ஈழதமிழர்களின் மீதான வன்முறையை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவது ஆளும்கட்சியில் பந்த் நடைப்பெற்றது. அமைதியான முறையில் என்பது முக்கியம்.
சரி என்ன நடந்தது? எப்படி நடந்தது என ஈரோட்டில் இருந்து ஒரு வளரும் நிருபரின் கட்டுரை
*காலையில் கிளம்பும் போது தெரிந்து விட்டது இன்று கன்ஃபார்மாக பந்த் தான் என்று, ஒரு கடை கூட திறந்திருக்கவில்லை.
*காலையில் இருந்தே பேருந்து ஓடவில்லை, ஆட்டோ ஓடவில்லை, டாக்ஸி ஒடவில்லை.
*பிரசவவலி கண்டவர்கள், நோயாளிகள், அவசர வேலையாக(இன்று முகூர்த்தம்) வெளியே செல்ல இருந்தவர்கள். மருத்துவமனை, மொய் செலவு மிச்சம் என்று வீட்டிலேயே இருந்து விட்டனர்(சேதாரம் வெளியே வராது-அது ஆளும்கட்சி பந்த்)
*காலை சரியாக பத்து மணிக்கு அனைத்து டாஸ்மாக்குகளும் திறக்கப்பட்டன!
(குடிமகன்கள் தண்ணி அடித்து ஈழமக்களுக்காக வருத்தப்பட)
*காலை சன் தொலைக்காட்சியில் அனைத்து தொடர் நாடகங்களும் நிறுத்தப்பட்டு “திருடா,திருடி” படம் காட்டப்பட்டது, மக்கள் மன்மதராசா பாடலுக்கு ஆடி கொண்டே ஈழமக்களுக்காக வருத்தப்பட்டனர்.
*மதியம் கலைஞர் தொலைக்காட்சியில் “வெள்ளிதிரை” என்ற படம், அடுத்தவனை(ஈழமக்களை)பயன்படுத்தி எப்படி பெரியாளாவது(ஆட்சியை பிடிப்பது) என்று சிறந்த கதையை மக்களுக்கு காட்டியது.(இறுதியில் ஏமாற்றிவன் மெண்டலாக நடிப்பான்,இங்கே என்னாகும்)
*உணவகங்கள் மூடப்பட்டிருந்ததால் மதியம் வரை சாப்பிடவில்லை.
விடுமுறைக்காக மனைவியை ஊருக்கு அனுப்பியவர்கள், மணமாகாதவர்கள் என்னை போல தண்ணிரை குடித்தே நாளை கழித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.(நாமும் உண்ணாவிரதம் இருந்திருக்கின்றோம்).
*பேருந்துகள் இயங்காததற்கு ஆரம்பத்தில் எனக்கும் காரணம் விளங்கவில்லை.
திருப்பூர், பல்லடம் பகுதியில் அரசு பேருந்துகள் தாக்கப்பட்டன என தெரிந்த போது தான் அறிந்தேன். ஒருவேளை பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தால் டாஸ்மாக்கில் வருத்தப்பட்டு பாரம்(தண்ணியடிக்கும்)சுமக்கும் பந்த் ஆதரவாளர்கள் தனியே சிக்கும் பேருந்துக்கு தீ வைத்து அழுகு பார்க்கலாம் எனபதும் ஒரு காரணமாக இருக்கலாம் என!
*இந்த வருத்தங்களையெல்லாம் நம்மால் வெறும் பதிவாக தான் போட முடியும், உங்கள் சோகங்களையும் பின்னுட்டத்தில் தான் தெரிவிக்க முடியும், அதை நானும் நீங்களும் மாறி மாறி படித்து கொள்ளலாம் என நண்பர் ஒரு பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தது நியாயமான வருத்தமாக இருந்தது. அதனால் இந்த விசயங்களை குறுந்தகவலாக டைப் செய்து எனது அலைபேசியில் இருக்கும் அனைத்து எண்களுக்கும் அனுப்பி விட்டேன். நீங்களும் உங்கள் நண்பருக்கு அனுப்புங்கள்,(ஆளுங்கட்சிக்கு நம்மாளான சேவை)
வேண்டுகோள்:அரசியல் விருப்பமில்லாவிட்டாலும் நண்பர்களிடம் பேசுங்கள்!
