பெங்களூர் சந்திப்பு!

வேலை நிமித்தமாக வந்திருந்தாலும் ஒரு முக்கிய சந்திப்பு நடத்துவதே எங்கள் திட்டமாக இருந்தது!

அது ரங்கமணிகள் பாதுகாப்பு சங்கம்!

கலந்து கொள்ள இருந்தவர்கள்

ஜீவ்ஸ்
T.B.C.D
அரவிந்தன்
லக்சுமனன்(பட்டாம் பூச்சியின்கணவர்)
நானும்

முதலில் ஜீவ்ஸ் வீட்டுக்கு தான் போனேன்!

அவர் வெளியே சொல்ல அனுமதி கேட்டார்.

ஒரே முறைப்பு தான் அப்படியே அமைதி ஆகிட்டார்.

அங்கிருந்து வந்து அரவிந்தனுக்கு போன் செய்தேன்!
வருகிறேன் என்று சொன்னவர் விசயத்தை சொன்னதும் வீட்டில் கேட்க வேண்டும் என்று ஜகா வாங்கினார்.

பட்டாம் பூச்சியின் கணவருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கபடவில்லை அதனால் அவரை அழைக்கமுடியவில்லை.

தெரிந்திருந்தால் கண்டிப்பாக வந்திருப்பார். அவ்வளவு கஷ்டமாம் அவருக்கு

கடைசியாக நானும் T.B.C.D மட்டும் சந்திக்க வேண்டியதாகி விட்டது.


ரெண்டு பேர் சேர்ந்து ஒரு கூட்டமா என்று தள்ளி வைக்கப்பட்டது.
இருப்பினும் ஆண்கள் பாதுகாப்பு சங்க(ஆபாச)தலைவர் ஆதிமூலகிருஷ்ணன்(தாமிரா) தலைமையில் விரைவில் ஒரு கூட்டம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அங்கே சில விசயங்கள் விவாதிக்கப்படும், முக்கியமாக

நம்மை நோக்கி வரும் பூரிக்கட்டையோ, பாத்திரமோ அதிலிருந்து லாவகமாக தப்பிப்பது எப்படி

வியர்வை சிந்தாமல் சமைப்பது எப்படி

அழுக்கு போக சீக்கிரம் துவைப்பது எப்படி

தங்கமணி வாங்கிவர சொல்லும் பொருள்களை மறக்காமல் வாங்கி வருவது எப்படி

என்று விவாதிக்கப்படும்

ரங்கமணிகள் வீட்டிற்குள்ளும் ஹெல்மட்டோடு இருக்க அனுமதி கேட்டு அரசிடம் மனு கொடுக்க வேண்டும் என்று ஜீவ்ஸ் ஏற்கனவே சொல்லியிருந்தார்!

ஒருபக்கம் வீக்கிய மண்டைய பார்க்கும் போது தான் காரணம் தெரிந்தது.

T.B.C.D யிடம் கேட்டதற்க்கு தங்கமணியிடம் கேட்காமல் தான் எதையும் சொல்லமுடியாது என்று சொல்லிவிட்டார்.

பாவம் அடி பலம் போல!

வரவிருக்கும் ரங்கமணிகள் பாதுகாப்பு சங்கத்தில் சேர அனைவரும் தகுந்த பாதுகாப்புடன் முன் வரவேண்டும். மற்றவைகளை தலைவர் ஆதிமூலகிருஷ்ணன் பார்த்து கொள்வார்.


பெங்களூர் பற்றி அடுத்த விசயங்கள் இனி வரும் பதிவுகளில்!

42 வாங்கிகட்டி கொண்டது:

நட்புடன் ஜமால் said...

நல்ல திட்டம் தான்.

ஆ! இதழ்கள் said...

அவசரமா டைப்பியதோ?

நல்ல முடிவா எடுங்க..

:))

நட்புடன் ஜமால் said...

\\நம்மை நோக்கி வரும் பூரிக்கட்டையோ, பாத்திரமோ அதிலிருந்து லாவகமாக தப்பிப்பது எப்படி\\

ஹா ஹா ஹா

Anonymous said...

