்பிடித்தேன். Feedjitடிலிருந்து என்னோடிய‌ ப்லொகை ஹைட் ப‌ன்னிட்டேன்!!
//

புரியல
தயவு
செய்து
விளக்கவும்!

வால்பையன் said...

//பட்டிக்காட்டான்.. said...
சும்மா கொல குத்து குத்துரிங்க..
அப்படி அந்த மனுஷன் ப்ளாகுல என்னதான் எழுதி இருக்காரு..??
என்னுடைய மெயிலுக்கவது லிங்க அனுப்பி வையுங்க..//

பெயர் மட்டுமே மாற்றப்படுள்ளது தல!

வால்பையன் said...

Praveen said...

//நீங்கள் நினைப்பது போல் நான் படிக்காதவன் அல்ல! IAS படித்தவன், ஆனால் கலைக்டர் என்ற சொல் நியூமரலாஜிப்படி எனக்கு ஒத்து வராததால் நான் வேலைக்கு செல்வதில்லை! //

arumaiyaaa... :) //

நன்றி தல!

உங்களது ”ஜீரோ டிகிரி” விமர்சனத்தை எனது ப்ளாக்கில் வெளியிட கொடுத்த அனுமதிக்கும் நன்றி!

வால்பையன் said...

//பதி said...

:))))))))
//இது தெரியாம நான் அதிகபட்ச நாகரிகத்தை கடைபிடிச்சிட்டேனே!//

கலக்கல்...
//பிரபலம் ஆகுறது ஒரு மேட்டரே இல்லைங்க! உங்களுக்கு நீங்களே திட்டியும், பாராட்டியும் லெட்டர் எழுதிகோங்க! அதை உங்க ப்ளாக்குல போடுங்க!//
அதையும் முடிஞ்சா அடுத்தவங்களை விட்டு அவங்க பதிவுல போட சொல்லுறது.. !!!!!!!!!!!
//


நன்றி பதி!
நீங்களும் சீக்கிரம் பிரபலம் ஆகிருவிங்க!

!

Blog Widget by LinkWithin