பேச பேச உங்களுக்குள் விழிப்புணர்வு ஏற்படும். யாருக்கு ஓட்டு போட போகிறோம் என்பது நமது உரிமை தான். ஆனாலும் பிச்சை போட்டாலும் அதற்கு தகுதியானவனுக்கு பிச்சை போட வேண்டுமல்லவா
48 வாங்கிகட்டி கொண்டது:
அனேகமா நான் தான் பர்ஸ்ட்.
*காலை சன் தொலைக்காட்சியில் அனைத்து தொடர் நாடகங்களும் நிறுத்தப்பட்டு “திருடா,திருடி” படம் காட்டப்பட்டது, மக்கள் மன்மதராசா பாடலுக்கு ஆடி கொண்டே ஈழமக்களுக்காக வருத்தப்பட்டனர்.
*மதியம் கலைஞர் தொலைக்காட்சியில் “வெள்ளிதிரை” என்ற படம், அடுத்தவனை(ஈழமக்களை)பயன்படுத்தி எப்படி பெரியாளாவது(ஆட்சியை பிடிப்பது) என்று சிறந்த கதையை மக்களுக்கு காட்டியது.(இறுதியில் ஏமாற்றிவன் மெண்டலாக நடிப்பான்,இங்கே என்னாகும்)
என்ன தலை எங்களுக்கு பொழுதுபோக்க படம் காட்டினா... அதைப்போய் குத்தம் சொல்றியே... உம்மேல எதுனாச்சு கேச போட்டா என்ன?
//*காலை சரியாக பத்து மணிக்கு அனைத்து டாஸ்மாக்குகளும் திறக்கப்பட்டன!
(குடிமகன்கள் தண்ணி அடித்து ஈழமக்களுக்காக வருத்தப்பட)//
சென்னையில் டாஸ்மாக் வருவாய் இன்று மும்மடங்கு உயர்வாம்.
அங்கே எப்படி?
இந்த பந்த்துக்கும் அரசுக்கும் துளியும் சம்மந்தமில்லை என்பதற்கு அரசின் டாஸ்மாக் திறக்கப்பட்டதே சிறந்த உதாரணம். ஆனாலும், இந்த ஸ்ரீபதி ஏன் ஓடி ஒளிஞ்சிகிட்டாருன்னு தெரியல.
தமிழர்கள் பாவப்பட்டவர்கள். இன்னும் எனென்ன கொடுமைகளை அனுபவிக்க வேண்டுமோ தெரியவில்லை?
\\பிச்சை போட்டாலும் அதற்கு தகுதியானவனுக்கு பிச்சை போட வேண்டுமல்லவா\\
நியாயந்தான்..
வாழ்த்துக்கள்...
அன்பான தமிழக உறவுகளே, இந்தியா தன்னுடைய வல்லாதிக்கக் கனவுக்காக இராஜீவின் பெயரைச் சொல்லியபடி எமது போராட்டத்தை நசுக்குவதற்காக தன்னால் இயன்றவரை சிங்களத்திற்கு உதவுகின்றது. ஒருவேளை சிங்களம் எமது போராட்டத்தை இந்தியாவின் இந்தத் துணையுடன் அழித்துவிட்டால் அதன்பின் சிங்களம் சீனாவுடக் சேர்ந்து இந்தியாவுக்கு ஆப்பு வைக்கப்போவது உறுதி. சீனா இலங்கையிலிருந்து இந்தியாவின் ஸ்திரத்தன்மையைக் குலைத்து இந்தியாவின் மாநிலங்களைத் தனித்தனியே உடைக்க முயலலாம். அவ்வாறு சீனா முயற்சிக்கும்போது, நாம் சீனாவுக்கு உதவினால் அது தவறாகுமா? நாம் இந்தியாவுக்கு எந்தவிதத்திலும் நன்றிக்கடன் படவில்லைத்தானே. உறவுகளே, தயவுசெய்து உங்கள் பதில்களைத் தாருங்கள்.