பெங்கலுரை கழக்கு தளைவா ! சின்ன நிகள்ச்சியை விவரிச்சாளும் கூட அதிள நகைசுவையா எலுத உனக்கு மட்டும் தான் குறு வரும். வெலுத்துக் கட்டு

சொள் அலகன்

மேவி... said...

neenga sonna vishyam ellam hostel la romba naal irunthala enakku antha velai ellam romba EASY...

மேவி... said...

nalla mudivukku soom come ah....

mukkiyama life insurance pathi pesunga

ஆ.ஞானசேகரன் said...

நல்ல சந்திப்பாக இருக்கட்டும்....

Anonymous said...

அண்ணே,

உங்கள் தமிழுக்கு தலை வணங்குகிறேன்.

எழுத்துப் பிழையை சரி பார்க்கவும்.
கலந்து (கழந்து அல்ல) கொள்ள இருந்தவர்கள் என்பது தான் சரி.

அடிக்கடி இந்த மாதிரி தப்பு பண்றீங்க .
பதிவு போடும்போது எல்லாம் எப்போதுமே மப்பில இருப்பிங்களோ ??

சும்மா தான் கேட்டேன்.....மனசுல எதுவும் வச்சுக்கிடாதிங்க ....

எப்பவும் போல கலக்குங்க ..

என்றும் உங்கள் ரசிகன்,
வால் தாசன்.

வால்பையன் said...

//எழுத்துப் பிழையை சரி பார்க்கவும்.
கலந்து (கழந்து அல்ல) கொள்ள இருந்தவர்கள் என்பது தான் சரி.//

திருத்தி விட்டேன் நண்பரே!

தண்ணீர் குறைவாக கலந்ததால் வந்த கலக்கம் அது!

:)

ராம்.CM said...

நல்ல சந்திப்பாக இருக்கட்டும்....

Mahesh said...

"பெண்களூர்" சந்திப்புன்னு சொல்லீட்டு ஆண்களா சந்திச்சுருக்கீங்க !!!

வீணாபோனவன் said...

//தண்ணீர் குறைவாக கலந்ததால் வந்த கலக்கம் அது!//

தண்ணீரா? அப்டின்னா இன்னா?. ராவு ராவா ராவா அடிச்சேன், ஒன்னுமே புர்ல தல... அக்காங்....

-வீணாபோனவன்.

Anonymous said...

அன்னே!
பெங்கலூர் சிக் பேட், கப்பன் பார்க், பனசங்கரி, பசவங்குடி, எம்.ஜி.சாளை பத்தி எள்ளாம் எலுதுங்கன்ணா ! ஒரு நகைசுவை எலுத்தாலன் என்ராள் எள்ளாத்தையும் எலுத முறச்சி செய்ய வேணும் என்ரு மார்க் ட்வைன் ஒரு தபா சொன்ன மாதிரி ஞாபகம்.
இந்த முரையாவது எனக்கு நன்ரி சொள்ளுங்க என்ரு வேண்டி விறும்பிக் கேட்டுக் கொல்கிறேன்.

சொள் அலகன்

Tech Shankar said...

கடந்த முறை நடந்த அவரச சந்திப்புக்கு என்னால் வர இயன்றது. ஆனால் இந்த முறை வர இயலாமல் போனது குறித்து வருந்துகிறேன்.

நன்றியுடன்

நானே

Suresh said...

நானும் சென்னை செல்ல முடியவில்லை பெங்களுரில் ஒரு சந்திப்பு நடந்தா சொல்லுங்க மக்கா

Anonymous said...

சாரி தள "முயற்சி" என்ரு படிக்கவும் அவசரத்திள் பிலையாக தட்டச்சு செய்து தொளைத்து விட்டேன்.
சொள் அலகன்

Prabhu said...

என்ன இது, சந்திக்காமலே சந்திப்புன்னு போட்டிருக்கிங்க, தலைப்புல!

RAMYA said...

\\நம்மை நோக்கி வரும் பூரிக்கட்டையோ, பாத்திரமோ அதிலிருந்து லாவகமாக தப்பிப்பது எப்படி\\


இது super :))

என்ன நடக்குது இங்கே, சந்திப்பு நடக்கவே இல்லையா??
அது சரி.

RAMYA said...

உங்கள் திட்டங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்
கட்டம் கட்டி அடிக்கரமாதிரி கூட்டம் போட்டு :))

அ.மு.செய்யது said...