/நான் பெயர் தெரியக்கூடாது என்பதற்காக அனானியாக வரவில்லை. என்னிடம் கணக்கு இல்லை./
ஒரு ஈழத்தமிழன்.
//ஆனாலும் பிச்சை போட்டாலும் அதற்கு தகுதியானவனுக்கு பிச்சை போட வேண்டுமல்லவா//
ஒரு கேமராவும், டிஸ் ஆண்ட்டனாவும் இருந்தால என்ன வேணுமானாலும் கேள்வி கேப்பியா? என முதல்வன் படத்துல ரகுவரன் கேட்பது அநியாத்துக்கு இப்போ நியாபகத்துக்கு வந்த்தது.
ஆனால், பதிவுக்கும் பின்னூட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நல்லா தேர்தல் சமயத்துல ஒரு பந்த் இன்னும் பத்து நாளு கழிச்சு இன்னொரு பந்த்..
வோட்டு மட்டும் போடும் இந்த பொறம்போக்கு தே..&*&^)(%$%# க. நீல படம் கூட போடுவானுங்க..
சுயநலமும், சுரண்டலும், வெற்றுத் திமிரும் உள்ள தரங்கெட்ட அதிகார வர்க்கமே ஒரு தேசத்தின் ஆரோக்கியமான ஜனநாயகத்தை அழிக்கப் போதுமானவை...
சுயநலமும், சுரண்டலும், வெற்றுத் திமிரும் உள்ள தரங்கெட்ட அதிகார வர்க்கமே ஒரு தேசத்தின் ஆரோக்கியமான ஜனநாயகத்தை அழிக்கப் போதுமானவை...
** சாயங்கால மேகங்கள் நாவலில் ந.பார்த்தசாரதி சொன்னது :)
வணக்கம் அட நல்ல சொன்னிங்க
"உணவகங்கள் மூடப்பட்டிருந்ததால் மதியம் வரை சாப்பிடவில்லை.
விடுமுறைக்காக மனைவியை ஊருக்கு அனுப்பியவர்கள், மணமாகாதவர்கள் என்னை போல தண்ணிரை குடித்தே நாளை கழித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.(நாமும் உண்ணாவிரதம் இருந்திருக்கின்றோம்"
வாலு தண்ணிக்கு என்ன சைட்டிஸ்???
:-)))))))))))
"நல்லா தேர்தல் சமயத்துல ஒரு பந்த் இன்னும் பத்து நாளு கழிச்சு இன்னொரு பந்த்..
வோட்டு மட்டும் போடும் இந்த பொறம்போக்கு தே..&*&^)(%$%# க. நீல படம் கூட போடுவானுங்க.."
HI vinoth Cool down ya..
:-))))))))))))
*பிரசவவலி கண்டவர்கள், நோயாளிகள், அவசர வேலையாக(இன்று முகூர்த்தம்) வெளியே செல்ல இருந்தவர்கள். மருத்துவமனை, மொய் செலவு மிச்சம் என்று வீட்டிலேயே இருந்து விட்டனர்(சேதாரம் வெளியே வராது-அது ஆளும்கட்சி பந்த்)
நச் என்ற வரி வால்பையன்
ஆடு, மாடு, கோழி, குஞ்சு, இன்னபிற
எல்லாம் நடந்தது
வேறு ஒன்னும் நடக்கலை.
பந்த் நடத்தியவர்களுக்கு எனது
பூ...................!
//உணவகங்கள் மூடப்பட்டிருந்ததால் மதியம் வரை சாப்பிடவில்லை.
விடுமுறைக்காக மனைவியை ஊருக்கு அனுப்பியவர்கள், மணமாகாதவர்கள் என்னை போல தண்ணிரை குடித்தே நாளை கழித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.(நாமும் உண்ணாவிரதம் இருந்திருக்கின்றோம்)//
உன்மையில் இது தான் நிலை!! இந்த பந்தினால் எந்த பயனும் ஈழ மக்களுக்கு ஏற்படப்போவது இல்லை சன் மற்றும் கலைஞர் டிவி இன்று சிறப்பு படங்களை காட்டியதன் மூலம் சம்பாதித்திருப்பார்கள் அவ்வளவே :)
வெங்கடேஷ்
//சீனா இலங்கையிலிருந்து இந்தியாவின் ஸ்திரத்தன்மையைக் குலைத்து இந்தியாவின் மாநிலங்களைத் தனித்தனியே உடைக்க முயலலாம். அவ்வாறு சீனா முயற்சிக்கும்போது, நாம் சீனாவுக்கு உதவினால் அது தவறாகுமா?//
ஈன தமிழினமே.... இந்தியா ஒரு போதும் துண்டாகாது உன் ஈன கனவு பலிக்காது...
தமிழ்நாட்டு மக்களே உணர்ச்சிவசப்பட்டு ஒட்டு போட்டு உங்கள் ஓட்டை வீணாக்காதீர்கள்... உங்கள் ஓட்டை வீணாக்கினால் உங்கள்ளுக்கும் ஈன தமிழனின் கதிதான்...
குறிப்பு.. வால் இந்த பின்னுட்டம் வெளியிடப்படும் என்ற நம்பிக்கையில் ஒரு இந்தியன்..
ஏங்க... இந்த பந்த் மட்டுமா இப்பிடி நடக்குது? நம்ம ஊர்ல பந்த்ங்கறதே ஒரு கேலிக் கூத்து... இதனால எவ்வளவு பொருளாதார இழப்பு, மக்களுக்கு எவ்வளவு அவதி? இந்த பந்துகளால எந்த அரசும் எதையாவது பெரிசா சாதிச்சுருக்கா?
தங்க தலைவர் கருணா வாழ்க யார் இறந்தா என்ன தலைவா இன்று விடுமுறை விட்டியே உன்னை பாராட்டியே ஆக வேண்டும்
//வேண்டுகோள்:அரசியல் விருப்பமில்லாவிட்டாலும் நண்பர்களிடம் பேசுங்கள்!
பேச பேச உங்களுக்குள் விழிப்புணர்வு ஏற்படும். யாருக்கு ஓட்டு போட போகிறோம் என்பது நமது உரிமை தான். ஆனாலும் பிச்சை போட்டாலும் அதற்கு தகுதியானவனுக்கு பிச்சை போட வேண்டுமல்லவா//
இந்த வரிகளுக்கு ஓட்டுப் போட்டுக்கிறேன்.
இதெல்லாம் ஒரு கண்துடைப்பு சமாசாரம்.ஈழத் தமிழர்களுக்காக பந்த் நடத்தினோம் என்று மேடையில் சொல்லிக் கொள்வதற்காக. வாழ்க ஜனநாயகம்.
ஈழத்தமிழரைப்பார்த்து தமிழகத் தமிழரும் தமிழகத்து தமிழர்களைப்பார்த்து ஈழத்தமிழர்களும் கவலைப்பட்டுக்கொள்ளவேண்டியததான்..
unmaithaan vaal... bunth enna nadanthathu...?
AADDU NADANTHATHU... MAADU NADANTHATHU...
VERU ETHUVUM URUPADIYAAGA NADAKAVILLAI
அதென்னமோதெரியவில்லை.மொக்கைக்கும்,நையாண்டிக்கும்,ஜோசியத்துக்கும்வரிசையில் நின்று பின்னூட்டம் போடும் பதிவர்கள் தமிழக அரசு,நடுவணரசுகளின் கையாலாகாதத்தனத்தைக் கண்டித்து பின்னூட்டமே போடுவதில்லை.நமக்கேன் வம்பு?என்று நழுவுகிறார்களோ!
செத்துக்கொண்டிருப்பது நம் இனமய்யா.