கிளம்பிட்டாய்ங்கய்யா...

அ.மு.செய்யது said...

தலைவா(ல்)..

பூனேவுல ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணுங்க..

ஜியா said...

அண்ணே!! எதிர்கால ரங்கமணிகளும் இதுல கலந்துக்கலாமா?

Thamiz Priyan said...

பெங்களூர் பதிவர் சந்திப்புகள் ப்ளாக்கில் எழுத மாட்டார்களே? இது எப்படி??? ... :(

Rajeswari said...

ஹா ஹா ஹா...

முன் ஜாக்கிரதை முத்தண்ணா வர்ரார் ..பராக் பராக்..

Kumky said...

Blogger அ.மு.செய்யது said...

தலைவா(ல்)..

பூனேவுல ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணுங்க..

அண்ணே அப்படியே பாங்காக்குல பட்டாயாவிலவும் ஒன்னு ஏற்பாடு பன்னுங்கண்ணே....

வினோத் கெளதம் said...

Tittangal Niraivera valthukkal.

Athuvarai Hospitalil Admit aagamal irukka vendum.

SUBBU said...

நான் பெங்கலூர்தான் என்கிட்டயும் சொல்லுங்க, நானும் வரேன் :))

தமிழ் அமுதன் said...

///இருப்பினும் ஆண்கள் பாதுகாப்பு சங்க(ஆபாச)தலைவர் ஆதிமூலகிருஷ்ணன்(தாமிரா) தலைமையில் விரைவில் ஒரு கூட்டம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.///


கூட்டம் நடந்தா மறக்காம எனக்கும் சொல்லிடுங்க!!

சங்கத்துல என்னையும் சேர்த்து குங்க!!

மின்னல்ப்ரியன் said...

என்ன தல உங்க சங்கமே அபராதத்துலதான் ச்சை...
அடிவாங்கறதுலதான் ஓடிட்டு இருக்கும் போலருக்கு ?

Thamira said...

ஒண்ணுமே நடக்காம ஏதோ பெரிய சந்திப்பு நடந்த ரேஞ்சுக்கு எழுத உம்மாலதான்யா முடியும்..

மீட்டிங் எப்ப என்று தேதி முடிவு செய்யவும். அப்படியே பீராபி தெரபிக்கு ஏற்பாடு செய்துவிட்டு போன் பண்ணவும்.

Thamira said...

ஆதரவு மிக பலமாக இருப்பதால் சங்கத்துக்காக தனி பதிவே துவக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். அனைத்து தகுதிகளும் மிக்க நண்பர் ச்சின்னப்பையன் சங்கத்தின் கௌரவ ஆலோசகராக இருக்க சம்மதித்திருக்கிறார்.

Anonymous said...

எங்க தள ஆலையே காணோம் ? இன்னைக்கு "ழீவு" தானே அப்படி இருந்தும் என்ன சத்தமே இள்ளாம இருக்க!! யோவ் ஆதீ எங்க தளய பத்திரமா பார்த்துக்கப்பா! ஓவறா நீறாடி விட்டாறாதீக!
சொள் அலகன்

Anonymous said...

தளைவா,

திப்பு சுல்தான் பாளஸ் மார்கெட்டாண்ட இருக்கு. ழாள் பாக், மள்ளேஸ்வறம் பத்தி எள்ளாம் எலுது தள.

இஸ்கான் டெம்பில் பத்தி விளாவாரியா எலுதும்மா. எனக்கு நம்பிக்கை இள்ளை யென்றாழும் கூட அவர்கல் செய்யும் சமூகப் பனிக்காகவும் கட்டடக் களைக்காவும் சென்ரேன் என்ர “பிட்”-ஐ போட்டுக் கொல்லளாம். புள்(bull) டெம்பில், மைசூர் றோடு ராஜேஸ்வரி டெம்பில் பத்தியும் எலுது. இது மாதிரி ஏதாவது முற்போக்கு பிட்-ஐ போட்டுக்களாம் கவழைப் படாதே.