பின்னிட்டீங்கன்னு சொன்னா - என்னத்த பின்னுனேன்னு சொல்வீங்க.
நல்லா இருக்குன்னு சொன்னா - அது எல்லாரும் சொல்றதுதானே அப்படின்னுவீங்க
பின்ன என்னாத்த சொல்றது - அதையும் நீங்களே சொல்லிடுங்கோ.
சாகிறவன் செத்துக்கிட்டுத்தான் இருப்பான்!! என்ன செய்ய?பந்தோ பதிவோ எல்லாம் அவர்களுக்கு எங்கே உதவுது?
எனக்கு குறுஞ்செய்தி அனுப்பாத உங்கள் நுண்ணரசியலை வன்மையாகக் கண்டிக்கிறேன். பந்த் , சாலைமறையல் ஆகியவற்றை நடத்தும் எவனாக இருந்தாலும் _____யிலேயே அடிக்க வேண்டும்.
//அவ்வாறு சீனா முயற்சிக்கும்போது, நாம் சீனாவுக்கு உதவினால் அது தவறாகுமா? நாம் இந்தியாவுக்கு எந்தவிதத்திலும் நன்றிக்கடன் படவில்லைத்தானே.//
சீனாவுக்கு மட்டும் நன்றி கடன் பட்டிருக்கிங்களா?
விடுங்க தலைவா. தமிழ் நாடு அரசு பேருந்துகளை இன்னிக்கு வெளியே விட்டு இருந்தா இலங்கை தமிழருக்காக பேருந்து தானாகவே தீக்குளித்து கொண்டதுன்னு புதுசா ஒரு கதை கிளப்புவாங்க..
இவங்க தலையில் இவங்களே மண்ணை வாரி அள்ளி போட்டு கொள்கிறார்கள்
//*காலை சரியாக பத்து மணிக்கு அனைத்து டாஸ்மாக்குகளும் திறக்கப்பட்டன!
(குடிமகன்கள் தண்ணி அடித்து ஈழமக்களுக்காக வருத்தப்பட)//
இந்த கலவரத்துலயும் உங்களுக்கு கிளுகிளுப்பு !!!
இதுல மன்மத ராசா வேற !!
//
*இந்த வருத்தங்களையெல்லாம் நம்மால் வெறும் பதிவாக தான் போட முடியும், உங்கள் சோகங்களையும் பின்னுட்டத்தில் தான் தெரிவிக்க முடியும்//
எல்லாம் அரசியல்..வேறென்ன சொல்ல..
கோபமும் விரக்தியுமியுமே தவிர தமிழனுக்கு வேறெந்த உணர்வுகளும் சொந்தமில்லை.
/*பிரசவவலி கண்டவர்கள், நோயாளிகள், அவசர வேலையாக(இன்று முகூர்த்தம்) வெளியே செல்ல இருந்தவர்கள். மருத்துவமனை, மொய் செலவு மிச்சம் என்று வீட்டிலேயே இருந்து விட்டனர்*/
ஷங்கர் படம் நிறைய பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன்:-)
உங்கள் கருத்துகள் அனைத்தும் நூறு சதவீதம் நியாயமானது:-(
உண்மையான வரிகள் வால்பையன்!!!
இரவே பந்த் வெற்றின்னு அறிக்கை வரும், ரெண்டு நாள் கழிச்சு முரசொலியில கவிதை வரும்!!!
மொத்தத்துல நாசமாகிக் கொண்டே போவோம்...
அருண் பலரின் எண்ணங்களை பிரதிபலித்துள்ளீர்கள்
அன்பு வாலு
நல்ல பதிவு உண்மைய எழுதி உள்ளீர் .நன்றி
ராம்
சிங்கப்பூர்
தமிழ் மக்களை ஏமாற்றி இரட்டை வேடம் போடும் சன் , கலைஞர் தொலைக்காட்சிகளை புறக்கணிப்பதற்காக இங்கு (ஐரோப் $ கனடா ) சன் தயாரிக்கும் படங்களை மக்கள் முற்றிலும் நிராகரித்தது விட்டனர் , இங்கு அயன் காற்று வாங்குகிறது , இதன் நிலைமை தான் இனிமேல் வரப்போகும் அனைதுப்படங்களுக்கும்
//மக்கள் மன்மதராசா பாடலுக்கு ஆடி கொண்டே ஈழமக்களுக்காக வருத்தப்பட்டனர்.//
//ஆனாலும் பிச்சை போட்டாலும் அதற்கு தகுதியானவனுக்கு பிச்சை போட வேண்டுமல்லவா//
நச்...வரிகள்...
மேலோட்டமாக பார்க்கும் போது மொக்கை பதிவு போல இருந்தாலும் விசயத்தை சொல்லி இருக்கிறீர்கள்.
பதிவிலயும் சரி, பின்னூட்டங்களிலும் சரி உங்க லொள்ளு தாங்கமுடியல.
வால்பையன் ரசிகர் மன்றத்தினர்.
:-((
நியாயந்தான் :(
அந்த அறிவு கெட்ட கிழவன் நினைப்பான் நம்ம பாச்சா பலிச்சது நு.....
ஆனா ஈழத்தமிழருக்காக
இந்திய தமிழன் எதையாவது செய்ய நினைக்கின்றான் என்பதே இந்த பந்த் கு கிடைத்த ஆதரவில் தெரிகின்றது....
பந்த்..... ஒரே வரியில்... தொடர்ந்து 18 மணிநேரம் பிறகு 8 மணிநேரம் இடைவேளை.. அப்புறம் 14 மணிநேரம் டூயூட்டி பார்த்தது...
பந்தெல்லாம், நாங்களும் இந்த பிரச்சனய பயன்படுத்தி ஓட்டு வாங்குவோம்ங்கிறாதுக்குதான்.
இந்த பந்த் போலித்தனமானது என்று கருதியதாலோ என்னவோ, வழக்கம்போல் எங்கள் அலவலகம் செயல்பட்டது. பேருந்து வரவில்லை, ஆட்டோ ஓடவில்லை.. அது இது என்று சொல்லி யாரும் வராமல் இல்லை. அத்தனை பேரும் பந்துக்கு சொந்தக்காரர்களை பந்தாடிக்கொண்டே வந்திருந்தார்கள். அதுமட்டுமல்ல, நேற்று இரவு எங்கள் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக 2 மணி நேரம் மின்சாரம் இல்லை. மின்சாரமும் பந்த் நடத்துகிறதோ என்ற ஐயம் வேறு. இந்த பந்த்தின் மூலம் கிடைக்கிற 10, 15 ஓட்டுக்களும் 5, 6 ஆக குறையவே வாய்ப்புள்ளது என எண்ணுகிறேன்.. வாழ்க சனநாயகம்!
பந்த்-னா வழக்கமா நடக்குறதுதான். ஆனாலும் மக்களே ஆதரவு தந்து ஒரு பந்தை மக்கள் முன்னின்று நடத்தணும்.
இந்த பந்துக்கான காரணம் எல்லோருக்கும் ஆதரவுதான் என்றாலும், அதை ஆரம்பித்து வைத்தவரின் உளறுதல்கள் மக்கள் மனத்தை இதில் ஈடுபாடு இல்லாமல் செய்து விட்டது என்பது உண்மை.
இந்தியனுக்கு நன்றி ! நன்றாக சொன்னீர்கள் !
இந்தியாவை எந்த சக்தியாலும் அளிக்க முடியாது.
ஈழத் தமிழர் என சொல்லிகொள்பவரே, பாம்புக்கு பால் வார்த்த பாவத்திற்கு தமிழகத்தில் வேண்டுமானால் ரத்த ஆறு ஓடலாம்.
ஆனால் கண்டிப்பாக இந்தியாவின் ஒரு முடியை கூட சீனாவால் தொட முடியாது.
ஒருவேளை சீனா வந்து உங்களிடம் உதவி கோரினால் (இந்தா நூற்றாண்டின் பெரிய ஜோக்) தாராளமாக உதவுங்கள்.