(அன்பரே! எனக்கு அப்படி எள்ளாம் செய்யு வேண்டிய அவசியமிள்ளை என்று இந்த பின்னூட்டத்துக்கு பதிழ் அழித்தால் அது அளுகுனி ஆட்டம்)

அவென்யூ சாளையிள்ளுல்ல சேளைக் கடைகல், மெஸ்டிக்கை சுர்ரி உல்ல பர்மா பஜார் கடைகள் பத்தியும் எலுது நன்பா... அளங்கார் பிழாசா-வில் உல்ல சுடிதார் கடைகல் அதற்கு பக்கத்திழ் இருக்கும் விஷ்னுபவன் செட் தோசை பத்தி எள்ளாம் எலுது நன்பா எலுது.

ழாள் பார்க்காண்ட இருக்க மாவழ்ழி டிபன் ரூம் எனும் MTR -ல் சாப்பிட்டுப் பாரு தள! வெல்லி தட்டிள் டம்லரிள் உனவு பரிமாருவார்கல்.

சொள் அலகன்

வெற்றி-[க்]-கதிரவன் said...

//நம்மை நோக்கி வரும் பூரிக்கட்டையோ, பாத்திரமோ அதிலிருந்து லாவகமாக தப்பிப்பது எப்படி //

நம்மளாண்ட வாங்க நல்லா சொல்லிகொடுக்குறேன்..... என்னோட பொண்டாடிங்க மூணுபேரும் எனக்கு நல்லா ட்ரைனிங் கொடுத்துருக்காங்க...

//வியர்வை சிந்தாமல் சமைப்பது எப்படி //

இது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான் கொஞ்சம் காசு அதிகமாகும்...

//தங்கமணி வாங்கிவர சொல்லும் பொருள்களை மறக்காமல் வாங்கி வருவது எப்படி//

இன்னாபா இது தெரியாதா,, கண்ணுல படுற எல்லாத்தையும் வாங்கிகினு போபா...

//ரங்கமணிகள் வீட்டிற்குள்ளும் ஹெல்மட்டோடு இருக்க அனுமதி கேட்டு அரசிடம் மனு கொடுக்க வேண்டும் என்று ஜீவ்ஸ் ஏற்கனவே சொல்லியிருந்தார்! //

எனக்கு சேத்து கொடுங்கப்பா... அப்படியே இந்த கிரிகட்டுல வர பேடு.. கிளவுசு முக்கியமா அதையும் (கொஞ்சம் கமர்சியலா இருக்கட்டுமேனு) சேத்துக்குங்க....

வால்பையன் said...

//சாரி தள "முயற்சி" என்ரு படிக்கவும் அவசரத்திள் பிலையாக தட்டச்சு செய்து தொளைத்து விட்டேன்.
சொள் அலகன்//

இந்த ஒரு பின்னூட்டத்தை படிச்சிகிட்டே ஒரு ஃபுல்லு ராவா அடிச்சி புடுவேன்! சைட் டிஷ் கூட தேவையில்லை!

தமிழ் இனி சாகவே சாகாதுடா! மக்கா!

Vishnu - விஷ்ணு said...

//ஒரே முறைப்பு தான் அப்படியே அமைதி ஆகிட்டார்//

உள் நாட்டு அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.சண்ட போடுவாங்க அப்புறம் கூட்டணி வச்சுகுவாங்க

Anonymous said...

//சாரி தள "முயற்சி" என்ரு படிக்கவும் அவசரத்திள் பிலையாக தட்டச்சு செய்து தொளைத்து விட்டேன்.
சொள் அலகன்//

இந்த ஒரு பின்னூட்டத்தை படிச்சிகிட்டே ஒரு ஃபுல்லு ராவா அடிச்சி புடுவேன்! சைட் டிஷ் கூட தேவையில்லை!

தமிழ் இனி சாகவே சாகாதுடா! மக்கா!//

ஓவ்வொரு பின்னூட்டத்தையும் என் நன்பரிடம் (தமில் மீடியத்தில் படித்த பன்பாலர்) கான்பித்து தான் பதிப்பிப்பேன். அவர் தான் “ய”-வை விட்டுவிட்டேன் என்று சொள்ளியிருந்தார். உடனே நான் திருத்தினேன். அவ்வலவு தான். இதுக் கெல்லாம் போய் இத்தனை பெரிய பாராட்டைக் கொடுப்பீர்கல் என்று எதிர் பார்க்கவே இள்ளை.