உன்போன்ற ஓரிரு புல்லுர்விகளால் எங்கள் ஈழ மக்களுக்கு தான் கெட்டபெயர்.
தயவு செய்து இந்த தருணத்தில் இது மாறி எதாவது உளறி கொட்டி ஈழ மக்களை மேலும் துயரத்திற்கு உள்ளாகாதீர்.
இத்தகைய மனக்கோளாறு உள்ள நோயாளிகளை சில அரசியல்வாதிகள் தங்களின் சுய லாபத்திற்காக நன்றாகவே பயன்படுத்திக்கொள்வார்கள்.
-- பாஸ்கி
:((
anbudan aruna
//////அதன்பின் சிங்களம் சீனாவுடக் சேர்ந்து இந்தியாவுக்கு ஆப்பு வைக்கப்போவது உறுதி. சீனா இலங்கையிலிருந்து இந்தியாவின் ஸ்திரத்தன்மையைக் குலைத்து இந்தியாவின் மாநிலங்களைத் தனித்தனியே உடைக்க முயலலாம். அவ்வாறு சீனா முயற்சிக்கும்போது, நாம் சீனாவுக்கு உதவினால் அது தவறாகுமா? //////
கெடுவான் கேடு நினைப்பான்!
இந்தியா யாருக்கும் கெடுதல் நினைக்க வில்லை. தீவரவாதத்தை அழிக்க உதவி என்று கோரிய சிங்களம், இன அழிப்பை செய்யும் என்று இந்தியா நினைக்க வில்லை . மெள்ளவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறது இந்தியா ! சிங்களம் திறமையுடன் இருட்டடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இனியும் இந்தியா தலையிடாமல் இருக்காது என நான் நம்புகிறேன்.அணைத்து தமிழரும் நலமுடன் வாழ இந்தியா நிச்சயம்வழி செய்யும் . எம்மினமே! ஒரு கெடுதல் (ராஜீவ் ) போதும் . நல்லதையே நினைப்போம்,நல்லதே நடக்கும்.
நன்றி தமிழ்சினிமா
நன்றி குளோபன்
நன்றி அனானி
நன்றி அறிவே தெய்வம்
நன்றி ஈழ தமிழன்
ஈழதமிழன் அனானி அல்ல!
நன்றி அப்பாவி முரு
நன்றி வினோத் கெளதம்
நன்றி விக்னேஷ்வரன்
நன்றி பாண்டியன்
நன்றி புதுவை சிவா
நன்றி ஜாக்கிசேகர்
நன்றி ஜோதிபாரதி
நன்றி திரட்டி.காம்
நன்றி அனானி
கெட்ட வார்த்தைகள், தனிமனித தாக்குதல் தவிர அனைத்து பின்னூட்டங்களும் வெளியிடப்படும்
நன்றி மகேஷ்
நன்றி சுரேஷ்குமார்
நன்றி ராஜநடராஜன்
நன்றி ஸ்ரீதர்
நன்றி சாத்திரி
நன்றி கிஷோர்
நன்றீ பொதுஜனம்
நன்றி தமிழ்நெஞ்சம்
நீங்க தான் பெரியவங்க!
நீங்க தான் சொல்லனும்
நன்றி தேவன்
நன்றி சஞ்சய்
நன்றி அருண்குமார்
நன்றி அ.மு.செய்யது
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்
நன்றி சோம்பேறி
நன்றி நரேஷ்
நன்றி கிரி
நன்றி ராம்
நன்றி அப்பாவி தமிழன்
நன்றி புதியவன்
நன்றி வால்பையன் ரசிகர் மன்றத்தினர்.
ஏன் இந்த கொலைவெறி?
நன்றி தீப்பெட்டி
நன்றி பட்டாம்பூச்சி
நன்றி அனானி
நன்றி ராம்.C.M
நன்றி உழவன்
நன்றி ஊர்சுற்றி
நன்றி பாஸ்கி
நன்றி அன்புடன் அருணா
நன்றி சிட்டிசன்
Post a Comment