தாய் மொலியில தப்பு வந்தா அது நள்ள இருக்காது இள்ளையா ? அதுக்காகத் தான் என் கடமையச் செய்தேன் , திறுத்தினேன்.


சின்ன சின்ன விஷயங்கலுக்கு கூட தனக்கு கீலே வேழை பார்பவர்கள்லைப் பாராட்டவேண்டும் என்று மேனேஜ்மெண்ட் ளெசன் -ள் சொள்வார்கள். குறு இவ்வலவு பெரிய (பதிவுலக) எலுத்தாலனிடம் இருந்து எனக்குப் பாராட்டா ? நன்ரி குறு நன்ரி.

சொள் அலகன்

வால்பையன் said...

நன்றி நட்புடன் ஜமால்
நீங்களும் சேர்ந்துகோங்க

நன்றி ஆ!இதழ்கள்
ஆமாங்க பெங்களூரில் நண்பன் வீட்டில் டைப்பியது

நன்றி MayVee
ஈஸின்னா எங்களுக்கு ட்ரைனிங் கொடுங்க!

நன்றி ஆ.ஞானசேகரன்

நன்றி ராம் C.M.

நன்றி வீணாபோணவன்
ராவா தண்ணி அடிக்காதிங்க!
கொஞ்சமா சரக்கு கலந்துக்கோங்க

நன்றி தமிழ்நெஞ்சம்
பரவாயில்லை! குடும்பம் தானே முதல் முக்கியம்

நன்றி சுரேஷ்
அடுத்த சந்திப்பில் கண்டிப்பாக கலந்துக்கலாம்

வால்பையன் said...

நன்றி பப்பு
சந்திச்சாலும் இதை தானே பேசுவோம்!

நன்றி ரம்யா
நாங்க பூரிக்கட்டையில அடிவாங்குறது உங்களுக்கு சூப்பரா!

நன்றி அ.மு.செய்யது
விரைவில் புனேவில் ஒரு சந்திப்பு

நன்றி ஜி
என்ன கேள்வி இது! நீங்க இல்லாமலா

நன்றி தமிழ்பிரியன்
நான் ஈரோடாச்சே!

நன்றி ராஜேஸ்வரி
என்னங்க செய்ய தலை தப்பித்தாக வேண்டுமே!

நன்றி கும்க்கி
உங்க செலவில் எங்க வேண்டுமானலும் போகலாம்

வால்பையன் said...

நன்றி வினோத்!
மருத்துவமனைகள் வீட்டுகுள்ளயே கொண்டு வந்தாச்சு!

நன்றி சுப்பு
கண்டிப்பாக சொல்கிறேன்

நன்றி ஜீவன்
நீங்க இல்லாம சங்கமா

நன்றி மின்னல்பிரியன்
ஆமாங்க அடிவாங்கி எதிரிய 10 அடி அடிக்கும் போது நாமலும் 50 அடி வாங்குறது சகஜம் தானே!

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்
தாரளமாக தனிபதிவு துவங்கலாம்!
எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு!

நன்றி பித்தன்
ஒண்ணையே சமாளிக்க முடியல!
உங்களுக்கு மூணு!
உடம்ப பார்த்துகோங்க சகா

நன்றி விஷ்ணு
சிலநேரங்களில் நமக்கும் பேச வாய்ப்புண்டு கூட்டிணியில் இங்கே ஒன்லி மூச்

வால்பையன் said...

சொள் அலகன்!

குறுகிய காலத்தில் நீங்கள் நினைத்த இடத்தை பிடித்து விட்டீர்கள்!

இப்போதெல்லாம் நான் பதிவு போட்டால் உங்கள் பின்னூட்டத்தை படிக்கவே மக்கள் கூட்டம் கூடுகிறது!

தொடர்ந்து வரும் உங்கள் ஆதரவுக்கு நன்றி தல!

cheena (சீனா) said...

ஆபாச தலைவர் ஆதிக்கு நல்வாழ்த்துகள் - ஒவ்வொரு கூட்டம் போடும் போதும் இயற்றப்படும் தீர்மானங்களை அனுப்பவும்

!

Blog Widget by LinkWithin